Followers

Tuesday, January 03, 2012

இஸ்லாமிய இந்து கட்டிடங்கள் சேதம்!- அமெரிக்காவில்!




இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க நகர் நியுயார்க்கில் இஸ்லாமிய கலாசார கழகமும், இந்து வழிபாட்டு தலமும் சில விஷமிகளால் தாக்கப்பட்டுள்ளது. நல்ல வேளையாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இஸ்லாமிய கலாசார மையத்தின் மீது பாட்டில்களை எறிநது அதை வெடிக்க செய்திருக்கின்றனர். இந்த தாக்குதல் நடந்த போது 80 பேர் கலாசார மையத்தில் இருந்துள்ளனர். கலாசார மையத்தின் கதவுகள் இந்த குண்டு வெடிப்பால் பெருத்த தேசம் அடைந்துள்ளது. வீசிய குண்டுகளில் இரண்டு வெடிக்கவில்லையாம். அதுவும் வெடித்திருந்தால் உயிர்ப்பலிகள் ஏற்பட வாய்ப்புண்டு.



இதே பாணியை பின்பற்றி சில மணி வித்தியாசங்களில் இந்து வழிபாட்டு தலமும் பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் மேல் தாக்குதல் நடத்துவது அமெரிக்காவில் தற்போது சர்வ சாதாரணமாகி வருகிறது என்று இஸ்லாமிய மையத்தின் தலைவர் அரப் நியூஸுக்கு செய்தியளித்துள்ளார்.

இந்த செய்தியை மீடியாக்கள் வெகு கச்சிதமாக மறைத்து விட்டன. தினமலரிலும் தின மணியில் இதைப்பற்றிய செய்தியே காணோம். இஸ்லாமிய மையமும் தாக்கப்பட்டதால் முஸ்லிம்களை குறை சொல்ல முடியாதே என்ற வருத்தத்தில் செய்தியை வெளியிடவில்லை போல் தெரிகிறது. ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கி இதே காரியத்தை செய்திருந்தால் 'அல்கய்தா' 'அபு சயாப்' என்று பல பெயர்கள் கொடுக்கப்பட்டு கண் காது மூக்கெல்லாம் அதற்கு வைத்து செய்தியை இந்நேரம் பிரபல்யப் படுத்தியிருப்பார்கள்.

அடுத்து புததாண்டு கொண்டாட்டங்களின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 கார்களை சிலர் எரித்துள்ளனர். இது போன்ற செயல் பல இடங்களில் நடந்துள்ளது. ஹாலிவுட்டிலும் இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. சீனர்களின் தியேட்டர் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களினால் 3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி கூறுகிறார்.

கார் எரிப்பு சம்பவம் சம்பந்தமாக ஹார்ரி புகார்ட் என்ற ஜெர்மனிய 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இனிமேல்தான் இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள் என்ற செய்தி வெளி வரும்.



வேலையில்லாத் திண்டாட்டம், அளவுக்கதிகமான சுக போகங்களில் திளைத்து இன்று கையில் காசில்லாத நிலை இவற்றிலெல்லாம் வெறுத்த ஒரு சிலர் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதாக தெரிகிறது.

அல்லது யூதர்களை தூண்டி விடும் இஸ்ரேலின் கைங்கரியமாகவும் இருக்கலாம்.

அமெரிக்காவில் உள்நாட்டு குழப்பம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறான். தற்போது அமெரிக்க தேர்தல் நெருங்குகிறது. வாக்கை அள்ள ஒபாமாவிடம் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை.

முன்னர் ஈராக்கின் மீது போர் தொடுத்து பிரச்னைகளை புஷ் திசைதிருப்பியது போல் இன்று ஒபாமா ஈரானின் பக்கம் பார்வையை செலுத்துகிறார். ஆனால் ஈரான் அவ்வளவு லேசில் வளைந்து கொடுப்பது போல் தெரியவில்லை. கடந்த 10 நாட்களாக வளைகுடா பிராந்தியத்தில் தனது ஏவுகணை திட்டங்களை வெற்றிகராக சோதித்து காட்டி வெள்ளை மாளிகையை மிரள வைத்திருக்கிறது ஈரான். 'மத்திய தர ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம். நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளையும் வரும் காலங்களில் பரிசோதிக்க உள்ளோம்' என்கிறார் ஈரானின் கடற்படை உயரதிகாரி மஹ்மூத் முஸாவி. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானைத் தாக்கினால் மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று ஈரான் அதிபர் சவால் விடுகிறார். அன்றைய வல்லரசான பாரசிகம் தற்போது பழைய முக்கியத்துவத்தை உலக அரங்கில் பெறுகிறது. அமெரிக்காவுக்கு கூஜா தூக்குவதை மன்மோகன் சிங் நிறுத்தி கொண்டு ஈரானோடு கை கோர்த்தால் பல விதங்களில் நமக்கு நன்மை. பெட்ரோல் கேஸ் முதலான பல பொருட்கள் நமக்கு சொற்ப விலையிலேயே கிடைக்கும் சாத்தியக் கூறு உண்டு.

