Followers

Saturday, January 28, 2012

தமிழ் மொழிக்காக குரல் கொடுக்கும் குஷ்பு!



இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழியும், தமிழ் மொழி பற்றியும் தெரியவில்லை என்று நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது, இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம்தான். ஆனால் தமிழ் மொழியை மறக்கக் கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது. இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.

--பத்திரிக்கை செய்தி
28-01-2012

மொழிப் போர் தியாகிகள் மாநாட்டில் கலந்து கொண்டு வீர உரை ஆற்றிய தியாகி குஷ்புவை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரது பாராட்டு மழையால் இன்று தியாகிகள் தங்களின் தியாகத்துக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று புளங்காகிதம் அடைந்திருப்பார்கள். இது போல் இனி சுதந்திர போராட்ட தியாகிகள் மாநாட்டிலும் குஷ்பு பெயரால் ஒரு பதக்கமோ பட்டமோ கொடுக்க அரசு முயற்ச்சிக்க வேண்டும்.

முன்பு திருச்சிக்கு பக்கத்தில் குஷ்புவுக்கு கோவிலையே கட்டி சில மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டதாக முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபரை இனி சகல விழாக்களுக்கும் அழைத்து தமிழர்களையும் தமிழ் மொழியையும் காக்க முயற்ச்சிக்க வேண்டும்.

http://govikannan.blogspot.com/2012/01/blog-post_28.html

பதிவுகள் சம்பந்தமாக கோவிக் கண்ணன் இட்டிருக்கும் பதிவு

கோவிக் கண்ணன் போன்ற சிறந்த பதிவர்கள் குஷ்பு போன்ற தியாகிகளை பேட்டியெடுத்து தனது பதிவின் மூலம் தமிழ்த் தொண்டாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து மத சம்பந்தமாக நிறைய பதிவுகள் வருவதாகவும் தான் இதைக் கண்டு பயப்படுவதாகவும் கூறியிருக்கிறார். எனவே இனி நானும் நடிகரகளின் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும், பல ருசிகரமான செய்திகளை பகிரலாம் என்று எண்ணம் வருகிறது.

இல்லை என்றால் ஈழத்தமிழர்கள் சிறந்தவர்களா, தமிழ்நாட்டு தமிழர்கள் சிறந்தவர்களா? என்ற ரீதியில் பல பதிவுகளையும் எழுதலாம் என்றிருக்கிறேன். அதை விட தமிழர்களின் சாதியில் தற்போது எந்த சாதி சிறப்பாக வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கிறது என்பதை பற்றியும் பல பதிவுகள் எழுதலாம்.

இதை எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் இனி என்னைப் போன்றவர்கள் என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என்று கோவிக் கண்ணன் ஒரு லிஸ்டை கொடுத்து விட்டால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஸ்கி: தனிப்பட்ட நபர்களின் தாக்குதல் இல்லாமல் ஆபாசம் இல்லாமல் உலக நடப்புகள் அனைத்தையும் ஒருவன் தெரிந்து கொள்ள முயற்ச்சிப்பது தவறா? இந்து மதத்தின் பெருமையை பல பதிவர்கள் இன்று வரை வெளியிட்டு வருகிறார்கள். கிறித்தவ மதமும் பகுத்தறிவு பிரசாரமும் இவ்வாறே! யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே! இஸ்லாத்தை பற்றி பல இடங்களில் விமர்சனம் வைக்கப்பட்டதாலேயே அதற்கு விளக்கம் கொடுக்க அவசியம் உண்டாகிறது. இது போன்று பிறந்ததுதான் அனேக பதிவுகள். பதிவுகளில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது அதை விளக்கி அவரும் பதிவுகள் எழுதலாம். அதை விடுத்து அழுகினி ஆட்டம் என்று அழுது மூக்கை சிந்துவது அழகுடைய செயலா?

25 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் அண்ணன் சுவனப்பிரியன்,
//பதிவுகளில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது அதை விளக்கி அவரும் பதிவுகள் எழுதலாம். அதை விடுத்து அழுகினி ஆட்டம் என்று அழுது மூக்கை சிந்துவது அழகுடைய செயலா?//
பதிவின் கடைசி வரிகள் நறுக்கு தெரித்தார் போன்று இருக்கிறது. கோவி கண்ணன் உண்மையை உணருவாரா? தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்தாலும் எழுப்ப முடியாது. ஆனாலும் நீங்கள் எழுப்ப முயற்சி செய்கிறீர்கள். முயற்சியில் வெற்றி பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.

asma said...

