Followers

Saturday, January 21, 2012

சவுதியில் கூத்தாடி மாதவனுக்கு வந்த வாழ்வு!



சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஜாய் ஆலுகாஸின் புதிய ஷோ ரூமை திறக்க நம்ம ஊர் கூத்தாடி மாதவனை அழைத்திருந்தனர். மாதவனுக்கோ ஏக வரவேற்பு. இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

முன்பெல்லாம் பாலிவுட் நடிகர்களைப் பற்றி இங்குள்ள சவுதி இளைஞர்களுககு அதிகம் தெரியாது. நம் ஊர் ஜீ டிவி 24 மணி நேர சேவையாக ஹிந்தி படங்களை 'ஜீஃபிலிம்' என்ற பெயரில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பி வருகிறது. சில படங்களை அரபி மொழியில் மொழி மாற்றம் செய்தும் வெளியிடுகின்றனர். அரப் சாட்டில் எந்த தடங்கலும் இல்லாமல் 'ஜீஃபிலிம்' ஒளிபரப்பப் படுவதால் நமது ஹிந்தி நடிகர்கள் அனைவரின் பெயரையும் ஒன்று விடாமல் சவுதி இளைஞர்கள் சொல்வதை சில காலமாக பார்க்கிறேன்.

எனது ஓனரின் மகன் (18 வயது நிரம்பியவன்) என்னிடம் வந்து 'சல்மான்கான், ஷாருக்கான் புதிய படங்கள் இருந்தால் கொடேன்' என்று என்னிடம் கேட்டான். 'நான் இது போன்ற படங்களில் நேரத்தை வீணடிப்பதில்லை. என்னிடம் படங்களும் இல்லை' என்றேன். 'ஓ.....அன்த ஹிந்தி......அன்த மாபி ஹூப்பு ஃபிலிம்? 'انت هندى انت مافى هب فلم؟' அதாவது 'நீ இந்தியன்...இந்தியனாக இருந்து கொண்டு சினிமாவை விரும்புவதில்லையா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டான். அந்த அளவு நமது இந்தியர்களின் ரசனையை தெரிந்து வைத்துள்ளான்.

சவுதியை பொறுத்த வரை இங்கு எங்குமே தியேட்டர் கிடையாது. அவரவர் வீடுகளில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். சில வீடுகளில் மினி தியேட்டர் வைக்கப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன். பெரிய தியேட்டர்களும் ஒன்றிரண்டு உண்டு. ஆனால் அவை அனைத்தும்; இஸ்லாமிய காணொளிகள், கருத்தரங்குகள், நடத்துவதற்கு மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர். ஒரு முறை ஜாகிர் நாயக்கின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்த போது ரியாத்தில் உள்ள தியேட்டரையும் பார்க்க நேர்ந்தது. ஜாகிர் நாயக்கோடு பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

'புகழ் வாய்ந்த இந்நாட்டுக்கு வந்ததில் பெருமையடைகிறேன். இன்னும் சில நாள் இங்கு தங்கலாம் என்ற விருப்பம் இருந்தாலும் சில ஷூட்டிங்கள் கால்ஷீட் பிரச்னையால் இன்றே கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இங்கு என்னோடு கை குலுக்க பலரும் முயற்ச்சிப்பதை பார்த்து சந்தோஷம். எல்லோரையும் சந்திக்க காவலர்களும் அனுமதிக்கவில்லை. எனவே இந்த சிரமத்திற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.' என்றார் கூத்தாடி மாதவன்.

கூடடத்தைக் கட்டுப்படுத்த ஜாய் ஆலுகாஸூம் லூலூ சூப்பர் மார்க்கெட்டின் பணியாளர்களும் ரொம்பவுமே சிரமப்பட வேண்டியதாகி விட்டது. செம்மறியாட்டுக் கூட்டங்கள். அட ஒரு அறிவியல் அறிஞன் வந்திருந்தால் இந்த கூட்டம் கூடியிருக்குமா? ஏன்தான் சினிமா மோகம் கடல் கடந்தும் நம் மக்களை இந்த பாடு படுத்துகிறதோ தெரியவில்லை.

ஒரு உழைப்பாளியை வைத்து கடையை திறக்க வை. ஒரு அறிஞனை வைத்து கடையை திறக்க வை. எந்த நேரமும் மது மாதுவோடு நேரத்தை ஓட்டிக்கொண்டு கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்த கூத்தாடிகளை வைத்து கடையை திறந்தால் விளங்குமா? ரஜினி, கமல், முதற்கொண்டு அனைத்து கூத்தாடிகளிடமும் இருக்கும் கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தாலே நம் நாட்டின் ஒரு வருட பட்ஜெட்டைப் போட்டு விடலாம். அந்த அளவு பணம் இவர்களிடம் புரள்கிறது.

ஆனால் உத்தம புத்திரர்கள் போல் பேட்டி கொடுப்பதில் மட்டும் குறைவில்லை. முன்பு ஜெயலலிதா ஒருமுறை 'ஊழலை ஒழிக்க பிரசாரம் செய்வேன் என்று ரஜினி சொல்கிறாரே! அவர் படத்துக்கு வாங்கும் பணம் அனைத்தும் வெள்ளை தானா? அதில் கருப்பு பணமே கிடையாதா?' என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டவுடன் மனிதர் வாயை திறக்கவே இல்லை. பாம்பின் கால் பாம்பு அறியும் அல்லவா?

நம நாட்டில் சினிமா மோகம் என்று ஒழியுமோ அன்று தான் நாட்டுக்கு விமோசனம். தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இன்னும் இணையம் பரவலாக பலரையும் அடையும் போது இருக்கும் ஒன்றிரண்டு தியேட்டர்களும் மூடப்படலாம். அவையும் வணிக வளாகங்களாக மாற வேண்டும். அப்படி மாறுவதற்கு சினிமா பித்தர்கள் காசு கொடுத்து சிடிக்களை வாங்காமல் ஓசியில் சினிமாவை பார்க்கவும். இன்னும் 10 ஆண்டுகளில் சவுதியைப் போல் தியேட்டரே இல்லாத தமிழகத்தைப் பார்க்க ஆசை.

