பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!
குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள இடைப்பட்ட படிமங்களின் ஆதாரத்தை விளக்கி இனி பதிவுகள் எழுதப் போகிறேன் என்று சில நாள் முன்பு சார்வாகன் சொன்னார். நானும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் அதைப் பற்றிய அறிவிப்பு எதையும் காணோம். ஆனால் சம்பந்தமில்லாமல் ஜாகிர் நாயக்கையும் பிஜேயையும் சம்பந்தப்படுத்தி காமெடி செய்து பரிணாமவியலின் தவறை மறைக்க பார்க்கும் தந்திரத்தை தற்போது செய்து வருகிறார். சரி அதிலாவது தனது தரப்பு வாதம் நிற்கும்படியான செய்திகளைத் தரப்படாதோ? இனி சார்வாகன் சொல்வதைக் கேட்போம்.
//ஜாகிர நாயக் மீது இபோது முஸ்லிம்களே ஒத்துக் கொள்ளும் இருகுற்றச்சாட்டுகள் உண்டு.
1.குரான் 79.30ல் டஹாஹ என்னும் அரபி சொல்லுக்கு இலாத த்வறான பொருள் நெருப்புக் கோழி முட்டை என்று சொல்லி உலகம் நெருப்புக் கோழி முட்டை போல் இருக்கிறது என பொய் சொன்னார்.
http://satyagni.com/science-zakir/
zakir Naik says:
The earth is not exactly round like a ball, but geo-spherical i.e. it is flattened at the poles. The following verse contains a description of the earth’s shape “And the earth, moreover, Hath He made egg shaped.” [Al-Qur'aan 79:30]
The Arabic word for egg here is dahaha, which means an ostrich-egg. The shape of an ostrich-egg resembles the geo-spherical shape of the earth. Thus the Qur’aan correctly describes the shape of the earth, though the prevalent notion when the Qur’aan was revealed was that the earth is flat// - சார்வாகன்!
இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48
'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30
'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும். ஜாகிர் நாயக்கும் இதை ஒத்துக் கொள்கிறார்.
மேலதிக விபரமாக தனது சொந்த விளக்கமாகத்தான் 'முட்டை' வடிவிலானது என்ற கருத்தை வைக்கிறார் ஜாகிர் நாயக். இவர் ஒரு டாக்டர். அறிவியல் அறிஞர் கிடையாது. எனவே இவரது கருத்தில் தவறும் இருக்கலாம்.
'சார்பியல்' தத்துவத்தை சொன்னபோது ஐன்ஸ்டீனே தவறிழைக்கவில்லையா? 1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் 'தான் செய்த மாபெரும் தவறு ' என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதி பலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!
ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஜாகிர் நாயக்குக்கும் வரலாம். பிஜேக்கு கூட வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.
'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஹாக்கிங்!
நான் போன பதிவில் கூறியது போல் ஆய்வுகளில் தவறுகள் வரலாம் அது இயற்கை. அதுதான் ஜாகிர் நாயக்கிடம் நடந்தது. ஆனால் பரிணாமவியலை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக மனிதனின் மண்டை ஓட்டையும் குரங்கின் தாடையையும் ஒட்ட வைத்து பற்களுக்கு சாயங்களை பூசி 40 வருடம் அறிவியல் உலகை ஏமாற்றியிருக்கின்றனர் பரிணாமவியலார். ஒரு சாதாரண படிப்பறிவில்லாதவனை ஈஸியாக புரியாத மொழியில் பேசி சம்மதிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஆய்வுக் கூடத்தில் அறிவியல் அறிஞரகள் நிறைந்த சபையில் 40 வருடம் இதை மறைக்க வேண்டும் என்றால் ஒரு பெரும் குழுவே வேலை செய்திருக்க வேண்டும். புதிய படிமங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பரிணாமவியல் உண்மைதான் என்று இன்று வரை சாதித்துக் கொண்டிருப்பர்.
http://en.wikipedia.org/wiki/Ultimate_fate_of_the_universe
http://simple.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time
------------------------------------------------------
//2. ஜாகிர் நாயக், பி.ஜேவின் " இயேசு இறைமகான என்னும் புத்த்கத்தை அப்படியே த்னது சொந்த சரக்காக் பி.ஜே விடம் அனௌமதி பெறாமல் ஆங்கிலத்தில் எழுதி விட்டார்
இப்போது ஜாகிர் நாயக்கின் மோசடிகள், தவறால் குரான் தவறாகி விடும் என்றால், பில்ட் டௌன் மோசடியால் பரிணாமமும் த்வறாகி விடலாம்
நன்றி//- சார்வாகன்
பி.ஜே யின் புத்தகத்தை அனுமதி பெறாமல் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் மொழி பெய்ர்த்தால் அது அவர்கள் இருவருக்குமிடையில் உள்ள காப்பீட்டு பிரச்னை. பிஜே தனது பதிவுகளை இவ்வாறு காப்பி செய்தால் அதை அதிகம் பெரிதுபடுத்துவதும் இல்லை. சவுதி அரசே கூட பிஜேயின் பல புத்தகங்களை அரபியிலும் ஆங்கிலத்திலும் இன்னும் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளது. அதற்கு கூட எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் இலவசமாகவே மொழி பெயர்க்க அனுமதி கொடுத்தார். ஜாகிர் நாயக் ஏசுவின் வாழ்வை தவறாக விமர்சித்து இருந்தால்தான் அல்லது பொய் சொல்லியிருந்தால்தான் அதை பிரச்னையாக்க முடியும்.
