'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, October 22, 2012
ரியாத்தில் இரத்ததான முகாம் சில தகவல்கள்!
மனித நேயம் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் அதனை செயலில் காட்டிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இந்த ரத்த தானம். இதனை சில வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் போன வெள்ளிக்கிழமை கிங் ஃபஹத் மெடிகல் சிட்டியில் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. மெடிக்கல் சிட்டியின் நிர்வாகிகள் டிஎன்டிஜே நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஹஜ்ஜூக்கு வரும் வெளிநாட்டவர்களின் தேவைக்காக ரத்த தான முகாம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமை காலை எட்டு மணியிலிருந்து ஆட்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியினை டிஎன்டிஜேயின் அங்கத்தினர்கள் சிறப்பாக செயல்படுத்தினர்.
இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5 - 6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், அதிகமான திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJவின் பணியை பாராட்டி, தொண்டரணியிலும், வாகன சேவையிலும் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர்.
தமிழர்கள் மட்டுமன்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கஷ்மீர், உ.பி., பீஹார் மற்றும் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
ரியாத் மண்டலம் தொடர்ச்சியாக KFMC -யில் முகாம்கள் நடத்துவதால், மருத்துவமனை அதிகாரிகளே ரியாத் TNTJ பெயரில் பிரத்தியேகமாக பேனர்கள் தயாரித்து மருத்துவமனையின் பல இடங்களில் வைத்திருந்தனர்.
வெளிநாடுகளிலேயே ஒரே முகாமில் அதிகமாக இரத்த தானம் செய்த மண்டலம் என்ற இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
நமது தமிழகத்திலும் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ரத்ததானம் செய்வதில் முதலிடத்தைப் பெற்று வருவது கவனிக்கத் தக்கது. தொழுகை, நோன்பு என்று இதை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது இஸ்லாம் அல்ல. மனித நேயத்தோடு செய்யக் கூடிய இது பொன்ற நல்ல செயல்களும் இஸ்லாமிய நடவடிக்கையில் அடங்கும்.
இந்த முறை நானும் இரத்ததானம் செய்தேன். 6 மாதங்களுக்கு முன்பும் கொடுத்துள்ளேன். ஆரோக்கியமான நபர் 4 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம். அங்கு ரத்தம் கொடுக்க வந்த ஒரு சகோதரர் கொஞ்சம் வீக்கானவர் போலிருக்கிறது. ரத்தம் கொடுத்து விட்டு வெளியில் வந்தவருக்கு சிறிது நேரத்திலேயே மயக்கம் வர கீழே விழுந்து விட்டார். பிறகு அவரை தூக்கி சிறிது இளைப்பாற வைத்தோம. நினைவு திரும்பியவுடன் சகஜ நிலைக்கு வந்தார். இது போல் நூற்றில் யாருக்காவது ஒருவருக்கு மயக்கம் வரலாம். எனவேதான் ரத்தம் கொடுத்தவுடன் உடனே வெளியேறாமல் சிறிது ஓய்வெடுத்து விட்டு பிறகு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த முகாமில் 375 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாமில், கொடையாளிகள் கூட்டம் அலை மோதியதால், காலை 8.45 மணிக்கே துவங்கியது. இம்முகாமில் பெண்கள் உட்பட 333 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்கான தடுப்பூசி போன்ற காரணங்களுக்காக பல சகோதர-சகோதரிகளால் இரத்தம் வழங்க முடியவில்லை. காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மாலை 5.15 மணியோடு இரத்த தானம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 2011 இல் நடந்த ஹஜ்ஜூக்கான முகாமில் 135 லிட்டர் இரத்தம் பெறப்பட்டது. அதிகபட்சமாக 150 லிட்டருக்கும் மேல் இரத்தம் பெறப்பட்டது இதுவே முதல் முறை.
இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனை அதிகாரிகள் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ - யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர்களான சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், சகோ. மாஹீன் & சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில், சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையில் களப்பணியாற்றிய தொண்டர் அணியினர், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாகும். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல/கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி சுமார் 20 வாகனங்களில் கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வரும் வண்ணமாயிருந்தனர்.
'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
-------------------------------------------------------
தமிழர்களின் அளப்பரிய சேவையை பாராட்டி அரப் நியூஸூம் தனது பங்குக்கு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
A blood donation campaign was held in Riyadh on Friday to help this year’s Haj pilgrims.
King Fahd Medical City (KFMC) teamed up with Tamil Nadu Thowheed Jamaath (TNTJ), and collected 331 units of blood from 375 volunteers at the hospital premises during the weekend.
The event took place at the KFMC Blood bank in Riyadh with the help of men and women from the Asian expatriate community members.
According to a royal decree issued in 1984, the Ministry of Health does not import blood. They are collected from residents and citizens, who voluntarily and regularly donate blood.
The 20 health directorates in the Kingdom make their own arrangements with the blood donors to contribute to this worthy cause.
An official from the Health Ministry said it had stocked 16,000 units of blood to help the Haj pilgrims this year. He added that Friday’s blood donation campaign is part of its contingency plan to stock more blood to provide services to the guests of Allah.
Faisal Mohamed, president of TNTJ Riyadh, said this was the 21st blood donation campaign sponsored by his company.
“The noble act of donating blood will not only give a new lease of life to many, it also heightens our sense of social responsibility by fulfilling the humanitarian and social needs of our local communities,” Mohamed said, adding that the organization not only conducts such events regularly but also arranges a supply of blood as and when required for emergency purposes.
In July, the group conducted a similar campaign to collect blood in aid of Umrah pilgrims.
“We are guided by the Qur’an which says '… and whoever saves a life, it is as though he had saved the life of all mankind! ...' (Al-Qur’an 5:32),” he stressed.
“We got an overwhelming response from our community members as well as from others,” he added.
The donors included mothers from Tamil Nadu whose husbands are working in the Kingdom. Egyptians, Syrians, Pakistanis, Sri Lankans and Bangladeshis also participated in the drive…….
Arab news 22-10-2012
.
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
ஸலாம்
மாஷா அல்லாஹ் ...
ஜசகல்லாஹ் க்ஹைர்
சலாம் சகோ சுல்தான் மைதீன்!
//மாஷா அல்லாஹ் ...
ஜசகல்லாஹ் க்ஹைர் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ.
மன்னிக்கவும். தங்களின் இந்த பதிவிற்கு நான் முற்றிலும் முரண்படுகிறேன்.
//மனித நேயம் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் அதனை செயலில் காட்டிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இந்த ரத்த தானம்.//
மனித நேயம் பேசும் நீங்கள் கீழ்கண்டவாறு பெருமையடிக்க வேண்டிய அவசியம் என்ன? பரவலாக எல்லா இயக்கவாதிகளிடமும் நான் காண்பது இது.
//வெளிநாடுகளிலேயே ஒரே முகாமில் அதிகமாக இரத்த தானம் செய்த மண்டலம் என்ற இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது//
//2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது. //
//நமது தமிழகத்திலும் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ரத்ததானம் செய்வதில் முதலிடத்தைப் பெற்று வருவது கவனிக்கத் தக்கது.//
------------------------
//இந்த முறை நானும் இரத்ததானம் செய்தேன். 6 மாதங்களுக்கு முன்பும் கொடுத்துள்ளேன். ஆரோக்கியமான நபர் 4 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்.//
பார்த்து சகோதரரே... இது மிகவும் தவறு என்று மாற்று மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள். ஒரு சாரார் மட்டும் சொல்வதை நம்பி செயல் படுவது அறிவுடைமையாகாது.
//அங்கு ரத்தம் கொடுக்க வந்த ஒரு சகோதரர் கொஞ்சம் வீக்கானவர் போலிருக்கிறது. ரத்தம் கொடுத்து விட்டு வெளியில் வந்தவருக்கு சிறிது நேரத்திலேயே மயக்கம் வர கீழே விழுந்து விட்டார்//
இது சம்பந்தமாகவும் மற்றும் இதன் தீமைகள் குறித்தும் நிறைய படித்திருக்கிறேன். கீழ்கண்ட சுட்டிகளிலும் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது.
http://www.inneram.com/articles/health-articles/avoid-blood-donation-2027.html
http://rkacu.blogspot.com/2012/06/blog-post_22.html
//....'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32//
அதே வசனத்தின் முன்பகுதி.
"...“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;..." (அல் குர்ஆன் 5:32)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மாஷா அல்லாஹ் சிறப்பான சேவை, உங்கள் பதிவுகளில் இது போன்ற சேவைகளை சேர்த்து பதிவிட்டால் எங்களுக்கும் இது போன்று சேவைகளை செய்யதூண்டும், (ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோதரே)
//மருத்துவமனை அதிகாரிகள் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ - யினருக்கும் நன்றி தெரிவித்தனர்.//
மருத்துவமனை அதிகாரிகளோ, ஊழியர்களோ அல்லது மருத்துவர்களோ எவரேனும் குருதி கொடையளித்தார்களா சகோ.? தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்.
