ஒரு துளி கடல் - குறும் படம்.
முஸ்லிம்களுக்கு எதிராக சினிமாத் துறை தொடர்ந்து எதிரான கருத்துக்களையே விதைத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க படம் ஒன்றும் முகமது நபியைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு அது பெரும் பிரச்னையாக உலகமெங்கும் பரவியதை நாம் அறிவோம். நம் தமிழக கூத்தாடிகளும் தங்கள் பங்குக்கு எந்த வகையிலாவது இஸ்லாத்தை இழித்து படம் எடுக்க தயங்குவதில்லை. அதில் விஜயகாந்த், அர்ஜூன், கமல ஹாஸன் போன்ற கூத்தாடிகள் முதலிடத்தில் இருப்பதை அறிவோம். தற்போது வெளி வர காத்திருக்கும் விஸ்வரூபமும் அது போன்ற சாயலிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. யார் எக்கேடு கெட்டாலும் இந்த கூத்தாடிகளின் கல்லா நிரம்ப வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள்.
இதனை சட்டம் போட்டு தடுக்க முடியாது. அரசே ஆதரவாக செயல்படும்போது இதற்கு மாற்றாக உண்மைகளை நாமும் திரைப்படங்களாக கொண்டு வர வேண்டும். அந்த வகையில் 'ஒரு துளி கடல்' என்ற இந்த குறும்படம் சிறப்பாக வந்துள்ளது. புதியவர்களின் முதல் முயற்சி என்பதால் சில குறைகள் இல்லாமல் இல்லை. நாடகத்தனமாக சில காட்சிகள் வருகின்றன. இயல்பாக பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட வேண்டும். அந்த சிறுவன் பேசுவது கேமராவுக்கு முன்னால் பயந்து கொண்டே பதட்டத்தோடு பேசுவது போல் உள்ளது. கிராமத்தில் நடக்கும் காட்சிகளை படமாக்கும் போது அதில் பாமரத் தனமும் தெரிய வேண்டும். மேலும் கதைகள் அமைக்கும் போது குர்ஆனின் போதனைகளை ஒட்டியும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஒட்டியும் காட்சிகள் அமைக்கப்பட வேண்டும்.
இணையத்தில் இஸ்லாத்துக்கு எதிரான சதி வலைகளை ஓரளவு முறியடித்து விட்டோம். அதே போல் சினிமாத் துறையிலும் காலடி பதித்து அங்கு அரங்கேற்றப்படும் சதிகளை முறியடிக்க வேண்டும். அமீர் போன்ற இயக்குனர்கள் சிறந்த கதையம்சமுள்ள படிப்பினை ஊட்டும் திரைப்படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். டைரக்டர் அமீரைப் பொறுத்த வரை ஏற்கெனவே தவ்ஹீத் இயக்கத்தில் இருந்தவர். எனவே இஸ்லாமிய வரலாறுகளை ஓரளவு முறையாக தெரிந்தவர். எனவே குறும்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமீரின் ஆலோசனையையும் அவ்வப்போது கேட்டுக் கொள்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
குறும்படம் வெளியீடு நிகழ்வு
திரைப்பட இயக்குனர் அமீர் அவர்கள் குறும்படத்தின் முதல் பிரதியை வெளியிட கிரியேடிவ் கம்யூனிகேஷன் சென்னையின் துணைத்தலைவர் ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் பெற்று கொண்டார். இரண்டாம் பிரதியை திரைப்படத்தில் நடித்துள்ள வழக்கு எண் படத்தில் நடித்த ஜெயபால் அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியினை அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு இயக்குனர் அமீர் வாழ்த்துரை வழங்கினார். முஹம்மத் நபி அவர்களை தவறாக சித்தரித்த திரைப்படத்திற்கு திரைப்படத்தின் மூலம் பதில் சொல்லியுள்ள இக்குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்களை நான் பாராட்டுகின்றேன். வருகின்ற காலங்களில் இதை விட தரமான குறும்படங்கள் அதிகமதிகம் இயக்கப்பட வேண்டும் அதற்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று இயக்குனர் அமீர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அதன் வாயிலாக இஸ்லாத்தின் நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றார்.
