'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, January 18, 2012
உலகின் மிகப் பெரிய குர்ஆன் பிரதி!
ஆப்கன் தலைநகர் காபூலில் உலகின் மிகப் பெரிய குர்ஆன் பிரதி தயாரிக்கப்பட்டுள்ளது. 30 வருட கால போரில் அந்நாட்டின் கை வினைஞர்களின் திறமை சற்று மடடுப் படுத்தப் பட்டாலும் முற்றிலும் சிதைந்து விட வில்லை என்பதையே இந்த குர்ஆன் பிரதி காட்டுகிறது..
இந்த குர்ஆன் பிரதி 2.28 மீட்டர்(90 இன்ச்) நீளமும் 1.55 மீட்டர்(61 இன்ச்) அகலமும் கொண்டது. இந்த பிரதி உலகில் உள்ள குர்ஆன் பிரதிகளிலேயே பெரிய அளவைக் கொண்டது என்று ஆப்கனின் ஹஜ் அமைச்சகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதற்கு முன்னால் ரஷ்யாவின் தாரஸ்தான் பகுதியில் உள்ள குர்அனின் பிரதி 2 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. அந்த சாதனையை ஆப்கானியர் தற்போது வென்று முதல் இடத்துக்கு வந்துள்ளனர்.
இதன் மொதத எடை 500 கிலோ கிராம். 218 பக்கங்கள் கொண்ட இந்த பிரதி துணியாலும் சிறந்த காகிதங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. குர்ஆன் பிரதியின் முகப்பு ஆட்டுத் தோலினால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதியை உருவாக்க மொத்தம் 5லட்சம் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.
முகமது சாபிர் காதிரி என்ற ஆப்கானியர் தனது 9 மாணவர்களின் துணை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். குர்ஆனின் உள்ளே எழுத்துக்களிலும் பல உயர்தர வேலைப்பாடுகளை சளைக்காது செய்திருக்கிறார் முகமது சாபிர். 'நான் மேலும் பல வண்ணங்களை சேர்த்து இந்து புனித நூலை மேலும் அழகாக்குவேன்' என்று அந்த பிரதிக்கு பின்னால் நின்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் முகமது சாபிர்.
இந்த பணியை 2009 லேயே தொடங்கியுள்ளார். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்லாமல் 2012 ஆரம்பத்தில் திடீரென இதனை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளார் காதிரி. இந்த குர்ஆனின் பிரதி ஆப்கனின் கலாசார மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1980ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையத்தில் முன்பு 50000 புத்தகங்கள் இருந்ததாம். சோவியத் ரஷ்யாவோடு நடந்த உள் நாட்டு போரில் அவை அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது.
தற்போது இந்த கலாசார மையத்தில் சிறிய நூலகம் இயங்குகிறது. அரசும் பல உதவிகளை செய்து வருகிறது. இந்த கலாசார மையத்தை மேலும் சிறக்கச் செய்வோம் என்கின்றனர் இந்தகுழுவினர்.
சிறந்த சேவையை செய்த இந்த குழுவினரின் முயற்ச்சியை முதலில் பாராட்டுவோம். அதோடு 5 லட்சம் டாலர் செலவு செய்து ஒரு குர்ஆன் பிரதியை உருவாக்கியது ஏற்புடைய செயல்தானா? என்பதையும் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம். 30 வருடங்களாக உள் நாட்டுப் போரில் சின்னா பின்னப் பட்டுக் கிடக்கும் அந்த மக்களின் வறுமையை போக்க இந்த பணத்தை செலவழித்திருக்கக் கூடாதா? கல்வி அறிவில் மிகவும் பின் தங்கியிருக்கும் இந்த மக்களுக்காக அந்த பணத்தை செலவழித்திருந்தால் இறைவன் மேலும் சந்தோஷப்பட்டிருப்பானே! 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுவதாக' பல நபி மொழிகள் நமக்கு இருக்க அந்த ஏழைகளின் வறுமையை போக்கவல்லவா அந்த செல்வந்தர் முயன்றிருக்க வேண்டும்? மற்ற நாடுகளை விட ஆப்கானிஸ்தானத்துக்குத்தான் இன்றைய நிலையில் பொருளாதார உதவி அவசியம் தேவை.
'இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா?'
-குர்ஆன் 23:68
இது போல் பல இடங்களில் இறைவன் இந்த குர்ஆனை மனிதர்கள் சிந்திப்பதற்காக அருளியிருக்கிறோம் என்று கூறுகிறான். செலவு செய்த ஐந்து லட்சம் டாலரில் சிறிய அளவிலேயே குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை பல மொழிகளிலும் வெளியிட்டிருந்தால் ஐந்து லட்சம் மக்களை சென்று அது அடைந்திருக்குமே! வசதியுள்ளவர்கள் இதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------------------
அதே போல் நமது நாட்டை ஆண்ட மொகலாய மன்னன் சாஜஹான் தனது மனைவிக்காக தாஜ்மஹால் என்ற ஒரு சமாதியை பளிங்குக் கற்களால் கட்டினான். அதற்கான இன்றைய மதிப்பை கணக்கிட்டால் நமக்கு மயக்கமே வந்து விடும். இவ்வளவு செலவுகள் செய்து அதுவும் மக்களின் வரிப் பணத்தில் இப்படி ஒரு சமாதி கட்டுவது தேவையா? அந்த பணத்தில் கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் என்றோ நம் நாடு வல்லரசாகியிருக்குமே! சாஜஹான் மட்டும் அல்ல. சேர சோழ பாண்டிய பல்லவ மௌரியப் பேரரசுக்ள் என்று எந்த அரசுமே சாமான்யர்களை கணக்கில் எடுக்கவே இல்லை.
ஒவ்வொரு மனிதனும் மறு உலகில் இறைவனிடம் இரண்டு கேள்விகளுக்கு அவசியம் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒன்று அந்த மனிதன் பொருளை எப்படி சம்பாதித்தான்? என்றும் அடுத்து சம்பாதித்த பொருளை எவ்வாறு செலவு செய்தான் என்றும் இறைவன் கேட்பான் என்பது நபி மொழி. எனவே செல்வந்தர்கள் செலவு செய்வதிலும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.
-குர்ஆன் 2:271
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
30 வருட கால போரில் அந்நாட்டின் கை வினைஞர்களின் திறமை சற்று மடடுப் படுத்தப் பட்டாலும்// கொஞ்சம் ஓவராத் தெரியலை...தாலிபான் குரங்குகளால் நாசமாக்கப்பட்டது என்று சொல்லுங்க!
அன்பின் சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
"உலகிலேயே மிக பெரிய , மிக சிரிய குரான் பிரதிகள்." என்ற தலைப்பில் ஒரு பதிவு கடந்த 2 நாட்களாக தொகுத்து இன்ஷா அல்லாஹ் நாளைக்கு பதிவேற்ற தயார் செய்து கொண்டிருக்கும் வேளையில் தாங்களுடைய இப்பதிவை கண்டு அகமகிழ்ந்தேன்.
வாழ்த்துகள்.
இன்ஷா அல்லாஹ் நாளைக்கு என் பதிவு வெளியாகலாம்.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----
.
//கொஞ்சம் ஓவராத் தெரியலை...தாலிபான் குரங்குகளால் நாசமாக்கப்பட்டது என்று சொல்லுங்க!//
ரஷ்ய குரங்ககள், அமெரிக்க குரங்குகள், பிரிட்டிஷ் குரங்குகள் என்று அப்கானை சிதைத்ததில் பல குரங்குகள் போட்டியிடும். இந்த கூட்டத்தில் தாலிபானையும் ஒரு பங்காகச் சேர்க்கலாம்.
//5 லட்சம் டாலர் செலவு செய்து ஒரு குர்ஆன் பிரதியை உருவாக்கியது ஏற்புடைய செயல்தானா//
இந்தச் சாதனை(?)யைப் பற்றி வாசித்தபோது இதுதான் மனதில் தோன்றியது. சாதனைகள் எப்போதும் மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.
