Video Portal Geo TV Network : Bullet Removed From Malala
தற்போது குண்டு எடுக்கப்பட்டு அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக செய்திகள் வருகின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Video Portal Geo TV Network : Nation Prays For Malala
பாகிஸ்தான் முழுவதும் சிறு சிறு குழந்தைகள் மலாலா யூசுஃபின் உடல் நலத்திற்காக பிரார்த்தனையில் ஈடுபட்டன. சிறிய குழந்தைகளின் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான். ஆம். மலாலா தற்போது குண்டு எடுக்கப்பட்டு அபாயகட்டத்தை தாண்டி விட்டார். எல்லா புகழும் இறைவனுக்கே!
ஒரு மலாலா யுசுஃபை கொல்ல திட்டமிட்டனர். இன்று பாகிஸ்தான் முழுக்க லட்சக்கணக்கான மலாலாக்களை இறைவன் உருவாக்கியிருக்கிறான். பெண் கல்வியை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. இஸ்லாமிய வட்டத்துக்கு உட்பட்டு ஆணும் பெண்ணும் தனியாக கல்வி பயில்வதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. தாலிபான்கள் தாங்கள் செய்த தவறை உணர வேண்டும். மலாலா யூசுஃபை சுதந்திரமாக தனது படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும். தாலிபான்கள் இதில் முரண்டு பிடித்தால் பொது மக்களின் ஆதரவை இழக்க நேரிடும். அது அமெரிக்காவுக்கு மேலும் தைரியத்தைக் கொடுக்கும்.
சில மாதங்களாக அமெரிக்க படைகளுக்கு மிகுந்த பின்னடைவைக் கொடுத்துள்ளது. அது தொடர வேண்டும் என்றால் இஸ்லாம் என்ன கட்டளையிடுகிறதோ அதன் வழிக்கு தாலிபான்கள் வர வேண்டும். தாலிபான்கள் வழிக்கு இஸ்லாத்தை வளைக்க எந்த முஸ்லிமும் விரும்ப மாட்டான். மிக உயர்ந்த எண்ணத்தில் உதித்த தாலிபான் அதன் இலக்கை அடை;ய வேண்டும் என்றால் பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளை தாராளமாக கொடுத்து சமூகத்தில் தாலிபான்கள் இரண்டற கலக்க வேண்டும்.
Video Portal Geo TV Network : PTI Peace March Kicks Off
கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் சமீபத்தில் தாலிபான்களோடு அமைதி பேச்சு வார்த்தைக்கு செல்லவிருப்பதாக கூறியிருந்தார். அதன்படி அமைதி பேச்சு வார்த்தை வெற்றியடைந்து ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அமைதி திரும்ப வேண்டும். ஆனால் இப்படி ஒரு பேச்சு வார்த்தை நடந்து அமைதி ஏற்பட்டு விட பாகிஸ்தான் அரசியல்வாதிகளோ அல்லது அமெரிக்காவோ அனுமதிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
மலாலா யூசுஃப் போன்ற இளம் பெண்களுக்கு எனது சிறிய அறிவுரை. இந்த உலகம் போலியானது. பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை போகப் பொருளாக பார்க்கவே ஆண் வர்க்கம் விரும்புகிறது. பெண்கள் வெளியில் ஆபாசமாக உடை அணிந்து வருவதும் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே கூடிக் குலாவுவதும் தான் பெண் உரிமை என்று உலகம் முழுக்க பொது நியதியாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்ற உண்மையை அறியாமல் தங்களுக்கு தாங்களே சில பெண்கள் குழி பறித்துக் கொள்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஊர்பேர் தெரியாத எத்தனையோ குழந்தைகள் இன்று அநாதைகளாக மேலும் மன நோயாளிகளாக வலம் வருகின்றனர். கற்பழிப்புகள் மிக சாதாரணமாக நடந்து வருகிறது. நமது நாட்டிலே கூட ஹரியானாவில் ஒரு மாதத்தில் 13 பெண்கள் வன் புணர்வு செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டுள்ளார்கள். இஸ்லாம் சொல்லும் வழி முறைகளை இந்த நாடுகள் கடைபிடித்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
இஸ்லாம் கொடுத்த வரம்பிற்குள் தங்களது உரிமையை இஸ்லாமிய பெண்கள் பேணிணால் அது அவர்களுக்கும் நல்லது. இந்த உலகுக்கும் நல்லது.