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமஜான், அரசு விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சென்று உணவகங்கள், பார்க்குகள், விளையாட்டுகள் என்று பொழுதைக் கழிப்போம். நமமால் இந்த கூத்தாடிகள் பலன் அடைவதை கூடியவரை தவிர்ப்போம்.

37 comments:

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

/////இன்னும் 10 ஆண்டுகளில் சவுதியைப் போல் தியேட்டரே இல்லாத தமிழகத்தைப் பார்க்க ஆசை./////
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
இனி தங்களுடைய பதிவுக்கு எதிர்பதிவுகள் எனும் தாக்குதல் நடக்கபோகுது எதற்க்கும் கொஞ்சம் தயாராக இருங்கள் சகோ.நான் அப்புரமா வந்து பார்க்கிறேன்.

Anonymous said...

கூத்தாடிக்கு ஒரு பதிவை ஒதுக்கிய அறிவிலியை என்னவென்று சொல்வது. எந்த சினிமா போதையும் மூளைக்கேறி - மத போதையை போல மனித வெடிகுண்டுகளை உருவாக்காது. மதவாதியாக இருப்பதற்கு கூத்தாடியாக இருப்பது மேல்.

Anonymous said...

கூத்தாடிக்கு ஒரு பதிவை ஒதுக்கிய அறிவிலியை என்னவென்று சொல்வது. எந்த சினிமா போதையும் மூளைக்கேறி - மத போதையை போல மனித வெடிகுண்டுகளை உருவாக்காது. மதவாதியாக இருப்பதற்கு கூத்தாடியாக இருப்பது மேல்.

சிராஜ் said...

சலாம் சுகனப்பிரியன்,

சகோ சபி சொன்னமாதிரி எதிர்பதிவு போட்டா, அதற்க்கு எதிர்பதிவு நான் போடறேன். என்ன டீல் OK யா?

சிராஜ் said...

/* கூத்தாடிக்கு ஒரு பதிவை ஒதுக்கிய அறிவிலியை என்னவென்று சொல்வது. எந்த சினிமா போதையும் மூளைக்கேறி - மத போதையை போல மனித வெடிகுண்டுகளை உருவாக்காது. மதவாதியாக இருப்பதற்கு கூத்தாடியாக இருப்பது மேல். */

அனானிகள் எல்லாம் இஸ்லாத்த ரொம்ப வாச் பண்றாங்கன்னு நினைக்கிறேன். இது நமக்கு நல்ல சேதி சகோஸ். உமர் ரலி அவர்களைவிடவா இவர்கள் எதிர்த்துவிடப் போகிறார்கள்???

தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருங்கள். எங்களுக்கு எதிரா பாயிண்ட் தேடுவதற்க்காக வாவது இஸ்லாத்தை படிக்காமலா போகப்போகிறீர்கள்?
அன்று ஏற்ப்படும் உங்கள் மனமாற்றம். Awaiting for your arrival brothers .

நெல்லை கபே said...

கூத்தாடி என்பது இழிவான சொல். அது கலை. மதங்கள் படுத்துகிற பாட்டை விட இங்கே கலைகள் எவ்வளவோ மேல். கலைஞர்களே மதத்தின் தீவிரத்தன்மையை குறைக்க இயலும். மதத்தின் தீவிரத்தன்மையை மட்டுமல்ல எந்த ஒரு 'கொள்கையின் அடிப்படையில்' உருவாகிற தீவிரத்தன்மையை சமனப்படுத்துவது கலைகளே!

Anonymous said...

உங்கள் பதிவு அதீகப் பொறாமையில் வந்தது. இதுவும் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு கூடாத விஷயமாயிற்றே!

மாசிலா said...

ஒய் திஸ் கொலை வெறி மேன்? கூத்து என்பது தமிழர்களின் பண்டைய கலை மேன். அதை கொச்சைப் படுத்த வேண்டாம். மாதவன் ஒரு தமிழ் நடிகர் என்கிற முறையில் அவர் படங்கள் மூலம் தமிழ் மொழி, கலை, பண்பாடு, இசை, சமூக-சமுதாய அலசல்கள் என எண்ணற்ற வழிகளில் தமிழ் உலகிற்கு தொண்டாற்றி வருகிறார் மேன். அவர் செய்வது நேர்மையான தொழில். உங்களுக்குள் புதைந்து கிடக்கும் (சம்பந்தமிலாத) விரோதங்களை மனதில் வைத்துக்ககொண்டு பாவம் மாதவன் மீது காழ்ப்பு உணர்ச்சகளை கக்குவது உங்களை எந்த விதத்திலும் பெருமை அடைய செய்யாது மேன். கொஞ்சம் பொறுமை கடைபிடி மேன். டேங்க்ஸ்.

suvanappiriyan said...

திரு மாசிலா!

//ஒய் திஸ் கொலை வெறி மேன்? கூத்து என்பது தமிழர்களின் பண்டைய கலை மேன். அதை கொச்சைப் படுத்த வேண்டாம்.//

நம் தமிழர்களின் பண்டைய கலையை நான் இங்கு கொச்சைபடுத்தவில்லை. சினிமாவைத்தான் கொச்சைப்படுத்துகிறேன். அது சமூகத்துக்கு செய்த தீமைகளைத்தான எடுத்துக் காட்டுகிறேன்.