மக்களின் வேலையில்லாத் திண்டாட்டததைப் போக்க அதிகாரிகளை பயன்படுத்தி நீண்டகால திட்டங்களை ஒபாமா செயல்படுத்த வேண்டும். மத்தாப்பு திட்டங்களான ஆயுத பேரம் நிரந்தர தீர்வை என்றுமே தரப் போவதில்லை. ஏனெனில் ஆயுத வியாபாரம் என்பது பல வறிய நாட்டு மக்களின் ரத்தத்தை ஓட விட்டு காசு பார்ப்பது. அதில் எந்த வொரு விருத்தியும் ஏற்படாது. பல பேரின் வயிற்றெறிச்சலில் அமெரிக்கா எப்படி வாழ்ந்து விட முடியும்? இனியும் இதே போன்ற அரசியல் சதுரங்கத்தை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அமெரிக்காவின் அழிவை நம் கண் முன்னேயே பார்க்கலாம்.

21 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மறைக்கப்பட்ட செய்திகளை வெளிச்சம் போட்டு காட்டுவதே பிளாக்கர் பணி..! அருமையான பதிவு..! வாழ்த்துகள் சகோ..!

இன்று உலகத்திலேயே அமெரிக்காவுக்கு ஒரு சொட்டு எண்ணெய் கூட அனுப்பாத ஒரே நாடு ஈரான் தான்..! ஆனால், இந்தியா கேட்டால் நிச்சயம் நிறைய தருவார்கள்தான்..!

//அமெரிக்காவுக்கு கூஜா தூக்குவதை மன்மோகன் சிங் நிறுத்தி கொண்டு ஈரானோடு கை கோர்த்தால் பல விதங்களில் நமக்கு நன்மை.//---உண்மையான நல்ல யோசனைதான்..!

ஆனால்,
இதே வழிமுறையை பாகிஸ்தானும் பின்பற்ற வேண்டுமே..! இல்லையேல், அமெரிக்கா தன் ஆயுதங்களுடன் பாகிஸ்தான் முகமூடி அணிந்தவண்ணம் நம்முடன் போருக்கு வரும்..!

அப்புறம், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு சரமாரியாக வசை, பாட்டு, திட்டு விழும்..! நமக்கு கெட்டவார்த்தைகளில் நிறைய அனானி கமென்ட்ஸ் வரும்..!

VANJOOR said...

//தினமலரிலும் தின மணியில் இதைப்பற்றிய செய்தியே காணோம். இஸ்லாமிய மையமும் தாக்கப்பட்டதால் முஸ்லிம்களை குறை சொல்ல முடியாதே என்ற வருத்தத்தில் செய்தியை வெளியிடவில்லை போல் தெரிகிறது. ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கி இதே காரியத்தை செய்திருந்தால் 'அல்கய்தா' 'அபு சயாப்' என்று பல பெயர்கள் கொடுக்கப்பட்டு கண் காது மூக்கெல்லாம் அதற்கு வைத்து செய்தியை இந்நேரம் பிரபல்யப் படுத்தியிருப்பார்கள்.//


அச்சச்சோ வடை போச்சே

============================

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

****** 1.
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
**********
…….



2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

.

Anonymous said...

இஸ்லாத்தை போலவே கிறிஸ்துவமும் அமைதி மார்க்க்ம் தான்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் அண்ணன் சுவனப்பிரியன்,
மேலை நாடுகள் சிறந்த நாடுகள். அங்கே தான் விண்ணை முட்டும் அளவிற்கு தனி மனித சுதந்திரம் எல்லோருக்கும் தரப்பட்டுள்ளது என்று சில புத்திசாலி பதிவர்கள் பின்னூட்டமிட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. இப்படி ஒரு சம்பவம். பாவம் இவர்களின் நம்பிக்கை சில நாட்களிலேயே இப்படி பல்லிளிக்கின்றதே.