அடுத்து ஒரு பெண் சுடப்பட்டதற்கு இன்று உலகம் முழுவதும் பயங்கர எதிர்ப்பை ஊடகத்துறையினர் மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். ஹரியானாவில் 13 பெண்கள் வன் புணர்வு செய்யப்பட்டு ஒரு பெண் தற்கொலையும் செய்து கொள்கிறார். ஆனால் அது மீடியாவால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எந்த வகையிலாவது இஸ்லாத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இங்கு வெளி வருகிறது. தாலிபான்கள் தங்கள் தவறை உணர்ந்து இஸ்லாம் கூறும் பெண் உரிமைகளை அந்த மக்கள் அனுபவிக்க விட வேண்டும். அமெரிக்காவை எதிர்த்து போராடி வரும் தாலிபான்களை பொது மேடைகளில் குறை கூறும் மலாலா யூசுஃபும் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தாலிபான் இயக்கம் ஒப்புதல்
முன்னதாக தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல்லா இக்ஸன் கூறுகையில்,
மாணவி மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்.
தலிபான்களுக்கு எதிராக மலாலா தொடர்ந்து பேசி வந்தார்.
அதனால்தான் தாக்குதல் நடத்தினோம்.
அவர் உயிர் பிழைத்தாலும் மீண்டும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
தாலிபான்களின் இந்த அறிவிப்பு மடத்தனமானது. அந்த பெண் தாலிபான்களுக்கு எதிராக பேசினால் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து இவர்களும் அறிக்கை விடுவதுதான் இஸ்லாம் காட்டும் முறை. அதை விடுத்து திரும்பவும் கொல்வோம் என்று அறிக்கை விடுவது தங்களுக்கு தாங்களே குழி தோண்டிக் கொள்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
தாலிபான்களிடம் சில பல குறைகள் இருந்தாலும் அமெரிக்காவை எதிர்ப்பதில் இன்று அவர்களே முன்னிலையில் உள்ளனர். தாலிபான்கள் பெண்கள் விஷயத்தில் பிடிவாதம் பிடித்தால் உலக முஸ்லிம்களால் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.
இந்த நிலையில் மலாலாவை சுட்டவன் குறித்து தகவல் தரும் நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பெஷாவரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அமைச்சர் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்..
24 comments:
சலாம் சகோ.சுவனப்பிரியன்
இஸ்லாம் சார்ந்த விசயங்கள் உலகில் நடந்து விட்டால் அதற்கு சுவனப்பிரியனின் பதில் எதுவாக இருக்கும் என்பதை எதிர் பதிவர்கள் அறிந்துதான் வைத்துள்ளார்கள்.....இருந்தாலும் அவர்களுடைய சிந்தனையில் இருந்து வெளிவர மறுக்கும் குணம் தான் ,வருண் அவர்களின் பதிவில் உங்களை சூப்பர் ஸ்டார் ஆக்கியிருக்கிறது.......
வாழ்த்துக்கள்..............
நன்றியுடன்
நாகூர் மீரான்
ஸலாம்
நீங்கள் சொல்வதும் உண்மை தான் ...
சினிமாகாரர் என்றால் சுபி அவர்களுக்கு வெறுப்பு. அதுதான் வருண் சுபிஜை சுப்பர் ஸ்ராக்கி காமடி பண்ணியுள்ளார்.
