Followers

Sunday, August 18, 2013

மோடியின் வேறு சில சாகசங்களையும் பார்ப்போம்!




மோடியின் குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக ஊடகங்கள் பெரிதாக ஊதித் தள்ளுகின்றன. ஆனால் நிலைமையோ வேறு. அகமதாபாத்தில் ஒரு பாலத்தின் கதியைத்தான் நாம் பார்க்கிறோம். ஒழுங்கான வடிகால் வசதி இன்றி அவசர கதியில் கட்டப் பட்டு சிறு மழைக்கே பேரூந்துகளை கயிறு கட்டி இழுக்கும் நிலைதான் அங்கே. ஆனால் இந்த செய்திகளெல்லாம் தினமலரிலோ, தின மணியிலோ நாம் காண முடியாது. :-)



அடுத்து சுதந்திர தின உரையில் தன்னோடு பிரதமர் விவாதத்துக்கு தயாரா? என்று கேட்டதை பல அறிவு ஜீவிகளும் கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டனர். பதிலுக்கு திக் விஜய் சிங் 'முதலில் என்னோடு விவாதித்து பதில் சொல்லிவிட்டு பிறகு செல்லவும்' என்றவுடன் தற்போது அதற்கு எந்த பதிலையும் மோடி வைத்திருக்கவில்லை. இதே சுதந்திரத் தினத்தன்று 'மாருதி' 'சுசுகி' மோட்டார் கம்பெனிகள் இங்கு வரக் கூடாது என்று போராடிய 5000 சாமான்ய மக்களை ஊடகங்கள் சாமர்த்தியமாக மறைத்து விட்டன. இங்கு இம் மாபெரும் கூட்டத்தை கூட்டிய லால்ஜி தேசாய் என்ற விவசாய தலைவரை சிறையில் அடைத்தது மோடி நிர்வாகம். சாமான்ய மக்களின் வாழ்வாதாரமாண நிலங்களை பிடுங்கி வெளி நாட்டு பண முதலைகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதுதான் இன்று வரை மோடி செய்து வரும் நாட்டு நலப் பணி. ஊடகங்களும கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் மோடி புகழை பாடியவண்ணமே உள்ளன.

http://www.truthofgujarat.com/farmers-movement-leader-lalji-desai-arrested-illegal-detention/

6 comments:

UNMAIKAL said...

மோடியும் அமெரிக்காவும்!

இந்தியாவிலிருந்து ஒரு மாணவர் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடியும்.

தொழிலதிபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முடியும். விளையாட்டு வீரர் நாட்டின் பெருமையை நிலைநாட்ட அமெரிக்கா செல்ல முடியும்.

ஆனால் மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கும், இன்னும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்ஸால் முன்மொழியப்படும் மோடி அவர்கள் அமெரிக்கா செல்ல முடியாது.

நாங்கள் அவரை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்புகூட மீண்டும் அதை உறுதிபடுத்தியதை நான் தமிழ் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன்.

ஆனால் அந்தச் செய்தியை மறுநாள் எந்தத் தமிழ் தினசரியும் வெளியிடவில்லை.

அது மோடி மீதான பயத்தினாலா அல்லது மோடியின் விளம்பர கம்பெனி தந்த பணத்துக்கு விலைபோனதாலா என்பது தெரியவில்லை. நாம் கேட்டால், அது பத்திரிகை சுதந்திரம் என்பார்கள்.

சரி, இப்போது விசயத்துக்கு வருவோம்.

மோடியை அமெரிக்கா ஏன் அனுமதிக்கவில்லை?

இதற்கு நாம் எவ்வளவு முயன்றாலும் ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் விரிவாக அலச வேண்டியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு பிரிட்டன் விசா மறுக்கப்பட்டது. அதற்கான காரணம், சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்க காரணமாக சல்மான்கான் இருந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அது எந்த நேரமும் இறுதிக் கட்டத்தை அடையலாம். இப்படி ஒரு குற்றப் பின்னணியில் இருக்கிறார். மேலும் சமீபத்தில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத் 3.5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கின்றார். இந்தப் பீதியில் சல்மான்கான் இருக்கலாம். இந்தக் காரணங்களால் அவர் பிரிட்டனில் தலைமறைவாகிவிட்டால், குற்றவாளிக்குத் தஞ்சம் அளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும். இதனால் இருநாட்டின் சகஜ நிலை பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையே சல்மான்கானுக்கு விசா மறுப்பு.

