'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, October 23, 2012
கால் நடையாக மெக்கா வந்த போஸ்னிய முஸ்லிம்!
இந்த வருடம் ஹஜ் பயணத்தை முடிக்க போஸ்னியாவிலிருந்து காலந்டையாகவே வந்துள்ளார் செனத் ஹெட்ஜிக். வயது 47.
'சனிக்கிழமை மக்கா வந்து சேர்ந்தேன். எனக்கு எந்த களைப்பும் ஏற்படவில்லை. எனது வாழ்நாளில் மிக சிறந்த நாட்களாக இந்நாட்களை எண்ணுகிறேன். இந்த பயணத்தை மேற் கொள்ள 5700 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டியதாக இருந்தது. இதனை 314 நாட்களில் செய்து முடித்தேன். போஸ்னியா, செர்பியா, பலகேரியா, துருக்கி, சிரியா, ஜோர்டான், வந்து அதன் பிறகு சவுதியில் காலடி வைத்தேன். 20 கிலே பெருமானமுள்ள எனது அத்தியாவசியப் பொருட்களும் என்னோடு பயணித்தது.'
எனது பயணத்தை அவ்வப்போது ஃபேஸ் புக்கிலும் அப்டேட் செய்து கொண்டே வந்தேன். இதன் மூலம் பிரச்னைக்குரிய சிரிய அரசிடம் அனுமதி பெறுவதில் சிக்கல் இல்லாமல் போனது. சிரியாவில் 500 கிலோ மீட்டரை 11 நாட்களில் கடந்தேன். அலெப்போ, டமாஸ்கஸ் போன்ற பகுதிகளில அதிக செக் போஸ்டுகள் இருந்தன. எதிலும் பிரச்னையில்லாமல் வெளியேற இறைவன் துணை புரிந்தான்.
இந்த நடை பயணம் எனது இறைவனுக்காகவும் இஸ்லாத்துக்காகவும், போஸ்னியா மக்களுக்காகவும் எனது பெற்றோர் மற்றும் எனது சகோதரிக்காகவும் ஆனது. இறைவன் எனது பயணத்தை மிக இலகுவர்கி வைத்தான். முக நூலும் எனது பயணத்தில் மிக உதவியாக இருந்தது.' என்கிறார் செனத் ஹெட்ஜிக்.
இவர் பயணித்து வந்த பாதை மிக சிக்கலானது. பல்கேரியாவில் தற்போதய காலநிலை மைனஸ் 35 செல்சியஸ். தற்போது ஜோர்டானின் கால நிலை பிளஸ் 44 செல்சியஸ்.(During the pilgrimage, Hadzic faced temperatures ranging from minus 35 Celsius in Bulgaria to plus 44 Celsius in Jordan.) இரு வேறுபட்ட கால நிலைகளையும் எந்த சிக்கலும் இல்லாமல் கடந்து சாதனை படைத்துள்ளார் இந்த போஸ்னிய ஹாஜி.
தகவல் உதவி அரப் நியூஸ்.
ஹஜ் என்பது வசதி உடையவர்களுக்குத்தான் கடமை. இவ்வளவு சிரமம் எடுத்து உயிருக்கு ஆபத்தான இந்த பயணத்தை மேற்கொள்ள இஸ்லாம் இவருக்கு கட்டளையிடவில்லை. விமானம், கப்பல், வாகன ஊர்தி என்று பல வசதிகள் இருக்க உடலை வருத்தி இந்த பயணத்தை மேற் கொண்டது இவரது சொந்த விருப்பத்தில் ஏற்பட்டது. பலர் உலக சாதனை என்று எதை எதையோ செய்து கொண்டிருக்க இவர் ஹஜ் செய்வதிலும் ஒரு சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். இவரது ஹஜ்ஜை பரிபூரணமாக இறைவன் ஏற்றுக் கொள்ள நாமும் பிரார்த்திப்போம்..
---------------------------------------------------
டிஸ்கவரி சேனல் ஹஜ் நிகழ்வுகளை மிக தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. கண்டு களியுங்கள்.