நீங்கள் குறிப்பிடும் கரகாட்டம, ஒயிலாட்டம் என்று பல தர ஆடடக்காரர்கள் முன்பெல்லாம் திருமணத்துக்கு ஊர்வலத்துக்கு முன்னால் ஆடிக் கொண்டு செல்வார்கள். முன்பு எங்கள் ஊரில் முஸ்லிம்கள் கூட இவர்களை திருமணத்துக்கு அழைப்பார்கள். சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இதில் ஈடுபடும் ஒரு சில பெண்மணிகள் ஆட்டம் முடிந்தவுடன் வெறு தொழிலுக்கு செல்வதையும் பார்த்துள்ளேன். ஒரு கலை என்பது ஒருவரின் மானத்தோடு விளையாடுவதாக இருக்கக் கூடாது. இது போன்ற தொழில் செய்பவர்கள் நாளடைவில் ஒரு சாதியாகவே பார்க்கப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கவும்படுகிறார்கள். எங்கள் ஊரில் இந்த ஆட்டத்துக்கெல்லாம் தடை விதித்து இன்று முற்றாக எங்கள் பகுதிகளில் ஒழிந்தும் விட்டது.

//மாதவன் ஒரு தமிழ் நடிகர் என்கிற முறையில் அவர் படங்கள் மூலம் தமிழ் மொழி, கலை, பண்பாடு, இசை, சமூக-சமுதாய அலசல்கள் என எண்ணற்ற வழிகளில் தமிழ் உலகிற்கு தொண்டாற்றி வருகிறார் மேன்.//

இவர் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் என்ன தொண்டாற்றி விட்டார்? தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.

//அவர் செய்வது நேர்மையான தொழில். உங்களுக்குள் புதைந்து கிடக்கும் (சம்பந்தமிலாத) விரோதங்களை மனதில் வைத்துக்ககொண்டு பாவம் மாதவன் மீது காழ்ப்பு உணர்ச்சகளை கக்குவது உங்களை எந்த விதத்திலும் பெருமை அடைய செய்யாது மேன். கொஞ்சம் பொறுமை கடைபிடி மேன். டேங்க்ஸ்.//

எனக்கும் மாதவனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையா என்ன? இஸ்லாமிய தமிழ் சமூகம் இவர்களை ஓரளவு தூரத்திலேயே வைத்துள்ளது. ஆனால் தமிழ் இந்து சமூகத்து இளைஞர்கள் கட்அவுட் வைப்பதும், பிறந்த நாளில் உடலை கீறிக் கொள்வதும், தாயையும தந்தையையும் காப்பாற்ற வேண்டிய வயதில் கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றங்களை வைப்பதும் ஏற்புடைய செயலா? கலை என்ற பெயரில் இதனை எல்லாம் ஆதரிக்கிறீர்களா?

suvanappiriyan said...

திரு மாயன்!

//கூத்தாடி என்பது இழிவான சொல்.//

'கூத்தாடி' என்பதற்கு நடிப்புத் தொழிலில் ஈடுபடுபவர் என்ற பொருள்தான் தமிழ் அகராதியில் உள்ளது. இதை இழிவான சொல் என்று எப்படி சொல்கிறீர்கள். பண்டைய தமிழர்களிடம் இந்த வார்த்தை பரவலாக புழக்கத்தில் இருந்துள்ளது.

//மதங்கள் படுத்துகிற பாட்டை விட இங்கே கலைகள் எவ்வளவோ மேல். கலைஞர்களே மதத்தின் தீவிரத்தன்மையை குறைக்க இயலும்.//

நம்ம ஊர் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களைப் பார்த்தால் உங்கள் வாதம் எந்த அளவு தவறு என்பது விளங்கும்.

எந்த மதமும் வன்முறையை போதிக்கவில்லை. மதத்தை தனது மார்க்கத்தை சரியாக விளங்காதவர்களால்தான் ஒரு சில இடங்களில் பிரச்னை வருகிறது.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ அப்துல் அஜீஸ்!

// இனி தங்களுடைய பதிவுக்கு எதிர்பதிவுகள் எனும் தாக்குதல் நடக்கபோகுது எதற்க்கும் கொஞ்சம் தயாராக இருங்கள் சகோ.நான் அப்புரமா வந்து பார்க்கிறேன்.//


நம்ம பதிவர்களெல்லாம் இப்போ ரொம்ப தெளிவாயிட்டாங்க... சினிமாவினால் வந்த கேடுகளை நன்றாக உணர்ந்துள்ளார்கள். நீங்கள் நினைப்பது போலெல்லாம் பின்னூட்டங்கள் வராது. :-(

வருகைக்கு நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//சகோ சபி சொன்னமாதிரி எதிர்பதிவு போட்டா, அதற்க்கு எதிர்பதிவு நான் போடறேன். என்ன டீல் OK யா?//

ஹா..ஹா..ஹா... அடுத்த ரவுண்டா.. ம்......ம்...........நடத்துங்க..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//இன்னும் 10 ஆண்டுகளில் சவுதியைப் போல் தியேட்டரே இல்லாத தமிழகத்தைப் பார்க்க ஆசை.//ஏன் இந்த குறுகிய மனப்பான்மை?இந்தியா முழுவதும்
தியேட்டரே இல்லாமல் போகட்டும். ஏன் இந்தி திரையுலகில் உள்ள கோடீஸ்வர நடிகர்கள்("கான்"கள்)உத்தமர்களா?

Anonymous said...

ohho!
ennamo indhiyavula mattum than maadhiri cinemaangra maadthiri pesureenga. indha maadhriri podhuvaana poluthu pokkum vishayangal illama eppa paaththaalum aduthavan mathathai eppudi alikirathunnu yosanai pannikittu manadai kanchi poi theeviravaathiyaa irukkurathukku cinema virumbigalaa irukurathu onnum thappu illai. athu sari ungalaukku neenga irukkura naatula irukkum andha maadhiri penglai vachchu podra aatam thaan unmaiyaana kalainnu rasipeenga pola. idhu maadhiri podhu poluthpookku illama thaan andhapurangalai roppi vaichikittu adhuvum oru vasayukku mela mudiyaama nondhu noodlesaa savuraanga neraya peru. Harem vachukittu ketta aataam poduravangali vida koothadiya rasikirathu ilivu illai

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்.
உண்மையை போட்டு உடைத்துள்ளீர்கள்.
உண்மை சுடும் என்பதால், அனைத்து வரிகளும் சூடாக உள்ளன.
தொடரட்டும் உங்கள் இறைப்பணி.