இதைப்போன்று பல மடங்கு தீவிரமான பிரச்சனை மோடியுடையது.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி கொலைவெறித் தாக்குதல் நடத்தி பல ஆயிரம் பேரைக் கொன்ற, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்களைச் சூறையாடி துவம்சம் செய்த மெகா குற்றப் பின்னணி மோடியுடையது.

இப்படியிருக்க, அமெரிக்கா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு, தனது நாட்டின் பாதுகாப்பு கருதி எதையும் செய்ய அதற்கு உரிமை உள்ளது.

இந்திய ஜனாதிபதியையே பாதுகாப்புக் கருதி சோதனை என்ற நோக்கில் அசிங்கப்படுத்தியதை இந்தியா என்றும் மறக்காது.

அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு மெகா குற்றப் பின்னணி கொண்ட மனிதரை அனுமதிப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் என்ற தொலைநோக்கு சிந்தனையே மோடிக்கான விசா மறுப்பு.

இந்த மோடி சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒருவரை ஒரு தனியார் தொலைக்காட்சி ஓடை நேர்காணலுக்கு அழைத்தது. அங்கு தனக்கு சூனியம் வைக்கப் போகிறார்கள் என்று அறியாத மோடி பெருமையாக அங்கு அமர்ந்தார்.

நிகழ்ச்சியில் நிருபர் மோடியைப் பார்த்து குஜராத் கலவரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் கேட்டார். அந்த நிமிடம் மோடி திக்கித் திணறி, விக்கி தண்ணீர் குடித்து பேட்டியைப் பாதியில் நிறுத்தி ஓடிப்போனதை நாடே பார்த்தது.

ஏன் அமெரிக்காவும் பார்த்திருக்கலாம்.

இப்படி ஒரு அவமானத்துக்குப் பேர் பெற்ற மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை விவாதத்துக்கு அழைப்பது அடக்கமுடியா சிரிப்பை வர வைக்கிறது.

இந்த மோடி பிரதமராகவே ஆனாலும் அமெரிக்கா செல்ல முடியாது. ஏன் தெரியுமா?

அமெரிக்க விசா பெற அமெரிக்கா வைக்கும் நிபந்தனை, நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிரபராதியாக இருக்க வேண்டும். இவர் பிரதமரானால் நீதிமன்றத்தில் வழக்கு இல்லாமல் போய்விடுமா என்ன?

பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்குத் தலைமை தாங்கினார் என்ற ஒரே குற்றப் பின்னணியை கொண்ட அத்வானி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது.

இன்று நாட்டின் ஒரு சமுதாயமே வெறுக்கும் நபராகவும், வல்லரசு அமெரிக்கா புறக்கணிக்கும் நபராகவும் இருக்கும் மோடியும் அவர் சார்ந்து இருக்கும் கட்சியும் ஒருமுறை அல்ல பலமுறை சிந்திக்க வேண்டும்.

இக்கட்டுரையின் இறுதியாக கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் வைர வரிகளை நினைவுகூறி நிறைவு செய்கிறேன்.

"நீங்கள் எது ஒன்றுக்கும் ஆசைப்படுவதற்கு முன் அதற்கு உங்களை நீங்கள் தகுதியாக்கிக் கொள்ளுங்கள்”

--நெயினார் முகம்மது (கலீல்), வீரசோழன்.

UNMAIKAL said...

Narendra Modi shall not be granted US visa, says American official

Press Trust of India | Updated: August 16, 2013 17:28 IST

Washington: A top American official has opposed the grant of visa to Gujarat Chief Minister Narendra Modi because of the "very serious" doubts that remain over his role in the "horrific" 2002 riots in Gujarat.

"Modi shall not be granted the privilege of US visa because of the very serious doubts that remain and that hang over Modi relative to his role in the horrific events of 2002 in Gujarat," said Katrina Lantos Swett, vice chairwoman of the United States Commission on International Religious Freedom.