--------------------------------------------------
ஹஜ்ஜூக்கு வருபவர்களில் பலர் ஆடு குர்பான் கொடுப்பதில் பல தவறுகளை செய்து விடுகின்றனர். தங்கள் கைகளால் அறுப்பதுதான் சிறந்தது என்று நினைத்து மலை மேடுகளில் ஆடுகளை அறுத்து அதன் கறிகள் எவருக்கும் உபயோகப்படாமல் அழிகிறது. மற்றும் சிலர் உள்ளூரில் சிலரிடம் பணத்தை கட்டி விடுகின்றனர். அவர்கள் நேர்மையாக அதனை உரிய முறையில் அறுப்பார்களா என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் சவுதி அரசு ஒரு அருமையான ஏற்பாட்டை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. ஹாஜிகள் தங்களுக்கான குர்பானிக்கான பணத்தை அல்ராஜி பேங்கில் கட்டி விட வேண்டும். உங்கள் பெயரில் கணிணியில் பதிவு செய்து ரசீதும் தந்து விடுவார்கள். விலையும் நியாயமாக இருக்கும். அந்த ஆடுகளும் மாடுகளும் ஒட்டகங்களும் முறையாக அறுக்கப்பட்டு அவை அனைததும் பதப்படுத்தப்பட்டு ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள வறிய முஸ்லிம்களுக்கு அனுப்பப்படுகிறது.
சவுதி அரசே இதனை செய்வதால் பணம் தவறாக பயன் படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. கறியும் வீணாகாமல் உறியவர்களை சென்றடைகிறது. மெக்காவில் பல இடங்களில் இதற்கான கவுண்டர் திறக்கப்பட்டு ஆட்கள் ரெடியாக இருப்பர். ஹாஜிகள் தங்களின் குர்பானிகள் உரியவர்களை சென்றடைய அல்ராஜி வங்கியில் பணம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-------------------------------------------------
ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் இருக்கும் போது ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு இருக்க நபிகள் நாயகம் வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே அன்று சக்தி பெற்ற முஸ்லிம்கள் அனைவரும் நோன்பிருந்து நன்மையை தேடிக் கொள்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
அரபா நாள் நோன்பு துல் ஹஜ் பிறை 9 ம் நாள் :
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 1722
சலாம் சகோ சுல்தான் மைதீன்!
பொருத்தமான நபி மொழிகளை தகவலுக்காக பகிர்ந்தமைக்கு நன்றி!
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலின், ஒரு பகுதியை, கோவிலுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரின் மய்ய பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 80 ஆண்டு பழைமையான இப்பள்ளியில், 3,000 மாணவர்கள் படிக்கின் றனர். பள்ளிக்கு சொந்தமாக, 4 ஏக்கர் விளையாட்டுத் திடல் உள்ளது.
இந்த திடலில், ஈரோடு மாவட்ட அளவில் மற்றும் பெருந்துறை வட்டார விளையாட்டு போட்டி நடக்கும்; காலை, மாலையில் ஏராளமானோர், நடைப்பயிற்சி மேற்கொள் கின்றனர்.
மைதானத்தில், 30 சென்ட் இடத்தை, அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கோவிலைச் சேர்ந்த சிலர், இம்மாதம் 15ஆம் தேதி, விளையாட்டு மைதானத்தை அளவீடு செய்து, கல் நட்டனர். கட்டட பணிக்காக மணல் கொண்டு வந்து கொட்டியதால், மைதானம் பறி போவதை அறிந்த மாணவர்கள், சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, குன்னத்தூர் நான்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பெருந்துறை காவல்துறை அதிகாரி இதுபற்றி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம்; உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும், என கூறியதை தொடர்ந்து, வகுப்புக்கு மாணவர்கள் திரும்பினர். மறியலால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
http://viduthalaidaily.blogspot.com/2012/10/blog-post_4684.html
நன்று
சகோ விஜய்!
//நன்று //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம்.சகோ.சுவனப்பிரியன்
முன்னர் பெருநாட்கள் எப்போது என்று பிரச்னை வரும்...இப்போது அரபா நோன்பு எப்போது என்று பிரச்னை. காரணம்,தமிழக காஜி அவர்கள் சனிக்கிழமைதான் பெருநாள் என்று அறிவித்து இருக்கிறார்..அப்ப அரபா நோன்பு வெள்ளிகிழமை வரும்...ஆனால் வெள்ளிகிழமை ஒரு சாரார் பெருநாள் கொண்டாடுகின்றனர்...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் தினத்திலும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. நூல் : புகாரி - 1993.
வெள்ளிகிழமை பெருநாள் என்றால் சனிக்கிழமை பெருநாள் கொண்டாடுவோர் வெள்ளிகிழமை அன்று நோன்பு நோற்பது ஹராம்...இதற்கு என்னதான் தீர்வோ.. !!!???
நன்றியுடன்
நாகூர் மீரான்
அரஃபா நாள் நோன்பு
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.
அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977.