அதன் பிறகு இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்டின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் அமீர் அவர்களை வரவேற்று, ஒரு துளிக்கடல் குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்கள் சிறப்பாகவும், குறுகிய காலத்திலும் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார் அவருக்கு இறைவன் அதிகமதிக கூலியை கொடுக்க வேண்டும் என்றார். இன்றைய காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வரக்கூடிய எதிர்ப்புகளை அமைதியாகவும், நிதானமாகவும் கையாள வேண்டும். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை தீர்வாகாது. எந்த காலத்திலும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், வளர்ச்சியையும் தடுக்க முடியாது. இது போன்ற தவறான திரைப்படங்கள் மூலமாக ஒரு காலத்திலும் முஹம்மத்(ஸல்) அவர்களின் மகத்துவத்தை யாராலும் தடுக்க முடியாது. தீமையை நன்மையை கொண்டே தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்..
-----------------------------------------------------------------------
மில்லி கெஜட்டை மீட்டெடுப்போம் வாருங்கள்!
இன்று நமது நாட்டில் முஸ்லிம்களின் குரலை கொண்டு செல்ல சிறந்த ஊடகங்கள் மிக அரிதாகவே உள்ளது. 170 மில்லியன் முஸ்லிம்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் மில்லி கெஜட் தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. 13 வருடங்களுக்கு முன் 16 பக்கங்களை கொண்ட இதழாக வந்ததை 32 பக்கங்களாக மாற்றினர். பல சிறந்த இஸ்லாமிய எழுத்தாளர்கள், மாற்றுமத நண்பர்கள் என்று பலர் இந்த பத்திரிக்கைக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.
இதன் எடிட்டரான ஜபருல் இஸ்லாம் தற்போது இந்த இதழ் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பக்கங்களை பழைய படி 16 க்கு குறைக்கலாமென்றும் அல்லது இதழையே நிறுத்தி விடலாம் என்ற நோக்கிலும் உள்ளதாக குறை பட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் சிறுபான்மையினர் ஒரு பத்திரிக்கை அதுவும் ஆங்கிலத்தில் நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத் தெரியும். பிராந்திய மொழிகளில் வரும் பத்திரிக்கைகள் உலக அளவிலோ அல்லது ஒட்டு மொத்த இந்தியாவையோ அடைய முடிவதில்லை.
ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸேர், ஒரு ஹிந்துவோ தங்களின் எண்ணத்தை வெகு விரைவில் முழு உலகுக்கும் முழு இந்தியாவுக்கும் சில மணி நேரங்களில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பல பொய் செய்திகள் உலகை அழகாக வலம் வருகின்றன. உண்மை ஒரு ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்து விடுகிறது.
இந்த நிலை ஏற்படாமல் தடுக்க நாம் இதன் சந்தாதாரர் ஆவோம். நமது சொந்தங்களுக்கு இதன் சந்தாக்களை நாம் கட்டி அவர்களை சென்றடைய செய்வோம். மாற்று மத நண்பர்களுக்கு நமது சந்தாக்களை அளிப்போம்.
எத்தனையோ அநாவசிய செலவுகள் செய்து வரும் நாம் மிக குறைந்த தொகையான இந்த சந்தாக்களை பலருக்காகவும் கட்டி ஒடுக்கப்பட்ட இனத்தவர், இஸ்லாமிய மற்றும் உலக செய்திகளை பலரும் படிக்க உதவி புரிவோம்.
"we are now in the 13th year yet incurring serious losses month after month. We are thinking of two options: either to close down or to further reduce our pages to 16 pages per issue which will further restrict our ability to cover the issues of our community (we had 32 pages/issue which we reduced to 24 pages some time back)."
எடிட்டரின் கடிதம்
http://www.milligazette.com/pages/subscribe
எவ்வாறு சந்தாக்களை அனுப்புவது....
http://www.milligazette.com/misl/subs-faqs-mg.htm
உங்களது சந்தேகங்களுக்கு.......
http://www.milligazette.com/
பத்திரிக்கையை பார்வையிட.....
16 comments:
சலாம் சகோ. சுவனப் பிரியன்,
//யார் எக்கேடு கெட்டாலும் இந்த கூத்தாடிகளின் கல்லா நிரம்ப வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள்.//
சரியாக சொன்னீர்கள். இவர்களுக்கு மக்களும், சமுதாயமும், நாடும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. கல்லா நிரம்ப வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள்.
மற்றபடி 'ஒரு துளி கடல்' சிறப்பாகவே வந்திருக்கிறது. குறைகளை விட்டு தள்ளுங்கள். நல்லதை ஊக்குவித்தால் நாளடைவில் எல்லாம் சரியாகும்.
