Followers

Showing posts with label ஊடகத்துறை. Show all posts
Showing posts with label ஊடகத்துறை. Show all posts

Friday, July 03, 2015

சவுதியில் பாறை நகருகிறதாம் - தினகரனின் புருடா.... :-)



ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் மட்டும் சுமார் 30 நிமிடங்களுக்கு மிதக்கும் விசித்திர பாறை !!

சவுதி அரேபியாவில் AL-Hassa பகுதியில் ஒரு பெரிய பாறையொன்று ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சுமார் 30 நிமிடங்களுக்கு தரையிலிருந்து 11 செண்டி மீட்டர் உயரத்தில் மிதக்கிறதாம். 1989ல் ஏப்ரல் மாதம் அதாவது 17 வருஷத்துக்கு முன்பு இந்த பாறைக்கு பின்னால் ஒரு தீவிரவாதி ஒளிஞ்சிருந்ததாகவும் அவனை போலீசார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக கூறுகின்றனர்.இப்பவும் அந்த பாறையில் ரத்தக்கறைகளை கானலாமெனவும், கல் மேலே உயரும் போது அந்த கறை கறுத்து ஈரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஊர் மக்கள் அதை அழிக்க முயன்றதாகவும்... அழித்தாலும் அது பின்னர் தோன்றியதாகவும் கூறுகின்றனர்.

தகவல் உதவி
தினகரன் நாளிதழ்

சுத்த பொய். ஒரு சிறந்த நாளிதழ் இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிடலாமா? இஸ்லாத்தை மேன்மைபடுத்தி எத்தனையோ செய்திகள் தினம் வந்து கொண்டிருக்க இந்த செய்தியை தேடிப் பிடித்து போடுவதன் மூலம் இஸ்லாம் பத்தோடு பதினொன்று என்பதை வாசகர்களுக்கு காட்டி முட்டாளாக்குவதானேயொழிய வேறொன்றுமில்லை.

சவுதி அரேபியாவில் 25 வருடம் வேலை பார்க்கும் எனக்கு இந்த செய்தியை யாரும் சொன்னதில்லை. அல் ஹஸாவுக்கும் சென்றுள்ளேன். அப்படி ஒரு பாறையை நான் கண்டதில்லை. அதற்கு சொல்லப்பட்ட கதையையும் நான் கேட்டதில்லை. இணைய தளத்தில் போட்டதை எடுத்து தினகரன் போட்டுள்ளது. அதற்கு சவுதி அரசின் ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

வெப்ப விரிசலால் சில நேரம் பாறைகள் விரிவடைவதால் சிறிது அசைவுகள் ஏற்படலாம். இது நம் நாட்டிலும் ஏற்படும். நகரும் கற்களை நாமும் படித்திருக்கிறோம். அதற்கு அறிவியல் காரணங்கள் உண்டு. அது போன்று ஆய்வு செய்து போடாமல் இஸ்லாத்தின் பெயரால் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதை தினகரன் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

http://www.dinakaran.com/Gallery_Detail.asp…

Monday, May 04, 2015

நேபாளில் அசிங்கப்பட்ட இந்திய பத்திரிக்கைத் துறை!



கரை படிந்த நமது ஊடகத் துறை நேபாளிலும் சென்று தனது சுய புத்தியைக் காட்டியுள்ளது. இதனால் வெகுண்டெழுந்த நேபாள மக்கள் இந்திய பத்திரிக்கையாளர்களை நேபாளத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கின்றனர். வெளி நாடுகளில் உதவிகள் வந்தாலும் அதிலும் தங்களின் இந்துத்வா மோகத்தை விட்டுக் கொடுக்காமல் 'மாட்டுக் கறி' என்று பிரச்னையை திசை திருப்பி விட்டுள்ளனர். இதனால் உதவிகள் வருவதும் சில நாடுகளால் நிறுத்தப்பட்டது. இந்தியா செய்து வரும் சிறிய உதவிகளும் இந்திய மீடியாக்களால் பூதாகரமாக காட்டப்படுகின்றன. மோடியின் ஆர்டராக இருக்கலாம் :-) பல தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த மக்கள் இந்திய மீடியாக்களின் இது போன்ற செயல்களால் கோபமடைந்து இந்திய பத்திரிக்கையாளர்களை வெளியேற நிர்பந்திக்கின்றனர்.

ட்விட்டரில் #gohomeindianmedia என்ற வாசகமானது மிக பிரபலமாகி உள்ளது. இங்கு சென்று நமது பத்திரிக்கைத் துறையை உலக மக்கள் வறுத்தெடுப்பதை காணலாம். :-)

வெளி நாட்டுக்கு சென்று ஒட்டு மொத்தமாக அசிங்கப்பட்ட மீடியா நமது மீடியாவாகத்தான் இருக்கும். :-)

Sunday, May 03, 2015

பாகிஸ்தான் மாட்டுக் கறியை மட்டும் உதவியாக தந்ததா?





பாகிஸ்தான் அரசு நேபாளத்தக்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களில் மாட்டுக் கறியும் கலந்து இருந்ததாக இந்திய பத்திரிக்கைகள் குற்றம் சாட்டியிருந்தன. இதனை மறுத்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் உயர் அதிகாரி தஸ்னிம் ஆலம் தனது மறுப்புரையில் 'இந்திய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை உதவி வழங்குதலிலும் ஏற்படுத்தியுள்ளன. பலதரப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் 'பீஃப் மசாலா'. அந்த பாக்கெட்டின் மேல் தெளிவாக 'பீஃப் மசாலா' என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாங்கள் அனுப்பிய உணவுப் பொருட்கள் மிகவும் ருசியாக இருந்ததாகவும் மேற் கொண்டு உதவியும் தேவைப்படுவதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்து இருக்க தேவையற்ற சர்ச்சையை இந்திய ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன' என்று வருத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவுப் பட்டியலில், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன. அதில் அரிசி, உணவு, கோதுமை, ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் 'பீஃப்' மசாலா. மேற்படி உணவுப் பட்டியலில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் இது இன்ன பொருள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியை சாப்பிடுவார்களோ அதேப்போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டி திருவிழா நடத்துவார்கள்.

உணவுக் கிடைக்காமல் உயிர் வாழவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான நேரத்திலும் மதத்தை நுழைத்து அதில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் இந்துத்வாதிகளின் மனோ நிலையை என்னவென்பது?

Thursday, January 15, 2015

இஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்லாத்தை ஏற்றார்!





ஃப்ரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியீட்டாளர் இஸாபெல் மேடிக் (ISABEL MATIC) தனது மன மாற்றத்தைப் பற்றி தனது தளத்தில் கூறியுள்ளார். இனி அதனை பார்போம்.

'எனக்கு இஸ்லாத்தைப் பற்றி முன்பு எதுவும் தெரியாமல் இருந்தது. முகமது என்பவர் யார் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ள முன்பு எனக்கு அவசியம் ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு 'சார்லி ஹெப்டோ' பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையும் அதற்கான காரணத்தையும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு மனிதருக்கு இவ்வளவு ஆதரவா? அதுவும் ஃப்ரான்ஸில் அவரை கருத்துச் சித்திரமாக வரைவதை இந்த அளவு பிரச்னையாக்குவது ஏன்? அவர் யார்? அவரது வரலாறு என்ன? என்று தேட ஆரம்பித்தேன். முடிவில் இஸ்லாம் என்னை ஈர்த்து விட்டது. இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.'

'எனது இந்த மன மாற்றத்தை ஜோர்டான் பத்திரிக்கையிலும் பிரசுரித்து இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவிய எனது நண்பர் ஹிஸாமுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனது தோழி லைலா அருமையான உணவு பரிமாறி என்னை மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. பலரும் பள்ளி வாசலினுள் என்னை கவுரவித்தனர். இஸ்லாத்தின் முதல் தூணான 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' 'இறைவன் ஒருவனே! அந்த இறைவனின் தூதராக முகமது நபி அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்' என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனது பெயரையும் ஜொஹரா என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்' என்று மிக மகிழ்வோடு தனது தளத்தில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் சகோதரி இஸாபெல் மேதிக்.

முகமது நபியின் கார்டூனை காரணமாக வைத்து கொலைகளை நடத்தி இஸ்லாத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த யூதர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களின் அந்த நிகழ்வே இஸ்லாம் மேலும் ஃப்ரான்ஸில் வலுவடைய காரணமாகியுள்ளது.

யூதர்களும் சூழ்ச்சி செய்தார்கள்: இறைவனும் சூழ்ச்சி செய்தான்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
இஸாபெல் மேதிக்கின்(ISABEL MATIC) முக நூல் பக்கம்.

Tuesday, January 13, 2015

சார்லி ஹெப்டோ விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்டாராம்!



சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தாக்குதலை விசாரித்து வந்த அதிகாரி ஹெல்ரிக் ஃப்ரைடோ தற்கொலை செய்து கொண்டதாக தற்போது செய்தி வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட அன்று துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தவர்களில் ஒரு குடும்பத்தவரோடு விசாரணை நடத்தி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் உண்மையான சூத்திதாரிகள் யார் என்பதன் அறிக்கையை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே இந்த நிகழ்வு நடந்துள்ளது. அவருடைய சொந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு இறந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது.

இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அரசு தரப்பில் வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அனால் இது நம்பும்படி இல்லை.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துப்பாக்கி சூட்டின் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்ததால் எதிரிகள் அவரது துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றார்களா?

அல்லது ஒட்டு மொத்த உலகமும் முஸ்லிம்களை குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அதற்கு நேர் மாறாக இந்த துப்பாக்கிச் சூட்டின் சூத்திதாரிகள் வேறு நபர்கள் என்ற உண்மை தெரிந்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா?

இவரது தற்கொலையை ஃப்ரான்ஸ் இத்தனை நாள் மூடி மறைத்தது ஏன்? யாரைக் காப்பாற்ற இந்த நாடகம்?

பத்திரிக்கை சுதந்திரம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் இந்த கொலையை மூடி மறைத்ததை பற்றி வாய் திறக்காதது ஏன்?

பத்திரிக்கை அலுவலம் தாக்கப்பட்டு முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டதால் பலனடைந்த சமூகம் யார்?

