Followers

Sunday, October 21, 2012

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!



இந்திய பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில்(கூத்தாடிகளில்) ஒருவரான அமீர்கான் இந்த வருடம் தனது ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக மெக்கா நோக்கி தனது தாயாரோடு(ஜீனத் ஹூசைன்) புறப்பட்டார். ஹஜ் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை தனது தாய்க்கு இருந்ததாகவும் அவருக்கு துணையாகவும் தானும் முதன் முதல் ஹஜ் செய்ய வேண்டியும் இந்த வருடம் மெக்கா செல்வதாக பத்திரிக்கையாளர்களிடம் அமீர் கான் கூறினார்.






மும்பையில் தனது தாயாரோடு.....

ஹஜ்ஜூக்கு செல்வோர் கட்டாயம் அணிய வேண்டிய 'இஹ்ராம்' என்ற வெள்ளைத் துணியை உடுத்திக் கொண்டு மும்பை ஏர்போர்ட் வந்தபோது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

ஹஜ் முடித்தவுடன் இதற்கு முன் செய்த பாவங்கள் (இணை வைப்பு மற்றும் மனிதர்களுக்கு செய்த துரோகங்கள் நீங்கலாக) அனைத்தும் மன்னிக்கப்பட்டு புது மனிதனாகிறான்.

எனவே ஹஜ்ஜூக்கு பிறகு இனி படங்களில் நடித்தால் ஆபாசங்களை தவிர்த்து நாட்டு மக்களுக்கு நன்மை தரும் விதமாக கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 'சத்யமேவ ஜெயதே' போன்ற அருமையான நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தலாம். ஏழை பணக்காரன், வெள்ளையன் கருப்பன், ஐரோப்பியன் ஆப்ரிக்கன் என்ற பேதமையை மறந்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பரந்த மனப்பானமைக்கு வர வழைக்கும் இந்த அழகிய வழி முறை கண்டிப்பாக அமீர்கானை மாற்றும்.



ஜெத்தா ஏர்போர்டில் அமீர்கான்.

நமது இணைய பதிவர்களில் பலரும் இந்த வருடம் ஹஜ் பயணத்துக்காக உலகமெங்குமிருந்தும் வந்துள்ளார்கள். பலரிடம் நானும் அலை பேசியில் பேசி விசாரித்தேன். சகோதர சகோதரிகள் அனைவரின் புனிதப் பயணமும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற நாமும் பிரார்த்திப்போம்.



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையத் அஃப்ரிதியுடன் அமீர்கான் மெக்காவில்

'அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் ஏக இறைவனை மறுத்தால் இறைவன் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்'
-குர்ஆன் 3:97


--------------------------------------------------------


சௌதி அரேபியாவுக்கு ஆண் துணையின்றி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறப்படும் 170க்கும் மேற்பட்ட நைஜீரியப் பெண்களை சௌதி அரேபியா நாட்டை விட்டு வெளியேற்றியதை அடுத்து, சௌதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செய்யும் பயணிகளை ஏற்றிச்செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் நைஜீரியா இடை நிறுத்தியிருக்கிறது.

நைஜீரிய ஹஜ் பயணிகள் இவ்வாறு நடத்தப்படுவதைப் பற்றி புகார் செய்ய சௌதி அரேபியாவுக்கு நைஜீரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் ஒரு குழு செல்லவிருக்கிறது.

தாங்கள் தடுத்துவைக்கப்பட்டபோது, தங்களுக்கு உணவு எதுவும் தரப்படவில்லை என்றும், ஒரே ஒரு கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்ட நைஜீரியப் பெண்களில் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
ஹஜ் புனிதப் பயணம் முடிந்த பிறகு பல ஆப்ரிக்கர்கள் சௌதி அரேபியாவிலேயே தங்கி, அங்கு பிச்சையெடுப்பதன் மூலமும், விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலமும் பிழைப்பு நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து சௌதி அரேபியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகிறது.

