இந்து மதத்தில் பசு மிகவும் மேன்மையாகப் பாவிக்கப்படுகிறதென்றும், முக்கியமான தெய்வமென்றும், அதை வதை செய்வதால் இந்து மதத்திற்கு பெரும் பங்கமேற்படுகிற தென்றும், இந்துக்கள் பெரும் தடை செய்கின்றார்கள். பூர்வீக காலத்திலிருந்த இந்து மதத்திலேயே பசுவதை செய்வதை ஹலாலாக்கி வைத்திருந்தது மட்டுமல்லாமல் முஸ்லீம்கள் அவ்விறைச்சியை எவ்வாறு புசிப்பது அவர்கள் மார்க்கத்தில் கூடுமானதாயிருக்கின்றதோ அதே போல் இந்துக்களும் அம்மாமிசத்தை புசித்து வந்தனர் என்ற விஷயம் இந்து மத ஆராய்ச்சி நிபுணர்களின் ஆராய்ச்சியில் மறைந்திருப்பதன்று. இவ்வாறு இந்து மதத்தில் பசு வதை செய்வது சரியென்றும், பலி செய்யப் பட்ட பசுவின் மாமிசத்தை புசிக்கலாம் என்றும், இந்து வல்லாத மத ஆராய்ச்சி நிபுணர்கள் எத்தனையோ வியாசங்களைப் பிரசுரித்திருக்கின்றார்களே யாயினும் இன்றைக்கு வங்காள பிரபல பூர்வீக மத ஆராய்ச்சியில் இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகத்தில் "இந்து ஆரியன்" என்ற மகுடம் சூட்டப்பட்ட 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தை நாம் கீழே குறிப்பிடுகின்றோம்:
அப்புத்தகத்தில் இந்துமதக் கோட்பாடுகள் எவ்வாறு போதிக்கப் பட்டு வந்திருக்கிறதென்பதை இதைப் படிக்கும் நண்பர்களுக்கு நன்கு புலனாகிவிடும். ஆனால் அவர் புத்தமதத்தைச் சார்ந்தவரோவென நீங்கள் நினைக்கக்கூடும். ராஜாசாகிப் அவர்கள் வங்காள வைஷ்ணவர். அவர் தம்முடைய மேலே கூறப்பட்ட புத்தகத்தில் பூர்வீக இந்துக்களின் மதக் கோட்பாடுகளை மிகவும் ஆராய்ச்சியுடன் வரைந்துள்ளார்.
அவர் கூறுவதாவது:
"இப்பிரச்சினையின் மகுடமே என் தேச நண்பர்களில் பெரும் பான்மையோர்களின் மனதில் பெரும் வெறுப்பை யுண்டு பண்ணும். இமாலய பர்வதத்தைக் கடந்து வரும் ஆரியர்களின் மதக் கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்வதில் நமக்குக் கிடைக்கும் அத்தாட்சிகளே இவ்விஷயத்தில் விவாதிப்பதற்கு போதிய அத்தாட்சியாகும்.
பசு மாமிசத்தை உணவாக புசிக்கலாம் என்று நினைத்த வுடனேயே இந்துக்களின் மனம் புண்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் தானென்ன? லட்சக்கணக்கான இந்துமதப் பற்றுடைய இந்துமத நிபுணர்களும் கூட பசு மாமிசம் என்ற பெயரையுங் கூட வாயால் சொல்ல அருவறுக் கிறார்கள். நம் நாட்டில் பசு வதை செய்யும் விஷயத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உயிர்ப் பிராணிகளை அறுப்பதால் சில ஆத்மாக்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு அறுக்கப்படுவது விருந்தினர்களுக்கெனக் கருதப்பட்டும் வந்தது. மேலும், இறந்து போன இந்துவுடன் ஓர் பசுவையும் சேர்த்து மயானக் கரையில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. இவ்வந்தரங்கமான விஷயத்தை வெளியிடுவதன் நிமித்தம் இந்துக்களின் தற்போதைய கிளர்ச்சிகளை யுணர்ந்த இந்தியர்களுள் பெரும் ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணும். இவ்விஷயங்களை நான் எந்த கிதாப் (புத்தகம்) பிலிருந்து எடுத்திருக்கின்றேனோ அக்கிரந்தங்களில் எத்தகைய சந்தேகமும் அதிருப்தியும் கொள்ள முடியாது.
