Followers

Friday, October 05, 2012

அமெரிக்கர் இஸ்ரேலியர் தகராறில் சுட்டுக் கொலை!



இஸ்ரேலில் நேற்று இலாட் ஹோட்டலில் தங்கிய அமெரிக்க இளைஞர் (23 வயது) ஹோட்டல் சிப்பந்தியோடு உலக அரசியல் சம்பந்தமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 'உன்னால நான் கெட்டேன்: என்னால நீ கெட்டே' என்று இருவரும் பயங்கர வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முடிவில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அமெரிக்கர் சக ஹோட்டல் பணியாளரான இஸ்ரேலியரை (வயது 33) சுட்டுக் கொன்று விட்டார்.

தனது நாடான அமெரிக்காவில் இஸ்ரேலிய நாட்டு வியாபார முதலைகள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி விட்டதை தனது சண்டையில் குறிப்பிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவை நேசிக்கும் உண்மையான விசுவாசியாக இருப்பார் போலிருக்கிறது. வட்டியை தங்களின் முழு நேர தொழிலாக கொண்ட இஸ்ரேலியருக்கு அமெரிக்காவை அடிமையாக்குவது பெரிய காரியமல்லவே! உலகை அடிமையாக்க அமெரிக்கா திட்டம் தீட்டுவது ஒரு புறம் நடக்க அமெரிக்காவே மெல்ல மெல்ல இஸ்ரேலியர் வசம் சென்று கொண்டிருக்கிறது. அதன் கோபத்தின் வெளிப்பாடே இந்த கொலை.

ஹோட்டல் சிப்பந்தியை கொன்ற அமெரிக்கர் பின்னர் சமையலறைக்கு சென்று தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கையில் அங்கு வந்த இஸ்ரேலிய போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். பல அமெரிக்கர்கள் தங்களின் இந்த நிலைக்கு இஸ்ரேலே காரணம் எனபதை நினைத்து மிவும் கோபத்தில் இருப்பதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

நம் நாட்டில் வட்டியை மூலதனமாகக் கொண்ட பனியாக்கள் எவ்வாறு சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்களோ அதே நிலைதான் இன்று அமெரிக்காவில் இஸ்ரேலியர் வாங்கிக் குவிக்கும் சொத்துக்களும்.

பாம்புக்கு பால் வார்த்த அமெரிக்கா இன்று அதன் பலனை அனுபவிக்கிறது. நாமும் பனியாக்களுக்கும் வட நாட்டு சேட்டுகளுக்கும் பால் வார்த்து கொண்டிருக்கிறோம். எப்போது கடிக்கப் போகிறதோ?


இஸ்ரேலின் உண்மையான முகம் என்ன என்பதை ஒரு யூதரே அழகாக விளக்குவதை சகோ கலையரசனின் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

______________________________________________________________

வருங்கால அமெரிக்கா எப்படி இருக்கும்?




--------------------------------------------------------------

http://englishthrutamil.blogspot.com/2012/10/blog-post_5.html

டிஸ்கி: எளிய வழியில் ஆங்கிலம் கற்க இந்த பதிவை சகோதர சகோதரிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.


19 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
உண்மை நிரந்தரமாக உறங்காது. ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் தானும் விழித்து மற்றவரையும் இப்படியாக எழுப்பிவிடும்..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//உண்மை நிரந்தரமாக உறங்காது. ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் தானும் விழித்து மற்றவரையும் இப்படியாக எழுப்பிவிடும்..!//

உண்மைதான் சகோ. இனியாவது அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

Unknown said...

ஸலாம்

இதுக்கு நாட்டாமை [ஒபாமா ] என்னா அறிக்கை விட்டார் .. அதையும் சொல்லுங்க ...

ஒற்றுமை யா இருக்க தெரியல ..
என்நே அமெரிக்க என்ன இஸ்ரேல் ...

