'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, December 29, 2012
மீனாட்சி புர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?
தர்மபுரி நாயக்கன் கோட்டை கிராமத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் சிறுவர்கள் தங்களின் படிப்புக்காக பள்ளி செல்ல போலீஸ் வாகனத்தில் சென்று வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் தலித் குழந்தைகளின் நிலையை தற்போது பார்த்தால் காந்தி என்ன நினைப்பார்? பாலஸ்தீனத்தையும், ஆப்கானிஸ்தானத்தையும் ஓயாது பதிவுகளாக எழுதி புளங்காகிதமடைபவர்கள் சற்று தமிழக அல்லல்களையும் பார்த்து அதற்கு தீர்வுகளையும் எழுத முயற்சிக்கலாம்.
----------------------------------------------------
மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.
'இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக'
மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.
'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'
'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.
'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'
'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'
'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'
'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'
நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.
'அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்ட பெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.
http://www.maattru.com/2011/12/blog-post_6584.html
'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' நாவலைப் பற்றி மேலதிக விபரம் அறிய
'உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை'
'அதற்கு நாங்கதான் காரணம் என்று சொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப் பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்'
சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:
'மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல...அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் 'வாடா முருகேஷா' என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். 'வா முருகேஷா' என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது."
தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.
'நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்'
மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்
'முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா?'
'இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.
எங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.
நன்றி பிபிசி தமிழோசை.
இதில் முஸலிம்களுக்கு ஒரு பாடம் உள்ளது. வரதட்சணை என்ற ஒரு பெரும் கேட்டை மற்ற மதத்தவரிடமிருந்து கடன் வாங்கியதால் இன்று அந்த மக்களின் இஸ்லாமிய பெண்கள் திருமணம் முடிப்பதில் சிரமம் உள்ளதை காண்கிறோம். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு முட்டுக் கட்டையாக உள்ளதைப் பார்க்கிறோம். அதே போல் புதிதாக இணைந்த அந்த மக்களை அன்போடு அரவணைக்க வேண்டியது நமது கடமை. திருமண உறவுகளையும் அவர்களோடு வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னால் நமது முன்னோர்களும் ஒரு ராமசாமியாகவோ ஒரு கந்தசாமியாகவோத்தான் இருந்திருப்பார்கள். எனவே நாங்கள் பூர்வீக முஸ்லிம்கள் என்று வெற்று பெருமை பேசிக் கொண்டு இஸ்லாத்தையும் விளங்காமல் காலத்தை ஓட்டாமல் அந்த மக்களை நம்மோடு மேலும் இணைக்க இஸ்லாமியர்கள் முயற்சிக்க வேண்டும்.
வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இந்த அளவு தங்கள் முடிவில் உறுதியாக இருந்த அந்த மக்களை நாம் இன்னும் அதிகமதிகம் அன்பு காட்டி அவர்களின் காயங்களை போக்க முயற்சிக்க வேண்டும்.
குடும்பத்தோடு அந்த ஊர்களுக்கு சென்று அந்த மக்களோடு அன்யோன்யமாக பழக வேண்டும். அந்த மக்களையும் நம் ஊர்களுக்கு விருந்தினர்களாக வரவழைத்து நமது அன்பைக் காட்ட வேண்டும். செல்வந்தர்கள் அந்த மக்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்று அந்த சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைய வேண்டும். திருமணம் ஆகாமல் உள்ள அந்த இஸ்லாமிய புதிய சகோதரிகளை நமது சொந்தங்களாக ஆக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு இஸ்லாமிய செல்வந்தர்கள் கணக்கின்றி உதவி புரிய வேண்டும். நம் நாட்டில் உள்ள தீராத தலைவலியான தீண்டாமைக் கொடுமை அறவே ஒழிய வேண்டுமானால் இந்த மாற்றங்களை எல்லாம் முஸ்லிம்கள் தங்களின் கடமையாக நினைத்து செய்ல்பட வேண்டும். நமது நாட்டில் தீண்டாமை ஒழிவதற்கு வேறு மார்க்கமும் இல்லை.
பிபிசி யிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள
http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/tnmuslims/tnmuslims_20121106-1746a.mp3
---------------------------------------------
பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:
ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.
