இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின் முதன் முதலாக திறக்கப்படும் பாகிஸ்தான் இந்து கோவில் - மனங்களை வெல்லும் இம்ரான் கான்.
1947 இந்தியா எனும் தேசம் பாகிஸ்தான் இந்தியா என இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது, மூடப்பட்ட இந்து கோவில் சியால்கோட் நகரில் உள்ள சாவ்லா தேஜ் சிங் கோவில். இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
இக்கோவில் பொது மக்களின் வழி பாட்டிற்கு 1947ல் இருந்து திறந்து விடப்படாது இருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து, அவர் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தானின் அனைத்து தரப்பு மக்களுடைய மனதை கவரும் வண்ணம் செயல்பட்டு வருவதோடு மட்டும் அல்லாது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அதன் வெளிப்பாடாக, நாக் பஞ்சமி தினமான வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சாவ்லா தேஜ் சிங் கோவில் பொது மக்கள் வழிபாட்டிற்கு திறக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது பற்றி கூறுகையில் சியால்கோட் துனை ஆணையர் பிலால் ஹைதர், “ இது விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். இனி எல்லா நேரங்களிலும் பொது மக்கள் செல்லலாம்” எனக் கூறினார்.
அதே போன்று மூல்தான் மற்றும் லாகூர் போன்ற இடங்களில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்க்க பாகிஸ்தானிற்கான உயர் ஆனையர் அஜய் பிசாரியா அவரது மனைவி பாரதி சதுர்வேதி ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் கவர்னர் முஹம்மத் சர்வர்,” இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்ல உறவையே விரும்புகிறது” எனக் கூறினார்.
Thanks to
Neutral Today
Neutral Today
2 comments:
Suvi, opening a 70 yr closed temple is goodwill dont you feel ashame to post a article like this. We dont want good will, we need our rights. In what way Pakistani hindus are lower then its Muslim citizens. So now you should have realised why people fear Muslim majority, where ever Muslim become majority,there is no room for cultural pluralism. In secular countries you are enjoying full religious freedom then Muslim majority nation itself. But you are always criticise secular countries whom they gave it you Muslim people. Where as in there muslim riled country, we have to wait for your GOOD WILL . What kind of human being are you?
பாக்கிஸ்தான் பிரிவனை எற்பட்டு 72ஆண்டுகள் கழிந்து விடடது. அந்த கோவில் ஏன் நாசமாக்கப்பட்டது.நாசமாக்கியவன் யாா் ? என்ன காரணம் ? அதை பார்த்து ரசித்தவன் யாா் ? அதனுமைய சொத்துக்கள் என்ன ? சொத்துக்கள் கோவில் வசம் ஒப்படைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? பாக்கிஸ்தான்காரன் குசி விடடால் சுவனபபிரியனுக்கு நவீன சென்ட ஆக மணக்கும்.
Post a Comment