Followers

Friday, January 06, 2012

இந்து முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் சாத்தியமா? பிபிசி

இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது.

இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பான்மை இனத்திடமும் அரசாங்கத்திடமும் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதனை தம் மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க அவர்கள் தயாராக இல்லை என்று கூறினார்.



இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் போதிய உதவிகள் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கவில்லை என்கின்ற போதிலும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றும், ஆனால், முஸ்லிம்கள் அந்த சிந்தனை வட்டத்திலேயே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நண்பர்கள் இங்கு கேட்கலாம்.


ஆடியோ வில் உள்ள நிர்மலா ராஜசிங்கம் அவர்களின் பேச்சின் சுருக்கம்:

………மே 2009க்குப் பிறகு தமிழர் கட்சிகளால் முஸ்லிம்களின் வடக்கு வெளியேற்றம் பற்றி முறையாக பேசப்படவில்லை. வர விருப்பம தெரிவிக்கும் ஒரு சில முஸ்லிம்களையும் யாழ்ப்பாண தமிழர்கள் வர விடுவதில்லை. அவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை. டாய்லெட் கட்ட விடுவதில்லை. பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதில் கூட முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

20 வருடமாக புத்தளத்தில் வசித்து வரும் முஸ்லிம்கள் இன்றும் அதே டென்ட்களில்தான் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு முஸ்லிம்களின் புனர்வாழ்வு என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. விடுதலைப்புலிகள் செய்த முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றிய இந்த ஈனத்தனமான செயலால் இன்று பல சிக்கல்கள் உருவாகியுள்ளது. அரசு மட்டத்திலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வரை இந்த விஷயத்தில் மிகவும் பொடும் போக்காகவே இருக்கின்றனர்.

எங்களிடம் உள்ள சிறுபான்மையினரான முஸ்லிம் தமிழர்களை ஒழுங்காக நாம் நடத்தாமல், சிங்களவர்கள் தமிழர்களை ஒழுங்காக நடத்துவதில்லை என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாம் இலங்கை அரசை குற்றம் சுமத்த முடியும்? முஸ்லிம்களை புலிகளால் நடந்த தவறுகளை எல்லாம் எடுத்துச் சொல்லி அவர்களை சமூகத்தோடு ஒன்றர கலக்கச் செய்யவைப்பது பெரும்பான்மை சமூகமான எனது தமிழ் சமூகத்துக்கு பெரும் பங்கு உள்ளது. .........

19 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

சகோ.நிர்மலா ராஜசிங்கம் அவர்களுடைய இந்த செவ்வி மிக அருமையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒன்று.

இவரைப்போன்று பதிவுலகில் பார்ப்பது அபூர்வம் என்றாலும், வெளியேபலர் நிஜத்தில் இருப்பதும் வாழ்வதும் பகிரங்க செவ்வி அளிப்பதும் நிச்சயம் இலங்கை முஸ்லிம் தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

தமிழை இனமாக பார்க்க கூடாது. அதை ஒரு மொழியாக பார்க்க வேண்டும். சிங்களம் பேசும் முஸ்லிம்களையும் சிங்களர்களாகத்தானே அவர்கள் http://www.sihalamuslims.org/ பார்க்கின்றனர்..? நாம் மட்டும் ஏன் அப்படி முஸ்லிம்களை தனி இனமாக பார்க்க வேண்டும்..?" என்று ஒவ்வொரு ஈழத்தமிழரும் நினைக்க வேண்டும்..!

மிக்க நன்றி சகோ.

Anonymous said...

Dear Muslim,
Not only in eelam anywhere in the world muslims dont know how to live other religious people.Allah Muhammad and Quran are responsible for this

When they are minority they act asif they are oppressed.
If they are majarity they simply finish off the other riligious people.
You list the countries where other religious people are free and happily follow their religion in a muslim country.

You are very fortunate and lucky to born the land of civilised and tolerant hindus.
Jai Hind

Unknown said...

நடந்தை மறந்து நடப்பதை நினைப்பதே நன்று!

புலவர் சா இராமாநுசம்

suvanappiriyan said...

திரு புலவர் சா ராமானுஜம்!

//நடந்தை மறந்து நடப்பதை நினைப்பதே நன்று!

