Followers

Sunday, October 07, 2012

ஹீனா ரப்பானி - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி!

ஹீனா ரப்பானி - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பேட்டி!




பர்கா தத்: இதற்கு முன் நீங்கள் இந்தியா வந்த போது மீடியா மிகுந்த ஆர்வத்தோடு உங்களை பேட்டி எடுத்தன. பாகிஸ்தானின் முதல் பெண் வெளி விவகார அமைச்சர்: வசீகர தோற்றம் கொண்டவர். மிக இள வயதில் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் என்ற காரணத்தாலா?

ஹீனா ரப்பானி: இந்திய பத்திரிக்கைகளுக்கும் இந்திய மக்களுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கோணத்தில் இந்தியாவோடு நட்புறவை விரிவாக்க விரும்புகிறோம். நானும் இந்தியாவேடு நடபுறவோடு செல்லவே ஆசைப்படுகிறேன். இப்படி ஒரு நட்புறவை வளர்க்க எங்கள் தரப்பில் மிகவும் உழைக்கிறோம். தொழில் ரீதியாக இந்த நட்புறவு தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

பத்திரிக்கைகளின் முக்கியத்துவத்துக்கு இதுவும் கூட காரணமாக இருக்கலாம்.

இதற்கு முன் டெல்லி மற்றும் டெஹ்ரானில் இரு நாட்டு தலைவர்களும் சேர்ந்து பேசி இதற்கான சூழலை உருவாக்க முயற்சித்த வண்ணம் உள்ளனர்.

பர்கா தத்: வெளி விவகார மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை பலமுறை சந்தித்துள்ளீர்கள். மன்மோகன் சிங்கும், ஜீலானியும் பலமுறை பேசப்பட்ட மும்பை தாக்குதல் இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அபு ஜிந்தல் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டோடு பிடிபட்டுள்ளதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?

ஹீனா ரப்பானி: மும்பை தாக்குதல் சம்பந்தமான வழக்கு தற்போது கோர்ட்டில் உள்ளது. உண்மை நிலவரம் என்ன என்பது தீர்ப்பு வந்த பிறகுதான் சொல்ல முடியும். இது போன்ற செயல்களை எவர் மீதும் பழி போட்டு தப்பிக்கவும் முடியாது. இவை அனைத்தையும் ஒரு நாளில் முடிப்பது என்பதும் இயலாத காரியம். தற்போதுள்ள பேச்சு வார்த்தைகள் கடந்த கால நிகழ்வுகளால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.

நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்திய ஊடகத் துறை பாகிஸ்தானின் மீது ஒரு அதீத வெறுப்பை வெளியிடுவதாகவே காண்கிறேன். பாகிஸ்தானிய ஊடகத் துறையோடு ஒப்பிடும்போது இந்தியாவில் அதிகம் என்பதே எனது கருத்து. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வழக்கு விசாரணையில் உள்ளதால் இதைப் பற்றி பேசுவது அவ்வளவு சரியில்லை என்றே நினைக்கிறேன்.

பர்கா தத்: மும்பை தாக்குதலால் இந்திய மக்கள் எந்த அளவு துயரமடைந்திருப்பார்கள் என்பதை நிங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஹீனா ரப்பானி: கண்டிப்பாக! நான் உணருகிறேன். மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதது. இவ்வளவு உயிர்கள் அநியாயமாக போனதில் எவருக்கும் உடன்பாடு இல்லை. இதே போன்ற வலி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிலும் இறந்த பாகிஸ்தானியர்களின் உணர்வுகளையும் நாம் எண்ணிப் பார்க்கிறோம். இரண்டுமே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 65 வருடங்களாக நாம் பலமுறை இரு நாடுகளின் சிக்கல்களை தீர்க்க முயற்சித்த வண்ணமே உள்ளோம். நம்பிக்கையின்மை, சந்தேகம், தீவிரவாதம் என்ற பல பிரச்னைகளால் இந்த நல்லுறவு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால்தான் தற்போதய பேச்சு வார்த்தைகளில் காஷ்மீர் பிரச்னையை தொடுவதில்லை என்ற நிலைப் பாட்டை எடுத்துள்ளோம். எனவே நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதே எனது எண்ணம்.

பர்கா தத்: ஜமாஅத்து தாவாவின் தலைவர் ஹஃபீஸ் சயீத் மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் கருவியாக இருந்து செயல்பட்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பல லட்சம் டாலர் விலையாகக் கூட அவர் தலைக்கு நிர்ணயித்திருந்தது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஹீனா ரப்பானி: நான் முன்பே கூறியது போல் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஹஃபீஸ் சயீத் கண்டிப்பாக தண்டனையை அனுபவிப்பார். அவரை காப்பாற்ற வேண்டிய எந்த தேவையும் தற்போதய அரசுக்கு இல்லை. அமைதியான சமூக அமைப்பை உண்டாக்கவே நாங்களும் விரும்புகிறோம்.

பர்கா தத்: பலர் சொல்வது போல் வயதானவர்களுக்கு நாடு பிரிவினையானதின் காயம் இன்னும் மனதில் இருக்கும். ஆனால் இளைய சமுதாயம் உங்களைப் போன்ற இளம் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் போன்றவர்கள் இந்திய பாகிஸ்தான் நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாக்கலாமே!

ஹீனா ரப்பானி: டெஹ்ரான் சந்திப்பில் இது பற்றியே அதிகம் விவாதித்தோம். மன்மோகன் சிங்கும், கிருஷணாவும், ஜிலானியும் நானும் இதைப் பற்றி நிறைய பேசியுள்ளோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அக்கபூர்வமான வழியில் இந்த முன்னேற்றம் நடக்க பாகிஸ்தான் தரப்பு தயாராகவே உள்ளது.

பர்கா தத்: அப்பாவி மக்களில் பலர் மீனவர்கள் மேலும் எல்லைப் புறங்களில் கைது செய்யப்பட்டு கைதிகளாக சிறைகளில் உள்ளனர். இவர்களின் விடுதலை குறித்து ஏதேனும் முன்னேற்றம் தென் படுகிறதா?

ஹீனா ரப்பானி: இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அரசு தரப்பில் சிலரின் மீது குற்றங்கள் உள்ளதால் அதல்லாது சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட பலர் விடுதலையாகும் சாத்தியக் கூறுகள் உள்ளன. விரைவில் விடுதலையாவார்கள்.

பர்கா தத்: சிறுபான்மையினர் என்று எடுத்துக் கொண்டால் பாகிஸ்தானில் இந்துக்கள், கிறித்தவர்கள் நாள்தோறும் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ஹீனா ரப்பானி: பாகிஸ்தான் அரசு சிறுபான்மையினர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களும் எங்கள் நாட்டு பிரஜைகளே! சில கிராமங்களில் ஒரு சில குழுக்களில் இது போன்று அவ்வப்போது நடப்பது உண்டு. இதற்கு அரசைக் காரணமாக்க முடியாது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல முன்னேற்பாடுகளை எடுத்துள்ளோம். இந்தியாவிலும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்கப்பட்டே வருகின்றனர். அதையும் இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டு தரப்பிலுமே சீர் செய்ய வேண்டியுள்ளது. பிரதமர் ஜீலானி இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

பர்கா தத்: முடிவாக....இதற்கு முன் ஹிலாரி கிளிண்டனிடமும் பேட்டி எடுத்த போது இந்த கேள்வியைக் கேட்டுள்ளேன். ஒரு பெண்ணாக உங்கள் பணிகளில் ஏதேனும் குறிக்கீடுகள் உண்டா?

