இறைவன் நாடினால் வரும் ஜனவரி மாதம் 21 , 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் கிறித்தவர்களுடனான விவாதம் www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கும் விவாதமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
• இந்த விவாதம் உடனுக்குடன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடத்தப்படுவதால் மற்ற மொழி பேசும் மக்களையும் பார்க்கச் செய்யுங்கள்
• 21, 22 தேதிகளில் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்
• 28, 29 தேதிகளில் குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்
கிறித்தவர்களோடு முன்பு போட்ட ஒப்பந்தத்தின் காணொளி இது. முதலில் விவாதத்துக்கு வர மாட்டேன் என்று பின் வாங்கியவர்கள் தற்போது விவாதத்துக்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
கிறித்தவர்கள் சகோதரர் இம்ரானோடு ஹைதராபாத்தில் நடத்திய கலந்துரையாடலை இந்த காணொளியில் பாருங்கள்.
இது போன்ற விவாதங்களினால் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது என்று நினைக்கலாம். நம்முடைய சந்தேகங்களை நிவர்த்திக் கொள்ளவாவது இது போன்ற விவாத அரங்குகள் நமக்கு உதவும்.
இணையத்தில் இஸ்லாத்தின் மேல் பல கேள்விகளை வைத்துக் கொண்டிருக்கும் செங்கொடி, தருமி, சார்வாகன், கோவிகண்ணன்,அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, தங்கமணி போன்ற பதிவர்கள் தங்களின் சந்தேகங்களை விவாதத்தில் கலந்து கொள்ளும் கிறித்தவர்களுக்கு அனுப்பி விவாதத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது சென்னை சென்று நேரிடையாக அரங்கத்திலும் கேட்கலாம்.
விவாதம் சிறந்த முறையில் நடக்க வாழ்த்துக்கள்.
14 comments:
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
2 உண்மையானது குர்ஆனா? பைபிளா? சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த 18 விடியோக்களையும் பாருங்கள். இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும்.
சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.
Quran or bible debate between dr. zakir naik and dr. william cambell christian and Muslims all should watch this debate.
கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
இது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.
முதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம். சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.
விவாதத்திற்காக பிஜே குழுவினர் எதற்காக இப்படி பயப்படுறாங்கன்னு தெரியல. அதை சொல்லக் கூடாது...இதை சொல்லக் கூடாது.....நாங்க சொல்ற விளக்கம் தான் கரெக்ட்...அதனால மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் சொன்னதை விவாதத்தில் சொல்லக் கூடாது.....விளக்க உரையிலிருக்கும் விஷயங்களை விவாதிக்கக் கூடாது...இப்படி...
எனக்கு சவுகரியமான விஷயத்தை மட்டும் நான் விவாதிக்கத் தயார் என்பது விவாதமான்னு தெரியல...
ஹா ஹா ஹா
கவுண்டமனி செந்தில் நகைச்சுவை இப்போது இல்லை என்பதை நிவர்த்தி செய்வது இஸ்லாமிய விவாதங்களே. நன்றாக பட்டையை கிளப்புங்கள்.
தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டும்.
சுவாமி அக்னிவீர் அழைத்தும் ஜாகிர் நாயக் வரவில்லை.ஏன் பி.ஜே முயற்சிக்க கூடாது?.குரான் சரியாக புரிய வேண்டும் எனில் அரபி தெரிய வேண்டும்.அதனால் ஏன் பி.ஜே அல்லது ஜாகிர் நாயக் ஒரு ஷியா அறிஞருடன் விவாதித்து அவர்களிடம் நடைமுறையில் உள்ள தற்காலிகத் திருமணம் முட்டா என்பது விபச்சாரம் அதனை குரான் அனுமதிக்கவில்லை என நிரூபிக்க கூடாது?.