இந்த ஒப்பீட்டுடன் இணைய சுப்பர் ஸ்ரார் ரசிகரும் சுபிக்கு எதிரியாவர். வருணை பொறுத்தவரை யார் அடித்தாவது பாம்பு செத்தால் சரி.
mabrook brother, now you are super starr blogger.
we are proud of you.
keep it up.
//இஸ்லாம் என்ன கட்டளையிடுகிறதோ அதன் வழிக்கு தாலிபான்கள் வர வேண்டும்.//
ஆம் சகோ. தாலிபான்கள் சிலபல விடயங்களில் தான்தோன்றி தனமாக நடப்பதை விடுத்து இஸ்லாத்தின் சட்டதிட்டங்களின் படி சரியான பாதையில் நடக்க வேண்டும் என்பதே உலக முஸ்லிம்களின் எண்ணம்.
சு.பி.சுவாமிகள்,
தலிபான்களின் செயலை கண்டித்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
மென்மையாக கண்டித்தபோதிலும் வரவேற்கிறேன்.
பாலியல் வன்முறைகள் தலித் அல்லது யார் மீது என்றாலும் அது குற்றமே,யாரும் ஆதரிக்கப்போவதில்லை, ஆனால் என்னமோ பாலியல் வன்முறைகளை இந்தியாவில் அங்கிகரித்து கொண்டாடுவது போல நீங்கள் நினைத்துக்கொண்டு எழுதுவது தான் ஏன் என புரியவில்லை.
ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை என எப்படி சொல்கிறீர்கள், ஊடகத்தில் வந்த செய்தியை வைத்து தானே நீங்கள் பதிவு போட்டுள்ளீர்கள், இல்லை ஹரியானவுக்கு நேரில் போய் பார்த்தீர்களா?
வன்முறை,பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை எந்த ஊடகமும் ஆதரித்து செய்தி வெளியிடும் அளவுக்கு மோசமான நிலையை அடையவில்லை.
வவ்வால்!
//பாலியல் வன்முறைகள் தலித் அல்லது யார் மீது என்றாலும் அது குற்றமே,யாரும் ஆதரிக்கப்போவதில்லை, ஆனால் என்னமோ பாலியல் வன்முறைகளை இந்தியாவில் அங்கிகரித்து கொண்டாடுவது போல நீங்கள் நினைத்துக்கொண்டு எழுதுவது தான் ஏன் என புரியவில்லை.//
குற்றவாளி யார் என்று தெளிவாக தெரிகிறது. அவர்களே அதனை படமாக்கி வெளியிட்டும் உள்ளார்கள். அவர்கள் உயர்சாதி ஆண்கள் என்ற காரணத்தாலேயே கைது பண்ணாமல் சுதந்திமாக உலாவுகிறார்கள். இரண்டு நாள் முன்பு பாதிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு பிறகு குற்றவாளிகளை கைது செய்கிறது காவல்துறை. இது எந்த வகை நியாயம்.
சகோ நாகூர் மீரான்!
//இஸ்லாம் சார்ந்த விசயங்கள் உலகில் நடந்து விட்டால் அதற்கு சுவனப்பிரியனின் பதில் எதுவாக இருக்கும் என்பதை எதிர் பதிவர்கள் அறிந்துதான் வைத்துள்ளார்கள்.....இருந்தாலும் அவர்களுடைய சிந்தனையில் இருந்து வெளிவர மறுக்கும் குணம் தான் ,வருண் அவர்களின் பதிவில் உங்களை சூப்பர் ஸ்டார் ஆக்கியிருக்கிறது......//.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ ஞானி!
//சினிமாகாரர் என்றால் சுபி அவர்களுக்கு வெறுப்பு. அதுதான் வருண் சுபிஜை சுப்பர் ஸ்ராக்கி காமடி பண்ணியுள்ளார்.
இந்த ஒப்பீட்டுடன் இணைய சுப்பர் ஸ்ரார் ரசிகரும் சுபிக்கு எதிரியாவர். வருணை பொறுத்தவரை யார் அடித்தாவது பாம்பு செத்தால் சரி.//
வருகைக்கு நன்றி!