இந்த வசனமும் தங்கள் கவனத்திற்கு...
"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்." அல் குர்ஆன் 4:85.
சலாம் சகோ ராஜகிரியார்!
//மனித நேயம் பேசும் நீங்கள் கீழ்கண்டவாறு பெருமையடிக்க வேண்டிய அவசியம் என்ன? பரவலாக எல்லா இயக்கவாதிகளிடமும் நான் காண்பது இது.//
இயக்க வெறி எந்த நாளும் என்னிடம் இருந்ததில்லை. ஒரு நன்மையான காரியத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதால் அவர்களுக்கும் ஆர்வம் வரலாம் அல்லவா?
இப்படி ஒரு இயக்கமே ஆரம்பிக்காமல் இருந்த காலங்களில் இதற்கு எதிரான உங்களைப் போன்றவர்கள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகள் என்ன? நாம் செய்யவில்லை என்றாலும் செய்பவர்களை குறை கூறக் கூடாது அல்லவா?
//பார்த்து சகோதரரே... இது மிகவும் தவறு என்று மாற்று மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள். ஒரு சாரார் மட்டும் சொல்வதை நம்பி செயல் படுவது அறிவுடைமையாகாது.//
நீங்கள் கொடுத்த சுட்டியில் மருத்துவ தறையினரின் அதாரபூர்வமான எந்த அறிக்கையையும் நான் பார்க்கவில்லையே! இன்று வரை பல முறை ரத்த தானம் நான் கொடுத்தும் எனது உடலில் எந்த பலஹீனமும் ஏற்படவில்லை. பழையபடியே சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். நான் சவுதி வந்து 20 வருடத்துக்கு மேல் ஆகிறது. இதுவரை இரு முறைதான் எனது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்றிருக்கிறேன். அதிலும் ஒரு முறை கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டதால் சென்றது. மற்றபடி ஐடி அக்காமா எடுப்பதற்காகத்தான் மருத்துவமனை சென்றுள்ளேன். இது வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
அடுத்து இயக்கவெறியில் எதற்கெடுத்தாலும் இயக்கத்தை முன்னிலைப்படுத்துவதற்கு நான் எதிரானவன். எந்த இயக்கம் நல்ல காரியங்கள் செய்தாலும் அதை ஆதரிப்பேன். நாளை தமுமுக ஒரு நல்ல செயலை செய்தால் அதையும் பதிவாக்குவேன். எனவே இங்கு செயல்தான் முக்கியமே ஒழிய இயக்கத்தின் பெயர் முக்கியம் அல்ல.
பலஹீனமான நபர்கள் ஆர்வத்தில் வந்தாலும் அவர்களிடம் விளக்கி திருப்பி அனுப்பி விடுகின்றனர். எனவே முதலில் நாம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனையோடு ரத்த தானம் கொடுப்பதில் தவறில்லை என்பது எனது நிலைப்பாடு.
சலாம் சகோ.ராஜகிரியார்
//மனித நேயம் பேசும் நீங்கள் கீழ்கண்டவாறு பெருமையடிக்க வேண்டிய அவசியம் என்ன? பரவலாக எல்லா இயக்கவாதிகளிடமும் நான் காண்பது இது.//
உங்கள் ஆதங்கம் புரிகிறது..நியாயமானதும் கூட...
"நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள் - (35:29)
இந்த வசனத்தில் அல்லாஹ் வெளிப்படையாகவும் தானம் செய்ய சொல்கிறான்...வெளிப்படையாக செய்தால் நல்ல விசயங்கள் பிறருக்கு தெரிவதால் நல்ல செயல்கள் பரவும்..ஆயினும் இது உள்ளங்கள் சம்பந்தப்பட்டது..அல்லாஹ்வே உள்ளங்களை நன்கு அறிபவன்...
நீங்கள் சொல்வது போலவே சிலர் ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைத்தும் அதை விளம்பரமாக்கியும், ஹாஜி என்று முன்னால் போட்டுக்கொண்டும் திரிகின்றனர் ...இது நிச்சயம் பகட்டுக்காகவே..மக்கள் எப்பொழுதுதான் உணருவார்களோ...???
நன்றியுடன்
நாகூர் மீரான்
சலாம் சகோ சுவனப்பிரியன்.
//இப்படி ஒரு இயக்கமே ஆரம்பிக்காமல் இருந்த காலங்களில் இதற்கு எதிரான உங்களைப் போன்றவர்கள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகள் என்ன? நாம் செய்யவில்லை என்றாலும் செய்பவர்களை குறை கூறக் கூடாது அல்லவா?//
நிச்சயமாக. ஆனால் TNTJ ஆரம்பிப்பதற்கு முன்னால் இச்சமூகத்திற்கு எந்த சேவையுமே கிடைக்க வில்லை என்கிறீர்களா? எனக்கு TNTJ-யும் ஒன்று தான். TMMK மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை etc. etc எல்லோரும் ஒன்று தான். யார் எந்த நல்ல காரியத்தை செய்தாலும் அதை ஊக்குவிப்பவன் நான். அதே போல் தவறு செய்தால் அவர் எனக்கு எவ்வளவு தான் வேண்டியவராயினும் முடியும் பட்சத்தில் தட்டி கேட்பவன் - இல்லையேல் சுட்டி காட்டுபவன் நான். நான் இங்கு சுட்டி காட்டியது பெருமையடிப்பதை பற்றி மட்டுமே. உங்கள் மனம் புண்படுவதற்காக சொன்ன வார்த்தை அல்ல அது. ஆக வருத்தம் வேண்டாம்.
//இன்று வரை பல முறை ரத்த தானம் நான் கொடுத்தும் எனது உடலில் எந்த பலஹீனமும் ஏற்படவில்லை. பழையபடியே சுறுசுறுப்பாகவே இருக்கிறேன்.//
நீ்ங்கள் ஆரோக்கியமாக இருப்பதை வைத்து இது சரியென்று முடிவெடுக்க முடியுமா? நான் ஒரே ஒரு முறை இரத்தம் கொடுத்துள்ளேன். அதன் பிறகு நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு தெரியும். அதனால் என்னை வைத்து இது சரியில்லை என்று முடிவெடுத்து கொள்வீர்களா? கூறுங்கள்.
//நீங்கள் கொடுத்த சுட்டியில் மருத்துவ தறையினரின் அதாரபூர்வமான எந்த அறிக்கையையும் நான் பார்க்கவில்லையே!//
அச்சுட்டிகள் உங்களுடைய reference காக மட்டும் தான். அதில் மட்டுமே முழுமையான விவரங்கள் உள்ளன என்று நான் கூறவில்லை. இது பற்றி நன்கு தெரிந்தவர்களையும் மற்ற மருத்துவர்களையும் தொடர்பு கொண்டு பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
//அதாரபூர்வமான எந்த அறிக்கையையும் நான் பார்க்கவில்லையே!///
ஆதாரபூர்வமாக இருக்க வேண்டுமா அல்லது அறிவு பூர்வமாக இருக்க வேண்டுமா என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
வ அலைக்கும் சலாம் சகோ. நாகூர் மீரான்.
ஆம். தங்கள் கருத்தோடு நான் ஒத்து போகிறேன். வெளிப்படையாக நல்ல காரியங்களை செய்வது மற்றவர்களை ஊக்குவிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நமது இயக்கங்களை பொருத்தவரை பொதுவாக உன்னை விட நான் தான் பெரியவன் என்பதை நிறுவ வேண்டியே பல விடயங்களி்ல் (எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை - பொதுவாக சொல்கிறேன்) செயல்படுவதாக எனக்கு அச்சம் ஏற்படுகிறது.
//"...“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;..." (அல் குர்ஆன் 5:32)//
இந்த வசனத்தை குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?
//நிச்சயமாக. ஆனால் TNTJ ஆரம்பிப்பதற்கு முன்னால் இச்சமூகத்திற்கு எந்த சேவையுமே கிடைக்க வில்லை என்கிறீர்களா?//
தமிழகத்தில தவ்ஹீத் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பொது நல சேவைகள் முஸ்லிம்கள தரப்பில் என்னவெல்லாம் செய்யப்பட்டது என்ற விபரத்தைத் தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.
இஸ்லாம் தடுத்த மீலாது விழா நடத்தினோம். இஸ்லாம் தடுத்த தர்கா உரூஸ், கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், வரதட்சணை கொடுமை, முரீது கொடுமை என்று அனைத்தையும் அங்கீகரித்து அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தானே இத்தனை நாளும் இருந்தோம்.
சலாம் சுவனப்பிரியன்,
//இந்த வசனத்தை குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?//
நான் நினைப்பதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. எவ்வாறு ஒருவனை வாழ வைத்தால் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவாரோ அவ்வாறே நியாயமின்றி ஒருவனை கொலை செய்தவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் என்னும் வசன கருத்து - தவறான விடயத்தை மற்றவருக்கு சிபாரிசு செய்து அதனால் எவருக்கேனும் தீங்கு நேரிட்டால் அதிலும் நமக்கு பங்கு உண்டு என்பதை சொல்லவே நான் குறிப்பிட்டது.