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 172
அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப் படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.
நூல்: நோன்பு, நூலாசிரியர்: பி.ஜைனுல்ஆபிதீன் அவர்கள்.
அதனடிப்படையில் (24-10-12 புதன்) இரவு ஸகர் செய்து வியாழன் அரஃபா நோன்பு நோற்க வேண்டும், தாயகத்தில் வியாழன் இரவு ஸகர் செய்து வெள்ளி அன்று நோன்பு நோற்க வேண்டும் நீங்களும் நோன்பு நோற்று, உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள் அல்லாஹ் அருள்புரிவான்.
சலாம் சகோ நாகூர் மீரான்!
//வெள்ளிகிழமை பெருநாள் என்றால் சனிக்கிழமை பெருநாள் கொண்டாடுவோர் வெள்ளிகிழமை அன்று நோன்பு நோற்பது ஹராம்...இதற்கு என்னதான் தீர்வோ.. !!!???//
நபிகள் நாயகம் அவர்கள் மிக இலகுவான வழிகளை நமக்கு காட்டித் தந்திருக்கிறார்கள். மேலே கொடுத்துள்ள நபி மொழிகளை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு நல்ல தெளிவு கிடைக்கும்.
சகோ.சுவனப்பிரியன்
அப்ப இங்கு வெள்ளிகிழமை பெருநாள் கொண்டாடுவோர் எதைக்கொண்டு கொண்டாடுகின்றனர்??....சவுதியில் எப்போது பெருநாள்..???
//அப்ப இங்கு வெள்ளிகிழமை பெருநாள் கொண்டாடுவோர் எதைக்கொண்டு கொண்டாடுகின்றனர்??....சவுதியில் எப்போது பெருநாள்..??? //
சவுதியில் வெள்ளிக் கிழமை பெருநாள். சவுதியில் தெரிந்த பிறை கணக்குபடி வியாழக் கிழமை அரஃபா. நம் தமிழ் நாட்டில் அங்கு தெரிந்த பிறையின் அடிப்படையில் வெள்ளிக் கிழமை அரஃபாவாகவும் சனிக்கிழமை பெருநாளாகவும் கொண்டாடுவதே நபி வழியாக அறிகிறேன். இறைவனே அறிந்தவன்.
சலாம் சகோ. சுவனப் பிரியன்,
//அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.//
மக்காவிலும் மதீனாவிலும் பிறை ஒரு நாள் வித்தியாசத்தில் தெரிய வாய்ப்புள்ளதா? தற்காலத்திலோ அல்லது முந்தைய காலங்களிலோ இவ்வாறு தெரிந்ததற்கு ஏதாவது குறிப்பு உள்ளதா?
ஒரு திருத்தும்! பல்கேரியாவில் தற்போதைய கால நிலை (Fall or Autumn) +5 சென்டிகிரேட். பல்கேரியாவில் குளிர் காலத்தில் சராசரியாக அதிக பட்ச குளிர் -5 இருக்கும். பல்கேரியாவில் மைனஸ் 35 டிகிரி பாரன்ஹிட்ட்டிலும் வராது; மைனஸ் 35 டிகிரி சென்டிகிரேட்டிலும் வராது.
அமெரிக்காவில் இருக்கும் அலாஸ்காவிலே சராசரி அதிக பட்ச குளிர் மைனஸ் 20 to மைனஸ் 30 தான்!
மைனஸ் 40 சென்டிகிரேட் = மைனஸ் 40 பாரன்ஹிட்
அவர் கிளம்பியபோது அதிக பட்சம் மைனஸ் 5 இருந்திருக்கலாம்!
[[பல்கேரியாவில் தற்போதய காலநிலை மைனஸ் 35 டிகிரி. தற்போது ஜோர்டானின் கால நிலை பிளஸ் 44 டிகிரி]]
சகோ நம்பள்கி!
//ஒரு திருத்தும்! பல்கேரியாவில் தற்போதைய கால நிலை (Fall or Autumn) +5 சென்டிகிரேட். பல்கேரியாவில் குளிர் காலத்தில் சராசரியாக அதிக பட்ச குளிர் -5 இருக்கும். பல்கேரியாவில் மைனஸ் 35 டிகிரி பாரன்ஹிட்ட்டிலும் வராது; மைனஸ் 35 டிகிரி சென்டிகிரேட்டிலும் வராது.//
தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன். செல்சியஸ் என்பதை போடுவதற்கு பதில் வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் டிகிரியை போட்டது எனது தவறுதான். உரு பாராவை படித்து விட்டு வரிக்கு வரி மொழி பெயர்க்காமல் எனது பாணியில் எழுதி விடுவது எனது வழக்கம். அதனால் ஏற்பட்ட தவறுதான் அது. சுட்டியும் தந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.
http://www.arabnews.com/5700-km-314-days-bosnian-haji-crosses-7-countries-foot
சலாம் சகோ ராஜகிரியார்!
