பெண்களை விளம்பரப் பொருளாக ஏன் மாற்றுகிறீர்கள்?
மதிப்பிற்குறிய ஆசியர் அவர்களுக்கு,
உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்து, பல சவால்களுக்கிடையில் செய்திகளை, தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கு முதலில் உங்களுக்கு நாங்கள் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகை கருதப்படுகிறது. ”வாள் முனையை விட பேனா முனைக் கூர்மையானது” என்றொரு சொல்லாடலை ஆங்கில ஆசிரியர் எட்வர் புல்வர்-லைட்டன் என்பவர் உருவாக்கினார். நாங்களும் அதை நம்புகிறோம்.
அத்தனை அற்புதமானக் கூர்வாளைக் கொண்டு நீங்கள் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் பத்திரிக்கைகளில், இதழ்களில் ஆபாசப் படங்களை வெளியிடுகிறீர்கள் என்று காணும்போது வேதனை அடைகிறோம். உங்களின் இந்த பொறுப்பின்மையைக் கண்டு வெட்கப்படுகிறோம். ஒரு புறம் பெண்களுக்கெதிராக அரசு, தரகர்கள், அதிகார வர்க்கத்தினர், ஆண்கள் செய்யும் வன்கொடுமைகளைப் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள். மறுபுறம், நடிகைகள், பெண்களின் உடல் பாகங்களை (பாலியல் உணர்வைத் தூண்டும் வகையான) அதாவது கவர்ச்சி, ஆபாசம் என்று சொல்லக்கூடிய படங்களையும் செய்திகளையும் வெளியிடுகிறீர்கள். உங்களின் இந்தச் செயலை “சதை வியாபாரம்” என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் வெளியிடும் இந்த ஆபாசப் படங்களால் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்பெறுவதாகவும், அது பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைகளுக்கு வித்திடுவதாகவும் நாங்கள் கருதுகிறோம். அக்குற்றங்களுக்கு மறைமுகக் காரணிகளாக உங்களை, உங்கள் பத்திரிகையை, இதழைப் பொறுப்பாளராக்குகிறோம். இப்படி தூண்டப்பெறும் ஆண்கள் பெரும்பாலும் குழந்தைகளை, பதின்பருவ வயதினரை அதிகமாகச் சுரண்டுகின்றனர்.
மிஸ் எனும் இதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது “பாலியல் பண்டமயமாக்கப்படும் கலாச்சாரத்தில், பெண்கள் (குறிப்பாக) தங்களைத் தாங்களே மற்றவர்களுக்கான நுகர்வுப் பொருளாக காணும் நிலைக்கு உள்ளாகிறார்கள். இந்த பாலியல் பண்டமய அகவயப்படுத்துதல் பல்வேறு மன நலச் சிக்கலோடு தொடர்பு படுத்தப்படுகிறது. (மருத்துவரீதியான மன அழுத்தம், “உடலை கண்காணித்துக் கொண்டே இருக்கும் பழக்கம்”), உணவு உண்ணும் கோளாறு, உடல் பற்றிய வெட்கம், சுய-மதிப்பு மற்றும் வாழ்வு நிறைவு மீதான கேள்விகள், மனநிலை செயல்பாடுகள், இயக்கு தசை செயல்பாடுகளில் சிக்கல், பாலியல் பிறழ்ச்சி, அரசியலில் தலைமையை அனுகுதலில் பின்னடைவு மற்றும் அரசியல் பலாபலன் அடைவதில் சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகிறது. எல்லா இனப்பிரிவு பெண்களிடமும் இந்த பண்டமய அகவயப்படுத்துதலானது ஆணை விட அதிகமாகப் பாதிக்கிறது.”
பெண்களைப் பாலியல் பண்டமாகச் சித்தரிப்பதற்கும், பெண்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை பரப்புவதற்கும் உங்கள் வெளியீடுகள் ஒரு காரணமாக இருக்கிறது என்று உங்கள் மீது நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவை பெண்களுக்குப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கிறது. நீங்கள் பெண்களைப் பாலியல் வேட்கைக்கான ஒரு பொருளாக சித்தரிக்கிறீர்கள், பெண்களின் மனிதத்தன்மையை அகற்றுகிறீர்கள்.
இம்மனு மூலம் மாசெஸ் அமைப்பும் இதில் கையெழுத்திடுவோரும் பெண்களின் உடலுக்குரிய மரியாதையைக் கோருகிறோம். நடிகைகள், பெண்களின் ஆபாச / கவர்ச்சி / உடல் பாகங்களை வெளியிடும் பொறுப்பற்ற உங்கள் செயலை நீங்கள் திரும்பப் பெறவேண்டும், நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழியைக் கோருகிறோம்.