இது பற்றி ஃப்ரான்ஸ் அரசாங்கம் திறந்த மனதோடு விசாரணையை முடுக்கி விடுமா?

எப்படியோ உலக மக்களின் பெரும்பான்மை கூட்டு மனசாட்சியின் படி குற்றவாளிகளாக முஸ்லிம்களும் இஸ்லாமும் சித்தரிக்கப்பட்டு விட்டது. இப்படித்தான் அப்சல் குருவை தூக்கில் போடும் போது நீதிபதி சொன்னார். :-) குற்றம் செய்தவர்கள் ஹாய்யாக வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு ஒரு நீதி: இஸ்லாமியர்களுக்கு கூட்டு மனசாட்சியின் படி நீதி என்பது இந்தியாவையும் தாண்டி உலகமனைத்திற்கும் இது பொது விதியாக்கப்பட்டு விட்டது. நீதித் துறையின் லட்சணம் இதுதான்.

தகவல் உதவி
அல்அரபியா, மிர்ரர்
12-01-2015

Thursday, December 04, 2014

திருப்பி திருப்பி ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கேட்பியா - கார்ட்டூன்



மனைவி: 'பெண்கள் பதிவுகளாக பார்த்து பார்த்து இனி தேவையில்லாம லைக் போடுவியா?

கணவன்: மாட்டேன்... மாட்டேன்...

மனைவி: 'அவுங்க இன்பாக்ஸ்ல போய் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பி இனி கடலை போடுவியா?

கணவன்: 'மாட்டேன்....மாட்டேன்'

மனைவி: 'அவுங்க விரும்பாவிட்டாலும் திருப்பி திருப்பி ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கேட்பியா'

கணவன்: ஐயோ.... இனி நான் ஃபேஸ் புக்கையே திறக்க மாட்டேன். இது சத்தியம். இனி அடிக்காதே!....

Monday, August 25, 2014

ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்!



'ஐசிஐஎஸ் அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்புங்க மக்களே... நம்புங்க' -ஒபாமா

-------------------------------------------------------------

நான் முன்பே எழுதியது போல் ஐசிஐஎஸ் அமைப்பானது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு என்பதற்கு ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. சகோதரர் கலையரசனும் இதே கோணத்தில் எழுதியுள்ளார்.....

2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?

ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப் படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில் பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்? எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவது அமெரிக்காவுக்கு பெரிய வேலையே அல்ல. ஆனாலும் அவர்கள் காரியம் முடியும் வரை செய்ய மாட்டார்கள். :-)

முன்பு தாலிபான்களை வளர விட்டு ரஷ்யாவுக்கு நெருக்கடியை கொடுத்தனர். பிறகு வேலை முடிந்தவுடன் தாலிபான்களை அழிக்கிறோம் என்று சொல்லி ஆப்கனை ஆக்கிரமித்தனர். அதே போல் சிரியாவுக்கும், ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் நெருக்கடி கொடுக்க ஐசிஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்தனர். அவர்களின் வேலை முடிந்தவுடன் 'தீவிரவாதிகளை அழிக்கிறோம்' என்ற பெயரில் ஈராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கடையை பரப்பி ஆயுத வியாபாரத்தை ஜோராக நடத்த ஆரம்பிப்பர். இதன் கடைசி கட்டம் தான் ஐசிஐஎஸை ஒழிக்க போகிறோம் என்று அமெரிக்கா களம் இறங்கியிருக்கிறது.

நமது நாட்டிலும் நமது உளவுத்துறை 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற கற்பனை அமைப்பை உருவாக்கி அனைத்து தீவிரவாத செயல்களையும் ஊக்குவித்து பழியை அந்த அமைப்பின் மேலும் அப்பாவி இஸ்லாமியர்கள் மேலும் போட்டு வந்ததை நாமெல்லாம் அறிவோம். அரசு மட்டத்தில் இஸ்ரேலின் மொசாத் பல உதவிகளை நமது ராணுவத்துக்கு செய்து வருவதும் நாம் அறிவோம். அதே ஃபார்முலாதான் ஈராக்கிலும், சிரியாவிலும் செயல்படுத்தப்படுகிறது.

உசாமா பின் லாடனை வேலை முடிந்தவுடன் எவ்வாறு கொன்றார்களோ அதே போல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதிக்கும் அந்த நிலைமையே வரலாம். அமெரிக்க, யூத அரசியல் பகடைக் காயில் அடுத்த விட்டில் பூச்சி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பென்றால் மிகையாகாது.

ஐசிஐஎஸ்ஸை அமெரிக்கா வளர்த்து விட்டதால் இஸ்லாத்தின் பெயரையும் களங்கப்படுத்தி அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதை இதன் மூலம் தடுக்க முடியும். ஈராக்கிலும், சிரியாவிலும் தனது ராணுவத்தை நிலை நிறுத்தி பல ஆண்டு காலம் அந்நாட்டு செல்வங்களை கொள்ளையடிக்கவும் முடியும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Monday, October 07, 2013

இல்லாத மதத்தின் பெயர் இந்து!

இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்

’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.


இந்து மதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.

சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல.

சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது.

சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது.


‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication)

ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்)

சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும்.


அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை.

இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன.

ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.

இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர்.

ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.

பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.

பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.

பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.

பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.

கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.

கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.


கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.

சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.


தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.

பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.

இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.

இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!

சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.

ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.

இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.

புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.


சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.

வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.

உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.

தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.

தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.

சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!

ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.


நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன.

- ம.செந்தமிழன்

Friday, August 09, 2013

தமிழகத்தில் தொடரும் 'இந்து இயக்கத்தவரின்' கொலைகள்!

தமிழகத்தில் தொடரும் 'இந்து இயக்கத்தவரின்' கொலைகள்!



தற்போது தமிழகத்தில் பரவலாக பேசப்படும் ஒரு செய்தியாக 'இந்து தீவிரவாத' அமைப்புகளின் உறுப்பினர்கள் கொல்லப்படுவதை முன்னிலைப்படுத்துவதைப் பார்க்கிறோம். நிலத் தகராறு, பெண் தகராறு, பணத் தகராறு, குடி போதையில நிகழும் தகராறுகள், காதல் தகராறுகள், என்று தினமும் பத்திரிக்கைகளில் நாம் கொலைளை பார்த்து வருகிறோம். ஆனால் கொல்லப்படுபவர் இந்து தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவராக இருந்தால் அதற்கு மத சாயம் பூசப்பட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் விநோத காட்சிகள் தற்போது நடந்து வருகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது. எத்தனை முறை முயற்சித்தாலும் தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக காலூன்ற முடியவில்லை. இந்த முறை எப்படியும் இரண்டு மூன்று சீட்டுகளாகவது பெற்று விட வேண்டும் என்று ஆலாய் பறக்கிறது பாஜக. அதற்கு இந்துக்களை எப்படி ஒன்றாக்குவது? சாதிகளாலும், மொழிகளாலும் பிரிந்து கிடக்கும் அவர்களை முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி ஒன்றாக்க முயற்ச்சிக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே முடியும் என்பதை பாவம் ஏனோ உணருவதில்லை. சகோதர இந்து மக்களின் பெரும் பான்மையோர் 'இந்து தீவிரவாத' அமைப்புகளைப் பற்றிய சரியான புரிதலிலேயே உள்ளனர். இந்த கொலைகளெல்லாம் யாரால் நடத்தப்படுகிறது? என்ன காரணத்துக்காக நடத்தப்படுகிறது? என்பதை பெரும்பாலான இந்துக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

தற்போதய ஜெயலலிதா அரசும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று ஃபைலை க்ளோஸ் செய்யாமல் முக்கிய குற்றவாளிகளை, உண்மை குற்றவாளிகளை கைது செய்வதில் முனைப்பு காட்டுவது வரவேற்கத் தக்கது. இந்த நிலை தொடர்ந்தாலே இது போன்ற அரசியல் லாபங்களுக்காக செய்யப்படும் கொலைகள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இந்து இயக்கங்களின் அழுத்தத்தால் பெயருக்கு சில முஸ்லிம்களை கைது பழைய படலமும் ஆங்காகங்கே தொடரத்தான் செய்கிறது.

அடுத்து இஸ்லாத்தை வளர்க்க இது போன்ற கொலைகளை ஜிஹாதிகள் செய்வதாக தமிழ் இந்து தளத்தில் பார்த்தேன். இஸ்லாத்தை இது போன்ற கொலைகளை செய்து வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. அது முஸ்லிம்களுக்கு தேவையும் இல்லை. இந்து மதத்தில் உள்ள சாதிப் பிடிப்பை தினமும் அனுபவிக்கும் பலர் அதில் இருந்து விடுதலையாக தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்பதுதான் தினமும் நடந்து வருகிறது. மதம் மாறிய அன்பர்களைக் கேட்டாலே மிக அழகாக சொல்வர்.

அடுத்து தஞ்சையிலும் நாகை மாவட்டங்களிலும் அக்ரஹாரங்கள் எல்லாம் இஸ்லாமிய தெருக்களாக மாறுவதாகவும் இதை தடுக்க வேண்டும் என்றும் அங்கு பலர் பின்னூட்டம் இட்டிருந்தனர். அரசு செலவில் இலவசமாக படித்து விட்டு டாலருக்கும் பவுண்டுக்கும் ஆசைப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்ததால் கிராமத்தில் உள்ள அம்பிகளின் வீடுகளை நல்ல விலை கொடுத்து முஸ்லிம்கள் வாங்குகின்றனர். இதற்கு ஏன் இததனை கூப்பாடு? அக்ரஹாரத்தில் இதுவரை உள்ளே வர தலித்களை அனுமதிக்காமல் இருந்தனர. முஸ்லிம்கள் பல இடங்களை வாங்கியவுடன் தற்போது தலித்கள் மிக சுதந்திரமாக அக்ரஹாரத்துக்குள் வலம் வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம் அல்லவா! சமூக ஆர்வலர்கள் இந்த மாற்றத்தை கண்டு ஆச்சரியமடைகின்றனர். இது மேலும் தொடர வேண்டும். இந்த முறையிலாவது தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கம்.

----------------------------------------------

சமீபத்தில் நடந்த பாஜக பிரமுகர் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களின் பத்திரிக்கை செய்தியை இனி பார்ப்போம்.