இதனால் பில்ட் டவுன் மோசடியை நியாயப்படுத்தப் பார்க்கிறார். என்ன ஆனது உங்களுக்கு சார்வாகன் உரிக்க உரிக்க வெங்காயம் போல் சென்று கொண்டிருக்கிறதே உங்கள் அனைத்து வாதங்களும்? :-)
---------------------------------------------------------
பிரபஞ்சம் விரிவடைதலைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவை மேலதிக விபரமாக தருகிறேன்.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?
இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30
'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.'
-குர்ஆன் 51:47
'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-குர்ஆன் 15:19
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-குர்ஆன் 13:3
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
-குர்ஆன் 55:10
'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.
நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.
பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.
பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.
உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா
!
முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன. இதனை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.
ஹாக்கிங் கூறுகிறார்:
'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.'
-எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)
“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)
உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.
மேலும் விபரங்கள் அறிய...
http://en.wikipedia.org/wiki/Universe
29 comments:
//முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும்//
படிப்பறிவற்ற ஒருத்தர் கிட்ட் எப்படி இத்தனை கோடி மக்கள் ஏமாந்தாங்க?
ஜெய்சங்கர்!
//படிப்பறிவற்ற ஒருத்தர் கிட்ட் எப்படி இத்தனை கோடி மக்கள் ஏமாந்தாங்க? //
அது அந்த மனிதரிடம் உள்ள உண்மை. அவர்கள் யாரும் ஏமாறவில்லை. குழப்பமில்லாத சரியான வழியை அத்தனை கோடி மக்களும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இத்தனை அறிவியல் அறிஞர்களின் சோதனை பல தவறுகள் வந்தும் குர்ஆனின் வார்த்தைகளில் தவறு வராதது ஒன்றே எங்களின் நம்பிக்கையை மேலும் வலுவாக்குகிறது.
அதே சமயம் உங்களின் சட்டங்கள் என்ன என்பதையும் அது எந்த அளவு உங்களவர்களாலேயே விமர்சிக்கப்படுகிறது என்பதையும் நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். :-)
சலாம் சகோ.சுவனப்பிரியன்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற பாடலை சார்வாகன் பதிவிடுகிறார்..அந்த பாடலையே பரிணாமத்திற்கு நிரூபணமாக காட்ட முடியாதா..??என்கிறார் பின்னூட்டத்தில் ஒருவர்..அதற்கு சார்வாகன்
//இப்பாடல் போல் இன்னொரு கருத்துள்ள ஆடலுடன் பாடல் நாங்கள் ஏற்கும் வண்ணம் கொண்டுவர முடியுமா?
ஆகவே இதுவே நிரூபணம்//
என்ற அற்புதமான தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்...இதைவிட பரிணாம வளர்ச்சியாக "மாற்றான்" படத்தின் இரண்டு மனிதருக்கு ஒரு இதயம் என்கிற ஆதாரத்தையும் குறிப்பிடுவார் போல...பரிணாம நிரூபணம் இப்போது இப்படி சென்று கொண்டு இருக்கிறது..
"பரிணாமம் என்றுமே பரிதாபமே"
நன்றியுடன்
நாகூர் மீரான்
சலாம் சகோ நாகூர் மீரான்!
//"பரிணாமம் என்றுமே பரிதாபமே"//
அவர் சினிமாக்களையே ஆதாரமாக கொடுத்துக் கொண்டிருக்கட்டும். சினிமாத் துறையிலிருந்தே மூன்று முதல்வர்களை கொண்டு வந்தவனல்லவா தமிழன். :-)
//சினிமாத் துறையிலிருந்தே மூன்று முதல்வர்களை கொண்டு வந்தவனல்லவா தமிழன். :-)//
நாலாவதுக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறதே. :-))
//நாலாவதுக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறதே. :-)) //
அடுத்த முதல்வர் விஜயகாந்தா! தலை விதி இதெல்லாம். :-(
அஸ்ஸலாமு அலைக்கும்.
பட்டுகோட்டைக்கும் வழி கேட்டா கொட்டைப்பாக்கு என்ன விலைன்னு கேப்பாய்ங்க :)
அபு நிஹான்
சார்வாகன் பாவம். அவர் மட்டுமல்ல. இந்த இக்பால், அவருக்கு சப்பைக் கட்டும் நபி வழி(?!), இன்னும் பலரும் ஜெயிக்காத கட்சிக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும் என்ற கோட்பாடுதான்.
சு.பி.சுவாமிகள்,
//உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா
!//
உங்களுக்கு பூமிக்கும், பிரபஞ்சத்துக்குமே வித்தியாசம் தெரியலையே :-))
பூமியை விரித்தான் என்றால் அதான் பிரபஞ்சத்தை விரித்தது என சொல்லிக்கொண்டு ,இதில் சார்வாகனை வேறு குறை சொல்லிக்கிட்டு :-))
உங்களை மறுபடியும் எலிமெண்டரி ஸ்கூலில் சேர்த்து பூமி ,பிரபஞ்சம் என்றால் என்னனு பாடம் எடுக்கணும் போல இருக்கே :-))
எதுக்கு அண்ணாச்சி இம்புட்டு விசனம்?
அல்லாத்தையும் படச்சது மட்டுமல்ல..இந்த எழவு பரிணாமத்தையும் படச்சது நம்ம முனியாண்டி என்று அடித்து சொல்லிவிடுங்கள்...ஒரு பயலும் பேசமாட்டான்.