ஆசிரியர்: எந்தக் காலேஜில்?
உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.
ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!
உமர்செரீப்: ஆமா கிடைச்சது.
ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?
உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.
இப்போது ஏன் இந்த முடிவு?
ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?
உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
மாஷா அல்லாஹ்...:)
அருமையான பதிவு...
சொல்ல வார்த்தைகள் இல்லை...
சலாம் சகோ சுவனப்பிரியன்,
இந்த மீனாட்சிபுரம் வரலாறு கொஞ்ச நாள் முன்பு உங்கள் தளத்தில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.அதற்க்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட மாற்றங்களை தெரிந்து கொள்ள கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதை உங்களிடம் சொல்லி பதிவாக போடா சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.
மாஷா அல்லாஹ் அதை நீங்களே பதிவாக போட்டு அசத்திவிட்டீர்கள் சகோ.
இந்தியாவில் ஜாதிகள் என்ற பெயரில் பிற்படுத்த பட்ட மக்கள் என்று கொடுமை இழைக்கப் படும் மக்களின் முன்னேற்றத்திற்கு இஸ்லாம் தான் சிறந்தது என்பதற்கு இதை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்கவே முடியாது.
மென் மேலும் அந்த மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து இந்த சமூகத்தில் தலை சிறந்தவர்களாக வாழக் கூடிய பாக்கியத்தை இறைவன் அவர்களுக்கு தந்து அருள் புரிவானாக.
எண்ணைக்கு தப்பி வாணலில விழுந்துட்டியே மச்சி
இஸ்லாமியர்களைப் போல
அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்
Posted by: Sudha Updated: Sunday, December 30, 2012, 12:02 [IST]
மதுரை: இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்.
இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம்.
கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.
இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம்.
இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும்.
மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.
நித்தியானந்தா வர மாட்டார் நித்தியானந்தா மீண்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் வரவே முடியாது.
அவரை மக்களுக்கும் பிடிக்கவில்லை, அரசுக்கும் பிடிக்கவில்லை, யாருக்குமே பிடிக்கவில்லை.
அவரை இளைய ஆதீனமாக நியமித்தபோது அவர் மீது வழக்குகள் குறித்து எனக்குத் தெரியாமல் போய் விட்டது.
மதுரை ஆதீனச் சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அருணகிரிநாதர்.
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/30/tamilnadu-all-women-should-war-burqa-insists-madurai-aadheenam-167079.html
நிச்சயம் இந்த நிலை மாறத்தான் வேண்டும். தான் என்னமோ பரம்பரை முஸ்லீம் போல் நினைப்பவர்கள் தன் முந்தைய நிலையை நினைத்து பார்த்தால் இந்த நிலை அகலும் இன்ஷா அல்லாஹ்...
அருமையான பகிர்வு
ஜஸக்கல்லாஹ் ஹைர்
இம்மாற்றத்தால் மக்களுக்கு நல்லது நடக்கிறதென்றால் அது நல்லவிடயம்தான் வரவேற்கத்தக்கது...முன்பு ஒரு நாள் பெரியாரும் இதே ஆயுதத்தைப்பயன்படுத்தியதாக அறிந்துள்ளேன்...சாதிவேற்றுமையை நீங்கள் நீக்கவில்லையாயின் அனைவருமே முஸ்லீம்களாகிவிடுவோம் என்று கூறியதாக அறிந்தேன்
மாஷா அல்லாஹ்..
படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது..
இன்ஷா அல்லாஹ்.. உதவுவோம், உறவாடுவோம் ரஹ்மத் நகரில் உள்ள நம் சகோதர சகோதரிகளுடன்..
Excellent article pala islaamiya thondu niruvanangal tamilagathil iyangi kondirukkirathu avai meenaathchi buram pondre paguthigalin paal gavanam seluthuvaargala TNDFT in arivagam pondre mu alla fathul qulub kalukkane samooga munnetra sarva kala salaigal tamilagathil adhigamaage thondruma ya rabbee
மதம் மாறிய தலித்களை 'தீட்டு கழிக்காமல்' 'பரிகாரம் செய்யாமல்' அரவணைத்துக்கொண்ட சுற்றுவட்டார முஸ்லிம்கள் (தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், அச்சன்புதூர், வடகரை) பாரபட்சம் காட்டாமல் திருமண உறவுகள் வைத்துக்கொண்டனர்.