ஹீனா ரப்பானி: பெண் என்ற பிரச்னை எனக்கு என்றுமே வந்ததில்லை. ஆண் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.

அனைத்து பாகிஸ்தானிய அரசியல் கட்சிகளும், மக்களும் இந்தியாவோடு சமரசமாகவே போக விரும்புகின்றனர். தொழில் துறையிலும் ஒத்துழைப்பு மிக அவசியம். பிரிந்த ஐரோப்பிய யூனியன்களெல்லாம் தொழில் முறையில் ஒன்றாகியுள்ளன. இந்த இரு நாட்டு ஒற்றுமையானது நமது நாடுகளின் பொருளாதாரத்தை வளப்படுத்தும். இதையே எனது செய்தியாக இந்திய மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்திய ஊடகத் துறையும் பாகிஸ்தானிய ஊடகத் துறையும் இரு நாட்டு ஒற்றுமைக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.




பொதுவாக பாகிஸ்தானிகள் நம் நாட்டோடு நட்புறவோடு இருக்கவே விரும்புகினறனர். ஆனால் இங்கு எப்படி ஒரு சில இந்துத்வ வாதிகள் இந்த ஒற்றுமையை எப்படியாவது குலைக்க நினைக்கிறார்களோ அதே போன்று பாகிஸ்தானிலும் சில படிப்பறிவற்ற அடிப்படைவாதிகள் இந்திய ஒற்றுமையை விரும்புவதில்லை. இந்த வேற்றுமையை வைத்து அவர்கள் தங்கள் வயிற்றை நன்றாக கழுவிக் கொள்கிறார்கள். உதவிக்கு வர சிஐஏ வும் மொசாத்தும் எப்போதும் தயாராகவே உள்ளது.

நமது மத்திய அரசுக்கு சிக்கல்கள் தோன்றும் போதெல்லாம் எங்காவது நாட்டில் குண்டு வெடிக்க வைத்து சில ரோட்டோர முஸ்லிம்களை கைது செய்வது வழமையான ஒன்று. சமீபத்தில் கூட பெங்களூரில் மிகப் பெரிய நாசகார படையை பிடித்ததாக அறிக்கை விட்டனர். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது யாருக்கும் தெரியாது. குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்று விடுதலையாகி இருப்பார்கள். ஆனால் அந்த செய்தி எதுவும் பத்திரிக்கைகளில் வராது.

இதே நிலைதான் பாகிஸ்தானிலும். அங்குள்ள மக்கள் பிரச்னையை திசை திருப்ப எங்காவது குண்டு வைத்து 'ரா' வின் வேலை என்று செய்தி கசிய விடப்படும். மக்களும் மற்ற பிரச்னைகளை மறந்து இந்தியாவை கரித்து கொட்டுவர். இதுதான் இரு நாடுகளுக்கும் மத்தியில் நடந்து வருவது. இனி வரும் காலங்களிலாவது இரு நாடுகளும் பகையை மறந்து ஒற்றுமையின பக்கம் வர வேண்டும்.

---------------------------------------------------------

ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்ட இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களை இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி.

அங்கு காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் தொழிலதிபர்கள் ஆலோசனை நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், அந்த மாணவர்களுக்கு தான் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தி, ''கடந்த ஆண்டு இங்கு வந்து அந்த மாணவர்களுடன் பேசியபோது, அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், உறவை மேம்படுத்தவும் முயற்சி எடுப்பதாகத் தெரிவித்தேன். வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக, தொழில் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் பேச விரும்புவதாக அவர்கள் தெரிவி்ததார்கள். அதனால், தொழில் துறையின் முக்கியப் பிரமுகர்களை அழைத்து வந்திருக்கிறேன். ஆக்கப்பூர்வமாக ஆலோசனை நடத்தினோம். எல்லோரும் இணைந்து அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்’, என்றார் ராகுல் காந்தி.

தொழிலதிபர் ரத்தன் டாடா பேசும்போது, இந்த அனுபவம் தனது மனதை நெகிழ வைப்பதாகத் தெரிவித்தார்.

''ராகுல் காந்தி அவர்கள், ஜன்னல் கதவை மட்டுமல்ல, வாசல் கதவையை திறக்கச் செய்திருக்கிறார். தொழில்துறையினர் தற்போது கவனம் செலுத்தி வரும் பகுதிகளுக்கு அப்பாற்பட்டு, காஷ்மீர் மக்களுக்காக, காஷ்மீர் மாநிலத்தன் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, அறிவுச் செறிவும், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வமும், திறமையும் இருப்பதைக் காண முடிந்தது’’, என்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா.

. ராகுல்காந்தியின் முயற்சி வெற்றியடைந்து காஷ்மீர் மக்கள் நமது நாட்டோடு இரண்டற கலக்க இந்த பயணம் உதவி புரியட்டும்.



.

31 comments:

அஞ்சா சிங்கம் said...

நான் என்னமோ எதிர்பார்த்து வந்தேன் ஏமாத்தீட்டீங்களே . ....................:-)
ஹீனா நல்ல அறிவுள்ள ,அழகான ,திறமையான , அதிகம் கல்வி கற்ற பெண் . பெண்களுக்கு இவ்வளவு சுதந்திரமும் கல்வியும் குடுக்கலாமா ..........? புர்க்கா அணியாமல் வேறு அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார் ஒரு வேளை பெயர்தாங்கி முஸ்லீமாக இருப்பாரோ .
//////இந்த வேற்றுமையை வைத்து அவர்கள் தங்கள் வயிற்றை நன்றாக கழுவிக் கொள்கிறார்கள். உதவிக்கு வர சிஐஏ வும் மொசாத்தும் எப்போதும் தயாராகவே உள்ளது.///////////////////

ஐ.எஸ்.ஐ. இன் பங்கு ஏதும் இல்லையா ..........?

////////நமது மத்திய அரசுக்கு சிக்கல்கள் தோன்றும் போதெல்லாம் எங்காவது நாட்டில் குண்டு வெடிக்க வைத்து சில ரோட்டோர முஸ்லிம்களை கைது செய்வது வழமையான ஒன்று./////

அப்படியா அதாவது அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்ல வருகிறீர்கள் ......... தீபாவளி பட்டாசு கூட வெடிக்க தெரியாதவர்கள் என்று சொல்லவருகிறீர்கள் ................ஏன் சு.பி. அண்ணாச்சி இந்து வெறியர்கள் குண்டு வைக்கிறார்கள் என்று துணிந்து குற்றம் சாட்டும் நீங்கள் . முஸ்லீம்கள் விடயத்தில் மட்டும் அவர்கள் அல்வா கிண்டினார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல ...........

கோவி.கண்ணன் said...