குறிப்பிட்ட அளவு கையொப்பம் கிட்டியவுடன் இதழ்கள் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதில், பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று மாசஸ் அமைப்பு இந்திய அரசாங்கம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், பெண்கள் தேசியக் கூட்டனி, இந்திய பிரஸ் கவுன்சில், மகளிர் அமைப்புகள், குழுக்கள் மற்றும் இதர மனித உரிமை அமைப்புகளிடமும் அழுத்தம் கொடுக்கச் சொல்லி முறையிடும்.
ஊடகங்களில் பெண்களின் உடல்களைப் பாலியல் ரீதியாக சுரண்டுவதை பெண்களுக்கெதிரான பாலியல் பாகுபாடு என்று கருதப்பட வேண்டும். அதை தடுக்கவில்லையென்றால் இந்திய அரசாங்கம் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை அழிப்பதற்கான செயற்குழுவில் (CEDAW) கையெழுத்திட்டதின் மூலம் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதாகும்.
ஜூலை 1993 மாநாட்டில் பெண்களுக்கெதிரான எல்லாவிதமான பாகுபாடுகளையும் நீக்கிவிடுவதாக இந்திய அரசு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கால இடைவெளியில் (4 வருடம்) UN CEDAW செயற்குவுக்கு (சுதந்திரமான வல்லுனர்கள்) நாட்டில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று அறிக்கை அளிக்க வேண்டும்.
கையொப்பம் இட:
http://www.change.org/en-IN/petitions/appeal-to-tamil-magazines
நன்றி:
http://saavinudhadugal.blogspot.com/2012/07/blog-post_24.html
http://masessaynotosexism.wordpress.com/2012/07/24/appeal-to-tamil-magazines-stop-publishing-porn-sexy-pictures/
இதே அறிக்கை ஆங்கிலத்தில்....
---------------------------------------------------------------
இந்த அறிக்கையை பார்த்தவுடன் சிலர் 'ஆஹா...பெண்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்' என்று கூப்பாடு போட்டால் சிலர் நினைப்பர் இவர்கள் பெண் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் என்று. ஆனால் இது போன்று குரல் கொடுக்கும் நபர்கள் பெண்களை எந்த வகையிலாவது ரசிக்க வேண்டும் என்று அலைபவர்கள். சுய நலமிகள். இதை வெளிப்படையாக சொன்னால் எதிர்ப்பு வரும் என்பதால் 'நாங்கள் பெண்கள் சுதந்திரத்துக்கு ஆதரவானவர்கள்' என்று சுற்றி வளைத்து வருவார்கள். தனது தாயையோ தனது தங்கையையையோ அல்லது தனது மனைவியையோ மகளையோ இது போன்று கவர்ச்சியான விளம்பரங்களில் பார்க்க ஒரு சராசரி மனிதனுக்கு எண்ணம் வருமா? கண்டிப்பாக வராது. தனது குடும்பத்து பெண்கள் மட்டும் போர்த்திக் கொண்டு நடக்க வேண்டும் மற்ற பெண்கள் விளம்பரங்களில் கவர்ச்சியாக வந்தால் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே இது மிக கண்டிக்கத் தக்கது. அருவறுக்கத்தக்கது.
கம்பெனியின் பழைய டிரேட் மார்க்கும்: சவுதி அரேபியாவுக்காக பிரத்யேகமாக உண்டாக்கப்பட்ட டிரேட் மார்க்கும்.
காஃபி தயாரிக்கும் நிறுவனமான ஸ்டார் பக்ஸ் தனது சின்னத்தை வளைகுடாக்களில் மாற்றியுள்ளது. காஃபி தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்கு மாடலாக பெண்ணின் புகைப்படம் எதற்கு? தற்போது வளைகுடா அரசுகளின் நிர்பந்தத்தால் அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து விட்டு கிரீடத்தை தனது வர்த்தக சின்னமாக மாற்றியுள்ளது இந்நிறுவனம். இது வரவேற்கப்பட வேண்டியது. பெண்களை போகப் பொருளாக பர்க்காமல் உரிய மரியாதை கொடுக்கச் சொல்கிறது சவுதி அரசு. அதற்கு கீழ்படிந்து தனது பிரபலமான டிரேட் மார்கை தற்போது இழந்துள்ளது இந்நிறுவனம். சபாஷ் சவுதி அரேபியா! இந்த பணி தொடரட்டும்.
