உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தை எட்டியிருக்கும் அமெரிக்காவை சாண்டி புயல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. மணிக்கு 90 மைல் மேலும் அதற்கு அதிகமாகவும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஏழு பேர் இறந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இது அதிகரிக்கக் கூடும் என்று செய்திகள் கவலை தெரிவிக்கின்றன..
(A video of the explosion showed a large fireball light up the New York skyline on the East Side.)
ஹைத்தி மற்றும் பிற கரிபியன் தீவுகளை கடந்த சில நாட்களில் தாக்கி 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட இந்த சாண்டி சூறாவளி இப்போது வடக்கே நகர்ந்து, நியார்க்குக்கு அருகே இன்று திங்கட்கிழமை இரவு அமெரிக்க கிழக்கு கடற்கரை நேரப்படி சுமார் 8 மணி அளவில், அதாவது, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சூறாவளியின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், கடற்கரையோர பெரு நகரங்களில் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.
நாட்டின் வர்த்தகத் தலைநகரான நியுயார்க்கில், இதுவரை, சுமார் 3,70000 பேர் தாழ்வான இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கானோரை ஏற்றிச் செல்லும் நியுயார்க் நகர புற நகர் பாதாள ரயில் அமைப்பு நேற்றிலிருந்து மூடப்பட்டுவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருகின்றன. தலைநகர் வாஷிங்டனும் புயல் எச்சரிக்கைக்கு தப்பவில்லை. அங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக உள்ளது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. ஒஸ்டர் க்ரீக் எனும் 1969-இல் கட்டப்பட்ட அணு உலையில் முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் நிலைமை மோசமாகத் துவங்கியதாக தெரிவித்துள்ளனர். அணு உலை வெடிக்கும் அபாயம் இல்லையெனினும், அணு உலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிலை நம் கூடங்குளத்துக்கு வந்தால் அதையும் தாங்கும் திறனை நிர்வாகம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எவ்வளவு இயற்கை பேரிடர் வந்தாலும் அமெரிக்க மக்கள் எல்லாவற்றிற்கும் அரசின் உதவியை எதிர் பார்க்காமல் தாங்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதனை நம் மக்களும் பின் பற்ற முயற்சிக்க வேண்டும்.
தமிழ் நாட்டிலும் கடற்கரையோர மாவட்டங்களில் நாளை புயல் வீசலாம் என்ற செய்தி வருகிறது. அரசையே எதிர் பார்க்காமல் பொது மக்களும் களத்தில் இறங்கி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். நம் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உயிர் பலிகளையும் பொருள் இழப்புகளையும் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
---------------------------------------------------------
உலகமே தலை கீழாக புரண்டாலும் நம் தமிழக ரத்தத்தின் ரத்தங்களுக்கு கவலை எல்லாம் எதில் இருக்கிறது என்பதை இந்த ஃபேஸ் புக் ஸ்டில் நமக்கு உணர்த்துகிறது. :-)
27 comments:
சூட்டுவதற்குப் பெயர் ரெடி... 'நிலம்' புயல் வருவது எப்போது?
Updated: Tuesday, October 30, 2012, 10:53 [IST]
சென்னை: வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள புயல் சின்னம், புயலாக மாறினால் அதற்கு நிலம் என்று பெயர் சூட்டப்படுமாம்.
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் இப்போது புயல்களுக்கும் சூப்பராக பெயர் சூட்ட ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் இது இன்று நேற்று நடப்பதல்ல.
கடந்த 1945ம் ஆண்டு முதலே புயல்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து இந்த பெயர்களைச் சூட்டி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன.
இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன.
கடைசியாக முர்ஜான் என்ற புயல் இப்பிரதேசத்தைத் தாக்கியது.
இந்தப் பெயரை வைத்த நாடு ஓமன்.
இந்தப் புயல் அரபிக் கடலில் உருவாகி சோமாலியா பகுதியில் கரையைக் கடந்தது.
இந்த சீசனில் முதல் முறையாக இந்தியப் பகுதியில் ஒரு புதிய புயல் உருவாகவுள்ளது.
வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது புயலாக மாறினால் அந்தப் புயலுக்கு நிலம் என்று பெயர் சூட்டப்படும்.