புரொபசர் வில்சனின் ஆராய்ச்சி
என் தேச நண்பர்களில் யார் தக்க கல்வி கற்றிருக்கிறார்களோ அவர்கள் வேதங்களில் "கோமேதம்" "அஸ்வமேதம்" என்று பசுவையும் குதிரையையும் பலி கொடுக்கும் யாகங்கள் இருப்பதை நன்கு அறிவார்கள். அவ்யாகத்தின் தாத்பரியம் கால்நடை மிருகங்களை பலி செய்வதே. அவ்வாறு தக்க கல்வி கற்றவர்கள், பலி செய்ய வேண்டுமென்றிருப்பதை உதாரணமாக வரையப் பட்டிருக்கிறதெனக் கருதுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு மேற்பார்வையாகப் பார்த்து உதாரணமாகக் கூறப்பட்டிருக் கிறதெனக் கருதி விடுவதால் அதன் அந்தரங்கங்கள் மறைவாக இருந்து விடுகிறது. ஆதலின் அத்தகைய பலி அமுலில் கொண்டுவரப்பட்டதன்று என ஜனங்கள் கருதிக்கொள்ளுகிறார்கள். அதே போல் புரொபசர் வில்சன் அவர்கள் இவ்விஷயங்களை ஆராய்ச்சி செய்வதற்காக நாடி முதன் முதலாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பஞ் செய்தபோது அவருக்கும் இதன் அந்தரங்கங்கள் சரிவர விளங்காமல் அவரின் யோசனைக்கும் எட்ட வில்லையாயினும் அத்தகைய கல்வி நிபுணர்கள் போன்றவர்களின் பார்வைக்கும் அந்தரங்கங்கள் மறைந்திருப்பது முடியாத காரியமாகையால் அவர் மேகாவத் மொழி பெயர்ப்பின் ஓரிடத்தில் குறிப்பிடுவதாவது:
கோமேதம், அஸ்வமேதம் எனப்படும் யாகங்களில் பசு குதிரை இவைகளை பூர்வீக காலத்தில் இந்துக்கள் பொதுவாக பலி செய்து வந்தனர். இந்தப் பலியானது உண்மையான பலியல்லவென்றும், பலியின் பாவனையாகச் செய்யப்பட்டதென்றும் கூறப்படுகிறது.
அதாவது:
பலியாக குறிப்பிடப்பட்ட ஒரு பசுவின் மீது ஏதாவது ஓர் அடையாளத்தைப் போட்டு அதை உயிரோடு விடப்பட்டு வந்தது. ஆனால் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாசகங்களும் இந்துக்கள் செய்யும் வேலைக்கு உதவியாகத் தெரியவில்லை. ஏனெனில், பசுவின் இரத்தம் கடலைப் போல ஆகவேண்டுமென்று கூறப்பட்டிருப்பதன் உண்மையான வியாக்கியானம் பசுவின் இரத்தத்தையே வெள்ளமாக ஓட்ட வேண்டு மென்பதேயன்றி பசு பலி யென்று வாயால் சொல்லி ஒரு குறியைப்போட்டு அப்பிராணிகளை வெளியில் ஓட்டி விடுவது பலியாகமாட்டாது. பசு பலி செய்ய வேண்டுமென எந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறதோ அப்புத்தகத்திலிருக்கும் வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு:
மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்
"பசு சந்ததிகளின் இரத்தம் ஆறாகக் கிளம்பி ஓடிற்று."
புரொபசர் அவர்கள் எவ்விஷயத்தில் அத்தாட்சிகள் காட்டுகின்றாரோ அவ்விஷயத்தில் ஜனங்கள் முன்னமே விவாதம் செய்திருக்கின்றார்களாயினும் பலி செய்ய வேண்டுமென வேதத்தில் கண்ட வாக்கியத்திற்கு இரத்தத்தை ஓட்டவேண்டுமென்றே பதில் கூறி இருக்கின்றார்கள். சிலர் அவ்வாக்கியத்திற்கு நேரான வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ரிஷிகள் விருந்தில் பசு மாமிசம்
வஸிஷ்ட ரிஷியானவர் விஸ்வாமித்திரர், ஜனகர், சத்தியானந்தர், ஜமதக்கினி முதலிய ரிஷிகள், சிநேகிதர் ஆகியவர்களுக்கு விருந்தளித்தார். அவ்விருந்திற்காக ஓர் கொழுத்த பெண் பசுக்கன்றை அறுத்தார். ஜமதக்கினிக்கு விருந்துக்குச் சொல்ல போயிருந்த வசிஷ்ட ரிஷி சாப்பாட்டின் இன்பத்தையும் அதன் திவ்ய வாசனைகளையும் கூறுகையில் அவர் கூறியதாவது:
பசுக்கன்று அறுப்பேன், நெய் சாதம் சமைக்கப்படுகிறது. நீங்கள் ஓர் படித்த கல்விமான்; நானும் ஓர் படித்தவன்; ஆதலின் நீங்கள் என் விருந்துக்கு வந்து நாங்கள் சமைத்து வைத்திருக்கும் பசு மாமிசம், நெய் சாதம் இவைகளைச் சாப்பிட்டு எங்களுக்கு ஆசி கூறும்படியாக வேண்டுகிறேன்.
இவ்விஷயங்கள் பூராவும் ஓர் சரிதையிலிருந்து எடுக்கப்பட்டதில் எத்தகைய சந்தேகமும் கிடையாதாயினும், இத்தகைய விஷயங்களை ஓர் நிமிஷத்திற்காவது இட்டுக்கட்ட முடியாது என்பதும் திண்ணம். ஏனெனில் இவ்விஷயத்தைக் குறிப்பிட்டுள்ள சரிதையின் ஆசிரியருக்கு இதை படிக்கும் பொது ஜனங்களின் மனம் கொதிப்படையு மென்பது தெரிந் திருப்பதுடன், இல்லாததை இட்டுக்கட்டி இத்தகைய விஷயங்களை எழுதத் துணிய மாட்டார்.