இதே போல் ஐகியா என்ற புகழ் பெற்ற நிறுவனம் தனது விளம்பரங்களில் பெண்களை தவிர்த்துள்ளது. சவுதியை பொறுத்த வரை பெண்கள் விளம்பரங்களில் தலை மூடி இருக்க வேண்டும். உடல் முழுவதும் துணியால் மறைத்திருக்க வேண்டும். முகம் மட்டும் தெரியலாம். இந்த அளவில் வரும் விளம்பரங்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறது. அதிலும் பெண்களை அங்கு உபயோகப்படுத்த காரணமும் இருக்க வேண்டும். இதையே இந்த நிறுவனமும் தற்போது கடைபிடிக்கிறது. பெண்ணுக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்று இந்த நிறுவனத்துக்கு கற்றுக் கொடுத்த சவுதி அரசுக்கு ஒரு 'ஓ' போடுவோம். :-)
http://www.ikea.com.sa/en/catalog/categories/departments/dining/
சவுதி அரேபியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இணைய கேட்லாக்! இந்த வகையில் விளம்பரம் இருந்தால் யாரும் வாங்க மாட்டார்களா? ரியாத்தில் உள்ள இந்த ஷோ ரூமை நானும் சென்று பார்த்தேன். வியாபாரம் சுறு சுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இதில் எதற்கு ஒரு பெண்ணை அரை குறை உடையோடு உலவ விட வேண்டும்? இதே முறையை நமது நாடும் பின் பற்றி பெண்களின் மதிப்பை உயர்த்த வேண்டும். அரசு முயலுமா?
//உயிருள்ள பெண்ணை முழுவதும் போர்த்திக் கொண்டு போகச் சொல்லுகின்றார்கள். ஏனெனில் மத்திய கிழக்கில் குறிப்பாகச் சவுதியில் உள்ள ஆண்கள் கட்டுப்பாடு இல்லாதவர்கள், சுய ஒழுக்கமற்றவர்கள் என்பதால். கொஞ்சம் கைகளோ, கால்களோ, கழுத்துக்களோ தெரிந்துவிட்டால் பாய்ந்து கற்பழித்துவிடுவார்கள். அவ்வளவு கொடுமையான காம வெறியர்கள் போலும். //
கஃபேக்களில் பைங்கிளிகளைத் தேடி அலைபவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும். பெண்களின் முன்னேற்றம் என்பது அரை குறை ஆடையாகவும் முழு நிர்வாணமாகவும் மீடியாக்களில் வலம் வருவதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த அகில உலக அறிவாளியை என்னவென்பது??
பெண்களை கவர்ச்சியாக விளம்பரங்களில் பார்க்கத் துடிக்கும் காமுகர்களின் நிலை இப்படியே தொடர்ந்தால் வருங்காலத்தில் உலகம் முழுவதும் பெண்களின் நிலை இவ்வாறு மாறலாம்.
//Ikea, the global furniture company, has apologised for deleting images of women from the version of its catalogue circulating in Saudi Arabia.
The issue was highlighted on Monday by the free newspaper, Metro, which compared the Swedish and Saudi versions of the catalogue and showed that women had been airbrushed out of otherwise identical pictures showcasing the company's products.
Ikea's Saudi catalogue, which is also available online, looks the same as other editions of the publication, except for the absence of women.
One picture shows a family apparently getting ready for bed, with a young boy brushing his teeth in the bathroom. However, a pyjama-clad woman standing next to the boy is missing from the Saudi version. Another picture of five women dining has been removed in the Saudi edition.//
http://www.guardian.co.uk/world/2012/oct/02/ikea-apologises-removing-women-saudi-arabia-catalogue
--------------------------------------------------------------
சென்னை : ஜவுளிக்கடைகளில் பெண்களுக்கான உடைகள் பிரிவில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஆண்கள் பணியாற்றக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஜவுளி வாங்குவதற்கு இப்போதே மக்கள் தயாராகிவிட்டனர். பொதுமக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஜவுளி நிறுவனத்தாரும் போட்டி போட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து ஜவுளிகள், ரெடிமேட் வகைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். சிலர் தள்ளுபடியும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜவுளி கடைகளில் பெண்களுக்கான பிரிவில் பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். கண்களால் பார்த்து அளவு சொல்லி விற்பனை செய்யும் வகையில் ஆண்கள் யாருமே பணியாற்ற கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு: ஜவுளி கடைகள் மற்றும் ரெடிமேட் கடைகளில் பெண்களுக்கான ஜட்டி, பிரா, சிம்மீஸ், பெட்டிகோட் போன்ற துணி வகைகளை விற்கும் பிரிவு இருந்தால் அந்த பிரிவில் எந்த சூழ்நிலையிலும் ஆண்கள் பணியாற்றக்கூடாது. சில நிறுவனங்களில் ஆண்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள், வரும் பெண் வாடிக்கையாளரிடம் ஆபாசம் கலந்து கூறுவதோடு, அவர்களின் உடலமைப்பை உற்றுப்பார்த்து அளவு சொல்லி துணிகளை கொடுக்கின்றனர்.