எதுக்குங்க உலக பொருளாதாரம் அமெரிக்கன் டாலர் பேஸ் பண்ணி இருக்கு ...

இதுக்கு ஒரு பதிவு போடுங்க ...

Unknown said...

இஸ்ரேலுக்கு ஏங்க அமெரிக்கா அடிமையா இருக்கு !!!..

அமெரிக்கர்கள் பெரும்பாலும் அதிகம் கிறித்தவர்கள் , இஸ்ரேல் ல யூதர்கள் ...

எப்படி ஒத்து போகுது ...

suvanappiriyan said...

சகோ மை தீன்!

//எதுக்குங்க உலக பொருளாதாரம் அமெரிக்கன் டாலர் பேஸ் பண்ணி இருக்கு ...

இதுக்கு ஒரு பதிவு போடுங்க ...//

நேரம் கிடைக்கும் போது அதையும் பார்ப்போம்.

அஜீம்பாஷா said...

ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல் அமெரிக்க உறவில் ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை, ஏனென்றால் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க யூதர்களின் சங்கம் (AIPAC) மிக வலுவானதாகும் தேர்தல் நேரத்தில் இவர்கள் தரும் தேர்தல் நிதி அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கும் மிக அவசியமான ஒன்றாகும் அதனால் இரு பெரிய கட்சிகளும் இந்த தேர்தல் நேரத்தில் இறந்தவர்க்கு ஒரு ரீத் வைத்துவிட்டு மறந்து விடுவார்கள்.


Nasar said...

MY தீன் SAID,
// இஸ்ரேலுக்கு ஏங்க அமெரிக்கா அடிமையா இருக்கு !!!..//

சகோ மைதீன் இந்த கேள்விய நீங்க மட்டுமில்ல உலக சமூகமே அமெரிக்காவை பார்த்து கேட்கிறது,ஆனால் அமெரிக்கா சொல்லாது பதில்.பல காரணங்கள் உண்டு அதிலே மிக முக்கியமான காரணம், அமெரிக்க தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு யூத்த சமூகம் பெரிய அளவில் பண உதவி செய்து இஸ்ரேலிய அடாவடிகளை கண்டும்காணாமல் இருக்க செய்கிறது...
எப்போ யூதர்களின் பணமும்,ஓட்டும் வேண்டாம் என்று இந்த இரண்டு கட்சிகளும் சொல்லுதோ,
அப்போதான் உலகத்தில் நிம்மதி கிட்டும் அதுவரை நிம்மதி நஹி ...
உலக வரலாற்றில் யூதர்கள் எங்குமே நிரந்தரமாக இருந்ததில்லை அந்த நிலை கூடிய சீக்கிரத்தில்
அமெரிக்கா மற்றும் பாலஸ்தீன்[இஸ்ரேல்] நாடுகளில் இருந்து ஆரம்பம் ஆகலாம் ....
அமைதி,சமாதானம் விரும்பாத ஒரே சமூகம் உலகத்தில் யூதர்கள் மட்டுமே

Nasar said...

MY தீன் SAID,
// இஸ்ரேலுக்கு ஏங்க அமெரிக்கா அடிமையா இருக்கு !!!..//

சகோ மைதீன் இந்த கேள்விய நீங்க மட்டுமில்ல உலக சமூகமே அமெரிக்காவை பார்த்து கேட்கிறது,ஆனால் அமெரிக்கா சொல்லாது பதில்.பல காரணங்கள் உண்டு அதிலே மிக முக்கியமான காரணம், அமெரிக்க தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு யூத்த சமூகம் பெரிய அளவில் பண உதவி செய்து இஸ்ரேலிய அடாவடிகளை கண்டும்காணாமல் இருக்க செய்கிறது...
எப்போ யூதர்களின் பணமும்,ஓட்டும் வேண்டாம் என்று இந்த இரண்டு கட்சிகளும் சொல்லுதோ,
அப்போதான் உலகத்தில் நிம்மதி கிட்டும் அதுவரை நிம்மதி நஹி ...
உலக வரலாற்றில் யூதர்கள் எங்குமே நிரந்தரமாக இருந்ததில்லை அந்த நிலை கூடிய சீக்கிரத்தில்
அமெரிக்கா மற்றும் பாலஸ்தீன்[இஸ்ரேல்] நாடுகளில் இருந்து ஆரம்பம் ஆகலாம் ....
அமைதி,சமாதானம் விரும்பாத ஒரே சமூகம் உலகத்தில் யூதர்கள் மட்டுமே