விருந்தாளிக்கு மரியாதை
கோல்புரூக் என்ற ஒருவர் ஹிந்து மதக் கோட்பாடுகளை மட்டும் ஓர் புத்தகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்புத்தகத்தில் கூறுவதாவது:
பூர்வீக காலத்திலிருந்த ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு யாராவதொரு விருந்தாளி வந்தால் அவருக்காக ஓர் பசுவை அறுப்பது பொதுவான வழக்கமாக இருந்தது. ஆதலின் அவருக்குப் பசுவை அறுப்பவர் என்று கூறப்படுகிறது.
இந்துக்களின் விவாக காலத்தில் பசுவை அறுப்பதற்காகச் சொல்லப் படும் மந்திர சம்பந்தமான விஷயங்களை கூறுகையில் அவர் கூறுவதாவது:
நான் இவ்விஷயங்களை எந்தப் புத்தகத்திலிருந்து ஆராய்ச்சி செய்தேனோ அப்புத்தகத்தில் கூறுவதாவது, வரவேற்கத்தக்க விருந்தினர்களான கூர்த், புரோஹ்க், சன்யாசி, ராஜா, மாப்பிள்ளை, சினேகிதர், மற்றும் கௌரவிக்கத் தக்க விருந்தினர்கள் இவர்களுக்காக வேண்டி ஒரு பசுவைக் குறிபார்க்கப்பட்டு அறுப்பதற்காக வேண்டி கட்டிவிடுகின்றார்கள். ஆதலின் இவர்களுக்கு பசுவைக் கொல்லுகிறவர்களென்று கூறுகின்றார்கள்.
மனுஸ்மிருதியில் பசு மாமிசம்
எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும். மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது: யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)
ஆனால் மனுஸ்மிருதி பசு மாமிசத்தை ஓர் உணவாகக் கூறவில்லை யாயினும், மனிதன் சாப்பிடக்கூடிய உயிர்ப் பிராணிகளின் நாமங்களைக் கூறப்பட்டிருக்கும் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)
மேலே கூறப்பட்ட நிபந்தனைப்படி பசுவும் அதில் சேர்ந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பசுவுக்கு ஒரே பக்கத்தில்தான் பற்களுண்டு என்பது மனு ஸ்மிருதியில் மறைவானதன்று, மனு பசுவைச் சாப்பிடக் கூடாதென்று விலக்கியிருந்தால் ஒட்டகத்தோடு சேர்த்துப் பசுவையும் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாதென விலக்கியிருப்பார்கள். ஆனால் முன்பின் வாசகங்களைக் கவனிப்பது கொண்டு பசுவைச் சாப்பிடக் கூடாதென விலக்கவில்லை யென்று நாம் அர்த்தம் செய்து கொள்வது சரியான அத்தாட்சியாகமாட்டாது. ஆதலின் பிரமச்சாரியானவர் தம் வீட்டிற்கு திரும்பி வருவதற்காக குருவுக்கு சில காணிக்கைகள் கொடுக்கின்றார்கள். இவ் விஷயம் மனு ஸமிருதியில் தக்க ஆதாரமாக இருக்கிறது. அதில் எழுதியிருப்பதாவது:
பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6 3) அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது: இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது.
அஸ்வ மஹாபாரதம், ராமாயணம்
அஸ்வத் தமது அரச கட்டளையில் துவர்க்கமாகக் கூறுவதாவது:
ஆதி காலத்தில் அவனுடைய பொங்குமடத்தில் லக்ஷக்கணக்கான உயிர்ப் பிராணிகள் உணவுக்காக அறுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவைகள் இன்னின்ன பிராணிகளென விவரமாகக் கூறப்படவில்லை. அவைகளின் விவரங்கள் தெரியாவிடினும் அவ்வாறு மாமிசம் சாப்பிடும் காலத்தில் அவர் ஆடுகளை மட்டும் போதுமென வைத்திருக்க மாட்டாரென நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.
மஹாபாரதம், ராமாயணம் இவைகளிலும் கோமேத யாகத்தைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது. கோமேத யாகமென்பது உயிர்ப் பிராணிகளை (குர்பானி) கொலை செய்வது. ஆனால் அதில் விஷயங்கள் விரிவாகக் கூறப்படவில்லை. பசுவின் மாமிசத்தை உணவைப் போல் சாப்பிட்டு வந்ததா இல்லையாவென்ற விவரமும் கூறப்படவில்லை.
வைதீகத்தில் பசு மாமிசம்
ஈஸவி 500, 600 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சர்க் சந்தவென்ற வைதீகப் புத்தகத்தின் ஒர் அத்தியாயத்தில் இவ்விஷயத்தை விரிவுரையாக கூறப்பட்டிருக்கிறது. அதில் ஓர் அத்தியாயத்தில் உணவு விஷயமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஓர் இடத்தில் காணப்படுவதாவது: பசு, எருமை, பன்றி இவைகளின் மாமிசங்களை பிரதி தினந்தோறும் புசிக்கக் கூடாதென வரையப் பட்டிருக்கிறது.