ஏற்கெனவே நெத்தியடி ஆஷிக் இங்கிலாந்தின் தற்போதைய நிலைமையை ஒரு பதிவாக போட்டிருக்க நீங்களும் பூலோக சொர்க்கமாக சங்பரிவார கூட்டத்தினால் காட்டப்படும் அமெரிக்காவில் நடக்கும் அட்டகாசத்தை போட்டிருக்கிறீர்கள். ஆனாலும் பாருங்கள் பல ஊடகங்கள் இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை. என்ன இருந்தாலும் எஜமானர்கள் இல்லையா அமெரிக்கர்கள். எனவே கனத்த மெளனத்தை தான் ஊடகங்களிடம் எதிர்பார்க்க முடியும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஆனால் ஈரான் - அமெரிக்கா பிரச்சனை குறித்து சில மாற்றுக் கருத்துக்கள் எனக்கு இருக்கின்றன. ஈரானை கண்டு அஞ்ச வேண்டிய நிலையில் ஒரு போதும் அமெரிக்கா இல்லை. அதனுடைய ஆயுதங்களும் தொழில்நுட்ப யுக்திகளும் வேறெந்த நாட்டிடமும் இல்லை என்பது தான் நிதர்சனம். இதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.ஈரானும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக ஈரான் மீது சர்வதேச சமூகத்திற்கு வெறுப்பு வர வைக்க வேண்டிய வேலையில் கனகச்சிதமாக தன் பணியை முடுக்கி விட்டிருக்கிறது அமெரிக்கா. அதில் மிகுதியாக வெற்றியும் அடைந்திருக்கிறது. ஏனெனில் வியட்நாம் போர் பல பாடங்களை அமெரிக்காவிற்கு கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் இதை ஈரான் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. ஈரானை மிகப்பெரிய வல்லரசாக காட்டி அதனுடைய ஆயுதங்களால் உலகிற்கு மிகப்பெரிய தீமை என்ற பிரமையை உருவாக்கி அதை அழிக்க நினைக்கிறது அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள்.

மேலும் அரபு நாடுகளிலும் ஈரானுக்கு எதிரான மனநிலையை உருவாக்க அமெரிக்கா சதிவலைகளை பின்னிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதி தான் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம். பரவலான அரபு நாடுகளின் என்னை பேரல்கள் இந்த வழியாக தான் சந்தைக்கு வருகின்றன. எனவே மிக சுலபமாக இதை வைத்து அரபு நாடுகளிலும் ஈரானுக்கு எதிரான மனநிலையை அமெரிக்காவால் உருவாக்க முடியும். எனவே அமெரிக்காவை எதிர்க்கின்ற சக்தி எந்தவொரு நாட்டிடமும் இன்றுவரை இல்லை. அஹமதி நிஜாத் அவர்கள் இதை உணர்ந்து கொண்டு தனது நாட்டை காக்க வேண்டிய கடமையை செய்ய வேண்டும். அமெரிக்கா விரித்த வலையில் விழுந்து விட கூடாது. எனவே ஈரான் இன்னொரு ஆப்கானிஸ்தானாக , ஈராக்காக மாறிவிடாமல் இருக்க ஏக இறைவனை பிரார்த்திப்போம்.

suvanappiriyan said...

அனானி!

//இஸ்லாத்தை போலவே கிறிஸ்துவமும் அமைதி மார்க்க்ம் தான்.//

இங்கு இதற்கு காரணம் என்று கிறித்தவ மார்க்கத்தை யாரும் தூக்கிப் பிடிக்கவில்லை. ஏசுவின் போதனையும் இப்படி இருக்கவில்லை. மக்களுக்கு மத்தியில் துவேஷத்தை வளர்த்து அதில் வயிறு வளர்க்க நினைப்பவர்களின் திட்டமே இது.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//அப்புறம், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு சரமாரியாக வசை, பாட்டு, திட்டு விழும்..! நமக்கு கெட்டவார்த்தைகளில் நிறைய அனானி கமென்ட்ஸ் வரும்..!//

சரியாகவே சொன்னீர்கள். பாகிஸதானிலிருந்து தாக்குதல் வரா விட்டாலும் இஸ்லாத்தை விமரிசிக்க வேறு ஏதாவது காரணத்தைத் தேடுவார்கள். எனவே திட்டு வாங்குவதிலிருந்து நீங்களோ நானோ இந்த வகையில் தப்ப முடியாது. :-)

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//அச்சச்சோ வடை போச்சே//

வருகைக்கும் சுட்டியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்,

///மக்களுக்கு மத்தியில் துவேஷத்தை வளர்த்து அதில் வயிறு வளர்க்க நினைப்பவர்களின் திட்டமே இது.///---இதற்கு பதில் ஒரே வார்த்தையில்...

"உங்களைப்போல"

...என்று அந்த அனானியிடம் சொல்லி இருக்கலாம்.