அத்துடன்...
இதுபோன்ற சினிமா மோகம் பரவுவதையும், பரவ காரணமாக தாம் அமைவதையும் 'இஸ்லாமிய அரசு' என்று சொல்லிக்கொள்ளும் சவூதி அரசு தடுக்க வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

//ஏன்தான் சினிமா மோகம் கடல் கடந்தும் நம் மக்களை இந்த பாடு படுத்துகிறதோ தெரியவில்லை.//
மாதவனுடன் கைகுலுக்க விரும்புபவர்கள் நம்மவர் என்றா கூறுகிறீர்கள்? எனக்கு என்னவோ அவை சவுதி முகங்களாகத்தான் தெரிகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ad said...

சினிமா மோகம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றுதான்.கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது... போன்ற செயல்கள் கண்டிக்கப்படவேண்டிய மடத்தனமான செயல்களே.அதேபோலதான் ரசிகர்மன்றங்களும் என்பது எனது கருத்து.

ஆனாலும்,பதிவிலே -உழைப்பவனை வைத்து கடையைத் திறந்திருக்கலாமென்று கூறியிருக்கிறீர்கள்.அப்படியென்றால் மாதவன் சோம்பேறியாக,உட்கார்ந்து வயிறு வளர்க்கிறாரா? நடிப்பை தொழிலாகத்தானே செய்கிறார்.சும்மா இருந்துகொண்டு சாப்பிடுகிறாரா?இல்லையே.ஆகவே அவரும் அவரது துறையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.ஆகவே அவரும் உழைப்பாளியே.சினிமா அவருடைய துறை.அதில் அவர் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அடுத்தது,"கூத்தாடி." ப்பிரச்சனை.
இதுவும் தவறான சொற்பிரயோகமே.

ஆனால் தாங்கள் தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு தமிழகராதியை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.என்னவென்றால், அகராதியில் சொற்களுக்குரிய அர்த்தங்கள் பொதுவாகக் கொடுக்கப்படுகின்றனவே தவிர, "உயர்வான சொல், தாழ்வான சொல்" என்று பாகுபடுத்தி, உயர்வான சொற்கள் மட்டுமே கொடுக்கப்படவில்லை.அகராதியில் சொற்களுக்குரிய அர்த்தங்கள்தான் கொடுக்கப்படுகின்றன.அது உயர்வான வார்த்தையாகவுமிருக்கலாம்,தாழ்வானவார்த்தையாகவும் இருக்கலாம்.

உதாரணத்துக்கு சொன்னால், ஆணும் பெண்ணுமல்லாத நிலையை "அலி" என்று சொல்வார்கள்.ஆனால்,அதுகூட குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாக அமையலாம் என்றதாலேயே "திருநங்கை" என்ற வார்த்தை இப்போது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.
நான் அகராதியைப் பார்த்து,பார்த்து, ஆதாரம் தேடி, கருத்துரைக்கவில்லை.பொதுவாகத்தான் சொல்கிறேன்."கூத்தாடி" என்ற சொல்லுக்கு தாங்கள் மேற்கோள் காட்டியபடி -நடிகன்- என்ற அர்த்தம் அகராதியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும்கூட,அந்த சொல்லைப் பாவிப்பது குறித்த சமூகத்தை அநாகரீகமான முறையில் மரியாதைக்குறைவாக பேசுவதாகத்தான் அமையும்.

மையமாக-சினிமாவை அளவுக்கதிகமாக மோகிப்பது தவறு என்ற கருவையுள்ளடக்கி தாங்கள் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன்.கருப்புப்பணம்,சுயநலம்... இதெல்லாம் சரிதான்.ஆனால்,பொதுவாக எனது கருத்தை இறுதியாக சொல்கிறேன்.

சொல்லவந்த கருத்து சரியானதாக இருப்பினும்,அதை சொல்லிச்சென்ற விதம் தவறாகவே படுகிறது.இதே கருத்தை தாங்கள் தேவையற்ற கோபங்கள்,வார்த்தைகளின்றி,அமைதியாக அழுத்தமாக சொல்லியிருந்தால் ஒரு எதிர்க்கருத்துக்கூட வந்திருக்காதென நினைக்கிறேன்.

suvanappiriyan said...

திரு டோண்டு ராகவன்!

//மாதவனுடன் கைகுலுக்க விரும்புபவர்கள் நம்மவர் என்றா கூறுகிறீர்கள்? எனக்கு என்னவோ அவை சவுதி முகங்களாகத்தான் தெரிகின்றன.//

நம்மவர்கள் மாதவனோடு கைகுலுக்க போட்டியிட்டதில் பெரும் களேபரமே ஆகியிருக்கிறது இங்கே! சவுதிகளும் அதில் சேர்ந்து கொண்டதை போடடோகிராபர் ஸ்பெஷலாக கிளிக் ஆக்கியிருக்கிறார். இந்த வியாதி இனி சவுதி இளைஞர்களையும் தொற்றிக் கொள்ளும் போல் இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//ஏன் இந்த குறுகிய மனப்பான்மை?இந்தியா முழுவதும்
தியேட்டரே இல்லாமல் போகட்டும். ஏன் இந்தி திரையுலகில் உள்ள கோடீஸ்வர நடிகர்கள்("கான்"கள்)உத்தமர்களா?//

கான்கள் உத்தமர்கள் என்று நான் சொன்னேனா? மற்ற மாநிலங்களை விட தமிழகமே சினிமா மோகத்தில் வீழ்ந்து கிடக்கிறது. கான்களாக இருந்தாலும் கபூர்களாக இருந்தாலும் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்கிறீர்கள்.

suvanappiriyan said...

அனானி!