எல்லா விவாதமும் அரபி தெரியாதவர்களிடமா?அனைவரும் இரசித்த காமெடியான ஜமாலி vs பி.ஜே தான்.ஏன் ஜமாலி கூட இன்னொரு முறை விவாதித்து தர்கா வழி பாடு தவறென்று நிரூபிக்கலாமே.
1.Muhammad had temporal Lobe epilepsy or not?.Prove from hadiths (10 marks question)
http://en.wikipedia.org/wiki/Temporal_lobe_epilepsy
கபிலன்!
//விவாதத்திற்காக பிஜே குழுவினர் எதற்காக இப்படி பயப்படுறாங்கன்னு தெரியல. அதை சொல்லக் கூடாது...இதை சொல்லக் கூடாது.....நாங்க சொல்ற விளக்கம் தான் கரெக்ட்...அதனால மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் சொன்னதை விவாதத்தில் சொல்லக் கூடாது.....விளக்க உரையிலிருக்கும் விஷயங்களை விவாதிக்கக் கூடாது...இப்படி...
எனக்கு சவுகரியமான விஷயத்தை மட்டும் நான் விவாதிக்கத் தயார் என்பது விவாதமான்னு தெரியல...//
விவாதத்தில் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டால்தான் ஒரு தீர்வை காண முடியும். இல்லை என்றால் இரு தரப்புமே வழ வழ என்று இழுத்தடித்து விவாதத்தை திசை திருப்பி விடுவர். மேலும் குர்ஆனிலிருந்து எந்த கேள்வியையும் கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விவாதத்தைப் பாருங்கள் உங்களுக்கும் பல விளக்கங்கள் கிடைக்கும்.
//சுவாமி அக்னிவீர் அழைத்தும் ஜாகிர் நாயக் வரவில்லை.ஏன் பி.ஜே முயற்சிக்க கூடாது?.//
கண்டிப்பாக விவாதத்துக்கு பிஜே தயார். அக்னிவீரை அழைத்து வர நீங்கள் தயாரா?
//குரான் சரியாக புரிய வேண்டும் எனில் அரபி தெரிய வேண்டும்.அதனால் ஏன் பி.ஜே அல்லது ஜாகிர் நாயக் ஒரு ஷியா அறிஞருடன் விவாதித்து அவர்களிடம் நடைமுறையில் உள்ள தற்காலிகத் திருமணம் முட்டா என்பது விபச்சாரம் அதனை குரான் அனுமதிக்கவில்லை என நிரூபிக்க கூடாது?.//
ஷியாக்களோடு விவாதிக்க என்றுமே பிஜே தரப்பு தயார். அவர்களிடம் தேதியை வாங்கி கொடுங்கள். இந்த விவாதத்தையும் வைத்து விடலாம்.
//ஏன் ஜமாலி கூட இன்னொரு முறை விவாதித்து தர்கா வழி பாடு தவறென்று நிரூபிக்கலாமே.//
தாராளமாக! ஜமாலி தயாரா என்று கேட்டுச் சொல்லுங்கள்.
//1.Muhammad had temporal Lobe epilepsy or not?.Prove from hadiths (10 marks question)
http://en.wikipedia.org/wiki/Temporal_lobe_epilepsy//
கீழே நான் கொடுத்திருக்கும் யுடியூபை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரவும். பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு தோல்வியடையவே முடிவில் இஸ்லாமிய எதிரிகள் கடைசியாக எடுத்த ஆயுதமே முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்ததாக கதை கட்டி விட்டது. முகமது நபியின் தலை முடியில் இருந்த நரை முடியையும் குறித்து வைத்த அவரது தோழர்கள் எவரும் இப்படி ஒரு சம்பவத்தை எழுதவில்லை. அன்று வாழ்ந்த யூதர்களும் கிறித்தவர்களும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அதை அவ்வளவு லேசில் விட்டிருக்கவும் மாட்டார்கள்.
http://www.youtube.com/watch?v=Vld3LZaKpSw
திரு வருண்!
