'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, December 22, 2015
விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!
விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு தொகுப்பில் இஸ்லாமியரின் பெயர் வேண்டுமென்றே விடுபபட்டுள்ளதோ என்ற எனது சந்தேகத்தை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு ஏக வரவேற்பு. 500 ஷேர்களுக்கு மேல் போனதால் மிரண்டு போன விஜய் டிவி நிர்வாகம் இன்றைய எபிசோட்டில் பல உண்மைகளை உரக்கச் சொன்னது. :
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே 'ஒன்றே குலம் என்று பாடுவோம்! ஒருவனே தேவன் என்று போற்றுவோம்' என்ற இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை பறை சாற்றுவதோடு நிகழ்ச்சியை தொடங்கியது. அதையும் ஒரு இஸ்லாமியனான சியாதை விட்டு பாடச் சொன்னது. அந்த பாடல் முடிந்த கையோடு இஸ்லாமியர் தங்கள் பள்ளிவாசலில் அiனைத்து மதத்தினரையும் தங்க வைக்கச் சொன்ன நிகழ்வுகளை நம்ம பாவனா அக்கா விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார். தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் இடமில்லாததால் ரோட்டில் தொழுது கொண்டதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அடுத்து காப்பாற்றப் போன இம்ரான் பூச்சிக் கடியால் இறந்த துயரமான அந்த நிகழ்வை இம்ரானின் தந்தை விளக்கினார். பலரது கண்களில் கண்ணீர். ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
அதே போல் காப்பாற்றப் போன இடத்தில் சாக்கடைப் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து போன சகோதரர் பரத்தைப் பற்றியும் ஒளிபரப்பினார்கள். இன்றைய நாள் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
ஆனாலும் ஒரு குறை....
வெள்ள பாதிப்பில் ஆரம்பம் முதல் இன்று வரை பல உயிர்களைக் காப்பாற்றிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தைப் பற்றியும், தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட் பற்றியும் சிறிய குறிப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகளை கார்பரேஷன் காரர்களே கை வைக்க பயந்தபோது தவ்ஹீத் ஜமாத் முதலில் களமிறங்கி சென்னையை தூய்மையாக்கியது. இவர்களை பார்த்து வைகோவும் திருமாவளவனும் களத்தில் இறங்கி துப்புறவு பணியை கையிலெடுத்தனர். பாவனா அக்கா நாளைய எபிசோடில் இதனையும் சேர்த்துக் கொள்வாராக! :-)
-----------------------------------------------------
'என்ன பாய் இது! இது உங்களுக்கே ஓவரா தெரியல... உங்க பதிவை பார்த்து மிரண்டு விட்டது விஜய் டிவி நிர்வாகம் என்பதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு' என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
'துணை முதல்வர் பதவியை விட்டுத்தர தயாராக இருக்கிறேன்' என்று அன்பு மணி ராமதாஸ் சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....
'தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டு ஆளப் போவது பிஜேபிதான்' என்று சவுண்டு சரோஜா சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....
'என்னோட பதிவை பார்த்து விஜய் டிவி முடிவை மாத்திக்கிச்சு' என்று நான் சொன்னா மட்டும் நம்ப மாட்டீங்களா? .... இது நியாயமா? :-)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment