நேற்றைய விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சம்பந்தமாக!நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர்...
Posted by Nazeer Ahamed on Monday, December 21, 2015
நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை பார்ப்பது உண்டு. அந்த வகையில் நேற்றும் அந்த நிகழ்சியை பார்தேன். சென்னை கடலூர் வெள்ள பாதிப்பில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்களை காப்பாற்றிய ஒரு சிலரை பேட்டி எடுத்தனர். அதில் காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு தலைமையில் ஒரு டீம் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றியதை நாமும் அறிவோம். அவர்களை அழைத்து சிறப்பித்தனர் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' குழுமத்தினர்.
இவர்களில் விஷ்ணு, ஜமீல் என்ற இரண்டு பேர் சென்னை வெள்ளத்தில் 'சைலேந்திர பாபு டீமில்' கலந்து கொண்டு தண்ணீரில் இறங்கி பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். கோவையிலிருந்து மீட்புப் பணிக்காக வந்தவர்கள். நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த ஆங்கர் பாவனா 'விஷ்ணு உங்க அனுபவத்த சொல்லுங்க' என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். அவரும் தனது அனுபவத்தை சொல்லி முடிக்கிறார். அடுத்து ஜமீல் என்ற இஸ்லாமியரின் அனுபவத்தை பகிரும்போது அவர் பெயர் சொல்லப்படாமல் நேரிடையாக தனது அனுபவத்தை சொல்ல வைக்கப்படுகிறார். ஜமீல் என்ற இஸ்லாமியரின் பெயரை சாமர்த்தியமாக எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள். காப்பாற்றியவர் ஒரு இஸ்லாமியர் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். நேற்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இது தற்செயலாக எடிட் ஆனதா? அல்லது இஸ்லாமியரின் பெயர் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டதா? என்பதை இறைவனே அறிவான்.
விஜய் டிவி மறைத்தால் என்ன? நம்மிடம்தான் 'முகநூல்' என்ற அருமையான ஊடகம் உள்ளதே... அதன் மூலம் மக்களிடம் உண்மையை எடுத்து வைப்போம்.
No comments:
Post a Comment