கோயிலுக்குள் நுழையவும் - தங்களுக்காக தனிக்கோயில் கட்டிக்கொள்ளவும் - சேரி வீதிகளில் 'சாமி' வலம் வரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாமல் சட்டைப்போடுவதற்கு கூட போராடியவர்கள் - மதம் மாறியதும் 'தொப்பி போட்டுக்கொண்டு' ஜமாத் தலைவராக - பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினராக உலா வர முடிந்தது.
வேதங்களை கேட்கக்கூட அருகதையற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டவர்கள்,
ஒலி பெருக்கி மூலம் ஐவேளையும் தொழுகை அழைப்பு (பாங்கு) விடும் அதிசயம் நடந்தது. (இவைகள் மதம் மாறிய தலித்களை இஸ்லாமியர்கள் சமமாக நடத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களாக கருத தகுதியானவைகளா என்பதை வெ.சா போன்றவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்).
முஸ்லிம்களாக மதம்மாறினால் - இருக்கின்ற இட ஒதுக்கீட்டு சலுகைகள் எல்லாம் பறிபோய்விடுமென்று தெரிந்தும் –
மதமாறிய மீனாட்சிபுர தலித்களை, வளைகுடாவிலிருந்து வந்த ரூ 500- நோட்டுக்காகவும் - இஸ்லாமியர்கள் போட்ட 'பிரியானி' பொட்டலங்களுக்காகவும் தான் மதம் மாறினார்கள் என்று இந்துத்துவவாதிகள் வழக்கம்போல கொச்சைப்படுத்தினர்.
மதமாற்றம் பற்றி ஆய்வு செய்த ஆறுமுகம் கமிட்டி அறிக்கையில் - மதமாற்றத்திற்கு வளைகுடா பணமோ அல்லது 'பிரியாணி' பொட்டலங்களோ காரணமல்ல என்று அறிக்கை சமர்ப்பித்து வரலாற்று திரிபர்களின் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மதம்மாறிய தலித்கள் அரபு ஷேக்குகளைப்போல் - 'ஷோக்காக' வாழ்கிறார்கள் என்ற ஆர்ய சமாஜத்தினரின் கூப்பாடு 'கோயாபல்ஸ்' வகையை சார்ந்தது என்ற ஹிந்து நாளேடு 'மதம்மாறிய பின் தலித்களின் சமூக அந்தஸ்து உயர்ந்திருப்பது உண்மை - பொருளதார அந்தஸ்து உயரவில்லை' என்ற உண்மையை போட்டு உடைத்தது...
மீனாட்சிபுர மதமாற்றத்திலிருந்து தமிழக தலித் கிராமங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன தெரியுமா?
எப்பொதெல்லாம் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லையோ- அவர்களின் வசிப்பிடத்திற்கு தேவையான அடிபடை வசதிகள் மறுக்கப்படுகிறதோ - அவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறதோ
- அப்பொழுதெல்லாம் அவர்கள் எடுக்கும் ஆயுதமாக மாறியது
'இஸ்லாமியர்களாக மாறப் போகிறோம்" என்ற முழக்கம்.
முழக்கமிட்ட அடுத்த கனமே அரசு அதிகரிகளும் - IAS அதிகாரிகளும் விரைந்து வந்து வேண்டியதை செய்து கொடுத்தனர்.
இந்த ஆயுதத்தை கையிலெடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த வடநாதம்பட்டி தலித்களும் - காஞ்சி மாவட்டத்தை சார்ந்த கூத்திரம்பாக்கம் தலித்களும் வென்றெடுத்த உரிமைகள் பல.
SOURCE: THINNAI.COM
இந்திய அளவில் எங்கும் இந்த ஊரின் பெயர் எதிரொலிக்கிறது. ஏன் ? -
டிசம்பர் 6 ஐ மசூதியை இடிக்க தேர்ந்தெடுத்ததன் நோக்கம், அன்றுதான் இந்து மதத்திற்கு மிகப்பெரும் சவாலாய்த் திகழ்ந்த அம்பேத்கர் இறந்த நாள்.