The bipartisan government commission reviews the facts and circumstances of religious freedom violations and makes policy recommendations to the US President, the secretary of State and Congress.

"There are many, many unanswered questions that remain, there are at are many grave allegations, there are huge doubts," she was quoted as saying by the New York Times.

When asked about the possibility of Mr Modi's nomination as the BJP's prime ministerial candidate for the next Lok Sabha polls, she said, "It is no outside nation's or no individual's role to tell them who should be the next leader of India."

"For the people of India, I think it is important for them to consider very carefully who it is who they want to be their next prime minister," she added.

In 2005, the US denied Mr Modi a diplomatic visa and revoked his existing tourist/business visa under the Immigration and Nationality Act, which makes a foreign government official who is responsible for particularly severe violations of religious freedom ineligible for an American visa, the NYT said.

"Obviously what happened in 2002 in Gujarat was sectarian violence on a really massive scale. I don't think you can say that that wasn't a religious issue. It was a religious issue and the 2005 visa denial harks back to that," she said.

Mr Modi has been lobbying hard to get the decision reversed.

During a recent visit to the US, BJP president Rajnath Singh had said he would request for a review of visa ban on Mr Modi.

When pointed out that courts have not yet found any evidence of Mr Modi's involvement in the 2002 riots, Ms Swett said: "Certainly in our system of justice you can be found not guilty, which is not the same thing as found innocent."

"Under these circumstances we should follow our laws, which say that we should not give a visa.

Of course Modi wants us to reverse our position because that would be part of his rehabilitation process," she said.

"One of the things that concern us is that Modi seems more concerned with rehabilitating his own reputation than with providing recompense and rehabilitation for the surviving victims of those terrible events," she added.

http://www.ndtv.com/article/india/narendra-modi-shall-not-be-granted-us-visa-says-american-official-406670

VANJOOR said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்!

அப்துல்லாஹ் பெரியார்தாசன் காலமானார்.


இஸ்லாமிய அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார்.

ஓயாத பயணங்களை மேற்கொண்டார்.

உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார்.

நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார்.

இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்!

அன்னாரின் குடும்பத்தார்க்கு இந்த இழப்பை தாங்ககூடிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அளிப்பானாக...!

எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு மறுமையில் நற்பதவி தரும்படி துஆ செய்தவனாக‌

வாஞ்ஜூர்.



Anonymous said...

பொதுவாக அரபு நாடுகளில் அரபிப்பெண்கள் ஆண்களிடம் ஏமாறுவது இல்லையே, அது ஏன்..?

'நாட்டை ஆளும் நல்ல சுல்தானாகவே அவர் இருக்கட்டுமே... பாதுகாப்பு படைத்தளபதியாகவே அவர் இருக்கட்டுமே... ஒரு பெண்ணாக ஓர் ஆணிடம் எப்படி பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்' என்ற இஸ்லாமிய அடிப்படை படிப்பினையை இந்த சின்னஞ்சிறிய மாணவிக்கு அவரின் தந்தை சொல்லிக்கொடுத்ததை, நம்ம ஊர் தவ்ஃபீக் சுல்தானா போன்ற தங்கள் சிறு வயது மகள்களுக்கு அவர்களின் பெற்றோர் தயவு செய்து சொல்லித்தர வேண்டும்.

படிப்பினைக்கான சம்பவம் இதுதான்..!
=============================

எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும் அரபி சிறுமி.
ஸ்கூல் விட்டு ரோட்டில் அப்பாவின் கார் வந்து பிக் அப் பண்ணுவதற்காக அவர் வெயிட்டிங்.

(பொதுவாக... அரபு நாடுகளில் இதுபோல ஒரு சிறுமி ரோட்டோரத்தில் தனியாக நிற்பதை எல்லாம்காண முடியாது)

அந்த வழியாக காரில் வந்த அபுதாபி சுல்தானின் மகன் பட்டத்து இளவரசர் தன்னந்தனியாக நிற்கும் சிறுமியை பார்த்ததும் ஆட்சியாளன் என்ற பொறுப்புணர்வோடு... காரை நிறுத்தி சிறுமியை விசாரிக்கிறார்.