//உங்கள் பதிவு அதீகப் பொறாமையில் வந்தது. இதுவும் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு கூடாத விஷயமாயிற்றே!//

பொறாமையா? நல்ல தமாஷ். நமது நாட்டு இளைஞர்களின் அறியாமையை நினைத்து ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு.

Anonymous said...

dondu(#11168674346665545885) said...
//ஏன்தான் சினிமா மோகம் கடல் கடந்தும் நம் மக்களை இந்த பாடு படுத்துகிறதோ தெரியவில்லை.//
"மாதவனுடன் கைகுலுக்க விரும்புபவர்கள் நம்மவர் என்றா கூறுகிறீர்கள்? எனக்கு என்னவோ அவை சவுதி முகங்களாகத்தான் தெரிகின்றன."
டோண்டு மாமா சொல்றது கரெக்ட்
நம்ம ஆளுங்க சினிமாகாரங்க இருக்குற பக்கமாவே போக மாட்டாங்க :-))

suvanappiriyan said...

வஅலைககும் சலாம சகோ ஆஷிக்!

//அத்துடன்...
இதுபோன்ற சினிமா மோகம் பரவுவதையும், பரவ காரணமாக தாம் அமைவதையும் 'இஸ்லாமிய அரசு' என்று சொல்லிக்கொள்ளும் சவூதி அரசு தடுக்க வேண்டும்.//

உண்மைதான் சகோ! முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதித்தார்கள். இடம் கூட முடிவாகி விட்டது. ஆனால் அவரது துபாய் மற்றும் அமெரிக்க புரோக்ராம்களில் பெண்களை ஆபாசமாக நடனம் ஆட விட்டதை பாரத்த சவுதி ஆலிம்கள் நடதத விடாமல தடை செய்து விட்டனர். அது போல் இனி வரும் காலங்களில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

suvanappiriyan said...

திரு சுவடுகள்!

//ஆனாலும்,பதிவிலே -உழைப்பவனை வைத்து கடையைத் திறந்திருக்கலாமென்று கூறியிருக்கிறீர்கள்.அப்படியென்றால் மாதவன் சோம்பேறியாக,உட்கார்ந்து வயிறு வளர்க்கிறாரா? நடிப்பை தொழிலாகத்தானே செய்கிறார்.சும்மா இருந்துகொண்டு சாப்பிடுகிறாரா?இல்லையே.ஆகவே அவரும் அவரது துறையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.ஆகவே அவரும் உழைப்பாளியே.சினிமா அவருடைய துறை.அதில் அவர் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.//

ஒரு கணிணி துறையில் உள்ளவன் அதில் நிபுணனாக இருந்தால்தான் அநத துறையில் உலக மக்களிடம் பேர் வாங்க முடியும். ஆனால சினிமா கூத்தாடிகளின் நிலைமை அப்படியா?

கதை எழுதுவது ஒருவர். மேக்கப் போடுவது ஒருவர். பிண்ணனி குரல் கொடுப்பது ஒருவர். அபாயகரமான காட்சியில் அவருக்கு பதில் ஒரு சாதாரண தொழிலாளி டூப் போடுகிறான். படத்தை இயக்கும் இயக்குனரும், இசை அமைப்பாளரும, எடிட்டரும், பல நாள் சிரமப்பட்டு ஒரு படத்தை உருவாக்குகின்றனர். இந்த கூத்தாடி எந்த சிரமமும் இல்லாமல் பெயரை தட்டிக் கொண்டு போய் விடுகிறான். இது கொடுமை இல்லையா? திரைக்குப் பின்னால் உள்ள எததனை பேரின் கடினமான உழைக்கு வெளி உலகுக்கு தெரியாமலே சென்று விடுகிறதே! ஒரு கூத்தாடிக்கு ஒரு படததுக்கு 10 கோடி, 20 கோடி என்று கொட்டப்படுகிறதே! ஏழைகளை அதிகம் கொண்ட நமது நாட்டுக்கு இந்த நிலை ஆரோக்கியமானதா?

மேலும் இந்திய கூத்தாடிகள் எவருமே அரசுக்கு ஒழுங்காக வரி கட்டுவதில்லை. எல்லோரும் அரசை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் பதுக்கும் அனைத்து கருப்புப் பணமும் ஏழை மக்களை சென்றடைய வேண்டியது. இப்பொழுது சொலலுங்கள். கூத்தாடிகளை ஆதரிப்பது அறிவுடைய செயல்தானா!

suvanappiriyan said...

திரு சுவடுகள்!

//ஆனால் தாங்கள் தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு தமிழகராதியை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.என்னவென்றால், அகராதியில் சொற்களுக்குரிய அர்த்தங்கள் பொதுவாகக் கொடுக்கப்படுகின்றனவே தவிர, "உயர்வான சொல், தாழ்வான சொல்" என்று பாகுபடுத்தி, உயர்வான சொற்கள் மட்டுமே கொடுக்கப்படவில்லை.//

இந்த இடத்தில் நமது முன்னோர்களை நீங்கள்தான் கேவலப்படுத்துகிறீர்கள். நடிகன் என்ற வார்த்தை சமீப காலமாகத்தான பலராலும் உபயோகப்படுத்தப் படுகிறது. இதற்கு முன்னால் இவர்களை கூத்தாடிகள் என்றுதான் நமது முன்னோர்கள் விளித்திருக்கிறார்கள். 'கூத்து பார்க்கப் போகிறேன்' என்ற சொற்பிரயோகம் சமீப காலம் வரை பெருசுகளிடம் இருந்து வந்ததை நாம் ஒதுக்க முடியாது.