இன்றைக்கு டிசம்பர் ஆறை அம்பேத்கருடன் நினைக்க முடியாமல் செய்து விட்டதே இந்துத்வா - அதுதான் தந்திர அரசியல்).
அது 1981. பெப்ரவரி மாதம். நெல்லை மாவட்டம் தென்காசி வட்டத்தின் குற்றால மலைச்சாரலை ஒட்டிய மீனாட்சிபுரம்.
இந்திய அளவில் எங்கும் இந்த ஊரின் பெயர் எதிரொலிக்கிறது. ஏன் ?
அங்கு தலித் மக்கள் கூண்டோடு இஸ்லாமுக்கு மாறினர்.
சங்கராச்சாரி ஓடி வந்தார்.
வாஜ்பாய்ி விரைந்து வந்தார்.
மதுரை ஆதீனம் என்ன திருப்பனந்தாள் மடம் என்ன..
அற நிலையத்துறை அமைச்சர் ஆர் எம் வீரப்பன் என்ன...
எல்லோரும் வந்து கெஞ்சினார்கள்.
தலைக்கு ஒரு லச்சம் தாரோம் திரும்பி வாங்க என்று...
எதற்கும் மசியவில்லை அம்மக்கள்..
சமத்துவம் இல்லா இம்மதத்தை விட்டு வெளியேறியதை சரி என்றே சொன்னார்கள்..
இந்து தர்மக் காவலர்களுக்கு அவமானம்.. அச்சம்.
இப்படியே விட்டால் சங்கராச்சாரியின் காலைக்கழுவி தீர்த்தம் பருகும் ஆட்கள் குறைந்து விடுவரே என்ற நியாயமான மன உளைச்சல் வேறு.
( 2 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறிய அம்மக்களை ம.க.இ.க. பேட்டி கண்டனர்.
அப்போதும் அவர்கள் சமத்துவ வேட்கை பற்றியே சொன்னார்கள்.
இழி நிலை மாற இஸ்லாம் சென்றதில் அவர்களுக்கு கோபம் ஏதும் இல்லை.
ஆதாரம்:- மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள 'பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் ' வீடியோ சி.டி.)
அந்த 'பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் ' வீடியோ சி.டி. இல் இஸ்லாத்துக்கு மாறிய தலித் கேட்கிறார்
'முஸ்லிமா மாறுனா பொண்ணு தர்ரேன்னு பாயிமாருங்க சொல்றாங்க. நீங்க பொண்ணு குடுப்பீங்களா ? ? '
இதற்கு என்ன பதில் சொல்வார் மலர்மன்னன் ?
ஒருவேளை இஸ்லாம் சென்ற தலித்கள் திரும்பவும் தாய் மதத்திற்கு திரும்புவாரேயாயின் அவர்களுக்கு சடங்கு செய்ய ஆரிய சமாஜிகள் மீனாட்சிபுரத்தில் ஒரு மண்டபம் கட்டி வைத்தனர்.
அது 25 வருசத்தில் ஒரு தடவை கூட பயன்படுத்தப் படாமல் நாய்கள் உறங்கும் இடமாய் இருப்பதைப் பார்க்கலாம் இன்னும்.
SOURCE: கற்பக விநாயகம் - IN THINNAI.COM
ஸ்டீபன்!
//http://www.youtube.com/watch?v=JDAtxnoWa7U
நீக்கப்படுவதற்கு முன்னால் பாருங்கள்.//
நீக்கப்படுவதற்கு அந்த காணொளியில் என்ன இருக்கிறது? முதலில் உங்களுக்கு உருது தெரியுமா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. அந்த காணொளியில் உள்ள பேச்சை தருகிறேன்:
'பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதன் பிறகு நடந்த மும்பை கலவரம், சிறுவர்களி சிறையிலடைப்பு, முஸ்லிம் பெண்கள் கலவரத்மில் கற்பழிப்பு இதெல்லாம் நடந்திருக்காவிட்டால் மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காது. இதை ஆரம்பித்து வைத்தது இந்துத்வ வெறியர்கள் இல்லையா?