புலவர் சா இராமாநுசம்//

இதைத்தான் நாமும் வலியுறுத்துகிறோம். என்றோ விடுதலைப புலிகள் முஸ்லிம்களுக்கு சில தவறுகளை செய்தார்கள். இன்று அங்கீகரிக்கப்பட்ட புலிகளின் அமைப்பு உலகில் எங்குமே இல்லை. எனவே நடந்ததை மறந்து மொழியால் ஒன்று பட்ட முஸ்லிம்களும் இந்துக்களும் முன்பு போல் அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பம். இன்று முஸ்லிமாக உள்ளவர்கள் 500 600 வருடங்களுக்கு முன்னால் இந்துக்களாக இருந்தவர்கள்தானே!

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம்! சகோ ஆஷிக்!

//சகோ.நிர்மலா ராஜசிங்கம் அவர்களுடைய இந்த செவ்வி மிக அருமையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒன்று.

இவரைப்போன்று பதிவுலகில் பார்ப்பது அபூர்வம் என்றாலும், வெளியேபலர் நிஜத்தில் இருப்பதும் வாழ்வதும் பகிரங்க செவ்வி அளிப்பதும் நிச்சயம் இலங்கை முஸ்லிம் தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.//

கண்டிப்பாக! இது போன்ற நல்லுள்ளம் கொண்டவர்கள் சிக்கலான இந்த தமிழர் பிரச்னையை தீர்க்க முன் வர வேண்டும். முஸ்லிம்களும் நிர்மலா போன்றவர்கள் முன்வைக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

//நாம் மட்டும் ஏன் அப்படி முஸ்லிம்களை தனி இனமாக பார்க்க வேண்டும்..?" என்று ஒவ்வொரு ஈழத்தமிழரும் நினைக்க வேண்டும்..!//

யாழ்ப்பாண தமிழர்கள் மலையக தமிழர்களையும் அண்ட விடுவதில்லையாம். அந்த அளவு ஆரியம் அவர்களை ஆட்கொண்டுள்ளது. இவ்வளவு இழப்புகளை சந்தித்த பிறகாவது இனியும் முரண்டு பிடிக்காமல் இரு தரப்பும் நெருங்கி வர வெண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

suvanappiriyan said...

அனானி!

//Dear Muslim,
Not only in eelam anywhere in the world muslims dont know how to live other religious people.Allah Muhammad and Quran are responsible for this//

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.'
-குர்ஆன் 2:256

இந்த வசனம் எதற்காக இறங்கியது என்ற வரலாறை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களின் பல கேள்விகளுககு விடை கிடைக்கும்.

அன்ஸார்களில் ஸாலிமுபின் அல்ஃபு என்னும் கோத்திரத்தில் ஒருவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தந்தை முஸ்லிமாயிருந்து, அவரது மகன்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருப்பது தமக்கு விருப்பமில்லாமல் நபி அவர்களிடம் வந்து நான் எனது மக்கள் இருவரையும் கிறிஸ்தவ நிலையிலிருந்து மாற்றி பலவந்தப்படுத்தி முஸ்லிம்களாக்க விரும்புகிறேன். இவ்வாறு நான் செய்வது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். அப்போதுதான் “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை” என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி, அவர்கள் அவ்வாறு செய்வதை நபி அவர்கள் தடுத்துவிட்டார்கள்.

முகமது நபி இறக்கும் தருவாயில் ஒரு யூதரிடம் அடமானமாக சில பொருட்களை வைத்து கடன் வாங்கியிருந்தார்கள். இறப்புக்கு பிறகே அந்த கடன்கள் அடைக்கப்பட்டன. முகமது நபி இறக்கும் போது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருந்தார்கள். இந்த நிலையில்தான் அவரது கட்டுப்பாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் முகமது நபிக்கே கடன் தரும் அளவுக்கு சீமானாக இருந்திருக்கிறார்.

1000 வருடங்கள் இந்தியாவை இஸ்லாமியர்கள் ஆட்சி செய்தும் வலுக்கட்டாயமாக எவரையும் மதமாற்றம் செய்யவில்லை. 'மகன் ஹூமாயுனே! நாம் ஆட்சி செய்யும் இந்த ஹிந்துஸ்தானம் பசுவை தெய்வமாக வணங்கக் கூடியவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. எனவே அவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை அனுசரித்து ஆட்சி புரிவாயாக' என்ற மடல் பாபர் நாமா வில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவ்வளவு ஏன் இந்த பதிவே என்ன சொல்கிறது. காலகாலமாக மண்ணின் மைந்தராக இருந்த முஸ்லிம்களை பிறந்த மண்ணிலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டினார்களே! இன்று வரை அவர்க்ள் முகாம்களில் தங்கியிருக்கிறார்களே! விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் அல்லவே!