நன்றி:பிபிசி

-----------------------------------------------------------

சென்னை விமானநிலையத்தில் நின்றுகொண்டு இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக் குள்ளானது.இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து சவூதி அரேபியா ஜித்தாவிற்கு, செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 10:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் ஹஜ் பயணிகள் 421 பேர், சோதனை முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

பயணிகளின் சரக்குகளை ஏற்றி வரும் டிராக்டர் எதிர்பாராதவிதமாக, விமானத்தின் மீது மோதியது இதனால் விமானம் குலுங்கியது, மேலும் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிலிருந்த ஹஜ் பயணிகள் அனைவரும் உடனே விமானத்திலிருந்து இறக்கப் பட்டு விமான நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப் பட்டனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.

இதேபோன்று பல தடவை சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதிய விபத்துகள் நடைபெற்றது குறிப்பித்தக்கது,

www.inneram.com

நல்ல நிர்வாகம் பண்றாங்கப்பா! டிராக்டர் இடித்தது இது முதல் முறை அல்லவாம். பல முறை நடந்தும் திருத்திக் கொள்வதாக இல்லை. :-).

15 comments:

Unknown said...

ஸலாம்

உலக மக்கள் அனைவரின் ஹஜ்ஜும் எந்த பாவமும் தீங்கும் இல்லாத ஹஜ் ஆக அமைய பிரார்த்திக்கிறேன் ...

சுவனன் நீங்க ஹஜ் செய்யலியா ...

suvanappiriyan said...

சலாம் சகோ சுல்தான் மைதீன்!

//சுவனன் நீங்க ஹஜ் செய்யலியா ...//

இரண்டு முறை ஹஜ் செய்துள்ளேன். பல முறை உம்ராவும் செய்துள்ளேன்.

Aashiq Ahamed said...

வ அலைக்கும் சலாம்,

இந்த பயணம் அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இந்த பயணம் அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தட்டும் //

இன்ஷா அல்லாஹ் மாற்றத்தை அவருக்குள் இந்த பயணம் கொண்டு வர பிரார்த்திப்போம்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//ஹஜ் முடித்தவுடன் இதற்கு முன் செய்த பாவங்கள் (இணை வைப்பு மற்றும் மனிதர்களுக்கு செய்த துரோகங்கள் நீங்கலாக) அனைத்தும் மன்னிக்கப்பட்டு புது மனிதனாகிறான்.//

பாவங்கள் ,துரோகங்கள் நிறைய செய்துவிட்டு ,ஹஜ் செய்தால் போதும் என்கிறீர்கள். :-))

அப்புறம் நடிகர்கள் என்றால் கூத்தாடிகள் ,எனவே அப்படித்தான் அழைப்பேன் என தர்க்கம் செய்யும் நீங்கள் அமீர்கானை அவ்வாறு விளிக்காததன் பின்னால் வேறு எந்த காரணமும் இல்லை என நான் நம்புகிறேன் :-))

மேலும் கூத்தாடி அல்லது நடிகர் அமீர்கான் ஹஜ் செய்தார் என்பதனை வைத்து ஹஜ்ஜுக்கு விளம்பரம் சேர்க்க இப்பதிவை இடவில்லை, ஹஜ் பற்றி செய்தியை சொல்லவே எனவும் எனக்கு புரிகிறது.
--------------
//விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலமும் பிழைப்பு நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து சௌதி அரேபியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகிறது.//

பல முறை சவுதியில் விபச்சாரம்,மது இல்லவே இல்லை என சொல்வீர்கள்,இப்போது விபச்சாரம்ம் செய்துவிடுவார்கள் என பெண்களை ஹஜ்ஜுக்கு அனுமதிக்கவில்லை என சொல்கிறீர்கள்.

இதன் மூலம்,

ஹஜ் பயணம் வந்தவர்களை அதுவும் பெண்களை கேவலப்படுத்துகிறீர்கள்,

குறிப்பாக நைஜீரியர்களை.

விபச்சாரம் செய்துவிடுவார்கள் என சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டாலும் ,அவர்களுக்கு உணவோ,வசதியோ அளிக்காதது ஏன்? கருப்பினத்தவர் என்ற இனத்துவேஷத்தினாலா?