அந்த குண்டுவெடிப்பை யார் செய்திரந்தாலும் அதனை நான் ஆதரிக்க வில்லை. ஏனெனின் இறந்தது அனைவரும் அப்பாவிகள். அப்பாவிகளை கொல்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
என்னை அமைதியாக பேசச் சொல்லி அறிவுறுத்துகிறீர்கள். நல்லது நான் அமைதியாகவே மாறி விடுகிறேன். அதற்கு முன்னால் இடித்த பாபரி மசூதியை கட்டித் தாருங்கள். எனது சகோதரிகளை கொலை செய்த கற்பழித்த கயவர்களை கூண்டில் ஏற்றி சிறையில் அடையுங்கள். செய்த தவறுகளுக்கு இஸ்லாமிய சமூகத்திடம் மன்னிப்பு கேளுங்கள். அதன் பிறகு இந்த உவைசி அமைதியாக வில்லை என்றால் ஏன் என்று கேளுங்கள்.
சார்மினார் முன்பு பள்ளிவாசலாக இருந்தது. ஐந்து நேரமும் அங்கு தொழுகை நடந்து வந்தது. அரசு சார்மினாரை கையகப்படுத்தியவுடன் அங்கு பாங்கு சொல்வது நிறுத்தப்பட்டது. சிறிது காலம் சென்று தொழுகையும் நிறுத்தப்பட்டு பூட்டு போடப்பட்டது. தற்போது அந்த சார்மினாருக்கு அருகில் புதிதாக சிலையை கொண்டு வந்து வைத்து கோவில் கட்டுகிறீர்களே! இதுதான் இந்து தர்மமா! காங்கிரஸூக்கு ஆதரவு கேட்கும் முஸ்லிம்களை பார்த்து கேட்கிறேன். இதுதான் மதசார்பற்ற நாடா இந்த கட்சிக்கு நாம் ஆதரவு தர வேண்டுமா?
அலஹாபாத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடில்லாத ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. அதில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 2000 மடடுமே. அடிலாபாத்தில் ஒதுக்கப்பட்டது வெறும் ஆறு வீடுகள் மாத்திரமே! இதுதான் மதசார்பற்ற நாடா?
அக்பர் உவைசியை கொன்று விட்டால் பிரச்னை முடிந்து விடாது. என்னை போன்ற ஆயிரம் உவைசிகளை இறைவன் உருவாக்குவான். முஸ்லிம்களே! உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். ஐந்து நேரமும் தொழுது கொள்ளுங்கள். நமது நாட்டில் நடக்கும் அநியாயயத்துக்கு ஒரு முடிவு கட்டச் சொல்லி இறைவனிடம் பிரார்த்தியுங்கள். திருமணம் ஆகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நமது சகோதரிகளுக்கு சீக்கிரம் திருமணம் முடிய பிரார்த்தியுங்கள். சினிமாவிலும், சாராயத்திலும், விபசாரத்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் நமது இளைஞர்களை நேர்வழிப்படுத்த இரு கரம் ஏந்தி பிரார்த்தனை செய்யுங்கள். நம் அனைவரின் பிரார்த்தனையையும் இறைவன் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்...'
எவ்வளவு அழகிய ஒரு பிரசாரத்தை நெஞ்சறிந்து எப்படி பொய் சொல்ல மனது வருகிறது ஸ்டீபன்? இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போதே இந்த கதை கட்டும் உங்களைப் போன்றவர்கள் ஆதாரமில்லாத இன்னும் பல விஷயங்களில் என்னவெல்லாம் புனைந்துரைப்பீர்கள் என்பதற்கு இது ஒன்றே ஆதாரமாக உள்ளது.
//13ஆவது நிமிடத்தில், நாங்கள் 25 கோடி மு்ஸ்லீம்கள், இந்துக்கள் நீங்கள் 100 கோடி பேர் இருக்கிறீர்கள். இருந்தால் என்ன? ஒரு பதினைந்து நிமிடம் போலீஸை விலக்கிக்கொள். அப்புறம் பார். நாங்கள் உங்களை கொன்றுதள்ளிவிடுவோம் என்கிறார். அது ஆச்சரியமில்லை.//
நீங்கள் குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் அனுப்பிய எந்த காணொளியிலுமே இல்லையே! மேலும் மேலும் பாவங்களை செய்ய வேண்டாம் ஸ்டீபன். நிறுத்திக் கொள்ளுங்கள். கண்ணன் ராமசாமி போன்ற நல்லுள்ளம் கொண்டவர்கள் வாழும் சமூகத்தில்தான் ஸ்டீஃபன் போன்ற நச்சு விததுக்களும் உலா வருகின்றன. இறைவன் தான் என் நாட்டை இந்த நாசகாரர்களிடமிருந்து காக்க வேண்டும்.