சகோ அஜீம் பாஸா!
//mabrook brother, now you are super starr blogger.
we are proud of you.
keep it up.//
அது சகோ வருணின் மதிப்பீடு. என்னைப் பொறுத்த வரை என்றுமே நான் இறைவனுக்கு அடி பணிந்து தொழும் சராசரி மனிதன்தான்.
சகோ ராஜகிரியார்!
//ஆம் சகோ. தாலிபான்கள் சிலபல விடயங்களில் தான்தோன்றி தனமாக நடப்பதை விடுத்து இஸ்லாத்தின் சட்டதிட்டங்களின் படி சரியான பாதையில் நடக்க வேண்டும் என்பதே உலக முஸ்லிம்களின் எண்ணம்.//
மாற்றம் வர பிரார்த்திப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தாலிபான்களின் இந்த செயல் கண்டிக்கத் தக்கதே... அதே நேரம் இவர் என்ன பேசினார் என்று தெரியவில்லை...
தாலிபன்களின் போராட்டத்தை எதிர்த்து பேசி இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம்...
அமெரிக்கர்களின் போரை ஆதரிக்க எந்த பாகிஸ்தானிக்கும் தார் மீக உரிமை இல்லை.
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சுவனப்பிரியன் போல ஒரு சில முஸ்லிம்கள்களுக்கு இருக்கலாம். ஆனால் எல்லா முஸ்லிம்களும் அவ்வாறு அல்ல. அவர்கள் தங்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதை அறிந்து வைத்துள்ளனர், யாரால் நாடு முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பது தெரியும்.
//மலாலா யூசுஃப் போன்ற இளம் பெண்களுக்கு எனது சிறிய அறிவுரை. இந்த உலகம் போலியானது. பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை போகப் பொருளாக பார்க்கவே ஆண் வர்க்கம் விரும்புகிறது. பெண்கள் வெளியில் ஆபாசமாக உடை அணிந்து வருவதும் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே கூடிக் குலாவுவதும் தான் பெண் உரிமை என்று உலகம் முழுக்க பொது நியதியாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்ற உண்மையை அறியாமல் தங்களுக்கு தாங்களே சில பெண்கள் குழி பறித்துக் கொள்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஊர்பேர் தெரியாத எத்தனையோ குழந்தைகள் இன்று அநாதைகளாக மேலும் மன நோயாளிகளாக வலம் வருகின்றனர். கற்பழிப்புகள் மிக சாதாரணமாக நடந்து வருகிறது. நமது நாட்டிலே கூட ஹரியானாவில் ஒரு மாதத்தில் 13 பெண்கள் வன் புணர்வு செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டுள்ளார்கள். இஸ்லாம் சொல்லும் வழி முறைகளை இந்த நாடுகள் கடைபிடித்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக விரைவாக குறைய வாய்ப்புள்ளது.//
பதிவுக்கு தொடர்பில்லாத மிரட்டல், நல்லவேளை மலாலாவுக்கு தமிழ் தெரியாது. தெரிந்திருந்தாலும் இது போன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டார். தாலிபான்களுக்கு எதிரான உரிமை போராட்டத்தை தொடர தோழர் மலாலா யூசுஃபுக்கு வாழ்த்துக்கள்.
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சுவனப்பிரியன் போல ஒரு சில முஸ்லிம்கள்களுக்கு இருக்கலாம். ஆனால் எல்லா முஸ்லிம்களும் அவ்வாறு அல்ல. அவர்கள் தங்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதை அறிந்து வைத்துள்ளனர், யாரால் நாடு முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பது தெரியும்.