//சொல்லவந்த கருத்து சரியானதாக இருப்பினும்,அதை சொல்லிச்சென்ற விதம் தவறாகவே படுகிறது.இதே கருத்தை தாங்கள் தேவையற்ற கோபங்கள்,வார்த்தைகளின்றி,அமைதியாக அழுத்தமாக சொல்லியிருந்தால் ஒரு எதிர்க்கருத்துக்கூட வந்திருக்காதென நினைக்கிறேன்.//

முனபெல்லாம் சிவாஜி கணேசனின் பழைய படங்களை குடும்பத்தோடு பார்த்தால் பல படிப்பினைகளை பெற முடிந்தத. ஆனால் இன்று வரும் திரைப்படங்களால் சமூகம் சீரழிவதை உங்களால் மறுக்க முடியுமா? கல்லூரிக்கு சென்ற மாணவி படிப்பை மறந்து காதலில் வீழ்ந்து பின் தற்கொலை வரை போவதற்கு முக்கிய காரணம் இன்றைய சினிமாக்கள்.

சமூகத்தின் மேல் உள்ள பிடிப்பு சில நேரம் எழுத்தில் தெரிய வரலாம். ஆனால் நான் என்றுமே அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை இது வரை உபயோகித்ததில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//இலக்கியவாதிகளை இலக்கியம் சமைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களின் பேச்சைக்கேட்டு நாம் வாழ்க்கையை அமைக்கக்கூடாது. இதுவே அதியமான் - அவ்வையார் உறவில் தெரிந்தது.//
-Kavya
Madurai

இந்த கருத்தில் முற்றும் உடன்படுகிறேன்.

Anonymous said...

//தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருங்கள். எங்களுக்கு எதிரா பாயிண்ட் தேடுவதற்க்காக வாவது இஸ்லாத்தை படிக்காமலா போகப்போகிறீர்கள்?
அன்று ஏற்ப்படும் உங்கள் மனமாற்றம். Awaiting for your arrival brothers //

அது எப்படி எல்லா மார்க்கவாதிகளும் ஒரே மாதிரி சிந்திக்கிறீர்கள்? எனக்கு பல முஸ்லீம்களை தெரியும், எல்லாம் இப்படிதான் சொல்லிட்டு அதில கொஞ்சம் பேர் வெளியே வந்துட்டாங்க!

கூத்தாடிப்பிரியன் said...

நல்ல பதிவு. நாடு விட்டு நாடு கசாப்பை போல குண்டு வைக்க போய் இருந்தால் பாராட்டலாம். கூத்தாடி மாதவனை போல நகைக்கடை திறந்து வைக்க போனால் பாராட்டவா முடியும். தொடரட்டும் உங்கள் பணி.

naren said...

சுவனப்பிரியன்!!!!!!!

கூத்தாடி என்றச் சொல் இப்போதுள்ள வழக்கில் ஒரு இழிச்சொல்லாக பயன்படுத்தப் படுகிறது.

அதை விடுங்க, உங்க பதிவில் முக்கிய குற்றச்சாட்டு, நடிகர்கள்..சாரி..கூத்தாடிகள் வரிக் கட்டாமல் கறுப்பு பணம் வைத்துள்ளார்கள் என்பது.

எனது கேள்விகள்...
1) இதை விசாரிக்க வருமான துறை இருக்கின்றது. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களுக்கு அவர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று ஆதாராம் இருக்கா. அதை வருமான துறையிடம் அளித்தீரகள். ஒருவர் மீது குற்றம் சுமத்தும்போது எப்படி குற்றம் சுமத்த வேண்டும் என்று மார்க்கம் சொல்லும் ஹதீஸ் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

2) சில ஹஸ்ரத்துக்கள் ஆதாரஙக்ளை காட்டி வருமான வரி மற்றும் எந்த வரியும் கட்டத்தேவையில்லை என்கிறார்களே?? அண்ணன் பி.ஜே. அவர்கள் வரி கட்டவேண்டும் என்கிறார், அந்த பட்வா தொடர்கிறதா இல்லை அதில் ஏதாவது மாற்றமா.

3) வரி கட்டாதற்கு கூத்தாடிகள் என்கிறீர்கள். ஜகாத் தராத சகோதரர்களை என்னவென்று சொல்வீர்கள். ஜகாத் சரியாக தருகிறார்களா என்று எப்படி தெரிந்துக்கொள்வது. இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால், வரி கட்டாதவனையும் இறைவன் பார்த்துக்கொள்வான்...அதனால் கூத்தாடி வார்த்தை வேண்டாம்.

4) இதுதான் எனக்கு ரொம்ப முக்கியம்...ஜகாத் வருடா வருடமா அல்லது ஒருமுறைதானா....கொஞ்சம் புரியும்படி பதிலளித்தால் நன்றி.

மாசிலா said...

சவுதியில பிறந்து வளர்ந்த உலகமறிந்து வெறுக்கப்பட்ட மகா பெரும் கோமாளி-கூத்தாடி பின் லேடன் யாரும் அழைப்பு விடாமலே மற்ற நாடுகளில் சென்று உயிர் பொருள் சேதம் சேதம் செய்த பாவங்களைப்போல் மாதவன் போன்றவர்கள் எதையும் செய்யவில்லை. மேலும், இதே உங்கள் பாசத்துக்குரிய சவுதியில் கூடாரம் போட்டு சீருடை அணிந்து பல ஆண்டுகளாக அரசின் பூர்வ ஆதரவுடன் கூத்தடிக்கும் அமெரிக்க பட்டாளத்தார்களை சாடுங்கள். நேரம் எடுத்து 'வினவின்' http://www.vinavu.com/2012/01/23/tyranny-of-saudi-oger/ பதிவினை படித்து சவுதியில் நடக்கும் மனித அவல அட்டூழியங்களுக்கு பொறுபான கூத்தாடிங்களை சாடுங்கள். அதை விட்டுவிட்டு பாவம் மாதவனைப் போன்ற சாதாரண கலைஞர்களை திட்டுகிறீர்களே! இது நியாயமா சார்?

suvanappiriyan said...

நரேன்!

//1) இதை விசாரிக்க வருமான துறை இருக்கின்றது. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.//

எத்தனை பேரை விசாரித்து பாக்கி தொகையை வசூலித்திருக்கிறார்கள். சட்டம தனது கடமையை ஒழுங்காக செய்யாததை சுட்டிக் காட்டுகிறோம். நம்மால் முடிந்தது அவ்வளவுதான்.