இருப்பினும் நான் குறிப்பிட்ட இரண்டாவது வசனமே எனது கருத்குக்கு மிக பொருத்தமான வசனம். ஆனால் அந்த பின்னுாட்டம் இட்ட பின்பு தான் மற்ற வசனம் எனக்கு ஞாபகம் வந்தது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்.
//தமிழகத்தில தவ்ஹீத் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பொது நல சேவைகள் முஸ்லிம்கள தரப்பில் என்னவெல்லாம் செய்யப்பட்டது என்ற விபரத்தைத் தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.
இஸ்லாம் தடுத்த மீலாது விழா நடத்தினோம். இஸ்லாம் தடுத்த தர்கா உரூஸ், கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், வரதட்சணை கொடுமை, முரீது கொடுமை என்று அனைத்தையும் அங்கீகரித்து அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தானே இத்தனை நாளும் இருந்தோம். //
நான் கொஞ்சம் கூட மறுக்க வில்லை சகோதரரே. இவை எல்லாம் நாம் தெரியாமல் செய்தது. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
அதே போல் TNTJ, TMMK இன்னும் மற்ற அமைப்புகள் செய்யும் அற்புதமான சேவைகளையும் நான் மறுக்க வில்லை. அதற்காக மற்றவர் எவருமே எதுவுமே செய்யவில்லை என்றும் கூறமுடியாது. அவரவருக்கு கிடைத்த வாய்ப்புகள், வசதிகள், சந்தர்பங்கள் போன்ற பல விடயங்களை அனசரித்து அவரவர் சக்திக்கேற்றவாறு அவர்கள் செய்யும் சேவைகளின் அளவுகளில் கூடுதல் குறைவு இருக்கலாம். அதிலும் கூட அவரவர் புரிதலுக்கேற்ப அவற்றில் தவறும் இருக்கலாம். அதை சுட்டி காட்டி அவர்களை திருத்த வேண்டுமே தவிர அவர்களை முற்றிலும் புறக்கணிக்க கூடாது. நாங்கள் தான் எல்லாம் செய்கிறோம் என்றும் கூற கூடாது. ஏனெனில் நாம் செய்யும் செயல்களுக்கான கூலிகள் அல்லாஹ்விடமிருந்து...
4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான். (அல் குர்ஆன்)
சகோ!!!
கீழ்கண்ட ஹதீஸை பாருங்கள்...இவர்கள் செய்தது உலகத்தில் பிற மக்களுக்கு லாபமே..ஆனால் மறுமையில் இவர்களுக்கு..??? இதுல முக்கியமாக நம்மையே எடுத்துக்கொள்வோம்..மாங்கு மாங்குன்னு டைப் பண்றோம்...நோக்கம் இறைவன் மட்டும் தானே அறிகிறான்(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)...மற்றவர்களை விட்டு தள்ளுவோம் சகோ...நாமும் நல்ல காரியம் செய்கிறோம்..நம் நிய்யத்களை சரி செய்வோம்...மற்றவர்களையும் நிய்யத்களை சரி செய்ய நியாபகப்படுத்துவோம்...மறுமையில் வெற்றி அடைவோம்..இன்ஷா அல்லாஹ்...
"மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும் போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, 'அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?' என்று இறைவன் கேட்பான். அவர், '(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்' என்று பதிலளிப்பார். இறைவன், '(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்' என்று (மக்களிடையே) பேசப்படுவதற் காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு 'அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?' என்று இறைவன் கேட்பான். அவர், '(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்' என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், '(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவு மில்லை.) அறிஞர்' என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வந்தர் ஒருவர் இறைவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, 'அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?' என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், 'நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்' என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், '(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது.' என்று கூறி விடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்." (முஸ்லிம் - 3865)
நன்றியுடன்
நாகூர் மீரான்
இராஜகிரியார் அவர்களே!
///வெளிப்படையாக நல்ல காரியங்களை செய்வது மற்றவர்களை ஊக்குவிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நமது இயக்கங்களை பொருத்தவரை பொதுவாக உன்னை விட நான் தான் பெரியவன் என்பதை நிறுவ வேண்டியே பல விடயங்களி்ல் (எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை - பொதுவாக சொல்கிறேன்) செயல்படுவதாக எனக்கு அச்சம் ஏற்படுகிறது.///
நன்மையான செயல்களில் போட்டி போட்டுக்கொண்டு செயல்படும் இயக்கங்களில் தவறு காண்பது நல்லதல்ல.
சஹாபாக்களுக்கிடையிலும் நல்ல அமல்களில் போட்டியும் அதீத ஆசையும் இருந்தது.
அவர்களின் போட்டியின் இலட்சியம் வேறாக இருந்தது. அதே இலட்சியத்தின் அடிப்படையில், நமது இயக்கங்களும் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.
///தமிழகத்தில தவ்ஹீத் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பொது நல சேவைகள் முஸ்லிம்கள தரப்பில் என்னவெல்லாம் செய்யப்பட்டது என்ற விபரத்தைத் தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.///சகோதரர் சுவனப்பிரியன்
நீங்கள்கூட, ஓரியக்கத்தின் பொதுநல சேவைகளைத் தூக்கிப் பிடிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
நீங்கள் குறிப்பிடும் இயக்கத்திற்கு முன்னால் இயக்கங்கள், சமூக நலன் சேவைகள் இருக்கவில்லையா?
அவர்கள் செய்த சமூக சேவைகளுக்கும் TNTJ செய்வதற்கும் வித்தியாசம் இருக்கலாம். கூடக் குறைய இருக்கலாம். அதற்காக, மற்ற இயக்கங்கள் செய்யவில்லை என்றாகுமா?
சலாம் சகோ. Yusuf Ismath,
//அவர்களின் போட்டியின் இலட்சியம் வேறாக இருந்தது.//
அதே. அதே. நான் சொல்ல வந்ததை நச்சென்ற ஒரு வரியில் சொல்லி விட்டீர்களே... வாழ்த்துக்கள்.
ஸலாம்
மாஷா அல்லாஹ் ...
மனிதம் தழைக்கும் மனிதநேயம் கொண்ட மனிதர்கள் வாழும் வரை...
சகோ ராஜகிரியார்!
// ஆனால் நமது இயக்கங்களை பொருத்தவரை பொதுவாக உன்னை விட நான் தான் பெரியவன் என்பதை நிறுவ வேண்டியே பல விடயங்களி்ல் (எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை - பொதுவாக சொல்கிறேன்) செயல்படுவதாக எனக்கு அச்சம் ஏற்படுகிறது. //
//அவர்களின் போட்டியின் இலட்சியம் வேறாக இருந்தது.//
எவருடைய உள்ளங்களையும் நாம் அறிய முடியாது. அவர்கள் எந்த நோக்கத்திறகாக செய்கிறார்கள் என்பதை இறைவனும் சம்பந்தபட்டவர்களே அறிய முடியும். இதற்கு நீங்களோ நானோ சகட்டு மேனிக்கு கருத்துக்களை அள்ளிவிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும.
இன்று ஒரு இயக்கமாக செயல்படாமல் முஸ்லிம்கள் என்ற பொது பெயரில் செயல்பட்டால் அந்த மருத்துவ மனை நிர்வாகம் யாரை தொடர்பு கொள்ளும்? 370 பேர் கொண்ட ஒரு பெரும் எண்ணிக்கையை எங்கிருந்து கொண்டு வர முடியும்? காலை எட்டு மணிணிலிருந்து மாலை ஆறு மணி வரை தூக்கத்தையும் இழந்து கடுமையாக உழைப்பது சவுதி அரேபியாவில் முனிசிபல் தேர்தலில் நின்று ஜெயிக்கவா? அல்லது 10000 ரியால் 20000 ரியால் சன்மானமாக தருகிறாரகள் என்ற எதிர்பார்ப்பில் செய்த பணியா? எதுவும் இல்லை.
ஹஜ்ஜூக்கு வருபவர்களின் அவசர தேவையை கருதியே இந்த முகாம் நடத்தப்பட்டது. அதே போல் தமிழ்நாட்டில் நடத்தப்படும் முகாம்களின் பிரதிபலனாக வரும் தேர்தலில் நின்று வாக்கு கேட்டு வரப் போகிறார்களா? அல்லது தமிழக அரசிடம் இருந்து பண முடிப்பு ஏதாவது வாங்கினார்களா? எதுவும் இல்லாதபோது குற்றச்சாட்டுகளை ஏன் வைக்கிறீர்கள்? அவர்கள் ஏதும் தவறுகள் மோசடிகள் செய்திருந்தால் சுட்டிக் காட்டுங்கள். முதல் ஆளாக அதனை நான் கேட்கிறேன். இப்படி இயக்கத்தின் பெயரில் செயல்பட வேண்டாம் என்றால் வேறு எந்த முறையில் செயல்படுவது என்ற தீர்வையாவது சொல்லுங்கள். பல லட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட ஒரு பேரியக்கத்தில் சில சுயநலமிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை இனம் கண்டு களையெடுக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து ஒட்டு மொத்த இயக்கத்தையும் குறை சொல்வது அறிவுடைய செயல் அல்ல. இவ்வாறு குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதால் குறிப்பிட்ட இயக்கத்துக்கு எந்த பின்னடைவுகளும் ஏற்படப் போவதும் இல்லை.