இந்தப் பெயரை சூட்டிய நாடு பாகிஸ்தான் ஆகும்.
தற்போதைய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அது இந்த வட கிழக்குப் பருவ மழை சீசனில் உருவாகும் முதல் புயல் என்ற பெயரைப் பெறும்.
அடுத்த புயல் வரும்போது அதற்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும்.
இந்தப் பெயரை சூட்டிய நாடு இலங்கை.
SOURCE: THATSTAMIL
அளவுக்கு மேல் மழை பெய்தால்
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி
இதன் பொருள் : இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும்,கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1013, 1016
புயல் வீசும் போது
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(எ)ஹா வகைர மா உர்ஸிலத் பி(இ)ஹி. வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(எ)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(இ)ஹி
இதன் பொருள் :
இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் இயற்கை துயரமாக உருவெடுத்த சான்டி புயல்
Published: Tuesday, October 30, 2012, 13:04 [IST]
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்கள் மின்சாரம் இன்றி இருளிலேயே பல நாட்களாக மூழ்கிக் கிடக்கிறது!
அமெரிக்காவை தாக்கி வரும் ‘சான்டி' புயல்தான் அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய இயற்கை துயரமாக உருவெடுத்திருக்கிறது.
சான்டியால் ஒவ்வொரு அமெரிக்க மாகாணமுமே புரட்டிப் போடப்பட்டு வருகிறது.
வாஷிங்டன், பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க், போஸ்டன் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
இந்த சான்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுமார் 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சான்டி புயல் இலக்கு வைத்திருக்கும் நகரங்கள் பலவற்றிலும் மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்படவில்லை.
மருத்துவமனைகளில் பேக்அப் மின்சாரமும் இல்லை.
இதனால் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மன்ஹாட்டனில் 13 அடி உயர சுவர் கூட இந்தப் புயலுக்கு தப்பவில்லை.
அமெரிக்க நகரங்கள் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
அமெரிக்கா முழுவதும் சுமார் 5.7 மில்லியன் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 7ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
பல விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.
இதே நிலைமைதான் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும்!
சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன!
சான்டி புயல் பல இடங்களில் பனிமழையையும் கொண்டு வந்திருக்கிறது
கடந்த ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய ஐரீன் புயல் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE: THATSTAMIL
"இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள்"
ரகோத்தமன் விடுவதாக இல்லை..ராஜிவ் கொலையில் பதுக்கப்பட்ட “வீடியோ கேசட்”..
Updated: Tuesday, October 30, 2012, 12:30 [IST]
சென்னை: ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று பதுக்கப்பட்டதாகவும்,
இதைச் செய்தவர் அப்போது ஐபி தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் என்றும்,
அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும்,
இந்த வழக்கில் சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே "ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்" என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
தற்போது "Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files" என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த இரண்டு புத்தகங்களிலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டுவிட்டு என்பதுதான்!
ராஜிவ் கொல்லப்பட்ட மறுநாள் அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு ஐ.பி அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய மேற்குவங்க ஆளுநரான எம்.கே. நாராயணன் ஒரு கடிதம் எழுதினார்.
அதில் எங்களிடம் ஒரு முக்கிய கேசட் உள்ளது.
அதில் "அந்த பெண்மணியை" அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் கடைசிவரை ஐ.பி வசம் இருந்த அந்த கேசட் சிபிஐயிடமும் சரி.. வேறு எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் ஒப்படைக்கப்படவே இல்லை என்பதுதான் ரகோத்தமனின் குற்றச்சாட்டு.
அந்த கேசட்...
ராஜிவ் கொலை வழக்கில் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள்தான் பிரதான ஆதாரமாக இருந்தது.
இந்த நிலையில் சிவராசன், தணு உள்ளிட்டோர் சில மணிநேரம் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்தில் காத்திருந்து ராஜிவை கொலை செய்திருக்கின்றனர்.