//இதை எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் இனி என்னைப் போன்றவர்கள் என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என்று கோவிக் கண்ணன் ஒரு லிஸ்டை கொடுத்து விட்டால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

உங்களுக்கு லிஸ்ட் கொடுத்தால் எனக்கும் மறக்காம‌ அனுப்பி வைங்க சகோ. ஏன்னா, 'இட்லி பொடி செய்வது எப்படி ?' என்பதோடு மற்ற தலைப்புகளையும் அந்த லிஸ்ட்டிலிருந்து நானும் செலக்ட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் :-))

//இந்து மதத்தின் பெருமையை பல பதிவர்கள் இன்று வரை வெளியிட்டு வருகிறார்கள். கிறித்தவ மதமும் பகுத்தறிவு பிரசாரமும் இவ்வாறே! யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே!//

அதானே சகோ...?! நல்லா சொல்லுங்க!

//பதிவுகளில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது அதை விளக்கி அவரும் பதிவுகள் எழுதலாம். அதை விடுத்து அழுகினி ஆட்டம் என்று அழுது மூக்கை சிந்துவது அழகுடைய செயலா?//

:))))))))) வெல்ட‌ன்!!! :))))))))))))))

suvanappiriyan said...

திரு கோவிக் கண்ணன்!

சமீப காலமாகவே உங்கள் பதிவுகளில் நிறைய தடுமாற்றம். ஏன் இப்படி? பழைய கோவி கண்ணன் எங்கே? வாரத்தில் சில பதிவுகள் மத சம்பந்தமானவை இடம் பிடிப்பதில் ஏன் இவ்வளவு பொறாமை உங்களுக்கு? இதற்கு முன் நாத்திக பதிவுகளும், ஆபாச பதிவுகளும் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளும் மகுடத்தை எட்டிய போதும் சூடான இடுகைகளில் வந்த போதும் யாரும் இவ்வாறு பொங்கவில்லையே!

எதிர்க் கருத்து சொல்வதற்கு உங்களிடம் சரக்கு இல்லை என்பதை இப்படிப் பதிவு எழுதி போட்டு உடைத்திருக்க வேண்டாம்.

காலம் கடந்து விடவில்லை. இனிமேலாவது மத வாதிகள் வைக்கும் வாதத்தை தர்க்க ரீதியாக பதிவிட்டு முறியடிக்க முயற்சி பண்ணுங்கள்.

ஜெய்லானி said...

//பதிவுகளில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது அதை விளக்கி அவரும் பதிவுகள் எழுதலாம். அதை விடுத்து அழுகினி ஆட்டம் என்று அழுது மூக்கை சிந்துவது அழகுடைய செயலா? //

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி..ஹி. ..:-)))

ஜெய்லானி said...

பதில் சொல்ல சரக்கு இல்லாவிட்டால் எஸ்கேப்தான் வேற என்ன செய்வது :-)).

suvanappiriyan said...

சகோதரி அஸ்மா!

// உங்களுக்கு லிஸ்ட் கொடுத்தால் எனக்கும் மறக்காம‌ அனுப்பி வைங்க சகோ. ஏன்னா, 'இட்லி பொடி செய்வது எப்படி ?' என்பதோடு மற்ற தலைப்புகளையும் அந்த லிஸ்ட்டிலிருந்து நானும் செலக்ட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் :-))//

கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன். அதிலும் நீங்களும் மற்ற சகோதரிகளும் புதிது புதிதான ருசிகரமான பல சமையல் குறிப்புகளை இடையிடையே கொடுத்து வருகிறீர்கள். அதில் அவருக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை. பலருக்கும் பயனுள்ள சமையல் குறிப்புகளையும் எழுத வேண்டாம் என்றால் வேறு எதைப் பறறித்தான் எழுதுவது?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஷேக் தாவூத்!