இந்த செயலால் பெண்கள் மிகவும் மன உளைச்சல் அடைகின்றனர். சில கடையில் ஆண் விற்பனையாளரே குறிப்பிட்ட சைசில் உள்ளாடை கொடுத்து விடுகிறார். பெண் வாடிக்கையாளர் வீட்டுக்கு சென்று பயன்படுத்தும் போது பொருந்தாமல் போய்விடுகிறது. இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவும், கடைகளில் ஆபாச நிகழ்வுகளை தவிர்க்கவும் பெண்களுக்கான துணிகள் விற்கும் பிரிவில் கட்டாயம் பெண் ஊழியர் மட்டுமே இருத்தல் வேண்டும்.
இது தவிர, சம்பந்தப்பட்ட பெண்கள் பிரிவு கடையின் குறிப்பிட்ட பகுதியில் இருத்தல் வேண்டும். பொதுவான ஜவுளிகளோடு பெண்களுக்கான ரெடிமேட் துணிகள் இருத்தல் கூடாது. பெண்களுக்கான பிரிவு முழுக்க முழுக்க தனியாக இருக்க வேண்டும். அந்த பிரிவில் டிரையல் ரூம் கட்டாயம் இருத்தல் வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர் சுடிதார், மிடி அல்லது உள்ளாடைகள் வாங்கினால், அவருக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை அவர் போட்டுப்பார்த்து சரி செய்து கொள்ளும் வகையில் டிரையல் ரூம் இருத்தல் வேண்டும்.
அதில் ஆளுயுர கண்ணாடி, உள்பக்கம் தாழ் போடும் வசதி இருத்தல் வேண்டும். எந்த சூழ்நிலையிலும் டிரையல் ரூமில் கேமரா பொருத்தக்கூடாது. டிரையல் ரூமுக்கு பெண் வாடிக்கையாளர் செல்லும் போது கடையின் பெண் ஊழியர் ஒருவரும் அவருடன் சென்று அவருக்கு உதவி செய்ய வேண்டும். டிரையல் ரூமை விட்டு வாடிக்கையாளர் வெளியே வரும் வரை டிரையல் ரூமில் கடையின் பெண் ஊழியர் உடன் இருக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் கடையில் 18 வயதுக்குட்பட்ட பெண்களை பணியமர்த்தக்கூடாது. பண்டிகை காலம் நெருங்குவதால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து விற்பனையாளர்களும் இந்த விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவு செப்டம்பர் 11 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரையல் ரூம் கட்டாயம் இருக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட பெண்கள் பிரிவு கடையின் குறிப்பிட்ட பகுதியில் இருத்தல் வேண்டும். பொதுவான ஜவுளிகளோடு பெண்களுக்கான ரெடிமேட் துணிகள் இருத்தல் கூடாது. பெண்களுக்கான பிரிவு முழுக்க முழுக்க தனியாக இருக்க வேண்டும். அந்த பிரிவில் டிரையல் ரூம் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த பத்திரிக்கை செய்தி சவுதி அரேபியாவைப் பற்றி இல்லீங்கோ! நம்ம சிங்கார சென்னையைப் பற்றித்தான்.
எந்த நாடும் எந்த இனமும் பெண் என்று வந்தால் அதை போகப் பொருளாக பார்க்கும் மனநிலை எங்குமே பரவிக் கிடக்கிறது. இதற்கு நமது சென்னையும் விதிவிலக்கல்ல. இதனை சட்டத்தின் மூலமே திருத்த முடியும்.
22 comments:
இந்தியாவின் சட்டங்களையும் ,சவுதியின் சட்டங்களையும் ,அறியமுடிகின்றது சகோ!
விளம்பரங்களில் பெண். நினைத்தாலே பகீரென்கிறது.
பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் ஒரு விதி உண்டு. எந்த ஒரு காயையும் நேரடியாகக் குழிக்குள் தள்ளக் கூடாது.
ஒரு வெள்ளைக்காயின் உதவியுடன்தான் தள்ள வேண்டும். அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய விளம்பர உலகம்.
எந்த பொருளை சந்தையில் விளம்பரப்படுத்த எண்ணினாலும், பெண்களை பயன்படுத்தாமல் அவர்களால் துளி கூட காய் நகர்த்த முடியாது.
சரி, இது ஆரோக்யமான விஷயம் தானே என புருவம் தூக்க வேண்டாம்.
நம் விளம்பரங்களில் பெண்கள் பற்றிய புனைவுகள் இருக்கிறதே… அப்பப்பா! பலசமயங்களில் சகித்துக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது.
இப்படி சித்தரிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு பிம்பங்களாய் பார்க்கப்படுகிறார்கள்.
கணவன் மோப்பம் பிடித்தபடி வருவதாய் காண்பிப்பது.
இதுகூட பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம்.
மற்றொரு பிம்பமாக பெண் என்பவள் மிக அதிக கவர்ச்சியை வெளிபடுத்தும் ஒரு போகப் பொருளாக சித்தரிக்கப்படுவது.
ங்களை அடையாளப்படுத்தி அங்காடித் தெருவில் விற்றுக் கொண்டிருப்பது போல் அசிங்கப்படுத்துகிறார்கள்.