\\ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஜாகிர் நாயக்குக்கும் வரலாம். பிஜேக்கு கூட வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.\\ தவறு வராத இறைவேதத்தின்படி, அதனை சரியாகப் புரிந்துகொண்ட ஒருத்தர் பேசும்போதும் தவறு வரக்கூடாது. அப்படிப் பார்த்தால் ஜாகிர் நாயக் ஒரு டுபாக்கூர். இன்னைக்கு ஒன்னு சொல்லிட்டு நாளைக்கே நான் சாதா மனுஷன் தப்பு வரும் என்னும் ஒருத்தரை ஒருபோதும் நம்புவதற்கில்லை இவர் ஐந்து நிமிஷம் பேசியல் இருப்பத்தைது கப்சாக்கள் இருந்த ஒரு வீடியோவை பார்க்க நேரிட்டது. இவருக்கு அபார ஞாபக சக்தி, அதைப் பார்த்து ஏமாந்து போனேன், ஆனால் விடுவதெல்லாம் கப்சா.
\\பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா! \\ பூமி உப்புதுன்னு எங்கே படிச்சீங்க சகோ? பிரபஞ்சம் உப்புத்து, ஆனா சோப்புக் குமிழின்னு யார் சொன்னது? அப்படிச் சொன்னா பிரபஞ்சத்துக்கு எல்லை உனுன்னு ஆகிவிடும், தற்போதைய கணக்குப் படி பிரபஞ்சத்துக்கு எல்லையே இல்லை. [No boundary for space]. பூமியை விரித்தான் என்பதை, ஹப்பிள் பிரபஞ்சம் விரிவடைவதாகச் சொன்னதோடு எப்படி ஒப்பிட முடியும் சகோ? விரித்தான் என்ற வார்த்தை எங்கே வந்தாலும் அது இதுதான் என்பீர்களா?
வவ்வால்!
//உங்களுக்கு பூமிக்கும், பிரபஞ்சத்துக்குமே வித்தியாசம் தெரியலையே :-))
பூமியை விரித்தான் என்றால் அதான் பிரபஞ்சத்தை விரித்தது என சொல்லிக்கொண்டு ,இதில் சார்வாகனை வேறு குறை சொல்லிக்கிட்டு :-))
உங்களை மறுபடியும் எலிமெண்டரி ஸ்கூலில் சேர்த்து பூமி ,பிரபஞ்சம் என்றால் என்னனு பாடம் எடுக்கணும் போல இருக்கே :-))//
இது ஏற்கெனவே நாம் விவாதித்து தீர்வு கண்ட விஷயமாயிற்றே! இப்போ உங்களைத்தான் எலிமெண்டரி ஸ்கூலில் சேர்க்க வேண்டும. :-)
ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !
பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5
அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continentel Movement) தூண்டியும் வருகிறது !
http://jayabarathan.wordpress.com/page/27/?ca
http://www.expanding-earth.org/
பிரபஞ்சம் விரிவடைந்தால் பிரபஞ்சத்துக்குள் உள்ள நமது பூமியும் விரிவடைவதாகவே அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சகோ ஜெயதேவதாஸ்!
//தவறு வராத இறைவேதத்தின்படி, அதனை சரியாகப் புரிந்துகொண்ட ஒருத்தர் பேசும்போதும் தவறு வரக்கூடாது. அப்படிப் பார்த்தால் ஜாகிர் நாயக் ஒரு டுபாக்கூர்.//
வேதத்தில் விளக்கம் சரியாகவே இருக்கிறது. அதை விளங்கிய மனிதன் தனது அறிவு குறைவால் தவறாக விளங்கினால் அதற்கு வேதம் எவ்வாறு பொருப்பாக முடியும்?
// பூமி உப்புதுன்னு எங்கே படிச்சீங்க சகோ? பிரபஞ்சம் உப்புத்து, ஆனா சோப்புக் குமிழின்னு யார் சொன்னது? அப்படிச் சொன்னா பிரபஞ்சத்துக்கு எல்லை உனுன்னு ஆகிவிடும், தற்போதைய கணக்குப் படி பிரபஞ்சத்துக்கு எல்லையே இல்லை. [No boundary for space]. //
வவ்வாலுக்கு கொடுத்த பின்னூட்டத்தை பார்வையிடவும்.
//விரித்தான் என்ற வார்த்தை எங்கே வந்தாலும் அது இதுதான் என்பீர்களா?//
இடம், பொருள், ஏவல் இந்த மூன்றையும் அனுசரித்தே ஒரு வார்த்தையின் உண்மையான பொருளை கண்டு கொள்ள முடியும்.
\\ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5
அங்குலம் வீதம் நீள்கிறது ! \\
அய்யய்யோ, இதென்ன புதுக் கதையா இருக்கு??!! சரி அப்படி உப்புவதற்க்குத் தேவையான பொருள் எங்கே இருந்து வந்துச்சாம்?
பிரபஞ்சம் விரிவடைவதை தப்பா புரிஞ்சிருக்கீங்க சகோ.
பிரபஞ்சம் விரிவடைகிறதுன்னா, அதில்ல வஸ்துக்கள் எல்லாம் உப்புதுன்னு அர்த்தமல்ல, அதுங்களுக்கிடையே உள்ள தூரம் அதிகமாகிகிட்டே போகுதுன்னு அர்த்தம், வஸ்துக்கள் அப்படியேதான் இருக்கும்!!