சேலம் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் பெண் உட்பட மூன்றுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் முருகன் (வயது 45). இவர் கன்னங்குறிச்சி 6–வது வார்டு கிளை கழக தலைவராக இருந்து வந்தார்.மேலும் இவர் அதே ஊரில் கறிக்கடையும் நடத்தி வந்தார்.

இந்த கொலை குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து இந்த கொலை தொடர்பாக கன்னங்குறிச்சியை சேர்ந்த அங்காயி, ராஜா, செல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

முருகனுக்கு கன்னங்குறிச்சி புதுஏரிப்பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இவருக்கும், உறவினர்கள் சிலருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. எனவே இந்தக் கொலை நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

--------------------------------------------

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் கூலிப்படை ஈடுபட்டு இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கொலை வழக்கு சம்பந்தமாக சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து தனிப்படை போலீஸ் உயரதிகாரி கூறுகையில், Ôஇந்த கொலை வழக்கு சம்பந்தமாக அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி முரளியை (27) தேடி வருகிறோம். அவர் சேலம் பகுதியில் கூலிப்படையை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது என்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னதானப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை உட்பட முரளி மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன.
(நன்றி தினகரன்)

இன்றைய சூழலில் தற்போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? பெரும்பான்மையான இந்து நண்பர்கள் நம்மோடு நட்போடு இருக்கவே விரும்புகின்றனர். எனவே இந்துத்வாவாதிகள் பரப்பும் அவதூறுகளை தக்க சான்றுகளோடு இந்து மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும். நம்மிடம் ஊடக வசதி அந்த அளவு இல்லை. எனவே தனி நபர்களாக ஒவ்வொரு கிராமங்களிலும் நகர்களிலும் நமக்கு பழக்கமான இந்துக்களிடம் இந்துத்வா வாதிகளின் தீவிரவாத செயல்களை முடிந்தமட்டும் அம்பலப்படுத்த வேண்டும். முஸ்லிம்களின் மேல் உள்ள கசப்பை நமது அன்பினால் களைய வேண்டும். இதுவே தற்போது நம்முன் உள்ள முக்கியமான பணி.

------------------------------------------

inneram.com

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை எதிர்ப்பின்றி கொண்டு வரவே மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களை நிறைவேற்றியதாக சதீஷ் வர்மா கூறியதாக மணி கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற (13.12.2001)ஒரு சில தினங்களிலேயே பொடா சட்டமும் மும்பை தாக்குதல் (26.11.2008) நடைபெற்ற உடன் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர் தீவிரவாதிகள் எனும் ஐபி-யின் அறிக்கை பொய்யானது என்று சதீஷ் சர்மா கருதியதாகவும் மணி கூறினார். இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பாக உள்துறை தயாரித்த அறிக்கையானது சர்ச்சைக்குரிய ஐபி அதிகாரி ராஜேந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சர்மா கருதியதாகவும் மணி தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஐபி அதிகாரி ராஜேந்தர் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர முடிவானதும், உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் கேடர் அதிகாரியான சதீஷ் வர்மா சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஜுனுகாத் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக தற்போது இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------

முடிவாக தீவிரவாதம் அது எங்கிருந்து வந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் ஒரு நேர்மையான முஸ்லிம் தீவிரவாதத்துக்கு துணை போக மாட்டான். தவறுதலாக நம்முடைய ஒரு சில சகோதரர்கள் தவறாக யாராலாவது வழி நடத்தப்பட்டிருந்தால் அவர்களை திருத்த முயற்சிக்க வேண்டும். திருந்தாதவர்களாக தோன்றும் பட்சத்தில் அவர்களை சட்டத்தின் பிடியில் நாமே கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாமும் அதைத்தான் விரும்புகிறது.



Wednesday, April 17, 2013

ஆரம்பிச்சுட்டாங்கய்யா....பெங்களூரில் குண்டு வெடிப்பாம்!

சில நாட்களுக்கு முன்பு கோவையில் இந்து கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் வீட்டில் அதிகாலையில் வெடி குண்டு வீச்சு. தற்போது பெங்களூரில் பாஜக அலுவலகம் முன்பு குண்டு வெடிப்பு. ஆச்சரியமாக இந்த குண்டு வெடிப்பிலும் உயிரிழப்பு இல்லை என்பதை கவனிக்கவும். குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுக்கு இந்த செய்தியை மீடியாக்கள் மூலம் பலரையும் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. ஒருக்கால் இதனை எந்த பெயர்தாங்கி முஸ்லிம் குழுக்களாவது செய்திருக்குமானால் சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனை எதுவோ அதனை விரைவாக தர வேண்டும். இனி செய்தியை பார்ப்போம்.



பெங்களூரு : பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காரில் இருந்து வெடிகுண்டு நிகழ்ந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ.க, தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் திடீரென வெடித்து சிதறி உள்ளது.

குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ.க, வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரு குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஷகீல் அஹமதின் வாதத்தை நாம் ஒதுக்க முடியாது. ஏனெனில் ஊழலாலும் உட்கட்சி தகராறுகளாலும் பிஜேபி இனி ஆட்சியை பிடிக்க முடியாது என்பது தெளிவாகவே அவர்களுக்கும் தெரிந்துள்ளது. இந்த நிலையை மாற்ற ஊழல்களை மறைத்து உட்கட்சி பூசல்களையும் மறைக்க இந்த குண்டு வெடிப்பு பிஜேபிக்கு நன்றாகவே கைக் கொடுக்கும். இதன் மூலம் இந்துக்களின் ஓட்டுக்களை சிதறாமல் அள்ளலாம் என்பது இவர்களின் திட்டம். இந்த வகையில் போலீஸார் விசாரித்தால் உண்மை குற்றவாளிகள பிடிபடுவார்கள். பிஜேபி ஆட்சியில் இது சாத்தியப் படுமா! யாராவது பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெயர்தாங்கி முஸ்லிமை பிடித்து 'பாகிஸ்தான் ஆதரவோடு வெடி குண்டு வைத்த தீவிரவாதி கைது' என்று பத்திரிக்கைகளில் நாளை செய்தி வரும். ஆனால் உண்மை நிலவரங்களை த்றபோது பெரும்பாலான இந்துக்களும் உணர்ந்தே வருகின்றனர்.

எனவே இந்த நாட்டை முன்னேற்றுவதறகு சிறந்த திட்டங்களை தீட்டி அதைச் சொல்லி பிஜேபி ஆட்சியைப் பிடிக்கட்டும். இனிமேலும் குண்டு வெடிப்புகளை நிகழ்ததி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க கனவு காண வேண்டாம். இது தொடர்ந்தால் இந்துக்களாலேயே இவர்கள் ஓரம் கட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

--------------------------------------------------------

AHMEDABAD: Gujarat's VHP leadership is up in arms against Gujarat government's decision to seek death penalty for former state minister Maya Kodnani and nine others in connection with the 2002 Naroda Patiya massacre case.

"VHP strongly condemns the reported decision of the Gujarat government to seek death penalty for Maya Kodnani, Babu Bajarngi and other Hindus sentenced in the Naroda case," Gujarat VHP general secretary Ranchhod Bharwad told reporters here on Wednesday.

http://timesofindia.indiatimes.com/india/VHP-up-in-arms-against-Modi-govt-opposes-move-to-seek-death-penalty-for-Kodnani/articleshow/19600825.cms

கலவரம் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்ய உதவியவர் மோடி என்பது நமக்குத் தெரியும். தற்போது இந்த வழக்கிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ள முஸ்லிம்களை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க மோடி அரசு பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி,பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு திடீரென ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த வழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி ஆளும் நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

இதற்காக மாநில அரசு, மூன்று நபர் சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி குஜராத் அரசு சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக தம்மை பாஜக முன்னிறுத்தினாலும் குஜராத் கலவரங்களை காரணம் காட்டி தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நரேந்திர மோடி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மாயா கோட்னானியைப் பொறுத்தவரையில் மோடியின் மிக நெருங்கிய ஆதரவாளர்தான்... ஆனாலும் தம் மீதான கறையைத் துடைத்தாக வேண்டிய நிலையில் மாயா கோட்னானியை பலி கொடுக்கும் முடிவை எடுத்திருக்கிறார் மோடி.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தனது ஆட்களையே பலிகடா ஆக்கவும் இந்த இந்துத்வாவாதிகள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. என்னதான நல்லவர் வேஷம் தற்போது கட்டினாலும் குஜராத் கூட்டுக் கொலையில் மோடியின் பங்கை மறைக்க முடியாது. இன்றில்லா விட்டாலும் வருங்காலத்திலாவது அதற்கான தண்டனையை மோடி அனுபவிக்க வேண்டும். நடுநிலைவாதிகள் எதிர்பார்ப்பதும் அதைத்ததான்.

---------------------------------------------------------------
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சில வாசகர் கடிதங்கள்...


criss (Sydney ) said.....
When the day comes and election results come Modi will be the biggest joke of the century as Advani was. I am a Hindu and I don't support Modi. I don't mind Advani or Sushma or Jaswant Singh but no to Modi, he is a arrogant politician

------------------------------------------
prasoon chudry said....
Hindus to not support these terrorist, VHP and RSS who wants to be the Taliban for Hindus. Neither Hindus are medieval narrow minded community stuck in time by any old dogma or book. Even though the Hindu rituals looks very ancient and stuck in stone age, the reality is he leaves the religion once he is out of the temple after 10 min of mindless ritual. You can guess how much Hindus appreciate these rituals from the fact that they would pay extra to the priest to finish the ritual by taking shortcut. This is the reason BJP never crossed more than 150 mark in parliament now even 100 looks a impossible task for them. One thing I like about India is the secular democracy even though we are a super corrupt nation we have been successful in preserving the secular democracy. India needs to handle these terrorist with heavy hand and give them maximum sentence. There is no place for such elements in Indian society it not like barbarian Bedouin tribes of middle east we are a progressive nation we have to move forward and remove these weeds.

------------------------------------------
mksh dubai said....
Now the nation understands why Modi was called 'maut ka saudagar'. 3000 deaths to win three Gujarat assembly elections in a row. Now a few more deaths of his own soldiers to stake the claim for the top job of the country. Modi is truly a good businessman. Jay Modi.