இது போன்ற சம்பவங்கள் நடந்த போதெல்லாம்... இதுவரை இஸ்லாமை தூற்றி மட்டுமே எழுதிய ஊடகங்கள்... இன்று கோமாவில்..

அல்லது,

பைத்தியம் பிடித்து நிற்கின்றன..
என்னத்தை எழுதுவது என்று தெரியாமல்..!

அனானி போல அவர்கள் எழுதினால்... அல்லது செய்தி வாசித்தால்... அமெரிக்காவின் ஆப்பு உச்சந்தலையில் இறங்கும்..!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஷேக்தாவூத்!

//ஈரானை கண்டு அஞ்ச வேண்டிய நிலையில் ஒரு போதும் அமெரிக்கா இல்லை. அதனுடைய ஆயுதங்களும் தொழில்நுட்ப யுக்திகளும் வேறெந்த நாட்டிடமும் இல்லை என்பது தான் நிதர்சனம். இதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.ஈரானும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.//

உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்கிறேன். ஈராக்கை தனி ஒரு அமெரிக்காவாக அழிக்க முடியவில்லை. நேட்டோ படைகளின கூட்டு தேவைப்பட்டது. சதாமின் சர்வாதிகாரம் அமெரிக்காவுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அடுத்து ஈராக்கில் உள்ள ஷியாக்களையும் குர்துகளையும் தனது ஒற்றர்களாக அமெரிக்கா பாவித்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்ததை உலக நாடுகள் யாரும் விரும்பாததும் ஒரு காரணம். ஈராக்கில் சுன்னத் ஜமாத் பிரிவிலேயே சதாமை பிடிக்காத ஒரு பெருங் கூட்டம் அமெரிக்காவுக்கு உதவி செய்தது. ஈராக்கை சுற்றியுள்ள பக்கத்து நாடுகள் அமெரிக்காவுக்கு தளம் அமைத்து கொடுத்ததும் ஈராக்குக்கு ஒரு முக்கிய பின்னடைவு.

ஆனால் இது போன்ற காரணங்கள் இன்று ஈரானில் இல்லை. உள்நாட்டு குழப்பம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அஹ்மத் நஜாதுக்கு முழு ஈரானிய மக்களும் ஆதரவு தருகின்றனர். முன்பு ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஈராக்கின் மேல் வீண் பழி சுமத்தப்பட்டது. ஆனால் இன்று ஈரான் அணு உலைகளை திறம்பட ரஷ்ய தொழில் நுட்பத்தோடு நிர்வகித்து வருகிறது. சொந்தமாக பல ஆயுதங்களையும் தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளது. ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிக சிறந்து விளங்குகிறது. இயற்கையிலேயே அமெரிக்க அரசின் மீது அந்த மக்கள் பெரும் வெறுப்பிலேயே உள்ளனர். ஈரானின் மீது குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. அமெரிக்காவில் சவுதி தூதரை தாக்க ஈரான் முயற்சி என்ற செய்தியை அமெரிக்கா பரப்ப பார்த்தது. ஆனால் அதுவும் அமெரிக்காவின் சதி என்பதை ஈரான் நிரூபித்தது.

ஆனால் அமெரிக்காவோடு ஒப்பிடும்போது ஈரான் ஒரு சுண்டெலிதான் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவ்வளவு தூரத்திலிருந்து வந்து ஈரானோடு மல்லுகட்டுவது என்பது அமெரிக்காவுக்கு லேசான காரியம் அல்ல. சவுதியும் ஈரானை அடிக்க தனது தளத்தை பயன்படுத்த அனுமதி தராது. சவுதி மக்களும் ஈரானின் மீது படை எடுப்பதை விரும்பவில்லை.

இவை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது சண்டை என்று வந்தால் இரு தரப்பும் மிக மூர்க்கமாக தாக்கிக் கொள்ளும் சூழலே ஏற்படும். எனவே ஈரானின் மீது கை வைக்கும் முன் 100 முறை அமெரிக்கா யோசிக்கும்.

Darren said...

//அஹ்மத் நஜாதுக்கு முழு ஈரானிய மக்களும் ஆதரவு தருகின்றனர். //

It is not true since my wife is Iranian.

suvanappiriyan said...

திரு தரன்!

//It is not true since my wife is Iranian.//

எந்த வொரு நாட்டிலும் ஆட்சியாளரை 100 சதவீதம் ஆதரிக்கும் மக்களை காண முடியாது. சதாமோடு ஒப்பிடும்போது அவருக்கு இருந்த எதிர்ப்பு அஹமத் நஜாதுக்கு இல்லை என்பதையே சொல்ல வந்தேன். அமெரிக்கா ஈராக்கை சுலபத்தில் வீழத்தியதில் உள்நாட்டு காரர்களின் பங்கு அளப்பரியது. தாலிபான்களையும் இதே முறையில்தான் ஆட்சியிலிருந்து அமெரிக்கா அகற்றியது. அது போன்ற சூழல் தற்போது ஈரானில் இல்லை.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

நிறைய விடயங்களை தெரிந்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஹைதர் அலி!