அந்த சில மணி நேரங்களில் அவர்கள் யார் யாருடன் பேசினர்..? எப்படி ராஜிவுக்கு மாலையிடும் இடத்துக்கு மெதுமெதுவாக நெருங்கினர் என்பது போன்ற விவரங்கள் ஐபி வசம் இருந்த கேசட்டில் பதிவாகி இருக்கலாம் என்பதுதான் ரகோத்தமனின் சந்தேகம்.
மரகதம் சந்திரசேகரைக் காப்பாற்ற?
தமது முந்தைய புத்தகத்தில் இதுபற்றி எழுதியுள்ள ரகோத்தமன், அப்படி ஒரு கேசட் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சனை வரும் என்று கருதி முழுப்பூசணியை மறைத்துவிட்டது ஐ.பி. என்று சாடியுள்ளார்.
அத்துடன் "இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள்" என்றும் ரகோத்தமன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சிவராசன் ஊடுறுவ மரகம்தான் காரணம்
காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர் மூலமே சிவராசன் குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்துக்குள் நுழைய முடிந்தது என்பது பலதரப்பிலும் வெளியான தகவல்.
ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் ரகோத்தமன் இத்தகைய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தற்போதைய புத்தகத்திலும் கேசட் பற்றிய எம்.கே. நாராயணின் 1991-ம் ஆண்டு மே 22-ந் தேதி கடிதம் பற்றியும் இந்த கேசட்டுக்கு என்னாச்சு என்றும் மீண்டும் ரகோத்தமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அந்த கேசட் பற்றிய உண்மை தெரிஞ்சாகனும்....என்கிற ரகோத்தமன் குரலுக்கு எப்ப விடை கிடைக்குமோ?
SOURCE: THATSTAMIL
சகோ சுல்தான் மைதீன்!
//இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496 //
அழகிய நபி மொழியை பகிர்ந்தமைக்கு நன்றி!
சகோ உண்மைகள்!
//கடந்த ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய ஐரீன் புயல் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.//
வருகைக்கும் கருத்தை பதிந்தமைக்கும் நன்றி!
சலாம்.சகோ.சுவனப்பிரியன்,
இந்த வேதனை எதுக்கு வந்ததுன்னு எல்லோருக்குமே தெரியும்..
********
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். (அல்குர்ஆன்:- 39:55)
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், ''இது நமக்கு மறையைப் பொழியும் மேகமாகும்"" எனக் கூறினார்கள்; ''அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது;(அல்குர்ஆன்:- 46:24)
''அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்"" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.(அல்குர்ஆன்:- 46:25)
அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.(அல்குர்ஆன் :- 11:102.)
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் :-. 4:79.)
ஆபூஹுறைரா (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் சொல்ல நான் செவிமடுத்தேன். காற்று அல்லாஹ்வின் கிருபையாகும். அது அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டு வருகிறது. சிலவேளை அது அவனின் வேதனையையும் கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் அதனைக் கண்டால் அதனை திட்ட வேண்டாம். அதில் நலவை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதில் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். (அபூ தாவூது)
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் :-8-25)
நன்றியுடன்
நாகூர் மீரான்
சகோ நாகூர் மீரான்!
சிலரது நடவடிக்கை நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் மனித குலத்தில் இது போன்ற பேரிடர் நேரும் போது அதிலிருந்து அவர்களை மீட்க நாம் பிரார்த்தனை புரிய வேண்டும். ஒரு நாட்டில் நல்லவர்களும் உள்ளனர். தீயவர்களும் உள்ளனர். எனவே அந்நாட்டின் பேரழிவு தடுக்கப்பட நாமும் பிரார்த்திப்போம்.
சலாம் சகோ.சுவனப்பிரியன் ,
நான் தந்த கடைசி வசனத்தை கவனிக்க வில்லையா ???
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் :-8-25)
ஆயினும் எனது பிரார்த்தனை அங்கு கஷ்டப்படும் குழந்தைகள் முதியவர்கள், பெண்கள், இன்னும் கால்நடை உயிரினங்களுக்காக மட்டுமே...உயிர் பலியையும் நாம் விரும்புவதில்லை..மற்றபடி எகத்தாளம் செய்த அரசுக்கு இது பெருத்த பொருளாதார அடியே..!!!
நன்றி !!!