ஊர்சுற்றி said...

அருமையான கட்டுரை. எப்படியெல்லாம் தனக்குத்தானே விருப்பமானதை எல்லாம் சொல்லி மகிழ முடிகிறதோ! சபாஷ்!!!

சு.பி ,
நீங்கள் என்ன கற்பனையையும் சொல்லாம், உங்கள் உரிமை. அதற்கு மற்றவர்கள் முதுகில் தட்டலாம்!

இந்த கொலைகாரன் ஒரு யூதன். அவன் பெயர் வில்லியம் ஹொரோவிற்ஸ் ! யூதன் என்றால் சாதாரண யூதன் அல்ல. நியூ யோர்க்கில் பொக்கிப்சி எனும் ஊரில் வசிப்பவன். இந்த பொக்கிப்சி பக்கம் போனீர்கள் என்றால் கணீல் காண்போரில் அரைவாசிப்பேருக்கு மேல் பழமைவாத யூதர்களாய் இருப்பார்கள் ! இந்த ஊரில் கடும் போக்கு பழமைவாத கோஷ்டி ஒன்று தமக்குத்தாமே ஊர் ஒன்றை ஸ்தாபித்து வாழ்கிறது. ஊரின் பெயர் கிரியற் சமோனா!
அப்படிப்பட்ட ஊரில் இருந்து இஸ்ரேலிய அரசினால் நடாத்தப்படும் ஒரு கற்கைத்திட்டத்தின் மூலம் இஸ்ரேல் சென்றவன் அவன்.
அங்கே அவனின் கடமைகள் ஈச்ரேலிய வாழ்க்கை முறையை (யூத வாழ்க்கை) , இஸ்ரேலிய உணவு தயாரிக்கும் முறை மற்றும் ஹீபுரூ மொழியைப் பயிலுதல்.
இந்த திட்டத்தில் இணைந்து இஸ்ரேல் செல்ல உள்ளூர் யூத மதகுருவின் ஆசிர்வாதம் தேவை.
இந்தத் திட்டத்தில் செல்வோர் கடும் போக்காளர்களாக இருப்பார்கள். திரும்பிவரும் போது இன்னும் கடும்போக்காலராய் மாறி இருப்பார்கள். பாலஸ்தீன அகதிகளை கீழ்த்தரமாகத் திட்டுவார்கள். அவர்களை பயங்கரவாதிகள் எனவும் அவர்களின் ஒலிவ் தோட்டங்களையும் நீர்ச்சுனைகளையும் அடாவடியாக பறிப்பதை நாக்கூசாமல் நியாயப்படுத்துவார்கள். கேட்டால் இஸ்ரேல் தமக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் என்பார்கள்.

கடும்போக்க்காளர்கள் வாழும் இடத்தில் இருந்து வந்து கடும்போக்கு குணம் கொண்டவன் இஸ்ரேலிய அரசால் ஒழுங்கு செய்யப்பட்டு யூத மதத்தலைவனால் பரிந்துரை செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு யூத வாழ்க்கை முறை பயிலச் சென்ற ஒருவன் கொலை செய்கிறான்.

அவனை அமெரிக்கன் எனக்கேட்டதும் புழுகாங்கிதம் அடைந்து அட்டகாச கதை விட்டு மகிழ்கிறீர்களே! சுப்பர் சு.பி !!!