ஆண்கள் பயன்படுத்தும் அனேக பொருட்களுக்கு பெண்களின் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தாமல் விளம்பரங்கள் வருவது அனேகமாக அரிதாகி வருகிறது.
சாதாரண ஒரு ரேஸர் விளம்பரத்துக்குக்கூட கவர்ச்சி கன்னியுடன் அந்த ஆண் கெட்ட ஆட்டம் போடுகிறான்.
.ஒரு ஆண் உபயோகிக்கும் பெர்ஃபியூமிற்கு மயங்கி பல கவர்ச்சிக் கன்னிகள் அவனை படுக்கைக்கு அழைப்பது போன்ற காட்சிகள் அருவருப்பின் உச்சகட்டம்.
இதைவிட பெண்களை கொச்சைப்படுத்த முடியுமா?
இதுபோன்ற அவலங்களை குடும்பத்துடன் பார்க்கும்போது அசிங்கத்தை காலால் மிதித்து அவதிப்படுவது போன்ற உணர்வு.
அடுத்து வரும் தலைமுறை பெண்களை எப்படி பார்க்கும்?
நினைத்தாலே பகீரென்கிறது.
பெண்களின் கவர்ச்சியை மட்டும் தான் அவர்கள் நம்பி இருக்கிறார்களா?
அப்படியானால் அவர்களின் பொருளின் தரம் என்பது என்ன?
திருமண நாளன்று மணவாளனை கரம் பிடிக்க இருக்கும் கண நேரத்தில் மற்றொரு ஆடவன் உபயோகித்த பொருளை கண்டு மனம் மாறி அவனுடன் ஓடுவது, “ஓடிப் போய் கல்யாணம் பண்ணிப்போம் ரிசப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடுவோம்” என்று ஒரு பவுடர் தரும் புத்துணர்ச்சியில் பெண் உரைப்பது என எவ்வளவு வடிகட்டினாலும் கட்டி கட்டியாய் கசடுகள் மிஞ்சுகிறது.
நான் சொல்ல வந்தது என்னவெனில் நகைக்கடைக்குக் கூட அரை நிர்வாண போஸ் தேவையா?
இப்படிப்பட்ட விளம்பரங்கள் பெண்களை தவறாக பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தவறாக வழிநடத்தவும் செய்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். - பவித்ரா நந்தகுமார்
http://pavithranandakumar.blogspot.com/2012/04/blog-post_03.html
SALAAM
அனைத்து நாடுகளுக்கும் சவுதிக்கும் இடையே நல்ல ஓர் ஒப்பீடு ...
சகோ தனி மரம்!
//இந்தியாவின் சட்டங்களையும் ,சவுதியின் சட்டங்களையும் ,அறியமுடிகின்றது சகோ! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ மைதீன்!
//அனைத்து நாடுகளுக்கும் சவுதிக்கும் இடையே நல்ல ஓர் ஒப்பீடு ...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ உண்மைகள்!
//திருமண நாளன்று மணவாளனை கரம் பிடிக்க இருக்கும் கண நேரத்தில் மற்றொரு ஆடவன் உபயோகித்த பொருளை கண்டு மனம் மாறி அவனுடன் ஓடுவது, “ஓடிப் போய் கல்யாணம் பண்ணிப்போம் ரிசப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடுவோம்” என்று ஒரு பவுடர் தரும் புத்துணர்ச்சியில் பெண் உரைப்பது என எவ்வளவு வடிகட்டினாலும் கட்டி கட்டியாய் கசடுகள் மிஞ்சுகிறது.
நான் சொல்ல வந்தது என்னவெனில் நகைக்கடைக்குக் கூட அரை நிர்வாண போஸ் தேவையா? //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ.சுவனப்பிரியன்,
///இந்த அறிக்கையை பார்த்தவுடன் சிலர் 'ஆஹா...பெண்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்' என்று கூப்பாடு போட்டால் சிலர் நினைப்பர் இவர்கள் பெண் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் என்று. ஆனால் இது போன்று குரல் கொடுக்கும் நபர்கள் பெண்களை எந்த வகையிலாவது ரசிக்க வேண்டும் என்று அலைபவர்கள். சுய நலமிகள். இதை வெளிப்படையாக சொன்னால் எதிர்ப்பு வரும் என்பதால் 'நாங்கள் பெண்கள் சுதந்திரத்துக்கு ஆதரவானவர்கள்' என்று சுற்றி வளைத்து வருவார்கள். தனது தாயையோ தனது தங்கையையையோ அல்லது தனது மனைவியையோ மகளையோ இது போன்று கவர்ச்சியான விளம்பரங்களில் பார்க்க ஒரு சராசரி மனிதனுக்கு எண்ணம் வருமா? கண்டிப்பாக வராது. தனது குடும்பத்து பெண்கள் மட்டும் போர்த்திக் கொண்டு நடக்க வேண்டும் மற்ற பெண்கள் விளம்பரங்களில் கவர்ச்சியாக வந்தால் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே இது மிக கண்டிக்கத் தக்கது. அருவறுக்கத்தக்கது.///
இந்த கும்பலை சேர்த்த இரண்டு பேரு மைனஸ் ஓட்டு போட்டு தங்களை இனங்காட்டிக் கொண்டு விட்டனர்.