உருவாக்க முடியாத சில விடயங்களில் குருதியும் ஒன்று ....இறைவன் அளித்த கொடையை உயிர் காக்கும் சஞ்சீவியாக உருமாற்றம் செய்ய வைக்கும் இது போன்ற இரத்த தான நிகழ்வுகள் ஊர் தோறும் இடம் பெற வேண்டும்...மனிதரிடம் பாகுபாடுகள் களையப்பட்டு அனைவரிடமும் இருப்பது ஒரு நிறமே என வலியுறுத்தவும் இம்மாதிரியான நிகழ்வுகள் இன்றி அமையாததாகிறது...
திரு விஜய்!
//உருவாக்க முடியாத சில விடயங்களில் குருதியும் ஒன்று ....இறைவன் அளித்த கொடையை உயிர் காக்கும் சஞ்சீவியாக உருமாற்றம் செய்ய வைக்கும் இது போன்ற இரத்த தான நிகழ்வுகள் ஊர் தோறும் இடம் பெற வேண்டும்...மனிதரிடம் பாகுபாடுகள் களையப்பட்டு அனைவரிடமும் இருப்பது ஒரு நிறமே என வலியுறுத்தவும் இம்மாதிரியான நிகழ்வுகள் இன்றி அமையாததாகிறது...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ ஆயிஷா ஃபாரூக்!
//ஸலாம்
மாஷா அல்லாஹ் ...
மனிதம் தழைக்கும் மனிதநேயம் கொண்ட மனிதர்கள் வாழும் வரை..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ யூசுஃப் இஸ்மத்!
//நீங்கள்கூட, ஓரியக்கத்தின் பொதுநல சேவைகளைத் தூக்கிப் பிடிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.//
நான் முன்பே கூறியது போல் தப்லீக், முஸலிம் லீக், தமுமுக, டிஎன்டிஜே என்று எந்த அமைப்பு நல்ல காரியங்கள் செய்தாலும் அதனை ஆதரிப்பேன். ஆதரவு கொடுப்பேன். இயக்க வெறியோ ஒரு இயக்கத்தை தூக்கி பிடிக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ இதுவரை வந்ததில்லை. இனியும் வராது இன்ஷா அல்லாஹ்.
வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!
//அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ.சுவனப்பிரியன்
இந்த போட்டோக்களில் நீங்க எங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன்!!!...
மூணாவது போட்டோல, ரைட் சைடுல, முதல்ல, பேன்ட் பாக்கெட் உள்ள கைய விட்டுட்டு நிக்கிறது நீங்கதானே!!!!
:-) :-) :-)
சகோ நாகூர் மீரான்!
//மூணாவது போட்டோல, ரைட் சைடுல, முதல்ல, பேன்ட் பாக்கெட் உள்ள கைய விட்டுட்டு நிக்கிறது நீங்கதானே!!!!//
ஹா..ஹா..இந்த போட்டோக்களில் எதிலும் நான் இல்லை. அவசியம் இல்லை என்ற காரணத்தால் தவிர்த்து விட்டேன்.
சலாம் சகோ. சுவனப்பிரியன்,
எனது எழுத்துகளை நீங்கள் முற்றிலுமாக தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் சுட்டி காட்ட விரும்பியது இரண்டு விடயங்கள்.
1. நான் இயக்கங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏன் இயக்கங்களின் பெயரில் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக நடந்து கொள்கிறீர்கள் என்று தான் கேட்கிறேன்.
எவருடைய உள்ளங்களில் உள்ளதையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. தான். ஆனாலும் நம் கண் முன்னே நடக்கும் பொது விடயங்களில் மனிதர்களின் நடப்புகளை வைத்து ஓரளவு ஊகிக்க முடியும். அந்த அடிப்படையில் தான் உங்கள் எழுத்துகள் பெருமையடிப்பதாக தோன்றியது. அதனால் தான் சுட்டி காட்டினேன். காரணம் எதிர்காலத்தில் உங்கள் எழுத்துகளில் இது போன்ற எண்ணங்கள் மற்றவர்களுக்கு வராமல் தவிர்த்து கொள்ள உதவுமே என்றும், ஒரு வேளை நான் சொல்வது சரி என்றால் திருத்தி கொள்ள உதவுமே என்றும் தான். உள்ளங்களில் உள்ளதை நன்கறிந்தவன் இறைவன் மட்டுமே.
//இன்று ஒரு இயக்கமாக செயல்படாமல் முஸ்லிம்கள் என்ற பொது பெயரில் செயல்பட்டால் அந்த மருத்துவ மனை நிர்வாகம் யாரை தொடர்பு கொள்ளும்?//
இது நான் முன்பு பேசாதது. நீங்கள் குறிப்பிட்டதால் இதை சொல்கிறேன். நல்ல விடயம் செய்வதாக தானே சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியென்றால் மற்ற அமைப்பினரையும் ஒருங்கிணைத்து செயல் பட்டிருக்கலாமே. அது மட்டும் முடியாது. ஏனெனில் மற்ற இயக்கங்கள் எல்லாம் எதிரி இயக்கங்கள் அல்லவா? (நீங்கள் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளதால் உங்களை கூறவில்லை)
//பல லட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட ஒரு பேரியக்கத்தில் சில சுயநலமிகள் இருக்கத்தான் செய்வார்கள்//
இயக்கத்தின் உறுப்பினர்கள் இதுபோல் இருந்தால் பரவாயில்லை. பெரும் பொறுப்புகளில் உள்ளவர்கள் சுயநலத்தோடும் EGO வோடும் இருக்க கூடாது. ஏனெனில் மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. இது என் எண்ணம் மட்டுமல்ல. என்னை போல் எந்த இயக்கத்தையும் சாராத-எந்த இயக்கத்தையும் எதிர்க்காத-ஒற்றுமையை விரும்பும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களின் கருத்து. இது உங்கள் மனசாட்சிக்கும் நன்றாக தெரியும். இதை படிக்கும் நடுநிலையாளர்களுக்கும் தெரியும்.
2. //ஹஜ்ஜூக்கு வருபவர்களின் அவசர தேவையை கருதியே இந்த முகாம் நடத்தப்பட்டது.//
முற்றிலும் உண்மை. ஆனால் இரத்த தானம் கேடு என்று மாற்று மருத்துவர்கள் கூறுவதால் - அக்கருத்து சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தவறுக்கு துணை போனவராவீர்கள். எனவே ஒரு சகோதர முஸ்லிமாக உங்களை எச்சரிக்க வேண்டியது எனது கடமை. தேர்தல் - பணமுடிப்பு பற்றி எல்லாம் ஏன் பேசுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை.
சகோ.
என்னை பற்றி ஒரு வரியில் தன்னிலை விளக்கம்.
எனக்கு எவரும் எதிரி இல்லை. நான் 100% Neutral. அனைவரையும் நான் எனது சகோதரர்களாவே பார்க்கிறேன். நீங்கள் உட்பட.
//எவருடைய உள்ளங்களையும் நாம் அறிய முடியாது. அவர்கள் எந்த நோக்கத்திறகாக செய்கிறார்கள் என்பதை இறைவனும் சம்பந்தபட்டவர்களே அறிய முடியும். இதற்கு நீங்களோ நானோ சகட்டு மேனிக்கு கருத்துக்களை அள்ளிவிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும.//
அதனால் தானே என்னவே மாற்றவர்கள் செய்யும் செயல்களின் உள்நோக்கம் அறியாது, ஜியாரத்தை, நாம் கபூர் வணக்கம் என்றும், சமாதி வணக்கம் என்றும் சொல்கிறோம். இதை உங்களின் முந்தைய பதிவுகளில் படித்தாக நினைவு
//தமிழகத்தில தவ்ஹீத் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பொது நல சேவைகள் முஸ்லிம்கள தரப்பில் என்னவெல்லாம் செய்யப்பட்டது என்ற விபரத்தைத் தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்//
உங்கள் கேள்வியினை பார்த்தல் தவ்ஹீது என்ற இயக்கம் ஆரம்பிக்கும் முன் முஸ்லிம்கள தரப்பில் எந்தவொரு பொது நல சேவைகளும் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது... நீங்கள் பிறந்த அல்லது வளர்ந்த கால கட்டத்தில் உங்களுக்கு அரபு உலக செய்தி உடனுக்குடன் கிடைத்ததா?? உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் அந்த ஒரே காரணத்திற்காக அங்கு எதுவும் நடக்க வில்லை என்று பொருள் கொள்ளமுடியுமா??? அதுபோல தான் இருக்கிறது உங்கள் கேள்வி...