கொடுங்காற்றும் மழையும் நின்றுவிட்டது...நிறைய மரங்கள் முறிந்து கிடக்கிறது...அவ்வளவு சாலைகளையும் எப்படியும் இன்று ஒரு நாளில் சரி செய்து விடுவார்கள் இன்ஷா அல்லாஹ்...இப்படி ஆகும் என்று தெரிந்து வேறு நாடுகளில் இருந்தெல்லாம் கூட மரம் வெட்டும் contractor கள் கடந்த வாரமே தருவிக்கப்பட்டனர். எங்கள் பகுதிகள் இன்னும் சில நாட்களில் நார்மல் ஆகிவிடும்.
தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்து விட்டது...அங்கெல்லாம் நிலைமை சரி ஆக சில வாரங்கள் ஆகலாம். நியூயார்க் நகரின் உயிர் நாடியான பாதாள ட்ரைன்(Subway) இன்னும் ஒரு வாரம் இயங்காது...முழுவதும் தண்ணீர் புகுந்து விட்டது..
சகோ பீர் முஹம்மத்!
//கொடுங்காற்றும் மழையும் நின்றுவிட்டது...நிறைய மரங்கள் முறிந்து கிடக்கிறது...அவ்வளவு சாலைகளையும் எப்படியும் இன்று ஒரு நாளில் சரி செய்து விடுவார்கள் இன்ஷா அல்லாஹ்...இப்படி ஆகும் என்று தெரிந்து வேறு நாடுகளில் இருந்தெல்லாம் கூட மரம் வெட்டும் contractor கள் கடந்த வாரமே தருவிக்கப்பட்டனர். எங்கள் பகுதிகள் இன்னும் சில நாட்களில் நார்மல் ஆகிவிடும்.//
இது போன்ற சிக்கல்களை எல்லாம் எவ்வாறு சமாளிப்பது என்ற பாடத்தை அமெரிக்க அரசிடம் இருந்து நமது இந்தியா பாடம் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசும் சரி மக்களும் சரி மிக சுறுசுறுப்பாக காரியமாற்றி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவர்.
பொது மக்கள் எவருக்கும் சேதம் ஏற்படாமல் சகஜ நிலை திரும்ப பிரார்த்திக்கிறேன்.
Namma Nilaiyum enna agumo?
மேற்கு நாடுகளை காப்பி அடிக்கும் நம் தாய்நாடு இந்திய போன்ற நாடுகள் இங்குள்ள நல்ல விஷயங்கள் எதையுமே காப்பி அடிப்பதில்லை ..இங்குள்ள குப்பைகளை தான் கோப்பி அடிப்பார்கள்
Disaster management is very good here. We need to learn a lot from this.
சகோ துரை டேனியல்!
//Namma Nilaiyum enna agumo? //
அமெரிக்காவில் சிறந்த அரசு நிர்வாகம் இருந்ததால் பாதிப்புகள் ஓரளவு கட்டுக்குள் வந்தது. நம் நாட்டு நிர்வாகத்தைப் பற்றி நாம் நன்றாகவே அறிந்தவர்கள். எனவே நாமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
சலாம் சகோ.சுவனப்பிரியன்
சார்வகனுக்கு வைத்த பின்னூட்டத்தால் வந்த வினை :
சரி ஒரு எதிர் பதிவு போட்டு இருக்கிறாரே,மதித்து பதிவில் உள்ள குறைகளாக நமக்கு தெரிந்ததை பின்னூட்டமிட்டால் ம்ம்.ஹ்ம்ம்..எதுக்குமே சரியான பதில் சொல்ல கூட முயற்சி செய்ய வில்லை...பதில் இல்லாததுக்கு haa...haa..haa., hi hi என்ற பதில் மட்டுமே..
ஏதாவது ஒரு முடிவுக்காகதான் நேரத்தை விட்டு பதிலளிப்பது...இது ஏதோ வேலைவெட்டி இல்லாதவன் செய்யிற வெட்டிவேலை போல் தான் இருக்கு...
ஒரு வட்டத்துக்குள்ள அவங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டு ,அவங்களுக்குள்ளேயே உண்மைதான்னு சந்தோசப்பட்டுக்கிராங்க...என்னத்த சொல்ல..