//பொதுவாக பாகிஸ்தானிகள் நம் நாட்டோடு நட்புறவோடு இருக்கவே விரும்புகினறனர். ஆனால் இங்கு எப்படி ஒரு சில இந்துத்வ வாதிகள் இந்த ஒற்றுமையை எப்படியாவது குலைக்க நினைக்கிறார்களோ அதே போன்று பாகிஸ்தானிலும் சில படிப்பறிவற்ற அடிப்படைவாதிகள் இந்திய ஒற்றுமையை விரும்புவதில்லை.//

உங்கல் நேர்மையின்மையின் லட்சணம் இது தான், இந்து அடிப்படை வாதிகள் என்றால் இந்துத்துவாக்கள், அதுவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றால் சிறப்புப் பெயர் எதுவும் கிடையாதா ?

உங்க இரட்டைவேடம் வெளிபடும் என்பது உங்களுக்கு தெரியாதா ? உங்களைப் போன்றோர்களைவிட அடிப்படைவாதிகள் என்று ஒப்புக் கொள்வோர் எவ்வளவோ பரவாயில்லை.

நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று குறிப்பிடாவிட்டாலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டதில் இருந்து மதங்களில் பழமைவாதக் கருத்துகள் உண்டு என்று நீங்கள் ஒப்புக் கொள்வதாகவே பொருள். பின்பு யாரை ஏமாற்ற இஸ்லாத்தில் இவை இவை எல்லாம் இல்லை என்றெல்லாம் எழுதுகிறீர்கள் ?

நீங்கள் எழுதி இருக்கும் அடிப்படைவாதிகள் என்றால் யார் அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களா ?

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று குறிப்பிடாவிட்டாலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டதில் இருந்து மதங்களில் பழமைவாதக் கருத்துகள் உண்டு என்று நீங்கள் ஒப்புக் கொள்வதாகவே பொருள். பின்பு யாரை ஏமாற்ற இஸ்லாத்தில் இவை இவை எல்லாம் இல்லை என்றெல்லாம் எழுதுகிறீர்கள் ?

நீங்கள் எழுதி இருக்கும் அடிப்படைவாதிகள் என்றால் யார் அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களா ? //

நான் அடிப்படை வாதிகள் என்று கூறியது இஸ்லாத்தை சரியாக விளங்காமல் சட்டத்தை கையில் எடுப்பவர்களைப் பற்றி. அவர்களின் அடிப்படை முல்லாக்கள். அவர்களின் பழங்குடி தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்துபவர்கள். இதற்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா என்றெல்லாம் சிந்திக்காதவர்கள். இதே அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸூம் செயல்படுகிறது. இதைத்தான் எடுத்துக் காட்டினேன்.

suvanappiriyan said...

அஞ்சா சிங்கம்!

//ஐ.எஸ்.ஐ. இன் பங்கு ஏதும் இல்லையா //

கண்டிப்பாக ஐஎஸஐ யின் பங்கும் உண்டு.

//ஏன் சு.பி. அண்ணாச்சி இந்து வெறியர்கள் குண்டு வைக்கிறார்கள் என்று துணிந்து குற்றம் சாட்டும் நீங்கள் . முஸ்லீம்கள் விடயத்தில் மட்டும் அவர்கள் அல்வா கிண்டினார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல ...........//

இந்தியாவில் முஸ்லிம்கள் குண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் போவையை தவிர பாக்கி அனைத்தும் பொய் வழக்குள் என்று விடுதலையாக்கப்பட்டுள்ளனர். தவறு முஸ்லிமே செய்தாலும் அவனை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

UNMAIKAL said...

இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: இந்தியாவில் இலங்கை படையினருக்கு ராணுவ பயிற்சி அளிக்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை படையினருக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்று தமிழகக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ராஜாராமன் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி தரக்கூடாது என்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

மனுவை விசாரித்த நீதிபதிகள்,

மனுதாரர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குளாக்குகிறார் என்று கடிந்து கொண்டனர்.

மேலும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

http://tamil.oneindia.in/news/2012/10/08/india-supreme-court-refuses-ban-training-sri-lankan-defence-162808.html

suvanappiriyan said...

திரு டோண்டு ராகவன்!

//சுவனப்பிரியன் கூறுவது குலா என்னும் பெயருடையது என நினைக்கிறேன்.
எனது கேள்விகள் எளிமையானவையே.
1.குலாவும் தலாக்கும் ஒஎரே முறையில்தான் கூறப்படுகின்றனவா? மூன்று முறை தலாக் கூறி ஆண் திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதைப் போல, பெண் மூன்று முறை தலாக்கோ குலாவோ கூறி பந்தத்தை முறித்துக் கொள்ள இயலுமா?//

• ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.

• அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக்கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.

• அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக்கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன்கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும்.

• கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை.

• கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருப்பது போல் மனைவி குலாஃ செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது.

• தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலஃ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை மறுமணம் செய்யக் கூடாது.
அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்து கொள்ளலாம். தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர்தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும்என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்களே அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல் : நஸயீ (3441)

suvanappiriyan said...

திரு பொன் முத்து குமார்!

//கட்டுரையாளர் விமர்சனம் வைக்கும் ஹிலா திருமணம் குறித்து உங்கள் பார்வை என்ன ?//

மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)
கோபத்தில் இரண்டு தலாக் வேறு வேறு சந்தர்ப்பங்களில் ஒரு மாதத்துக்கு மேல் இடைவெளி விட்டு சொன்னால் அந்த கணவன் மனைவி திரும்பவும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் மூன்றாவது முறையும் அவன் தலாக் சொல்லி விட்டால் அதன் பிறகு நிரந்தரமாக பிரிய வேண்டியதுதான். தலாக்கை விளையாட்டாக யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் பழைய கணவன் திரும்பவும் அந்த மனைவியையே திருமணம் முடிக்க நினைத்தால் அந்த பெண் வேறொருவனை மணந்து அவனும் தலாக் சொன்ன பின்பே முதல் கணவனுக்கு மனைவியாக முடியும். தலாக் சொல்வதன் பின்னணியில் இவ்வளவு கடுமையான சட்டம் இருப்பதால்தான் முஸ்லிம்களிடம் விவாகரத்து விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இதற்கு தமிழகத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஹிலா என்ற ஏற்பாடு இவர்களாக உருவாக்கிக் கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி பிரிந்த தம்பதியை தற்காலிக திருமணம் வேறொருவனுக்கு முடித்து அவன் விவாகரத்து செய்த பிறகு பழைய கணவன் மீட்டிக் கொள்கிறான். இது இஸ்லாமிய நடைமுறையே அல்ல. குர்ஆனும் அப்படி சொல்லவில்லை.

//அப்படியானால் வேறு வேறு நேரத்தில் மூன்று முறை சொன்னால் அப்போது அது இஸ்லாமிய சட்டபூர்வமாகிவிடுமா ? (இது குறித்து இன்னொரு கேள்வி உண்டு. உங்கள் பதில் கண்டபின் அது.)//

தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்(2:228)

ஒவ்வொரு தலாக்குக்கும் மூன்று மாதவிடாய் காலங்கள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த கால தாமதத்தில் கணவன் மனைவிக்கிடையே கோபம் தனிந்து அன்பு அதிகரித்தால் அவர்கள் முன்பு போல் சேர்ந்தே வாழலாம்.