//நிறைய விடயங்களை தெரிந்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

தருமி!

//சுவனப்பிரியன் சொன்னது போல் 'ஆஹா! இஸ்லாமிய ஆட்சி முறைகள் உலகம் முழுமையும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நான் கற்பனை செய்து கொண்டிருந்த போது,//

நீங்கள் சுட்டிக் காட்டும் தவறுகளை குர்ஆன் ஆதரிததிருந்தால்தான் அதனை பொறுப்பாக்க முடியும. உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சில இடங்களில் தவறிழைக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன? குர்ஆனை அவர்கள் விளங்க வேண்டிய முறையில் விளங்கவில்லை. இன்று குர்ஆனின் சொல்படி ஓரளவு ஆட்சி நடத்தும் சவுதி அரேபியாவில் இத்தகைய குற்றச்சாட்டுகளை நீங்கள் வைக்க முடியாது.

By ARAB NEWS
Published: Jan 3, 2012 00:28 Updated: Jan 3, 2012 00:31
TAIF: A Saudi judge was driving at 170 km an hour on the Al-Jouf-Qasim Road when traffic police pulled him over for speeding, Al-Madinah daily reported.
The judge allegedly told the police that, according to the immunity system, judges should not be booked for traffic violations. The police refused to accept this logic and fined the judge. General security made it clear that traffic rules did not exempt anyone.
The fine for a traffic violation was not an issue the Supreme Judicial Council should be informed about. It asked the council to inform all judges about this rule.
நேற்று அரப் நியூஸில் வந்த செய்தி இது. இஸ்லாமிய சட்டங்கள் முறையாக பின்பற்றக் கூடிய நாடுகளில் நீங்கள் குறிப்பிடும் செயல்கள் நடைபெற சாத்தியமே இல்லை.

'இறைவனை வணங்குங்கள்! அவனுக்கு இணையாக எதையும் கருதாதீர்கள். பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அணடை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்.'
-குர்ஆன் 4:36

இந்த ஒரு வசனம் போதும். இதற்கு மாற்றமாக நடக்கும் எவரையும் இறைவன் நேசிக்கமாட்டேன் என்று தெளிவாக குறிப்பிடுவதைப் பாருங்கள். அண்டை வீட்டில் கிறித்தவரும் இருப்பார். யூதரும் இருப்பார். சிலை வணங்கியும் இருப்பார். அந்த நெருங்கிய மற்றும் தூரமான அண்டை வீட்டார்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று அழகாக குர்ஆனின் உபதேசம் இருக்க அதற்கு மாற்றமாக நடப்பவர்களை குர்ஆனோடு நீங்கள் எப்படி சம்பந்தப்படுத்துகிறீர்கள்?

இரண்டு நாள் முன்பு கூட அமெரிக்காவில் இஸலாமிய கலாசார மையமும் இந்து கோவிலும் சில விஷமிகளால் தாக்கப்பட்டது. அதற்கு நான் பைபிளை குறை சொன்னால் என்னை விட முட்டாள் இந்த உலகததில் வேறு யாரும் இருக்க முடியாது.

எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. மொராக்கோவிலும் நேற்று இஸ்லாமிய கட்சி அருதி பெரும்பான்மை பெற்றுள்ளது. துனீஷியாவிலும் இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சி அகற்றப்பட்டு தூய இஸ்லாமிய ஆட்சி தொடங்கப்பட்டுள்ளது. லிபியா, சிரியா, ஏமன், குவைத் போன்ற நாடுகளிலும் கூடிய விரைவிலேயே ஏற்படும் மாற்றங்கள் அந்த மக்கள் இஸ்லாமிய ஆட்சியை விருமபுவது தெரிகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் வாலை சுருட்டிக் கொண்டு தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் மேற்சொன்ன நாடுகளில் அமைதி தவழும். ஆட்சியும் சிறப்புறும். சிறுபான்மையினரின் நலனும் பாதுகாக்கப்படும்.

texasroadhouse-coupons said...

இன்று உலகத்திலேயே அமெரிக்காவுக்கு ஒரு சொட்டு எண்ணெய் கூட அனுப்பாத ஒரே நாடு ஈரான் தான்..! ஆனால், இந்தியா கேட்டால் நிச்சயம் நிறைய தருவார்கள்தான்..!..........


http://texasroadhouse-coupons.net

suvanappiriyan said...