"சார்வகனை நீங்க இன்னும் விடலையா." னு ஆசிக் அஹமது சொன்னதற்கு அர்த்தம் இப்பதான் புரியுது..
..
ஆசிக் அஹமது நீங்க ஒரு ஜீனியஸ் ...
நான்தான் தெரியாம போயிட்டேன்...
ஆசிக் அஹ்மத் நீங்க செய்யிறது தான் சரி ...இவங்களை மதித்து பின்னூட்டம் கூட இடக்கூடாது...
சுவனப்பிரியன் நீங்களும் இஸ்லாமிய பதிவு பக்கமே இருங்க...நீங்க என்னத்த பதிவை போட்டாலும் எதிர் பதிவுன்னு ஒன்னு போடுவாங்க ..அர்த்தமே இருக்காது..
இனி அவரு பதிவு பக்கமோ அவரு சிந்தனை பக்கமோ எனக்கு வேலையில்லை...
உருப்படியா வேற எதாவதுதான் செய்யணும்...
நன்றி..!!!
சகோ நாகூர் மீரான்!
//சுவனப்பிரியன் நீங்களும் இஸ்லாமிய பதிவு பக்கமே இருங்க...நீங்க என்னத்த பதிவை போட்டாலும் எதிர் பதிவுன்னு ஒன்னு போடுவாங்க ..அர்த்தமே இருக்காது..//
நாம் விளக்க பதிவு இடுவது சார்வாகன் என்ற தனி மனிதருக்காக அல்ல. அவர் பதிவை படித்து தவறான வழியில் சென்று விட வாய்ப்புள்ள பலருக்கான விளக்கப் பதிவே. அவர் நேரிடையாக பதிலளிக்காமல் இவ்வாறு நழுவுவதே நமக்கு பெரும் வெற்றி. இதைத் தான் நாமும் எதிர் பார்த்தோம.
எனவே முழுவதும் இஸ்லாமாகவே பதிவிடாமல் சமூகத்தையும் அவ்வப்போது தொட்டுக் கொண்டால்தான் சலிப்பு ஏற்படாது.
சாண்டி புயலுக்கும் ராஜிவ்காந்திக்கும் என்னய்யா சம்பந்தம்...? உங்கட உளறல்களுக்கு ஒரு அளவே இல்லையா...?
திரு தேன் மதுரன்!
//சாண்டி புயலுக்கும் ராஜிவ்காந்திக்கும் என்னய்யா சம்பந்தம்...? உங்கட உளறல்களுக்கு ஒரு அளவே இல்லையா...? //
ஒரு தகவலுக்காக சகோ உண்மைகள் கொடுத்த பின்னூட்டம் அது. அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அனைவருமே அறிவர். :-)
தலைப்பை ஒட்டியே பின்னூட்டங்கள் வர வேண்டும் என்று ஏதும் சட்டம் உள்ளதா?
அண்ணாச்சி....ஒங்க கவலை எனக்குப் புரியுது.
அமெரிக்கா நல்லா இருந்தால் மட்டுமே சவுதி நல்லா இருக்கும்.
எவ்வளவு நாளுதான் மத்தவங்க கேள்விக்கே பதில் சொல்லிக்கிட்டே இருக்குறது..நமக்குள்ளேயே கேட்டுக்குவோம்.. என்ற அடிப்படையில் பல ஆண்டுகளாக இணைய பிரச்சாரம் செய்து வரும் சகோ.சுவனப்பிரியன் அவர்களிடம் பேட்டி காணுவோம்..நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு சமயத்திலும் ஒரு கேள்வி கேட்போம்... கேள்வியை ஆரம்பிப்போமா..?
கேள்வி 1 : ஆரம்பத்திலிருந்து பல பின்னூட்ட பதிவர்களை பார்த்திருப்பீர்கள் ...உங்களின் பதிவால் தங்களின் பாதையை மாற்றிகொண்ட (எதிர் பின்னூட்டம் போட வந்து, பின் இணக்கமானவர்கள் ) பின்னூட்ட நபர்கள் உண்டா..???தனது நிலையில் இருந்து கொஞ்சம் மாறினாலும் அது பெரிய வெற்றிதான்..அது போல் எதாவது சம்பவங்கள் நடந்தது உண்டா..???
