'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, September 23, 2013
இந்துக்களை ஒன்றாக்குவோம்: முஸ்லிம்களை பிரிப்போம்!
"இந்துக்களை ஒன்றாக்குவோம்: முஸ்லிம்களை பிரிப்போம்!" ஒரு தொலைக் காட்சி பேட்டியில் சுப்ரமணியம் சுவாமி மிகவும் பகிரங்கமாக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார். இனி பேட்டியை பார்ப்போம்...
கேள்வி: 'நான் ஒரு ஹிந்து நேஷனலிஸ்ட்' என்று கூறிய மோடியின் வாதத்துக்கு உங்களின் பதில் என்ன?
சுப்ரமணியம் சுவாமி: 'நான் ஒரு ஹிந்து! நான் ஒரு நேஷனலிஸ்ட்! இந்த இரண்டையும் சேர்த்தால் ஹிந்து நேஷலிஸ்ட்! இதில் என்ன தவறு இருக்கிறது? முஸ்லிம்களும் தாங்கள் ஹிந்து கலாசாரத்தை விரும்புகிறவர்களாக இருந்தால் அவர்களும் எங்களின் பார்வையில் 'ஹிந்து நேஷனலிஸ்டுகளே!'
முஸ்லிம்களைப் பற்றி நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஷியா, அஹமதியா, பரேலி என்று பல பிரிவுகள் இன்று எங்களை ஆதரிக்கின்றனர். முஸ்லிம்களுக்குள் பிரிவினை வந்து விட்டது.
கேள்வி: நீங்களும் அதைத்தானே எதிர்பார்க்கிறீர்கள்? அதாவது முஸ்லிம் ஓட்டுக்கள் சிதற வேண்டும். இந்துக்களின் ஓட்டு ஒன்றாக வேண்டும். அதன் பிறகு நீங்களும் மோடிஜியும் அரசு கார்களில் பவனி வர வேண்டும் அப்படித்தானே!
சுப்ரமணியம் சுவாமி: நரேந்திர மோடியைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் மனதில் என்ன உள்ளது என்பதும் எனக்கு தெரியாது. எனது எண்ணம் 'ஹிந்துக்களை ஒன்றாக்கு! முஸ்லிம்களை பிரித்தாளு' இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
கேள்வி: ஒரு அரசியல்வாதி இப்படி பேசலாமா! இதுதான் அரசியலா?
சுப்ரமணியம் சுவாமி: ஆம் இதுதான் அரசியல்.
கேள்வி: மிக அபாயகரமான வாதத்தை வைக்கிறீர்கள் சுப்ரமணியம் சுவாமிஜி! இது நல்லதல்ல...
சுப்ரமணியம் சுவாமி: எது அபாயகரமானது. நாங்கள் இந்துக்கள். இந்த நாட்டில் 80 சதவீதம் உள்ளோம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் 14 சதவீதமே உள்ளனர். அவர்களை பிரித்து சுமாராக ஏழு சதவீத மக்களை எங்களோடு இணைப்பது எப்படி அபாயகரமானதாகும்?
கேள்வி: இது போன்ற பிரித்தாளும் சூழ்ச்சிகளை முன்பு மறைமுகமாகத்தான் செய்து வந்தனர். இன்று நீங்கள் கேமராவுக்கு முன்னால் மிக தைரியமாக இந்த கருத்தை எந்த பயமும் இல்லாமல் வைக்கிறீர்கள்.
சுப்ரமணியம் சுவாமி: ஆம். இதில் வருத்தப்படவோ பயப்படவோ என்ன இருக்கிறது?
கேள்வி: உங்களின் கருத்தை பட்டவர்த்தனமாக தெளிவாக்கியமைக்கு நன்றி!
சுப்ரமணியம் சுவாமி: உங்களுக்கும் எனது நன்றி!