இன்றையே காலகட்டத்தில் தங்கள் இயக்கத்தின் மூலம் மட்டுமே மற்றவர்கள் நேர்வழி பெறுகிறார்கள் என்று உங்கள் பதிவுகளில் வழியுறுத்தி சொல்வதுயேன்? இயக்க வெறிய அல்லது ????
நாங்களும் நீங்களும் இன்று முஸ்லிமாக இருபத்திற்க்கு கண்டிப்பாக நீங்கள் மறைமுகமாக கொடிபிடிக்கும் __________ இல்லை என்று நம்புகிறேன்
உங்கள் பதிவிகளில் நீங்கள் நடுநிலைவாதி போல பல முறை சொன்னாலும் உங்கள் எழுத்துகளிலும், உங்கள் பதில்களிலும் நீங்கள் ஒரு இயக்கத்தை மட்டுமே ஏந்தி பிடிக்க கூடியவர் என்று எண்ண தோன்றுகிறது... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
சகோ ஷா!
//அதனால் தானே என்னவே மாற்றவர்கள் செய்யும் செயல்களின் உள்நோக்கம் அறியாது, ஜியாரத்தை, நாம் கபூர் வணக்கம் என்றும், சமாதி வணக்கம் என்றும் சொல்கிறோம். இதை உங்களின் முந்தைய பதிவுகளில் படித்தாக நினைவு//
குர்ஆனிலோ நபி மொழியிலோ மீலாது நபி கொண்டாடுவதற்கோ நாகூர் தர்ஹாவில் நமது தலையை அவரது காலடியில் வைப்பதற்கோ, உரூஸ் எடுப்பதற்கோ, பஞ்சா எடுப்பதற்கோ, சமாதிகளில் கட்டிடம் கட்டுவதற்கோ ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? சொல்லுங்கள். நானும் கலந்து கொள்கிறேன்.
//உங்கள் கேள்வியினை பார்த்தல் தவ்ஹீது என்ற இயக்கம் ஆரம்பிக்கும் முன் முஸ்லிம்கள தரப்பில் எந்தவொரு பொது நல சேவைகளும் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது... நீங்கள் பிறந்த அல்லது வளர்ந்த கால கட்டத்தில் உங்களுக்கு அரபு உலக செய்தி உடனுக்குடன் கிடைத்ததா?? உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் அந்த ஒரே காரணத்திற்காக அங்கு எதுவும் நடக்க வில்லை என்று பொருள் கொள்ளமுடியுமா??? அதுபோல தான் இருக்கிறது உங்கள் கேள்வி...//
தமிழகத்தில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு உள்ள முஸ்லிம்களின நடவடிக்கையும் தற்போது முஸ்லிம்களுக்கிடையே உள்ள நடவடிக்கையும் எந்த அளவு விததியாசப்படுகிறது என்பதை அறியாதவரல்ல நீங்கள். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை மாற்று மதத்தவர்கள் நன்றாகவே உணர்ந்து தங்கள் பதிவுகளில் எழுதியும் வருகிறார்கள்.
//இன்றையே காலகட்டத்தில் தங்கள் இயக்கத்தின் மூலம் மட்டுமே மற்றவர்கள் நேர்வழி பெறுகிறார்கள் என்று உங்கள் பதிவுகளில் வழியுறுத்தி சொல்வதுயேன்? இயக்க வெறிய அல்லது ????//
அப்படி நான் எங்கு சொன்னேன். ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்.
//நாங்களும் நீங்களும் இன்று முஸ்லிமாக இருபத்திற்க்கு கண்டிப்பாக நீங்கள் மறைமுகமாக கொடிபிடிக்கும் __________ இல்லை என்று நம்புகிறேன்//
கண்டிப்பாக எந்த இயக்கமும் காரணம் இல்லை. இறைவன் நம் மீது கொண்ட கருணையினால்தான் இன்று முஸ்லிம்களாக இருக்கிறோம்.
//உங்கள் பதிவிகளில் நீங்கள் நடுநிலைவாதி போல பல முறை சொன்னாலும் உங்கள் எழுத்துகளிலும், உங்கள் பதில்களிலும் நீங்கள் ஒரு இயக்கத்தை மட்டுமே ஏந்தி பிடிக்க கூடியவர் என்று எண்ண தோன்றுகிறது... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து//
அதற்கு காரணம் பிஜே என்ற மனிதரின் மேல் உள்ள தனிப்பட்ட மரியாதை காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவரது மேடைப் பேச்சு, சிடிக்கள்தான் என்னை நாத்திகத்திலிருந்து தூய இஸ்லாத்தை உணர்ந்து கொள்ள காரணமாக இருந்தது. இல்லை என்றால் நான் ஒரு பெரியாரிஸ்டாக மாறியிருப்பேன். இறைவன் அவரை இப்படி ஒரு நல் வழிக்கு பயன் படுத்திக் கொண்டான். அதன் மூலம் எனக்கும் ஒரு நேர் வழியைக் காட்டினான். குர்ஆனையும் ஹதீஸையும் நீங்கள் சொன்னாலும் நான் கேட்டுக் கொள்வேன். இன்றும் நான ஒரு மாணவன்தான்.
//குர்ஆனிலோ நபி மொழியிலோ மீலாது நபி கொண்டாடுவதற்கோ நாகூர் தர்ஹாவில் நமது தலையை அவரது காலடியில் வைப்பதற்கோ, உரூஸ் எடுப்பதற்கோ, பஞ்சா எடுப்பதற்கோ, சமாதிகளில் கட்டிடம் கட்டுவதற்கோ ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? சொல்லுங்கள். நானும் கலந்து கொள்கிறேன்//
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாங்கள் வாழ்ந்த கால காட்டத்தில் கபுர்களுக்கு சென்று ஜியாரத் செய்து இருக்கிறார்கள், அயீஷா (ரலி) மற்றும் சஹாபாக்களும் ஜியாரத் செய்து இருக்கிறார்கள்... முஹம்மது நபியின் ரௌல ஷரீபில் முகம் புதைத்து அழுத சஹாபாக்கள் பற்றிய ஆதாரன பூர்வமான ஹதீதுகளும் உள்ளது.... சுருங்க சொல்லவேண்டுமென்றால், அரபு உலகத்தில் இது போன்ற செயல்கள் இல்லை என்று கூறுவதை வீட இருப்பதை தடை செய்து விட்டார்கள் என்று கூறுவதே சரியாக இருக்கும்.. எந்த கால கட்டத்தில் இது போன்ற செயல்கள் ஆரம்பித்தது என்று ஆராய்ந்தால் உண்மை தெரிய வரும்..
நம் நாட்டில் மாட்டும் தான் இந்த பழக்கம், இது நபி வழி கிடையாது என்று கூறுபவர்கள், இன்றும் இருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அடக்க ஸ்தளத்திற்கு என்ன விளக்கம் கூற போகிறார்கள்?? முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு வந்த இரண்டு கலிபாகளும் தவறான பாதையை காட்டி தந்து விட்டார்களா??
ஹஜ், நோன்பு, குர்பானி இன்னும் நிறைய நாம் இன்று செய்யும் விடயங்களை நபி அவர்கள் காட்டி தந்துள்ளார்கள். இந்த செயல்பாடுகள் பலவற்றிற்கு பின்னும் அல்லாஹுவின் அதிசயம், அத்தாட்சி, வழிகாடுத்தால், நினைவு கூறுதல் ஏதாவது ஒன்று இருக்கும்.... இதை அடிபடையாக கொண்ட நம் செயல்கள் அமைந்தால் அது எப்படி சிர்கு ஆகும்??
உதாரணமாக 4 + 4 = 8 என்று சொல்லி கொடுத்தால் நான் 4 +4 என்று மட்டுமே கணக்கு போடுவேன் வேறு எந்த இடத்திலும் இந்த எங்கள் வர கூடாது என்று சொல்வது அறிவீனமாக தோன்றுகிறது.... இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், போர் காலங்களில் நபி அவர்கள் கொடி உபயோக படுத்தியதாக நாம் அறிகிறோம், அதை அடிபடையாக கொண்டு இன்று இயக்கங்கள் போராட்டத்திற்கு மட்டும் அல்லாமல் பல இடங்களில்
உபயோக படுத்தவில்லையா??
//தமிழகத்தில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு உள்ள முஸ்லிம்களின நடவடிக்கையும் தற்போது முஸ்லிம்களுக்கிடையே உள்ள நடவடிக்கையும் எந்த அளவு விததியாசப்படுகிறது என்பதை அறியாதவரல்ல நீங்கள். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை மாற்று மதத்தவர்கள் நன்றாகவே உணர்ந்து தங்கள் பதிவுகளில் எழுதியும் வருகிறார்கள்.//
ஆம் உண்மை தான்... இன்று நான்கே தெரு இருக்கும் கிராமங்களில் கூட இரண்டு பள்ளிகளை பார்க்க முடிகிறது, ஓர குடும்பத்தில் உள்ளவர்கள் 2 /3 நாட்கள் தனி தனியாக பெருநாள் கொண்டாடுவதை பார்க்க முடிகிறது. பெற்றோர்கள் தங்கள் சார்ந்த இயக்கத்தில் இல்லாத காரணத்தால் இன்னல்கள் அனுபவிப்பதை பார்க்க முடிகிறது....
