Followers

Thursday, October 04, 2012

பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸின் மன மாற்றம்!

பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸின் மன மாற்றம்!



பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ் அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அதே ஃபிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.



32 வயதாகும் இவரது இயற்பெயர் மெலோனி ஜியார்ஜியடிஸ். சில காலம் போதை மருந்துக்கும் அடிமையாய் இருநதார். கடுமையான மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். மன நிம்மதி இழந்து தவித்து பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். எந்த பலனும் இல்லை. ஒரு முறை இவரது தோழி இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் 'இரு தொழுது விட்டு வருகிறேன்' என்று சென்றதை ஆச்சரியத்தோடு பார்த்தார். இந்த அளவு இந்த தொழுகைக்கு முக்கியத்துவமா? அப்படி என்ன இருக்கிறது இந்த குர்ஆனில் என்று தொடர்ந்து குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அவரது மனதை ஆட்கொண்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். குர்ஆனை நன்கு படித்து தெளிந்தவுடன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக சுவீகரித்துக் கொண்டார். இவரது முடிவை இவரது ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் முழு ஹிஜாபோடு சமீபத்தில் தொலைக் காட்சிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

'சிலர் சொல்வது போல் எவரது மிரட்டலுக்காகவும் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. குர்ஆனை ஆராய்ந்து தெளிவு கிடைத்த பிறகே எனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முடிவால் சிலருக்கு வருத்தம் உள்ளதை அறிவேன். எனக்கு தேவை மன நிம்மதி. அது இஸ்லாத்தில் கிடைத்துள்ளது. இறைவன் இட்ட கட்டளைகளை நான் அடி பிறழாது பின்பற்றுவேன். இஸ்லாத்தை ஏற்று முதன் முதலாக எனது நெற்றி இறைவனை வணங்க தரையை தொட்டபோது இனம் புரியாத சந்தோஷம் என்னுள் பரவுவதை உணர்ந்தேன். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. எனக்கு எனது அமைதியான வாழ்வுதான் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகுதான். இதை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்கிறார் டயாம்ஸ்.



டயாம்ஸ் இஸ்லாத்தை தழுவும் முன்பு ரெகார்டிங் தியேட்டரில்



டயாம்ஸ் இஸ்லாத்தை தழுவும் முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில்



இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.

சாதாரண ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றால் அது அவனுக்கு மறுமை வாழ்வை சிறப்பாக்குவதோடு அவனது உலக வாழ்விலும் அழகிய வாழ்க்கை நெறியைப் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இந்த பெண்மணி புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த முடிவை எடுக்கிறார். இதனால் இசைத் துறையை கை கழுவ வேண்டி வரும். பொது மக்கள் முன்னிலையில் பல ஆண்களோடு இனி நடனமாட முடியாது. மிகப் பெரும பொருளாதார இழப்பும் ஏற்படும். ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். பேரும் புகழும் இனி இந்த மங்கையை தேடி இந்த உலகில் வராது. இருந்தும் அதை அனைத்தையும் தூர எறிந்து அழகிய வாழ்வு முறையை இவ்வுலகத்துக்கும் மறு உலகத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள இந்த சகோதரியை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொள்வோம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இவரை யாரும் கத்தியை காட்டி மிரட்டி இஸ்லாத்தை ஏற்கச் சொல்லவில்லை. பணம் காசு தருகிறோம் இங்கு வந்து விடு என்று யாரும் ஆசை காட்டவில்லை. 'வாளாலும் பணத்தாலும் இஸ்லாம் வளர்ந்தது' என்று கூறுபவர்களுக்கு இந்த பெண்மணி அழகிய பதிலை அளித்துக் கொண்டிருக்கிறார்.

http://english.alarabiya.net/articles/2012/10/01/241253.html

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 110:1,2,3.



25 comments:

இராஜகிரியார் said...

சத்தியத்தை தனது வாழ்வு நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரிக்கு அல்லாஹ் ஈருலகிலும் ஈடேற்றத்தை தந்தருள்வனாக...

Unknown said...

SALAAM

//
'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 110:1,2,3. //

இந்த வசனத்திற்கு ஏற்ப நபி அவர்கள் தொழுகையில் ருகூ & சஜ்தா விலும் இதை ஓதினார்கள்

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 110:1,2,3.