சகோ துரை டேனியல்!
//சார்வாகன் பாவம். அவர் மட்டுமல்ல. இந்த இக்பால், அவருக்கு சப்பைக் கட்டும் நபி வழி(?!), இன்னும் பலரும் ஜெயிக்காத கட்சிக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும் என்ற கோட்பாடுதான்.//
//நபி வழி// :-)
முஸ்லிம்களிலும் நாத்திகர்கள் உள்ளார்கள் என்பதை காட்டுவதற்காக 'நபி வழியில்' என்ற போலி பெயரில் எழுதும் கிறுக்கனுக்கு சொல்லிக் கொள்வது:
நீங்கள் எவ்வளவுதான் முஸ்லிம் பெயரில் மறைந்து நின்று எழுதினாலும் எழுதும் எழுத்து காட்டி கொடுத்து விடும். :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ துரை டேனியல்!
வஅலைக்கும் சலாம் சகோ அபு நிஹான்!
//பட்டுகோட்டைக்கும் வழி கேட்டா கொட்டைப்பாக்கு என்ன விலைன்னு கேப்பாய்ங்க :)//
அதே...அதே....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
\\பிரபஞ்சம் விரிவடைந்தால் பிரபஞ்சத்துக்குள் உள்ள நமது பூமியும் விரிவடைவதாகவே அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\\
எந்த அறிவியல் அறிஞர் என்று பேர் சொல்லி, லிங்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும் சகோ!! பிரபஞ்சம் விரிவடைந்தால் அதில் உள்ளவையும் உப்புவதர்க்கு நீங்கள் என்ன லென்ஸ் வைத்து பார்ப்பது போல என்று நினைத்துக் கொண்டீர்களா? அப்போதுதான் எல்லாம் உப்பும். பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதற்கான நீங்கள் புரிந்து கொண்ட அர்த்தம் சரியானது அல்ல. பிரபஞ்சம் விரிவடைகிறது என்றால் வெளி [space ] மட்டும் தான் விரிவடைகிறதே தவிர அதிலுல்ல பொருட்கள் அப்படியேதான் இருக்கும். பெரிசாவோ சிரிசாவோ ஆகாது.
அடுத்து பூமி விரிவடைகிறது என்கிறீர்கள், அப்படியானால் அதற்க்கான பொருள் எங்கேயிருந்து வந்தது என்று கூற முடியுமா?
சு.பி.சுவாமிகள்,
//பிரபஞ்சம் விரிவடைந்தால் பிரபஞ்சத்துக்குள் உள்ள நமது பூமியும் விரிவடைவதாகவே அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.//
யார் அந்த அறிவியல் அறிஞர்கள்?
முன்னரும் நான் கேட்டது தான் பூமி விரிஞ்சுகிட்டே போனது என்றால் மற்ற கிரகங்கள் கூட மோதிக்கும்னு, ஏன் நிலா, சூரியன் என போய் தொட்டு விடாதா?
நெபுலா கொள்கையே புரியலை, வாயு கோளமாக பெரிதாக இருந்த பூமி சுருங்கி தான் சிறிதாக உருவாச்சு.
நல்லா படியும்.
நீர் சொன்னா போல பூமி விரிஞ்சுட்டே போனால் இன்னேரம் நிலாவில் போய் முட்டி இருக்க வேணாமோ?
பூமி விரிவது உண்மையானால் இன்று 1 ஏக்கர் வைத்திருப்பவன் சில ஆண்டுகளில் 10 ஏக்கராக விரிவாகாமல் போனது ஏன்?
பூமி விரியும் போது உங்கள் வீடு விரிந்து ,சுவர்கள் தனி தனியாக போய்விடாதா?
என்ன சுவாமிகளே கதை சொன்னாலும் லாஜிக்கோடு சொல்லுங்கள் :-))
//பூமி விரிவது உண்மையானால் இன்று 1 ஏக்கர் வைத்திருப்பவன் சில ஆண்டுகளில் 10 ஏக்கராக விரிவாகாமல் போனது ஏன்?
பூமி விரியும் போது உங்கள் வீடு விரிந்து ,சுவர்கள் தனி தனியாக போய்விடாதா?
என்ன சுவாமிகளே கதை சொன்னாலும் லாஜிக்கோடு சொல்லுங்கள் :-))//
ஹா...ஹா...எனக்கும் இந்த சந்தேகங்கள் வருவதுண்டு.
இதை நான சொல்லவில்லை ஐயா! நீங்கள் நம்பும் அறிவியல் சொல்கிறது.
டாப்ளர் தத்துவம்' என்ன என்பதை விளங்கியிருந்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். டாப்ளர் தத்துவம் என்பது ஒளியுடன் சம்பந்தப்பட்டதாகும. இரயில் என்ஜினின் விசில் சத்தத்தை இதற்கு எளிமையாக விளக்க உதாரணமாக எடுத்துக் கொள்வோம். வழியோரம் நின்றிருக்கும் ஒருவரை நோக்கி இரயில் வண்டி வரும்போது அதன் விசில் சத்தம் சாதாரண நிலையிலிருந்து அசாதாரணமாகக் கூடுவதை அவரால் புரிந்து கொள்ள முடியும். இதைப் போன்று அந்த இரயில் வண்டி அவரைத் தாண்டி செல்லும் போது விசில் சத்தம் படிப்படியாகக் குறையாமல் திடீர் எனக் குறைந்து விடுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.