//மலாலா யூசுஃப் போன்ற இளம் பெண்களுக்கு எனது சிறிய அறிவுரை. இந்த உலகம் போலியானது. பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை போகப் பொருளாக பார்க்கவே ஆண் வர்க்கம் விரும்புகிறது. பெண்கள் வெளியில் ஆபாசமாக உடை அணிந்து வருவதும் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே கூடிக் குலாவுவதும் தான் பெண் உரிமை என்று உலகம் முழுக்க பொது நியதியாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்ற உண்மையை அறியாமல் தங்களுக்கு தாங்களே சில பெண்கள் குழி பறித்துக் கொள்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஊர்பேர் தெரியாத எத்தனையோ குழந்தைகள் இன்று அநாதைகளாக மேலும் மன நோயாளிகளாக வலம் வருகின்றனர். கற்பழிப்புகள் மிக சாதாரணமாக நடந்து வருகிறது. நமது நாட்டிலே கூட ஹரியானாவில் ஒரு மாதத்தில் 13 பெண்கள் வன் புணர்வு செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டுள்ளார்கள். இஸ்லாம் சொல்லும் வழி முறைகளை இந்த நாடுகள் கடைபிடித்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக விரைவாக குறைய வாய்ப்புள்ளது.//
பதிவுக்கு தொடர்பில்லாத மிரட்டல், நல்லவேளை மலாலாவுக்கு தமிழ் தெரியாது. தெரிந்திருந்தாலும் இது போன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டார். தாலிபான்களுக்கு எதிரான உரிமை போராட்டத்தை தொடர தோழர் மலாலா யூசுஃபுக்கு வாழ்த்துக்கள்.
//அமெரிக்கர்களின் போரை ஆதரிக்க எந்த பாகிஸ்தானிக்கும் தார் மீக உரிமை இல்லை.//
ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்த தாலிபான்களுக்கு உரிமை உள்ளதோ?
//ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்த தாலிபான்களுக்கு உரிமை உள்ளதோ?//
அதை அந்த மக்கள் அல்லவா முடிவு செய்ய வேண்டும்?
//பதிவுக்கு தொடர்பில்லாத மிரட்டல், நல்லவேளை மலாலாவுக்கு தமிழ் தெரியாது. தெரிந்திருந்தாலும் இது போன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டார். தாலிபான்களுக்கு எதிரான உரிமை போராட்டத்தை தொடர தோழர் மலாலா யூசுஃபுக்கு வாழ்த்துக்கள்.//
தாலிபான்கள் தவறு செய்தால் அந்த பெண்ணோடு சேர்ந்து நானும் குரல் கொடுப்பேன்.
வாங்க சிராஜ்!
//தாலிபன்களின் போராட்டத்தை எதிர்த்து பேசி இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம்...
அமெரிக்கர்களின் போரை ஆதரிக்க எந்த பாகிஸ்தானிக்கும் தார் மீக உரிமை இல்லை.//
ஸ்வாட், வஜீரிஸ்தான், முல்தான் போன்ற பகுதிகளில் என்ன நடப்பு என்பது உலக மக்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. செய்திகளை வெளியிடும் அனைத்துமே அமெரிக்க கண்ட்ரோலில் இருப்பதுதான் பிரச்னையே!
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
//"சுடப்பட்ட மலாலா யூசுஃப் பிழைத்துக் கொண்டார்!"//---அல்ஹம்துலில்லாஹ்.
மகிழ்ச்சியான செய்தி சகோ. பகிர்வுக்கு நன்றி.
ஆனால்,
இதனை சாக்காக வைத்து இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு போட்டு தங்கள் காழ்ப்புணர்வை காட்டியவர்கள்... 'இப்படி இவர் அநியாயமாக பிழைத்துக்கொண்டாரே' என்று தற்போது மூலையில் அமர்ந்து முக்காடு போட்டுக்கொண்டு தலையில் அடித்து அழுது கொண்டு இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். :-)
அப்புறம்.....
//பாலியல் வன்முறைகள் தலித் அல்லது யார் மீது என்றாலும் அது குற்றமே,யாரும் ஆதரிக்கப்போவதில்லை,//---இதப்பாருங்க, இந்த பாலூட்டி பண்ணும் லொள்ளை....