Monday, April 08, 2013

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்.

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்.



இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!

மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.

அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!

எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் ‘அதுவாக இடிந்துவிட்டது’ என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.

ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.

பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.

பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.

இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.

கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.

ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.

பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.

தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?

பாலபாரதி , MLA

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)

Monday, March 25, 2013

உண்மையின் உரைகல் உதிர்த்த பொய் செய்தி!

உண்மையின் உரை கல் என்ற பெயரில் தினமலர் எவ்வளவு சாமர்த்தியமாக செய்திகளை வெளியிடுகிறது என்பதற்கு நேற்றைய செய்தியே உதாரணம். லியாகத் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், பெரும் நாசம் விளைவிக்க இருந்தது இந்த கைதால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அடுத்த நாளே அந்த பொய் செய்தி காஷமீர் போலீஸாரால் வெளிக் கொணரப்பட்டது. அந்த செய்தியை இனி பார்ப்போம்.



டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது....!!!

டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.

தீவிரவாத அமைப்புகளிலிருந்து வெளியேறி போலீஸ் அல்லது ராணுவத்தின் முன்னால் சரணடையும் போராளிகளுக்கு ஊக்கமளிக்கும் கஷ்மீர் அரசின் ’சரண்டர் அண்ட் ரிஹாபிலேஷசன் பாலிசி’ அடிப்படையில் லியாகத் இந்தியாவுக்கு வந்துள்ளார். போராளிகளின் பின்னணி மற்றும் விபரங்களை பரிசோதித்த பிறகே சரணடைய அனுமதி வழங்கப்படும்.இதனடிப்படையில் அதிகாரிகளுக்கு தெரிந்தே லியாகத் டெல்லிக்கு வந்துள்ளார்.

பாகிஸ்தானில் ஹிஸ்ப் போராளியான லியாகத் சரணடைய தயாராக உள்ளார் என்று கூறி அவரது மனைவியும் குப்வாராவைச் சார்ந்தவருமான அமீனா பேகாம் 2011-ஆம் ஆண்டு கஷ்மீர் அரசுக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். இதனடிப்படையிலேயே லியாகத்திற்கு சரணடைவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.லியாகத்தும் அவரது 2-வது மனைவி அக்தர் நிஸாவும், மகனும் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். சரணடைபவர்களுக்கு இந்தியாவுக்கு வருவதற்கான வழியை நிச்சயித்து அளிப்பது கஷ்மீர் அரசாகும்.

நேபாளம் எல்லையில் இருந்து லியாகத்தை போலீஸ் கைதுச் செய்து கொண்டு சென்றதாக அவரது மனைவி அக்தர்நிஸா கூறுகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வைத்து ஹிஸ்ப் கமாண்டரை கைதுச் செய்ததாகவும், சவுத் டெல்லி வணிக வளாகம், சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் நடத்தவிருந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு துணை கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறினார். லியாகத் அளித்த தகவலின் அடிப்படையில் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடத்தி ஆயுதங்களை கைப்பற்றினார்களாம்.லியாகத்திற்கு உதவுவதற்காகவே தீவிரவாதிகள் இங்கு தங்கியிருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.

இந்நிலையில்தான் கஷ்மீர் போலீஸ் அதிகாரியே, டெல்லி போலீஸின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கினார்.இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கஷ்மீர் அரசு தொடர்பு கொண்டது.ரிஹாபிலிஷேசன் பாலிசியின்படி சரணடைய முன்வருபவர்கள் பின்வாங்குவார்கள் என்றும் மீண்டும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரத்தக்களரி உருவாகும் எனவும் கஷ்மீர் அரசு உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.கஷ்மீர் சட்டப்பேரவையிலும் நேற்று இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒருவேளை, நேபாளில் வைத்து லியாகத்துடன் போலீஸ் கைதுச் செய்த அர்ஷத் மீரை, வரும் தினங்களில் மேலும் ஒரு தீவிரவாதியை கைதுச் செய்துள்ளோம் என்று கூறி மீண்டும் ஒரு நாடகத்தை டெல்லி போலீஸ் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கும்.ஜம்மு கஷ்மீர் போலீஸின் எதிர்பாராத தலையீடு டெல்லி போலீஸின் நாடகத்திற்கு தடை போட்டுள்ளது.

மிகப்பெரிய வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகளை எவ்வாறு முன்பும் இதுபோல டெல்லி போலீஸ் கைதுச் செய்துள்ளது என்பதற்கான காட்சியை லியாகத்தின் கைது சம்பவம் தெரிவிக்கிறது.


டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரிவு போலி தீவிரவாத கதைகளை உருவாக்குவது குறித்து நீதிமன்றங்கள் கண்டித்த பிறகும், ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்தபிறகும் ஸ்பெஷல் பிரிவின் போலி என்கவுண்டர் நாடகங்களையும், போலி தீவிரவாத கைது நடவடிக்கைகளையும் தடுக்க இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

போலீஸ் கமிஷனர் பெயர் ஸ்ரீவத்ஸவா. இவர் யார்? இவரது சாதி என்ன என்பதும் பெயரிலேயே தெரிகிறது. பொய் சொல்லி இஸ்லாத்தை களங்கப்படுத்த இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? பொய் கேசுகளை போட்டு அப்பாவி முஸ்லிம்களை தொல்லை படுத்தாதீர்கள் என்று உயர் நீதி மன்றமே கண்டித்தும் இது போன்ற இந்துத்வா பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட அதிகாரிகளால் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. படிப்பையும், அரசு வேலைகளையும் இந்தியா சுதந்திரம் அடைய முஸ்லிம்களாகிய நாம் உதறித் தள்ளினோம். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம்.

--------------------------------------------------------

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இந்து ஐயங்கார்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் செய்திருந்த அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் காலியாக இருக்கும் காவலாளி தொடங்கி உற்சவ மூர்த்தியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய விடயங்கள்

மனித உரிமை

அதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய நான்கு வகையான பணிகளுக்கு இந்து பிராமண ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆலயம் சார்பில் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் “அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்” சார்பில் அதன் தலைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.

“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, வழக்கறிஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும், மனுவை படித்துப்பார்த்து அதில் இருக்கும் நியாயத்தை பார்த்த மாத்திரத்தில் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

தகவல் பிபிசி

Tuesday, March 19, 2013

பரதேசி! -திரை விமரிசனம்

பரதேசி!

சினிமாக்கள் அதிகம் பார்ப்பதில்லை. இரண்டரை மணி நேரத்தை செலவிடும் அளவுக்கு அங்கு விஷயம் இருப்பதில்லை என்பதே சினிமாக்களை துறந்ததற்கு காரணம். தற்போது பலரின் விமரிசனங்களை பார்த்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலாவின் பரதேசியை பார்த்தேன். மனம் கனத்தது. வெள்ளையர் ஆட்சியில் சொந்த மண்ணின் மைந்தர்கள் எந்த அளவு வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப் பட்டனர் என்பதை மிக அழகாக தனக்கே உரிய பாணியில் பாலா சொல்லியுள்ளார். தேயிலை தோட்டங்களில் எந்த அளவு கொடுமைகள் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

சினிமா என்ற வெகுஜன ஊடகத்தை இது போன்ற மறைக்கப்பட்ட செய்திகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போல் நமது தமிழகத்தில் மறைக்கப்பட்ட எத்தனையோ வரலாறுகள் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கின்றன. இது போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றால்தான் இன்னும் அதிகம் வெளி வரும். காதலை மையப்படுத்தி ஆபாசங்களை கடை விரிப்பதே தற்போதய சினிமாவாக மாறி விட்டது. அதனை பாலா, அமீர், பாலசந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் மாற்ற முன் வர வேண்டும்.

படத்தில் அந்த மக்களின் துயர் துடைக்க வந்த டாக்டரும் அவரது மனைவியும் அங்கும் தங்களின் மதமாற்ற வேலைகளை ஆரம்பித்து விடுவதை நகைச்சுவையாக சொல்லியுள்ளார் பாலா. சில ஊர்களில் மிஷினரிகளின் பெண்கள் பல வீடுகளுக்குள்ளும் அத்து மீறி நுழைந்து மத பிரசாரத்தை துவக்கி விடுவதைப் பார்க்கிறோம். ஒரு மனிதன் தனது பூர்வீக மதத்தில் வெறுப்புற்று இஸ்லாத்தையோ கிறித்தவத்தையோ பவுத்தத்தையோ பின் பற்ற முனைவதை குறை காண முடியாது. ஆனால் இங்கோ பால்பவுடரைக் காட்டியும், ரொட்டித் துண்டுகளைக் காட்டியும், பணத்தைக் காட்டியும் மத மாற்றம் நடைபெறுகிறது. இப்படி மதம் மாறுபவர்கள் அந்த மதத்தின் மேல் உண்மையான பற்றோடு இருக்க மாட்டார்கள். இதை விட அதிகமாக வேறு எங்கும் கிடைத்தால் அங்கு சென்று விடுவார்கள். மாற்றம் என்பது அவனது மனத்திலிருந்து உதயமாக வேண்டும். இதை ஏனோ கிறித்தவ மிஷினரிகள் உணருவதில்லை. எனவே தான் பெயரளவில் கிறித்தவர்களாக பலரை நாம் பார்க்க முடிகிறது. பெயர் மாத்திரமே மாறியிருக்கும். ஆனால் சாதி வேற்றுமை, தீண்டாமை, உருவ வழிபாடு என்று அனைத்தும் இன்று கிறித்துவத்திலும் பார்க்க முடிகிறதே அதற்கு காரணம் பணத்தை காட்டி மதத்தை வளர்த்ததுதான். இதனால் கிறிததவத்துக்கு என்ன நன்மை விளைந்து விடப் போகிறதோ தெரியவில்லை.