//பதிவின் கடைசி வரிகள் நறுக்கு தெரித்தார் போன்று இருக்கிறது. கோவி கண்ணன் உண்மையை உணருவாரா?//

இனி உணர்ந்து கொள்வார் என்று நம்புவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

'அவருக்கு எதிர் கருத்து கொண்டவர்கள் எவருமே அவர் தம் பதிவை பகிரும் திரட்டிகளில் இருக்கவே கூடாது' என்ற ஃபாசிஸ சித்தாந்தம் நடுநிலை எண்ணம் கொண்ட நல்லோர் எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது..!

இவரின் இந்த 'மதஎதிர்ப்பு' என்பது சிறிது சிறிதாக 'மதஎதிர்வெறி'யாகும் போது அது 'மதவெறி'யைவிட கொடுமையானதாய் ஆகலாம்.

எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..!

சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு, நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல் நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..!

ஆமினா said...

சலாம் சகோ

ஹி...ஹி...ஹி...

கூத்தும் கோலமும் தான்...

suvanappiriyan said...

சலாம் சகோ ஆமினா!

//ஹி...ஹி...ஹி...

கூத்தும் கோலமும் தான்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..!//

இப்படிப்பட்ட குரூர மனநிலைக்கு ஆளாக வேண்டாம் என்று அவருக்காக பிரார்த்திப்போம். அடிப்படையில் சிறந்த மனிதர்தான் கோவியார். அவரிடம் நாம் வைக்கும் வாதங்களுக்கு பதிலில்லையாதலால் அது கோபமாக மாறி விடுகிறது. இது பெரும்பாலான மனிதர்களின் இயற்கை.

//சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு, நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல் நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..!//

இறைவனின் நாட்டம் இருப்பின் கண்டிப்பாக நாம் செய்வோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

G u l a m said...

அன்பு சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அருமையாக விளக்கமிட்டு இருக்கிறீர்கள்.

இதுவே தெளிவான மறுப்பாகவும் -விளக்கமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.
அவரது நிலைப்பாடிற்கு.

பொறுத்திருப்போம்.,
அவரது கருத்தை அறிய
இன்ஷா அல்லாஹ்

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்! சகோ குலாம்!

//இதுவே தெளிவான மறுப்பாகவும் -விளக்கமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.
அவரது நிலைப்பாடிற்கு.//

ஆம். நாம் பொறுத்திருப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

வவ்வால் said...

ஹி..ஹி

குச்சுபு முன்னால் பேரு நக்கத் , ஒரு இஸ்லாமியர் என்று நீங்க நினைப்பதால் தான் கோவி , குச்சுபூவை கலாய்த்து பதிவு போட்டதும் இனப்பாசத்தில் இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கிங்கனு ஏன் சொல்லக்கூடாது.

கோவிக்கு எதிர்ப்பதிவு போடுவதாய் இருந்தால் தனியே போடாமல் ஏன் குச்சுப்பூ பதிவை வச்சு போடுறிங்க?

குச்சுப்பூ நடு நெத்தில பொட்டு வச்சு , பூ வச்சு மஹாலட்சுமி போல வருதே , அப்புறமும் அதை உங்க மார்க்கத்தில் இருக்குனு வரிஞ்சுக்கட்டிக்கிட்டு ஆதரவு காட்டுரிங்களே :-))

நீங்க என்னமோ உண்மையே பேசுறாப்போலவும் , அதுக்கு பதில் சொல்ல முடியாமல் மத்தவங்க ஓடுறாப்போலவும் உங்க மார்க்க பந்துக்கள் நாலு பேரு சேர்ந்து கும்மி அடிச்சா சரியாப்போச்சா?

சரியா விளக்கி , உங்க பொய்யையை வெளிக்காட்டினா சத்தம் போடாமல் ஓடுவது நீங்கள் தான் :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//குச்சுபு முன்னால் பேரு நக்கத் , ஒரு இஸ்லாமியர் என்று நீங்க நினைப்பதால் தான் கோவி , குச்சுபூவை கலாய்த்து பதிவு போட்டதும் இனப்பாசத்தில் இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கிங்கனு ஏன் சொல்லக்கூடாது.//

முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்ததாலேயே குஷ்பு முஸ்லிமாக முடியாது. குர்ஆனையும் முகமது நபியின் வாழ்க்கை முறையையும் முடிந்த வரை கடை பிடிக்கும் ஒருவரே இஸ்லாமியராக முடியும். அவர் குஷ்புவை பற்றி முன்பு ஒரு பதிவு போட்டிருப்பதே நிங்கள் சொல்லித்தான் தெரியும். :-)

//கோவிக்கு எதிர்ப்பதிவு போடுவதாய் இருந்தால் தனியே போடாமல் ஏன் குச்சுப்பூ பதிவை வச்சு போடுறிங்க?//

இனி இது போல் சினிமா நடிகைகளைப் பற்றி பதிவுகள் போட்டால் கோவியார் சந்தோஷப்படுவாரோ என்று கேட்டு நக்கலில் போட்ட பதிவு இது.

//குச்சுப்பூ நடு நெத்தில பொட்டு வச்சு , பூ வச்சு மஹாலட்சுமி போல வருதே , அப்புறமும் அதை உங்க மார்க்கத்தில் இருக்குனு வரிஞ்சுக்கட்டிக்கிட்டு ஆதரவு காட்டுரிங்களே :-))//

நீங்கதான் அந்தம்மாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி மந்திரங்களெல்லாம் சொல்லிட்டிங்களே! இந்த நிலையில் இஸ்லாமியர் சொந்தம் கொண்டாடினால் எங்களை அடிக்க வர மாட்டீர்களா? அபசாரம்...அபசாரம்.....:-) உங்க சாமி... உங்கபாடு......இடையில் நான் எதற்கு?

//நீங்க என்னமோ உண்மையே பேசுறாப்போலவும் , அதுக்கு பதில் சொல்ல முடியாமல் மத்தவங்க ஓடுறாப்போலவும் உங்க மார்க்க பந்துக்கள் நாலு பேரு சேர்ந்து கும்மி அடிச்சா சரியாப்போச்சா?

சரியா விளக்கி , உங்க பொய்யையை வெளிக்காட்டினா சத்தம் போடாமல் ஓடுவது நீங்கள் தான் :-))//

நாங்கள் தடுத்தோமா! எத்தனையோ பதிவுகள் இது வரை போட்டாகி விட்டது. இஸ்லாமிய பதிவுகளில் பொய்கள் அரங்கேறியிருந்தால் அவ்வளவு லேசில் விடுவீர்களா? இது பொதுக் கூட்ட மேடையன்று. சொல்லி விட்டு ஓடி விடுவதற்கு. இது இணையம். சொல்வது பொய்யாக இருந்தால் அடுத்த நிமிடமே கூகுளில் அடித்து பொய் சொல்வது யார் என்று தெரிந்து கொள்ளலாமே! ஏன் செய்யவில்லை?

இப்பவும் காலம் கடந்து விட வில்லை. அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு பொறுமையாக இன்று போய்................. ஆதாரமான பதில்களோடு நாளை வரவும். துணைக்கு கோவியாரையும் கூட்டிக் கொள்ளவும்.

வவ்வால் said...

திரு. சூவனம்,

//அவர் குஷ்புவை பற்றி முன்பு ஒரு பதிவு போட்டிருப்பதே நிங்கள் சொல்லித்தான் தெரியும். :-)//


எனக்கும் தெரியாது, நீங்க குச்சுபூ பத்தி எழுதி கீழே கோவி பதிவு முகவரி போட்டதால், அப்படிக்கேட்டேன்.

//நீங்கதான் அந்தம்மாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி மந்திரங்களெல்லாம் சொல்லிட்டிங்களே! இந்த நிலையில் இஸ்லாமியர் சொந்தம் கொண்டாடினால் எங்களை அடிக்க வர மாட்டீர்களா? அபசாரம்...அபசாரம்.....:-) உங்க சாமி... உங்கபாடு......இடையில் நான் எதற்கு?//

கோயில் எங்கே இருக்குனு சொன்னா ஒரு முறை போய் உங்க பேரில் அர்ச்சனை செய்வேன் :-))

//இது இணையம். சொல்வது பொய்யாக இருந்தால் அடுத்த நிமிடமே கூகுளில் அடித்து பொய் சொல்வது யார் என்று தெரிந்து கொள்ளலாமே! ஏன் செய்யவில்லை?//