சிராஜ் said...

சகோ சுவனப்பிரியன்,

வழக்கம் போல் இதுவும் ஒரு அற்ப்புதமான ஆக்கம். வாழ்த்துக்கள் சகோ.

யாழ்பாணத்தில் தமிழ் இந்து மற்றும் தமிழ் முஸ்லிம்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த உழைக்கும் நிர்மலா ராஜசிங்கம் போன்றோர்களுடைய செயல்களை நான் மனதார பாராட்டுகிறேன். அது போன்ற ஆக்கப்பூர்வமான முயற்ச்சிகள் நிச்சயம் நடக்க வேண்டும், அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

ஆனால் , இலங்கையின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் பொழுது, யாழ்ப்பான தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களிடம் இணக்கமாக பழகுவார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை சகோ. இதற்க்கு பெரிதாக இலங்கைக்கு சென்று ஆராய்ச்சி பண்ண வேண்டியது எல்லாம் இல்லை சகோ. ஈழ எழுத்தாளர்கள் என்று கூறும் பதிவர்களின் பதிவுகளை நீங்கள் உற்று நோக்கினாலே அறிந்து கொள்ளலாம். அவர்களின் எண்ண ஓட்டத்தை அவர்கள் பதிவுகள் அழகாக படம் பிடித்து காட்டிக்கொண்டு இருக்கின்றன சகோ. அவர்களிடையே இருக்கும் சாதிய மனப்பான்மை அதற்க்கு இடம் கொடுக்காது சகோ. எனக்கு நம்பிக்கை இல்லை. நல்லது நடந்தால் சந்தோசம்.

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//ஈழ எழுத்தாளர்கள் என்று கூறும் பதிவர்களின் பதிவுகளை நீங்கள் உற்று நோக்கினாலே அறிந்து கொள்ளலாம். அவர்களின் எண்ண ஓட்டத்தை அவர்கள் பதிவுகள் அழகாக படம் பிடித்து காட்டிக்கொண்டு இருக்கின்றன சகோ. அவர்களிடையே இருக்கும் சாதிய மனப்பான்மை அதற்க்கு இடம் கொடுக்காது சகோ. எனக்கு நம்பிக்கை இல்லை. நல்லது நடந்தால் சந்தோசம்.//

இணையத்தில் இருக்கும் ஒரு சில பதிவர்களை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையும் நாம் எடை போடுவது சரியாக படவில்லை. யாழ்ப்பாண தமிழர்களிடம் சாதீயம் வேரூன்றி இருப்பது பெரும் குறைதான்! இவ்வளவு இழப்புக்கு பிறகாவது இந்த மனநிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்க வேண்டும். நடக்கும் என்று நம்புவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//You list the countries where other religious people are free and happily follow their religion in a muslim country.//

பெரும்பான்மை முஸ்லிம் மக்களைக் கொண்ட மலேசியாவில் பிழைப்பு தேடிப் போன நம்மவர்கள் சகல வசதிகளோடு அந்த நாட்டு பிரஜையாகி இந்து மதத்தை சுதந்திரமாக பின்பற்றி வாழ வில்லையா? எகிப்திலும் சிரியாவிலும் ஜோர்டானிலும் கிறித்தவர்கள் இன்று வரை சகல சுதந்திரத்தோடே வாழ்கின்றனர்.

//You are very fortunate and lucky to born the land of civilised and tolerant hindus.
Jai Hind//
Really???????????

Six members of a right-wing Hindu group have been arrested in India's southern Karnataka state for raising Pakistan's national flag on a government building.
Police say those arrested belong to the Sri Rama Sena group.
The flag was raised in Sindgi, near Bijapur, on 1 January, leading to angry protests by Hindu organisations and the stoning of a Muslim prayer hall.
Police say Sri Rama Sena was trying to create "communal disharmony" in an area with a sizeable Muslim presence.
Sri Rama Sena is a fringe group that claimed responsibility for attacking women outside a pub in the coastal district of Mangalore in 2009, saying that allowing females in pubs was against Indian culture.

'Dividing society'
Inspector general of police Charan Reddy told the BBC the situation in Sindgi was "now peaceful".
"It seems they were out to create communal disharmony," he said.
Hindu organisations had called for strikes in a number of towns around Bijapur to protest against the flag-raising.

But Mr Reddy said police investigations had led them to members of the Sri Rama Sena, a group founded by Pramod Muthalik after it broke away from the Bajrang Dal, an affiliate of the long-standing Hindu nationalist organisation, the Rashtriya Swayamsevak Sangh (RSS).