அப்பெண் தான் நிற்பது பற்றி விபரம் கூற... "சரி, என் காரில் வா... நான் உன் வீட்டில் உன்னை ட்ராப் பண்ணி விடுகிறேன்" என்று அபுதாபி இளவரசர் அழைக்க...

சிறுமி மறுத்து விடுகிறார்.

உடனே... தன்னை சிறுமியிடம் " General Sheikh Mohammed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces " என்று அறிமுக்கப்படுத்திக்கொண்டு... "

என்னுடன் பாதுகாப்பாக வரலாம், சிறுமியே... வா" என்று கூற...

"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படையின் உச்ச தளபதியின் காரில் சிறுமியான நீ எரிச்செல்லலாம்" என்று உதவியாளர் பரிந்துரைக்க...

சிறுமி இப்போதும் மறுத்து விட, மீண்டும் காரணம் கேட்கிறார்.

"உங்களை எனக்கு தெரியும். இருந்தாலும், #அந்நியருடன்_எல்லாம்_தனியே_போகக்கூடாது என்று என் அப்பா ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கார்" என்று சிறுமி கூறுகிறார்.

மாஷாஅல்லாஹ்..!

உடனே... காரினின்றும் இறங்கி வந்து... பிளாட்ஃபார்மில் சிறுமிக்கு பாதுகாப்பாக பக்கத்திலேயே தம் உதவியாளருடன் அமர்ந்து விடுகிறார் பட்டத்து இளவரசர்.

சிறிது நேரத்தில் சிறுமியின் அப்பா வந்து அழைத்து செல்லும் வரை கூடவே இருந்து விட்டு பின்னர் கிளம்பிச்செல்கிறார்..!

பொதுவாக அரபி பெண்கள் இப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்.

அந்த அபுதாபி கிரவுன் பிரின்சிடன் நிச்சயமாக நம்ம ஊர் ஜனநாயக அரசியல்வாதிகளுக்கும் கூட பொறுப்புணர்வுக்கான பாடம் உண்டு.
By: Mohamed Ashik

suvanappiriyan said...

சலாம்! வாஞ்சூர் பாய்! நலமா?

//இஸ்லாமிய அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார்.

ஓயாத பயணங்களை மேற்கொண்டார்.

உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார்.

நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார்.//

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்!

ஈடு செய்ய முடியாத இழப்பு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

மோடிக்கு அழைப்பு: பிரிட்டனில் கடும் எதிர்ப்பு!

19 Aug 2013

லண்டன்: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வர அந்நாட்டின் எம்.பி.க்கள் சிலர் விடுத்த அழைப்புக்கு கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

லேபர் மற்றும் கன்ஸர்வேடிவ் கட்சியைச் சார்ந்த சில எம்.பி.க்கள் மோடியை, பிரிட்டனுக்கு வர விடுத்த அழைப்பு இந்தியாவில் தீவிரவாதம் வலுப்பெற உதவும் என்று கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் தலைவர் முனாஃப் ஸீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தெளிவுப்படுத்தி அவர் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் உள்துறை செயலாளர் தெரஸா மைக், இரு கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கடிதத்தில் கூறியதாவது:

பிரிட்டீஷ் அரசியலில் ஆபத்தான தவறுகளுக்கு இது
காரணமாகும்.

பிரிட்டனில் உள்ள தலைவர்களின் முட்டாள்தனமாக இதனை வரலாறு மதிப்பீடு செய்யும்.

அரசு மோடிக்கு விசாவை அனுமதித்தால் 1939ம் ஆண்டு ஹிட்லரை மகிழ்விக்க பிரதமர் சாம்பர்லைன் முயற்சித்தது போன்ற நடவடிக்கையாக
இது மாறும்.

மோடி ஆட்சியில் தொடர்ந்தால் ஹிந்து-முஸ்லிம் ஐக்கியம் சாத்தியமாகாது என்று இந்தியாவின் பிரிட்டன் தூதர் அரசுக்கு அனுப்பிய
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தகையதொரு நபரை பிரிட்டனுக்கு அழைப்பது நாட்டின் நம்பிக்கையை கெடுக்கும்.

மோடியை பா.ஜ.க.வின் மக்களவை தேர்தல் பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக ஆக்கிய பிறகும் உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைந்துள்ளது என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

http://www.thoothuonline.com