இவன் பலமுறை தனது கனவுகளில் இரத்தமும் சதையும் தோன்றியதாகவும் அரபிகள், நாசிகள், பயங்கரவாதிகள் என உளறிக்கொண்டே இருப்பான் எனவும் ஹொட்டலில் இவனுடன் வேலை செய்யும் ஒருவர் சொன்னார் என்கிறது செய்தி! இதனை நிர்வாகத்திடம் சொன்னபோது இவனை இஸ்ரேலில் வைத்திருப்பது ஆபத்து என உணர்ந்த நிர்வாகம் இவனை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வேலையில் இருந்து இடைநிறுத்தி வைத்திருந்தது!

திருபுவனம் வலை தளம் said...

அந்த ஆளை சுட்டது முஸ்லிமா மட்டும் இருந்தால் இந்நேரம் தமிழ்மணம் சூடாகி இருக்கும்

பாருங்க வாக்கு வாதத்தில் கூட வன்முறை வெறி என்றும்

விமர்சனங்களை தாங்க முடியாத கோழைகள் என்றும்

அவர் கொல்லப்படும் முன் ஒரு ஆண்
இன்னொரு ஆணால் கற்பழிக்கபட்டார்
என்றும் பதிவுகள் பட்டையை கிளப்பும்,
போலி வாக்காளர்களும்
வலம் வந்து இருப்பாங்க...

suvanappiriyan said...

சகோ திருபுவனம் வளைத்தலம்!

//அந்த ஆளை சுட்டது முஸ்லிமா மட்டும் இருந்தால் இந்நேரம் தமிழ்மணம் சூடாகி இருக்கும்

பாருங்க வாக்கு வாதத்தில் கூட வன்முறை வெறி என்றும்

விமர்சனங்களை தாங்க முடியாத கோழைகள் என்றும் //

ஹா...ஹா...சரியாகவே கணித்திருக்கிறீர்கள்.

suvanappiriyan said...

சகோ நாசர்!

//சகோ மைதீன் இந்த கேள்விய நீங்க மட்டுமில்ல உலக சமூகமே அமெரிக்காவை பார்த்து கேட்கிறது,ஆனால் அமெரிக்கா சொல்லாது பதில்.பல காரணங்கள் உண்டு//

சரியாக விளக்கி சொன்னமைக்கும் வருகைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஊர் சுற்றி!

//இவன் பலமுறை தனது கனவுகளில் இரத்தமும் சதையும் தோன்றியதாகவும் அரபிகள், நாசிகள், பயங்கரவாதிகள் என உளறிக்கொண்டே இருப்பான் எனவும் ஹொட்டலில் இவனுடன் வேலை செய்யும் ஒருவர் சொன்னார் என்கிறது செய்தி! இதனை நிர்வாகத்திடம் சொன்னபோது இவனை இஸ்ரேலில் வைத்திருப்பது ஆபத்து என உணர்ந்த நிர்வாகம் இவனை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வேலையில் இருந்து இடைநிறுத்தி வைத்திருந்தது!//

அப்ப இவன் போய் சேர வேண்டிய ஆள்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஊர்சுற்றி said...

//...அப்ப இவன் போய் சேர வேண்டிய ஆள்தான்....//

ஆனால் ”...தனது நாடான அமெரிக்காவில் இஸ்ரேலிய நாட்டு வியாபார முதலைகள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி விட்டதை தனது சண்டையில் குறிப்பிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். ...” என போகிற போக்கில் கப்சா கும்மி அடிக்கக்கூடாது !

suvanappiriyan said...