Mr Muthalik is the leading suspect in the attack on the women in Mangalore.

Former chief minister and Janata Dal Secular party leader HD Kumaraswamy said of the flag-raising: "It is such a shame. I blame the RSS and the Bharatiya Janata Party (BJP) for the incident. They want to divide society on religious lines."
Bijapur is close to Hyderabad in neighbouring Andhra Pradesh and is a historic town with a sizeable Muslim population.

Police arrested Sri Rama Sena members for the desecration of a mosque in Mysore a few years ago.
The carcass of a pig was thrown near the prayer hall, an act that triggered major riots between Hindus and Muslims.

Karnataka was also rocked by a series of attacks on churches by right-wing groups in 2008, immediately after the BJP came to power.

5 January 2012 Last updated at 12:14 GMT
bbc

அந்நிய எதிரி நாட்டு கொடியை நமது அரசு அலுவலகத்தில் ஏற்றி தேச விரோத செயல் புரிந்தது யார தெரியுமா அனானி? படித்து தெரிந்து கொள்ளவும். ராமருக்கு சேவை செய்யும் சேனாவின் லட்சணம் இதுதான்.

காந்தியை கொல்ல 'இஸ்மாயில்' என்று பச்சை குத்திக் கொண்டு வந்தவனும் ஒரு இந்தியன்தான். மாலேகானில் மக்கா மஸ்ஜிதில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் குண்டுகளை வைத்து அப்பாவி பொது மக்களை கொன்று பழியை முஸ்லிம்கள் மேல் போட்டதும் ஒரு சில இந்தியர்கள்தான். இன்று ஜெயிலில களி தின்பதும் அதே இநதிய சாமியாரிணி பிரக்யாசிங்தான்.

இதற்கெல்லாம் எனது தாய் நாட்டின் பெருமையை எண்ணி பெருமைபடத்தான் வேண்டும். 

baleno said...

எனது சிறு வயது காலத்தில் யாழ்பாணத்தில் தமிழர்களிடையே இந்து முஸ்லிம் பிரச்சனை என்பது நினைத்து பார்க்க முடியாத விடயம்.
நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் மனத உரிமை பேசி புலிகளால் படுகொலை செய்யபட்ட யாழ்பாண பல்கலைகழக பேரசிரியை திருமதி ரஜினி திரணகமவின் சகோதரியாவார்.

Anonymous said...

Dear muslim
the condition of hindus in malaysia.
http://hindraf.org/
egypt,iraq and nigeria other religious people are killed daily.

you you one quran verse that there is no compulsion,another verse will say kill the kafirs whereever you find them.
The funny thing is that till muslims take quran as literal and try to follow it blindly theses killing will continue.

Some communal violence problem with hindu right you reported.Even if you assume that they did it ,That is a opposite reaction which is making other religious people to do like momins.

Anonymous said...

Is it right to impose sharia law on non muslims ,when muslims demand sharia(only for social )even when they are minority?

Countries using strict forms of Sharia Law include:

Death for Blasphemy:

1. Afghanistan
2. Bahrain
3. Iran
4. Mauritania
5. Oman
6. Pakistan
7. Yemen
8. Saudi Arabia
9. Gaza

Imprisonment for Blasphemy:

1. Algeria
2. Bangladesh
3. Egypt
4. Iraq
5. Kuwait
6. Libya
7. Malaysia
8. Maldives
9. Morocco
10. Somalia
11. Tunisia
12. United Arab Emirates


Nations that include some level of Sharia (leniant sentences for honour killings, ban on new churches, floggings, etc):


1. Indonesia (Flogging, Caning; Sharia applied strictly in Aceh province)
2. Turkey (Restrictions on alcohol)
3. Brunei (Caning, Alcohol is illegal)
4. Jordan (2 years or less for honour killings)
5. Eritrea (Girls as young as 8 can be married, spousal rape is not recognized)
6. Syria (1 year or less for honour killings)
7. Djibouti (Sharia law regarding divorce)
8. Chechnya (Modest dress enforced, Alcohol and gambling suppressed by local authorities)
9. Niger (girls can be married off before they reach puberty)
10. Nigeria (Sharia is enforced in the northern states)
11. Kenya (Ad Hoc Sharia enforced in the east near the border with Somalia)
12. Gambia (Sharia courts decide all family matters, including for non-Muslims)
13. Qatar (public consumption is illegal during Ramadan, Alcohol heavily restricted, blood money acceptable punishment for murder, "kafala" law which is also shared by all Gulf states but Bahrain is technically slavery)
14. Uganda (Kadhi Courts overseeing family and civil matters)

Most "Western" nations also have parallel Sharia legal systems (for example in Canada polygamy is widely practiced and authorities look the other way, Imams refusing to condemn or work to stop it). Sharia finance is also practiced in many nations around the world. Many other Islamic nations that do not apply Sharia (such as Azerbaijan, Albania, Bosnia, Uzbekistan, and Tajikstan) have large portions of their population who do want it applied or who actively seek to abide by it extra-legally.