லண்டன்: பிரிட்டனில், இந்திய மாணவர் அனுஜ் பித்வே கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில், பித்வே கொல்லப்பட்ட அதே பகுதியில், ஆசிய நாட்டைச் சேர்ந்த மற்றொருவர், ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள் ளார்.

அனுஜ் பித்வே கொல்லப்பட்ட சால்போர்டு பகுதியில், ஆசிய நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் அவரை நான்கு பேர் பின்தொடர்ந்து சென்று, சரமாரியாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். அடிக்கும் போது கும்பலில் இருந்த ஒருவர், இனவெறி தொடர்பாக சில வார்த்தைகளைக் கூறி அடித்துள்ளார். பின், அக்கும்பலினர் அவரை சாலையில் போட்டு விட்டுச் சென்றனர். தாக்கப்பட்டவர், அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவர் போலீசாரிடம் அளித்த தகவலின்படி, தாக்கிய கும்பலில் மூன்று பேர் ஆங்கிலேயர், ஒருவர் கறுப்பினத்தவர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி மார்க் கோல் கூறுகையில்,"இந்த தாக்குதலின் முக்கிய நோக்கமே, கொள்ளையடிப்பது தான். எனினும், அடித்தவர்கள் இனம் தொடர்பான சில வார்த்தைகளையும் கூறியுள்ளதால், விசாரணை அந்தக் கோணத்திலும் நடக்கிறது' என்றார். இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டஇரு வாரங்களுக்குள், அதே பகுதியில் ஆசிய நாட்டைச் சேர்ந்த மற்றொருவர் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-தினமலர் 05-12-2012

suvanappiriyan said...

நவீன விஞ்ஞானம் மட்டுமே சமுதாயத்தை வழி நடத்தக்கூடியது; சமுதாயத்தை மாற்றியமைக்கக் கூடியதும் ஆகும். நம்பிக்கைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது. அவை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும். பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள் மட்டுமே அறிவியலாக முடியும். காலம் காலமாக பல கதைகளை சொல்லி வந்திருக்கிறோம். அந்தக் கதைகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மையா, கற்பனையா என்று கண்டறிந்து அதனடிப்படையிலேயே நவீன விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கோப்பர்நிக்க°, கலிலியோ காலத்திலேயே நவீன விஞ்ஞானத்துக்கு அடித்தளமிடப்பட்டது. சிறந்த விஞ்ஞானம் உருவாக, சுதந்திரமான சிந்தனை அவசிய மாகிறது. சுதந்திர சிந்தனையால் உருவான விஞ்ஞான கண்டுபிடிப்புகள்தான் 16 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் சீர்திருத்தத்துக்கு அடித்தளமிட்டது அந்த புதிய விஞ்ஞான மறுமலர்ச்சிதான். அதிகார மய்யங்களை அசைத்தன; புதிய சுதந்திர சிந்தனைகளுக்கு வழிவகுத்தன. விஞ்ஞானத்தில் மாறுபட்ட கருத்துகோள்கள் வெளிப்படுவதற்கும் வழி வகுத்தன.