பெட்டிஷன் சைன் பண்ணிட்டேன் சகோ.
சலாம் சகோ.
//"பெண்களை விளம்பரப் பொருளாக ஏன் மாற்றுகிறீர்கள்?"//
என்றெல்லாம் நாம் யாரிடமாவது கேட்டால், "இதிலென்னங்க இருக்கு. வியாபாரம் ஆகனும் இல்லையா? இதெல்லாம் சாதாரண விஷயம் தானே" என்கிறார்கள். மேலும் நாம் ஏதாவது விளக்க முற்பட்டால் நம்மை புழு பூச்சியை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில் பிற்போக்குவாதி. என்ன செய்வது. மக்களின் பொது புத்தி அவ்வாறாகி விட்டது.
பெண்கள் பிரிவிற்கான மத்திய அரசின் சட்டம் மிகவும் வரவேற்க தக்கது. பாராட்டுவோம்.
பெண்களை இதழ்களில் சித்தரிப்பதற்கும், காம நோக்குடன் சித்தரிப்பதற்கு மிகுந்த வேறுபாடுகள் உள்ளது ... ! பெண் உருவைக் கொண்ட லச்சினையைக் கூட மறைக்கத் துடிப்பது ஏனோ ?
முதலில் இப்படி பெண்களை படங்களில் இருந்து மறைப்பது இஸ்லாமிய முறைதானா ? குரானில் எந்த இடத்தில் பெண்களை மட்டும் வரைய வேண்டாம், சிற்பம் செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளது .... !
இக்பால் செல்வன்!
//முதலில் இப்படி பெண்களை படங்களில் இருந்து மறைப்பது இஸ்லாமிய முறைதானா ? குரானில் எந்த இடத்தில் பெண்களை மட்டும் வரைய வேண்டாம், சிற்பம் செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளது .... !//
குர்ஆனில் நேரிடையான தடை எதுவும் இல்லை. ஆனால் ஆதாரபூர்வமான ஹதீதுகளில் உள்ளது.
நபிகள் நாயகம் அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும் அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் உட்கார்ந்து கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிசா புஹாரி - 2479
தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும்அதை நபிகள் நாயகம் அவர்கள் கிழித்ததும் அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிசா அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் - 3935
இதன் மூலம் உருவங்கள் மதிப்பு மிக்கவையாக இல்லாமல் இருந்தால் அதனை பயன்படுத்துவதில் தவறில்லை. குழந்தைகளுக்கு பாடம் நடத்த உருவங்களை வரைந்து நடத்தலாம். ஒரு அரசியல் விஷயத்தை விளக்க கேலிச் சித்திரங்கள் வரையலாம். மரம் செடி போன்றவைகளையும் வரையலாம். ஆனால் மதிப்பு மிக்க கடவுள்களின் சிலை, மதிப்பு மிக்க மனிதர்களின் படங்கள் போன்றவற்றை வரைவதை முகமது நபி அவர்கள் தடுத்துள்ளனர். முக்கிய நோக்கம் அந்த படங்களை வைத்து அவர்களுக்கு கடவுள் இவர் தான் என்ற நம்பிக்கை வந்து விடக் கூடாது.
அடுத்து பெண்களை அந்நிய ஆடவர் முன்னால் வரும் போது முகம் தவிர மற்ற பகுதிகளை மறைத்துக் கொண்டு வருமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. இதன் படி விளம்பரங்களில் பெண்களை தேவையில்லாமல் அதுவும் ஆபாசமாக அரைகுறை ஆடையோடு வெளியிடுவதை குர்ஆன் தடுக்கிறது. இதன் அடிப்படையிலேயே இதனை அறிஞர்கள் தடுக்கின்றனர்.
சகோ ராஜகிரியார்!
//பெண்கள் பிரிவிற்கான மத்திய அரசின் சட்டம் மிகவும் வரவேற்க தக்கது. பாராட்டுவோம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ ஆஷிக்!
//இந்த கும்பலை சேர்த்த இரண்டு பேரு மைனஸ் ஓட்டு போட்டு தங்களை இனங்காட்டிக் கொண்டு விட்டனர்.//
ஹா...ஹா...சுயநலவாதிகள்.
//பெட்டிஷன் சைன் பண்ணிட்டேன் சகோ.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திரு அருணன்!