//அதே போல் சினிமாத் துறையிலும் காலடி பதித்து அங்கு அரங்கேற்றப்படும் சதிகளை முறியடிக்க வேண்டும்.//
உண்மை தான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இக்கயவர்களின் சதிகளை முறியடிக்க முஸ்லிம்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் முழுநீள திரைப்படங்கள் வரவேண்டும். அப்போது தான் அப்பாவி பாமர மக்களின் மனதில் விதைக்கப் பட்டுள்ள நச்சுக்களை அகற்ற முடியும்.
சலாம் சகோ. சுவனப் பிரியன்,
"" சிறுவன் இரண்டு கொய்யா பழத்தை எட்டு ரூபாய்க்கு கேட்கிறான்..அந்நேரம் ..தன் மகனுக்கு விபத்து என்று ஒரு கால் வருகிறது.வியாபாரி பதறியபடி செல்கிறார்..பின் ஆபத்து இல்லை என தெரிந்த பின், கொய்யா பழத்தை விட்டுட்டு வந்துட்டேன் இனி அவ்வளவுதான் என்று திரும்பி செல்கிறார்..அந்நேரம் அச்சிறுவர்கள் ஒவ்வொரு பழத்திற்கும் காசை வைத்துவிட்டு பழத்தை எடுத்து செல்கின்றனர்...
வியாபாரி ஆச்சர்யத்துடன் கேட்கிறார்.."நான்தான் இல்லையே பழத்தை காசை வைக்காமலே எடுத்து செல்லலாமே" என்று ....சிறுவன் சொல்கிறான் "அல்லாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறான்"என்று ""
அக்கணம் அதைப்பார்த்த நமக்கு உடல் சிலிர்த்து ,கண்களின் ஓரம் கண்ணீர் துளி...
ஆமாம் ...இதுதான் இஸ்லாம்...ஆனால் இன்று "அடுத்தவர் செருப்பை எடுக்க வேண்டாம்" என்று பள்ளிவாசல்களில் (அறியாத மக்களுக்கு)எழுதி போடவேண்டி இருக்கிறது...இஸ்லாத்தின் படி நம்மக்கள் வாழ்ந்தால் இவ்வுலகம் என்ன அருமையாக இருக்கும்...என்றுமே ஆனந்தமே...
நன்றியுடன்
நாகூர் மீரான்
சலாம் சகோ இராஜகிரியார்!
//உண்மை தான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இக்கயவர்களின் சதிகளை முறியடிக்க முஸ்லிம்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் முழுநீள திரைப்படங்கள் வரவேண்டும். அப்போது தான் அப்பாவி பாமர மக்களின் மனதில் விதைக்கப் பட்டுள்ள நச்சுக்களை அகற்ற முடியும்.//
ஆபாசம் கலக்காத உண்மையான இஸ்லாமிய வரலாற்றை சம்பவங்களை அழகுற தொகுக்கும் திறமையானவர்கள் நம்மவர்களில் உருவாக வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ நாகூர் மீரான்!
//ஆமாம் ...இதுதான் இஸ்லாம்...ஆனால் இன்று "அடுத்தவர் செருப்பை எடுக்க வேண்டாம்" என்று பள்ளிவாசல்களில் (அறியாத மக்களுக்கு)எழுதி போடவேண்டி இருக்கிறது...இஸ்லாத்தின் படி நம்மக்கள் வாழ்ந்தால் இவ்வுலகம் என்ன அருமையாக இருக்கும்...என்றுமே ஆனந்தமே...//
ஆம்.... நீங்கள் சொல்வது போல் நம்மவர்களிடம் இன்னும் நிறைய மாற்றம் வர வேண்டியிருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பா.ராகவன்:
ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.
மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில்,
இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.
காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல.
அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள்,
அவருடன் நேரில் பழகியவர்கள்,
அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.
முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு,
ஒப்புநோக்கப்பட்டு,
அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
இதனால்,
முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.
ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா.ராகவன்
சொடுக்கி >>>>>> 1. சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. - பா.ராகவன் படிக்கவும்.
சொடுக்கி2. இஸ்லாம், முஹமது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அறிஞர்கள், ஞானிகள், சரித்திர ஆசிரியர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் கூறுவது என்ன? – படிக்கவும்.
சொடுக்கி3. நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க. படிக்கவும்
.
நபிகள் நாயகம் சுகபோகங்களில் திளைக்கவில்லை
உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா?
அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும்.
பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள்.
ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள்.
இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாயின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.==
நூல் : புகாரி 4913
கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது.
அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.
வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?
இஸ்லாத்தை வீண் குறை சொல்பவர்கள் இந்த தொடர்கட்டுரைகளை தொடர்ந்து படித்தாலே இஸ்லாத்தின் மீதும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மீதும் உள்ள கெட்ட எண்ணங்கள் விலகிவிடும்
கீழுள்ள சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்
சொடுக்கி >>>>>> நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1)
நபிகள் நாயகம் VS தலைவர்கள்(பகுதி-2) .
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 3).
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 4)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 5)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 6)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 7)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 8)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 9)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 10)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 11)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 12)
நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 13)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 14)
நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 15) <<<<<< படிக்கவும்
சகோ உண்மைகள்!
இஸ்லாத்தை பற்றியும் முகமது நபி அவர்களைப் பற்றியும் உண்மையான பல தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
அண்ணாச்சி...எயக்குனர் அமீர் ஒங்க கூட்டமா? கூத்தாடி பயல்களுடன் இருக்கும் அம்மீரும் ஒங்க ஆளா?
கொய்யாப் பழத்தில் குண்டு வைக்காமல் உண்மையான கொய்யாப் பழம் விற்ற வியாபாரி உண்மையிலே சிறந்தவர்தான்...அண்ணாச்சி நீங்க கலக்குங்க...
திரு ராவணன்!
//அண்ணாச்சி...எயக்குனர் அமீர் ஒங்க கூட்டமா? கூத்தாடி பயல்களுடன் இருக்கும் அம்மீரும் ஒங்க ஆளா?//
கூத்தாடிகள் துறைக்கு வருவதற்கு முன் தவ்ஹீத்வாதியாக இருந்திருக்கிறார். பிஜே யோடு நெருங்கிய தொடர்பிலும் இருந்துள்ளார். கூத்தாடிகள் குழுமத்தில் இவர் ஐக்கியமான பிறகு பிஜே இவரோடு தொடர்பு வைத்துக் கொள்வதை விரும்பவில்லை என்று பிஜேயே ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
//கொய்யாப் பழத்தில் குண்டு வைக்காமல் உண்மையான கொய்யாப் பழம் விற்ற வியாபாரி உண்மையிலே சிறந்தவர்தான்...அண்ணாச்சி நீங்க கலக்குங்க...//
உண்மையாகவே குண்டு வச்சது யாருன்னு ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியை கேட்க சொல்லலாம்னா படுபாவிங்க அவரையும் போட்டு தள்ளிட்டானுங்க. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை தற்போது பெரும் பான்மை மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்க்ள.
மும்பை "ஆகஸ்ட் கிராந்தி" மைதானத்தில் பெருநாள் தொழுகைக்கு அனுமதி மறுப்பு! :
கோர்ட்டு உத்தரவும் புறக்கணிப்பு!
Sunday, 28 October 2012 07:42 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்
OCT 28, கடந்த 50 ஆண்டுகாலமாக, இரண்டு பெருநாள் சிறப்புத்தொழுகைகளும் நடைபெற்று வந்த "மும்பை கிராந்தி மைதானத்தில்" இம்முறை தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
அதுவும், நள்ளிரவு 12 மணிக்குமேல் "பேக்ஸ்" மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்த செய்தியாவது :
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ந்தேதி, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மத்தியில் மோதல் ஏற்பட்டது.
அதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.
அந்த வாரத்திலேயே "ரமலான்" பெருநாளும் வந்ததால், வழக்கமாக பெருநாள் தொழுகை நடக்கும் "ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில்" அப்போது, போலீஸ் அனுமதி மறுத்தது.
மேலும், அப்போது "கடும் மழை" காலமாக இருந்ததால், முஸ்லிம்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
50 ஆண்டுகால வரலாற்றில், மழை காலங்களில் மைதானத்தை பயன்படுத்தாமல் இருந்த சம்பவங்களும் உண்டு.
எனவே, போலீசின் அனுமதி மறுப்பை, அப்போது முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.