அதுப்பற்றி ஒரு கருத்தும் சொல்லாமல் ,மாட்டிக்கொண்டவர்களை நிந்திப்பதில் மட்டும் உங்கள் கவனம் இருப்பது ஏன்?
-----------------
சென்னை விமான நிலையத்தில் நடந்தது பொறுப்பற்ற தனம். ஆனால் அதனை சரியாக சுட்டி கிண்டல் அடிக்க மட்டும் நீங்கள் மறக்கவில்லை, நைஜீரிய பயணிகளுக்கு ஏற்பட்ட கஷ்டம் குறித்து ஒன்றும் சொல்ல தோன்றவில்லை :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//பாவங்கள் ,துரோகங்கள் நிறைய செய்துவிட்டு ,ஹஜ் செய்தால் போதும் என்கிறீர்கள். :-))//

அப்படி சில முஸ்லிம்களும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அறியாத காலங்களில் எவ்வளவோ தவறு செய்திருப்போம். அவை எல்லாம் இது போன்ற புனிதப் பயணங்களால் நீக்கப்படுகிறது. தவறு செய்வதையே தொழிலாக கொண்டவர்களின் மனதை இறைவன் அறியாதவனா? எனவே ஹஜ்ஜை ஒரு சுற்றுலாவாக கருதுபவர்களுக்கு அது இறைவன் புறத்தில் சுற்றுலாவாகவே அங்கீகரிக்கப்படும். அனைவரின் உள்ளங்களைப் பார்க்கிறான் இறைவன்.

//அப்புறம் நடிகர்கள் என்றால் கூத்தாடிகள் ,எனவே அப்படித்தான் அழைப்பேன் என தர்க்கம் செய்யும் நீங்கள் அமீர்கானை அவ்வாறு விளிக்காததன் பின்னால் வேறு எந்த காரணமும் இல்லை என நான் நம்புகிறேன் :-))//

என்னைப் பொருத்த வரை அமீர்கானும் ஒரு கூத்தாடிதான். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

//ஹஜ் பயணம் வந்தவர்களை அதுவும் பெண்களை கேவலப்படுத்துகிறீர்கள்,//

ஆதாரபூர்வமாக தவறு கண்டு பிடிக்கப்பட்டதால்தான் இந்த சட்டத்தையே சவுதி அரசு போட்டது. சவுதியில் பல காலம் தங்கியிருப்பவர்களுக்கு இந்த ஆப்ரிக்கர்கள் செய்யும் மோசடிகளை நன்றாகவே அறிவர்.

//பல முறை சவுதியில் விபச்சாரம்,மது இல்லவே இல்லை என சொல்வீர்கள்,இப்போது விபச்சாரம்ம் செய்துவிடுவார்கள் என பெண்களை ஹஜ்ஜுக்கு அனுமதிக்கவில்லை என சொல்கிறீர்கள்.//

சட்டம் கடுமையாக இருந்தாலும் பல நாட்டவர் வந்து போகும் ஜெத்தாவில் அவ்வப்போது இதுபோல் நடந்து விடுகிறது. சில அப்பாவிகள் இதில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக மிக கவனமாக சவுதி அரசு இந்த விஷயத்தில் செயல்படுகிறது. இந்த சட்டம் மட்டும் தளர்த்தப்பட்டால் நிலைமை மிக மோசமாகி விடும்.




k.rahman said...

எல்லா நடிகர்களையும் கூத்தாடி என்றே தான் உங்கள் பதிவுகளில் படித்ததாக ஞாபகம். அமீர் கான் மட்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரா?

suvanappiriyan said...

//எல்லா நடிகர்களையும் கூத்தாடி என்றே தான் உங்கள் பதிவுகளில் படித்ததாக ஞாபகம். அமீர் கான் மட்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரா?//

குழப்பம் வர வேண்டாம் என்று அவரையும் கூத்தாடி என்றே குறிப்பிட்டு விட்டேன். என்னைப் பொருத்த வரை எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

ராவணன் said...

பாத்து அண்ணாச்சி....உங்கள் கூத்தாடி அமீர்கானுக்கும் ஏதாவது இறைவசனம் இறங்கப் போகுது...

suvanappiriyan said...