//மக்காவிலும் மதீனாவிலும் பிறை ஒரு நாள் வித்தியாசத்தில் தெரிய வாய்ப்புள்ளதா? தற்காலத்திலோ அல்லது முந்தைய காலங்களிலோ இவ்வாறு தெரிந்ததற்கு ஏதாவது குறிப்பு உள்ளதா?//
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. பல நேரங்களில் சிலோனில் பிறை தென் படும். தமிழகத்தில் பிறை தென் படாது. ஒரு நாள் வித்தியாசத்தில் தமிழகத்திலும் சிலோனிலும் முன்பு பெருநாள் கொண்டாடியிருக்கிறோம். இதை விட அதிக தூரம்தான் மெக்காவும் மெதினாவும். எனவே ஒரே நாட்டில் இரு வேறு பக்கங்களில் பிறை தனித் தனியாக தெரிய வாய்ப்புள்ளது. மேலும் நபிகள் நாயகம் அவர்கள் ஆளனுப்பி பார்த்து வர சொல்லவிலலை. மதினாவில் தெரிந்த பிறையை வைத்தே நோன்பு பிடித்துள்ளார்கள். அதனை பின்பற்றி நாமும் நமது ஊர், அல்லது மாநிலத்தை பிறை தெரிவதன் கணக்கை வைத்து அரஃபாவை முடிவு செய்து கொள்ளலாம்.
மேலும் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஒரு நாள் வித்தியாசப்படும். எனவே எப்படி பார்த்தாலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் அரஃபாவை நம்மால் அனுசரிக்க முடியாது.
நீங்கள் நான் என்ன சொன்னேன் என்பதை சரியாக புரிந்துகொள்ளவில்லை!!
பல்கேரியாவில் எக்காலத்திலேயும் குளிர் மைனஸ் 35 செல்சியஸ் வராது. அதிக பட்சம் சராசரி குளிர் மைனஸ் 4 to 7 செல்சியஸ் தான் அங்கு.
கடுங்குளிர் பிரதேசமான அலாஸ்கவிலேயே (அமெரிக்கா) சராசரி குளிர் மைனஸ் 20 to 30 தான்.
நீங்கள சொல்வது பல்கேரியா அலாஸ்காவை விட பயங்கர கடுங் குளிர் பிரதேசம் மாதிரி இருக்கிறது!
இது தவறு; அரேபிய செய்திகள் சொன்னாலும் தவறு தான்!
[[[ சுவனப் பிரியன் said...
சகோ நம்பள்கி!//ஒரு திருத்தும்! பல்கேரியாவில் தற்போதைய கால நிலை (Fall or Autumn) +5 சென்டிகிரேட். பல்கேரியாவில் குளிர் காலத்தில் சராசரியாக அதிக பட்ச குளிர் -5 இருக்கும். பல்கேரியாவில் மைனஸ் 35 டிகிரி பாரன்ஹிட்ட்டிலும் வராது; மைனஸ் 35 டிகிரி சென்டிகிரேட்டிலும் வராது.//
தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன். செல்சியஸ் என்பதை போடுவதற்கு பதில் வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் டிகிரியை போட்டது எனது தவறுதான். உரு பாராவை படித்து விட்டு வரிக்கு வரி மொழி பெயர்க்காமல் எனது பாணியில் எழுதி விடுவது எனது வழக்கம். அதனால் ஏற்பட்ட தவறுதான் அது. சுட்டியும் தந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.
http://www.arabnews.com/5700-km-314-days-bosnian-haji-crosses-7-countries-foot]]]
சலாம் சகோ. சுவனப் பிரியன்,
இவ்விடயத்தில் இன்னும் என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. தகவல்களை சேகரி்த்து கொண்டிருக்கிறேன்.
தவிர நீங்கள் கொடுத்திருக்கும் உதாரணம் (இந்தியா-இலங்கை) ஏற்புடையதாக இல்லை. தர்க்க ரீதியாக மிக சுலபமாக உடைத்து விடலாம். ஒரே ஒரு பாயிண்டில் சொன்னால் இந்த வருடமோ அல்லது இனி வரும் வருடங்களிலோ இந்தியாவிலும் இலங்கையிலும் தற்போது பின்பற்றப் படும் முறைபடி வெவ்வேறு தினங்களில் பெருநாள் வர அதிகமதிகம் வாய்ப்புள்ளது. ஆனால் இவற்றை விட மிகமிக அதிகம் துாரமுள்ள மக்காவிலும் மதீனாவிலும் இது போல் வருவதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.