ஹிலா திருமணம் என்பது குர்ஆனை சரியாக விளங்காத மூடர்களின் பழக்கம். அவர்களுக்கு குர்ஆனின் சட்டத்தை தெளிவாக விளக்க வேண்டும்..

dondu(#11168674346665545885) said...

மஹரை விட அதிகமாகத்தானே வரதட்சிணைகள் உள்ளன? தலாக் செய்யும் கணவன் வரதட்சிணையை திருப்பித் தருவானா?

இசுலாமியரிடமும் வரதட்சிணை வாங்கும் பழக்கம் பிராக்டிகலாக உள்ளதுதானே.

//• ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.//
த்லைவர் அனுமதி மறுத்தால் என்ன செய்வாள் பெண்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராவணன் said...

////சுவனப் பிரியன் said...

அஞ்சா சிங்கம்!

//ஐ.எஸ்.ஐ. இன் பங்கு ஏதும் இல்லையா //

கண்டிப்பாக ஐஎஸஐ யின் பங்கும் உண்டு.

//ஏன் சு.பி. அண்ணாச்சி இந்து வெறியர்கள் குண்டு வைக்கிறார்கள் என்று துணிந்து குற்றம் சாட்டும் நீங்கள் . முஸ்லீம்கள் விடயத்தில் மட்டும் அவர்கள் அல்வா கிண்டினார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல ...........//

இந்தியாவில் முஸ்லிம்கள் குண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் போவையை தவிர பாக்கி அனைத்தும் பொய் வழக்குள் என்று விடுதலையாக்கப்பட்டுள்ளனர். தவறு முஸ்லிமே செய்தாலும் அவனை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்.////

அண்ணாச்சிக்கு குண்டுன்னா என்னவென்றே தெரியாது. குண்டா இருப்பதுதான் குண்டு என்று நினைக்கின்றார்.

ராவணன் said...

அண்ணாச்சி கோவையில் குண்டு வைத்தது யாரென்று கொஞ்சம் சொல்லுங்க அண்ணாச்சி....

ராவணன் said...

////நமது மத்திய அரசுக்கு சிக்கல்கள் தோன்றும் போதெல்லாம் எங்காவது நாட்டில் குண்டு வெடிக்க வைத்து சில ரோட்டோர முஸ்லிம்களை கைது செய்வது வழமையான ஒன்று.////


அண்ணாச்சி...நமது மத்திய அரசு என்றால் உங்கள் இத்தாலிய அன்னையின் அரசுதானே அண்ணாச்சி.

உங்கள் இத்தாலிய சோனியா அன்னை அவ்வளவு கெட்டவரா அண்ணாச்சி?

கோவி.கண்ணன் said...

//தலாக் சொல்வதன் பின்னணியில் இவ்வளவு கடுமையான சட்டம் இருப்பதால்தான் முஸ்லிம்களிடம் விவாகரத்து விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. //

:) இதெல்லாம் தங்கள் சொந்தக்கருத்தா ?

வழக்கம் போல் இஸ்லாத்தை சரிவரப் புரிந்து கொள்ளாமல் மணவிலக்கம் பெற்றுக் கொள்வோர் விகிதம் மலெசியாவில் கூடிக் கொண்டே போவதாக தகவல், இணையத்தைத் தேடினால் தகவல்கள் கொட்டும்.

இசுலாத்தைப் சரிவர புரிந்து கொள்ளாதவர்களுக்கு உங்க மார்க்கத்தில் சவுக்கடியெல்லாம் கடியாதா ?

:)

//பழைய கணவன் திரும்பவும் அந்த மனைவியையே திருமணம் முடிக்க நினைத்தால் அந்த பெண் வேறொருவனை மணந்து அவனும் தலாக் சொன்ன பின்பே முதல் கணவனுக்கு மனைவியாக முடியும்//

இதெல்லாம் ஒரு வாழமரத்தை வைத்து ஈசியாக முடிக்க வேண்டிய ஒரு மேட்டர், இதைவிட்டுவிட்டு அவ இன்னொரு கல்யாணம் இன்னொருத்தனுடன் பண்ணனுமாம், அப்பறம் அவங்க இரண்டு பேரும் உல்லாசமாக இருக்கனும் (கட்டிக் கொண்டதற்கு இலவசப் பரிசா ?) பின்பு அவன் வெட்டிவிட்டால் முதல் கணவன் எச்சில் விழுங்கிவிட்டு திரும்பவும் கட்டிக்கனும், நினைச்சுப் பார்த்தாலே அருவெருப்பான செயலை எப்படித்தான் கூச்சமில்லாமல் அதை ஞாயம் என்பது போலவும், அது என்னவோ மணவிலக்கை குறைக்கும் வலுவான சட்டம் போன்றது போல் பேசுகிறீர்களே.

:)

இதுல என்ன அருவெருப்பான விசயம் என்றால் ஒரு கணவன் வேகத்தில் பிடிக்காமல் தலாக் சொல்லிவிட்டாலும் அடுத்தவனால் தீண்டப்பட்டால் தான் அவளுக்கு பழைய (திருந்திய) கணவன் மீண்டும் கிடைப்பான், இதில் தண்டனை யாருக்கு பெண்ணுக்கா ஆணுக்கா ?

ஆணைப் பொருத்த அளவில் இதைத் தண்டனை என்றால் அவனுக்கு கிடைப்பது எச்சில் கனி, பெண்ணுக்கு ? அவள் சாக்கடையில் வீசப்பட்டு அருமை உணர்ந்து எடுத்து வந்து கழுவி பரிமாறப்படும் கனி.

அத்திப்பழம் போன்று உங்கள் மார்க்கத்தில் ஏகப்பட்ட பேருண்மைகள் புதைந்து புதைந்து மறைமுக மாக காணக்கிடக்கிறது, உங்களைப் போன்றவர்கள் அதைப் பிட்டுக்காட்டும் பொழுது தான் எங்களுக்கு விளங்குகிறது.

வாழ்க உங்களின் மார்க்க சேவை, அல்லா உங்களுக்கு கூடுதல் க(ன்)னிகைகளை தருவானாக

கோவி.கண்ணன் said...

//நான் அடிப்படை வாதிகள் என்று கூறியது இஸ்லாத்தை சரியாக விளங்காமல் சட்டத்தை கையில் எடுப்பவர்களைப் பற்றி. அவர்களின் அடிப்படை முல்லாக்கள். //

முல்லாக்களோ குல்லாக்களோ அவர்களுக்கு மக்கா செல்லும் அனுமதி இருந்தால் அவர்கள் முஸ்லிம்கள் தான். ஒரு முஸ்லிமாக தவறு செய்தால் அவர்களின் செயலை நீங்கள் இந்துத்துவாக்களை விமரசனம் செய்வது போல் தான் செய்ய முடியும்.

அவர்களை இஸ்லாமியர்கள் இல்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லாத பொழுது அவர்களை நீங்கள் எந்தவிதத்திலும் வேறுமாதிரியாகக் குறைச் சொல்லவும் அனுமதி இல்லை.