அதான் பாலாறு தேனாறுனு பதிவு ப்போட்டு காட்டியாச்சே , அப்புறம் ஆதாம் ஏவாள் கதை கூட சொல்லியாச்சு :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//அதான் பாலாறு தேனாறுனு பதிவு ப்போட்டு காட்டியாச்சே , அப்புறம் ஆதாம் ஏவாள் கதை கூட சொல்லியாச்சு :-))//

பாலாறு தேனாறு பதிவில் நான் குறிப்பிட்ட அந்த ஆண்டுகளில் சவுதி எவ்வாறு பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது என்பது சுட்டிக் காட்டியிருந்தேன். குறிப்பிட்ட அந்த வருடத்துக்கு பிறகு தண்ணீர் பற்றாக் குறையினால் கோதுமை மகசூலை சவுதி அரசு குறைத்துக் கொண்டது. அதே நேரம் அந்த இடங்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பேரித்தம் தோட்டங்களை உண்டாக்கியது.

ஆனால் நாமோ அருமையான விளை நிலங்களை இன்று மனைகளாக மாற்றி வருகிறோம். வரும் காலங்களில் இந்தியாவும் பாலைவனமாக மாறி விடுமோ என்ற ஆதங்கத்தில் சமூக அக்கறையில் எழுத்ப்பட்ட பதிவு. இதில் இஸ்லாமிய கருத்துகளுக்கோ அல்லது எனக்கோ என்ன பின்னடைவு வந்து விட்டது? விளக்கினால நன்று.

அடுத்து ஆதாம் ஏவாள் கதையும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை. இன்றைய அறிவியல் உலகம் அனைதது மனிதர்களின் மூலமும் ஒரு ஜோடியிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற முடிவுக்கு வந்துள்ளது. இது பரிணாமக் கோட்பாட்டுக்கு சறுக்கலைத்தானே கொடுத்திருக்கிறது? :-)

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....
தமிழ் மொழியை பற்றி குஷ்பு..அதுவும் மொழி போர் தியாகிகள் மநாட்டில்....என்ன கொடுமை சார் இது..?

வவ்வால் said...

திரு.சுவனம்,

//பாலாறு தேனாறு பதிவில் நான் குறிப்பிட்ட அந்த ஆண்டுகளில் சவுதி எவ்வாறு பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது என்பது சுட்டிக் காட்டியிருந்தேன். குறிப்பிட்ட அந்த வருடத்துக்கு பிறகு தண்ணீர் பற்றாக் குறையினால் கோதுமை மகசூலை சவுதி அரசு குறைத்துக் கொண்டது. அதே நேரம் அந்த இடங்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பேரித்தம் தோட்டங்களை உண்டாக்கியது.//

ஏன் சார் 20 ஆண்டுக்கு முந்திய புள்ளிவிவரம் சொல்லி பெருமை பேசனும். அதுக்க்கு எதுவும் விளக்கம் இருக்கா?

அப்போ இந்தியாவிலும் கோதுமைக்கு பதில் பேரிச்சம் போடனுமா?

மேலும் அதிக மாநியம் தருவதால் தான் அந்த விவசாயம் கூட. இந்தியாவில் உரிய விலை கூட இல்லை ஆனால் விவசாயம் நல்லா இருக்கு. இப்போ வீட்டு மனை ஆக காரணம் விவசாயம் செய்தால் நட்டம் என நிலம் விற்கப்படுகிறது. சவுதி தருவது போல மாநியம் தரனும் இந்தியாவில்னு ஏன் நீங்க சொல்லவில்லை.

அப்படி மட்டும் அதிக மாநியம் கொடுத்தால் ஒரு சதுர அடி கூட விக்க மாட்டாங்க இங்கே.

//அடுத்து ஆதாம் ஏவாள் கதையும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை. இன்றைய அறிவியல் உலகம் அனைதது மனிதர்களின் மூலமும் ஒரு ஜோடியிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற முடிவுக்கு வந்துள்ளது. இது பரிணாமக் கோட்பாட்டுக்கு சறுக்கலைத்தானே கொடுத்திருக்கிறது? :-)//

அறிவியல் ஆதாரம் எங்கே இருக்கு?