//என போகிற போக்கில் கப்சா கும்மி அடிக்கக்கூடாது //

நான் மொழி பெயர்த்த லிங்கில் பார்வையாளர்கள் சொன்னதாக கொடுத்துள்ளார்கள். அந்த லிங்கை சேமிக்காமல் விட்டு விட்டேன். கிடைத்தால் அவசியம் அந்த லிங்கை தருகிறேன். இன்று வரை எதனால் அந்த துப்பாக்கி சூடு நடந்தது என்பது விசாரணையில்தான் உள்ளது. இறுதி முடிவு இன்னும் எட்டப்படவிலலை.

Unknown said...

///எப்படியெல்லாம் தனக்குத்தானே விருப்பமானதை எல்லாம் சொல்லி மகிழ முடிகிறதோ! சபாஷ்!!!///

தனக்குத்தானே விருப்பமானதை எதைச் சொல்லி, இந்தப் பதிவர் மகிழுகிறார் என்று சபாஷ் போட்டவர் விளக்கலாமே!

///அங்கே அவனின் கடமைகள் ஈச்ரேலிய வாழ்க்கை முறையை (யூத வாழ்க்கை) , இஸ்ரேலிய உணவு தயாரிக்கும் முறை மற்றும் ஹீபுரூ மொழியைப் பயிலுதல்.
இந்த திட்டத்தில் இணைந்து இஸ்ரேல் செல்ல உள்ளூர் யூத மதகுருவின் ஆசிர்வாதம் தேவை.///


இஸ்ரேலிய வாழ்க்கை முறை, இஸ்ரேலிய உணவு தயாரிக்கும் முறை, ஹீப்ரு மொழியைப் பயிலுவதற்கு இஸ்ரேல் செல்வதாக இருந்தால், யூத மதகுருவின் ஆசீர்வாதம் தேவை என்பது, நகைப்பாக இருக்கிறது. அவர்களின் மதத்திலும் இப்படியான சடங்குகள் இல்லை.

இப்படிப்பட்ட பாடத்திட்டங்கள், யூதர்கள் அதிகம் வாழும் இடங்களில் உலகெங்கும் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஜெர்மனியில் எனக்குத் தெரிந்த பாலஸ்தீன சகோதரர் ஒருவர், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனியில் குடியேறிய யூதர்களுக்கு ஹீப்ரு பயிற்றுவிக்கிறார். இஸ்ரேலிய உணவுகள், கோஷர் இலிருந்து அனைத்துப் பாட நெறிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. சியோனிச தாபனங்களுக்கும் அனுமதி இருக்கிறது.

இந்தக் கற்கைநெறிகள் ஜெர்மன் பல்கலைக் கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளைக் கற்பதற்கு, எந்த ரபாயின் ஆசியும் யாருக்கும் தேவை இல்லை.

///அவனை அமெரிக்கன் எனக்கேட்டதும் புழுகாங்கிதம் அடைந்து அட்டகாச கதை விட்டு மகிழ்கிறீர்களே! சுப்பர் சு.பி !!!///

இங்கு பதிவர் சொன்னதை கற்பனை என்று சொல்லி, தனது அட்டகாசக் கதையை நையாண்டி செய்து மெய்ப்பிக்கிறார். இது ரொம்பவும் முக்கியம்!
சூப்பரோ சுப்பர்.

suvanappiriyan said...



//According to Israel Radio, the gunman was in Israel as part of an international student exchange program. Spokesman Micky Rosenfeld says, the motive for the attack is unclear, but has suggested it may have been the result of an altercation, rather than a political reason.//

http://english.cntv.cn/program/newsupdate/20121005/102429.shtml

இஸ்ரேலிய செய்தியும் 'முழுமையான செய்தி இன்னும் வரவில்லை என்றுதான் சொல்கிறது. அரசியல் பிரச்னையாக இருக்காது என்றே நினைக்கிறோம் என்றும் சொல்கிறது. அரசியல் பிரச்னையால் இந்த கொலை நடந்திருந்தாலும் இஸ்ரேல் அந்த செய்தியை வெளியிடாது. ஏனெனில் இது அவர்களுக்கு தலை குனிவை தரும் செய்தியல்லவா?