சகோ. சுவனப்பிரியன் அடிச்சி விளையாடியிருக்கிறீர்கள். நிறைவான பதிவு.
இது தொடர்பான எனது பதிவுகள்:
தலித் ஒரு நொடியில் ராவுத்தர் ஆகலாம்; அய்யங்கார் ஆக முடியுமா?
http://meiyeluthu.blogspot.com/2012/09/blog-post_30.html
தீண்டாமைக்கு இது தான் தீர்வு.. இது மட்டுமே தீர்வு. (காணொளி)
http://meiyeluthu.blogspot.com/2012/08/blog-post_19.html
சகோ ஆஷா ஃபர்வீன்!
//மாஷா அல்லாஹ்...:)
அருமையான பதிவு...
சொல்ல வார்த்தைகள் இல்லை...//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
சலாம் சகோ முஹம்மத்!
//மென் மேலும் அந்த மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து இந்த சமூகத்தில் தலை சிறந்தவர்களாக வாழக் கூடிய பாக்கியத்தை இறைவன் அவர்களுக்கு தந்து அருள் புரிவானாக.//
நமது மார்க்கத்தை நம்பி வந்து விட்ட அவர்களை சமூக அந்தஸ்து கொடுத்து அவர்களை குர்ஆனின் படி வாழ வைக்கும் பொறுப்பும் நம்மைச் சார்ந்தது. அதை ஏனோ பலர் மறந்து விடுகின்றனர்.
ஜெய்சங்கர்!
//எண்ணைக்கு தப்பி வாணலில விழுந்துட்டியே மச்சி//
கொதிக்கும் எண்ணை என்று உங்களைக் கூறிக் கொண்டதற்கு நன்றி!
சகோ உண்மைகள்!
//இஸ்லாமியர்களைப் போல
அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்//
மதுரை ஆதினத்தின் அருமையான செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி!
சகோ ஆமினா!
//நிச்சயம் இந்த நிலை மாறத்தான் வேண்டும். தான் என்னமோ பரம்பரை முஸ்லீம் போல் நினைப்பவர்கள் தன் முந்தைய நிலையை நினைத்து பார்த்தால் இந்த நிலை அகலும் இன்ஷா அல்லாஹ்...//
இன்ஷா அல்லாஹ் அகல வேண்டும். இஸ்லாத்தை ஏற்ற அந்த குழந்தைகளின் படிப்புக்கு நமது செல்வந்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.
திரு கிருத்திகன் யோகராஜா!
//இம்மாற்றத்தால் மக்களுக்கு நல்லது நடக்கிறதென்றால் அது நல்லவிடயம்தான் வரவேற்கத்தக்கது...முன்பு ஒரு நாள் பெரியாரும் இதே ஆயுதத்தைப்பயன்படுத்தியதாக அறிந்துள்ளேன்...சாதிவேற்றுமையை நீங்கள் நீக்கவில்லையாயின் அனைவருமே முஸ்லீம்களாகிவிடுவோம் என்று கூறியதாக அறிந்தேன்//
கடவுளை எதிர்த்த பெரியார் தலித்களின் விடிவு இஸ்லாத்திலேயே உள்ளது என்று அன்றே கணித்து சொன்னார். அது நிரூபணமாகி வருகிறது.
சகோ யாஸ்மின் ரியாஸ்தீன்!
//படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது..
இன்ஷா அல்லாஹ்.. உதவுவோம், உறவாடுவோம் ரஹ்மத் நகரில் உள்ள நம் சகோதர சகோதரிகளுடன்..//
கண்டிப்பாக நாம் அனைவரும் குடும்பத்தோடு சென்று அந்த மக்களை மகிழ்ச்சிப் படுத்துவோம்.
சகோ ஃபைஜி ஜமாலி!