மேலும் சகோதர , சகோதரிகள் இடையே கல்யாணம் செய்து தான் , வம்சம் உருவானதா?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

ஹா!ஹா!ஹா! சகோ சுவனப்பிரியன் உங்க பதிவ பார்த்துட்டு நீங்க கொடுத்த கோவி கண்ணன் பதிவுக்கான link click பண்ணி பார்த்தா உண்மையாகவே சகோ சிரிப்பை அடக்க முடியலங்க.என்ன இதுக்கெல்லாம் மனுஷன் கோச்சுக்கிராறு.(அதனால தான் அவர் பெயரை short formla கோவி என்று வைதிருக்காரோ)

ஒருவர் தான் எழுதிய பதிவு ஒரு திரட்டியில் முன் வரவேண்டுமே என்று எண்ணினால் அவரின் அறிவுப்பூர்வமான எழுத்தக்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.இது என்ன புது trend தன்னை விட அறிவிப்பூர்வமாகவும்,உண்மையாகவும் எழுதுறவங்க திரட்டிய விட்டு வெளியேறவேண்டும் இல்லையென்றால் நான் வெளியேறி விடுவேன் என்று காமெடி பண்றது.சகோ கோவி கண்ணன் ஒரு comedy பீஸ் என்று நினைக்கிறேன்.

உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ இக்பால்!

//ஹா!ஹா!ஹா! சகோ சுவனப்பிரியன் உங்க பதிவ பார்த்துட்டு நீங்க கொடுத்த கோவி கண்ணன் பதிவுக்கான link click பண்ணி பார்த்தா உண்மையாகவே சகோ சிரிப்பை அடக்க முடியலங்க.என்ன இதுக்கெல்லாம் மனுஷன் கோச்சுக்கிராறு.(அதனால தான் அவர் பெயரை short formla கோவி என்று வைதிருக்காரோ)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//தமிழ் மொழியை பற்றி குஷ்பு..அதுவும் மொழி போர் தியாகிகள் மநாட்டில்....என்ன கொடுமை சார் இது..?//

குஷ்புவக்கு கோவிலையே கட்டியவர்களிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//ஏன் சார் 20 ஆண்டுக்கு முந்திய புள்ளிவிவரம் சொல்லி பெருமை பேசனும். அதுக்க்கு எதுவும் விளக்கம் இருக்கா?//

எதுவம் விளையாத பாலைவனத்தை நம் நாட்டு மற்றும் பாகிஸ்தான் நாட்டு மண்ணைக் கொண்டு அந்த இடங்களை எல்லாம் சோலைவனமாக மாற்றியது சாதனை இல்லையா? நம் நாட்டு மண் வளமுள்ளது. இங்கு இது ஒரு சாதனை கிடையாது. பாலைவனத்தில் எத்தனை வருடங்களுக்கு முன்பேயாயினும் அது சாதனைதானே! அந்த நிலங்களெல்லாம் இன்றும் பயன்பாட்டில்தானே இருக்கிறது.

//அப்போ இந்தியாவிலும் கோதுமைக்கு பதில் பேரிச்சம் போடனுமா?//

அதை அரசும் விவசாயிகளும்தான் முடிவு செய்ய வேண்டும்.

//அப்படி மட்டும் அதிக மாநியம் கொடுத்தால் ஒரு சதுர அடி கூட விக்க மாட்டாங்க இங்கே.//

அப்போ மானியம் கொடுக்க சொல்லி பதிவில குறிப்பிடாததுதான் உங்கள் பிரதான குற்றசசாட்டா? சரி...'நமது அரசு விவசாயிகளுக்கு சவுதி அரேபியாவைப் போல் விவசாயிகளுக்கு மான்யம் கொடுக்க இந்த பதிவின் மூலம் கேட்டக் கொள்கிறேன்'.

இப்பொழுது திருப்தியா...

//மேலும் சகோதர , சகோதரிகள் இடையே கல்யாணம் செய்து தான் , வம்சம் உருவானதா?//

வேறு வழி?

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

மிஸ்டர் கோபியார் இதைதான் எதிர்பார்த்தர் அதான் அப்படி புலம்பியிருக்கர்

விடுங்க சகோ அதை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்வோம்

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஹைதர் அலி!

//மிஸ்டர் கோபியார் இதைதான் எதிர்பார்த்தர் அதான் அப்படி புலம்பியிருக்கர்

விடுங்க சகோ அதை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்வோம்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!