ஸலாம் சகோ
நல்ல தகவல்
நம்ம தமிழ் இஸ்லாமியர்கள் இம்மாதிரி எப்போது இப்படி ஏதாவது சாத்னை செய்வார்களா?
சகோ சுவனப் பிரியன் அது குறித்து பதிவிடுவது எப்போது?.காத்திருக்கிறேன்
நன்றி
அன்பின் வாஞ்சூர் பாய்! வஅலைக்கும் சலாம்!
//"உலகிலேயே மிக பெரிய , மிக சிரிய குரான் பிரதிகள்." என்ற தலைப்பில் ஒரு பதிவு கடந்த 2 நாட்களாக தொகுத்து இன்ஷா அல்லாஹ் நாளைக்கு பதிவேற்ற தயார் செய்து கொண்டிருக்கும் வேளையில் தாங்களுடைய இப்பதிவை கண்டு அகமகிழ்ந்தேன்.
வாழ்த்துகள்.
இன்ஷா அல்லாஹ் நாளைக்கு என் பதிவு வெளியாகலாம்.//
நன்று. உங்கள் பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி!
சகோ ஹூசைனம்மா!
//இந்தச் சாதனை(?)யைப் பற்றி வாசித்தபோது இதுதான் மனதில் தோன்றியது. சாதனைகள் எப்போதும் மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ சார்வாகன்!
//நம்ம தமிழ் இஸ்லாமியர்கள் இம்மாதிரி எப்போது இப்படி ஏதாவது சாத்னை செய்வார்களா?
சகோ சுவனப் பிரியன் அது குறித்து பதிவிடுவது எப்போது?.காத்திருக்கிறேன்
நன்றி//
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. சற்று விளக்கமாக கூறவும்.
வருகைக்கும கருத்துக்கும் நன்றி!
/சற்று விளக்கமாக கூறவும்.
/
salam சகோ சுவனப் பிரியன்,
எப்போது பார்த்தாலும் ஆப்கானிஸ்தான்,சவுதி ..... உள்ளவர்கள் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்றே பதிவிடுகிறீர்கள்.தமிழ்(நாடு) இஸ்லாமியர்களும் மத ரீதியாகவோ அல்லது அறிவியல் போல் ஏதேனும் ஒன்றில் சாதனை செய்து பதிவிட்டால் நலமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான்.
இம்மாதிரி சாதனை பெரிய அல்லது சிறிய குரான் எழுதுவது தமிழர்களால் முடியாதா?
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
நேற்றுதான் எனக்கு ஒருத்தர் அந்த பிரம்ம்ம்ம்ம்ம்ம்மாண்ட குர்ஆன் படங்களை மெயிலில் அனுப்பி இருந்தார். அதை பார்த்துவிட்டு, எனது எட்டு வயது மகள் கேட்ட கேள்வி...
"இதனை எப்படி ஒருத்தர் ஓத முடியும்..?"
.... என்று..!
மாஷாஅல்லாஹ், இந்த சின்ன மூளையில் உள்ள அறிவு கூட இதை தயாரிக்க பணத்தை கொட்டிய அந்த பெரிய மூளைகளிடம் இல்லை என்பதுதான் தற்போதைய பணக்கார முஸ்லிம்களிடம் உள்ள துயரம்..!
நாளை, இந்த மேட்டரை அந்த மெயில் போட்டோக்களுடன் போட்டு அவர்களின் அந்த வெட்டி வீண் செலவை என் பதிவில் குத்திக் கிழிக்கலாம் என்று இருந்தேன்...
அதற்குள், இங்கே நீங்கள்....
//செலவு செய்த ஐந்து லட்சம் டாலரில் சிறிய அளவிலேயே குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை பல மொழிகளிலும் வெளியிட்டிருந்தால் ஐந்து லட்சம் மக்களை சென்று அது அடைந்திருக்குமே! வசதியுள்ளவர்கள் இதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.//
... என்று தெளிவாக இப்படி சொல்லிவட்டதால் எனக்கு வேலை இல்லை. ஜசாக்கலாஹ்க்ஹைர்..!