//Excellent article pala islaamiya thondu niruvanangal tamilagathil iyangi kondirukkirathu avai meenaathchi buram pondre paguthigalin paal gavanam seluthuvaargala TNDFT in arivagam pondre mu alla fathul qulub kalukkane samooga munnetra sarva kala salaigal tamilagathil adhigamaage thondruma ya rabbee //
நமது இயக்கங்கள் தங்களுக்கும் போடும் சண்டையை கொஞ்சம் நிறுத்தி விட்டு அந்த மக்களின் முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யலாம்.
சகோ உதயம்!
//இது தொடர்பான எனது பதிவுகள்:
தலித் ஒரு நொடியில் ராவுத்தர் ஆகலாம்; அய்யங்கார் ஆக முடியுமா?
http://meiyeluthu.blogspot.com/2012/09/blog-post_30.html
தீண்டாமைக்கு இது தான் தீர்வு.. இது மட்டுமே தீர்வு. (காணொளி)
http://meiyeluthu.blogspot.com/2012/08/blog-post_19.html//
நீங்களும் அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
பிபிசி செய்தி பகிர்வுக்கு நன்றி சகோதரரே.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், டோம்பிவில்லில் இளம்பெண் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனில் தன் தந்தை மற்றும் சகோதரன் மீது கற்பழிப்பு புகார் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட, 19 வயதான அந்த பெண், போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:என் தந்தையிடமிருந்து தாய் விவாகரத்து பெற்று சென்றதும், தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, மகள் என்றும் பாராமல், தந்தையான மகேஷ் பிரசாத், தொடர்ந்து கற்பழித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, சகோதரனான ஹர்திங், 20, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.இவ்வாறு அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.
தந்தை மற்றும் சகோதரனின் பாலியல் கொடுமைகளை, இரண்டு ஆண்டுக்கு மேல் பொறுத்து வந்த பெண், மேலும் பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு புறப்பட்டு, டோம்வில்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அவரது நண்பர்களும், தன்னார்வ அமைப்புகளும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யும்படி ஆலோசனை கூறியதால், செயலில் இறங்கினார்.இதையடுத்தே, தந்தை மற்றும் சகோதரனின் இழிவான செயல் வெளியே தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
dinamalar
30-12-2012
சலாம் அண்ணன்...
// பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.//
இது தற்பொழுது மதம் மாறிய மீனாட்சிபுரத்தில் மட்டும் பிரச்சனையான விஷயம் அல்ல.. மாறாக ஒட்டு மொத்த தமிழகமும் அப்படித்தான்... இயல்பிலே பணக்காரர்கள் ஏழை வீட்டில் பெண் எடுக்க விரும்புவது இல்லை... இது மதம் மாறியதால் என்று சொல்வது அறியாமையே
எல்லார் மனமும் பக்குவப்படும் வரை இந்த ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாததே.... சில இடங்களில் மணமகன் விருப்பத்தின் பேரில் ஏழை பெண்களை கட்டிக்கொள்வார். ஆனால் அவர் வீட்டில் உள்ளவர்கள் அந்த பெண்ணை வார்த்தையால் கொல்லுவார்கள்... சோ இவை பொதுப் பிரச்சனை. மீனாட்சி புரத்துக்கு மட்டுமானது அல்ல...
Salam Sago nichayam islaamiya iykkiyam farlaane oru kadamai adhanaleeye 21 kum merpatta islaamiya iyakkangalin kootamaippum adhan samooga porattangalum varverkkathakka ondru
1 : nadandhu mudindha ullatchi therthalil kanisamaane idangalil muslim prethinithigalin vetri matrum kongu mandalathil kongu velalar katchiayai pinnukku thalli 3 idam pidithu saathanai
Ivai vidhakka patta vidhai dhan
2:perambalur il muslim civil sattam matrum muslim pengalin thirumana vayadhu sambathapatta uchaneethimandra theerpinai madhikkaamal kaidhu seyyapatta prambalur jamaat thalaivar , imaam avargaluku adharavanna islamiya kootamaipin poraatam thamilagatheye thirumbi paarka vaithathu idhan kaaranamaage avargalai oru thalaipatchamaaha kaidhu seidha muslim inspector suspend seyyapataar
3 : nabigal nayagam (sal) avargalin ganniyathai thootriya america thirapadathikku ethiraana islaamiya kootamaipin poraatam indhiyavayee thirumbi Paarka vaiythathu
Idhanal Chennai Anna salai il ulla america thootharagam pala naal mooda vendiya soolal erpattathu
4: Vijay naditha thippakki padathin sarchaikuriya sila kaatchigal neekkam islaamiya iyakkangalin iykkiyathukku valla allah kodutha vetri yaagum insha allah iniyum indha iykkiyam thodarum
ENNUDAYA ETHIRPAARPU ELLA KALANGALILUM INDHA IYKKIYAM PRETHIPALIKKA VENDUM KURIPPAAGA MU ALLAFATHUL KULOOB GAL VISAYATHIL.
