Followers

Friday, January 06, 2012

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? -ஃபாரிக் நாயக்

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஜாகிர்நாயக்கின் மகன் ஃபாரிக் நாயக் தனது தந்தையைப் போலவே அழைப்புப் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார். தந்தையைப் போலவே மனனத்தில் சிறந்து விளங்குகிறார். பல வேதங்களின் அதிகாரங்களையும் இந்த வயதிலேயே மனனமிட்டு எந்த மேடை பயமும் இல்லாமல் பிரசங்கம் பண்ணுவது எல்லோருக்கும் வந்து விடக் கூடியது அல்ல. இறைவன் இவரைப் போல பல இளைஞர்களை உருவாக்கி அவனது மார்க்கத்தை நிலை நிறுத்துவானாக!



ருஷ்தா நாயக்! ஜாகிர் நாயக்கின் மற்றொரு மகளும் மார்க்க அழைப்புப் பணியில் அதிகம் ஆர்வம் உடையவராக உள்ளார். இறைவன் கொடுத்த ஒரு மகனையும் ஒரு மகளையும் மறுமையில் கிடைக்கும் நன்மைக்காக அழைப்புப் பணியில் ஈடுபடுத்த விரும்பும் ஜாகிர்நாயக் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. ருஷ்தா நாயக்கின் பேச்சையும் கேளுங்கள்.




காலைப் பத்திரிக்கை யில் வந்த பழைய செய்தி:

//70 வயதான கலீல் அஹமது என்ற பெரியவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டதாகவும், அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அனுகியதாகவும். அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லையென்றும், ஆகவே காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டருக்கு செல்ஃபோனில் தகவல் சொன்னதாகவும், அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும், ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.. //

தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரது பிள்ளைப்பாசத்தின் அழுத்தம் நமக்கு தெரிகிறதல்லவா? இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்க என்ன காரணம்?

தற்காலங்களில் பிள்ளைகளை படிக்க வைக்க நிறைய செலவு செய்கிறோம். இதில் தவறில்லை. ஆனால் அந்த பிள்ளைக்கு சிறு வயதிலேயே மார்க்க கல்வியை முறையாக கற்றுத் தர தவறி விடுகிறோம். இங்குதான் தவறு நடககிறது. வளரும் குழந்தை இஸ்லாமிய வாழ்வு முறையையும் மறுமையின் பயத்தையும் சுமந்தவனாக வளர்ந்தால் இரு உலகிலும் வெற்றி பெற்றவனாகிறான். தனது பெற்றோரை கவனிக்காமல் விட்டால் நாளை மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டி வரும் என்ற பயம் அந்த பிள்ளைகளுக்கு இருந்திருந்தால் இப்படி அந்த முதியவரை அநாதையாக எறிந்து விட்டு சென்றிருக்க மாட்டார்கள்.

மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கும் தற்கால மதரஸாக்களும் குர்ஆனையும் ஹதீஸையும் சொல்லித் தராமல் மொகலாயர் காலத்து சட்டங்களை மத்ஹப் என்ற பெயரிலே சொல்லித் தருகின்றனர். இந்த கல்வியினால் அந்த மாணவனுக்கு எந்த பயனும் இல்லை. குர்ஆனையும் ஹதீஸையும் நமது வீட்டிலேயே ஒரு உஸ்தாதை வைத்து பாடம் எடுக்கலாம். தேவையில்லாத வற்றிற்கெல்லாம் எவ்வளவோ செலவு செய்யும் நாம் மறுமையிலும் வெற்றியைத் தரக் கூடிய மார்க்கக் கல்விக்கு சில ஆயிரங்கள் செலவழிப்பதைப் பற்றி யோசிக்கிறோம். தமிழகததில் ஊருக்கு இரண்டு அரபி மத்ரஸாக்கள் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவற்றால் இஸ்லாத்துக்கோ அல்லது உலகக் கல்விக்கோ எந்த பயனையும் இதுவரை தரவில்லை. எங்கள் ஊரில் மட்டும் ஐந்து மதரஸாக்கள் உள்ளன. ஆனால் இந்த மதரஸாக்களில் எங்கள் ஊர் பிள்ளைகள் ஒருவரும் படிக்கவில்லை. படிப்பது அனைவரும் ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தது மக்களே!! உள்ளூர் பிள்ளைகள் அனைவரும் படிப்பது மெட்ரிகுலேசன் பள்ளிகள். அந்த அளவு தரத்தில் இருக்கிறது நமது மதரஸாக்கள்.

முழு பாடததிட்டங்களையும் இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். சவுதி அரேபியா இதில் முழு வெற்றி அடைநதுள்ளது. பி.ஜெய்னுலர்லாபுதீன், ஜாகிர்நாயக், கே.வி.எஸ் ஹபீப் முகமமது, போன்ற அறிஞர்களின் வழி காட்டுதலில் பாடத் திட்டங்களை வகுககலாம்.

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஜாகிர் நாயக்கின் மகனும் மகளும் இஸ்லாத்தை எத்தி வைக்கும் தாவா பணியில் தற்போது எவ்வாறு சிறந்து விளங்குகின்றனர் என்பதை நாம் பார்த்தோம். அவரைப் போலவும் அவரது குழந்தைகளைப் போலவும் உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒருங்கே பெற்ற நன் மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!

'யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.

ஆதார நூல் முஸ்லிம் (5231)

8 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்றைய இஸ்லாமிய சமூக நிலைகளை பிரதிபலிக்கும் கண்ணடி போன்ற இருகை

முதலில் உலக கல்வி மார்க்க கல்வி என்று பிரிப்பதே தவறு

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கலவியை இரண்டாக பிரிக்கிறார்கள்

பயனுள்ள கல்வி, பயனற்ற கல்வி

ஆகவே பயனுள்ள கல்வி எங்கு கிடைப்பினும் தேடி பெறுவோம்

பகிர்வுக்கு நன்றி சகோ

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஹைதர்.

//முதலில் உலக கல்வி மார்க்க கல்வி என்று பிரிப்பதே தவறு

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கலவியை இரண்டாக பிரிக்கிறார்கள்

பயனுள்ள கல்வி, பயனற்ற கல்வி

ஆகவே பயனுள்ள கல்வி எங்கு கிடைப்பினும் தேடி பெறுவோம்//

உண்மைதான். உலக வழக்கில் மக்கள் கல்வியை இரண்டாக பிரித்து வைத்துள்ளார்கள். எனவேதான் அந்த ரீதியிலேயே பதிவும் அமைந்திருந்தது. பொதுவாக கலவியை பயனுள்ள கல்வி பயனற்ற கல்வி என்று பிரிப்பதே சரியானதாகும்.

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!

உதயம் said...

Visit here:


http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.html

காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்!

suvanappiriyan said...

Six members of a right-wing Hindu group have been arrested in India's southern Karnataka state for raising Pakistan's national flag on a government building.
Police say those arrested belong to the Sri Rama Sena group.
The flag was raised in Sindgi, near Bijapur, on 1 January, leading to angry protests by Hindu organisations and the stoning of a Muslim prayer hall.
Police say Sri Rama Sena was trying to create "communal disharmony" in an area with a sizeable Muslim presence.
Sri Rama Sena is a fringe group that claimed responsibility for attacking women outside a pub in the coastal district of Mangalore in 2009, saying that allowing females in pubs was against Indian culture.

'Dividing society'
Inspector general of police Charan Reddy told the BBC the situation in Sindgi was "now peaceful".
"It seems they were out to create communal disharmony," he said.
Hindu organisations had called for strikes in a number of towns around Bijapur to protest against the flag-raising.

But Mr Reddy said police investigations had led them to members of the Sri Rama Sena, a group founded by Pramod Muthalik after it broke away from the Bajrang Dal, an affiliate of the long-standing Hindu nationalist organisation, the Rashtriya Swayamsevak Sangh (RSS).

Mr Muthalik is the leading suspect in the attack on the women in Mangalore.

Former chief minister and Janata Dal Secular party leader HD Kumaraswamy said of the flag-raising: "It is such a shame. I blame the RSS and the Bharatiya Janata Party (BJP) for the incident. They want to divide society on religious lines."
Bijapur is close to Hyderabad in neighbouring Andhra Pradesh and is a historic town with a sizeable Muslim population.

Police arrested Sri Rama Sena members for the desecration of a mosque in Mysore a few years ago.
The carcass of a pig was thrown near the prayer hall, an act that triggered major riots between Hindus and Muslims.

Karnataka was also rocked by a series of attacks on churches by right-wing groups in 2008, immediately after the BJP came to power.

5 January 2012 Last updated at 12:14 GMT
bbc

suvanappiriyan said...

சகோ உதயம்!

//http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.html

காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்!//

காவிகளின் உண்மை முகத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள். மீடியாவில் வெளி வராத செய்திகள் இன்னும் நிறைய உள்ளது.

சிராஜ் said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ சுவனப்பிரியன்,

ஆக்கப்பூர்வமான பதிவு. வாழ்த்துக்கள்.

சிராஜ் said...

/* மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கும் தற்கால மதரஸாக்களும் குர்ஆனையும் ஹதீஸையும் சொல்லித் தராமல் மொகலாயர் காலத்து சட்டங்களை மத்ஹப் என்ற பெயரிலே சொல்லித் தருகின்றனர். இந்த கல்வியினால் அந்த மாணவனுக்கு எந்த பயனும் இல்லை */

செவிட்டில் அறைந்தது போல் சொல்லி உள்ளீர்கள். இந்த கால மதராச பாடத் திட்டங்களால் எந்த பயனும் இல்லை. எத கேட்டாலும், பெரியார்கள் நாதாக்கள் அப்படின்னு தனி மனித வழிபாடுதான். கடுப்பா இருக்கு சகோ. என்றுதான் திருந்தப் போகிறார்களோ? இந்த லட்சணத்தில மதரசாக்களில் தீவிரவாத பயிர்ச்சின்னு கெட்ட பேரு வேற.

Barari said...

மறுமை பற்றிய இறையச்சம் இன்மையே இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணம்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் உயர் கல்வி கற்று கை நிறைய காசு சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கொளிலேயே மார்க்க கல்வியை அளிக்க தவறி விடுகிறார்கள்.இப்படிப்பட்ட பெற்றோர்களும் குற்றவாளிகளே.விழிப்பு மிக்க பதிவு.வாழ்த்துகள்.