Followers

Sunday, October 14, 2012

டைமண்ட் திருடி பிடிபட்ட 20 வயது இள நங்கை!



இன்றைய நவ நாகரிக உலகில் மனிதனின் செலவுகள் அதிகரித்து விட்டது. அந்த செலவுகளில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வது ஆடம்பர செலவுகளே! கல்லூரிக்கு படிக்க அனுப்பினால் நாகரிகம் என்ற பெயரில் காதல் வலையில் வீழும் இளைய சமுதாயம். பெற்றோர் தரும் பணம் போதவில்லை என்றால் அதற்காக எதையும் செய்ய சிலர் துணிந்து விடுகின்றனர். அது போன்ற சம்பவம்தான் நாம் பார்த்துக் கொண்டிருப்பது.

டெல்லியை பூர்வீகமாக கொண்ட ஜோதி என்ற இந்த பெண் வசதியான குடும்பத்து பெண். தனது பெற்றோர்களிடம் வெளியூர் செல்வதாக சொல்லி விட்டு ஜெய்பூர் வந்துள்ளார். வந்த இடத்தில் பணத்துக்கு அவசியம் வந்திருக்கிறது. என்ன செய்வது. வேலைக்கு சேர்ந்தார். நகை கடையில் தனது திறமையை காட்ட ஆரம்பித்தார். ஆனால் நகைக் கடை உரிமையாளர்கள் ஜோதியை விட திறமை வாய்ந்தவர்கள் என்பதை கவனிக்க தவறி விட்டார்.

கண்காணிப்பு காமிராவில் இவர் டைமண்ட்களை திருடி தனது உடலில் மறைப்பது அழகாக படமாகியது. திருடிய டைமண்ட்களின் மதிப்பு 25 லட்சமாம். மூன்று மோதிரங்கள். தற்போது அந்த மங்கையின் டெல்லி அட்ரஸூக்கு தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்திருக்கிறார்கள்.

தேவையற்ற செலவுகளை நாமாக குறைத்துக் கொண்டால் இவ்வாறு தேவையற்ற பிரச்னைகளில் சிக்கத் தேவையில்லை.




சிறு குழந்தை முதற்கொண்டு எவ்வாறு நகை கடையில் திருடுகிறார்கள் என்பதை காமெராவில் பாருங்கள். இந்த குடும்பஸ்தர் குடும்பத்தை வளர்த்தது கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்கவோ! இதனால் உண்மையிலேயே வாங்கும் நோக்கில் கடைகளுக்கு வருபவர்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகிறார்கள். சட்டம் கடுமையானால் ஓரளவு இந்த திருட்டுகள் குறைய வாய்ப்புண்டு.

சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

திருக்குறள் அதிகாரம் 43, 422

மனம் போகும் போக்கெல்லாம் தானும் போகாமல் அதனைத் தடுத்து தீமையைத் தவிர்த்து நன்மையான காரியங்களில் நமது சிந்தனையை செலுத்த வேண்டும். குதிரைப் பாகன் தனது குதிரையை நிலத்தின் தன்மை அறிந்து ஒழுங்காகச் செலுத்துவது போல மனத்தை அறிவு எனும் நல்வழியில் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

6 comments:

கோவி.கண்ணன் said...

இதெல்லாம் ஒரு திருட்டா சார், சொற்பம் அந்தப் பெண்ணுக்கு திருடத் தெரிந்த அளவுக்கு மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கத் தெரியவில்லை. ஆணுறை விழுங்கிகளிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

********

சென்னை : வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்லா(47). இவர் இன்று காலை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து சென்னை வந்தார். இலங்கையில் இருந்து வரும் விமானத்தில் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் உஷாராகி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்கு அப்துல்லா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது பைகளை சோதனை செய்ததில் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தியததல் அவர் வயிற்றுக்குள் வித்தியாசமான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அப்துல்லா, 130 கிராம் வீதம் 910 கிலோ எடையுடைய 7 தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 20 லட்சரூபாய். இதனையடுத்து அப்துல்லாவை அதிகாரிகள் கைது செய்தனர்.

********

சென்னையை சேர்ந்த ஜாபர் அசாரூதீன் (வயது 32) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். இவரிடம் இருந்த சூட்கேசை பிரித்து பார்த்தனர். அதில் ஒன்றும் இல்லை.


பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரை ஸ்கேன்' செய்து பார்த்தபோது வயிற்றில் தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு எனிமா' கொடுத்து தங்கக் கட்டிகளை வெளியே எடுத்தனர்.