மணவிலக்கு இறைவான் வெறுக்க கூடிய செயல் என்பதை மனதில் பதிய வைக்காமல், திருமணம் வெறும் ஒரு ஒப்பந்தம் என்பதை மனதில் எற்றியாதால் சில காலத்திலே மணவிலக்கு பெற்று சென்றதை கூட சமீபத்தில் கண்கூடாக பார்த்தேன்.... மணவிலக்கு காண காரணம் மிக கொடுமை. இருவரும் வேறு வேறு இயக்கத்தை சார்ந்தவர்களம்.... நீங்கள் சொன்னது உண்மைதான் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் மறுமலர்ச்சி தான்....
*//இன்றையே காலகட்டத்தில் தங்கள் இயக்கத்தின் மூலம் மட்டுமே மற்றவர்கள் நேர்வழி பெறுகிறார்கள் என்று உங்கள் பதிவுகளில் வழியுறுத்தி சொல்வதுயேன்? இயக்க வெறிய அல்லது ????////உங்கள் பதில்களிலும் நீங்கள் ஒரு இயக்கத்தை மட்டுமே ஏந்தி பிடிக்க கூடியவர் என்று எண்ண தோன்றுகிறது... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து//*
அப்படி நான் எங்கு சொன்னேன். ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்.
நான் மேல சொன்ன இரண்டு கேள்விகளையும் ஓர அர்த்தத்தில் தான் கேட்டேன்.... உங்களுடைய பதிலே ஆதாரம்... மாற்றவார்கள் என்ன செய்தாலும் இறைவன் கொண்ட கருணையினால்தான் இது நடந்தது...
நாம் விரும்பும் இயக்கம் மூலமாக நடந்தால், அந்த இயக்கம் மூலமாக இறைவன் நம் மீது கொண்ட கருணையினால்தான்??? இது நடுநிலைவாதிகளுக்கு உகந்தது அல்ல என்பது என் கருத்து...
PS: sorry for the spell mistake
சலாம் சகோ. சுவனப் பிரியன்,
மருத்துவமனை அதிகாரிகளோ, ஊழியர்களோ அல்லது மருத்துவர்களோ எவரேனும் குருதி கொடையளித்தார்களா சகோ.? தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன் தகவலுக்காகத் தான் கேட்கிறேன்.
நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதை இறைவன் நன்கறிந்தவன்.
சலாம் இராஜகிரியார்!
//மருத்துவமனை அதிகாரிகளோ, ஊழியர்களோ அல்லது மருத்துவர்களோ எவரேனும் குருதி கொடையளித்தார்களா சகோ.? தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன் தகவலுக்காகத் தான் கேட்கிறேன்.//
குருதி கொடையளிக்க வந்த 357 பேரையும் சரியாக முடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. அந்த அளவு சுறுசுறுப்பாக வேலை செய்தனர். நேரமின்மையால் சிலரை திருப்பியும் அனுப்பினர். இப்படி நிலைமை இருக்க வேலை செய்யும் ஊழியர்கள் ரத்தம் கொடுத்தார்களா என்று கேட்பது விந்தையாக இருக்கிறது. நான் இரத்தம் கொடுத்தது இறைவனின் பொருத்தத்தை நாடி. யார் கொடுக்கிறார்களோ அவர்கள் நன்மையை அடைந்து கொள்வார்கள். எவரையும் கட்டாயப் படுத்துவது அவசியமில்லையே. இரத்தம் கொடுக்க ஆள் கம்மியாக இருந்தால் அவர்களும் கொடுத்திருக்கலாம். எதையுமே துருவி துருவி பார்த்தால் எந்த காரியமும் கை கூடாது. :-)
//முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாங்கள் வாழ்ந்த கால காட்டத்தில் கபுர்களுக்கு சென்று ஜியாரத் செய்து இருக்கிறார்கள், அயீஷா (ரலி) மற்றும் சஹாபாக்களும் ஜியாரத் செய்து இருக்கிறார்கள்...//
அது எந்த கபுருகள்? பொது மைய வாடிக்கு சென்று பிரார்த்திருக்கிறார்கள். அதை நானும் செய்கிறேன். எனது முன்னோர்கள் எனது ஊர்க்காரர்கள் அடங்கியுள்ள பொது மையவாடிக்கு சென்று நான் அழுது பிரார்த்தனையில் ஈடுபடுவேன்.
முகமது நபி நாகூர் தர்ஹாவைப் போன்ற ஒரு கட்டிடத்தில் நின்று பிரார்த்தனை செய்ததாக நீங்கள் ஏதாவது ஹதீதை தர முடியுமா? ரசூலுல்லாவின் பெயரால் இட்டுக்கட்டுவதற்கு முதலில் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்.
//நம் நாட்டில் மாட்டும் தான் இந்த பழக்கம், இது நபி வழி கிடையாது என்று கூறுபவர்கள், இன்றும் இருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அடக்க ஸ்தளத்திற்கு என்ன விளக்கம் கூற போகிறார்கள்?? முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு வந்த இரண்டு கலிபாகளும் தவறான பாதையை காட்டி தந்து விட்டார்களா??//
அது ரசூலுல்லாவுடைய வீடு. அனைத்து நபிமார்களும் எங்கு இறக்கிறார்களோ அந்த இடத்திலேயே அவர்கள் உடலை அடக்கம் செய்வது வழி வழியாக வந்த மரபின் அடிப்படையில் நடைபெற்றது. உள்ளே வெறும் மண்ணால்தான் நபிகள் அவர்களுடைய கபுர் இருக்கும். சிமெண்டால் பூசப்பட்டிருக்காது. அங்கு யாரும் பிரார்த்தனைக்கு கையேந்தி வந்தால் ஒரு காவலர் அவர்களை வழி நடத்தி இறைவனிடம் கேளுங்கள் என்று சொல்வதை பார்க்கிறோமே. தர்ஹாக்களை இடிக்க சொல்லி நபிகள் நாயக்தின் கட்டளை நேரிடையாக இருக்கிறதே!
//ஆம் உண்மை தான்... இன்று நான்கே தெரு இருக்கும் கிராமங்களில் கூட இரண்டு பள்ளிகளை பார்க்க முடிகிறது, ஓர குடும்பத்தில் உள்ளவர்கள் 2 /3 நாட்கள் தனி தனியாக பெருநாள் கொண்டாடுவதை பார்க்க முடிகிறது. பெற்றோர்கள் தங்கள் சார்ந்த இயக்கத்தில் இல்லாத காரணத்தால் இன்னல்கள் அனுபவிப்பதை பார்க்க முடிகிறது....//
தனிபள்ளி கட்ட நிர்பந்தித்தது யார்? நீங்கள் அனுமதிக்காததால் அவர்கள் தனிப்பள்ளி கட்டினார்கள். இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளும் தவ்ஹீத் பள்ளிகளாக மாறி விடும். கவலை வேண்டாம்.
வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுத்த எத்தனையோ மணமகனை எனக்கு தெரியும். கல்வியில் மறுமலர்ச்சி உண்டாகியுள்ளது. தர்ஹாக்களில் கூட்டம் குறைந்து காற்று வாங்குகிறது. இளைஞர்கள் எல்லாம் ஐந்து வேளை தொழுது கொண்டு குர்ஆனை ஆராய்சி செய்கிறார்கள். முல்லாக்களின ராஜ்ஜியம் ஒழிந்து அனைவருமே மார்க்க அறிஞர்களாக மாறியுள்ளனர். பெண்களும் பள்ளிக்கு தொழ வருகின்றனர். தற்போது தர்ஹாக்களுக்கு பெண்கள் செல்வது தவ்ஹீத் எழுச்சியால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி அடுக்கி கொண்டே செல்லலாம். இந்த மறுமலர்ச்சியால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளை எதிர்ப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதைப் பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை. அவர்களுக்காக பிரார்த்திக்கிறோம்.
சலாம் சகோ. சுவனப் பிரியன்,
தகவலுக்காகத் தான் கேட்கிறேன் என்று கூறியும் உங்களுடைய சப்பை கட்டு - தங்களின் சிந்தனையின் போக்கு குறித்து எனக்கு அதிர்சி அளிக்கிறது.
உண்டு - இல்லை - (அல்லது உங்களுக்கு தெரியவில்லை என்றால்) தெரியவில்லை என்ற மூன்று பதில்களில் ஒன்றை மட்டும் தான் நான் எதிர் பார்த்தேன். உங்கள் பதில் இவ்விடயத்தில் எனது முடிவுகளுக்கு ஒரு உதவியாய் இருந்திருக்கும்.