உங்க மார்க்கத்தை அப்படியே அடி நுணி பிறழாமல் பின்பற்றுபவர்கள் ஒரு 10 பேர் தேறுவார்களா ? ஒரு பத்து பேரை இங்கே வரிசையாக எழுதக் கூட் உங்களால் முடியாது, எல்லோரும் இஸ்லாமிய பெயர் தாங்கிகள் என்பது உங்களுக்கு தெரியாதா ? அவன் அஞ்சுக்கடமையைச் செஞ்சுட்டான் அவன் அடிபிறழாமல் பின்பற்றுகிறான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டேன், குரானையும் ஹதீசையும் வரிக்கு வரி பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கையில் காபீர்களைக் கொல்லும் அரிவாளும் தானே இருக்கும்.

suvanappiriyan said...

திரு டோண்டு ராகவன்!

//மஹரை விட அதிகமாகத்தானே வரதட்சிணைகள் உள்ளன? தலாக் செய்யும் கணவன் வரதட்சிணையை திருப்பித் தருவானா?

இசுலாமியரிடமும் வரதட்சிணை வாங்கும் பழக்கம் பிராக்டிகலாக உள்ளதுதானே.//

வரதட்சணை இந்திய இஸ்லாமியரிடத்தில் உள்ளது உண்மையே. இஸ்லாத்தை தழுவிய இந்துக்கள் அந்த வழக்கத்தை இங்கும் புகுத்தி விட்டனர். அரபு நாடுகளில் 4 லட்சம் 5லட்சம் ரியால் என்று பெண்களே கேட்பார்கள். சில ஆண்கள் இதற்காக வங்கியில் லோன் எடுக்கும் நிலையும் சவுதியில் உண்டு. அரசாங்கமே பல ஆண்களுக்கு மஹர் உதவி தொகை கொடுத்து அவர்களுக்கு உதவுவதை பார்க்கலாம். எனவே இஸ்லாம் சொல்லாத வரதட்சணையையும் மணகமன் திருப்பி கொடுத்த சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது.

இவ்வளவு ஏன். வஹாபிய சிந்தனை பல இளைஞர்களுக்கு தற்போது வந்ததால் முன்பு தவறாக வாங்கிய வரதட்சணையை திருப்பி பெண்ணின் தகப்பனிடம் கொடுத்த நிகழ்வுகளும் உண்டு. தமிழகத்தில் இதற்காக விழாவே எடுத்து திருப்பி கொடுத்துள்ளார்கள்.

கோவி.கண்ணன் said...

//நான் அடிப்படை வாதிகள் என்று கூறியது இஸ்லாத்தை சரியாக விளங்காமல் சட்டத்தை கையில் எடுப்பவர்களைப் பற்றி. அவர்களின் அடிப்படை முல்லாக்கள். //

முல்லாக்களோ குல்லாக்களோ அவர்களுக்கு மக்கா செல்லும் அனுமதி இருந்தால் அவர்கள் முஸ்லிம்கள் தான். ஒரு முஸ்லிமாக தவறு செய்தால் அவர்களின் செயலை நீங்கள் இந்துத்துவாக்களை விமரசனம் செய்வது போல் தான் செய்ய முடியும்.

அவர்களை இஸ்லாமியர்கள் இல்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லாத பொழுது அவர்களை நீங்கள் எந்தவிதத்திலும் வேறுமாதிரியாகக் குறைச் சொல்லவும் அனுமதி இல்லை.

உங்க மார்க்கத்தை அப்படியே அடி நுணி பிறழாமல் பின்பற்றுபவர்கள் ஒரு 10 பேர் தேறுவார்களா ? ஒரு பத்து பேரை இங்கே வரிசையாக எழுதக் கூட் உங்களால் முடியாது, எல்லோரும் இஸ்லாமிய பெயர் தாங்கிகள் என்பது உங்களுக்கு தெரியாதா ? அவன் அஞ்சுக்கடமையைச் செஞ்சுட்டான் அவன் அடிபிறழாமல் பின்பற்றுகிறான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டேன், குரானையும் ஹதீசையும் வரிக்கு வரி பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கையில் காபீர்களைக் கொல்லும் அரிவாளும் தானே இருக்கும்.

suvanappiriyan said...


திரு தங்கமணி!

//அந்த கணவன் மீண்டும் அந்த மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறான்.
இதில் கணவனைத்தானே தண்டிக்க வேண்டும்?
ஏன் மனைவி தண்டிக்கப்படுகிறாள்?
அந்த பெண் ஏன் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்ளவேண்டும்?//

தனது மனைவி இன்னொருத்தனுக்கு திருமணம் முடிக்கப்பட்டு ஒரு இரவை அவனோடு கழித்த பிறகு அவன் தலாக் விட்ட பிறகு தான் பழைய கணவன் தனது மனைவியை அடைகிறான். இதில் பழைய கணவனுக்கு எந்த அளவு மனது வேதனைப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இதுவே ஒரு தண்டனைதானே!

அடுத்து பெண்ணுக்கு இதில் என்ன நஷ்டம்? வேறொரு ஆணை மணக்கும் பெண் மஹராக 1 லட்சம் இரண்டு லட்சம் பெற்றுக் கொள்கிறாள். அவனோடு ஒரு இரவு இல்லற சுகத்தையும் சட்ட பூர்வமாக அனுபவிக்கிறாள். பிறகு முதல் கணவனுக்கான திருமணத்துக்கான மஹரையும் இரண்டு முறை பெற்றுக் கொள்கிறாள். இதனால் அந்த பெண் பொருளாதார ரீதியாக சிறந்த இடத்தை அடைய முடியும். அவனை திரும்பவும் திருமணம் செய்து கொள்ள அந்த பெண் விரும்பினாலேயே பழைய கணவனை மறுமணம் செய்து கொள்ள முடியும். இங்கும் பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தே இது சாத்தியப்படும்.

//அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்வதால் பாதிக்கப்படுவது அந்த பெண் தானே? அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் ஏன் அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்ட பின்னால் இந்த ஆணை திருமணம் செய்யவேண்டும்?
ஏன் அந்த பெண்ணின் விருப்பமோ அல்லது கருத்தோ இங்கே உதாசீனம் செய்யப்படுகிறது?//

தலாக் விட்ட முதல் கணவன் திரும்ப அழைத்துக் கொண்டாலும் அதற்கு பெண்ணின் அனுமதியும் தேவை. தலாக் விட்ட அந்த கணவன் எனக்கு தேவையில்லை என்று அந்த பெண் சொன்னால் அந்த பெண்ணை யாரும் வற்புறுத்த முடியாது. எனக்கு மறுமணம் வேண்டாம் என்று சொல்ல பெண்ணுக்கு முழு உரிமையை இஸ்லாம் கொடுக்கிறது.

தலாக்கை விளையாட்டாக யாரும் உபயோகிக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த சட்டம் இறைவனால் தரப்பட்டுள்ளது.

கோவி.கண்ணன் said...