//ஆக, நீங்க நாத்திகரா இருக்கலாம், இருந்தாலும் நீங்க "ஒரு இந்து நாத்திகர்"னுதான் எல்லாரும் உங்களை நெனைப்பாங்க! நீங்க என்னதான் கடவுள் நம்பிக்கை இல்லாமல், கடவுள் என்பதே அர்த்தமில்லாத ஒண்ணுனு நெனச்சாலும், உணர்ந்தாலும், உங்க மதம் இன்னும் உங்க பேருல ஒட்டிக்கிட்டு இருக்குனு மறந்துவிடாதீர்கள்! அதனாலென்ன? அதனலென்னனா பேசாமல் இந்து மதத்தையும், இந்து மதத்தை என்னைக்குமே விட்டுக்கொடுக்காத பார்ப்பனர்களையும், இந்துக்கடவுள்களையும் மட்டும் திட்டிப்புட்டு, இந்துத்தவாக்களை கேலி பண்ணிப்புட்டு போனீங்கனா உங்களுக்கு பிரச்சினை இல்லை! ஆனால் நம்மதான் மதநம்பிக்கையில்லா நாத்திகராச்சே எம்மதமும் நமக்கு "சமமதம்"தானே?னு நெனச்சுக்கிட்டு பிற மதத்தவரை நீங்க என்ன சொன்னாலும், உங்களை "இந்து" என்றுதான் உலகம் சொல்லும்//
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன்.
திரு சார்வாகன்!
//ஆனால் பெயர் மட்டுமல்ல சில மரபு வழி பழக்க வழக்கஙகளையும் தவிர்க்க இயலவில்லை என்பது என் அனுபவம்.குடும்பத்தில் ஒருவர் மட்டும் இறை மறுப்பாளராக இருக்கும் பட்சத்தில் மத நடைமுறைகளை கொஞ்சம் கிண்டல் பண்ணிணாலும் பட்டும் படாமல் கலந்து கொள்ள வேண்டியே உள்ளது.
நன்றிவாழ்த்துக்கள்.//
உண்மை இவ்வாறிருக்க ' ஆத்திகர்களே!! எங்களைப் போல் நீங்களும் நாத்திகராக மாற மாட்டீர்களா' என்று எங்களை பிடித்து இழுக்க முயற்ச்சிப்பது நடைமுறை சாத்தியமில்லாததுதானே!
சுவனப்பிரியன்,
இந்த யூட்யூப் வீடியோ அவருக்கு டெம்போரல் வலிப்பு நோய் இருந்ததை உறுதிதானே செய்கிறது.
சாதாரண வலிப்பு நோயில் கீழேவிழுவார், கை கால் எல்லாம் இழுத்துகொள்ளும்.
இந்த வலிப்பு நோயால், மணி அடிப்பது, வாசனை வருவது, யாரோ வந்து பேசுவது போன்ற பிரமைகள் தோன்றும். இதுதான் டெம்போரல் வலிப்பு நோய்.
நீங்கள் காட்டிய யூட்யூப் வீடியோவில் இவையெல்லாம் முகம்மது நபிக்கு இருந்தன என்று ஆதாரப்பூர்வமாக காட்டுகிறது.
ஆகவே அவருக்கு இருந்த டெம்போரல் வலிப்புநோயால் அவர் தன்னிடம் ஜிப்ரீல் பேசியதாக் நினைத்தார் என்பது உறுதியாகிறது
//இணையத்தில் இஸ்லாத்தின் மேல் பல கேள்விகளை வைத்துக் கொண்டிருக்கும் செங்கொடி, தருமி, சார்வாகன், கோவிகண்ணன்//
எனக்கு இதில் ஆர்வம் இல்லை. விமர்சனம் செய்ய (முடிந்தால் இன்னொரு இறைத்தூதருடன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை) புதிய மதம்மும் வேண்டும் காத்திருக்கிறேன், ஏற்கனவே இருப்பதைப் பலர் துவைத்து விட்டார்கள்.