மேலே கூறப்பட்ட விஷயங்களை நன்கு கவனிப்பது கொண்டு தெரிய வருவதாவது:
அக்காலத்தில் ஹிந்துக்கள் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தார்களென்பதில் சந்தேகமில்லை. ஆனால் பசு மாமிசம் தக்க பலமுடைய வஸ்துவானதால் பிரதி நாட்கள் தோறும் சாப்பிடலாமென அனுமதிக்கப்படவில்லை. மற்றுமோர் இடத்தில் அக்கிரந்த கர்த்தாவானவர் கூறுவதாவது: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குப் பசு மாமிசம் கொடுக்கவேண்டுமென்றும், அது பிரசவ காலத்திற்கு வேண்டிய பலத்தைக் கொடுக்கிறதென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றும் சில வைதீகப் புத்தகங்களில் பல முறைகள் கூறப்பட்டிருக் கிறதாயினும் பசு மாமிசம் அறவே சாப்பிடக் கூடாதென எந்த வைதீகப் புத்தகத்திலும் காணப்படவில்லை. அஸ்மனா விஷபாவுடைய சில வைதீகப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஒர் மனிதன் போதையாக இருந்து தெளிவு பெற்றபின் அவன் பசு இறைச்சி சாப்பிடுவதால் பெரும் அனுகூலங் களிருப்பதாக வரையப்பட்டிருக்கிறது.
பசு மாமிச உப்புக்கண்டம்
குர்ஹீயா சூத்திரத்தில் பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள். அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்! அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வந்த சம்பீதா ரிஷியானவர் அவ்வாறு நெருப்பில் போடப்படும் வஸ்துக்களில் பொது ஜனங்களுக்குப் பிரயோஜனம் தரக்கூடியதான தோலை நெருப்பில் போடுவதற்கு பதிலாக செருப்பாக தைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாமென பொதுவாக உத்தரவு செய்து விட்டார். அவ்வாறு ரூராவுக்கு பூஜை செய்ததன் பிறகு பிராமண பூசாரியானவர் இடது பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நேராக எழுந்து நின்று ஏதோ சில மந்திரங்களைப் படித்துக்கொண்டே அறுக்கப்பட்ட பசுவின் இரத்தத்தை அவ்விடங்களிலிருக்கும் சாப்பங்களுக்கு சேர்க்கை செய்து விடுகிறார். இவ்வெல்லாக் கிரியைகளும் செய்து முடித்த பிறகு கடைசியாக (சுவிஸ்த்தாக்கிர்த்) என்ற ஒரு பூஜையும் செய்யப்படுகிறது. பிறகு அப்பசுவுடைய நெஞ்சு மாமிசத்தினின்றும் சுடுவதற்காகக் கொஞ்சம் மாமிசத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதன் பிறகு மீதியாயிருக்கும் அப்பசுவின் மாமிசத்தைப் பொதுவாக எல்லோரும் சாப்பிடலாமென்று சில சூத்திரங்கள் கூறுகின்றன. சில சூத்திரங்கள் அப்பசுவை குர்பானி செய்தவர்கள் மட்டும் சாப்பிடலாமெனக் கூறுகின்றன.
இவ்வாறு ஒரு மனிதன் குர்பானி செய்து விட்டால் அவனுக்கு வயது அதிகமாகிறதென்றும், செல்வந்தனாவானென்றும், நல்ல நிலைமையிலே இருப்பானென்றும், தன் மதத்தில் கௌரவமுடையவனாக இருப்பானென்றும், சந்ததிகள் அதிகமாகுமென்றும், கால் நடை மிருகங்கள் அவனுக்கு அதிகமாகு மென்றும், அவ் வேதத்தில் ஆசை காண்பிக்கப்பட்டிருக்கிறது. சகல தனவந்தர் களும் அவர்கள் வயதில் ஓர் விடுத்தமாவது இவ்வாறு குர்பானி செய்ய வேண்டியது முக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசு மாமிசம் எவ்வாறு சமைக்கப்பட்டதென்ற விஷயம் விரிவாகக் கூறப்படாதது மிகவும் வருந்தத்தக்கதே. சமைக்கப்படும் முறை விவரமாக கூறப்படாவிடினும் அறுக்கப்பட்ட பசுவின் நெஞ்சு மாமிசத்திலிருந்து சுடுவதற்காக மாமிசம் எடுப்பதே அவர்கள் சமைக்கும் முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மார்ச்சு 1936
-குடியரசு
இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தியால் பல குழப்பங்கள். இந்து மதத்தில் ஆரம்பம் முதலே பசுவின் மாமிசம் உணவாக உட்கொள்ளப்பட்டுள்ளது. இதை சாப்பிடுவது ஏதோ பாவமான காரியம் போல் மீடியாக்களால் சித்தரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்தையும் தடுக்கும் வேலையே இது போன்ற ஆர்ப்பாட்டங்கள்.
நமது சுப்ரமணியம் சுவாமி சில நாட்களுக்கு முன்பு பிபிசிக்கு அளித்த பேட்டியைப் பார்ப்போம்.
நாட்டில் எவ்வளவோ தீர்க்க வேண்டிய பிரச்னைகள் மலைபோல் குவிந்து கிடக்க எவருக்கும் பிரயோசனம் இல்லாத மாட்டுக் கறி சாப்பிடும் விஷயத்தை இவ்வளவு தூரம் பிரபலப் படுத்துவதும. அதை எதிர்த்து ஒரு மாநில முதல்வரின் ஆசியோடு பத்திரிக்கை அலுவலகம் நொறுக்கப்படுவதும் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்குகிறது.
இது சம்பந்தமாக நக்கீரன் கோபால் பிபிசிக்கு அளிதத பேட்டி
24 comments:
இதுவே ஒரு முஸ்லிம் பன்னிக் கறி சாப்பிட்டான் என்றால் சும்மா இருபபீர்களோ?