//தலாக்கை விளையாட்டாக யாரும் உபயோகிக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த சட்டம் இறைவனால் தரப்பட்டுள்ளது.//

:)

கபடி கபடி

இதற்கெல்லாம் வியாக்கியானம் எழுதும் உங்களைப் போன்றவர் நான்கு திருமணங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது போல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது இல்லை, ஒரு கணவன் இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவியிடம் அனுமதி பெறுகிறானா ? மூன்றாம் மனைவியை திருமணம் செய்ய முதல் இரண்டு மனைவிகளிடமும், நான்காம் மனைவியை திருமணம் செய்ய மற்ற மூவரிடமும் அனுமதி பெறுகிறானா ?

*********

நாங்கப் பிறந்த பிறகு எங்கப்பா விளையாட்டாக தலாக் செய்ததற்கான எங்கம்மாவுக்கு இன்னொரு திருமணம் செய்துவைத்தார்கள், எங்களுக்கு இரண்டு வாப்பா என்று அதை வெளியே சொல்ல குழந்தைகளுக்கு கூசிப் போகாதா ?

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//முல்லாக்களோ குல்லாக்களோ அவர்களுக்கு மக்கா செல்லும் அனுமதி இருந்தால் அவர்கள் முஸ்லிம்கள் தான்.//

பரவாயில்லையே! நீங்களே ஃபத்வா கொடுக்கிறீர்களே! குர்ஆனையும் அதற்கு விளக்கமாக நபிகளின் வார்த்தைகளையும் முடிந்த வரை வாழ்வில் கடைபிடிப்பவன் முஸ்லிம். ஆனால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானங்களில் சில முல்லாக்கள் குர்ஆனுக்கு தவறான விளக்கங்களை சில இளைஞர்களுக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் மொசாத், சிஐஏயிடம் பணம் வாங்கிக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கலாம் என்று எனது பாகிஸ்தானிய நண்பன் கூறினான். இவர்களின் வேலை இஸ்லாத்தை கொடூரமான மார்க்கமாக சித்தரிப்பது.

ஆனால் எல்லோருமே குர்ஆனின் படி மிக சரியாக நடந்து விட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. முகமது நபியே சில நேரங்களில் தவறிழைத்திருக்கிறார்கள். அதை இறைவன் குர்ஆனிலேயே சுட்டிக் காட்டுகிறான். செய்த தவறை திருந்தி பாவ மன்னிப்பு கேட்பவனே சிறந்த முஸ்லிம்.

இஸ்லாத்தை - செய்பவரை, (Doer - verb) (அதாவது இறைவனுக்கு முழுதும் அடிபணிந்து, இஸ்லாம் வகுத்த சட்டத்தின்படி நடப்பவரை) நாம் முஸ்லிம் என்கிறோம்.

ஆதமின் மக்கள் தவறிழைப்பவர்களே. அவர்களில் சிறந்தவன் செய்த தவறுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருபவன். (நபி மொழி).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!’ என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘‘இல்லை!” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவ ளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.
நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த ‘அறக்’ எனும் கூடை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ‘‘நான்தான்!” என்று அவர் கூறினார். ‘‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு ‘‘இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936)

இந்த சம்பவமும் நபிமொழியும் பல சட்டங்களையும் பாடங்களையும் படிப்பினைகளையும் தருகின்றன.


நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே.. நான் கடமையான தொழுகையைத் தொழுது, ரமழானில் நோன்பு நோற்று, ஹலாலானவற்றை எடுத்தும்,ஹராமானவற்றைத் தவிர்ந்தும் வாழ்கின்றேன். இது தவிர வேறு எதுவுமே நான் செய்யவில்லை. இப்படியிருக்க நான் சுவர்க்கம் செல்வேனா? என்று கேட்க நபியவர்கள் ஆம் என்று கூறினார்கள். ( ஆதாரம்: முஸ்லிம்)

suvanappiriyan said...

//நாங்கப் பிறந்த பிறகு எங்கப்பா விளையாட்டாக தலாக் செய்ததற்கான எங்கம்மாவுக்கு இன்னொரு திருமணம் செய்துவைத்தார்கள், எங்களுக்கு இரண்டு வாப்பா என்று அதை வெளியே சொல்ல குழந்தைகளுக்கு கூசிப் போகாதா ?//

நான்கு திருமணம் என்பது கட்டாயம் இல்லையே! விரும்பியவர் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் எத்தனை முஸ்லிம்களுக்கு மூன்று நான்கு எனறு மனைவிகள் உள்ளது? இந்துக்களோடு ஒப்பிடும்போது முஸ்லிம்களிடம் பலதார மணம் அதிகம் இல்லை என்றே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

சின்ன வீடாக வைத்துக் கொண்டு காலம் பூராவும் அந்த மகன் புழுங்கி சாவதை விட சட்டத்தின் முன் அங்கீகாரம் அடைந்த மகனாக வலம் வருவது தவறில்லையே

மணி ரத்னத்தின் 'அக்னி நட்சத்திரம்' படத்தைப் ஒரு முறை பாருங்கள். :-)

suvanappiriyan said...

என்ன எழவுடா இது!//- தங்கமணி!//

//அவள் சாக்கடையில் வீசப்பட்டு அருமை உணர்ந்து எடுத்து வந்து கழுவி பரிமாறப்படும் கனி.// -கோவி கண்ணன்!

1.முதன் முதலில் கற்றளிகள், கல்லால் ஆன கோவில்களைக் கட்டியவர்கள் பல்லவர்களே) அவர்கள் காலத்தில் தான் கோவில் வழிபாட்டில் பெண்கள் ஆடற் பெண்டுகளாகப் புகுத்தப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் அப்பொழுது கூத்திகள் என்று அழைக்கப்பட்டனர்; இது தொழிற்பெயராகும். தேவரடியார்கள் என்ற பெயர் வழங்கியதற்கு கல்வெட்டு சான்றுகள் இல்லை; அடிமை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
2. சோழர்கள் காலதில் தேவரடியார்கள் ஒரு அமைப்பாக, கோவில்களுடன் இணந்துவிட்ட அமைப்பாக மாறிவிட்டனர். தேவரடியார்கள் என்ற சொல்லாட்சி எல்லா கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. இது ராசராச சோழன் காலத்தில் வலுப்பெற்ற ஒரு அமைப்பாக மாறியது. பல ஊர்களில் இருந்தும் பெண்களை தளிச்சேரிக்கு அழைத்து வந்து தேவரடியார்கள் என்று பெயர் சூட்டி ஒரு அமைப்பை ஏற்படுத்தினான். இந்த வகையில் அவன் ஒரு முன்மாதிரி. ராசராச சோழன், ராசேந்திரசோழன் காலத்திற்குப் பிறகு சோழர் ஆட்சி குன்றத்தொடங்கியது. குலோத்துங்கன் காலத்தில் சிறிது நிமிர்ந்து நின்றது. ஆனாலும் அதன் வீழ்ச்சி தொடர்ந்தது. பிற்காலப் பாண்டியர்கள் குறிப்பாக மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து அதை முற்றிலுமாக அழித்தான். சோழ நாட்டுக் கோவில்களும் செலவமும் செல்வாக்கும் இழந்தன. அத்துடன் தேவரடியார்கள் புகழும் செல்வாக்கும் வீழ்ச்சி அடைந்தது. கோவில்களின் பாதுகாப்பு பொய்யாய்ப் போனது. தங்களின் பிழைக்கும் வழிக்காக அரசர்களையும் நிலக்கிழார்களையும் மட்டும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் அவர்கள் தொழிலும் வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கி அதில் மீட்க இயலாத மாற்றம் ஏற்பட்டே விட்டது.