*******
வாதில் தோற்றவர்களை அந்த காலத்தில் மாதம் மாற்றுவது போல் இப்ப எதுவும் நடந்துவிடாது, எல்லாமே விடாக் கண்டன்கள் தான் என்று நம்புவோம்
இதைச் சொல்வதற்கு ரஹ்மான் என்ற போலிப் பெயர் எதற்கு?
//இந்த யூட்யூப் வீடியோ அவருக்கு டெம்போரல் வலிப்பு நோய் இருந்ததை உறுதிதானே செய்கிறது.//
வலிப்பு நோய் உள்ளவர்களை நானும் நேரில் பார்த்துள்ளேன். கீழே விழுந்து நுரை தள்ளிபோய் தாங்கள் செய்வது இன்னதென்றே அறியாதவர்களாக மாறி விடுவர். தான் சுய நினைவு வந்தவுடன் 'நான் என்ன செய்தேன்' என்று நம்மிடமே கேட்பவர்களாகத்தான் உள்ளனர்.
ஆனால் முகமது நபிக்கு இது போன்ற அறிகுறிகள் எதனையும் அவரது தோழர்கள் பதியவில்லை. இஸ்லாமிய எதிரிகளும் பதியவில்லை.
முதன் முதலாக ஜிப்ரீல் வந்த போது மட்டுமே சற்று தடுமாறினாரகள். அதன் பிறகு அந்த தடுமாற்றமும் விலகி விட்டது.
முகத்தில் வியர்வையின் துளிகள் தென்படும். தன்னிலையை மறக்க மாட்டார்கள். ஞாபக சக்தியிலும் எந்த குறைவும் இல்லை. இது தொடர்ந்து 23 ஆண்டுகள் வந்த வண்ணமே இருந்தது. இத்தனையிலும் ஒரு வசனமும் எந்த குளறுபடியும் இல்லாமல் ஒன்றோடொன்று மோதாமல் இன்றைய அறிவியல் கருத்துகளுக்கும் முரண்படாமல் ஒரு வலிப்பு நோய் உள்ளவரால் சொல்ல முடியும் என்று உங்கள் அறிவு ஒத்துக் கொள்கிறதா?
சுவனப்பிரியன்,
பொதுவாக,மாற்று சமய சகோதரர்களின் சமூகம் தொடர்பான, எனக்கு முரணாகத் தோன்றிய கருத்துக்களுக்கு மட்டுமே என் எதிர்ப்பை தெரிவிப்பேனே தவிர இறை தூதர் மீதோ இறைவன் மீதோ என் கருத்துக்கள் இருக்காது. ஆனால், சமயம் தொடர்பான விவாதத்தில் இத்தனை Safety Clause பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதற்காகவே இக்கேள்விகள்.
குரானின் விளக்க உரையிலிருந்து கேள்வி கேட்காதீர்கள், அவை தவறாக இருக்கும். நான் எழுதிய விளக்க உரையை படித்து விவாதம் செய்யுங்கள் என்று சொல்வது என்ன நியாயம்?
குரானைப் பற்றி மட்டும் பேசுங்கள், ஹதீஸ்களில் உள்ளவற்றை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லுவது சரியான விவாதமா ?
இறை தூதர் அவர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி விவரிக்கும் ஹதீஸ்களை பற்றி விவாதிக்க மறுப்பது சரியா ?
அதுவும் முதல் முந்நூறு ஹதீஸ்கள் மட்டும் தான் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது போல பிஜே சொல்வது சரியா ?
ஹதீஸ்களை இஸ்லாமியர்கள் ஏற்கிறார்களா?
திரு கபிலன்!