Read more: http://wiki.answers.com/Q/What_countries_use_Sharia_Law#ixzz1iq2tn3p7

Anonymous said...

Is buddhist muslim unity possible?

muslims cant have unity with others as well as themselves.

First finish off khafirs ,then other muslim sects,bad muslims .... the list goes on

suvanappiriyan said...

திரு பலினோ!

//எனது சிறு வயது காலத்தில் யாழ்பாணத்தில் தமிழர்களிடையே இந்து முஸ்லிம் பிரச்சனை என்பது நினைத்து பார்க்க முடியாத விடயம்.
நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் மனத உரிமை பேசி புலிகளால் படுகொலை செய்யபட்ட யாழ்பாண பல்கலைகழக பேரசிரியை திருமதி ரஜினி திரணகமவின் சகோதரியாவார்.//

சிங்கள அரசு தமிழர்களை கொன்றதை விட புலிகள் கொன்றதே அதிகம் என்கின்றனர் நோக்கர்கள். இவர்கள் கொலைப் பட்டியலில் யாரை விட்டார்கள். எல்லா தலைவர்களையும் ஒட்டு மொததமாக கொன்று விட்டு பிரபாகரனை முடி சூட்டி அழகு பார்க்க நினைத்தது புலித் தலைமை. ஆனால் இறைவன் நினைத்ததோ வேறு மாதிரி!

suvanappiriyan said...

அனானி!

//First finish off khafirs ,then other muslim sects,bad muslims .... the list goes on//

கொடுத்திருக்கும் அத்தனை விபரங்களுக்கும் பலமுறை பதில் சொல்லியாகி விட்டது. திரும்பவும் பழைய கேள்விகளா?

இதை விட அதிகமாக இந்தியாவில் ஆதி திராவிடர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை என்னாலும் பட்டியலிட முடியும்.

நீங்கள் சொல்வது அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் படித்தவர்கள் அதிகம் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு சென்று அவர்களை முதலில் தடுக்கவும்.

நம் ஊர் பெரியார்தாசனையும், ஏ.ஆர்,ரஹ்மானையும் பற்றி உங்கள் கருத்து என்ன? :-)

Anonymous said...

Once the task is done for what it is created ,islam also will be destroyed like all previous avathars !!!!!!!!!!!!!!!

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தெளிவான இடுகை

//இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் போதிய உதவிகள் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கவில்லை என்கின்ற போதிலும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றும், ஆனால், முஸ்லிம்கள் அந்த சிந்தனை வட்டத்திலேயே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.//

இது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி

பகிர்ந்த பகிர்வுக்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

சிராஜ் said...

சகோ சுவனப்பிரியன்,
அனானி கூட சண்டை போடாதீங்க. அவர் நமக்கு சாதகமாகத்தான் பேசுறார். அவர் சொன்னதில் பெரும்பான்மையானது குடியை தடை செய்ததும், கருணை கொலையை தடை செய்ததும் தான். இதைத்தான் ஷரியாவின் மோசமான பக்கங்களாக சொல்றாங்க. இதுக்கு எதுக்கு கவலைப்பட வேண்டும் சகோ. இவற்றை தடை செய்வது நல்ல விசயம்தானே. இது தான் காட்டு மிராண்டித்தனம் என்று சொன்னால், நாம் காட்டுமிராண்டியாகவே இருந்துவிட்டு போவோம் சகோ. நாம் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமிதம் கொள்வோம் . நம் குழந்தைகளையும் நாம் அவ்வாறே வளர்ப்போம், நம் பேரனையும் அவ்வாறே வளர்ப்போம். இன்ஷா அல்லாஹ் அவர்கள் நம் மார்கத்தில் நம்மை விட அதிகம் பற்றுடன் இருப்பார்கள். இதற்க்கு இறைவன் உதவி செய்ய வேண்டும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ சிராஜ் சகோ குலாம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!