அனானி!
//இதுவே ஒரு முஸ்லிம் பன்னிக் கறி சாப்பிட்டான் என்றால் சும்மா இருபபீர்களோ?//
'தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, இறைவன் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும் வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குறறமும் இல்லை. இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்'
-குர்ஆன் 2:173
பன்றிக கறி சாப்பிடும் ஒரு முஸ்லிமை பார்த்தால் குர்ஆனின் வசனங்களை அவனுக்கு சொல்லி திருத்தப் பார்ப்பேன். திருந்தவில்லை என்றால் அவனுக்காக பிரார்த்தித்து விட்டு சென்று விடுவேன்.
ஆனால் இங்கு ஒரு மதத்தின் சட்ட நூல் பசு மாட்டை அறுத்துப் பலியிட்டதாக ஆதாரத்தோடு விளக்குகிறது. தற்காலத்தில் வாழ்வோர் அது புனிதம் என்றும் மற்றவர்கள் யாரும் பசுவை அறுக்கக் கூடாது என்றும் பிரச்னை பண்ணுவது நியாயமா? நக்கீரனே தவறு செய்திருந்தாலும் அதை கோர்ட்டுக்கு அல்லவா கொண்டு சென்றிருக்க வேண்டும். ஒரு எம்எல்ஏ தலைமையில் நக்கீரன் அலுவலகத்தை உடைப்பது முறையா? 'நான் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை. இது தவறான தகவல்' என்று ஒரு அறிக்கை விட்டிருந்தால் இவ்வளவு பிரச்னைக்கே வேலையில்லையே!
Super post
Keep it up bro
//நக்கீரனே தவறு செய்திருந்தாலும் அதை கோர்ட்டுக்கு அல்லவா கொண்டு சென்றிருக்க வேண்டும்.//
மிக சரி. உணர்ச்சி வசப்பட்டு கோவாலை நொங்கு எடுத்ததற்காக பதிவு போட கூடாது. வேண்டுமானால் கோர்டுக்கு போக வேண்டும். மீண்டும் நொங்கு எடுப்பார்கள், மீண்டும் கோவாலு கோர்டுக்கு தான் போகவேண்டும், பத்திரிகை தர்மம் , அடியில் தொங்கும் குண்டு என்றெல்லாம் பேச கூடாது. இஷ்டத்துக்கு எழுதினால் , இப்படிதான் நொங்கு எடுப்பார்கள். பதிவெல்லாம் போட படாது ... போ பொய் கோர்ட்டுல கேஸ் போடு.
click and read
தெரியுமா? .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு...
மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்துக்கு முதல் நாள் நிகழ்ச்சியில் மது வர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும் மறுநாள் திருமணச் சடங்குகளிலும் ரிஷிகளும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.
கல்யாண காரியங்களிலே கன்றுக்குட்டிகளையும் கறி சமைத்திருக்கிறார்கள்.
ஆனால்.. இன்று நடக்கும் திருமணங்களிலும் அறிந்தோ அறியாமலோ(?) வாத்யார்கள் (கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்) மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரங்களை ஓதுகிறார்கள். ஆனால்... ‘மது வர்க்க’த்தில் கோமாமிசத்துக்குப் பதில் வாழைப்பழத்தைக் கொடுக்கிறார்கள்.
அப்படியானால் அந்த மந்த்ரம் எதற்கு? மாட்டை வெட்டச் சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி செய்யாத பட்சத்தில் அந்த மந்த்ரத்தை கல்யாணச் சடங்கிலிருந்து வெட்டிவிடலாமே?
.
super thala
அனானி!
unakku enna problem veedula saapadu podurathu illaiya. muslim panRi kari sapidda avan muslime illai . avan muslima iruntha panri kaari sapida maddan athu enakku nalla anupavam iruku …..
-எழிலி!
இதெல்லாம் தேவையில்லாத பதிவு !
திரு கபிலன்!
//இதெல்லாம் தேவையில்லாத பதிவு !//
மாட்டுக் கறி சாப்பிடுபவர்களை இழிவாக பேசுவதும மதத்தின் பெயரால் மாட்டுக்கறி விற்பனையை தடை செய்ய முயல்வதும் தேவையில்லாததுதானே!
இது பெரும்பான்மை சமூகமும் அவர்களின் உணவு சார்ந்த பிரச்னையுமாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலோர் மாட்டுக்கறியை தங்களின் முக்கிய உணவாக உட்கொள்கிறார்கள். கேரளாவில் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் இந்துக்களில் ஒரு பிரிவினரும் விரும்பி சாப்பிடுகின்றனர். மிகக் கறைந்த செலவில் உடலுக்கு புரதச் சத்து மாட்டுக் கறியின் மூலம் கிடைக்கிறது. இதைத்தின்பது ஏதோ இழிவு போலவும் இந்து மதத்துக்கு ஆகாத ஒன்று போலவும் பொங்கியெழுவதை தோலுரித்துக் காட்டவே இந்த பதிவு. ஒன்று இந்து மத வேதங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும். அல்லது சுப்ரமணியம் சுவாமி சொல்வது உண்மையாக இருக்க வேண்டும். இதை விளங்கிக் கொள்வதற்காகவே இந்த பதிவு.