ஒலி அலைகளுக்குரிய இந்த இயற்பியல் பண்பு 'ஒளி' அலைகளுக்கும் பொருந்தும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. நிறமாலை நோக்கியில் தென்படும் காட்சிகளுக்கு டாப்ளர் விளைவை பொருத்திப் பார்த்தார்கள்.
இங்கு அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நெருங்கி வரவில்லை. அதற்கு மாறாக பூமியை விட்டு விலகிச் செல்கிறது. இதனை இந்த சோதனையின் மூலம் நிரூபித்தனர். காலக்சிகள் பூமியை விட்டு விலகிச் செல்வதால் பூமிக்கும் அந்த காலக்சிகளுக்கும் இடையிலுள்ள தூரம் விரிவடைந்து செல்வதால் அதன் ஒளிக் கற்றைகள் நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது. அறிவியல் அறிஞர்கள் ஒளிக் கற்றைகளின் இந்த இயற்பியல் பண்பை 'செந்நிறப் பெயர்ச்சி' (red shift) எனக் கூறுகிறார்கள்.
சென்ற நூற்றாண்டில் திறமை மிக்க அறிவியல் நிபுணராம் 'எட்வின் ஹிப்பிள்' அவர்களின் இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் அறிவியல் புரட்சியைத் தோற்றுவித்த கண்டுபிடிப்பாகும்.
http://en.wikipedia.org/wiki/Doppler_effect
விரிவாக விளங்கிக் கொள்ள இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
http://jayabarathan.wordpress.com/2008/05/09/katturai28/
//4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன்// -jayabharathan
சிறந்த அறிவியல் ஆராய்ச்சியளரான நம்மோடு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் திரு ஜெயபாரதன் பூமியின் மாற்றங்களை கொடுக்கும் தகவல் இது. இதை என்னாலும் நம்ப முடியவில்லை. ஆனால் அறிவியல் இவ்வாறு பூமி முதற்கொண்டு அனைத்து கோள்களும் விரிவடைகின்றன என்கிறது. என்னை பொறுத்த வரை எந்த அளவு விரிகிறதோ அதே அளவு சுருங்கவும் செய்கிறது என நினைக்கிறேன். பிக் பேங் தியரியே கோள்கள் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒழுங்கான நிலைக்கு வந்ததாக சொல்கிறது. இது கோளஙகள் முன்பு விரிவடைந்தனாலேயே மோதல்கள் உண்டானது. தற்போதய விரிவாக்கம் என்பது புவியீர்ப்பு விசையாகவும் இருக்கலாம். இவை எல்லாம் எனது கணிப்புகளே!
நமது அறிவு பூமி விரிவடைவதை ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அறிவியல் ஒத்துக் கொள்கிறது. குர்ஆனும் ஒத்துக் கொள்கிறது. இப்போது நாம் எந்த நிலையை எடுப்பது? :-)
பேசாம குரான் சொல்லுதுன்னு ஒரே வரியோட போயிடலாம், எதுக்கு இந்த வேண்டாத வேலை? அறிவியலை காமடி பீசாக்கிட்டீன்களே சுவனம்.................:((
//பேசாம குரான் சொல்லுதுன்னு ஒரே வரியோட போயிடலாம், எதுக்கு இந்த வேண்டாத வேலை? அறிவியலை காமடி பீசாக்கிட்டீன்களே சுவனம்.................:((//
ஹி..ஹி...நான் வைத்த வாதங்கள் அனைத்தும் அறிவியல் அறிஞர்கள் வைத்த வாதங்களே! அவர்களை காமெடியாக்குவதில் உங்களுக்கு அலாதிபிரியம் என்றால் அதை பற்றி நான் சொல்வதற்க்கொன்றுமில்லை. :-)
பூமியின் விரிவாக்கம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளக்ககும் காணொளிகளும் அறிவியல் கட்டுரைகளும்.
http://www.youtube.com/watch?v=7kL7qDeI05U
http://www.youtube.com/watch?v=nfgkm0eBGsc
There are 3 forms of the expanding earth hypothesis.
1. Earth's mass has remained constant, and thus the gravitational pull at the surface has decreased over time;
2. Earth's mass has grown with the volume in such a way that the surface gravity has remained constant;
3. Earth's gravity at its surface has increased over time, in line with its hypothesized growing mass and volume;
The late Australian geologist S. Warren Carey suggested expansion in the 1950s and 60s, before the development of plate tectonics provided the generally accepted explanation of the movement of continents.[1] The remaining proponents after the 1970s are mainly inspired by Carey's ideas.[1]
http://en.wikipedia.org/wiki/Expanding_Earth
http://www.miraclesofthequran.com/scientific_98.html
இது ஜெய தேவ தாஸுக்கு!
இன்னும் ஆதாரம் வேண்டுமானாலும் லிங்க் தருகிறேன்.
சு.பி.சுவாமிகள்,
// டாப்ளர் தத்துவம் என்பது ஒளியுடன் சம்பந்தப்பட்டதாகும. //
டாப்ளர் தத்துவம் என்னனே தெரியாமல் இம்மாம் பெரிய புழுகா?
அது ஒலி (sound) பற்றியது. ஆனால் ஒலி போல அலைவரிசையில் வேறுபாடு இருக்கும் என ஒளிக்கு உதாரணம் காட்டத்த்ஆன்ன் டாப்ளர் விளைவினை சொன்னார்கள், அதனால் டாப்ளர் விளைவு ஒளிக்கு தொடர்புடையது என எடுத்துக்கொள்ளக்கூடாது.ஆனால் அனைத்து அலைவரிசைக்கும் அத்தகைய உதாரணம் சொல்ல முடியும் என சொல்கிறார்கள் ,எனவே அது ஒளியோடு தொடர்புடைய கண்டுபிடிப்பு என சொல்வது எப்படி சரியாகும்.