3. தேவரடியார்கள் அனைவரும் ஒரே தரப் பட்டவர்கள் அல்லர், அவர்களுடைய சமூக செல்வாக்கும் ஒரே தரப்பட்டது அன்று. பெண்களை அடிமைகள்போல் சில பொற்காசுகளுக்கு கோவில்களுக்கு தேவரடியார்களாக விற்கப்பட்ட செய்திகளும் உள்ளன. அவர்கள் கால்களில் திரிசூல முத்திரை இடப்பட்டது. ஆனால் அதற்கு சூட்டுக்கோல் பயன்படுத்தப்படவில்லை என்ற ஆறுதலான செய்தியை கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் பதிவு செய்து உள்ளார். மேலும் பெண்களில் சிலர் தங்களையும் தங்களின் மகள், பேரன், பேத்திகள் ஆகிய பத்துப் பேரை முப்பது காசுகளுக்கு விற்றுக் கொண்ட செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இரண்டாம் ராசராசசோழன் காலத்தில் திருவாலங்காடுடைய நயனார்கோவிலுக்கு 700 காசுக்கு நான்கு பெண்கள் தேவரடியர்களாக விற்கப்பட்டனர் இந்தச் செய்திகள் யாவும் கே.கே.பிள்ளை அவர்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன [பக் 340]. டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் தமது பிற்கால சோழர் சரிதம் என்ற நூலில் அடிமைகளாக கோவிலுக்கு விற்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய செய்தியினை ஒரு பகுதி முழுவதும் எழுதிஉள்ளார் [பொது மக்களும் சமூக நிலையும்.] இவை யாவும் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவப்பட்ட செய்திகளாகும். எனவே வறுமைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மட்டுமே அக்காலத்தில் மக்கள் தேவரடியார்களாக மாறினார்களே அன்றி லெஸ்லியும் அவரது தமிழ்த்தேசிய நண்பர்களும் கதைப்பதைப் போல் கடவுள் பக்தியால் அல்ல என்பது தெளிவாக விளங்கும்.

Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu

என்ன எழவுடா இது! - சுவனப்பிரியன் ! :-)



suvanappiriyan said...

பொன் முத்து குமார்!

//இப்படி மூன்று மாதவிடாய் காலங்கள் இடைவெளி விட்ட பின்பும் தலாக் சொல்லிய ஒரு கணவன் அதற்குப்பின்னான சூழ்நிலை மாற்றத்தால் மனைவியோடு சேர்ந்து வாழ விரும்பினால் (இங்கே மனைவி அவனோடு சேர்ந்து வாழ விரும்புகிறாள் என்றே வைத்துக்கொள்வோம்) ஏன் அந்த மனைவி அவளது விருப்பத்துக்கு மாறாக இன்னொருவனோடு படுத்தெழுந்து வர நிபந்தனை விதிக்கப்படவேண்டும் ?//

அதற்கு தான் இரண்டு வாய்ப்புகளை குர்ஆன் கொடுக்கிறதே! இரண்டு தலாக் சொல்லி இருவரும் இணைய விரும்பினால் தாராளமாக கணவன் மனைவியாக இருந்து கொள்ளலாம். அதற்குப் பிறகும் இவர்களுக்குள் ஒத்து வரவில்லை என்று முன்றாவது முறையும் தலாக் சொல்லப்பட்டால் அவர்கள் பிரிந்து விட வேண்டும் என்கிறது இஸ்லாம். அப்படியும் பிரிக்காமல் சட்டத்தின் மூலம் நீங்கள் தடுத்தீர்கள் என்றால் 'ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு' என்று பத்திரிக்கையில் செய்தி வரும். முஸ்லிம் குடும்பங்களில் மட்டும் ஏன் ஸ்டவ் வெடித்து பெண்கள் சாவதில்லை என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விவாகரத்தை இலகுவாக்கியதுதான் காரணம்..

//அவ்வாறில்லாமல் கணவன் தான் சொல்லிய தலாக்-கை நிராகரித்துவிட்டு முன்போல் கணவன் மனைவியாக வாழ ஏன் மதம் குறுக்கே நிற்கவேண்டும் ?//.

இந்த தலாக்கை விளையாட்டாக யாரும் உபயோகப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் திரும்ப வாழ விரும்பினால் மற்றொரு நபருக்கு திருமணம் ஆகி அவன் தலாக் சொன்ன பிறகுதான் திருமணம் முடிக்க முடியும் என்ற சட்டத்தை கொடுததது குர்ஆன். மறுமணம் செய்து கொள்ள பெண்ணின் அனுமதியும் கண்டிப்பாக தேவை.

suvanappiriyan said...

பொன் முத்து குமார்!

//உதாரணமாக அந்த மனைவியின் பெற்றோர் (அல்லது அவருக்கு ஆதரவளிக்ககூடியவர்கள்) திடீரென இறந்துபோய், அவர் தனிமரமாகிப்போகும் நிலை ஏற்பட்டு, அதனால் மனமிரங்கிய கணவன் மேலும் தன் மனைவிக்கு வேதனையை கொடுக்க விரும்பாமல் ‘சரி, போனால் போகட்டும், தலாக் வேண்டாம்’ என்று தனது தலாக்-கை நிராகரிக்க இயலுமா ? (இது ஒரு உதாரணம் மட்டுமே)//

ஆயிரத்தில் லட்சத்தில் ஒரு நிகழ்வு நடப்பதற்கும் பெரும்பான்மையான குடும்பங்களில் நடக்கும் தலாக்குக்கும் வித்தியாசம் உள்ளதே! நீங்கள் ஒரு குடும்பத்தை உதாரணத்துக்கு எடுத்து சாதக பாதகங்களை அலசக் கூடாது. எந்த ஒரு சட்டமும் பெரும்பான்மையான சம்பவங்களின் அடிப்படையிலேயே அணுக வேண்டும். சட்டத்தினால் எப்போதாவது ஒரு சில நிரபராதிகள் தண்டிக்கப் பட்டு விடுவதும் உண்டு. இதனால் தண்டனையே கூடாது என்று சொல்வோமா?

Robin said...

//அடுத்து பெண்ணுக்கு இதில் என்ன நஷ்டம்? வேறொரு ஆணை மணக்கும் பெண் மஹராக 1 லட்சம் இரண்டு லட்சம் பெற்றுக் கொள்கிறாள். அவனோடு ஒரு இரவு இல்லற சுகத்தையும் சட்ட பூர்வமாக அனுபவிக்கிறாள். பிறகு முதல் கணவனுக்கான திருமணத்துக்கான மஹரையும் இரண்டு முறை பெற்றுக் கொள்கிறாள். இதனால் அந்த பெண் பொருளாதார ரீதியாக சிறந்த இடத்தை அடைய முடியும்.// இதற்கும் விபச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்? பெண்களை இதைவிட யாரும் இழிவுபடுத்த முடியாது.

Sathish Murugan . said...