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு) நூல்கள்: புகாரீ 794, முஸ்லிம் 746

Unknown said...

அந்த சகோதரிக்கு இஸ்லாத்தின் மீது பற்றை மேலும் அதிகரிக்க செய்வானாக

Nasar said...

Islam is the true healer and the only salvation of mankind.
You can't find Peace in this World except in Islam.
Masha Allah, Diams Converted to Islam...

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுவனப்பிரியன் அண்ணே,

//பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது//

முகம் மற்றும் கை மணிகட்டுகள் தவிர்த்து மற்ற உடல் பாகங்களை மறைக்கும்விதமாக அணியும் ஹிஜாபை பிரஞ்சு அரசாங்கம் தடை செய்யவில்லை. அப்படியாக எந்த அரசாங்கமும் தடை செய்யவும் முடியாது.

பிரஞ்சு அரசாங்கம் தடை செய்ததெல்லாம் முகத்திரையை தான். அதாவது புர்கா. உங்களின் இந்த கருத்து பிரஞ்சு அரசாங்கம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. ஆகையால் தயவுக்கூர்ந்து அதனை மாற்றவும்.

எத்தனை எத்தனை பேர் இஸ்லாமை நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை காணும் போது பிரமிப்பே வருகின்றது. சுப்ஹானல்லாஹ். அந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுவனப்பிரியன் அண்ணே,

//பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது//

முகம் மற்றும் கை மணிகட்டுகள் தவிர்த்து மற்ற உடல் பாகங்களை மறைக்கும்விதமாக அணியும் ஹிஜாபை பிரஞ்சு அரசாங்கம் தடை செய்யவில்லை. அப்படியாக எந்த அரசாங்கமும் தடை செய்யவும் முடியாது.

பிரஞ்சு அரசாங்கம் தடை செய்ததெல்லாம் முகத்திரையை தான். அதாவது புர்கா. உங்களின் இந்த கருத்து பிரஞ்சு அரசாங்கம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. ஆகையால் தயவுக்கூர்ந்து அதனை மாற்றவும்.

எத்தனை எத்தனை பேர் இஸ்லாமை நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை காணும் போது பிரமிப்பே வருகின்றது. சுப்ஹானல்லாஹ். அந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Adirai Iqbal said...

இஸ்லாம் பரவுவதை தடுக்க என்னவெல்லாமோ முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் அது தோல்வியில்தான் முடிகிறது அவர்களுக்கு . இஸ்லாத்திற்கு நேர் எதிரான கலாச்சாரத்தில் இருந்த இந்த பெண்மணிக்கு இஸ்லாம் கிட்டியது அந்த தோழியின் தொழுகையை நிலைநாட்டும் செயல்தான் . எந்த காலத்திலும் இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை மாறாக முஸ்லிம்களின் நடத்தை, வியாபாரங்களிலும் கொடுக்கல்வாங்கல்களிலும் முஸ்லிம்களின் நேர்மை இவற்றையெல்லாம் பார்த்துதான் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//முதலில் இதையெல்லாம் ஒன்று என்று சொல்லச் சொல்லுங்கள், ஒரு பயலும் சொல்லமாட்டான்,

நம்ம சுவன அண்ணன் இணை வச்சுப்புட்டான் என்று சொல்லி பிடறி தெறிக்க ஓடுவார்.

இங்கே ஒன்றே இறைவன் என்கிற பம்மாத்தெல்லாம் நான் சொல்லும் அந்த ஒன்று தான் இறைவன் என்ற திணிப்பே.//

நம்மிடம் தவறை வைத்துக் கொண்டு சுவனப்பிரியனை குறை சொன்னால் எப்படி?

'அல்லாஹ் என்று அழையுங்கள். ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் (இறைவன், கடவுள், கர்த்தர், சிவன், பிதா என்று பல பெயர்களில்) அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன' என்று முஹம்மதே கூறுவீராக!

-குர்ஆன் 17:110

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றுதான் நமது முன்னோர்களும் சொல்லுகின்றனர். ஆனால் சிவனுக்கு பார்வதி என்ற ஒரு மனைவியும் அவனுக்கு மக்களையும் நாமே கற்பனையில் உண்டாக்கிக் கொண்டோம். அதே இறைவனுக்கு யானையின் தும்பிக்கையை நாமே பொருத்திக் கொண்டோம். பத்து தலைகளையும் நாமே உருவாக்கிக் கொண்டோம். ஏசு சொல்லாத முக்கடவுள் கொள்கைகளையும் நாமே உண்டாக்கிக் கொண்டோம்.


உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் மயர்வற மதிநலம் அருளியவன் எவனவன் அமரருள் அதி;பதி எவனவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே!” – திருவாய்மொழி

திருவாய் மொழியின் இந்த பாசுரத்தை குர்ஆன் கூறும் இறைவனுக்கும் பொருத்திக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் இறைவனை சரியாகவே விளங்கியிருந்தனர். எனவே தவறாக தற்போது நாம் விளங்கிக் கொண்டது இறைவனின் தவறல்லவே!...

suvanappiriyan said...

ராவணன் said..


அண்ணாச்சி... நம்ம ஷகீலா, மும்தாஜ் பற்றி சொல்லுங்க... on பிரபல ஃப்ரெஞ்ச் ரேப் பாடகி டயாம்ஸின் மன மாற்றம்!
ராவணன்


suvanappiriyan said...

ராவணன்!

//அண்ணாச்சி... நம்ம ஷகீலா, மும்தாஜ் பற்றி சொல்லுங்க...//

முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்து விட்டதாலேயே ஒரு மனிதன் முஸ்லிமாகி விட முடியாது. அவனது நடத்தை இஸ்லாமாக இருக்க வேண்டும். அது இந்த இருவரிடமும் இல்லையாதலால் அவர்களை இஸ்லாமியர்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த இராஜகிரியார், மைதீன், நாசர், ஆஷிக் அஹமத், அதிரை இக்பால் அனைவருக்கும் நன்றிகள் பல. தொடர்ந்த வேலை பெண்ட் எடுக்கிறது. எனவேதான் தனியாக பதில் தர முடியவில்லை.

Anonymous said...

விரும்பிய மதத்தில் சேர்வதற்கும், விலகுவதற்கும் மேற்கு நாடுகளின் சுதந்திரமுண்டு என்பதை இப்பதிவு மீண்டும் வலியுறுத்துகின்றது. இதே சுதந்திரங்களை மத்தியக் கிழக்கு மற்றும் கீழை நாடுகளிலும் யாம் எதிர்ப்பார்க்கின்றோம் .. அவ்வளவு ..

சகோ.. அவர் ரேப் பாடகி அல்ல, ராப் பாடகி, ரேப் ( Rape ) என்றால் பொருள் மயக்கம் ஏற்படுகின்றது. சரி செய்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு பிரான்ஸ் குறித்த தவறான கருத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள். முழு முகத்தை மூடும் புர்கா, நிகாப் போன்றவைகளையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளது. அதுவும் பொது இடத்தில் தான். வீடுகளில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை, தனி மனித சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கும் நாடு பிரான்ஸ் அல்ல..

அடுத்து பொது பள்ளிக் கூடங்களில் அனைத்து மதச் சின்னங்களையும் அவ் வரசு தடை செய்துள்ளது, ஹிஜாப், குருசு, திருநீறு, சீக்கிய தலைப்பாகை, யூத கிப்பா என்பவை யாவும் இவற்றில் அடங்கும்,

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//சகோ.. அவர் ரேப் பாடகி அல்ல, ராப் பாடகி, ரேப் ( Rape ) என்றால் பொருள் மயக்கம் ஏற்படுகின்றது. சரி செய்துக் கொள்ளுங்கள்.//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

ராப் எனும் குத்தாட்டம் அதிகமானால் அது ரேப்பில் கொண்டு விடும் தானே! சிலர் உடலால் ரேப் பண்ணுவர். சிலர் எழுத்தால் ரேப் பண்ணுவர். சிலர் ஆட்டத்தால் ரேப் பண்ணுவர். இந்த பாவங்களிலிருந்து எல்லாம் சகோதரி மீண்டது வரவேற்கப் பட வேண்டியது.

Seeni said...

nalla thakaval....

Adirai Iqbal said...