தமிழ் பார்ப்பனரான சுப்ரமணியம் சுவாமியின் பகிரங்க பேட்டியை பார்த்தோம். முன்பெல்லாம் இது போன்ற கருத்துக்களை சற்று பயந்து இந்துத்வா வாதிகளுக்குள் பகிர்ந்து கொள்வர். ஆனால் தற்போது மிக பகிரங்கமாக 'இஸ்லாமியர்களை பிரித்தாண்டு ஆட்சியைப் பிடிப்போம்! அதையும் நீங்கள் பாருங்கள்' என்று பகிரங்கமாக பேட்டி எடுப்பவரே பதறும் வண்ணம் தனது கருத்தை வைக்கிறார். பல்கலைக் கழகங்களில் இன்றும் பகுதி நேர பாடம் எடுத்து வரும் ஒரு பேராசிரியரான சுப்ரமணியம் சுவாமியின் கருத்துக்களே இவ்வளவு அபாயகரமாக இருந்தால் இன்னும் படிக்காத பாமர இந்துத்வா வாதி எந்த மன நிலையில் இருப்பார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை நேரிடையாக பார்த்தோம். கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து அந்த குழந்தையை உருவி தீயில் இட்ட நாசகாரர்கள்தான் இந்த இந்துத்வாவினர்.
இந்துத்வாவுக்கு துணை போகும் இஸ்லாமியர்களை மிக அழகாக சுப்ரமணியம் சுவாமி பட்டியலிடுகிறார்.
ஷியாக்கள் : முகமது நபி காலத்துக்கு பிறகு கலீபா உஸ்மானுடைய ஆட்சியை கவிழ்த்து வளர்ந்து வந்த இஸ்லாத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியவர்கள் இந்த ஷியாக்கள். இன்றும் அவர்கள் இந்துத்வாவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் விசுவாசத்தை காட்டுகின்றனர்.
அஹமதியாக்கள்: முகமது நபிக்கு பிறகும் ஒரு நபி உண்டு என்று வாதிட்டு இஸ்லாமிய கொள்கைகளை குழி தோண்டி புதைக்கும் அஹமதியாக்கள் இந்துத்வாவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
பரேலிகள்: உபி யில் தரீக்கா, சமாதி வழிபாடு, தனி மனித வழிபாடுகளை நடத்திக் கொண்டு அதை எதிர்க்கும் இஸ்லாமியர்களை தாக்குதல் நடத்தி அராஜகம் செய்து வரும் பரேலிகள் சுப்ரமணியம் சுவாமிக்கு நண்பர்களாம்.
இதன் மூலம் தவ்ஹீத்(ஓரிறைக் கொள்கை) எந்த அளவு இஸ்லாமியருக்கு அவசியம் என்பதை இது போன்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. நமது நாட்டை ரத்த களரியாக்கி அதன் மூலம் மனு தர்மத்தை நிலை நாட்டி விட வேண்டும் என்று மோடியும் ,சுப்ரமணியம் சுவாமி போன்றோரும் ஆலாய் பறக்கின்றனர்.
சுப்ரமணியம் சுவாமி வைக்கும் வாதங்களில் மற்றது 'இந்துக்கள் இந்த நாட்டில் 80 சதவீதம்' என்பது. தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், சீக்கியர்கள் போன்ற பெரும்பான்மை மக்கள் இந்து மதத்துக்குள்ளேயே வர விரும்புவதில்லை. பார்பனர்களையும், மார்வாடிகளையும், சௌராஷ்ட்ரர்களையும் கூட்டினால் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் கூட தேற மாட்டார்கள். தற்போதய தேர்தலுக்கு தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட மக்களின் வாக்கு இந்துத்வாவுக்கு தேவைப்படுகிறது. எனவே இஸ்லாமியர்களை காட்டி பயமுறுத்தி இந்துக்களை ஒன்றாக்க நினைக்கிறது இந்துத்வா......சாதி ஏற்றத் தாழ்வுகளை களைந்து தீண்டாமையை களைந்து அனைவருக்கும் அர்ச்சகர் உரிமையை கொடுத்து, பெண் கொடுமையை நீக்கினால் இந்து மதம் தானாக வளரும். ஆனால் இதற்கு மாற்றாக இஸ்லாமியர்களின் பிணங்களின் மீது இந்து மதத்தை வளர்க்க நினைக்கிறது இந்துத்வா...