ஆணுறையில் வைத்து அவர் 311 கிராம் மதிப்புள்ள 2 தங்க பிஸ்கட்டுகளை விழுங்கி கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இதையடுத்து அசாரூதீனை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

********

பதிவை திசைத் திருப்புவது என்றால் என்ன ? எதோ ஒரு பதிவில் ஒரு மார்க்க சகோதரர் உங்களிடம் வருத்தப்பட்டு கேள்வி எழுப்பி இருந்தாரே.

ராவணன் said...

இப்பத் தெரியுதா அண்ணாச்சி....எங்க குரலோட அருமை...

கண்ட கண்ட புத்தகத்தைப் படிச்சு அறிவை மழுங்கடிக்காதீங்க.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//இதெல்லாம் ஒரு திருட்டா சார், சொற்பம் அந்தப் பெண்ணுக்கு திருடத் தெரிந்த அளவுக்கு மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கத் தெரியவில்லை. ஆணுறை விழுங்கிகளிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.//

தவறு யார் செய்தாலும் தவறுதான்! அப்துல்லா செய்தாலும் ஆல்பர்ட் செய்தாலும் ஆத்மநாதன் செய்தாலும் திருட்டு திருட்டுதான. இதற்கு சாதி மதம் என்று பிரித்து பார்க்கத் தேவையில்லை. அவர்களை திருத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும். நமது நாடு வரும் காலங்களில் இதை விட மோசமான நிகழ்வுகளை சந்திக்குமோ என்று அச்சப்பட வேண்டியாதாக உள்ளது.


suvanappiriyan said...

ராவணன்!

//இப்பத் தெரியுதா அண்ணாச்சி....எங்க குரலோட அருமை...

கண்ட கண்ட புத்தகத்தைப் படிச்சு அறிவை மழுங்கடிக்காதீங்க.//

என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல...உங்களுக்காவது புரிஞ்சா சரி! :-)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்.
அடுத்தவன் உழிப்பை தமதாக்கும் திருட்டை எவன் செய்தாலும் சட்டப்படி அவனை தண்டிக்க வேண்டும்.
அனால்.... அதில் எனக்கு ஒரு டவுட்டு.

நான் உங்கள் வீடு புகுந்து உங்கள் உழைப்பில் வாங்கி வைத்து இருக்கும் உங்கள் தங்க நகையை திருடுவதும்....

வெளிநாட்டில் சம்பாரித்த எனது பணத்தில் நான் வாங்கிய வெளிநாட்டு தங்க நகையை இந்தியா கொண்டு வரும்போது... 'சுங்கவரி கட்டாமல் அதற்கு பதில் லஞ்சம் தாடா' என்று என்னிடம் இருந்து பணம் பிடுங்கும் சீருடை அணிந்த அரசாங்க திருடர்களிடமிருந்து எனது உழைப்பின் சேமிப்பு பயனை காப்பற்றிக்கொள்ள, சில புதுவித முயற்சிகள் எடுப்பதும்... (இதற்கு பெயர் 'கடத்தல்' என்கிறார்கள்) ஒன்றாகுமா சகோ..? விளக்கம் வேண்டும் ப்ளீஸ்..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//வெளிநாட்டில் சம்பாரித்த எனது பணத்தில் நான் வாங்கிய வெளிநாட்டு தங்க நகையை இந்தியா கொண்டு வரும்போது... 'சுங்கவரி கட்டாமல் அதற்கு பதில் லஞ்சம் தாடா' என்று என்னிடம் இருந்து பணம் பிடுங்கும் சீருடை அணிந்த அரசாங்க திருடர்களிடமிருந்து எனது உழைப்பின் சேமிப்பு பயனை காப்பற்றிக்கொள்ள, சில புதுவித முயற்சிகள் எடுப்பதும்... (இதற்கு பெயர் 'கடத்தல்' என்கிறார்கள்) ஒன்றாகுமா சகோ..? விளக்கம் வேண்டும் ப்ளீஸ்..! //

இந்தியாவைப் பொறுத்த வரை கடத்தல் சட்டப்படி குற்றம். அதே நீங்கள் துபாய் சென்றால் அங்கு குற்றமில்லை. எனவே தான் தாவுத் இப்றாகிமால் அங்கு இன்றும் சர்வ சுதந்திரமாக தொழில் செய்ய முடிகிறது.

அரசை நடத்துவதற்காகத்தான் சுங்க வரி விதிக்கப்படுகிறது. எனவே நாம் அரசு கூறும் முறைப்படியே பொருட்களை கொண்டு வர கடமைபட்டுள்ளோம். திருட்டுக்கும் கள்ள கடத்தலுக்கும் வித்தியாசம் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு தேசப்பற்றுடையவன் கள்ள கடத்தல் தொழிலை மாற்றிக் கொண்டு வேறு எத்தனையோ தொழில்கள் நாட்டில் உண்டு. அதில் ஈடுபட்டு தன்னை உயர்த்திக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.