//கேள்வி 1 : ஆரம்பத்திலிருந்து பல பின்னூட்ட பதிவர்களை பார்த்திருப்பீர்கள் ...உங்களின் பதிவால் தங்களின் பாதையை மாற்றிகொண்ட (எதிர் பின்னூட்டம் போட வந்து, பின் இணக்கமானவர்கள் ) பின்னூட்ட நபர்கள் உண்டா..???தனது நிலையில் இருந்து கொஞ்சம் மாறினாலும் அது பெரிய வெற்றிதான்..அது போல் எதாவது சம்பவங்கள் நடந்தது உண்டா..???//
நான் இணையத்தின் பக்கம் வந்த புதிதில் இஸ்லாத்தை பற்றி தப்பும் தவறுமாக அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர். நேச குமார், அரவிந்தன் நீல கண்டன், குழலி போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். இதற்கு பதிலடியாக பல இஸ்லாமிய பதிவர்கள் பதில் கொடுக்க ஆரம்பித்தவுடன் எதிர் பதில் கொடுக்க முடியாமல் திணறியதை நடுநிலையாளர்கள் நன்றாகவே அறிவர். நமது பதிவுகளால் மாற்றம் ஏற்படுகிறதா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்காமல் நமது கடமையை செய்து கொண்டிருக்க வேண்டும். மாற்றத்தைக் கொடுப்பது இறைவன் கையில் உள்ளது.
ராவணன்!
//அமெரிக்கா நல்லா இருந்தால் மட்டுமே சவுதி நல்லா இருக்கும்.//
சவுதியும் அமெரிக்காவும் நல்லா இருந்தாதான் இந்தியாவும் நல்லாருக்கும். இரண்டு நாட்டு மக்களும் இந்தியா வர ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு பட்ஜெட் போட அரசிடம் பணம் கையிருப்பில் இருக்காது. வழக்கம் போல் உலக வங்கியிடம் அநியாய வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரும். அந்த வட்டியை கட்ட ராவணன் வரி அதிகமாக செலுத்த வேண்டி வரும். இதெல்லாம் தேவையா? :-)
சகோ.சுவனப்பிரியன்
பதில் சொல்லமுடியாமல் ஆள் எஸ்கேப் ஆகுறதே !!! வெளிப்படையா நமக்கு தெரியும் வெற்றி தான் சகோ. ஆனா இப்பொழுது அவர்களை காணோமே ??? ஏதாவது தகவல் தெரியுமா ??
நன்றி!!!!
சகோ.சுவனப்பிரியன்
// உலக வங்கியிடம் அநியாய வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரும். அந்த வட்டியை கட்ட ராவணன் வரி அதிகமாக செலுத்த வேண்டி வரும். இதெல்லாம் தேவையா? :-)//
இப்பிடித்தான் ராவணனுக்கு சரியான பதில் சொல்லணும் ..ராவணன் என்னை இழுத்ததனால நம்மோட பன்ச்சும் அவருக்கு உண்டு..
//நம்ம முனியாண்டி சாமியை..என்னோட விருப்பசாமி என்று குறைச்சிட்டேங்களே சாமி?
பரோட்டாவிற்கும் அவரே சாமி...
அந்த புரோட்டீனுக்கும் அவரே சாமி...
நம்ம நாக்கூர் நாகப்பனுக்கும் அவரே சாமி...
//
உலக வங்கில கடன் கூடுச்சினா யாரும் கவலைப்பட தேவை இல்லை..ராவணனோட சாமி புரோட்டா மாஸ்டரா இருப்பதால் சாமி புரோட்டா வீச வீச ராவணன் கூவி கூவி வித்துட்டு வந்துருவாரு...மொத்த கடனையும் அடைச்சிரலாம்...
ராவணன் எங்க உள்ளவர்னே தெரியலையே..எப்பிடி ப்ளாக் ஆரம்பிசார்னே தெரியலையே ???அடங்கப்பா..!!!
நாக்கூர் நாகப்பனே பிலாக்கும் போது யார் வேண்டுமானாலும் பிளாக்கலாம்.
Post a Comment