இது நடக்காத காரியம். இந்துக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்களோடு அண்ணன் தம்பிகளாக சகோதர வாஞ்சையோடு இன்றும் பழகி வருகின்றனர். தோழர் மருதையன் நேற்று திருச்சியில் நடத்திய மோடி எதிர்ப்பு கூட்டத்தையும் அதற்கு திரண்ட மக்களையும் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும். அந்த கூட்டத்தின் ஆடியோ ஒளி, ஒலி பரப்பை நீங்களும் கேட்டு தெளிவடைவீர்களாக...
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
புதுடெல்லி: காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக லஞ்சம் கொடுத்து வருவதாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் லஞ்சம் ஒன்றும் புதிதல்ல என்று கூறினார். சுதந்திர அடைந்த காலம் முதலே மத நல்லிணக்கத்தை நிலை நிறுத்த, காஷ்மீர் அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் வி.கே.சிங் கூறியுள்ளார்.
உமர் அப்துல்லா தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்காக மாநில அமைச்சர்களுக்கு ரூ.1.5 கோடி வரை செலவிட்டதாக எழுந்துள்ள புகாரை திட்டவட்டமாக மறுத்த அவர், மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தவே அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது உமர் அப்துல்லாவிற்கே தெரியும் என்று கூறினார். நாட்டின் நலத்தை கருத்தில் கொண்டே ஜம்மு காஷ்மீர் மாநில வேளாண் துறை அமைச்சர் குலான் ஹசன் மிர்ருக்கு ராணுவம் பணம் கொடுத்ததாகவும் வி.கே.சிங் கூறியுள்ளார்.
ராணுவ உளவுப் பிரிவை பயன்படுத்தி காஷ்மீர் அரசை கவிழ்க்க வி.கே.சிங் சதி செய்தாரா குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை அவரே ஒப்புக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=63427
Keep tweeter, Facebook on u r site plz thnks
சுவாமி
அவர்கள் சொன்னதில் என்னங்க தவறு. முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும்
பகுதிகளில வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தவுடன் மற்றும் அவர்கள் நடத்தும் பிற
கூட்டங்களிலும் மும்மீன் கூட்டம் முழஙகுவது என்ன தெரியுமா? இந்த நாட்டை
இஸ்லாமிய மயமாக்குவோம், இங்கே ஷரியா கொண்டு வருவோம். எனபது தான். எந்த
தைரியத்தில் அவர்கள் முழங்குகிறார்கள். அரபு அடிமை கூட்டம் இந்த நாட்டை
பாலைவனமாக்க துடித்து சந்திலும் பொந்திலும் முழங்கும் போது, இது இந்து
மக்கள் அதிகம் உள்ள நாடு. சுவாமி அவர்கள் பேசுவதற்கு எந்த அரபு அடிமையின்
அனுமதி வாங்க வேண்டும்
//இது இந்து
மக்கள் அதிகம் உள்ள நாடு. சுவாமி அவர்கள் பேசுவதற்கு எந்த அரபு அடிமையின்
அனுமதி வாங்க வேண்டும் //
ஹிந்து மதத்தை சுவாமி அவர்கள் நன்றாக வளர்த்துக் கொள்ளட்டும். பரப்பட்டும். இந்திய ஜனநாயகம் அவருக்கும் எனக்கும் உங்களுக்கும் கொடுத்துள்ள உரிமை. ஆனால் இந்து மதத்தின் வளர்ச்சியை முஸ்லிம்களின் பிணங்களின் மேல் நடத்த வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.