இங்கு சவுதியில் தமிழ் இந்து சகோதரர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸலாத்தை தழுவுவதாக தனது எஜமானி அம்மாவிடம் சொல்லியுள்ளார். இவர் ஒரு வீட்டு டிரைவர். இதைக் கேட்ட அந்த பெண் 'எதை நினைத்து இஸ்லாத்தை தழுவ விரும்புகிறாய்?' என்று கேட்க 'எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த பெண் 'முதலில் குர்ஆனை உனது தாய் மொழியில் படி. நபி மொழிகளையும் உனது தாய் மொழியில் படித்து உண்மையை தெரிந்து கொள். அதன் பிறகு பிடித்திருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று அந்த பெண் சொல்ல அதை என்னிடமும் அந்த நபர் சொல்லிக் கொண்டிருந்தார். 'உனது முதலாளியம்மா சொல்வது தான் சரி. அவர் சொல்வது போலவே முதலில் குர்ஆனை தெளிவாக படிக்கவும்' என்று அறிவுறுத்தினேன். தற்போது மிகத் தெளிவான சிந்தனைக்கு வந்து தனது குடும்பத்தையும் தமிழகம் சென்று இஸ்லாத்தில் ஐக்கியப்படுத்தியுள்ளார். இனி ஒரு பக்கம் நரேந்திர மோடியும் மறு பக்கம் அத்வானியும் நின்று கொண்டு தாய் மதம் திரும்புகிறாயா? இல்லையா? என்று கத்தியைக் காட்டி மிரட்டினாலும் தாய் மதம் அந்த சகோதரர் திரும்பப் போவதில்லை. அந்த அளவு இஸ்லாத்தோடு ஐக்கியமாகி விட்டார். உதாரணத்துக்கு நமது ஏ.ஆர்.ரஹ்மானையும், பெரியார்தாசனையும் கூட எடுத்துக் கொள்ளலாம். மன மாற்றம் என்பது இவ்வாறு வர வேண்டும். வெறும் பணத்துக்காகவும், பெண்ணுக்காகவும், உத்தியோகத்துக்காகவும் எடுக்கும் மதமாற்றம் விழலுக்கு இறைத்த நீராகவே சென்று விடும்.

அடுத்து வாழ்வில் சிரமப்படும் பலர் இறைவன் ஏன் எனக்கு இவ்வளவு சிரமத்தைக் கொடுக்கிறான் என்று புலம்புவதைப் பார்க்கிறோம். அவர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்களை மனதில் கொண்டு இவர்களை விட சிறப்பாகவே இறைவன் எங்களை வைத்திருக்கிறான் என்ற நிம்மதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் சம்பாத்தியத்தை குடியிலேயே அழித்து வரும் பல குடிமகன்கள் ஆடம்பர செலவு செய்து வரும் சுக போகிகள் தங்களுக்கு கிடைத்த சிறந்த வாழ்வை பாழாக்காமல் இது போன்ற படங்களைப் பார்த்து திருந்த முயற்சிக்க வேண்டும்.

பல முதல்வர்களை உருவாக்கியது இந்த சினிமா. அந்த அளவு அதனோடு ஒன்றிணைந்து பல தமிழர்கள் இருப்பதாலேயே சினிமாவைப் பார்ததாவது திருந்துங்கய்யா என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது. :-(





Saturday, February 09, 2013

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு!



இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.

இந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.

“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”

இப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள்? புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள்? புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும்! சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பிரச்சினை வந்திருக்காதா? குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா? நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.

புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒத்துக்கொள்ளும் இவர், புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக சித்தரிக்க முற்படுவது அடுத்த அண்டப்புழுகாகும்.

தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் புலிகளுடன் இணையாமல் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் புலிகளுக்கு உதவாத காரணத்தினால்தான் வடக்கிலிந்து முழுமையாக விரட்டப்பட்டார்கள். இந்தத் தியாகத்தை சம்பிக்கவோ, அவர் சார்ந்த அமைப்பினரோ இந்த நாட்டுக்காக செய்திருப்பார்களா?

புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முற்பட்டனர். அதற்காக காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை என முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என எல்லா இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கிழக்கிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அன்று முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறியிருந்தால் புலிகளின் தமிழ் ஈழக் கனவு நனவாகியிருக்கும். பிரபா-கருணா பிரிவும் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று வடகிழக்கு தனி நாடாக மாறியிருக்கும். முஸ்லிம்களது உயிர்த் தியாகத்தால்தான் இன்று இது ஒன்றுபட்ட ஒரு தனி தேசமாக திகழ்கின்றது. இந்தத் தியாகத்தைச் செய்த முஸ்லிம்களைத்தான் புலிகளுடன் சேர்ந்தவர்கள் என்றும் தேசப் பற்றில்லாதவர்கள் என்றும் சம்பிக்க சாடி வருகின்றார்.

இந் நாட்டில் புலிகள் நடாத்திய முக்கியமான பல தாக்குதல் சம்பவங்களுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலரும் துணை போயுள்ளனர். பணத்துக்காக பல முக்கிய அதிகாரிகளே புலிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஒரு கட்டத்தில் “சிங்கள கொட்டியா” (சிங்களப் புலிகள்) என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு சிங்கள மக்கள் சிலரது உதவி புலிகளுக்குக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க முஸ்லிம்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்றும் சம்பிக்க கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடாபி இலங்கை வந்த போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று பேசினாராம். கடாபி நாற்பது வருடம் ஆட்சி செய்த லிபியாவையே அவர் இஸ்லாமிய நாடாக மாற்றாத போது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் எப்படிப் பேசுவார் என்றெல்லாம் யோசிக்காமல் சம்பிக்க போன்றவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் சிந்திப்பது கேள்விக்குறியாயுள்ளது.

முஹம்மத் இப்னு காஸிம் இந்தியா வந்த போது 5000 பிக்குகளைக் கொன்றார் என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றுகின்றார். இந்தியாவை முஸ்லிம்கள் 800 வருடங்கள் ஆண்டுள்ளார்கள். இருந்தும் அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறவில்லை. இந்தியா வந்த முஹம்மத் இப்னு காஸிம் பிக்குகளைக் கொன்று குவித்திருந்தால் ஆலயங்களை அழித்திருந்தால் 800 வருடங்கள் இது நடந்திருந்தால் எச்ச சொச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அங்கு சிலை வணக்கம் அழிக்கப்பட்டிருக்குமே! ஏன் அப்படி நடக்கவில்லை? என்று இந்த சிந்தனைச் சூனியங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

உண்மை என்னவென்றால், இந்தியாவை ஆண்ட முஸ்லிமல்லாத மன்னர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதால்தான் சிறு தொகையினராக இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களை 800 வருடங்கள் ஆள முடிந்தது. இல்லையென்றால் பிரிட்டிஷை விரட்டியதை விட வேகமாக முஸ்லிம் ஆட்சியாளர்களை இந்திய மக்கள் விரட்டியிருப்பார்கள். ஆயுத பலத்தை விட ஆள்பலமே மேலோங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கும் அளவுக்கு முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என்பதுதான் உண்மை வரலாறாகும்.

இஸ்லாம் பரவுவதற்கு காமமும் பணமும் தான் காரணம் என்று வக்கிர வார்த்தையால் தாக்கியுள்ளார் சம்பிக்க!

“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)

இது அப்பட்டமான பொய் என்பதற்கு நடைமுறை உலகே சான்றாகும். சில பௌத்த துறவிகள் துறவி ஆடையை அணிந்து கொண்டே காம லீலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இப்படியிருக்கும் போது ஒரு மன்னன் காமத்துக்காக மதத்தை மாற்ற வேண்டுமா? சம்பிக்க கூட பல பெண்களுடன் வாழ்க்கை நடாத்த விரும்பினால் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் எத்தனை பெண்களுடனும் வாழ எந்த நாட்டிலும் தடையில்லை. இதிலிருந்து இது இவரது கீழ்த்தரமான வக்கிர புத்தியால் எழுந்த கற்பனை என்பது வெள்ளிடை மழை.

இவர் சொல்வது உண்மையென்றால் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பலதார மணம் புரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. இன்று ஐரோப்பாவில் வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது. அங்கு காமத்துக்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்டம், பாட்டு, கூத்து, ஆபாசம் என்று அலைபவர்களைக் கூட இஸ்லாம் கவருகின்றது. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்னர் பழைய காம வாழ்க்கை வாழ முடியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் வருகின்றார்கள்! இப்படியிருக்க சம்பிக்க கூறும் கூற்று எவ்வளவு பெரிய பொய்யென்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

காமத்தைக் காட்டி மதத்தைப் பரப்புவதென்றால் முஸ்லிம்களும் ஆண்-பெண் வேறுபாடின்றி அரைகுறை ஆடையுடன் கலந்து கொஞ்சிக் குலாவும் மதக் கிரியைகளையும் அங்கீகரித்திருப்பர். வேறெந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படாத அளவுக்கு ஆண்-பெண் கலப்பில்லாத, கவர்ச்சியான ஆடையமைப்பில்லாத ஆட்டம், பாட்டு, கூத்து போன்றவற்றை அங்கீகரிக்காத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை நடுநிலை மக்கள் சிந்தித்துப் பார்த்து இவரின் கோர முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர் தனது நூலில் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களைக் கூட தீவிரவாதத்தின் மையங்களாகச் சித்தரித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் தப்பெண்ணங்களை வளர்ப்பதினாலும் எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்குக் காரணமாக அமைவதாலும் இது போன்ற கருத்துக்களையுடைய நூற்களை அரசு தடைசெய்ய வேண்டும்.

தேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சீர்குலைக்க எத்தணிக்கும் இத்தகைய தேசத் துரோகக் குற்றவாளிகள் மீது நீதித்துறை தமது கவனத்தைத் திருப்ப வேண்டும்.

இவரது இந்த சிந்தனையை உள்வாங்கிய ஒரு குழு முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஒரு கலவரத்தை உண்டுபண்ண சதி செய்து வருகின்றது. கல்விக் கூடங்களில் கூட சில நெருக்கடிகளை முஸ்லிம் மாணவர்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

எனவே, முஸ்லிம் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் இது குறித்து நிதானமான தூரநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

சம்பிக்கவின் இது போன்ற கருத்துக்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களின் பின் சரித்திரமாக மாறலாம். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட இந்நூல் இனக்கலவரங்களை உண்டுபண்ணும். எனவே, இக்கருத்துக்களுக்கான மறுப்புக்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற நூற்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து அதையும் ஒரு பதிவாக்க வேண்டியுள்ளது. இராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற தவறான சரித்திரம்தான் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட அடித்தளமானது. இது போன்று எதிர்காலத்தில் இலங்கையில் பிரச்சினைகள் எழாமல் இருக்க மறுப்புக்களும் பதியப்பட வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்…..

இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரையும் அல்லாஹ் ஒன்றிணைப்பானாக!

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
– ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்

சிங்கள மொழி தெரிந்தவர்கள் இந்த கட்டுரையை மொழி பெயர்த்து சிங்களவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். ஒரு பொய்யை இன்று பதிந்து விட்டால் இன்னும் 10 வருடங்களில் அது வரலாறாக பதியப்பட்டு விடும் கொடுமையை பல இடங்களில் பார்த்து வருகிறோம். சிங்கள மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி குழப்பம் விளைவிக்க பலர் முயன்று வருகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பவுத்தர்களும் பகையை மறந்து நட்பு சூழல் உருவாவதை சில நாச காரா சக்திகள் விரும்புவதில்லை. அதற்கு பலியாகி விடாமல் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

--------------------------------------------------------------------

//நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும்.//

இவ்வளவு அப்பட்டமாக நடந்த ஒரு கொலையை மலர் மன்னன் என்ற ஒருவரால்தான் விபத்து என்று சமாளித்து எழுத முடியும். இதையே மாற்றி எழுதுபவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான சரித்திர புரட்டுகளை அரங்கேற்றியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாழ்க பாரதம். வெல்க மலர்மன்னனின் சமாளிப்புகள்.:-(

திண்ணையில் மலர் மன்னன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் இட்ட பின்னூட்டமே இது. இந்துத்வா வாதிகள் எந்த அளவு தங்கள் தவறை மறைக்க எவ்வளவு பெரிய பொய்களை வேண்டுமானாலும் அரங்கேற்ற துணிய மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

அடுத்து அப்சல் குருவை தூக்கில் போட்டாகி விட்டது. அவன் உண்மையிலேயே எனது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்க வந்திருந்தால் தூக்கில் போட மிக தகுதியான நபரே. ஆனால் சமூக ஆர்வலர்கள் சொல்வது போல் இது பிஜேபி செய்த அரசியல் நாடகம் என்றால் இதற்கான விலையை இந்த உலகத்தில் பெறா விட்டாலும் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். நாம் அனைவரும் கண்டிப்பாக அங்கு சமூகமளித்திருப்போம்.

----------------------------------------------------------

அப்சல் குரு மீதான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருந்ததி ராய் எழுப்பிய பதிமூன்று கேள்விகள்.

http://www.guardian.co.uk/world/2006/dec/15/india.kashmir

கேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசர்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கபட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துல் நுழைந்தது?


கேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்-ஏ-முகம்மது மற்றும் லக்சர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துள்ளியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சிபிஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிறுபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தது?

கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்கானிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபில் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங்கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்கானிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது.” என்றார். தாஸ்முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை? இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை?

கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற் உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்கபட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியஙக்ள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணை கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்தரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது?

கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா?

கேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தன் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள்? தொடர் ராணுவ வாகணங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கபட்டது?

கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 அயும் இனைத்தது?

கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (STF-J&K)தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்?

கேள்வி 10 : லக்சர் ஏ தோய்பா, ஜைஸ் ஏ முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க STF-ன் நேரடி தொரட்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா?

கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்து செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் STF-ல் பணியாற்றியவர், தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லக்‌ஷர் ஏ தோய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார், இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்த்தாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரனைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை?

இந்த கேள்விகள் எல்லாம் மிக நியாயமான கேள்விகள், இந்த பாராளுமன்ற தாக்குதல்கள் தொடர்பான அருந்ததி ராய் அவர்களின் முழு கட்டுரையை வாசித்தால் இந்த விஷயங்கள் இன்னும் குவிமையம் பெறும். இவை பெரும் ஆய்வு செய்து கேட்கபட்ட கேள்விகள் அல்ல மாறாக அந்த நேரத்தில் இந்திய பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் வாதிகளில் பேச்சுகளை தொடர்ந்து கேட்கும் எவருக்கும் இந்த கேள்விகள் கொஞ்சம் யோசித்தாலே வருபவையே. பாராளுமன்ற தாக்குதல் தொடர்பான இந்த கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லாமல் அவை இந்தியாவின் மீது மிதந்தவண்ணம் உள்ளது, இன்று அந்த கேள்விகள் எல்லாம் ஒரு கருமேகமாக தில்லியின் திகார் சிறைச்சாலை மீது ஒரு சாரல் மழையாக பொழியக்கூடும்.

http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259%3A-13--13-&catid=22%3A-1&Itemid=52

Thursday, November 08, 2012

இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?


இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?



தற்போது ரவி ஸ்ரீவாசனின் கைது பிரதானமாக பேசப்படுகிறது. கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ட்விட்டரில் அவதூறு பிரசாரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் நாட்டின் பிரதம மந்திரியின் அடுத்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுபவரான ப.சிதம்பரத்தின் மகனை பற்றி ட்விட்டரில் ஒரு விஷயத்தைப் பதியும் போது அது உண்மைதானா என்று தெரிந்து கொண்டல்லவா பதிந்திருக்க வேண்டும்? நாட்டின் மிக முக்கியமான குடும்ப உறுப்பினரைப் பற்றி அவதூறாக ஒரு செய்தி வெளியிடும் முன் யோசித்திருக்க வேண்டாமா?. தற்போது பிபிசி எந்த ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு ட்விட்டை பகிர்ந்தீர்கள் என்று கேட்கும் போது அவரால் நேரிடையான பதிலை சொல்ல முடியாது தடுமாறுகிறார்.

எனக்கு ட்விட்டரில் 16 ஃபாலோயர்தான் அப்போது இருந்தனர். இந்த பிரச்னைக்கு பிறகு 800க்கு மேல் ஃபாலோயர்கள் வந்துள்ளதாக சொல்கிறார். பிளாக்கரிலும் கூட ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல அவதூறு செய்திகளை தெரிந்தே வெளியிடும் பல பதிவர்களைப் பார்க்கிறோம். இதனால் அந்த தளத்தின் நம்பகத் தன்மையையும் இழக்கின்றனர் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எந்த ஒரு செய்தியையும் பதியும் போது அதற்குரிய ஆதாரத்தை வைத்துக் கொண்டு நாம் செய்தி வெளியிட்டால் பின்னால் வரக் கூடிய பிரச்னைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

சுப்ரமணியம் சுவாமி தனது தம்பியோடு பேசி 'கவலைபடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்' என்று சொன்னதாக வேறு சொல்கிறார். ஆக செய்த தவறை ஒத்துக் கொண்டு இனி அவ்வாறு நடைபெறாது என்று சொல்வதற்கு பதில் அந்த தவறை எப்படியாவது பூசி மெழுகவே பார்க்கிறார்.

அதேபோல் பல பதிவர்களும் ஆபாச படங்களை வெளியிடுவது, ஆபாச கதைகளை வெளியிடுவது என்று சகட்டு மேனிக்கு எழுதிக் குவிக்கிறார்கள். இந்த இணையத்தை பல வயதுடையவர்கள் சிறுவர்கள், குடும்பத்து பெண்கள் என்று அனைவரும் வலம் வருகிறோம். இதை உணர்ந்து நமது பதிவர்கள் ஆபாசமாக எழுதுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அதே போல் மத சம்பந்தமாக அவதூறுகளையும் எழுதுவதில் பலர் தயங்குவதில்லை. சுப்ரீம் கோர்ட்டே தலையிட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நமது ஊடகங்களின் நிலை இருக்கிறது. இணைய எழுத்தாளர்கள் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு தங்களின் கருத்துக்களை பதிய வேண்டும்.

நமது அரசு இணைய தளத்திற்கென்று சில விதி முறைகளை வகுக்க வேண்டும். கட்டற்ற சுதந்திரம் ஒரு மனிதனை எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும். எனவே தனி மனித நபர்களைப் பற்றி பிரசுரிக்கும் போது அதற்கான முக்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தால் பல அவதூறு பதிவுகள் வெளி வருவது தடுக்கப்படலாம். அதே போல் அநியாயமாக நிரபராதிகள் தண்டிக்க படுவதையும் தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

ரவி ஸ்ரீநிவாசின் பிபிசி பேட்டி



http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121105_twitterarrest.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

---------------------------------------------------------------------
.
வேலூரில் கடந்த அக்டோபர் 23 ந்தேதி மருத்துவ மனைக்கு அருகில் அரவிந்த ரெட்டி என்ற பாஜக உறுப்பினர் படுகொலை செய்யப்படுகிறார். காவல் துறை 'நிலம் சம்பந்தப்படட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது' என்று சொல்கிறது. ஆனால் பாஜகவினரோ 'இந்த கொலை நாங்கள் வளர்வதை பொருக்காத இஸ்லாமிய இயக்கங்களால் நடத்தப் பட்டிருக்கலாம்' என்று இணையத்தில் சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். தேர்தல் வேறு நெருங்குகிறது. பாஜக வை இந்த வகையிலாவது தூக்கி நிறுத்தலாம் என்பது இவர்களின் எண்ணம்.

இந்த இந்துத்வாவினர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்யக் கூடியவர்கள். பொய்யான காரணத்தைக் கூறி பாபரி மசூதியை இடித்து ரத்த ஆறு ஓட விட்டனர். கோத்ராவில் நடந்த ரயில் விபத்தை 'முஸ்லிம்களின் சதி' என்று கூறி ரத்த ஆறு ஓட விட்டனர். மாலேகானில் குண்டு வைத்து முஸ்லிம்களை கொன்று அதற்கு காரணம் என்று அந்த ஊர் முஸ்லிம்களையே கைது செய்தனர். பிறகு ஹேமந்த் கர்கரே வந்து உண்மையை கண்டறிந்து சாது பிரக்யாசிங்கை உள்ளே தள்ளினார்.

தற்போது அரவிந்த ரெட்டி கொலையை மத சாயம் பூசி தமிழகத்தில் ஓட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது பிஜேபி. அதே போல் மேட்டுப் பாளையத்தில் ஆனந்த் என்பவர் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இவரும் பிஜேபி உறுப்பினர். இதுவும் முஸ்லிம்கள் வேலைதான் என்று பொய்யான காரணத்தை கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். கடைகளை மூடச் சொன்னதோடு அல்லாமல் அரசு பஸ்ஸையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.




இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வகையிலாவது கலவரத்தை உண்டு பண்ணி பிஜேபி யை வளர்க்க பார்க்கின்றனர். ஏனெனில் திராவிட இயக்கங்களினால் இந்துத்வா என்பது தமிழகத்தில் கானல் நீராக போய்க் கொண்டிருக்கிறது. மேல்சாதியினரின் ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இழந்த அதிகாரங்களை அரசியல் மூலம் பெற இந்துத்வா துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக பிஜேபியை எப்படியாவது வளர்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. இது குஜராத் அல்ல. பெரியார் வாழ்ந்த தமிழகம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இந்துத்வாவின் குள்ளநரித்தனங்களை தோல் உரித்துக் காட்டுவதில் முஸ்லிம்களை விட திராவிட இயக்கத்தினரே மும்முரமாக நிற்கின்றனர். நடுநிலையாளர்கள் திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு உரிய ஆதரவை நல்க வேண்டும். தமிழக முதல்வரும் இந்துத்வாவின் கோர முகத்தை உணர்ந்து அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Wednesday, October 31, 2012

நாட்டை ஆள்வது முகேஷ் அம்பானியா! மன்மோகன் சிங்கா!

அர்விந்த் கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு ஆரம்பம்!



ஏற்கெனவே ராபர்ட் வதேராவின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். பிஜேபியின் தலைவர் நிதின் கட்கரி செய்து ஊழல்களையும் பட்டியலிட்டார். தற்போது ரிலையன்ஸ் கம்பெனி செய்த தில்லுமுல்லுகளையும் அதற்கு பாஜகவும் காங்கிரஸூம் எவ்வாறு துணை போயின என்பதை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸூம் ஊழல் மலிந்திருக்கிறது. பாஜகவும் சளைத்ததல்ல என்பதை நிரூபித்து வருகிறது. முக்கிய கட்சிகள் இரண்டுமே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால் நாட்டை யாரிடம் ஒப்படைப்பது என்று நாட்டு மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆரம்பத்தில் ஒரு டேப் ஒலிபரப்பப்படுகிறது. அதில் நீரா ராடியா, ரஞ்சன் பட்டாசார்யா(வாஜபாய் மருமகன்), போன்றோர் எவ்வாறு மந்திரிகளை மாற்றுகின்றனர் அதற்கு எங்கிருந்து உத்தரவு வருகிறது என்பதை அறியக் கூடியதாயிருக்கிறது. இனி கெஜ்ரிவால் வைக்கும் குற்றச்சாட்டுகளை வரிசையாக பார்ப்போம்.

ரிலையன்ஸ் கம்பெனிக்கு பிஜேபி அரசில் கேஸ் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. கேஸானது ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே ரிலையன்ஸூக்கு கொடுத்தால் நமது நாட்டு நிறுவனமாக உள்ளதால் நமக்கு மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. 2000 லிருந்து இன்று வரை அரசை மிரட்டுவது, இஷ்டத்துக்கு விலையை ஏற்றுவது சில மந்திரிகளையே மாற்றச் சொல்வது என்று ரிலைன்ஸின் ஆதிக்கம தற்போது கொடி கட்டிப் பறக்கிறது.

2004ல் ரிலைன்ஸ் கொடுத்த வாக்கு ஒரு யுனிட் கேஸ் 2.25 டாலருக்கு தருவதாக சொன்னது. 17 வருடங்கள் இதனை தொடர்ந்து நாங்கள் தருவோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. பதினேழு வருடங்கள் என்று சொல்லி விட்டு 2007 ல் ஒரு குண்டை தூக்கி போட்டது. நாங்கள் 4.25 டாலருக்கே கேஸ் சப்ளை செய்ய முடியும் என்று அரசிடம் தெரிவித்தது ரிலையன்ஸ். ஒரு ஒழுங்கான அரசு வாக்கு தவறும் ரிலையன்ஸின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் பிரணப் முகர்ஜியின் தலைமையில் அமைந்த குழு 4.25 டாலருக்கு ஒத்துக் கொண்டு அவர்களின் பணியை தொடர அனுமதித்தது. 2014 வரை நீங்கள் இந்த 4.25 டாலரில் சப்ளை செய்யலாம் என்று ஒத்துக் கொண்டது அரசு. ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு பின்னணி என்ன? எத்தனை கோடிகள் கை மாறியது? நாட்டு மக்களின் நலனை விட ரிலையன்ஸின் நலன்தான் இவர்களுக்கு முக்கியமாக போய் விட்டது.

இத்தோடு முடியவில்லை. 2014 இன்னும் வரவேயில்லை. 2010ல் மற்றொரு குண்டை தூக்கிப் போட்டது ரிலையன்ஸ் கம்பெனி. அதாவது எங்களால் தற்போது 4.25க்கு சப்ளை செய்ய முடியாது. 14.25 க்குத்தான் எங்களால் கேஸ் சப்ளை செய்ய முடியும் என்றது ரிலையன்ஸ். இவ்வளவு அதிகம் எங்களால் கேஸூக்கான விலையைக் கொடுக்க முடியாது. ஏனெனில் இதனால் மின்சாரத்தின் விலையும் தாறுமாறாக ஏறும். இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று ஜெயபால் ரெட்டி திட்டவட்டமாக மறுத்து விட்டார். அவ்வாறு கொடுத்தால் அரசுக்கு 14ஆயிரம் கோடி இரண்டு வருடத்தில் நஷ்டம் ஏற்படும். 14 ஆயிரம் கோடி இரண்டு வருடத்தில் ரிலையன்ஸ் கம்பெனி லாபம் அடையும. இது அநியாயம். எனவே இதனை நான் தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

நமது நாட்டின் மொத்த கேஸ் தேவை 15 கோடி யூனிட். இதில் பாதி அளவான 8 கோடி யூனிட்டை ரிலையன்ஸ் கம்பெனி அரசுக்கு தர வேண்டும் என்று ஒப்பந்ம் உள்ளது. 8 கோடி உற்பத்தி செய்வதற்கு பதிலாக 2 கோடி யூனிட் மட்டுமே உற்பத்தி செய்து 'எங்களால் இவ்வளவுதான் முடியும். 8 கோடி யூனிட் நாங்கள் தர வேண்டும் என்றால் நாங்கள் முன்பு கேட்ட 14.15 டாலரான யூனிட்டுக்கு உள்ள விலையை தந்தால் எங்களின் இலக்கை அடைகிறோம்' என்று மிரட்ட ஆரம்பித்தனர்.

தற்போது வேறு வழி இல்லாமல் இந்த ஒப்பந்தத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஜெயபால் ரெட்டியை அகற்றியுள்ளது காங்கிரஸ் அரசு. இனி என்னவெல்லாம் காட்சிகள் அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை.

இந்த கேஸ் நமது நாட்டு மக்களின் சொத்து. இதை வெளியில் எடுத்து என்டிபிஸிக்கு தருவதுதான் ரிலையன்ஸின் வேலை. இதற்கு 2.15 டாலரே போதுமானது. இதுவே அந்த கம்பெனிக்கு அதிக லாபத்தை தரும் என்கிறது மும்பை ஹைகோர்டின் தீர்ப்பு. கேஸின் விலை ஏன் தாறுமாறாக எகிறுகிறது இதற்கு யாரெல்லாம் காரணம் என்பது தற்போது விளங்கியிருக்கும். தற்போது ரிலையன்ஸ் கேட்கும் தொகையான 14.25 டாலர் கொடுக்க ஆரம்பித்தால் மின்சாரம் ஒரு யூனிட் 3 ருபாயிலிருந்து 7 ரூபாய்க்கு எகிறும். ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் அல்லல்படும் பொது மக்கள் மேலும் சுமையை சுமக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவர்.

மொய்லி இதற்கு தலை சாய்ப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



(அந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர். அதன் காணொளி)

செல்வந்த நாடுகளில் ஏதோ அரசியல்வாதிகள் திருடினால் அது பொது மக்களை அந்த அளவு பாதிக்காது. ஆனால் இந்தியா போன்ற பெரும் பான்மை ஏழைகளை கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறு நாட்டை சுரண்டுவதற்கு எவ்வாறு மனது வருகிறது? இதற்கு பிஜேபியும் காங்கிரஸூம் ஏன் ஒத்து ஊதுகிறது. ஒரு நாட்டின் எதிர்க் கட்சி சரியாக இருந்தால் அந்த நாடு மிக சிறப்பாக செல்லும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிஜேபியும் திருடுவதில் சம பங்கு வகிக்கிறது. இவர்கள் எங்கிருந்து காங்கிரஸை காட்டிக் கொடுப்பார்கள்.? 2ஜி அலைக் கற்றையிலிருந்து கேஸ் பிரச்னை வரை நாட்டின் செல்வம் கொள்ளை போக பிஜேபி அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதனை காங்கிரஸ் மிக சிறப்பாக முடித்துக் கொண்டிருக்கிறது.





ஒரு பில்லியன் டாலருக்கும் அதிக பெறுமானமுள்ள முகேஷ் அம்பானியின் மும்பை வீடு.
----------------------------------------------------------------------------------

கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு

பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் நிறுவனமான பூர்த்தி ஷுகர் அண்ட் பவரில் முதலீடுச் செய்த நிறுவனங்களின் இயக்குநர்களில் பலர் செக்யூரிட்டி கார்டுகளும், தொழிலாளர்களும்தான் என்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனங்களின் வளாகங்களில் வருமான வரித்துறை பகிரங்கமாக நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்தது.

மும்பையில் 12 இடங்களிலும், புனே, நாக்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறுவனங்களில் இயக்குநர்களான 13க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தங்களின் பெயர்கள் எவ்வாறு இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தது என்பதுக் குறித்து தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான முதலீடுகளுடன் துவங்கிய நிறுவனத்திற்கு பின்னர் அதிகளவிலான பணம் குவியத் துவங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த நிதிகளின் மூல ஆதாரங்களைக் குறித்து தெரிவிக்கவில்லை எனில் வரி ஏய்ப்பு நடத்தியதாக கருதவேண்டி வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 'நான் ஊழலே செய்ததில்லை' என்று கட்கரி தற்போது சாதிக்கிறார்.

