Followers

Tuesday, January 10, 2012

தானே புயலின் பாதிப்புக்கான நிதியுதவிகள்!




கடலூர் மற்றும் புதுவையில் தானே புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல அமைப்புகளும் உதவி செய்து வருகின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது பங்காக முதல் தவணையாக 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி மத பேதமினறி உதவி அளித்துள்ளது. அமைப்பின் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல் உழைப்பாலும் உதவி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் உதவிகள் கிடைத்திட நம்மால் ஆன சிறு உதவியையாவது அனுப்பி வைப்போம்.

தானே புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் சாதாரணமானது அல்ல! அது 50 வருடத்திய மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துச் சென்றுவிட்டது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயமும், கடல்சார் தொழில்களும் தான் அந்தப் பகுதி மக்களின் பிழைப்பாதாரம். பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருக்கும் வாழைத்தோப்புகள், முந்திரித்தோப்புகள், தென்னந்தோப்புகள் ஆகியவை முழுமையாகச் சேதமடைந்தன.
பலா மற்றும் வாழை மரங்கள் ஆகியவை வேறோடு சாய்ந்ததால் கடலூர் மாவட்ட மக்கள் தங்களின் பிழைப்பை இழந்து நிற்கின்றார்கள். விவசாயிகளாக இருந்த மக்களின் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கடலை, கரும்பு போன்றவை புயலின் சீற்றத்தால் உருக்குலைந்து போனது. கடல் பகுதிகளும் வாழும் மக்களின் படகுகளும்,வலை உபகரணங்களும், வீடுகளும் சேதமடைந்தன.

தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் குடிநீர் கிடைக்காமல் கடலூர் மற்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். குடிநீர் மட்டுமின்றி உணவுக்கும் வழியில்லாமல் கடலூர், பாண்டி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.




புயலின் வேகத்தால் சாய்ந்து போன மரங்களைப் போல மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் வழங்கமுடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இருக்கின்றது. புயல் தாக்கிய அன்று முதல் இன்றைய தினம் வரைக்கும் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியின் பலபகுதிகள் மின்சாரம் கிடைக்காமல் அந்தப் பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

நிலைமை சீரடைந்து மீண்டும் பழைய நிலைக்கு கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் திரும்புவதற்கு இன்னமும் ஆறு மாத காலங்கள் ஆகும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.



நிவாரணப் பணிகளில் கடுமையான மெத்தனப்போக்கு காட்டப்படுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவர்களும் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை ஆராய்ந்து அதன்பின்னர் நிவாரண உதவிகளை அறிவித்தனர். இன்னும் சிலர் அவர்களின் கட்சிக்காரர்கள் பரிந்துரை செய்த சொற்ப சிலருக்கு நிதி உதவிகள் வழங்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதாக பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

ஆனால் இந்தப் புயலால் உண்மையிலே பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்கும் உரிய நிவாரணம் சென்றடையவில்லை என்பது தான் கண்கூடு. அரசியல் கட்சிகள், நாங்களும் வந்து சென்றோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே மட்டுமே இதுபோன்ற பார்வையிடுதல் வேலைகளை செய்து கொண்டிருந்த போது இதிலிருந்து வேறுபட்டு மக்களின் துயர்துடைக்க நேரடியாகக் களமிறங்கி அந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

கடலூர்,பாண்டி ஆகிய மாவட்டங்களில் புயலால் சேதாரங்கள் ஏற்பட்ட மறுநாள் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்த சகோதரர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களிளை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்யாவசியத் தேவையான தண்ணீர்,பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர்.

இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

புயல் தாக்கியது முதல் மாநிலத் தலைமையில் இருந்து மாவட்ட மற்றும் கிளைகளின் பணிகள் கேட்டறியப்பட்ட வண்ணம் இருந்தன. பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம் என்ற தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைமைக்கு கொண்டு வந்தனர்.