இதில் நக்கீரனையும் நான் ஆதரிக்கவில்லை.. அதற்காக பொங்கியெழுந்த உடன்பிறப்புக்களையும் ஆதரிக்கவில்லை.
பிரிவோம்.. சந்திப்போம் - சிறுகதை http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_08.html
good post
Muslims don't eat pork because quran forbids it.
But the problem is though the hindu scriptures(vedas) allow them to eat beef,they are making it as an issue.
So all indians dont be shy about eating beef it is good for health
அனானி!
//But the problem is though the hindu scriptures(vedas) allow them to eat beef,they are making it as an issue.
So all indians dont be shy about eating beef it is good for health//
இந்த எண்ணத்துக்கு இந்தியர்கள் அனைவரும் வந்து விட்டால தேவையற்ற பிரச்னைகள் குறையுமல்லவா?
எங்கள் வீட்டில் பெண்கள் சமைப்பது ஆட்டுக கறி மட்டுமே. என்னவோ தெரியவில்லை. மாட்டுக் கறியை அவர்கள் விரும்புவதில்லை. இனி அவர்களை சமைக்க சொல்லி பீஃப் ஃபிரையின் டேஸ்டையும் பார்த்து விட வேண்டியதுதான். :-)
சகோ சுவனப்பிரியன்,
RSS உள்ளிட்ட சில குழுக்கள், ஹிந்துக்கள் பசுவை புனிதமாக கருதுவதால் முஸ்லிம்கள் வேண்டுமென்றே மாட்டிறைச்சியை உண்கிறார்கள் என்ற விஷமக் கருத்தை காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். ஆனால், எங்கள் ஊர் 99 % முஸ்லிம்கள் வாழும் கிராமம். ஆனால் அங்கு ஒரு மாட்டு இறைச்சி கடை கூட கிடையாது. அதே போல் எனது தாய் தந்தை இருவரும் மாட்டிறைச்சி சாப்பிடவே மாட்டார்கள். கடந்த 35 வருடங்களில், நான் அறிந்து 5 வருடங்களுக்கு முன் ஒருவர் மாட்டிறைச்சி கடை போட்டார். வியாபாரம் சரி இல்லாததால் 2 மாதங்களில் கடையை மூடி விட்டார்.
மேலதிக தகவல்களுக்காக இவற்றை கூறுகிறேன். இங்கே இந்த சம்பவத்தை கூறுவது பொருத்தமாக இருக்கும் என்பதால்.
சகோ சிராஜ்!
//ஆனால், எங்கள் ஊர் 99 % முஸ்லிம்கள் வாழும் கிராமம். ஆனால் அங்கு ஒரு மாட்டு இறைச்சி கடை கூட கிடையாது. அதே போல் எனது தாய் தந்தை இருவரும் மாட்டிறைச்சி சாப்பிடவே மாட்டார்கள். கடந்த 35 வருடங்களில், நான் அறிந்து 5 வருடங்களுக்கு முன் ஒருவர் மாட்டிறைச்சி கடை போட்டார். வியாபாரம் சரி இல்லாததால் 2 மாதங்களில் கடையை மூடி விட்டார்.//
ஒட்டு மொத்த முஸ்லிம் கிராமங்களிலும் இதுதான் நிலைமை! மாட்டுக் கறியை தற்காலங்களில் விரும்பி அதிகம் சாப்பிடுவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான். முஸ்லிம்களை எதிர்க்க அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். அவ்வளவே!
//RSS உள்ளிட்ட சில குழுக்கள், ஹிந்துக்கள் பசுவை புனிதமாக கருதுவதால்…//
ஆர்யத்தை விட்டு அதிக மக்கள் பவுதத மதத்திலும் சமண மதத்திலும் 1000 வருடங்களுக்கு முன்பு அதிகம் மாற தலைப்பட்டனர். அதற்கு காரணம் கொல்லாமை அந்த மதங்களில் அதிகம் வலியுறுத்தப்பட்டதால். இதைப் பார்த்த ஆர்யம் இப்படியே விட்டால் பிற சாதியினர் மற்ற மதங்களில் ஐக்கியமாகி விடுவார்கள் என்று பயந்தே பசுவை புனிதமாக கருத ஆரம்பித்தனர். எனவெ இது பிறகாலத்தில் இந்து மதத்தில் புகுத்தப்பட்ட பழக்கம். ஆட்சியும் அதிகாரமும் ஆர்யர்கள் கையில் அதிகம் இருந்ததால் 'பசு புனிதம்' என்ற வாசகம் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டது. அது இன்று வரை நிலைத்து நின்று விட்டது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திரு மோகன் திவ்யா!
//super thala//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அசைவம் சம்பந்தமாக மேலும் சில தகவல்கள்.
ஓர் உயிரை கொல்லாமல் மற்றொரு உயிர் உயிர் வாழவே முடியாது, இது நியதி.
தாவரங்களை கொன்று திண்பவர்கள் அது உயிர் வதையில் சேராது என்று வாதிப்பார்கலானால் அது முற்றிலும் தவறு. தாவரங்களும் உணர்கின்றன, வலியையும் உணர்கின்றன, தாவரங்களுக்கு rudimentary nerve structure என்று உள்ளது, அது தான் வலியை உணரக்கூடியதாக உள்ளது. ஒரு இலையை அதிலிருந்து எடுத்தாலோ அல்லது அதை தொட்டால் கூட அது உணரக்கூடியதாக உள்ளது. மேலும் மற்ற தாவரங்களோடு பேசுவதாக உள்ளது என்பது மேலும் ஆச்சர்யமான விஷயம்.