மேலும் அப்பேரண்ட் எபெக்ட் என்று தான் சொல்கிறார், அதாவது ஒரு ஒலி நகர்வதை கேட்பவருக்கு பிட்ச் அதிகமாவது போல இருக்கும், ஆனால் ஒலியின் ஒரிஜினல் சத்தம் அதே அளவே இருக்கும்.
டாப்ளர் விளைவினை தவறான பார்வையில் புரிந்துக்கொண்டுள்ளதால் சொன்னது.
ரெட் ஷிஃப்ட், டாப்ளர் விளைவு எல்லாம் பிரபஞ்சம் நம்மை விட்டு விலகுவதாக சொல்வதற்கு அதை வைத்து எப்படி பூமி விரிவடைகிறது என சொல்கிறீர்கள்?
//While suggested historically, since the recognition of plate tectonics in the 1970s, scientific consensus has rejected any expansion or contraction of the Earth.//
நீங்கள் கொடுத்த விக்கி சுட்டியில் ,பூமி விரிவடைவதை அறிவியல் உலகம் மறுத்துவிட்டது ,ஆனால் ஹைப்போதீசிஸ் ஆக சொல்கிறார்கள் என சொல்லிவிட்டார்களே. ஹைப்போதீசிஸ் என்றால் ஆய்வு மூலம் நிறுபிக்கப்படாத ஒரு எடுகோள் அவ்வளவே.
பூமி தட்டையானது என்பது போல. எனவே அதனை அறிவியல் என சொல்லிக்கொண்டு அலைவது ஏன்?
ஆக மொத்தம் குரான் சொல்லிவிட்டது என கட்டுக்கதைகளை எல்லாம் அறிவியல் என ஆக்க துடிக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது :-))
-----------
பூமி என குரானில் சொன்னதை எப்படி பிரபஞ்சம் என சொல்கிறீர்கள் எனக்கேட்டேன் ஆனால் அதனை அப்படியே அம்போவென விட்டு விட்டீர்களே :-))
பூமி தனி சொல், பிரபஞ்சம் தனி சொல்.
வவ்வால் என சொன்னால் அது வவ்வாலை தான் குறிக்கும் சுவனப்பிரியன்னை குறிக்காது :-))
-------------------
ஜயபாரதன் என்ன சொன்னார் என தெரியவில்லை, ஆனால் அவர் சொன்ன பூமியின் விட்டம் விரிவடைவது , பூமி என துகள்கள், வாயூக்கள் என நெபுலாவில் இருந்து சிதறி திறண்ட போது ஏற்பட்ட அளவு பெரிதானத்ஐ குறிக்கும் , பின்னர் வாயுக்கோளமாக இருந்த பூமி பந்து அனைத்தையும் திரட்டி குளிரும் போது அதன் விட்டம் குறைந்து இன்று உள்ள அளவுக்கு வந்தது.
எனவே அதிக மாஸ் திறண்டதும் பூமியின் விட்டம் குறைந்தது என்ற பகுதியை ஏன் நீங்கள் மறைத்தீர்கள் ?
எனவே பூமியின் விட்டம் இன்று உள்ள நிலைக்கு வந்த பின் பல மில்லியன் ஆண்டுகளாக இதே அளவில் உள்ளது ,கூடவும் இல்லை குறையவும் இல்லை.
எனவே பூமி விரிவடைகிறது என்ற கதைக்கு கதம்...கதம்!
-------------------------
வவ்வால்!
//எனவே பூமியின் விட்டம் இன்று உள்ள நிலைக்கு வந்த பின் பல மில்லியன் ஆண்டுகளாக இதே அளவில் உள்ளது ,கூடவும் இல்லை குறையவும் இல்லை.//
அந்த வசனத்திற்கு பின்னால் வரும் வசனங்களை சிறிது ஆராய்வோம்.
'இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.மலைகளை முளைகளாக நாட்டினான்'
-குர்ஆன் 79:30,31,32
இந்த வசனம் பிரபஞ்சம் உருவாக்கும் போது கோள்களின் நிலையை விளக்குகிறது. இதன்படி பூமியை விரிவாக்கம் செய்து அதில் உயிரினங்கள் வாழ தண்ணீரையும் ஏற்படுத்தி உயிரினங்கள் சாப்பிட மேய்ச்சல் நிலங்களையும் உருவாக்குவதாக வருகிறது. பூமியின் தட்டுக்கள் நகர்ந்து விடாமல் இருக்க மலைகளை முளைகளாக அடித்து நிலை நிறுத்தியதாக இந்த வசனம் சொல்கிறது. இதன்படி முன்பு பூமி விரிவடைந்தை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். அறிவியல் ஆய்வுகளும் அதைத்தான் உறுதி செய்கிறது. இதன் பிந்திய வசனங்களை ஆழமாக படித்திருந்தால் இவ்வளவு குழப்பம் வந்திருக்காது. தற்போது வவ்வாலும் ஒத்துக் கொண்டாகி விட்டது. இதைத்தானே குர்ஆனும் சொல்கிறது!
மேலும் 'பூமியை விரித்தான்' என்று இறந்த காலத்தில்தான் இறைவனும் குறிப்பிடுகிறான்.