தலித் மீதான வன்கொடுமையை மென்மையாக கண்டிக்க கூட மனம் வராத அளவுக்கு இப்படி சாதி வெறியில் மூழ்கி கிடக்கிறதே இந்த சமூகம்...! இந்நிலை மாறுவது எந்நாளோ..!
சலாம் சகோ ஆஷிக்!
//தலித் மீதான வன்கொடுமையை மென்மையாக கண்டிக்க கூட மனம் வராத அளவுக்கு இப்படி சாதி வெறியில் மூழ்கி கிடக்கிறதே இந்த சமூகம்...! இந்நிலை மாறுவது எந்நாளோ..!//
இதற்கு முக்கிய காரணம் காலா காலமாக தலித்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வேதங்களின் மூலமாக சொல்லப்பட்டு வந்தது பசுமரத்தாணி போல் இவர்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது. இது மாற இன்னும் ஆண்டுகள் பல ஆகலாம்.
//மலாலா யூசுஃப் போன்ற இளம் பெண்களுக்கு எனது சிறிய அறிவுரை. இந்த உலகம் போலியானது. பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை போகப் பொருளாக பார்க்கவே ஆண் வர்க்கம் விரும்புகிறது. பெண்கள் வெளியில் ஆபாசமாக உடை அணிந்து வருவதும் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே கூடிக் குலாவுவதும் தான் பெண் உரிமை என்று உலகம் முழுக்க பொது நியதியாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்ற உண்மையை அறியாமல் தங்களுக்கு தாங்களே சில பெண்கள் குழி பறித்துக் கொள்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஊர்பேர் தெரியாத எத்தனையோ குழந்தைகள் இன்று அநாதைகளாக மேலும் மன நோயாளிகளாக வலம் வருகின்றனர். கற்பழிப்புகள் மிக சாதாரணமாக நடந்து வருகிறது. நமது நாட்டிலே கூட ஹரியானாவில் ஒரு மாதத்தில் 13 பெண்கள் வன் புணர்வு செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டுள்ளார்கள். இஸ்லாம் சொல்லும் வழி முறைகளை இந்த நாடுகள் கடைபிடித்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக விரைவாக குறைய வாய்ப்புள்ளது.//
This what the real problem... U always want to teach women wht is their actual rights.. Women today are very much capable to identify what is their right.. Let them decide it..
பிள்ளைகள் கூட்டு துவா கேட்கிறார்கள். இதெல்லாம் தவறாச்சே.
HBA
யார் இந்த மலாலா ?
மேற்கத்திய நாடுகள் தலையில் தூக்கி வைத்து படம் காட்டி வரும் முக்கிய நபர் மலாலா.
மேற்கத்திய நாடுகளின் கருத்து :
மலாலா பாகிஸ்தானை சேர்ந்தவர், பெண் கல்விக்காக குரல் கொடுத்தவர். இவரை தாலிபான்கள் சுட்டு பொசுக்கினர். இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இன்றும் பெண் கல்விக்காகவும் குரல் கொடுப்பவர். தீவிரவாதத்திற்கு எதிரானவர் என்றும் மேற்கத்திய நாடுகள் இவரை பற்றி ஒரு படத்தை ஒட்டி கொண்டிருக்கிறது.
யார் இந்த மலாலா ? ஏன் அவளை மேற்கத்திய நாடுகள் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அறிய முதன் முறையாக களம் இறங்கியது பாகிஸ்தானை சேர்ந்த டான் பத்திரிக்கை.
இந்த பத்திரிக்கை மலாலா பற்றி 5 மாதங்களாக சேகரித்து வைத்திருந்த செய்தி இதோ...
இந்த பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில் மலாலாவை பற்றிய தகவல்களை அவள் சிரு வயதிலிருந்தே சிகிச்சை பெற்று வரும் மலாலாவின் மருத்துவரிடமே சேகரித்தார்கள்.