தற்போது, 2 மாதங்கள் கழித்து "பக்ரீத் பெருநாள் தொழுகை"க்காக, முஸ்லிம்கள் தரப்பில் அனுமதி கேட்டபோது, தொல்லியல் துறைக்கு சொந்தமான ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சமூக சேவகர் "அப்துல் ஜப்பார்" மற்றும் "மும்பை ஜனசேவா சங்கத்தலைவர்" வாஹித் ஷேக் ஆகியோர் "பாம்பே உயர்நீதிமன்றத்தை" அணுகினர்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கானோல்கர், மற்றும் கனோபர் அடங்கிய அமர்வு, கடந்த கால வழக்கப்படி, இம்முறையும் பெருநாள் தொழுகைக்கான அனுமதியை வழங்கி தீர்ப்பளித்தது.
இதற்கிடையில், தொல்லியல் துறை தலைவரும், செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை டைரக்டருமான "சஞ்சய் கிருஷ்ணா பாட்டில்" தொழுகைக்கு அனுமதி மறுத்து நள்ளிரவில் "பேக்ஸ்" அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தற்போது, கோலாபூரில் உள்ளதாகவும், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனக்கு இரவு 10.30 மணிக்கு, மகாராஷ்டிர இணைச்செயலாளர் "குல்கர்னி"யிடமிருந்து உத்தரவு வந்ததாகவும், அந்த கடிதத்தில் தான் கையெழுத்திட்டு, நள்ளிரவில் "பேக்ஸ்" செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், முஸ்லிம்களின் தொழுகை அனுமதி மறுப்புக்கு, தான் காரணமில்லை என்றும் தெரிவித்தார்.
SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/581--q-q-
மீடியாக்களின் லட்சணம் :
ஊழல் செய்திகளை வெளியிடாமல் இருக்க, 100 கோடி கேட்டு "ZEE" TV பேரம்!
OCT 26, தனக்கு எதிராக செய்தி ஒளிபரப்பாமல் இருக்க ரூ. 100 கோடி கேட்டு "ஜீ" செய்தித் தொலைக்காட்சி பிரதிநிதிகள் பேரம் பேசிய ஆதாரத்தை "ஜிண்டால்" நிறுவனம் (J.S.P.L) நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக ஜிண்டால் நிறுவனத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான நவீன் ஜிண்டால், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக,
ஜிண்டால் நிறுவனம் தொடர்பான செய்தியை வெளியிடாமல் இருக்க,
ரூ.100 கோடி தர வேண்டும், என்று "ஜீ" செய்தித் தொலைக்காட்சி நிறுவன உயர் அதிகாரிகள், எங்களிடம் பேரம் பேசினர்.
இது தொடர்பாக ஜீ செய்தித் தொலைக்காட்சியின் தலைவர் சுதீர் செளத்ரி, வர்த்தகப் பிரிவு தலைவர் சமீர் அலுவாலியா ஆகியோர் எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
கடந்த செப்டம்பர் 13, 17, மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில், டெல்லியில் வெவ்வேறு பகுதிகளில்,
எங்கள் பிரதிநிதிகளுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை "ரகசிய கேமரா மூலம்" பதிவு செய்துள்ளோம்.
அந்தத் தொலைக்காட்சி நிறுவனப் பிரதிநிதிகளின் செயல்பாடு வெட்கக்கேடாகவும், மிரட்டிப் பணம் பறிக்கும் வகையிலும் இருக்கிறது.
இது செய்தி ஒளிபரப்பு சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பத்திரிகை தர்மத்துக்கு எதிராகவும் உள்ளது'' என்றார்.
"ஜீ" செய்தித் தொலைக்காட்சி மற்றும் ஜிண்டால் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு இடையே நிகழ்ந்த உரையாடலின் "சி.டி" ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் நவீன் ஜிண்டால் அளித்தார்.
தங்களிடம், மேலும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/579--100-qzeeq-tv-qq-
PART 1. உலக மனிதனே இசுலாத்தின் சாரம். - பழ. கருப்பையா
மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான்.
ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.
உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கஅபாவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்!
வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும்.
உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒருதன்மையானதுதான்!
அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது.
அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது.
நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று.
அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் 'ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார்.
அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின.
இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை!
தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார்.
இசுலாம் என்பதற்கு 'ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை.
பொழுது புலர்வதற்கு முன்னர் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது.
பொதக்குடியிலும் கூத்தாநல்லூரிலும் வாலாஜாபேட்டையிலும் வங்கதேசத்திலும் இரானிலும் ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.
இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குர்ஆன் விதிக்கிறது.
முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை.
திருக்குர்ஆனில் 'அல்ஃபாத்திஹா' என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதிக்கான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்!