// இக்பால் செல்வன் said... தனி மனித சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கும் நாடு பிரான்ஸ் அல்ல.. //

தனி மனித சுதந்திரத்தில் பிரான்ஸ் தலையிடுவதில்லையா. முஸ்லிம்களின் விஷயத்தில் அப்படி இல்லையே.பிரான்சில் புதிய பள்ளிவாயில்களை கட்டுவதற்கும் ,இஸ்லாமிய பிரச்சாரம் செய்வோரை வெளிநாடுகளிலிருந்து வருவிப்பதற்கும் தடை அங்கு தொடர்கிறது .

தலை நகர் பாரிசில் விமான நிலையத்தில் பணியாற்றிய 72 முஸ்லிம் ஊழியர்களை பனி நீக்கம் செய்தது . அதற்கு அவர்கள் பாக்கிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானிற்கும் சென்றுவிட்டு வந்தவர்கள் என்று காரணம் கூறியது.

கிழக்கு பிரான்சில் ஐரோப்பாவின் மாட்சிமையான ஸ்வஸ்திகா சின்னம் பள்ளிவாசல்களிலும் , பள்ளிக்கூடங்களிலும் வரையப்படுவது தொடர்கிறது . இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லையா ?.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.சுவனப்பிரியன்,
நாகூர் மண்ணில் பிறந்து அதன் புனிதத்தை கெடுத்த ஒரு மட்டமான எழுத்தாளரின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. அதனை இங்கு பகிர விரும்புகிறேன்.
http://jaba2008.blogspot.com/2012/10/blog-post.html?showComment=1349415387979#c2182290448059199068

விஜய் said...

சிறுவயதில் என் தந்தை எனக்கு சொன்ன செம்மறி ஆட்டுக்கூட்டம் கதை ஞாபகத்துக்கு வருகிறது.

George said...

//தனி மனித சுதந்திரத்தில் பிரான்ஸ் தலையிடுவதில்லையா. முஸ்லிம்களின் விஷயத்தில் அப்படி இல்லையே//


பிரான்ஸ்க்கு இப்போது கொஞ்சம் புத்தியில் உறைத்திருக்கிறது போலும், இது மேலும் தொடர்ந்தால் நல்லது. முசல்மான்களை அதிகமாக தனது நாட்டில் சுதந்திரமாக விட்டதன் பலனை இங்கிலாந்து அனுபவித்து கொண்டிருக்கிறது. அதை பார்த்து பிரான்ஸ்க்கு புத்தி வந்திருக்க வேண்டும்.

//.பிரான்சில் புதிய பள்ளிவாயில்களை கட்டுவதற்கும் ,இஸ்லாமிய பிரச்சாரம் செய்வோரை வெளிநாடுகளிலிருந்து வருவிப்பதற்கும் தடை அங்கு தொடர்கிறது .//
அடடா, அண்ணே சவூதில பிற மதத்தவர் இந்த மாதிரி தனது மதத்தை பிரச்சாரம் செய்யவோ, கோவில் கட்டவோ முடியாது தெரியுமா? நீங்கள் சவூதி மன்னரிடம் கொஞ்சம் சொல்லி அந்த தடைகளை எல்லாம் நீக்க சொல்லலாமே. எப்படி உங்களை போன்றவர்களால் இப்படி பேச முடிகிறது. நீங்கள் அடுத்த மதத்தவருக்கு தடை போடுவீர்கள். ஆனால் மற்றவர்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் திறந்து விட வேண்டும். நன்றாக இருக்கிறதே உங்கள் நியாயம்.

//தலை நகர் பாரிசில் விமான நிலையத்தில் பணியாற்றிய 72 முஸ்லிம் ஊழியர்களை பனி நீக்கம் செய்தது . அதற்கு அவர்கள் பாக்கிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானிற்கும் சென்றுவிட்டு வந்தவர்கள் என்று காரணம் கூறியது.//

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ யார் கண்டது, அதிலும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பற்றி கூற வேண்டுமா

//கிழக்கு பிரான்சில் ஐரோப்பாவின் மாட்சிமையான ஸ்வஸ்திகா சின்னம் பள்ளிவாசல்களிலும் , பள்ளிக்கூடங்களிலும் வரையப்படுவது தொடர்கிறது//

அப்படியா? நல்லது. தொடரட்டும்

//இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லையா ?.//
அப்படி எல்லாம் இல்லை. ஏன் என்றால் சுதந்திர நாடான பிரான்ஸ் வருங்காலத்தில் சவூதிக்கு அடிமையாக மாறிவிட கூடாதல்லவா. அதனால் இது போன்றவைகள் தேவை தான். இவை இன்னும் அதிகமானால் நல்லது. அவர்கள் நாடு அவர்கள் விரும்பியதை செய்கிறார்கள். . ''ஏன் புத்தர் சிலைகளை உடைத்தீர்கள்'' என்ற கேள்விக்கு உங்கள் கூட்டத்தவர் பதில் இது தானே. அவர்கள் உரிமையில் தலையிட நீங்களோ நானோ யார்.