மலாலாவுக்கு காதில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதுண்டு. அதனால் அவள் டாக்டர் இம்தியாஸ் அலி கான்சேயிடம் சிகிச்சை பெற்று வந்தாள்.
தன்னிடம் காது சிகிச்சைக்காக வருபவர்களின் காது மெழுகுகளை சேகரித்து வைப்பது டாக்டரின் வழக்கம். அதை அவர் தனது ஆய்வுகளுக்கு பயன்படுத்துவார்.
டாக்டர் இம்தியாசிடம் மலாலாவை பற்றி பேசியவுடனேயே...
அவள் புஷ்து பேசும் பென்னல்ல, அவளுக்கும் சுவத் பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவள் போலந்து நாட்டை சார்ந்த ஒரு கிறித்தவ பெண் என்று கூறியுள்ளார்.
முதல் தகவலே தூக்கிவாரி போட்டது டான் பத்திரிக்கைக்கு...
அதன்பிறகு டான் பத்திரிக்கை இந்த தகவலை செய்தியாக வெளியிட்டது.
மலாலாவை பற்றிய செய்திகள் வெளியே வந்தவுடன் டாக்டர் இம்தியாஸ்.
மலாலாவின் தந்தைக்கு தொலைப்பேசியில் மலாலாவின் புகைப்படத்தோடு மலாலா பற்றிய செய்திகள் வருகிறதே இது என்ன கதை ? என்று கேட்டார்.
அதற்கு மலாலாவின் தந்தை அதாவது மீடியாவில் காட்டப்படும் மலாலாவின் தந்தை இவ்வாறு கூரினார்...
டாக்டர் அவர்களே எந்த தகவல்களையும் வெளியே கூறிவிடாதீர்கள். சொன்னால் என் மகளின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். என் குடும்பத்தை கூட அவர்கள் அழிக்கலாம் என கதரினார். எங்களை காட்டி கொடுத்து விடாதிர்கள் என கெஞ்சி கேட்டு கொண்டார்....
ஆனால் டாக்டர் இம்தியாஸோ ஒரு நிபந்தனை வைத்தார்.
நீங்கள் இங்கே என்ன நடக்கிறது என்பதை எனக்கு கூறினால் உங்களுக்கு நான் உதவுகிறேன் என்றார்.
சரி என்று மலாலாவின் மீடியா தந்தை உண்மைகளை கொட்ட தொடங்கினார் :
மலாலாவின் உண்மையான பெயர் ஜேனி. அவள் ஹங்கேரியில் 1997 யில் பிறந்தவள்.
அவளுடைய உண்மையான பெற்றோர்கள் கிருஸ்த்துவ பிரச்சார குழுவை சார்ந்தவர்கள்.
மலாலாவை துப்பாகியால் சுட்டவன் பாகிஸ்தான் சுவத் பகுதியை சேர்ந்தவன் இல்லை. இத்தாலியை சேந்தவன் என்ற உண்மைகளை சொன்னார்.
இதனை டாக்டர் இம்தியாஸிடம் கேட்டு கொண்டிருந்த டான் பத்திரிக்கை இதனை உடனே உளவுத்துரையிடம் சொல்லியிருக்கவேண்டாமா ?
அவர்கள் இந்த போலி சம்பவங்களை வைத்து இஸ்லாத்தையும் தாலிபான்களையும் காட்டு மிராண்டிகளாக காட்டிட முயர்ச்சி செய்கிறார்களே என்று கேட்டதற்கு...
டாக்டர் இம்தியாஸ் இவ்வாறு பதில் கூரினார் :
நான் இந்த விசயங்களை பல முறை பாகிஸ்தான் உளவுதுறையினரிடம் கூறியுள்ளேன் ஆனால் அவர்கள் இதுபற்றி எதுவும் செய்யவில்லை என்றார்
-.அஷ்ரப்
Post a Comment