@ சார்வாகன்...
திரு.சார்வாகன்,
எளிய தமிழில்
தெளிந்த நடையில்
புரியும்படி எழுதப்பட்டுள்ள
இந்த பதிவை
ஒரே ஒருமுறையேனும்
படித்து விட்டு
பின்னூட்டம்
இடுமாறு
தங்களை
சோம்பலுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
சகோ சார்வாகன்!
//எப்போது பார்த்தாலும் ஆப்கானிஸ்தான்,சவுதி ..... உள்ளவர்கள் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்றே பதிவிடுகிறீர்கள்.தமிழ்(நாடு) இஸ்லாமியர்களும் மத ரீதியாகவோ அல்லது அறிவியல் போல் ஏதேனும் ஒன்றில் சாதனை செய்து பதிவிட்டால் நலமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான்.
இம்மாதிரி சாதனை பெரிய அல்லது சிறிய குரான் எழுதுவது தமிழர்களால் முடியாதா?//
மனிதன் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
சாதனை என்பது இடத்துக்கு இடம் மாறுபடும். கடந்த 25 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களிடத்தில் மூடப் பழக்கங்களும் தர்ஹா வணக்கங்களும் மிகைத்து கிட்டத் தட்ட இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாற எத்தனித்தது. இந்த நேரத்தில் ஒரு சில அறிஞர்களின் முயற்ச்சியால் இன்று ஏகத்துவ பிரசாரம் மூலை முடுக்கெல்லாம் தமிழக இஸ்லாமியரிடத்தில் பரவியுள்ளது. முன்பு தவறாக வரதட்சணை வாங்கிய ஒரு முஸ்லிம் இன்று தவறை உணர்ந்து பொது மேடையில் தனது மாமனாரிடம் ஐந்து லட்சம் ஆறு லட்சம் என்று திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இது போன்ற பல நிகழ்ச்சிகள் நாள் தோறும் தமிழகத்தில் நடந்த வண்ணமே உள்ளது. காலகாலமாக இருந்த பழக்கங்களை இஸ்லாம் தடுக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக ஒரு முஸ்லிம் தூக்கி எறிகிறானே அது தமிழத்தைப் பொருத்த வரை சாதனை.
படிப்பிலும் அரசு வேலை வாய்ப்பிலும் கடந்த 20 வருடங்களாகத்தான் தமிழகத்தில் முஸ்லிம்களிடத்தில் ஆர்வம் வந்துள்ளது. இனி நீங்கள் விரும்புவது போல் பல சாதனைகளை தமிழக முஸ்லிம்களும் படைப்பார்கள்.
உலகை பொருத்த வரை எல்லா நாடுகளும் எல்லா இன மக்களும் நேசத்திற்க்குரியவர்களே! ஏனெனில் அனைவரின் மூலப் பிதா ஒருவரே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவன். எனவே எனது சகோதரர்கள் ஒரு சாதனை செய்தால் அதை உலகுக்கு வெளிக்காட்ட வேண்டியது மற்றொரு சகோதரனின் கடமை அல்லவா? எவனாவது ஒரு இஸ்லாமிய பெயர் தாங்கி குண்டு வைத்தால் 'இஸ்லாமிய தீவிரவாதி கைது' என்று தலைப்பிடும் தினமணியும் தின மலரும் இஸ்லாத்துக்கு ஆதரவான எந்த செய்திகளையும் வெளியிடுவது இல்லை.
எனக்கும் தமிழ்ப் பற்று இருக்கிறது. அதற்காக மற்ற மொழிகளையும் மற்ற மொழி பேசுவோரையும் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லையே!
'யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்பது நமது முன்னோர் வாக்கு அல்லவா?
சலாம் சகோ ஆஷிக்!