வவ்வால் said...

//,இஸ்லாமிய பிரச்சாரம் செய்வோரை வெளிநாடுகளிலிருந்து வருவிப்பதற்கும் தடை அங்கு தொடர்கிறது .
//

எல்லா நாட்டிலும் டூரிஸ்ட் விசாவில் போய் பிரச்சாரம் செய்ய தடை உண்டு, ஆனால் பல நாடுகள் கண்டும் காணாமலும் இருக்கிறது.

பிரான்ஸ் ஸ்ட்ரிக்ட் ஆ செயல்ப்படுத்துகிறது என நினைக்கிறேன்.

--------

சு.பி.சுவாமிகள்,

//அதே ஃபிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் //

இப்படிலாம் ஒரு ஆள் இருக்குன்னே உலகத்தில் யாருக்கும் தெரியாது, அப்புறம் பிரபலம்னு நீங்களே சொல்லுறிங்க.

ஏஞ்சலினா ஜோலி, மடோனா, கீனு ரீவ்ஸ் எல்லாம் புத்த மதம் மாறி ரொம்ப நாளாச்சு ,அதை கூட யாரும் இம்புட்டு பெருமையாக சொல்லிக்கொண்டதில்லை :-))

போதை மருந்து அடிமையா ஆனவங்க வந்ததும் ஒரே குஜால் தான் போல, முல்லா ஓமர் கேள்விப்பட்டா சந்தோஷப்படுவார் :-))

suvanappiriyan said...

வவ்வால்!

//போதை மருந்து அடிமையா ஆனவங்க வந்ததும் ஒரே குஜால் தான் போல, முல்லா ஓமர் கேள்விப்பட்டா சந்தோஷப்படுவார் :-))//

தவறு செய்தவர்கள் திருந்தப் பார்க்கணும். இந்த பாடகியிடமிருந்து பாடம் பெற்றுக் கொள்ளுங்கள்.

Nasar said...

வவ்வால் பாய்.....
// இப்படிலாம் ஒரு ஆள் இருக்குன்னே உலகத்தில் யாருக்கும் தெரியாது, அப்புறம் பிரபலம்னு நீங்களே சொல்லுறிங்க.//
என்னமோ "உலகம் சுற்றிய வாலிபன்" போல சொல்றீங்களே ..!! இவிங்க பிரெஞ்ச் பாடகி
உங்களுக்கும்,எனக்கும் தமிங்கிலிஷ் மட்டும் தெரிந்திருப்பதால் இவரைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. [உலகத்தில் யாருக்குமே தெரியாதுன்னு புளுகுவது உங்க பாணி] பேப்பரில் செய்தி வந்தபிறகுதான் எல்லோருக்கும் தெரிந்திருக்கு..
// ஏஞ்சலினா ஜோலி, மடோனா, கீனு ரீவ்ஸ் எல்லாம் புத்த மதம் மாறி ரொம்ப நாளாச்சு ,அதை கூட யாரும் இம்புட்டு பெருமையாக சொல்லிக்கொண்டதில்லை :-)) //
இவிங்க எல்லோரும் உலகம் அறியப்பட்ட இங்கிலீஷ் சினிமா ஸ்டாருங்க. இவிங்க மதம் மாறினது நமக்கெல்லாம் தெரியும். புத்த மதம் பதிவர்கள் யாராவது சுவணன் போல இருந்தாங்கனா போட்டிருப்பானுங்க ..இதுல உங்களுக்கு ஏனுங்க நோவுது..!! ஆவ ஆவ்வ்
// போதை மருந்து அடிமையா ஆனவங்க வந்ததும் ஒரே குஜால் தான் போல, முல்லா ஓமர் கேள்விப்பட்டா சந்தோஷப்படுவார் :-))//
சந்தோஷப்படுவதட்கு இதுல என்ன இருக்கு ..!! ஒரு நம்பர் கூடிப்போய் இருக்குது அவ்ளோதான் ...
ISLAM DOES NOT WANT ANYBODY BUT EVERYBODY WANTS ISLAM...

