ஓரளவு பால் பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் உண்டு. படிக்கும காலங்களில் ஆர்வமாக விளையாட்டுகளில் கலந்து கொள்வேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி குழு சார்பாக ஐவர் கூட்டணி உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் வலங்கைமான் நோக்கி புறப்பட்டோம். வலங்கைமான் டீமும திறமையானவரகள்தான். அதோடு அவர்களுக்கு பள்ளி மாணவர்களும் ஊர் சப்போட்டும் வேறு சேர்ந்து கொண்டது. எனது ஆசிரியரோ “போட்டியில் ஜெயித்தால் அனைவரையும் சினிமாவுக்கு கூட்டிப் போகிறேன். சாப்பாடும் நான் வெஜ். தோற்றால் ஒவ்வொருவருக்கும் மூன்று இட்லிதான்'” என்று நகைச்சுவையாக சொல்லி விட்டுப் போய் விட்டார்.
இந்தப் போட்டியில் எப்படியும் ஜெயித்து விடுவது என்று முடிவு கட்டினோம. ஆட்டமும் தொடங்கியது. விறுவிறுப்பான ஆட்டம். எங்களுக்கு சப்போர்ட் பண்ண ஒரு நாதி இல்லை. அவர்களுக்கோ பள்ளியும் ஊரும் சேர்ந்து கொண்டது. தோற்பது போல் வந்த எங்களுக்கு திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை எங்களின் ஸ்கோர் மளமளவென்று உயர ஆரம்பித்தது. அங்கு கூடியிருந்த மக்களுக்கோ பெருத்த பின்னடைவு. கூட்டத்திலிருந்து ஒரு குரல் என்னை நோக்கி மெல்லிதாக 'பாயி....மவனே..நீ மட்டும் ஜெயிச்சுட்டு இந்த ஊரை விட்டு போயிட முடியுமா?' என்று கேட்டவுடன் எனக்கு மேலும் உதறல். ஆனால் இத்தனை எதிர்ப்புகளையும் மீறி எங்களின் ஐவர் கூட்டணி வெற்றி வாகை சூடியது. உடற் கல்வி ஆசிரியரின் ஒரே பாராட்டு மழை. அந்த ஊரிலிருந்து பஸ் ஏறும் வரை அங்கும் இங்கும் திரும்பி பார்த்து கொண்டே வந்தோம். தாக்குதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால் எதிர்பார்த்தபடி எந்த தாக்குதலும் இல்லை.
கும்பகோணத்திற்கு சென்று அங்கு மட்டன் குருமா புரோட்டா பள்ளி செலவில் ஆசிரியர் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு சினிமாவுக்கு புறப்படடோம். 'மல்லிகை மோகினி' என்ற ஒரு படம் அன்று ரிலீஸாகி இருந்தது. படத்தைப் பார்த்து விட்டு பிறகு அனைவரும் ஊர் திரும்பினோம். அங்கு வாங்கிய வின்னர் சான்றிதழை இன்றும் பார்த்தாலும் பழைய ஞாபகம் அப்படியே நிழலாடும்.
அடுத்து மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை அனைத்து அரசு பள்ளிகளின் சார்பாக திருக்காட்டுப் பள்ளியில் அரசு நடத்தியது. அப்பொழுது நான் பிளஸ்டூ படித்துக கொண்டிருந்தேன். எனது பள்ளி சார்பாக உயரம் தாண்டுதலில் தேர்வாகி இருந்தேன். போட்டியில் கலந்து கொள்ளும் மற்றவர்களும் ஒரு குரூப்பாக இரவே கிளம்பி சென்றோம். சாப்பாட்டு வேலைகளெல்லாம் முடிந்து திருக்காட்டுப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில் அனைவரும் தங்க வைக்கப்பட்டோம். நண்பர்கள் அனைவரும நேரம் போவதறகாக ஒவ்வொருவரும் ஒரு பாடலை பாட வேண்டும் என்று முடிவெடுத்தனர். எனது முறை வந்த போது கண்ணதாசனின் கடைசி பாடலான 'கண்ணே! கலைமானே!' பாடலை பாடினேன். எப்பொழுது இந்த பாடல் ஒலித்தாலும் எனக்கு பழைய ஞாபகங்கள் அனைத்தும் வந்து விடும்.