//2) சில ஹஸ்ரத்துக்கள் ஆதாரஙக்ளை காட்டி வருமான வரி மற்றும் எந்த வரியும் கட்டத்தேவையில்லை என்கிறார்களே?? அண்ணன் பி.ஜே. அவர்கள் வரி கட்டவேண்டும் என்கிறார், அந்த பட்வா தொடர்கிறதா இல்லை அதில் ஏதாவது மாற்றமா.//

இஸ்லாமிய சட்டங்கள் முற்றும் முழுதாக நடைமுறைபடுத்தப்படும் நாட்டில் நாம் வருமான வரி கட்டத் தேவையில்லை. மக்கள் மீது அநியாயமாக வரி விதிப்பதை முகமது நபி தடுத்திருக்கிறார்.

ஆனால் நாம் வாழ்வது இந்தியாவில். பல மதத்தவர்களும் சேர்ந்து வாழும் ஒரு நாட்டில் நிர்வாக செலவுகளுக்காக அரசு வருமான வரி போட்டால் அதை அனைத்து முஸ்லிம்களும் கட்டியே ஆக வெண்டும்.

//3) வரி கட்டாதற்கு கூத்தாடிகள் என்கிறீர்கள். ஜகாத் தராத சகோதரர்களை என்னவென்று சொல்வீர்கள். ஜகாத் சரியாக தருகிறார்களா என்று எப்படி தெரிந்துக்கொள்வது. இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால், வரி கட்டாதவனையும் இறைவன் பார்த்துக்கொள்வான்...அதனால் கூத்தாடி வார்த்தை வேண்டாம்.//

கூத்தாடி என்ற வார்த்தை அவ்வளவு இளக்காரமான வார்த்தையா? ஆனால் தமிழ் அகராதி இந்த வார்த்தையை இளக்காரமாக பார்க்கவில்லை. பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

//4) இதுதான் எனக்கு ரொம்ப முக்கியம்...ஜகாத் வருடா வருடமா அல்லது ஒருமுறைதானா....கொஞ்சம் புரியும்படி பதிலளித்தால் நன்றி.//

இது ஒரு பின்னூட்டத்தில் விளக்கி விட முடியாது. சவுதியிலும் இரண்டு கருத்தகளிலும் உடன்பட்டு ஜகாத் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு முறை கொடுப்பவரும் குர்ஆனின் சட்டத்தையே பின் பற்றுகிறார். வருடா வருடம் கொடுப்பவரும் குர்ஆனைத்தான் பின்பற்றுகிறார். எனவே இருவரும இறைவனின் கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள. வருடா வருடம் கொடுப்பது தவறு என்று பின்னால் தெரிய வந்தால் அதனால் குற்றம் ஒன்றும் இல்லை. மேலதிகமாக அவர்கள் கொடுத்த பணம் சதகாவாக அதாவது கடமையில்லாத தர்மமாக கணக்கிடப்பட்டு அவரது நன்மை கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே இருவருமே நஷ்டவாளிகள் அல்ல.

மேலதிக விபரத்துக்கு கீழே உள்ள லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.


http://onlinepj.com/books/jakath-oru-ayvu/


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

naren said...

சுவனப்பிரியன்!!

பதிலுக்கு நன்றி.

பி.ஜே வின் சுட்டியை ஏற்கனவே படித்து விட்டேன்.

என்னுடைய எண்ணம் எல்லாம் இதுதான்.

இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஜகாத்தில் ஏன் குரானும் ஹதீஸும் தெளிவில்லாமல் இருக்கின்றது?

ஒருமுறை ஜகாத் அளிப்பது தவறு வருடா வருடா அளிப்பதுதான் சரி என்று பிற்பாடு தெரியவந்தால், ஒருமுறை அளிப்பவர்கள் நஷ்டவாளிகள் ஆகமாட்டார்களா?

suvanappiriyan said...

நரேன்!

//இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஜகாத்தில் ஏன் குரானும் ஹதீஸும் தெளிவில்லாமல் இருக்கின்றது?//

பிரச்னை குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லை. அதனை விளங்கிக் கொண்டவர்களிடத்தில்தான் பிரச்னை.

//ஒருமுறை ஜகாத் அளிப்பது தவறு வருடா வருடா அளிப்பதுதான் சரி என்று பிற்பாடு தெரியவந்தால், ஒருமுறை அளிப்பவர்கள் நஷ்டவாளிகள் ஆகமாட்டார்களா?//

ஆக மாட்டார்கள். ஏனெனறால் அந்த நபரும் குர்ஆனையும் ஹதீஸையும் அவர் விளங்கிய வகையில் செயல்படுத்தகிறார். 'ஒருவன் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்க வேண்டிய முறையில் விளங்கும் போது தவறாக விளங்கி விட்டால் அதையும் நன்மையாக்கி விடுவதாக' ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

ஆனால் பிற்பாடு அவர் வாழும் காலங்களிலே ஒரு தரப்பார் சொல்வது சரி மற்றவர் சொல்வது தவறு என்று ஆதாரபூர்வமாக தெரியவரும் பட்சத்தில் அவர் முன்பு வாழ்நாளில் ஒரு முறை கொடுத்து வந்த பழக்கத்தை விட்டு விட்டு வருடா வருடம் கொடுக்க தொடங்க வெண்டும். இதில் குழப்பம் ஒன்றுமில்லை. இதில் எந்த தரப்புமே நஷ்டமடைய வாய்ப்பில்லை. ஆதாரபூர்வமாக தெரிந்த பிறகும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று வாதிடுவாரானால் அவர்தான் இறைவனால் குற்றம் கண்டு பிடிக்கப்படுவார்.

suvanappiriyan said...

மாசிலா!