Unknown said...

//ISLAM DOES NOT WANT ANYBODY

அப்புறம் என்னத்துக்கு தாவா பண்றீங்க, எதுக்கு இந்த வெளி வேடம், எங்க மதத்துக்கு வாங்க என்று யாரையும் நீங்கள் அழைப்பதில்லையா? உங்க தூதர் ஒரு பிராடு பிறகு உங்கள் கூட்டம் எப்படி இருக்கும்.

BUT EVERYBODY WANTS ISLAM..

அப்படி யாரும் எனக்கு வேணும் எனக்கு வேணும் என்று வரிசையில் நிற்கவில்லை. உங்கள் கூட்டம் தான் 'அழைப்பு பணி செய்கிறோம் தாவா செய்கிறோம் என்று' சும்மா இருப்பவர்களை மூளை சலவை செய்கிறது. முட்டாள் கூட்டத்திற்கு மட்டுமே இஸ்லாம் தேவைப்படும். உலகில் இன்று பணத்தை மட்டும் அதிகம் வைத்து கொண்டு மூளையை குறைவாக வைத்து இருப்பது உங்கள் கூட்டம் மட்டுமே.

வவ்வால் said...

நாசர் பூஜாரி,

நீங்க தான் வாலிபன் சுற்றிய உலகமா :-))

see this news,

http://www.presstv.com/detail/2012/07/24/252543/top-sunni-cleric-embraces-shia-islam/

இதெல்லாம் சொல்லவேயில்லை :-))

suvanappiriyan said...

வவ்வால் ஜீ!

//இதெல்லாம் சொல்லவேயில்லை :-))//

hasan
Jul 24, 2012 3:40 PM
Is Prophet Muhammad said when his time, you are a Sunni, or you are Shia Muslim. No, Quran and Prophet says "Muslim","Muslimoon" Sunni is a party and also Shia is a party not religion.

abu daoud
Jul 24, 2012 3:12 PM
Words like "Shia" and "sunni" never existed during the time of the prophet ASW&; Islam is beautiful and simple. Quran life of prophet, no more no less.

Wiz
Jul 24, 2012 2:53 PM
There is no Sunni or Shia Muslim. The prophet(s.a.w) only introduced us to Islam, with Quran as our main guidance.

இதையும் சொல்லவே இல்லை. :-)

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

அப்புறம் ஏன் ஷியா பிரிவு மீது கொலை வெறித்தாக்குதல்?

சன்னி,ஷியா என எதுவும் இல்லை என்றால் எப்படி ஒருவர் இதில் இருந்து அதற்கு மாறினேன் என சொல்கிறார்?

இஸ்லாமிய சட்ட வாரியம் என தனி தனியாக சன்னி, ஷியாவுக்கு ஏன் இருக்கிறது? ஒன்றாக வைக்கலாமே?

நீங்களே வழக்கு போட்டு ,நீங்களே தீர்ப்பு எழுதிக்கிறாப்போல அப்படிலாம் இல்லைனு சொல்லிட்டா ஆச்சா?

உலகில் உள்ள இஸ்லாமியர்களில் 20% ஷியா பிரிவுன்னு சொல்றாங்க ,அவங்க எல்லாம் வானத்தில இருந்து குதித்தவர்களா?

உங்கள் தகவலுக்காக,

ஏசு கிருத்து சாகும் போது கிருத்துவம் என்ற மதமே இல்லை ,பின்னர் பெயர் சூட்டி உருவானது.

அதனால் கிருத்தவம் என்ற மதமே இல்லை,அதில் ரோமன் கத்தோலிக்,பிராட்டஸ்டன்ட்,பெந்தே கோஸ்டல், சிரியன் கத்தோலிக் என்றெல்லாம் இல்லைனு சொல்லிட முடியுமா?

அதே போல இஸ்லாமிலும் பலப்பிரிவுகள் உருவாகி ,மக்களும் இருக்கும் போது ,இல்லைனு மட்டையடியாக அடித்தால் எப்பூடி?