இறைவன், "அல்லாஹ்" என்றழைக்கப்படுகிறான். "அல்லாஹு அக்பர்" என்னும் சொற்றொடர் இறைவனை
மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!
ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை.
தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும்.
தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே.
இசுலாத்தில் 'இறை ஒருமை' இன்றியமையாதது.
இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும்.
அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை.
மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே!
இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.
ஆனால் திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு!
ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குர்ஆனில் எதுவுமே இருக்க முடியாது.
எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை!
மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை.
இசுலாம் கட்டிறுக்கமானது.
இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.
சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது.
ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. - பழ. கருப்பையா
CONTINUED ….
PART 2. உலக மனிதனே இசுலாத்தின் சாரம். - பழ. கருப்பையா --
முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரம், இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான்.
அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான்.
நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா" என்கிற இசுலாமியச் சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்!
அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கஅபாவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கஅபாவை விலக்கிவிடவில்லை.
கஅபா என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார்.
ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல்.
தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே!
ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை.
அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
தொழுதால் போதாதா?
கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்" என்று உறுதிபடக் கூறுகிறது.
தொழுதல் 'உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது.
உம்மா என்பது சமூகம்.
அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது.
இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை!
இஸ்தான்புல்லில் உள்ள இப்ராஹீமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாஹ்வும் இணைய முடிவதற்கு நபிகள் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்!
இசுலாத்தில் 'உம்மா' முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது.
(கடைசிக்) கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்!
மக்கா கஅபாவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும் நிமிர்ந்தும் கைகளைச் சேர்த்தும் விரித்தும் ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை!
விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை!
அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து, உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும் உம்மா உருவாக்கமும்!
இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத்.
ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது!
இந்தத்தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்!
ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும் பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது,
வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும்.
அத்தகையச் சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது!
ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள்.
"ஈத்துவக்கும் இன்பம்" என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன்.
வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கி போல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை.
இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ.38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல;
ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்! - பழ. கருப்பையா
CONTINUED .....
PART 3. உலக மனிதனே இசுலாத்தின் சாரம். - பழ. கருப்பையா
எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும்,
நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.
"ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை" என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது,
ஏழைபாழைகளின் மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாஹ்வின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது!
நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை.
ஆகவே அல்லாஹ் உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார்.
மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது!
தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக்க வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குர்ஆன் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்!
ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை? என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்" என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு!
நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும் எதையும் அருந்தாமலும் இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!
பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும்.
ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை.
பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள்.
ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது.
ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது!
இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்!
இறையச்சம் முக்கியம்.
இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம்.
தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம்.
ஐந்துவேளை தொழுகை முக்கியம்.
ஜக்காத் முக்கியம்.
உம்மா முக்கியம்.
இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு.
விரித்தால் விரிகடலெனப் பெருகும்.
ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை.
தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும்.
தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும்.
தகர்ந்துதான் போகட்டுமே.
அவற்றை இறைவனா போட்டான்?
1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும் முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது.
1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின் மீதும் பலுசிஸ்தான் மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது.
நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது.
"யாதும் ஊரே; யாவருங் கேளிர்" என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது.
நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே.
உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான்.
உலக மனிதனே இசுலாத்தின் சாரம். பழ. கருப்பையா
THANKS TO: http://www.satyamargam.com/
@ நாகூர் மீரான்
///ஆமாம் ...இதுதான் இஸ்லாம்...ஆனால் இன்று "அடுத்தவர் செருப்பை எடுக்க வேண்டாம்" என்று பள்ளிவாசல்களில் (அறியாத மக்களுக்கு)எழுதி போடவேண்டி இருக்கிறது...இஸ்லாத்தின் படி நம்மக்கள் வாழ்ந்தால் இவ்வுலகம் என்ன அருமையாக இருக்கும்...என்றுமே ஆனந்தமே..///
என் அலுவலக முஸ்லிம் நண்பர்கள் ரெண்டு பேருக்கும் இது நடந்துச்சு ...ஆனா கொஞ்சம் காஸ்ட்லி ...ரெண்டு leather shoes களவாடப்பட்டு விட்டது ...கோவில்லையும் செருப்பு திருடுறான் ,பள்ளிவாசல்லையும் திருடுறான் .....மதங்கள் மாறியபோதும் மனித குணங்கள் மாறவில்லை
Post a Comment