உணவு,உடை,உறைவிடம் என அத்யாவசியத் தேவைகள் எதுவுமில்லாமல் நிற்கும் இந்த மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு, மேற்படி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களின் விவரங்களைத் திரட்டுமாறு அந்தந்தக் கிளைகளுக்கு தகவல் தரப்பட்டது. கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு உண்மையாகவே பாதிப்புக்குள்ளாகியிருந்தவர்களின் பட்டியலைச் சேகரித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து கடந்த 04/01/2011 புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவலவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர் துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர்

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிளைக்கும் தகவல் கொடுத்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலைத் தயாரித்து ஒவ்வொருவருக்கும் டோக்கன் கொடுக்குமாறும் டோக்கனுடனும் ரேஷன் கார்டுடனும் குறிப்பிட்ட இட்த்தில் திரட்டி வைக்குமாறும் முன்னரே தலைமை மூலம் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. ஒவொரு ஊருக்கும் நிர்வாகிகள் வரும் நேரமும் தெரிவிக்கப்பட்ட்து.

திட்டமிட்ட படி சென்ற இந்த நிவாரணக் குழுவினர், முதலில் பண்ருட்டிக்குச் சென்றனர்.
பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ 2,000 த்தை முதல் கட்டமாக நிவாரண உதவியாக வழங்கினார்கள்.

பண்ருட்டியில் வழங்கப்பட்ட நிவாரணத்தைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் களம் கண்ட இடம் மேல்பட்டாம்பாக்கம். இந்தப் பகுதியும் புயலின் சீற்றத்தால் பாதிப்படைந்த பகுதிதான். இங்கிருந்த மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நின்றவர்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாய்கள் ரொக்கமாக வழங்கப்பட்டன.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு:
TAMILNADU THOWHEED JAMATH,
INDIAN BANK,
A/C NO: 788274827,
MANNADY BRANCH

டிடி அல்லது செக் அனுப்ப விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்:

TNTJ மாநிலத் தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி,
சென்னை-1

8 comments:

kannan said...

from u.a.e we can send money only to the individual person, kindly give the alternative option to utilize this option to support those peope. i wish your wonderfull ministry.

kannan from abudhabi
http://samykannan.blogspot.com/

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பகிர்வுக்கு நன்றி சகோ. நானும் எனது தளத்தில் பகிர்கிறேன்

suvanappiriyan said...

திரு சாமி கண்ணன்!

//from u.a.e we can send money only to the individual person, kindly give the alternative option to utilize this option to support those peope. i wish your wonderfull ministry.//

தனிப்பட்ட நபர்களின் பெயரில் இந்த அமைப்பில் வங்கிக் கணக்குகள் திறக்கப்படவில்லை என்று அறிகிறேன். அனுப்பும் நபர்கள் நமது சொந்தங்களுக்கு அனுப்பி 'இந்த அட்ரஸில் சேர்ப்பித்து விடவும்' என்று தகவல் சொன்னால் உரியவர்களை சென்றடையும்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆமினா!

//பகிர்வுக்கு நன்றி சகோ. நானும் எனது தளத்தில் பகிர்கிறேன்//

வருகைக்கும் கருத்தைப் பகிர்வதற்கும் நன்றி!

Unknown said...

சிறந்த பணி....


தொடர வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

//சிறந்த பணி....


தொடர வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கார்பன் கூட்டாளி!

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரா, உங்கள் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.


தானே புயல் நிவாரண களத்தில் TNTJ (வீடியோ)
http://www.tntj.net/64741.html

ஷர்புதீன் said...

இந்த மாதிரியான இயற்க்கை இடர்பாடுகள் வரும்போது , இந்த டாக்டர்கள் எல்லோரும் சில நாட்கள் வாலண்டியராக அந்த இடங்களில் பணிபுரியலாமே?, இது குறித்து யாரேனும் விவாதம் செய்திருக்கிறீர்களா?