Followers

Thursday, December 24, 2015

விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!

23-12-2015 ஆம் தேதி ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் வெளியான சில தகவல்கள்.....

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்ற கிருத்துவர் 10 வருடங்களுக்கு முன்பிலிருந்து சென்னையிலேயே தங்கி பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 'சென்னை மக்கள் அன்பானவர்கள். அவர்களின் அன்பு என்னை இங்கேயே தங்க வைத்து விட்டது' என்று பெருமை பொங்க சொல்கிறார். கிட்டத்தட்ட 250 பேர்களின் உயிர்களை இவர்கள் குழுமம் காப்பாற்றியுள்ளது. உயிர்களை காப்பாற்றிதோடு நில்லாமல் சாக்கடைகளை சுத்தப்படுத்தி கழிவு நீர் தடையின்றி செல்ல மிகவும் உதவியிருக்கிறார். இவரை அழைத்து கவுரப்படுத்தி பூச்செண்டுகளும் கொடுத்தது சூப்பர் சிங்கர் குழுமம்.

அடுத்த ஹீரோ முஹம்மது யூனுஸ்...

இவரைப் பற்றி நாம் முன்பே பத்திரிக்கைகள் வாயிலாகவும் இணையம் வாயிலாகவும் நிறையவே கேள்விப் பட்டிருப்போம். இவரும் நேரிடையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் தனது அனுபவங்களை பகிரும் போது....

'எங்களுக்கு சென்னையில் இரண்டு வீடு இருந்தது. ஒரு வீட்டை நாங்கள் உபயோகித்துக் கொண்டு மற்ற வீட்டை வீடிழந்தவர்களை தற்காலிகமாக தங்க வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதனை இணையத்திலும் அறிவிப்பாக வெளியிட்டேன். நிறைய கால்கள் வந்தது. பல நண்பர்களும் தங்கள் வீடுகளை தர முன் வந்தனர். பல நூறு குடும்பங்களை இவ்வாறு தங்க வைத்தோம்.'

பாவனா: 'கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியது சம்பந்தமாக...'

யூனுஸ்: அவர் கர்பிணி என்பது முதலில் தெரியாது. தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஒரு முறை நானே தவறி குழியில் விழப் போனேன். இவரைப் போன்ற பல குடும்பங்களைக் காப்பாற்றினோம். பிறகுதான் அவருக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது. இன்னும் நான் அவரை நேரில் சந்திக்கவில்லை. இனிமேல்தான் சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில் மீனவர்களின் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் படகு இல்லை என்றால் பல உயிர்களை இழந்திருப்போம்.

பாவனா: இவருடைய சேவையை நினைத்து அந்த குடும்பம் பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய பெயரான 'யூனுஸ்' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளது...

(பலத்த கைத்தட்டல்)

அடுத்து பீஹாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி அலாவுதீனின் மனைவியையும் படகில் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. மனித நேயமிக்க பல பணிகள் நடந்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. மீதியை நாளையும் தொடர்வோம்.

1 comment:

Dr.Anburaj said...

அரேபிய கோட்டம், அல்ப புத்தி உடையவர் சுவனப்பிாியன்.மனிதாபிமானப்பணிகளைச் செய்தவா்கள் முஸ்லீம்கள் என்று முஸ்லீம்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் ககொடுத்தாலும் பரவாயில்லை. இந்து இயக்கங்களை சிறுமைப்படுத்துவது அநியாயமானது அல்ல.அடிக்கடி சுவனப்பிாியன் மனதில் சாத்தான் புகுந்து விடுகின்றான்.அல்லாவின் ஏட்டில் சுவ னப்பிாியனின் அல்ப புத்தி பதிவு செய்யப்பட்டு வருகின்றது.எச்சாிக்கை.

மனிதாபிமாகப்பணிகள் செய்தமைக்கு யாரும் தங்கள் சாா்ந்த மதத்தை முன்வைக்கவில்லை.
இந்துக்கள் செய்த மனிதாபிமானப்பணிகளுக்கு யாரும் இந்துமதத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. யுனுஸ் அவர்களே பாராட்டுக்கள். மதத்தை மறக்காவிடில் மனிதம் வாடி விடும்.