Followers

Monday, January 18, 2016

இந்துக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த இஸ்லாமிய அமைப்பு!பரங்கிப் பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரதாப், தியாகராஜன், மணிகண்டன், குப்புசாமி ஆகிய நான்கு பேரின் கூரை வீடுகளும் சென்ற ஜனவரி ஏழாம் தேதி தீ விபத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஏழைகளான இவர்கள் நால்வரும் வீட்டை புணரமைக்க முடியாமல் திகைத்து நின்றனர். இதனை கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பரங்கிப் பட்டை கிளை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்தது. 60 ஆயிரம் செலவு செய்து அந்த ஏழை மக்களின் கூரை வீடுகளை செப்பனிட்டுக் கொடுத்தது.

மத நல்லிணக்கம் என்பதற்கு பெயர் இதுதான். ஒரு மதத்தவரின் பழக்கங்களை மற்ற மதத்தவர் பின் பற்றுவதன் மூலம் மத நல்லிணக்கம் வளராது. குழப்பமே மிஞ்சும். ஏகத்துவவாதிகளை பொறுத்த வரை மார்க்க விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதே நேரம் மனிதாபிமான உதவிகள் செய்வதில் மத வேறுபாடுகளைக் கடந்து முன்னணியில் இருப்பார்கள். சென்னை மழை வெள்ளத்திலும் அந்த மனிதாபிமானத்தைப் பார்த்தோம். இன்று பரங்கிப் பேட்டையிலும் அதே மனிதாபிமானத்தைப் பார்கிறோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!...

5 comments:

Adirai Ahmad said...


சென்ற சுனாமிக்குப் பின்னர் நாகூரை அடுத்த பகுதியில் ஜமாதே இஸ்லாமி நூறு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. அந்த 'சமரசம்' நகரில் பல வீடுகள் இந்து மக்களுக்கு உரித்தாக்கப்பட்டன.

Adirai Ahmad said...


சென்ற சுனாமிக்குப் பின்னர் நாகூரை அடுத்த பகுதியில் ஜமாதே இஸ்லாமி நூறு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. அந்த 'சமரசம்' நகரில் பல வீடுகள் இந்து மக்களுக்கு உரித்தாக்கப்பட்டன.

Dr.Anburaj said...

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்களாம்
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470
"யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம்.
பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
-----------------------------------------------------------------------
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108

Adirai Ahmad said...

Dr. அன்புராஜ் சம்மந்தமில்லாமல் quote பண்ணுகின்றார். அவர் குறிப்பிடும் நூல்கள் எல்லாம், வழி கெட்ட 'ஷியா'க்களின் நூல்கள். ஒருவேளை, ஈரானின் ஏஜண்டாக இருப்பாரோ...?

Dr.Anburaj said...


மன்னிக்க வேண்டும்.தங்ளின் பதிவை பாா்க்கவில்லை. ஈரானின் ஏஜெண்ட் ஆக நான் ஒருபோதும் இல்லை.

சுத்தமான ” இந்து ” ஆனால் சுவாமி விவேகானந்தா் - நாராயணகுரு-வள்ளலாா் பிராண்ட இந்து நான்.
ஒரு மதம் ஒரு தலைவா் என்று எழுப்பப்பட்ட மதத்திற்குள எத்தனை எத்தனை எத்தனை வழக்குகள் - பிாிவுகள் - என்பதைக்காட்டத்தான் எழுதினேன்.

மற்ற பதிவுகளுக்கும் தங்களின் பதிலை தொிவிக்காமல் மறைந்திருந்து பாா்க்கும் மா்மம் என்னவோ ?