ஊர்சுற்றி said...

//..நான் மொழி பெயர்த்த லிங்கில் பார்வையாளர்கள் சொன்னதாக கொடுத்துள்ளார்கள்...///

கொலை சமையலறைக்குள் நடந்தது. கொல்லப்பட்டவர் இஸ்ரேலின் அரபுப்பகுதியில் வாழும் பிரதான சமையல் காரர். இதில் பார்வையாளர்கள் எங்கே சமையலரைக்குள் சென்றார்கள்?

//..இன்று வரை எதனால் அந்த துப்பாக்கி சூடு நடந்தது என்பது விசாரணையில்தான் உள்ளது. இறுதி முடிவு இன்னும் எட்டப்படவிலலை.....//

ஆனால் அமெரிக்க இஸ்ரேல் கும்மியடி அட்டகாசமாக போகிறது , இல்லையா சு.பி ?

//..தனக்குத்தானே விருப்பமானதை எதைச் சொல்லி, இந்தப் பதிவர் மகிழுகிறார் என்று சபாஷ் போட்டவர் விளக்கலாமே!...//

அமெரிக்க இஸ்ரேல் கும்மியடி...கிடைக்கிற பனியா வடநாட்டு சேட்டு பால் வார்ப்பு என கிடைக்கிற கப்பில் சைக்கிள் ஓட்டல் தெரியவில்லையா?

//.. யூத மதகுருவின் ஆசீர்வாதம் தேவை என்பது, நகைப்பாக இருக்கிறது. அவர்களின் மதத்திலும் இப்படியான சடங்குகள் இல்லை...///

இது இஸ்ரேலிய அரசும் யூத வாழ்க்கைமுறையையும் வெளிநாடு வாழ் யூதர்களுக்கு கற்பிக்கும் ஒரு மாணவர் திட்டம். இந்த மாணவன் (கொலைகாரன்?) வாழ்ந்த இடம் (நியூயோக்கின் ஒரு கிராமப்புறம்) பற்றி அறியாதவர்கள் அந்த இடத்தில் வாழும் யூத குடும்பங்களின் வாழ்வில் ரபாயின் (யூத மத குரு)செல்வாக்கு எவ்வளவு என அறிந்து கொண்டு போசுவது நல்லது.

// இவைகளைக் கற்பதற்கு, எந்த ரபாயின் ஆசியும் யாருக்கும் தேவை இல்லை....//

ஹீபுரூவை கற்க எவரின் அனுமதியும் ஆசீர்வாதமும் தேவையில்லை. ஆனால் இது ஒரு Student Exchange Program. நன்கு திட்டமிட்டு யூத மக்களை இஸ்ரேல் யூத மக்களின் பூமி எனும் போதனையை தலைக்குள் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படியான திட்டங்கள் எவ்வாறு பாலஸ்தீன நிலங்களையும் நீர்ச்சுனைகலையும் திட்டமிட்டு கையகப்படுத்துவதற்கு நடைபெறுகின்றன என பாலஸ்தீன மக்களிட கேட்டால் சொல்வார்கள்.
மேலும் இந்த ஆளை பரிந்துரை செய்த யூத மதகுரு சொல்கிறார் “ஹொரோவிற்ஸ் இஸ்ரேலுக்கு சென்று தனது பூர்வீக நிலத்துடன் பிணைப்பை மீழ் உறுதிப்படுத்துவதிலும் ஹீபுரூவை கற்பதிலும் மிகுந்த உற்சாகமுடன் கானப்பட்டான்” என்று!