Audio Recording on Tuesday night by suvanappiriyan
காலை ஏழு ஏழரைக்கெல்லாம் மைதானம் களை கட்டத் தொடங்கியது. போட்டிகள் ஆரமபமாயின. போட்டி ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரு மாணவனே 10க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றார். அவரது பெயர் இன்றும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. அவர் பெயர் அண்ணாவி. லாங் ஜம்ப், ஹை ஜம்ப், ஹட்ல்ஸ், ரன்னிங், டிஸ்கஸ் த்ரோ என்று எதையும் அந்த மாணவன் விடவில்லை. அண்ணாவியைப் பார்த்து அன்று எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. இந்த முறை உயரம் தாண்டலில் நான் செலக்ட் ஆகவில்லை. எங்கள் குரூப்பிலும் யாரும் சொல்லிக் கொள்வது போல் பதக்கங்களை எடுக்கவில்லை. பிடி சாரின் கடுமையான அர்ச்சனைகளோடு பள்ளிக்கு தெண்ட செலவுகளையும் வைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம். :-)
4 comments:
அண்ணாவி திருச்சியை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். நான் ஜமால் முஹம்மது காலேஜில் படிக்கும் பொழுது இந்த பெயரை கேள்வி பட்டு இருக்கிறேன். அருகில் தான் அண்ணா ஸ்டேடியம் இருந்தது, அங்கே வருவாரா இல்லை ஜமாலில் இருந்தாரா என்று நியாபகம் இல்லை.
சகோ சிராஜ்!
//அண்ணாவி திருச்சியை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். நான் ஜமால் முஹம்மது காலேஜில் படிக்கும் பொழுது இந்த பெயரை கேள்வி பட்டு இருக்கிறேன். அருகில் தான் அண்ணா ஸ்டேடியம் இருந்தது, அங்கே வருவாரா இல்லை ஜமாலில் இருந்தாரா என்று நியாபகம் இல்லை.//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
நரேன்!
//3) அந்த பார்ப்பன, இந்துதவ, இஸ்லாம் விரோதி “தினமலரை” மூமினான சுவனப்பிரியன் இன்னும் படிப்பது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கின்றது. மேலும் அறிவார்ந்த மூமின்கள் அதை புறக்கணிக்க வேண்டும் என்ற சொல்லியப் பிறகும் அவர் அதை படிக்கின்றார்.//
என்ன செய்வது? என்னமாதிரி எல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காவது சோவையும் தினமலரையும் சற்றே பின் தொடரும் கட்டாயம் ஏற்படுகிறது.
//4) குரான் தன்னைத் தானே மூபீன் (simple crystal clear) என்று சொன்னாலும். அதைப் பற்றி ஒருமித்த கருத்து மூமின்களிடையே இல்லை. அதை படித்து புரிவதற்கு ph.d பட்டயறிவு வேண்டும். கடவுளின் வேதம் இப்படி இருப்பதற்கு எனக்கு ரொம்ப வருத்தம்.//
குறைபாடு குர்ஆனில் இல்லை. விளங்கிய முறையில் முஸ்லிம்களில் உள்ள குறைபாடே இது போன்ற ஒரு சில பிளவுகளுக்கு காரணம். பைபிளையும் ரிக் வேதத்தையும், தோராவையும் படிப்பதை விட குர்ஆன் விளங்கிட மிக இலகுவானது. முகமது நபியின் வரலாறை அற்ந்த ஒருவர் குர்ஆனை மிக மற்றவரின் உதவியில்லாமல் மிக எளிதாக விளங்க முடியும். நான் மதரஸா சென்று குர்ஆன் கிளாஸ் எடுக்கவில்லை. நானாக படித்து தெரிந்த கொண்டவையே இஸ்லாம் சம்பந்தமான விடயங்கள் அனைத்தும். பிரச்னை எங்கு என்பதை குர்ஆனே சொல்கிறது பாருங்கள்.