வவ்வாலிடம் தடுமாற்றம் வரலாம்: சுவனப்பிரியனிடமும் தடுமாற்றம் வரலாம். குர்ஆனில் வராது. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சுவனம், நான் பி.ஜே. வீடியோக்களைப் பார்த்த பொது அதில் இயற்பியல் தெரிஞ்ச ஆளுங்க பேசினாங்க consistent ஆகா இருந்தது. எனவே நீங்க எழுதுவதற்கு முன்னாடி அந்த மாதிரி ஆளுங்ககிட்ட கேட்டு முழுசா தெரிஞ்சுகிட்டு அப்புறம் எழுதுவது சிறந்தது. அவங்க எப்படி பொருத்தமா சொல்லனும்னு சொல்லிடுவாங்க, அப்புறம் பிரச்சினையே வராது. இங்க நீங்க எழுதியிருப்பதில் நிறைய கேப் இருக்கு, மீண்டும் மீண்டும் எதை எதையோ போட்டு பூசி மெழுகுறீங்க. குரான் பெர்பெக்ட் என்னும் பட்சத்தில் அறிவியலிடம் இருந்து செர்டிபிகேட் வேணும்னு எதுக்கு போராடிகிட்டு இருக்கீங்கன்னுதான் தெரியலை.
\\1. Earth's mass has remained constant, and thus the gravitational pull at the surface has decreased over time;
2. Earth's mass has grown with the volume in such a way that the surface gravity has remained constant;
3. Earth's gravity at its surface has increased over time, in line with its hypothesized growing mass and volume;\\
நீங்க குடுத்த மூன்று ஹபாதேசிசும் ஒன்றுக் கொன்று முரணானவை. [சரியா நீங்களே படிச்சுப் பாருங்க புரியும்]. ஆரம்பத்தில் இருந்தே நிறைய தப்பு தப்பா சொல்லிக்கிட்டு வந்திருக்கீங்க பலர் சுட்டிக் காட்டிய பின்னரும் நான் பிடிச்ச முயலுக்கு மூனே கால்தான் என்று நின்று கொண்டிருக்கிறீர்கள். நான் நன்றாகச் சமாளிக்கிறேன்னு நீங்க மனசுக்குள்ள நினைச்சாலும் உங்க நம்பத் தன்மையை இது மோசமாக டேமேஜ் செய்துவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
பூமியோட சைஸு பெரிசாயிகிட்டே போயிருக்குன்னு சொல்லியிருக்கீங்க, அது அறிவியல் உண்மை இல்லை.
டாப்ளர் விளைவை ஒளிக்கு பயன்படுத்தி கேளக்ஷிகளுக்கிடையே உள்ள தூரம் அதிகரிக்க்த்துக் கொண்டே போகுதுன்னுதான் நிறுவ முடியுமே தவிர கேளக்ஷிகளே உப்பிகிட்டு போகுதுன்னு நிரூபிக்க முடியாது, அப்படி யாரும் சொல்லவுமில்லை.
பூமியை விரித்தான் என்று வரும் வசனத்தை பிரபஞ்சம் விரிவடைவதற்கு தூக்கி போட்டுகிட்டீங்க, இது அநியாயம். ஒருத்தன் கஷ்டப் பட்டு கண்டுபிடிக்கிற வரைக்கும் ஊமையாய் இருந்திட்டு, உண்மை வெளியே தெரிஞ்சதுக்கப்புறம் இதுதான் எங்களுக்கு முன்னரே தெரியுமே குர்ஆனில் இருக்கே என்பது பித்தலாட்டம், தயவு பண்ணி அதைச் செய்யாதீங்க.
சு.பி.சுவாமிகள்,
//ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !
பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5
அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continentel Movement) தூண்டியும் வருகிறது !//
ஓய்வில்லாமல் பூமி உப்பி வருதுன்னு சொல்லிட்டு இப்போ,
//மேலும் 'பூமியை விரித்தான்' என்று இறந்த காலத்தில்தான் இறைவனும் குறிப்பிடுகிறான்.//
தேவைப்பட்டா பூமி விரியுதுன்னு சொல்லிக்க ஜயபாரதன் சொன்னதை சொல்வீங்க, இல்லைனா ,மலைகளை ஆப்புகளாக அடித்து நிலை நிறுத்தியாச்சுன்னு சொல்வீங்க, ஜயபாரதன் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் பூமிவியுதுன்னு சொன்னதை எடுத்துப்போட்டிங்களே, அப்போ அல்லா பூமி விரிவதை நிறுத்தியாச்சு இறந்தகாலத்தில் சொல்லப்பட்டது என்பதை என்னவென்பது :-))
எங்கே இப்போ சொல்லுங்க்க , பூமி விரிவதை நிறுத்தியாச்சா இல்லை விரிவடையுதா?
எதாவது ஒரு நிலைப்பாட்டில் இருக்கணும் சுவாமிகளே :-))
ஜெயதேவதாஸ்!