மோனோபாலியாய் இருக்கும் ஆங்கில மருத்துவத்தின் தீங்குகள் பற்றி தாங்கள் அறியாமல் இருக்கலாம் அல்லது அக்கறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் எப்பொழுதுமே ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மை குறித்து அதிகமதிகம் சிந்திப்பவன். தனி நபர்கள் குறித்து அல்ல. :-((
//தகவலுக்காகத் தான் கேட்கிறேன் என்று கூறியும் உங்களுடைய சப்பை கட்டு - //
இறைவனின் பொருத்தத்தை நாடி நான் ரத்த தானம் செய்தேன் என்பது உங்களுக்கு சப்பைக் கட்டாக தெரிகிறதா? உங்கள் அளவுக்கு இது போன்ற உலக விஷயங்களில் எனக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்றே நினைக்கிறேன். புரிதலுக்கு நன்றி!
//இறைவனின் பொருத்தத்தை நாடி நான் ரத்த தானம் செய்தேன் என்பது உங்களுக்கு சப்பைக் கட்டாக தெரிகிறதா?//
உங்களுக்கு வசதியான ஒரு வரியை மட்டும் எடுத்து கொண்டு பேசுவது நேர்மை அல்ல. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி
சகோ தீன்!
//புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//முகமது நபி நாகூர் தர்ஹாவைப் போன்ற ஒரு கட்டிடத்தில் நின்று பிரார்த்தனை செய்ததாக நீங்கள் ஏதாவது ஹதீதை தர முடியுமா? ரசூலுல்லாவின் பெயரால் இட்டுக்கட்டுவதற்கு முதலில் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். //
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் உஹுத் போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களை ஜியாரத் செய்வார்கள் என்றும் ஹதீஸ்களில் பார்க்கின்றோம். நீங்களே சொல்லிவிடீர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அடங்க பட்டிருக்கும் இடம் ஒரு கட்டடதிர்க்குள் என்று. கப்ரின் மீது கட்டடம் கட்ட கூடாது என்று கூறியுள்ளார்கள் என்பது வணக்கம் செய்யப்படுகின்ற ஒரு வழிபாட்டுத்தலம் ஆக கூடாது என்பதே ஹதீஸின் மூலம் தெரிகின்றது. எனக்கு தெரிந்த வரை எந்த ஒரு தர்காவிலும் தொழுகை நடத்துவதை நான் கண்டதில்லை... ஒரு வேலை அதுபோல எங்காவது நடந்தால் தெரிவியுங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து அது போன்ற செயல்களை தடுக்க கடமை பட்டுள்ளேன்.
ஆனால் இன்றோ நான் ஜியரதிர்காக சென்றான் என்றால் கூட இல்லை இல்லை நீ அவரை வணங்க தான் சென்றாய் என்பதும், கப்ரில் அடங்கபட்டவர் பொருட்டல் நான் அல்லாஹுவிடம் தான் என் கோரிக்கைகளை வைத்தேன் என்றால் இல்லை நீ நேரடியாக அடங்க பட்டவரிடம் தான் விண்ணபிதாய் என்றும், இறை அச்சத்துடன் தான் நான் தர்காவிற்க்கு சென்றேன் என்றால் கூட, இல்லை நீ அங்கு வரும் பெண்களை இடிக்க தான் சென்றாய் என்றும் திரித்து கூறுவதன் காரணம்?? ஒவ்வரு செயல்பாடுகளின் சொந்தகாரகளை வீட அதை பார்த்து கொண்டு இருக்கும் மக்களுக்கு அவர்களின் உள் நோக்கம் தெரிந்து விடுமா என்ன?? எனக்கும் சொல்லிதாருங்கள் நானும் தெரிந்து கொள்ள அவாலக உள்ளேன்.
//அது ரசூலுல்லாவுடைய வீடு. அனைத்து நபிமார்களும் எங்கு இறக்கிறார்களோ அந்த இடத்திலேயே அவர்கள் உடலை அடக்கம் செய்வது வழி வழியாக வந்த மரபின் அடிப்படையில் நடைபெற்றது. உள்ளே வெறும் மண்ணால்தான் நபிகள் அவர்களுடைய கபுர் இருக்கும். சிமெண்டால் பூசப்பட்டிருக்காது. அங்கு யாரும் பிரார்த்தனைக்கு கையேந்தி வந்தால் ஒரு காவலர் அவர்களை வழி நடத்தி இறைவனிடம் கேளுங்கள் என்று சொல்வதை பார்க்கிறோமே. தர்ஹாக்களை இடிக்க சொல்லி நபிகள் நாயக்தின் கட்டளை நேரிடையாக இருக்கிறதே!//
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தர்காக்கள் கிடையாது என்று கூறுபவர்கள், இல்லாத தர்ஹாக்களை இடிக்க சொல்லி நபிகள் நாயகம் கட்டளை இட்டார்கள் என்று கூறுவது, வேடிக்கையாகவும், நம்முடைய புரிதலில் எங்கோ தவறு நிகழ்ந்துள்ளதோ என்றும் எண்ண தோன்றுகிறது.
சஹாபா பெருமக்கள், வழிமார்கள், இறைநேசர்களின் தர்காக்களை இடித்தது அதை புரட்சி/சீர்திருத்தம் என்று கூறுபவர்கள் முதலில் அல்லாஹுவின் திருத்தூதர் தர்காவை அல்லவே இடித்து இருக்க வேண்டும் (அஸ்தகுபிருல்லாஹ்). தர்காவின் அமைப்பு கூடாது என்றிருந்தால், நபிமார்களின் உயிர் எங்கு பிரிகின்றதோ, அங்கு கட்டிடங்கள் இருந்தால் அதை தரைமட்டமாக்கி விட்டு அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்றல்லவா ஹதீஸ் வந்திருக்க வேண்டும்??? ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதமிகு ரவ்ழா ஷரீபில் நல்லடக்கம் செய்ததும் ஹழ்ரத் அலி ரழி (தர்ஹாக்களை இடிக்க சொல்லி நபிகள் நாயகம் கட்டளை இட்டார்கள் என்று சொல்லும் அதே ஹழ்ரத் அலி ரழி) என்பதை வரலாறு பறை சாற்றிக்கொண்டிருக்கின்றது.
நான் ஏற்கனவே சொன்னது போல அரபு உலகத்தில் இது போன்ற செயல்கள் இல்லை என்று கூறுவதை வீட இருப்பதை தடை செய்து விட்டார்கள் என்று கூறுவதே சரியாக இருக்கும்.. இன்று அங்குள்ள மன்னர் நபிகள் நாயகம் தர்காவில் முன் நின்று அல்லாஹுவிடம் பிராத்தனை செய்வதை youtube விடியோகளில் காண கிடைக்கிறது.
நமது மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்ப்படுத்துபவரின் செயல்கள் நிரகரிக்கப்படும்”.
(அறிவிப்பவர் அன்னை ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகைப்படுத்திப் புகழ்ததைப்போல் என்னையும் நீங்கள் புகழ்ந்துவிடாதீர்கள்.நிச்சயமாக நான் ஒரு அடியானே!
என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியான் என்றும், அவனது தூதர் என்றும் கூறுங்கள். (புகாரி: 3189)
நாயகத் தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
’நபிகளார்(ஸல்)அவர்கள் தமது ஹஜ்ஜின் போது (மினாவில் எறிவதற்காக) பொடிக்கற்களை கேட்க, நானும் அவ்வாறே எடுத்துக் கொடுத்தேன்.இதைக்கண்ட நபிகளார்’இவ்வாறே பொடிக் கற்களாலேயே எறிய வேண்டும்.(ஆவேசத்தில் பெரும் கற்களை எடுத்து எறிந்து)மார்க்கத்தில் அளவுகடந்து செல்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வாறு வரையறை மீறிச்சென்றது தான் உங்களின் முன் வாழ்ந்த சமுதயத்தினரை அழித்தொழித்தது’என எச்செரித்தார்கள்.
(ஆதாரம் நஸயீ 3007, இப்னு மாஜா 3020
(4:48.) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
முதலில் இந்த நபி மொழிகளுக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் விளக்கம் கொடுத்து விட்டு மற்றவற்றை பேசுவோம். குர்ஆனின் கட்டளைக்கும் நபிகளின் கட்டளைக்கும் எந்த மாற்றமும் இல்லாமல் தர்ஹாக்களில் வணக்கங்கள் நடைபெறுகிறது என்பதை உறுதியாக உங்ளால் சொல்ல முடியுமா?
உங்களின் பதிலை பார்த்துக் கொண்டு பிறகு வீடியோ லிங்குகளை நான் தருகிறேன்.