Aanaal emadharumai kodana kodi islaamiya sondhangal bidhath aalum vahn naalum maarka arivu kuraivaalum tharpothaya ulamaakkalin nilayaalum idhu pondra kutrangal thodargirathu
Ivatrai padi padi yaaga kalai edukkalam inshaallah
1; nam veetil ulla bidhathgal
2: nam thayidam thanthaiyidam ulla varadhatchanai mogam
3: nam kudumbangalil nilavum sadangu sambirathayangal
4: ovvoru muslimidamum edhenum oru vagaiyil nilavi varum mooda kolgaigal jahliya unarvugal
5:arasa bayangaravaathm
6: porulaathara thekka nilai
7: arasiyal ilum velai vaypilum indhiya muslimgal purakkanippu
8: hindutva bayangaravaathm
Enum idhu pondra pretchanaigalai oru islaamiya iyakkathil ulla oru islaamiya sagotharan santhikkum precthanaigal oraaayiram
சலாம் சகோ சிராஜ்!
//இது தற்பொழுது மதம் மாறிய மீனாட்சிபுரத்தில் மட்டும் பிரச்சனையான விஷயம் அல்ல.. மாறாக ஒட்டு மொத்த தமிழகமும் அப்படித்தான்... இயல்பிலே பணக்காரர்கள் ஏழை வீட்டில் பெண் எடுக்க விரும்புவது இல்லை... இது மதம் மாறியதால் என்று சொல்வது அறியாமையே//
சரியாகவே சொன்னீர்கள்.
சுவனப்பிரியன் ///மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக ///
1981 இல் மத மாற்றம் நடந்தது .31 ஆண்டுகள் ஆகிவிட்டன
சுவனப்பிரியன் ///மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக ///
1981 இல் மத மாற்றம் நடந்தது .31 ஆண்டுகள் ஆகிவிட்டன
Excellent article. keep posting
மாஷா அல்லாஹ்...:)
அருமையான பதிவு...
சொல்ல வார்த்தைகள் இல்லை...
சகோதரா, தர விறக்கம் செய்ய முடியவில்லை play ஆகிறது. எனது கம்பியூட்டரில் தரவிறக்கம் செய்ய முடியாதா நீங்கள் இட்ட linksல்....உதவுங்கள்.
//சகோதரா, தர விறக்கம் செய்ய முடியவில்லை play ஆகிறது. எனது கம்பியூட்டரில் தரவிறக்கம் செய்ய முடியாதா நீங்கள் இட்ட linksல்....உதவுங்கள்.//
ஓபன் வித்தில் ஓகே கொடுத்து முதலில் செக் செய்து பாருங்கள். எனக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் டவுன்லோட் ஆகிறதே!
சகோ இப்றாகிம்!
//சுவனப்பிரியன் ///மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக ///
1981 இல் மத மாற்றம் நடந்தது .31 ஆண்டுகள் ஆகிவிட்டன //
வருகைக்கும் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி. 20 வருடங்களுக்கு முன் என்றாலும் அதில் தவறிருப்பதாக தெரியவில்லையே!
சகோ அர அல!
//மாஷா அல்லாஹ்...:)
அருமையான பதிவு...
சொல்ல வார்த்தைகள் இல்லை...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மாஷா அல்லாஹ்...:)அருமையான பதிவு...சொல்ல வார்த்தைகள் இல்லை...//நன்றி
மாஷா அல்லாஹ் தொடர்ந்து அருமையான பதிவுகளை தருகிறீர்கள். இன்னும் உற்சாகத்துடன் தொடருங்கள் சகோ.
Post a Comment