ஒரு கருத்தை முன்மொழிகிற நபர் எப்படிப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரது கருத்து சரியா தவறா என்பதைத் தீர்மானிக்கும் போக்கு ஒரு பக்கமும், சொல்கிறவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், சொல்லப்படுகிற கருத்து எவ்வளவு அழகாக இருந்தாலும், அது அறிவியல் ஆய்வுக்குட்பட்டால் மட்டுமே ஏற்க முடியும் என்ற போக்கு மற்றொரு பக்கமும் உருவாயின. கடைசியாக வெற்றிப் பெற்றது அறிவியல் பூர்வமாக – செயல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை மட்டுமே. இதுவே நவீன விஞ்ஞானத்தின் அடிப் படை. இதுதான் சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியது. “இந்த உலகம் எவருக்கும் சொந்தமானது அல்ல” என்ற சுயசிந்தனைக் கோட்பாடுதான். அய்ரோப்பாவில் 1600 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ‘ராயல் சொசைட்டி’ என்ற விஞ்ஞான அமைப் பின் அடிப்படை கோட்பாடாகும். அடிப்படை இல்லாத பல மூடநம்பிக்கைகள், விஞ்ஞான சோதனைகளுக்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப் போயின. ஆனாலும், அந்த நம்பிக்கைகளை விடாப்பிடியாக தொடர்ந்து நம்பிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளை, காரணங்களைக் கொண்டு பிரித்துப் பார்க்காமல், திணறிப் போய், அப்படியே நம்பி விடுவது தான்.
மனித மூளைகள் சிலவற்றுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. சில முன் மாதிரிகளை அப்படியே பதியச் செய்து விடுகிறோம். கணிதத்தில் அதற்கு விடை தேடும் வழிமுறைகள் எப்படி என்பது நமக்கு முன்கூட்டியே தெரிவதுபோல், இசையோ, நாட்டியமோ, ஓவியமோ நம்மிடம் நல்ல தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பதுபோல், பலகற்பனையான முன் மாதிரிகளையும் நாம் மூளையில் ஏற்றி வைத்திருக்கிறோம். அவைகள் உண்மையில் ‘இருத்தல்’ அற்றவை; இல்லாதவை; ஒன்றோடு மற்றொன்றை தொடர்புறுத்தி, அறிவியலுக்கு எதிரான முடிவுகளுக்கு வந்துவிடக்கூடாது. வானத்தில் பறக்கும் சில கழுகுகள், பிணங்களை தின்கின்றன. கழுகுகள் பிணங்களைத் தின்ன வேண்டும் என்பதற்காகவே குழந்தைகள் பிறக்கின்றன என்று கற்பனை செய்து கொள்ள முடியுமா? இப்படி தொடர்புபடுத்திப் பார்ப்பது ஒரு கற்பிதம்.
அறிவியலைப் பொறுத்தவரை ஒரு கண்டுபிடிப்பை மற்றொரு கண்டுபிடிப்பு தவறு என்று நிரூபிக்கும்போது, அது தன்னைத் தானே மாற்றத்துக்கு உள்ளாக்கிக் கொள்கிறது. தவறை சரி செய்து கொள்கிறது. அறிவியலுக்குள்ளேயே அந்த மாற்றத்தை ஏற்கும் போக்கு அடங்கியுள்ளது. அதே நேரத்தில் அறிவியலுக்கு உட்படாத ஏனைய மூட நம்பிக்கைகளால் தவறுகளை திருத்திக் கொள்ள முடியாது. அறிவியல் நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் வேறுபடக் கூடிய இடம் இதுதான். இது விஞ்ஞானத்தில் நிகழுவதும் உண்டு; ஆனால் அந்தத் தவறுகள் மோசமானதோ கெட்டதோ அல்ல. ஆனால் அஞ்ஞானப் பொய்மைகள் நிச்சயமாக கெட்டவை; மோசமானவை.
சோதிட நம்பிக்கைக்கு வருவோம். அது நிச்சயமாக அறிவியல்பூர்வமானது அல்ல; கோள்களும், நட்சத்திரங்களும் நமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதும் அல்ல. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்து நிற்பதால்தான், மனிதனின் சராசரி ஆயுள்காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியலை நம்ப வேண்டுமே தவிர, விஞ்ஞானபூர்வமாக சான்று பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது. அறவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால்தான் பெரியம்மை முற்றி லும் ஒழிக்கப்பட்டுள்ளது – என்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.

-பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழில் நுட்பத் துறையில் ஆய்வாளராக பணியாற்றும் வெங்கட்ராமன், வேதியலில் தமது கண்டுபிடிப்புக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.

suvanappiriyan said...

பீஜிங்: சீனாவின் இவு நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தங்களை சீனர்கள் நாயை விடக் கேவலமாக நடத்துவதாகவும், மத்திய அரசு காப்பாற்றா விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கதறியுள்ளனர்.

சீனாவின் ஷீஜியாங் மாகாணத்தில் இவு நகரில் உள்ள ஓட்டலில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் தீபக் ரஹேஜா மற்றும் ஷ்யாம் சுந்தர் அகர்வால் இருவரும், விரைவில் ஷாங்காய் நகருக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுடன் பாதுகாப்பு கருதி, இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரும் செல்வர் என, அவர் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில், இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரனுக்கு உணவு, மருந்து வழங்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டது என்று வெளியான செய்திகளுக்கு, நேற்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.

அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ இதுகுறித்துக் கூறியதாவது: இவு நகரில், இந்தியத் தூதரக அதிகாரிக்கு உணவு, மருந்து வழங்கப்படவில்லை என்ற செய்தி தவறானது. இவ்விவகாரம் வர்த்தகத்தால் விளைந்த சிக்கல். அதனால், சீன சட்டப்படி இவ்வழக்கு நடக்கும். இவ்வழக்கின் வித்தியாசத்தை உணர்ந்து, இதை முறையாக நடத்த இந்தியா உதவும் எனவும், சீனாவில் உள்ள இந்திய வர்த்தகர்கள் சீன சட்டப்படி நடக்க வேண்டும் என, அவர்களுக்கு இந்தியா அறிவுறுத்தும் எனவும் நம்புகிறோம். இவ்வாறு ஹோங் லீ தெரிவித்தார்.