//மாஷாஅல்லாஹ், இந்த சின்ன மூளையில் உள்ள அறிவு கூட இதை தயாரிக்க பணத்தை கொட்டிய அந்த பெரிய மூளைகளிடம் இல்லை என்பதுதான் தற்போதைய பணக்கார முஸ்லிம்களிடம் உள்ள துயரம்..!//
என்ன செய்வது சகோ. மார்க்கத்தை விளங்கியவர்களும் இது போன்று பணத்தை எந்த உபயோகமும் இல்லாமல் அருங்காட்சி அகத்தில் அமைப்பதில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை. நமது அரசுகள் ஒவ்வொரு தலைவரின் பெயரிலும் மணி மண்டபம் கட்டி கோடிக் கணக்கில் பணத்தை விரயம் செய்வதையும் பார்த்து மனம் வேதனைபடும்.
இப்படி ஒரு சாதனை அவசியமில்லை என்பதற்காகததான் இந்த பதிவே! அந்த சாதனையை ஏன் தமிழர்கள் செய்வதில்லை என்று சார்வாகன் கேட்கிறார். தற்போது விளங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். உண்மையான போற்றத்தக்க சாதனைகளை படித்த நமது இஸ்லாமிய இளைஞர் உலகம் இனி வரும் காலங்களில் சாதிக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
//இவ்வளவு செலவுகள் செய்து அதுவும் மக்களின் வரிப் பணத்தில் இப்படி ஒரு சமாதி கட்டுவது தேவையா?//
நீங்க ஏன் பாபர் மசூதி இடிப்புகளுக்கு பொங்குவதில்லை என்று இப்பதான் புரிகிறது,
ஏற்கனவே இந்துத்வாக்களுக்கு தாஜ்மகாலை அகற்ற குறிதான், உங்களைவிட இன்னும் கொஞ்சம் தீவிரமான வகாபிகளை அவர்கள் துணைக்கு அழைத்தால் காரியம் ஈசியாக முடிந்துவிடும் போல
// 5 லட்சம் டாலர் செலவு செய்து ஒரு குர்ஆன் பிரதியை உருவாக்கியது ஏற்புடைய செயல்தானா? என்பதையும் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம். 30 வருடங்களாக உள் நாட்டுப் போரில் சின்னா பின்னப் பட்டுக் கிடக்கும் அந்த மக்களின் வறுமையை போக்க இந்த பணத்தை செலவழித்திருக்கக் கூடாதா?//
Well Said
கோவி கண்ணன்!
//நீங்க ஏன் பாபர் மசூதி இடிப்புகளுக்கு பொங்குவதில்லை என்று இப்பதான் புரிகிறது,//
பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொங்குவதில்லை என்று உங்களிடம் யார் சொன்னது? அத்வானி வகையறாக்கள் நேரம் குறித்து நிறைவேற்றப்பட்ட காலித் தனத்தை இந்துத்வாவின் கோர முகத்தை இடிப்பு சம்பவத்தை கண்டித்து முன்பு பதிவே எழுதியுள்ளேனே!
//ஏற்கனவே இந்துத்வாக்களுக்கு தாஜ்மகாலை அகற்ற குறிதான், உங்களைவிட இன்னும் கொஞ்சம் தீவிரமான வகாபிகளை அவர்கள் துணைக்கு அழைத்தால் காரியம் ஈசியாக முடிந்துவிடும் போல//
தாஜ் மஹாலை இடிக்கவெல்லாம் வேண்டாம். அங்குள்ள மும்தாஜ் மஹாலின் அடக்கத்தலத்துக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் சிமெண்ட்டாலான கட்டடங்களை மட்டும் நீக்கி விட்டு அவர் அடக்கப்பட்ட இடத்தை மண்ணை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி வேறொரு இடத்தில் மண் தோண்டி புதைத்து விட்டால் தீர்ந்தது பிரச்னை. தாஜ்மஹாலை தொழும் இடமாகவோ அல்லது கல்லூரியாகவோ மாற்றினால் பலருக்கும் உபயோகமாக இருக்கும். சுற்றுலா பயணிகளின் வரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இருக்காது.
Post a Comment