//குரானின் விளக்க உரையிலிருந்து கேள்வி கேட்காதீர்கள், அவை தவறாக இருக்கும். நான் எழுதிய விளக்க உரையை படித்து விவாதம் செய்யுங்கள் என்று சொல்வது என்ன நியாயம்?//
பலர் மொழி பெயர்த்த ஆங்கில மொழி பெயர்ப்புகள் தவறான அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மூல மொழி அரபு தெரியாதவர்கள் சிலரால் மொழி பெயர்ப்பை பார்த்து மொழி பெயர்த்த சில விளக்கவுரைகள் தவறாக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிஜேயின் மொழி பெயர்ப்பில் தவறு இருப்பதாக சுட்டிக் காட்டினால் அதைப் பற்றி பேசலாம். தற்போது பிஜேயின் மொழி பெயர்ப்பு ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.
//குரானைப் பற்றி மட்டும் பேசுங்கள், ஹதீஸ்களில் உள்ளவற்றை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லுவது சரியான விவாதமா ?
இறை தூதர் அவர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி விவரிக்கும் ஹதீஸ்களை பற்றி விவாதிக்க மறுப்பது சரியா ?//
குர்ஆன் முகமது நபி காலத்திலேயே எலும்புகளிலும், தோல்களிலும் எழுதப்பட்டு பல தோழர்களின் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப் பட்டது.
ஆனால் ஹதீதுகள் இந்த முறையில் அன்று பாதுகாக்கப் படவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இஸ்லாமிய எதிரிகள் யூதர்கள் இஸ்லாமியராக மாறுவதாக நடித்தனர். அதன்பிறகு 'முகமது நபி அவ்வாறு சொன்னார். முகமது நபி இவ்வாறு சொன்னார்.' என்று பலரிடமும் கதை கட்ட ஆரம்பித்தனர். இதனால் இஸ்லாமிய உலகம் பயங்கர குழப்பத்துக்கு ஆளானது. 1400 வருடங்களுக்கு முன்பு தகவல் பரிமாற்ற வசதிகளும் இன்று போல் இல்லை. பிறகுதான் இஸ்லாமிய அறிஞர்கள் விழித்துக் கொண்டனர். ஹதீதுகளை தரம் பிரித்தனர். ஒரு ஹதீது கிடைத்தால் அது உண்மைதானா? சொன்னவர் முகமது நபியை சந்தித்து இருக்கிறாரா? சொல்லும் நபர் முன்பு எங்காவது பொய் சொல்லி இருக்கிறாரா? சொல்லும் நபர் ஞாபக சக்தி உடையவரா? என்பதை எல்லாம் சேகரித்து ஹதீதுகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தனர். இந்த வகையில்தான் நம்பகமான ஹதீது, நம்பகமில்லாத ஹதீது என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.
எனவேதான் ஹதீதுகளை பேசும் போது அதில் ஆழ்ந்த ஞானம் வேண்டும் என்று விருப்பப்படுவது.
சுலபமான ஒரு வழி இருக்கிறது. குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு ஹதீது உங்களுக்கு கிடைத்தால் அது நம்பகமில்லாத ஹதீது. குர்ஆனை ஒத்து ஒரு ஹதீது உங்களுக்கு கிடைத்தால் அது ஓரளவு நம்பகத் தன்மை உள்ள ஹதீது. இந்த வழியிலும் நாம் ஹதீது கலையை அணுகலாம. இதுதான் அந்த ஒப்பந்தமும் கோடிட்டு காட்டுவது.
///வாதில் தோற்றவர்களை அந்த காலத்தில் மாதம் மாற்றுவது போல் இப்ப எதுவும் நடந்துவிடாது, எல்லாமே விடாக் கண்டன்கள் தான் என்று நம்புவோம்///
கோபி கண்ணன்
வாதில் தோற்பவர்கள், அந்த காலத்தில் மதம் மாறியதில்லை. தற்போதும் மாறுவதில்லை. விதிவிலக்காக சிலர் இருக்கலாம்.
வாதில் தோற்பவர்கள், அவர்களே சுயமாக மாறினாலே ஒழிய!
- Ismath
Post a Comment