//பாத்து அண்ணாச்சி....உங்கள் கூத்தாடி அமீர்கானுக்கும் ஏதாவது இறைவசனம் இறங்கப் போகுது...//

கூத்தாடியாக சென்றவர் திரும்ப வரும்போது சிறந்த மனிதநேயமிக்க ஒரு முஸ்லிமாக வருவார். கவலை வேண்டாம்.

ஊர்சுற்றி said...

//அறியாத காலங்களில் எவ்வளவோ தவறு செய்திருப்போம். அவை எல்லாம் இது போன்ற புனிதப் பயணங்களால் நீக்கப்படுகிறது.///

அட...அறியாத காலங்களில் செய்த ‘தவறு’களுக்கே அல்லா புனிதப்பயனம் கேட்கிறானா?

suvanappiriyan said...

//அட...அறியாத காலங்களில் செய்த ‘தவறு’களுக்கே அல்லா புனிதப்பயனம் கேட்கிறானா?//

இது மட்டுமே அல்ல. பல காரணங்களில் இதுவும் ஒன்று.

Unknown said...

சகோதரர் சுவனப்பிரியன்,

///ஹஜ் புனிதப் பயணம் முடிந்த பிறகு பல ஆப்ரிக்கர்கள் சௌதி அரேபியாவிலேயே தங்கி, அங்கு பிச்சையெடுப்பதன் மூலமும், விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலமும் பிழைப்பு நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து சௌதி அரேபியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகிறது.///


பெண்கள் தடுத்து வைக்கப்பட்டது, மஹ்ரம்தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

சிலர் பிச்சை எடுக்கிறார்கள் என்பது உண்மைதான்!

ஆனால், பல பெண்கள் அங்காடி வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அதாவது செருப்பு, வளையல்கள் போன்றவற்றை விற்பதை மக்காவில் நான் கண்டிருக்கிறேன்.

இவர்களுக்குத்தானா 'தகரோனி' என்று அடைமொழியில் அழைக்கிறார்கள்? இவர்கள் தமது கன்னங்களில் கீறி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ யூசுஃப் இஸ்மத்!

//பெண்கள் தடுத்து வைக்கப்பட்டது, மஹ்ரம்தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?//

ஒரு பெண் ஹஜ்ஜூக்கு வருவதாக இருந்தால் தனியாக வர இஸ்லாம் அனுமதிப்பதில்லை. கணவன், மகன், சகோதரன் போன்ற யாராவது ஒரு துணையோடுதான் ஹஜ்ஜூக்கு வர முடியும். இதனை கண்டிப்பாக கடைபிடிக்காமல் சற்று லூசில் விட்டது சவுதி அரசு. ஆனால் ஆப்ரிக்கர்களில் பலர் ஹஜ்ஜூ நாட்கள் முடிந்தும் இங்கேயே தங்கி விடுகின்றனர். பிச்சை எடுப்பது, வியாபாரம் செய்வது, திருட்டு, விபசாரம் போன்ற தவறான வழிகளில் பலர் ஈடுபடுவதை கண்டு பிடித்து பலர சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலை தொடரக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வருடம் சற்று கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

//இவர்களுக்குத்தானா 'தகரோனி' என்று அடைமொழியில் அழைக்கிறார்கள்? இவர்கள் தமது கன்னங்களில் கீறி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.//

சிலர் கன்னங்களில் கீறி இருப்பார்கள். அது அவர்களின் நாட்டு பழக்கம். சிலர் கீறி விடாமலும் முற்போக்காகவும் இருப்பர்.

ஊர்சுற்றி said...

//திருட்டு, விபசாரம் போன்ற தவறான வழிகளில் பலர் ஈடுபடுவதை கண்டு பிடித்து பலர சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்////

கையை காலை வெட்டுவது கல்லால் எறிந்து கொல்லுவது என்பன இப்போது இல்லையா? அல்லது முஸ்லிம் என்றபடியால் அபராதம் கட்டி ஊருக்கு போவது போல வெறும் சிறைதானா?
அட சுப்பராயிருக்கே?