பல விபரங்களையும் தெளிவாகவே கூறி விட்டதாக இறைவன் இங்கு கூறுகிறான். சிலருக்கு குர்ஆனை பார்த்தவுடன், கேட்டவுடன் வெறுப்பு ஏற்படுவதை பார்க்கிறோம். இதற்கு காரணம் குர்ஆன் அல்ல. பக்குவப்படாத அந்த மனிதர்களின் மனமே! இதற்கு பிஹெச்டி பட்டம் எல்லாம் தேவையில்லை. தெளிந்த மனம் இருந்தால் போதும். குர்ஆன் தானாக விளங்கும்.
'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.'
-குர்ஆன் 17:41
உயிர்மை:
தமிழகத்தில் வெகுஜனக் கருத்துக்களை உருவாக்கக்கூடிய மக்கள் அறிவுஜீவிகள் (Public Intellectuals) உருவாக இயலாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்ஸ
அ.மார்க்ஸ்:
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசியல் தலைவர் அல்லது அரசியல் இயக்கத்திற்குச் சமமாகப் பொது அறிவுஜீவிகள் என்போர் மக்களைத் திரட்டி, ஒரு செயலை நோக்கி உந்தித் தள்ளிவிட முடியாது. பொது அறிவுஜீவிகளின் கருத்துக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் அளிக்கிற மேலை நாடுகளில் கூட, அவர்களால் ஈராக், ஆகானிஸ்தான், லிபியா முதலான நாடுகளின் மீதான அமெரிக்க மற்றும் நேடோ நாடுகளின் படைஎடுப்புகளைத் தடுத்து நிறுத்திவிடுமளவிற்கு மக்களைத் திரட்டிவிட முடியவில்லை. 1960களில் வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக ஒரு எழுச்சியை உருவாக்கிய அளவிற்கு இப்போது ஒன்றும் செய்துவிட முடியவில்லை. அன்று அப்படியான ஒரு எழுச்சி உருவானதில் பொது அறிவுஜீவிகளுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டென்றபோதிலும் அன்றைய உலக அரசியல் சூழல் அதற்குச் சாதகமாக இருந்தது.
தமிழகச் சூழலில் பொது அறிவுஜீவிகளின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாமற் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு பொது அறிவுஜீவிக்கும், துறைசார்ந்த அறிவுஜீவி (வல்லுனர்)க்கும் சில வேறுபாடுகள் உண்டு. ஒரு பொது அறிவுஜீவி தனது துறை சார்ந்த கருத்துக்கள் தவிர, சமகாலச் சமூகத்தைப் பாதிக்கிற பிற பிரச்சினைகள் மீதும் கருத்துச் சொல்பவராக உள்ளார். அந்த அளவிற்கு அவர் சமூக இயக்கம் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் தீவிரமான அவதானமுடையவராக உள்ளார். அவர் சமூகத்திலிருந்தும் அரசிடமிருந்தும் விலகி நின்று அவற்றின் மீதான விமர்சனங்களைக் கறராக வைப்பவராக உள்ளார். எனவே அவர் சமூகத்திடமிருந்தும், அரசிடமிருந்தும் எந்தச் சலுகைகளையும் பெருமைகளையும் கோராதவராக உள்ளார்.
நமது பாரம்பரியத்தில் இப்படியான தன்மை குறைவாகவே இருந்து வந்துள்ளது. சாக்ரடீஸ்போல அன்றைய பெரும்பான்மைக் கருத்தியலையும் சமூகத்தையும் எதிர்த்து நின்று மரணதண்டனையை எதிர்கொண்ட வரலாறு இங்கில்லை. நமது புலவர்களோ பரிசில் வேண்டி அரசை அண்டியும் புகழ்ந்தும் வாழ்ந்தவர்கள். ‘மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ’ எனக் கூறி, கம்பன் புலம் பெயர்ந்ததாகச் சொல்வது குறித்த கதையாடலுக்கும் கூட பெரிய வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. அதுவும்கூட ஏதோ சொந்தக் காரணங்களுக்கான புலப் பெயர்வாகவே தோன்றுகிறது.