------------------------------------------------------

அமெரிக்க சாண்டி புயலில் சிக்கியவர்களை மீட்பதில் உதவி புரியும் ஹெலிகாப்டர்.







Tuesday, October 09, 2012

கைதுக்கு பிறகு கர்நாடக முஸ்லிம் இளைஞர்களின் நிலை!


"This is the progress we have made in investigating the role of Muslims in terrorism"

'முஸ்லிம்களின் தீவிரவாதத்தைக் கண்டு பிடிப்பதில் எங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த வரைபடம் நன்றாக விளக்குகிறது அல்லவா?'

--------------------------------------------------------------

கர்நாடக முஸ்லிம்கள் கைதுக்கு பிறகு என்ன நிலை



ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்னைகளை திசை திருப்ப நமது அரசியல்வாதிகள் முஸ்லிம்களை பகடை காய்களாக பயன்படுத்துவது அன்று தொட்டு நடந்து வருகிறது. பிஜேபி அமைச்சர் முஸ்லிம்களை கொன்ற வழக்கில் சிறைக்கு சென்றது முதல் பக்க செய்தியாக வந்த போது அதை மறைக்க அதே பிஜேபி ஆளும் கர்நாடகாவில் 11 முஸ்லிம்களை தலைவர்களை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார்கள் என்ற பொய்யான செய்தியின் பேரில் ஊகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது பிஜேபி அரசு. இணையத்தில் பல ஆட்சேபகரமான செய்திகளை பார்த்தார்கள். அவர்களது லேப்டாப்புகளில் பல ஆட்சேபகரமான படங்கள் சேமிக்கப்பட்டிருந்தது. மேலும் விசரிக்கிறோம் என்ற தகவல்தான் காவல்துறையாலும் ஆட்சியாளர்களாலும் சொல்லப்பட்டது. ஊடகத் துறையில் உள்ள இந்துத்வாவினர் முஸ்லிம்களைப் பற்றிய அவதூறு செய்திகளை முதல் செய்தியாக கொடுத்து பரபரப்பை உண்டு பண்ணி மற்ற விஷயங்களை பின்னுக்கு தள்ளி விடுகிறார்கள். இவை எல்லாம் முன்பே நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. சமூகத்தில் கண்ணியமாக உள்ள படித்த முஸ்லிம்களுக்கே இந்த நிலை என்றால் பாதைகளில் தங்களின் வாழ்வை ஓட்டும் ஏழை முஸ்லிமகளின் நிலையை சொல்லவே வேண்டாம். கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் உறவினர்கள் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை பார்ப்போம்.

சந்தேகத்தின் பேரில் கைதான பத்திரிக்கையாளர் முஜிபுர் ரஹ்மானின் சகோதரர் அதாவுர் ரஹ்மான் சொலலும் போது 'என்னுடைய சகோதரனின் வாழ்வு ஒரு திறந்த புத்தகம். தான் பிறந்த இந்திய மணணை அளவுக்கதிகமாக நேசிப்பவன். தனது குடும்பத்தையும் அதிகமாக நேசித்தான். சிறந்த பத்திரிக்கையாளனாக ஆசைப்பட்டான். எனது சகோதரனின் கைது தவறாக நடந்திருக்கும் பட்சத்தில் காவல் துறை உடன் அவனை விடுதலை செய்ய வேண்டும்.'

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் இக்பாலின் தந்தை ஷேக் ரஃபீக் அஹமது சொல்லும் போது 'நாங்கள் மிகவும் கண்ணியமான பின்னணியை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீட்டிலிருந்து சில அடி தூரங்களிலேயே எங்கள் வீடும் அமைந்துள்ளது. எனது பிள்ளைகளில் இருவர் மருத்துவர். ஒரு பையன் பொறியாளர். மிகவும் சிரமப்பட்டு இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளேன்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு முஸ்லிம் முஹம்மது யூசுஃப். கணவனை இழந்த சகீனாவுக்கு மகன் யூசுஃப் மாதம் 5000 தொடர்ந்து அனுப்புவதில் தவறியதில்லை. 'எனது மகன் கைது செய்யப்பட்ட நாளாக நான் சரியாக சாப்பிடக் கூட இல்லை. படிக்கும் காலங்களில் ஓட்டப்பந்தயங்களில் மிக ஆர்வமாக கலந்து கொள்வான். என்சிசியிலும் பயிற்சி எடுத்துள்ளான். அவனது தந்தை இறப்புக்குப் பிறகு குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. எந்த தவறும் செய்யாத என் மகனை விடுவிக்கா விட்டால் என்னையும் கைது செய்து சிறையில் அடையுங்கள். சிறையில் கிடைக்கும் உணவையாவது நான் சாப்பிட முடியும் அல்லவா?'

இப்படியாக பல சோகங்களை இந்த குடும்பங்கள் சுமந்திருக்கின்றன. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் அல்லது ஒரு வருடம் கழித்து 'குற்றம் நிரூபணம் ஆகவில்லை' என்று இவர்களை விடுவிப்பார்கள். அந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் வராமல் நமது காவல் துறையின் கருப்பு ஆடுகள் கவனமாக பார்த்துக் கொள்ளும். இதுதான் சுதந்திரம் அடைந்த நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்காது. இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்து பொறுக்காத பல பெரும்பான்மை இந்து மக்களே இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் நாள் வரும். உண்மை என்றுமே உறங்கியதில்லை. ஹேமந்த் கர்கரே போன்ற காவல்துறையில் நியாயவான்களும், மார்க்ஸ் போன்ற பத்திரிக்கைத் துறை யின் நியாயவான்களும் அதிகமதிகம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது வரை இந்த உண்மைகளை எல்லாம் மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத் துறையிலே நாம் அதிகமதிகம் கவனம் செலுத்த வேண்டும். சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு தினப்பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். கட்சி சார்பு, இயக்கம் சார்பு இல்லாததாகவும் அது இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ள செல்வந்தர்கள் இதற்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி முன் முயற்சி எடுத்தால் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்..

The relatives of three of the 11 persons arrested on terror charges on Wednesday have said that they now have their hopes pinned on the judiciary. They came together to address a press conference here on Friday.

Journalist Muthi-ur-Rahman Siddiqui’s brother Ata-ur-Rahman said: “My brother’s life is an open book. He loved his country. He loved his family and was committed to becoming a good journalist.” Calling for harsh punishment if he is found guilty, Ata-ur-Rahman said, “But if the police find that they have caught the wrong person, they should release him immediately and not wait for the court to acquit him.”
Father of Jaffar Iqbal, Sheikh Rafiq Ahmed, who is an Assistant Conservator of Forests, said, “We come from a very respectable family. Chief Minister Jagadish Shettar’s house [in Hubli] is a few metres from ours… we are neighbours.”

http://www.thehindu.com/news/states/karnataka/article3847184.ece

Press Release) Condemn the arrest of Muslim youths from different parts of India - Arrest of Muslim youths is a greater conspiracy against Muslim community of India – Muslim Youths are victims of Police terror -Demand to Indian Prime Minister’s intervention to stop targeting innocent Muslims

Civil Liberties Monitoring Committee strongly condemns the arrest of Muslim youths from different parts of India and expressed that the police action is based upon malicious intention and dishonesty. These arrests are the result of nexus between anti Muslim police groups of Hyderabad and Bangalore working with the support of Hindutva outfits. This committee believes that the main intention of these arrests is to divert the attention of people from the court verdict against the criminals of Gujarat genocide and ongoing genocide of Muslim in Assam. As per the reliable sources of civil liberties, police arrested these youths in illegal manner, detained and tortured them and then as per the practice after completing these formalities declared them arrested. This joint operation of police action started simultaneously from Bangalore, Hyderabad, Nanded and other parts of south India.

http://nvonews.com/2012/09/01/civil-liberties-group-condemn-the-arrest-of-muslim-youth-in-karnataka-maharashtra/

---------------------------------------------

பதினான்கு வயதே நிரம்பிய இளம் வலைப்பதிவரும், சமூகப் போராளியுமான மலலா யூசப்சாய் அவர்கள் செவ்வாய் கிழமை சுடப்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை செய்தகாட்டுமிராண்டிகளை கடுமையாக கண்டிக்கிறேன். இதற்கு தாலிபான்கள் பொறுப்பேற்றதாக சில செய்திகள் சொல்கிறது. இதை அவர்கள் செய்திருந்தால் அந்த காட்டுமிராண்டிகளையும் கண்டிக்கிறேன்.

ஆனால் முல்லா உமர் விடுதத பெருநாள் செய்தியில் தாலிபான்கள் பெயரை பயன்படுத்தி பல அட்டூழியங்களை நேட்டோ படைகள் செய்து வருவதாகவும், நேட்டோ படைகள் சொல்பவற்றை நம்ப வேண்டாம் என்றும் கூறுகிறார். தாலிபான்களின் பெயரை களங்கப்படுத்த அமெரிக்கா செய்த முயற்சியா என்றும் தெரியவில்லை. யார் செய்திருந்தாலும் இவர்கள் மனித குல விரோதிகளே!

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_23.html

http://www.uruknet.de/?p=m90397&hd=&size=1&l=e

கல்வியில் எங்களின் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். இவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பெரும் பொருளாதாரம் ஒதுக்கப்படும். அதேபோல் எங்களின் பெண்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தப்படும். அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். இவை அனைத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமையப் பெறும்.

We are committed to give all legitimate rights to women in the light of the Islamic principles, national interests and our noble culture. It is a matter of sorrow to say that the common people, particularly women, are grappling with various hardships following the invasion of the invaders. Even many women have immolated themselves or have been martyred miserably or their honor has been violated. Still this brutal trend continues. It is in a time that women were completely secure from such sufferings during the past reign of the Islamic Emirate.

We urge all universal organizations working for the protection of human rights not to rely only on reports of the foreign forces and western media outlets; Carry out your own impartial and on site investigation about the ground realities in the area, by fulfilling your responsibility in this regard. The civilian casualties that occur as a result of the American blind bombardment, unsanctioned raids on (residential) houses , letting loose dogs on children and women to bite them; urination on dead bodies, torture of prisoners in prisons, rape of women at the hands of soldiers, police and Arbakis; violation against the honor and property of people are no more something hidden from the eyes of people.