//சுவனம், நான் பி.ஜே. வீடியோக்களைப் பார்த்த பொது அதில் இயற்பியல் தெரிஞ்ச ஆளுங்க பேசினாங்க consistent ஆகா இருந்தது. எனவே நீங்க எழுதுவதற்கு முன்னாடி அந்த மாதிரி ஆளுங்ககிட்ட கேட்டு முழுசா தெரிஞ்சுகிட்டு அப்புறம் எழுதுவது சிறந்தது.//
தவறுகள் யாருக்கும் வரலாம். பிஜே கூட முன்பு சொன்ன கருத்துக்கள் தவறென்று தெரியும் பட்சத்தில் திருத்திக் கொண்டுள்ளார். மனிதன் அன்றிலிருந்து தேடுதலில் உள்ளான். மற்றவர்களிடம் கேட்பதை விட சுயமாக சிந்தித்தால் இன்னும் தெளிவாக நாம் புரிந்து கொள்ளலாம். பல வேலைகளுக்கு நடுவே இந்த பதிவுகளையும் எழுதுகிறோம். தவறுகள் ஏற்பட்டால் அதை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொண்டு விடப் போகிறோம். அவ்வளவுதானே!
//பூமியை விரித்தான் என்று வரும் வசனத்தை பிரபஞ்சம் விரிவடைவதற்கு தூக்கி போட்டுகிட்டீங்க, இது அநியாயம். ஒருத்தன் கஷ்டப் பட்டு கண்டுபிடிக்கிற வரைக்கும் ஊமையாய் இருந்திட்டு, உண்மை வெளியே தெரிஞ்சதுக்கப்புறம் இதுதான் எங்களுக்கு முன்னரே தெரியுமே குர்ஆனில் இருக்கே என்பது பித்தலாட்டம், தயவு பண்ணி அதைச் செய்யாதீங்க.//
//The first translation of the Qur'an was performed by Salman the Persian, who translated Surah al-Fatihah into the Persian language during the early 8th century.[4] According to Islamic tradition contained in the hadith, Emperor Negus of Abyssinia and Byzantine Emperor Heraclius received letters from Muhammad containing verses from the Qur'an[citation needed]. However, during Muhammad's lifetime, no passage from the Koran was ever translated in to these languages nor any other.[1].
The second known translation was into Greek and was used by Nicetas Byzantius, a scholar from Constantinople, in his 'Refutation of Quran' written between 855 and 870. However, we know nothing about who and for what purpose had made this translation. It is however very probable that it was a complete translation.[5]//
http://en.wikipedia.org/wiki/Quran_translations
குர்ஆனின் மொழி பெயர்ப்பு உலகின் பல மொழிகளில் முகமது நபி மரணித்த சில ஆண்டுகளிலேயே நடைபெற துவங்கி விட்டது. பல ஆராய்ச்சியாளர்கள் பிறந்த கிரேக்க, லத்தீன், பெர்ஸிய மொழிகளில் அன்றே மொழியாக்கம் நடைபெற்றுள்ளது. இந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை நடத்துவதற்கு குர்ஆனின் பல வசனங்கள் உதவியிருக்கலாம். இதன் அடிப்படையில் சிந்திக்க ஆரம்பித்து பல உண்மைகள் தெரிய வந்திருக்கலாம்.
அதற்காக அந்த அறிவியல் அறிஞர்களை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த பேரும் புகழும் கஷ்டப்பட்டு ஆய்வு செய்து அவர்கள் பெற்றார்கள். சில உண்மைகளுக்கு குர்ஆனின வசனங்களும் உதவியாக இருந்திருக்கின்றன என்ற வாதத்தையும் மறுக்க முடியாது.
நமது தமிழ் மொழியில் மிக தாமதமாகவே மொழி பெயர்ப்பு நடந்தது. நூறு வருடங்களுக்கு முன்புதான் தமிழிலேயே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பே மொழி பெயர்க்காததின் தவறால்தான் தமிழக இஸ்லாமியரிடத்தில் பல மூடப் பழக்கங்கள் குடி கொண்டு விட்டன. தற்போது மொழி பெயர்ப்புகளை வாசிக்க ஆரம்பிததவுடன் தர்ஹா சந்தனக் கூடு வரதட்சணை போன்ற பல பழக்கங்களை விட்டும் முஸ்லிம்கள் ஒதுங்கி வருகின்றனர்..
http://en.wikipedia.org/wiki/List_of_translations_of_the_Quran
வவ்வால்!
//எங்கே இப்போ சொல்லுங்க்க , பூமி விரிவதை நிறுத்தியாச்சா இல்லை விரிவடையுதா?
எதாவது ஒரு நிலைப்பாட்டில் இருக்கணும் சுவாமிகளே :-))//
பூமி மற்றும் பல கோள்கள் ஒன்றாக இருந்து பிறகு பிளவுட்டது. சிதறிய அந்த கோள்களில் பூமியை மனிதன் வாழ்வதற்காக இறைவன் தேர்ந்தெடுக்கிறான். எனவே அதனை விரிவாக்கம் செய்து தண்ணீர் உணவுகள் போன்றவை விளையக் கூடிய இடமாக மாற்றியமைத்து அதன் பிறகு உயிரினங்களை பூமியில் படைக்கிறான். இந்த பூமியின் தட்டுக்கள் நகராமல் இருக்க ஆங்காங்கே மலைகளையும் நிறுவுகிறான். இதன் மூலம் நாம் அறிய வருவது பூமியின் விரிவாக்கம் முன்பு நடந்து தற்போதய நிலையை அடைந்ததாக குர்ஆன் சொல்கிறது. அதையே இன்றைய அறிவியலும் சொல்கிறது.
அண்ணாச்சி ஏதாவது பெரச்சனையா?
நான் வேணா நம்ம முனியாண்டி சாமி துண்ணூறு அனுப்பவா?
தூங்கும் போது பூசிக்கொண்டு படுத்தால் அல்லா பிரச்சனை தீரும்.
Post a Comment