//சவுதியில பிறந்து வளர்ந்த உலகமறிந்து வெறுக்கப்பட்ட மகா பெரும் கோமாளி-கூத்தாடி பின் லேடன் யாரும் அழைப்பு விடாமலே மற்ற நாடுகளில் சென்று உயிர் பொருள் சேதம் சேதம் செய்த பாவங்களைப்போல் மாதவன் போன்றவர்கள் எதையும் செய்யவில்லை.//

பின்லேடனை நான் எந்த காலத்திலும் ஆதரிக்கவில்லை. அவரை வளர்த்து விட்டதே உலக பயங்கரவாதி அமெரிக்காதானே!

//இதே உங்கள் பாசத்துக்குரிய சவுதியில் கூடாரம் போட்டு சீருடை அணிந்து பல ஆண்டுகளாக அரசின் பூர்வ ஆதரவுடன் கூத்தடிக்கும் அமெரிக்க பட்டாளத்தார்களை சாடுங்கள்.//

இன்று வரை சாடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

//நேரம் எடுத்து 'வினவின்' http://www.vinavu.com/2012/01/23/tyranny-of-saudi-oger/ பதிவினை படித்து சவுதியில் நடக்கும் மனித அவல அட்டூழியங்களுக்கு பொறுபான கூத்தாடிங்களை சாடுங்கள். அதை விட்டுவிட்டு பாவம் மாதவனைப் போன்ற சாதாரண கலைஞர்களை திட்டுகிறீர்களே! இது நியாயமா சார்?//

ரஷ்யாவிலோ சீனாவிலோ ஒரு கம்பெனி தொழிலாளர்களை சரியாக நடத்தவில்லை என்றால் உடனே வினவு 'கார்ல் மார்க்ஸ் தேசத்தின் காலித் தனம் பாரீர்' என்றுதான் பதிவு இடுவாரா? உங்கள் கம்யூனிஸ நண்பரை கொஞ்சம் சிந்திக்க சொல்லுங்கள் மாசிலா!

//பாவம் மாதவனைப் போன்ற//

கோடிக் கணக்கில் பணம் சம்பாரிக்கும், பல குடும்ப பெண்களின் கலாசாரம் கெடுவதற்கும் காரணமான இந்த கூத்தாடிகள் உங்களுக்கு பாவமா? உங்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

Unknown said...

http://www.yarlmuslim.blogspot.com/2012/01/blog-post_3305.html

Anonymous said...

/// நம நாட்டில் சினிமா மோகம் என்று ஒழியுமோ அன்று தான் நாட்டுக்கு விமோசனம். தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ///

வணிகர்களிடம் கருப்புப் பணம் இல்லையா? ஆலுக்காஸ் வியாபாரியிடம் கருப்புப் பணம் இல்லையா?

ஷர்புதீன் said...

வழக்கம் போல் Non -Linear பின்னூட்டம் ஒன்று

நிகழ்ச்சி ஓன்று:
எனக்கு தெரிந்த இஸ்லாமிய ( அதாவது இஸ்லாமியத்தை மிக உறுதியாக பின்பற்ற முயற்சிப்பவர் ) நண்பர் கொச்சினில் பதினான்கு வயது பெண் ஒருவர் பல அதிகாரிகளால் பாலியல் வன்முறைக்கு ஆளானதை பற்றி பகிர்ந்துகொண்டார், இயல்பில் அவர் இஸ்லாமியம் சாராமல் பேச விரும்பாதவர்!)


நிகழ்ச்சி இரண்டு :
எனது தெருவில் ஒரு பெண்., 'முறை தவறியதை' குரூப்பாக நின்று கொண்டு அலசினார்கள்! அவர்களிடம் " இந்த வருடம் நமது தெருவில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தது யார் என்று கேட்டேன்" - அவர்கள் சொன்ன பதில் கடைசியில் ...




வேறு வழியில்லை ...இதோ சில சுய சொரிதல்கள் :

கடந்த பத்துஆண்டுகளாக எந்த நண்பரிடமும், மனைவியிடமும் நெகடிவ் செய்திகளை பகிர்ந்ததில்லை, என்னை சுற்றி நடந்த எந்த சிறு விசயத்திலும் அழகோ, பாராட்டப்படும் விசயமோ தெரிந்தால் உடனே அதனை பலரிடம் பகிர்ந்ததுண்டு! ( சாட்சி -பதிவுலகில் மங்குனி அமைசர் என்பவர் எனது நெருங்கிய பதினைந்து ஆண்டுகால குடும்ப நண்பர்) அப்படி சொல்லப்படும் போது ரசித்ததும் இல்லை!அதனை ஊக்குவித்தும் இல்லை, அரக்கிளாசில் தண்ணீர் இருப்பதும் உண்மை, காலியாக இருப்பதும் உண்மை! அடியேன் இருக்கு என்று சொல்லும் கட்சி!

எவ்வளவு கடுமையான சூழலிலும் கெட்ட வார்த்தைகள் பேசியதில்லை, எதனையும் எறிந்ததில்லை ( வார்த்தைகள் உட்பட)


அவர்கள் சொல்லியது -
எனது தெருவில் உள்ள ( எனது நெருங்கிய சொந்த பந்தம்) எல்லோரும் எனக்கு கொடுக்கும் உருவகம், " இவன் பெரிய இவன் போலதான் எப்போதும் பேசுவான்"!!


முடிவுரை :

உலகில் எல்லாமும்தான் இருக்கும், அதனை எப்படி கையாளுவது என்பது மட்டுமே நாம் யோசிக்க வேண்டிய விசயம்! ஏதொ எனது மனதளவில் என்னை சுற்றி நடக்கும் எல்லா விசயத்தையும் அலசி ஆராயும் புத்தியை நீங்கள் நம்பும் கடவுள் கொடுத்ததாக நினைக்கிறேன், என்ன ,...நானும் அவர்தான் கொடுத்தார் என்று நம்பவில்லை, அவ்வளவுதான்!

Anonymous said...

மாநவனின் தம்பி படம் பார்க்கவும்.சமுக நல படம்..நல்லத மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்,.