//..அரசியல் பிரச்னையால் இந்த கொலை நடந்திருந்தாலும் இஸ்ரேல் அந்த செய்தியை வெளியிடாது. ஏனெனில் இது அவர்களுக்கு தலை குனிவை தரும் செய்தியல்லவா?...//

ஊகத்தின் அடிப்படையில் யாரும் எதுவும் சொல்லாம்! கொலைகாரன் யூதன் இல்லை என்று கூடச் சாதிக்கலாம்!
ஆகவே அமெரிக்க இஸ்ரேல் கும்மியடிப்புக்கு முன்னால் ஊகங்களை எழுதுவதாயின் ஊகம் என்று குறிப்பிட்டு எழுதலாம். அதை விடுத்து ”..'உன்னால நான் கெட்டேன்: என்னால நீ கெட்டே' என்று இருவரும் பயங்கர வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ...” எனக்கதை அளப்பதோ “...
‘...தனது நாடான அமெரிக்காவில் இஸ்ரேலிய நாட்டு வியாபார முதலைகள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி விட்டதை தனது சண்டையில் குறிப்பிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்....”எனவோ
எல்லாவற்றிலும் மேலாக “..அமெரிக்காவை நேசிக்கும் உண்மையான விசுவாசியாக இருப்பார் போலிருக்கிறது. ..” என சுப்பர் ஊகம் சொல்லி கடைசியில்
இஸ்ரேலே சொல்லிவிட்டது அரசியலாய் இருக்காது என சேம் சைற் கோல் போடுதலும் கூடாது!

ஊர்சுற்றி said...

//..உலக சமூகமே அமெரிக்காவை பார்த்து கேட்கிறது,ஆனால் அமெரிக்கா சொல்லாது பதில்.பல காரணங்கள் உண்டு அதிலே மிக முக்கியமான காரணம், அமெரிக்க தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு யூத்த சமூகம் பெரிய அளவில் பண உதவி செய்து இஸ்ரேலிய அடாவடிகளை கண்டும்காணாமல் இருக்க செய்கிறது......//

என்னைக்கேட்டால்...எப்போ உலக முஸ்லிம்கள் மேற்கு நாடுகளின் ஆயுதங்களைக்கொண்டு தமது சிக்கல்களைத்தீர்த்து விட்டு அல்லாவே பெரியவன் என கோசமிடுவதும்..மேற்கு நாடுகலின் பணத்தை வாங்கி விட்டு அடுத்த வெள்ளிக்கிழமையே உலக சாத்தான் ஒழிக என கதறுவதும்...எண்னெய் வள நாடுகள் தமது மக்களின் பனத்தை ஒரு குடும்பமே சுருட்டி சுவிஸ் ,இங்கிலாந்து, அமெரிக்க வங்கிகளில் ஒளித்து வைப்பதும்....சமதர்ம கொள்கைகள் முல்லாக்களின் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்து விடும் போது அமெரிக்க முதலாளித்துவத்துடன் கைகோர்ப்பதும் (உ+ம் : ஆப்கானிஸ்தான்/ரஷ்யா)பின்னர் அலுவல் முடிந்தவுடன் அமெரிகாவை கழட்டிவிடுவதும் ...மேற்குலக நாடுகளின் கருத்து மதச் சுதந்திரத்தை பயன்படுத்தி ஆதாயம் பெற்றுக்கொண்டு அதே சுதந்திரத்தை மறுப்பதை தொழிலாகக் கொள்வதையும் விட்டொழிக்கிறார்களோ அன்றுதான் அமெரிக்கா பதில் சொல்லும்!

இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) பணபலம் அல்ல முக்கியம். இன்றைய நிலவரப்படி அமெரிக்க தேர்தல் முடியும்போது ஏரக்குறைய 1 பில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கும். தேர்தலே ஒரு பொப்ருளாதார ஊக்கியாக மாறிவிடும் நிலைக்கு அமெரிக்கா போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய கிழக்கில் அமெரிகா நம்பக்கூடிய ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே என அமெரிக்கர்கள் தீர்க்கமாய் இருக்கிறார்கள் ! அதை மாற்ர எந்த ஒரு முஸ்லிம்நாடும் தயாரில்லை! அதுதான் காரணம்!