சகோ. PJ யின் நபிகள் (ஸல்) ஆளனுப்பி பார்த்து வர சொல்லவில்லை என்ற வாதத்திற்கான பதிலாகவே எனது முந்தைய சந்தேகம். எனது கேள்வியின் மறு பகுதிக்கு நீங்கள் பதில் தரவில்லையே. இதையும் கூட தகவலுக்காகத் தான் கேட்கிறேன்.
//நீங்கள சொல்வது பல்கேரியா அலாஸ்காவை விட பயங்கர கடுங் குளிர் பிரதேசம் மாதிரி இருக்கிறது!
இது தவறு; அரேபிய செய்திகள் சொன்னாலும் தவறு தான்!//
ஒருகால் அரப் நியூஸின் நிருபரின் தகவல் தவறாகவும் இருக்கலாம். இது பற்றி அரப் நியூஸூக்கு கடிதம் எழுதுகிறேன்.
சலாம் சகோ ராஜகிரியார்!
//மக்காவிலும் மதீனாவிலும் பிறை ஒரு நாள் வித்தியாசத்தில் தெரிய வாய்ப்புள்ளதா? தற்காலத்திலோ அல்லது முந்தைய காலங்களிலோ இவ்வாறு தெரிந்ததற்கு ஏதாவது குறிப்பு உள்ளதா?//
இது பற்றிய தகவல் என்னிடம் இல்லை. அவ்வாறு கிடைத்தால் அதனை பகிருகிறேன். தெரிந்தவர்கள் இது விபரங்களையும் இங்கு பதியலாம்.
//இது பற்றிய தகவல் என்னிடம் இல்லை. அவ்வாறு கிடைத்தால் அதனை பகிருகிறேன். தெரிந்தவர்கள் இது விபரங்களையும் இங்கு பதியலாம்.//
எனக்காக கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். நன்றி.
போலிகள் நிறைந்த போலிஸ் துறையில் காவிகள் கலப்படமாகிவிட்ட இந்திய காவல்த்துறையில் அதிகாரம் கையில் இருப்பதால் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் இந்திய சட்டமோ இவர்களை எதுவும் செய்வதில்லை., இனி செய்யபோவதுமில்லை.
பலி கொடுக்க சேவல் இருக்கிறத..? முஸ்லிம்களை என்கவுண்டர் செய்ய போலீஸ் பயன்படுத்தும் "ரகசிய" வார்த்தை அம்பலம்................!!?
குஜராத் போலீஸ், மகாராஷ்டிர போலீசை தொடர்பு கொண்டு, பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்க, ஆம்.,ஒரு சேவல் (சாதிக் ஜமால்) இருக்கிறது, கொண்டு செல்லுங்கள்,
என பேசிக்கொண்ட "தொலைபேசி உரையாடல்" குறித்த ஆவணங்கள் தற்போது சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. கடந்த 2003 ஜனவரி 13ந்தேதியன்று குஜராத் போலீசால் "சாதிக் ஜமால்" என்ற இளைஞர் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆட்டோ டிரைவரான ஜமாலை "லஷ்கர் தையிபா தீவிரவாதி" எனவும், நரேந்திர மோடி உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்களை கொள்ள வந்தார் என்றும், போலியான கதை கட்டி "என்கவுண்டர்" முறையில் சுட்டுக்கொன்றது குஜராத் போலீஸ்.
சி.பி.ஐ. விசாரணைக்கு சென்ற இந்த என்கவுண்டர் வழக்கில், தற்போது கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் "போலீஸ் பித்தலாட்டங்கள்" வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சாதிக் ஜமாலை சுட்டுக்கொன்ற குஜராத் போலீஸ், அது குறித்த "எப்.ஐ.ஆரில்" சாதிக் ஜமாலை தாங்கள் "மட்பேட்" என்ற இடத்தில் வைத்து கைது செய்ததாகவும், அப்போது அவர் டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாதகவும் (அதுவும் குஜராத் கலவரம் குறித்த செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார் என்று) பதிவு செய்துள்ளனர்........
http://dinaex.blogspot.com/2012/10/blog-post_24.html
Post a Comment