ஹதீதுகளை பொருத்த வரை இது சம்பந்தமாக வந்த அனைத்து ஹதீதுகளையும் ஒருங்கிணைத்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெளிந்தால் இழகிய விளக்கம் கிடைக்கும்.
//அது சரி சௌதி இளவரசியின் புகைப்படங்கள் சவுதி பத்திரிக்கைகள் எல்லாம் வருகின்றதே, அவர் புர்க்காவோ, ஹிஜாப்போ போடவில்லையே.. ஒய்யாரமாக நடக்கின்றார், ஆங்கிலத்தில் பேசுகின்றார், பாரதிக் கண்ட புதுமைப் பெண்ணாக உலாவ அவருக்கு மட்டும் சவுதி அரசு அனுமதித்தேனோ !!!//
ஒரு இளவரசி என்ற ரீதியில் பிரபலமானவர் என்பதால் பார்க்கப்படுகிறார். இவரை வைத்து விளம்பரம் செய்து எந்த பொருளையும் விற்கவில்லையே!
இளவரசி இஸ்லாத்துக்கு மாற்றமாக நடந்தால் அதனை கண்டிக்க வேண்டியது சவுதி அரசு. மேலும் தவறாக நடந்தால் அதற்குரிய தண்டனையை யாராக இருந்தாலும் மறுமையில் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள்.
நேற்று கூட ஒரு (முன்னாள்) நடிகையை வைத்து (இஸ்லாத்) வெளம்பர பதிவு தான் போட்டீர்கள், இப்போது திடிரென்று ஞானம் வந்துவிட்டது. பெண்களெல்லாம் முக்காடிட்டு வெளம்பரப்படத்தில் தோன்றினால் ஓகேவா ?
:)
ஆயிஷா ரலி அறிவிக்கிறார் என்று எழுதும் இடங்களிலெம்மால் அவரும் ஒரு வெளம்பரப் பொருள் என்று தெரியாத உங்களுக்கு.
பெண்களை வெளம்பரப் பொருளாக சித்தரிப்பதைவிட வீட்டு வேலைக்கு வரும் பெண்களை போகப் பொருளாக மாற்றி அனுபவிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.
இதுக்கெல்லாம் யாரு உங்களவர்களுக்கு அனுமதி கொடுத்தார்களோ அவர்களே பெண்களை விளம்பரப் பொருளாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறார்கள், என்று நீங்கள் கருதலாமே.
பாதிக்கப்படும் பெண்களையோ அல்லது ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையோ இறைவன் நாடவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாமா சுபி சார்
வணக்கம் சுவனபிரியன்,
// சவுதியை பொறுத்த வரை பெண்கள் விளம்பரங்களில் தலை மூடி இருக்க வேண்டும். உடல் முழுவதும் துணியால் மறைத்திருக்க வேண்டும். முகம் மட்டும் தெரியலாம். இந்த அளவில் வரும் விளம்பரங்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறது. //
//ஒரு இளவரசி என்ற ரீதியில் பிரபலமானவர் என்பதால் பார்க்கப்படுகிறார்.// ஏன் இப்படி? பிரபலம்னா எப்படி வேணும்னாலும் துணி உடுத்தலாம்னு குரான்ல இருக்கா?
// பெண்ணுக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்று இந்த நிறுவனத்துக்கு கற்றுக் கொடுத்த சவுதி அரசுக்கு ஒரு 'ஓ' போடுவோம். :-)// ஹி ஹி ஹி... முடியல...
//இளவரசி இஸ்லாத்துக்கு மாற்றமாக நடந்தால் அதனை கண்டிக்க வேண்டியது சவுதி அரசு. மேலும் தவறாக நடந்தால் அதற்குரிய தண்டனையை யாராக இருந்தாலும் மறுமையில் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள்.// கார் ஓட்டுன பெண்களுக்கும் இப்படி மறுமைல பார்த்துக்கலாம்னு விட வேண்டியது தானே? பெண்களை போக பொருளா மட்டுமே நினைக்கும் அரபு தேசங்கள் பெண்ணியம் பற்றி பேசக்கூட அருகதை அற்றவர்கள்.
அன்பு நண்பர் சுவனப்ரியன்
சவுதியில் பல தொலை தூர சாலைகளில் Camel Crossing எச்சரிக்கை பலகைகள் இருக்கும் உ.ம் ஹயில் ரியாத்( Hail to Riyadh) , அவையெல்லாம் கருப்பு மையால் அழிக்கப்ப்டிருக்கும்.
எனக்கு என் இஸ்லாமிய நண்பர் கொடுத்த பதில் " லியோ இந்துக்கள் மிருகங்களை வணங்குவதால் அவை அவ்வாறு செய்யப்படிருக்குது "
எனக்கு இது மிகவும் அபத்தமாக படுகிறது. உங்கள் பதில் அறிய ஆவல் ( நான் சொல்வது 2000kku முந்தய காலம், அந்த சாலையின் வேக அளவு 120 கீ மி )
இன்னும் விரிவாக எழுதலாம் ... ஆனால் என் டைபிங் திறமை அவ்வளவுதான் .