அது பற்றி மேலும் அறிய கீழ உள்ள சுட்டியை பார்க்கலாம்:
http://www.viewzone.com/plants.html
ஆக உயிரை துடி துடிக்க கொன்று திண்ண கூடாது என்று நினைப்பவர்கள் தாவரங்களையும் திண்ணாமல் இருப்பார்களானால் அவர்களின் வாதத்தில் மாறாமல் இருப்பவர்கள் என்று நம்பலாம்.
அப்படி சைவத்தை மட்டும் சாப்பிட்டு சில அத்தியாவசிய புரோதங்களை விடுபவர்கள் உட்பட மனிதன் தன்னை அறியாமலேயே வருடத்திற்கு சராசரியாக 570 சிறு பூச்சிகளை தின்கிறான் என்பது கூடுதல் செய்தி.
-நன்றி கார்பன் கூட்டாளி
நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்...
தாவரங்களும் உயிருள்ள ஜீவன்கள்தான் என்று...!
அவை... கருவறை-மண்ணுக்குள் நீர் 'அருந்து'கின்றன...
பூமிக்கு வெளியே முளைவிட்டு பிறக்கின்றன... காற்றை சுவாசிக்கின்றன...
உணவு தயாரிக்கினறன...
அதனை உட்கொண்டு அதன் மூலம் வளர்கின்றன...
பின்னர் பூத்து பூப்படைந்து-பருவம் அடைகின்றன...
இனப்பெருக்கம் செய்கின்றன... கடைசியில் ஒருநாள் இறக்கின்றன...
சில தாவரங்கள் "தொட்டாலே சினுங்குமே"? தொடு உணர்ச்சி உண்டே? எனில், உலகில் வாழும் உயிருள்ள இவற்றின் கனிகளை, காய்களை, பூக்களை, இலைகளை, தண்டுகளை, வேர்களை ஒடித்து பறித்து பிய்த்து சாப்பிடுவதும் அசைவம்தானே..? அதற்கு கத்த வாய் இருந்தால் நிச்சயம் "வலிக்கிறது" என்று கத்தும்தானே..?
ஆக... மனிதன் சாப்பிடக்கூடிய உண்மையான 'சைவம்' என்றால் எது?
-முஹம்மது ஆஷிக்!
…………….நம்மை நாம் திராவிடர்கள் என்றுணர்ந்தால் இவ்விழிவுகள் நம்மை விட்டு ஓடிவிடுகின்றன. விட்டுக்கொடுக்கும் தன்மை முஸ்லீமிடம் கிடையாது. இந்துவைப் போல, கிருஸ்தவப் பாதிரியார் கூட, கிருஸ்தவப் பறையன், கிருஸ்தவப் பார்ப்பனன், கிருஸ்தவ முதலியார் என்பதில் கவலையற்றிருப்பார். ஆனால் முஸ்லீமில் முஸ்ஸிம் பார்ப்பான், முஸ்லிம் பறையன் என்றிருக்க மாட்டான். அதுபோல நாமும் ஒரே திராவிடராக மட்டும் இருக்க வேண்டும்.
…………பெரியார் வாழ்க என்ற கித்தாப் எனக்கு வழங்கினால் நான் நிம்மதியடைய முடியாது. நமது இழிவு பூர்ணமாக நீங்க வேண்டும். அன்றுதான் நான் நிம்மதி அடைவேன். நமது ஈனம் ஒழிய உயிர் கொடுத்தேனும் புரட்சி செய்ய வேண்டும். ஆகவே, தோழர்களே நீங்கள் கீழான நிலையில் இருப்பதற்கு எது காரணம் என்பதைத் தெரிந்து அதற்குப் பரிகாரம் தேடுங்கள். இம்மக்களைப் பின்பற்றி மணமாகாதவர்கள் நடந்து கொள்ளுங்கள். நான் கூறியவைகளைப் பகுத்திறவைக் கொண்டு ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வாருங்கள்," என்று கூறி, மணமக்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் சுமார் 2 மணிநேரம் பேசினார்.
---------------- 21.07.1947 மாதவரம் திருமணத்தில் பெரியார் சொற்பொழிவு -"விடுதலை" 23.07.1947
"ஆர்யத்தை விட்டு அதிக மக்கள் பவுதத மதத்திலும் சமண மதத்திலும் 1000 வருடங்களுக்கு முன்பு அதிகம் மாற தலைப்பட்டனர். அதற்கு காரணம் கொல்லாமை அந்த மதங்களில் அதிகம் வலியுறுத்தப்பட்டதால். இதைப் பார்த்த ஆர்யம் இப்படியே விட்டால் பிற சாதியினர் மற்ற மதங்களில் ஐக்கியமாகி விடுவார்கள் என்று பயந்தே பசுவை புனிதமாக கருத ஆரம்பித்தனர்."
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தகவலை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று மேற்கோள் காட்டுங்களேன் ! எந்த வரலாற்று நூலிலாவது இது சொல்லப் பட்டிருக்குதாங்க..?