வணக்கம் சூனா பானா அவர்களே,

உங்களுக்காக:
வழக்கம் போல உங்களின் பாகிஸ்தான் நேசம் வெளிக்கி பட்டு விட்டது. அன்பும் பண்பும் நிறைந்த பாகிஸ்தானிய மாக்கள், இந்தியாவினால் மிகவும் துன்பப்படுவதை தங்களின் குமுறும் நெஞ்சம் வெளிப்படுத்துகிறது. பாவம், குண்டு வைப்பவர்கள் அனைவருமே இந்துக்கள் தான், ஆனால் பழி மட்டும் இஸ்லாமியர்கள் மீது. அந்தோ பரிதாபம். தங்களின் பாகிஸ்தான் பற்றை காண ஜின்னா இல்லையே என நினைக்கும் போது, அய்யகோ..... அப்பாவி ஐஎஸ்ஐ வாயில் எதை வைத்தாலும் கடிக்க தெரியாது, தெரிந்தாலும் அவர்களுக்கு உதவுவது இந்துக்களே. சிறும்பான்மையினர் இந்தியாவில் துன்பப்படுவதாக ரப்பானியே சொல்லிவிட்டார், வழக்கம் போல உங்களின் தடித்த தோலை இந்து தீவிரவாதிகள் உரிக்க போகின்றனர், ரப்பானியிடம் இதற்கும் மருந்து வாங்கலாம் விடுங்கள்.

நான்:
பெண்ணடிமை பற்றி பேச எவ்வித அருகதையும் அற்ற ஜென்மங்கள் நீங்கள், ஒரு பெண்ணை முப்பது அடி துணியில் கட்டிவைத்து அவளை உங்கள் அயலவர்களிடத்து காப்பதாக கருணையற்று பேசும் கோமாளிகள். அடிப்படை சுதந்திரம் கூட கொடுக்காது, தலாக் என்னும் ஒற்றை சொல்லில் அவளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் கொடுங்கோலர்கள் நீங்கள். நீங்கள் வாதம் செய்வது கசாப்பு கடைக்காரன் ஆட்டை இவ்வுலக துன்பத்தில் இருந்து விடுவிக்கவே வெட்டுகிறேன் என நீலிக்கண்ணீர் வடிப்பது போன்றது.

சுனிதா விண்வெளி ஓடம் ஓட்டும்போதும், உடல் சுகத்துக்கும் குட்டி போடவுமே பெண்கள் என்னும் குதர்க்கத்தை பின்பற்றும் மூடர்கள்.

கற்காலத்தில் வைக்க வேண்டிய புத்தகத்தை இன்னும் வைத்திருப்பது கோமாளித்தனத்தின் உச்சம்.

Sathish Murugan . said...

//எந்த ஒரு சட்டமும் பெரும்பான்மையான சம்பவங்களின் அடிப்படையிலேயே அணுக வேண்டும்// அதை போலத்தான், பெரும்பான்மையான மக்கள் இந்து என்பதால் இந்து சட்டத்தை அமல் படுத்தலாமா சூனா பானா?

Sathish Murugan . said...

//என்ன எழவுடா இது! - சுவனப்பிரியன் ! :-)// இவ்வார்த்தை 'தலாக்'குக்கும் பொருந்தும் பங்காளி...

Sathish Murugan . said...

//இஸ்லாத்தை - செய்பவரை, (Doer - verb) (அதாவது இறைவனுக்கு முழுதும் அடிபணிந்து, இஸ்லாம் வகுத்த சட்டத்தின்படி நடப்பவரை) நாம் முஸ்லிம் என்கிறோம்.// சூனா பானா அவர்களே, உங்களின் குரான், மாற்று மதத்தை அவமதிக்க கற்று கொடுத்து இருக்கிறதா? ஆம் என்றால் - குரான் மத சகிப்பு தன்மையற்ற வாந்தி என கணக்கில் கொள்ளலாமா? இல்லை என்றால் - நீர் உண்மையான முஸ்லீம் இல்லை என்று கணக்கில் எடுக்கலாமா? நீர் உண்மையான முஸ்லீம் இல்லை எனில், எங்களுக்கும் வசதியாக போய்விடும். உடனடி நேரடியான பதில் தேவை.

Sathish Murugan . said...

அன்பின் கோவி அண்ணா,

//உங்க மார்க்கத்தை அப்படியே அடி நுணி பிறழாமல் பின்பற்றுபவர்கள் ஒரு 10 பேர் தேறுவார்களா ? ஒரு பத்து பேரை இங்கே வரிசையாக எழுதக் கூட் உங்களால் முடியாது, எல்லோரும் இஸ்லாமிய பெயர் தாங்கிகள் என்பது உங்களுக்கு தெரியாதா ? அவன் அஞ்சுக்கடமையைச் செஞ்சுட்டான் அவன் அடிபிறழாமல் பின்பற்றுகிறான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டேன், குரானையும் ஹதீசையும் வரிக்கு வரி பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கையில் காபீர்களைக் கொல்லும் அரிவாளும் தானே இருக்கும்.//

நீர் பார்க்க வில்லையா? புருனே சுல்த்தான், சவூதி கூஜா இவர்கள் எல்லாம் அந்த அல்லாவின் வழிப்படி நடக்கும் நல்லவர்கள். இவர்களின் வழியில் மதம் பரப்பும் சூனா பானாவை நீர் ஏன் ஏற்று கொள்ள மறுப்பது தர்மமா?

Sathish Murugan . said...

//இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்// என்ன உண்மை எனும் பொய்யே, பயங்கர சந்தோசமா இருக்குமே, இனிமேல் உங்களுக்கு காலை நக்க கொடுக்கும் எஜமான்கள் இந்தியா வந்து பயிற்சி எடுப்பது உங்களுக்கும் வசதியா இருக்குமே?

Sathish Murugan . said...

மிஸ்டர் அஞ்சாசிங்கம், அப்துல் கசாப்பு உண்மையிலேயே அருணாச்சலம் கந்தசாமி தான்னு உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளார் நம் சூனாபானா சாமியார்.
கொசுறு: அப்துல் கசாப்பு (அ) அருணாச்சலம் கந்தசாமி - சொந்த ஊர் கராச்சி இல்ல கடையநல்லூர், அவரை மும்பை அனுப்பி வச்சது நம்ம திருப்பதி ஏழுமலையான்.

கோவி.கண்ணன் said...

//அடுத்து பெண்ணுக்கு இதில் என்ன நஷ்டம்? வேறொரு ஆணை மணக்கும் பெண் மஹராக 1 லட்சம் இரண்டு லட்சம் பெற்றுக் கொள்கிறாள். //

ஒரு நாள் இரவுக்காக யாரும் இவ்வளவு கொட்டிக் கொடுப்பார்களா ? அல்லது அதையும் அவளது முன்னாள் கணவனே கொடுப்பானா ? கரும்பு தின்னக் கூலி என்று டெம்ரவரி கணவன் ஆக இதை ஒரு தொழிலாகக் கூட ஒருவர் செய்ய முடியும் போல் இருக்கிறதே.

எந்த ஒரு பெண்ணும் இதை ஏற்பதோ, அவளது பெற்றோர்கள் இதை ஏற்பதோ நடவாத ஒன்று.