லியோ சுரேஷ்
அன்பு நண்பர் சுவனப்ரியன்
சவுதியில் பல தொலை தூர சாலைகளில் Camel Crossing எச்சரிக்கை பலகைகள் இருக்கும் உ.ம் ஹயில் ரியாத் (Hail to Riyadh) , அவையெல்லாம் கருப்பு மையால் அழிக்கப்ப்டிருக்கும்.
எனக்கு என் இஸ்லாமிய நண்பர் கொடுத்த பதில் " லியோ இந்துக்கள் மிருகங்களை வணங்குவதால் அவை அவ்வாறு செய்யப்படிருக்குது "
எனக்கு இது மிகவும் அபத்தமாக படுகிறது. உங்கள் பதில் அறிய ஆவல் ( நான் சொல்வது 2000kku முந்தய காலம், அந்த சாலையின் வேக அளவு 120 கீ மி )
இன்னும் விரிவாக எழுதலாம் ... ஆனால் என் டைபிங் திறமை அவ்வளவுதான் .
லியோ சுரேஷ்
.
.
சொடுக்கி >>>>>> கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! ஒரு பெண்ணுக்கு தன்னை கவனிக்கும் ஆணின் பார்வை எங்கே இருக்கிறது என்பது, அவள் அவனை பார்க்காவிட்டாலும் குறிப்பால் உணரும் திறன் உண்டு. முறையாக உடலை மறைத்து கண்ணியமாக நடைபோட்டு, வாய்பிளக்கும் ஆண்களின் முகத்தில் சேற்றை நிறப்புங்கள் <<<<< படியுங்கள்
லியோ சுரேஷ்!
//சவுதியில் பல தொலை தூர சாலைகளில் Camel Crossing எச்சரிக்கை பலகைகள் இருக்கும் உ.ம் ஹயில் ரியாத்( Hail to Riyadh) , அவையெல்லாம் கருப்பு மையால் அழிக்கப்ப்டிருக்கும்.//
தவறான தகவல். படத்தின் பேக் ரவுண்ட் மஞ்சளிலும் படம் கருப்பிலும் இருக்கும். தூரத்திலிருந்து வருபவர்களுக்கு சரியாக தெரிய வேண்டும் என்பதற்காக! படத்தை யாரும் கருப்பு மை கொண்டு அழிப்பதில்லை :-)
//கார் ஓட்டுன பெண்களுக்கும் இப்படி மறுமைல பார்த்துக்கலாம்னு விட வேண்டியது தானே? //
பாலைவனப் பிரதேசத்தில் பல ஆயிரம் மைல்கள் ஆள் அரவமே இருக்காது. அங்கெல்லாம் பெண்கள் தனியாக பயணிக்கவே முடியாது. நமது நாட்டு சூழலை வைத்து பேச வேண்டாம். பெண்களின் பாதுகாப்புக்குத்தான் இந்த சட்டம்.
//பாலைவனப் பிரதேசத்தில் பல ஆயிரம் மைல்கள் ஆள் அரவமே இருக்காது. அங்கெல்லாம் பெண்கள் தனியாக பயணிக்கவே முடியாது. நமது நாட்டு சூழலை வைத்து பேச வேண்டாம். பெண்களின் பாதுகாப்புக்குத்தான் இந்த சட்டம். //
ஏங்க சுவனபிரியன் ஜல்லி அடிக்கிறிங்க.... பெண்கள் தனியா பயணிக்க முடியாதுன்னா அவ்ளோ கேவலமான அரக்கர்கள் வாழுமிடமா? இல்லை, ஆள் அரவமற்ற இடமெனில், பெண்களால் தனியாக செல்லமுடியாது என்று அவர்களை சிறுமை படுத்துவதுதான் உங்கள் எண்ணமா? இரண்டில் ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும்? உங்கள் அரேபியா அரசாங்கத்தின் கருணைக்கு ஒரு அளவே இல்லை போங்கள்... ஊருக்குள்ளே அவர்களை கார் ஓட்ட அனுமதிக்கலாமே? என்னமோ போங்க, நான் புடிச்ச முயலுக்கு முக்கால் காலுதான் முனகிக்கொண்டே இருக்கீங்க... கண்ணை திறந்து வெளி உலகத்தையும் கொஞ்சம் பாருங்க... சுனிதா அக்கா, விண்வெளி ஓடமே ஓட்டும்போது, இன்னும் 1500 வருசத்துக்கு பின்னாடியே தான் நிற்போம்னா, தாராளமா நில்லுங்க, ஆனால் இனிமேல் அடுத்தவங்களை குறை சொல்லாதிங்க...
Post a Comment