அதேநேரம் இவ்வழக்கில், இந்திய வர்த்தகர்களை சிறை பிடித்து வைத்த ஐந்து சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இவு நகரில் இருந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தீபக் ரஹேஜா,"இங்கு ஓட்டலுக்குள்ளேயே சீன வர்த்தகர்கள் வந்துவிட்டனர். எங்களின் உடைகளைக் களைந்து விட்டு, அடிக்கின்றனர். பொருட்களை தூக்கி வீசுகின்றனர். மிருகங்களைப் போல நடத்துகின்றனர். எங்களைக் காப்பாற்றாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில், இந்திய வர்த்தகர்களை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் எனவும், வழக்கு முடியும் வரை அவர்கள் சீனாவில் தங்க வைக்கப்படுவர் எனவும் இந்தியத் தூதரகம், சீனாவுக்கு உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் தொலைபேசியில் பேசிய ரஹேஜா,"நாங்கள் ஏழைகள். எங்களால் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசுதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' எனக் கோரியுள்ளார்.

Dinamalar 06-01-2012

இந்த செய்தியை ஆதாரமாக வைத்து உலகில் உள்ள கம்யூனிஸ்டுகளும் நாத்திகர்களும் மோசமானவர்கள் என்று நான் சொன்னால் என்னை பைத்தியக்காரன் என்று சொல்ல மாட்டீர்களா!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தேசபக்தி இயக்கம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. சங்பரிவாரின் ஒரு பிரிவான ஸ்ரீராம் சேனா இயக்கத்தை சேர்ந்த ஆறு நபர்கள் பாகிஸ்தான் கொடியை கர்நாடக மாநிலத்தில் ஜனவரி ஒன்றாம் தேதியன்று ஏற்றியிருக்கின்றனர். ஆனால் திருட்டுத்தனமாக இந்த காரியத்தை செய்து விட்டு ஓடிப்போயிருக்கின்றனர். இக்கொடியேற்றம் காரணமாக பந்த் , பஸ் மீது கல்வீச்சு என்று பல வன்முறைகள் அங்கே அரங்கேறியிருக்கின்றன. பாகிஸ்தான் கொடியை ஏற்றியது முஸ்லிம்கள் என்று பழியை சுமத்தி விடலாம் என்று கனவு கண்டிருக்கின்றனர் சங்பரிவார்கள். ஆனால் அவர்களின் நினைப்பில் மண் அள்ளிப்போடும் விதமாக கர்நாடக காவல் துறை உண்மையான குற்றவாளிகள் ஸ்ரீராம் சேனாவை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏற்கெனவே காந்திய சுட்டுக் கொள்ள வந்த விநாயக் நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவ தீவிரவாதி பிறப்புறுப்பில் முஸ்லிம்களை போன்று சுன்னத் செய்து கொண்டும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும் வந்து காந்தியை சுட்டுக் கொன்றான். காந்தியை கொன்றது முஸ்லிம்கள் தான் என்ற பழியை போட்டு மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்த தமது அரசியல் ஆசான்கள் மூலம் சதி செய்திருந்தான். ஆனால் அது முறியடிக்கப்பட்டது. பின்னர் வெடிகுண்டு வைக்கிற இடங்களில் உருது பிரசுரங்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் போட்டு அதை செய்தது முஸ்லிம்கள் தான் என்று பழியை போட முயற்சி செய்தி அதில் வெற்றியும் பெற்றனர் சங்பரிவார்கள். ஆனால் ஹேமந்த் கர்கரே அவர்கள் இது குறித்து புலன்விசாரனை செய்து குண்டு வெடிப்பை நடத்தியது சங்பரிவார்கள். அதில் முக்கிய புள்ளிகள் பிரக்யா சிங் என்ற சாமியாரினியும் இன்ன பிற சங்க்பரிவர்களும் என்ற உண்மையை கண்டறிந்தார். அந்த பழியில் இருந்தும் முஸ்லிம் சமூகம் மீண்டது. இப்போது பாகிஸ்தான் கொடியை ஏற்றி அதை முஸ்லிம்கள் மேல் போட்டு கலவரம் செய்து பெரும்பான்மை ஹிந்துக்களின் மனதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்ட சங்பரிவார்களின் தற்போதைய திட்டம் தவிடு பொடியாகி விட்டது. இன்னும் எத்தனை எத்தனை சதிச்செயல்களில் ஈடுபட சங்கபரிவார் திட்டங்கள் வைத்திருக்கிறதோ தெரியவில்லை.