அப்படி மேற்கோள் காட்ட் முடியலைன்னா தயவு செய்து நீக்கிவிடுங்களேன் !
திரு கபிலன்!
2000 அல்லது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தில் பசுவை பலி கொடுத்திருக்கிறார்கள்: விருந்தில் வருவோருக்கும் படைத்திருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் கடந்த 1500 வருடங்களாகத்தான் இந்து மதத்தில் பசு புனிதமாக பாவிக்கப்படுகிறது. இதன் காரணம் என்ன? இதை மாற்றியது யார்? என்ற விபரத்தை தாருங்கள். நான் சொல்லாத வேறு முக்கிய காரணங்கள் இருந்தால் நான் நீக்கி விடுகிறேன்.
சிறந்த இடுகை. முஸ்லிம்களில் 70 சதவீதமான பேர் ஆட்டுக் கறியைத்தான் விரும்பி சாப்பிடுகின்றனர். உழைப்பாளி வர்க்கமான தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான் இங்கு பிரச்னையே!பசு வதையை நடைமுறையிலும் கொண்டு வர முடியாது. சில ஓட்டுக்களை வேண்டுமானால் இந்துத்வவாதிகள் அள்ளலாம.
ஸ்ரீ லங்காவில் பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் மாட்டிறைச்சியை விரும்பிப் புசிக்கின்றனர். விலையும் குறைவு. ஆட்டிறைச்சி வாங்கிக் கட்டுபடியாகாது. நான் பிறந்ததில் இருந்து மாட்டிறைச்சி, கோழியிறைச்சி, மீன் போன்றவற்றையே சாப்பிட்டு வருகிறேன். தனியே வெஜிடேரியன் சாப்பிட்டதே கிடையாது. ஏன்தான் இந்த இந்தியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருக்கிறார்களோ?
வேதஙகளில் ஏதோ ஒரு இடத்தில் சொல்லப்பட்டதை வைத்து இது தான் அதன் மொத்த கருத்தே என முடிவு செய்வது முட்டாள்தனமானது.
மேலும் மனு -5-51 'பிராணிகளைக் கொல்பவன்,கொல்ல சொல்பவன், வெடடுபவன் வாங்குபவன்,விற்பவன்,பரிமாறுபவன்,சாப்பிடுபவன இவர்கள் அனைவரும் கொடியவர்கள் மற்றும் பாவத்தை சேர்ப்பவர்கள்' என்கிறது.
மேலும் மனு -5-55 'இவ்வுலகில் எதனுடைய மாமிசத்தை ஒருவன் உண்கிறானே, அது வேறு பிறவியில் அவனுடைய மாமிசத்தை உண்ணும் என்பதே மாமிசம் என்பதன் பொருள்.'
மேலும் மனு 49 ல் 'மாமிச ஆசையின் காரணமாக ஒருவன் பிராணிகளை பிடிக்கவும் கொல்லவும் தூண்டுகின்றன. இதை எண்ணிப் பார்த்து ஒருவன் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்' எனகிறார்.
இப்படி மனு கூறியுள்ளார். மேலும் இது ஒருவனுடைய குணமாகிய தமோ குணம், ரஜே, சத்வ குணங்களை உடையவனின் உணவைப் பற்றியும் கூறுகிறார்.
தமோ குணத்திலுள்ளவனுக்கு மாமிசம் சாப்பிட ஆசை உண்டானல் அவன் அதை தேவர்களுக்கு பலியிட்டு பின்பு சாப்பிட சொல்கிறார். இது ஏனெனில் அப்போது தான் அவனது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான் இப்படி மனு சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன் இதை விலக்கி இருப்பதையும் கூறுகிறார்.
முடிவு நமது கைகளில் தான்.
வேதங்களில் விலங்குகளை கொல்ல அனுமதிக்கவில்லை. இதோ வேத ஆதாரம்...
ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம் ச
அதர்வ வேதம் – 6.140.2
“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”
யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி
அதர்வ வேதம் – 8.6.23
“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”
அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:
அதர்வ வேதம் – 10.1.29
“வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!
.'அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:'...யஜுர் வேதம் – 1.1
“ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா – அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக”
'பஷுன்ஸ்த்ராயேதாம்' ....யஜுர் வேதம் – 6.11
“மிருகங்களைக் காப்பீர்”
'த்விபாதவா சதுஷ்பாத்பாஹி' ....யஜுர் வேதம் – 14.8
“இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்”
இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு
யஜுர் வேதம் – 13.48
“மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”
க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி: - யஜுர் வேதம் – 13.49
“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்
ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து - ரிக் வேதம் – 7.56.17
“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது
சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாமஅத்தி
த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ
- ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20
“அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது – அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்”
யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா
ரிக் வேதம் – 10.87.16
“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா - ரிக் வேதம் 8.101.15
“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”
அந்தகாய கோஹாதம் - யஜுர் வேதம் – 30.18
“பசுவதை செய்பவர்களை அழி!”
யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ - அதர்வ வேதம் – 1.16.4
“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”
வத்ஸம் ஜாதமிவாக்ன்யா - அதர்வ வேதம் – 3.30.1
பிறரைக் – கொல்லப் படக்கூடாத – ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்
இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?
Post a Comment