//குர்ஆனின் கட்டளைக்கும் நபிகளின் கட்டளைக்கும் எந்த மாற்றமும் இல்லாமல் தர்ஹாக்களில் வணக்கங்கள் நடைபெறுகிறது என்பதை உறுதியாக உங்ளால் சொல்ல முடியுமா?//
முதலில் தர்காக்கள் கூடுமா கூடாத என்ற முடிவையே நாம் இங்கு வைக்கவில்லை, அதில் ஒரு நிலைபாட்டை கண்ட பின் அல்லவே அங்கு என்ன விதமான காரியங்களை செய்யலாம் என்பதை பற்றி பேச இயலும். ஒருவேளை நாம் முதலில் அங்கு நடப்பதை பற்றி பேசிவிட்டு பின்னர் நீங்களோ அல்லது நானோ தர்காக்கள் கூடாது என்று சொன்னால் நாம் பேசியது அனைத்தும் வீண் அல்லவா?
சமைப்பதற்கு முன்பே உணவின் சுவை பற்றி சொல்லுங்கள் எனபது போல இருக்கிறது உங்கள் கேள்வி
//சமைப்பதற்கு முன்பே உணவின் சுவை பற்றி சொல்லுங்கள் எனபது போல இருக்கிறது உங்கள் கேள்வி//
தர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது,
1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)
2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)
தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?
3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)
4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)
5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)
6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)
தர்ஹா கூடாது என்பதற்கான நபி மொழிகளை இங்கு வைத்துள்ளேன். இனி நீங்கள் தர்ஹா கூடும் என்பதற்கு ஆதாரங்களை தர வேண்டும்.
1389. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, 'இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களின் உயிரை என்னுடைய நெஞ்சுக்கும் தோளுக்குமிடையே அல்லாஹ் கைப்பற்றினான். என்னுடைய வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
1390. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்' எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் கப்ரு ஒட்டகத்தின் திமில் போன்று உயரமாக இருந்ததைத் தாம் பார்த்ததாக சுஃப்யான் அத் தம்மார் அறிவித்தார்.
இப்னு அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை; மாறாக, இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்" என உர்வா கூறுகிறார்.
அம்ருப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்.
நான் உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூறியதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள் (குறிப்பு இந்த ஹதீதின் தொடர்ச்சி இன்னும் இருக்கிறது, தேவைபட்டால் முழுமையும் பதிகிறேன்)
அன்னை அயீஷா (ரலி) அவர்கள் தன்னை நபிகள் அருகில் அடக்கம் செய்யாமல் மற்ற மனைவிமார்கள் அருகில் பொது மைய வாடியில் அடக்க சொன்னதாகவும் ஹதீதுகள் கூறுகின்றன...
மேல குறிப்பிட ஹதீதுகள் மூலம் பொது மையவாடி அல்லாது மற்ற இடங்களிலும் நல்லடியார்களை அடக்கம் செய்வது தெரிய வருகிறது, அவர்களுக்கு பொது மையவாடிக்கும் தனியாக அடக்கப்பட்ட இடத்திற்கும் கூட வேறுபாடு தெரிந்து உள்ளது... அதோடு மட்டுமல்லாமல் அந்த காலகட்டங்களில் சுவர் இடிந்து விழுந்த பொது அதை சஹாபாக்கள் புணரமைக்கவும் செய்து இருகிறார்கள்... இது போல உள்ள ஆதாரபூர்வமான ஹதீதுகளையும் மனதில் கொண்டு தான் சட்டம் வகுக்க வேண்டுமே ஒழிய தன்னுடைய வாதத்தை நிலை நாட்ட வேண்டிய ஆதாரங்களை மட்டும் எடுத்து கொண்டு மற்றவற்றை விடுவது எப்படி சரியாகும்??
இம்மூவர் மட்டும் தான் தனியான இடங்களில் அடங்கபட்டுள்ளர்களா என்றால் இல்லை. அதற்க்கு ஆதாரம் இடிக்கப்பட ஹழ்ரத் ஹம்ஜா ரழி, ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜஹஷ் ரழி, ஹழ்ரத் அன்னை பாத்திமா ரழி, ஹழ்ரத் அப்பாஸ் ரழி, ஹழ்ரத் இமாம் ஹசன் ரழி மற்றும் பலரின் கபுர்கலே சாட்சி.
ஹளரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தான பின் நபியவர்களை முத்தமிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் புகாரி(ரஹ்)) முஹத் இப்னு ஜபல்(ரலி) மற்றும் பிலால்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களின் கப்றை ஜியாரத் செய்வதற்காக வந்தார்கள், (அதன் பிறகு நபி(ஸல்) அவர்களின் கப்ரில்) அமர்ந்து அழுதார்கள்,அதன் பிறகு (நபி(ஸல்) அவர்களின் கப்ரின் மீது) தனது முகத்தை வைத்து அழுத்தி (முத்தம்) கொண்டார்கள்
இமாம் இப்னு மஜா(ரஹ்), இமாம் தப்ரானி(ரஹ்),இமாம் அஹ்மது(ரஹ்),இமாம் இப்னு ஸுப்கி(ரஹ்) மற்றும் இமாம் அஸாகிர்(ரஹ்)) ஒரு நாள் மர்வான்(ரலி) (மதினாவின் கவர்னராக இருக்கும் போது) ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களின் கப்ரின் மீது முகத்தை வைத்து இருந்தார்கள், அப்பொழுது (மர்வான்) அவர்கள், அந்த மனிதருக்கு அருகில் சென்று அவர் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) எனக் அடையாளம் கண்டார்கள், அவரை நோக்கி நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என கேட்டார்கள், அதற்கு ஆம், நான் நபி(ஸல்) அவர்களை காண வந்தேன் என்று கூறினார்கள் என தாவுது பின் ஸாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்(இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்), இமாம் அஹ்மது(ரஹ்), இமாம் ஹாகிம்(ரஹ்), இமாம் தஹபி(ரஹ்),இமாம் தப்ரானி(ரஹ்), இமாம் ஹைதமி(ரஹ்).)
ஆயிஷா(ரலி)கூறினார்கள்” நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைவது விட்டீர்கள்’ என்று கூறினார்.
பாசம் ஒங்க சாஹாபாக்கள் இறந்தவர்களயும், கபுர்கலையும் முத்தமிட்டார்கள் என பல ஹதீதுகள் இருக்கும் பொது அதை சஜ்தா என திரித்து கூறுவது ஏன்?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்." - ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதிர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள். (அல் குர்ஆன் 2:154)
இவ்வாறான தெளிவான வசனங்கள் இருக்கும் பொது கூட, இன்று பலரும் நா கூசும் அளவிற்கு நல்லடியார்கள் பற்றி பேசுவதை காண முடிகிறது
சகோ ஷா!
ஆதாரபூர்வமான ஹதீதுகள் தர்ஹாக்களை இடிக்க சொல்லும் போது நீங்கள் சம்பந்தமில்லாமல் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறீர்களே! வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்க வேண்டும். முகமது நபி முதற்கொண்டு யாருடைய அடக்கத் தலத்துக்கு சென்றாலும் அங்கு அடங்கியிருப்பவர்களின் நலனுக்காகத்தான் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு இறைவனிடம் சிபாரிசு செய்யுங்கள் என்ற ரீதியில் கேட்க மார்க்கம் தடை செய்கிறது. இன்று அனைத்து தர்ஹாக்களிலும் அதுதான் நடந்து வருகிறது. இதற்கு உங்களின் பதில் என்ன?
//அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதிர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள். (அல் குர்ஆன் 2:154)
இவ்வாறான தெளிவான வசனங்கள் இருக்கும் பொது கூட, இன்று பலரும் நா கூசும் அளவிற்கு நல்லடியார்கள் பற்றி பேசுவதை காண முடிகிறது//
எனினும் உணர மாட்டீர்கள் என்று தெளிவாக இறைவனே கூறுகிறானே! அந்த நல்லடியார்களிடம் சென்று பிரார்த்திக்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? அடுத்து இவர் நல்லடியார் என்று நீங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள்? உங்களுக்கு வஹீ வந்ததா? யார் நல்லடியார் என்பதை தெரிந்தவன் இறைவன் மட்டுமே அல்லவா?
இவ்வளவு வீம்பு பண்ணிக் கொண்டு இது போன்று ஷிர்கை செய்து பாவத்தை தேடிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களையும் வழி கெடுத்து நீங்களும் வழி கெடாதீர்கள். அருமையான மார்க்கமாக குர்ஆன் இருக்கிறது. அதன் வழிக்கு வாருங்கள்.
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம். இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வு களில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது. ஹிமோகுளோபின் (Heart attack) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.
எனவே தொடர்ச்சியான இடைவெளியில் ரத்ததானம் செய்து நமது உடலையும் புத்துணர்ச்சியோடு வைப்பதோடு, பிறரின் உயிரையும் காப்போம். ஒருவருடன் கூடப்பிறந்தால்தான் ரத்த சொந்தம் என்பது இல்லை. நாம் ஒருவருக்கு ரத்தம் கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினால், அவரும் நம் ரத்த சொந்தம்தான்.
http://tk.makkalsanthai.com/2012/10/blog-post_2173.html
Post a Comment