இன்றும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை. நமது துறை சார்ந்த வல்லுனர்கள் பெரும்பாலும் அவரவர்களின் துறையைத் தாண்டி கருத்துச் சொல்லத் தகுதியற்றவர்களாகவே உள்ளனர். அல்லது துணிவற்றவர்களாக உள்ளனர். தமது துறைசார்ந்த பிரச்சினைகள் அரசியலாக்கப்படும்போதுகூட உண்மை நிலையைச் சொல்லும் துணிச்சலுடையவர்கள் மிகச் சிலரே.
இத்தகைய பின்னணியில் பொதுப் பிரச்சினைகளில் கருத்துச் சொல்லத்தக்க அறிஞர்களாக இங்கு அரசியல் தலைவர்களே மக்கள் மத்தியில் மதிக்கப்பட்டனர். இங்கு அண்ணாதான் பேரறிஞர்; ராஜாஜிதான் மூதறிஞர்.
19ம் நூற்றாண்டில் வெகு ஜன ஊடகங்கள் இங்கே உருப்பெற்றபோது, அவற்றின் மேற்சாதிப் பின்புலம் காரணமாக மிகவும் கட்டுப்பெட்டித்தனமாகவே அவை அமைந்தன. சங்கராச்சாரியின் அருள்வாக்கைத் தாண்டி மாற்றுச் சிந்தனைகளுக்கு அவற்றில் சமீபகாலம் வரை இடம் இருந்ததில்லை. சிறந்த கட்டுரைகளையும் நூல் விமர்சனங்களையும் வெளியிடுகிற ‘இந்து’ நாளிதழ் தமிழ் நூல்களுக்கு விமர்சனம் எழுதும்போது இன்றுவரை காத்திரமான நூல்களைப் புறக்கணித்து அம்மாஞ்சித்தனமான நூல்களை மட்டுமே முன்னிறுத்துவதை அறிவோம்.
இத்தனையையும் தாண்டிபொது அறிவுஜீவிகளாக உருப்பெற்று மேலெழுந்தவர்களில் சிலர் அரசுடனும் அதிகாரத்துடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அந்தத் தகுதியை இழந்தனர். இன்னுஞ் சிலர் ஏதேனும் ஒரு கட்சியுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அவற்றின் பேச்சாளர்களாகவே (spokesmen) குறுகிப் போயினர். ஒரு பொது அறிவுஜீவிக்கு ஒரு குறிப்பிட்ட கருத்தியல் இருக்கலம். ஆனால் அவர் ஒரு கட்சிக்காரராக இருக்க முடியாது. வேறு சிலர் ஒரு பொது அறிவு ஜீவிக்குரிய பொறுப்பற்றுக் கருத்துரைத்துச் சீரழிந்தனர். போலிச் சாமியார்களைப் புகழும் அளவிற்கு இப்படிச் சிலர் சென்ற கதையை நாமறிவோம்.
இத்தனைக்கும் மத்தியில் இன்று அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப் பேசுகிற பொது அறிவுஜீவிகள் தமிழகத்தில் அற்றுப் போய்விடவில்லை. இன்று ஏற்படுள்ள ஊடகப் பெருக்கம், அவற்றின் கார்பொரேட் தன்மையைத் தாண்டி சில ஜனநாயகப் பண்புகளக் கொண்டுள்ளது, அவற்றினூடாக இத்தகையோரின் கருத்துக்கள் ஒரு சிறிய அளவிலேனும் வெகு ஜன ஊடகங்களில் இடம் பெறுகின்றன. அதன்மூலம் ஒரளவு பொதுக்கருத்திலும் பொதுப்புத்தியிலும் சிறிய அளவிலேனும் ஒரு பாதிப்பை இன்றைய பொது அறிவுஜீவிகளால் ஏற்படுத்த முடிகிறது.
Post a Comment