சுப்ரமணியம் சுவாமி வைக்கும் வாதங்களில் மற்றது 'இந்துக்கள் இந்த நாட்டில் 80 சதவீதம்' என்பது. தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், சீக்கியர்கள் போன்ற பெரும்பான்மை மக்கள் இந்து மதத்துக்குள்ளேயே வர விரும்புவதில்லை. பார்பனர்களையும், மார்வாடிகளையும், சௌராஷ்ட்ரர்களையும் கூட்டினால் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் கூட தேற மாட்டார்கள். தற்போதய தேர்தலுக்கு தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட மக்களின் வாக்கு இந்துத்வாவுக்கு தேவைப்படுகிறது. எனவே இஸ்லாமியர்களை காட்டி பயமுறுத்தி இந்துக்களை ஒன்றாக்க நினைக்கிறது இந்துத்வா...
சரி உண்மைதான் நண்பரே. இந்துக்களை சிறுபான்மையினர் என்று அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டகோள் வைக்க தாங்கள் தயாரா ? இந்தியாவில் பெரும்பான்மை சமூகம் முஸ்“லீம்கள்தான் என்று அறிவிக்கத்தயாரா ?
//
இந்து மதத்தின் வளர்ச்சியை முஸ்லிம்களின் பிணங்களின் மேல் நடத்த வேண்டாம்
என்றுதான் சொல்கிறோம்.//
பிணங்களின் மீது மதத்தை வளர்த்தவர்கள் யார் என்று வரலாற்றில் தேடினால்,
சிறு
குழந்தை கூட "வாளால் மதத்தை பரப்பியவர்கள்" என்று அல்லாவின் பிள்ளைகளை
நோக்கி
கை காட்டும். காபிர்களின் பிணங்களின் மீதுதான் இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள்
கட்டப்பட்டன. எனவே பிணங்களின் மீது மதங்களின் வளர்ச்சியை நடத்துவது
முஸ்லிம்களுக்கே கை வந்த கலை.
இங்கே நடக்கும் சமபவகங்களுக்கு காரணகர்த்தாக்கள் முஸ்லீம்களே, ஒரு மதத்தை
அழித்து இன்னொரு மத ஆட்சியையும் சட்டங்களையும் ஏற்படுததும் உரிமையை இந்திய
அரசியல் சட்டம் யாருக்கும் வழங்கவில்லையே. அதை முஸ்லீம்கள் செய்ய வேண்டாம்
என்றுதான் சொல்கிறோம். முஸ்லீம் நாடுகளிலோ அல்லது முஸ்லீம்கள்
பெரும்பான்மையோராக உள்ள நாடுகளீல் பிற மதத்தவர் இப்படி நடந்து கொண்டால்
முஸ்லீம்கள் விட்டு வைப்பார்களா
//சுப்ரமணியம் சுவாமி வைக்கும் வாதங்களில் மற்றது 'இந்துக்கள் இந்த நாட்டில்
80 சதவீதம்' என்பது. தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், சீக்கியர்கள் போன்ற
பெரும்பான்மை மக்கள் இந்து மதத்துக்குள்ளேயே வர விரும்புவதில்லை.
பார்பனர்களையும், மார்வாடிகளையும், சௌராஷ்ட்ரர்களையும் கூட்டினால் மொத்த
மக்கள் தொகையில் 5 சதவீதம் கூட தேற மாட்டார்கள். தற்போதய தேர்தலுக்கு தலித்
மற்றும் பிறபடுத்தப்பட்ட மக்களின் வாக்கு இந்துத்வாவுக்கு தேவைப்படுகிறது.
எனவே இஸ்லாமியர்களை காட்டி பயமுறுத்தி இந்துக்களை ஒன்றாக்க நினைக்கிறது
இந்துத்வா...
//
தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் எந்த மதத்துக்குள் வருவார்கள்
என்பதையும் கொஞ்சம் விளக்கி இருந்தால் நன்றாக இருக்குமே. என்ன எதிர்
பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம். உங்களை காட்டி பயமுறுத்த
வேண்டிய அவசியம் இல்லை. உங்கள்
கூட்டத்தின் சுய ரூபங்கள் மக்களுக்கு சிறிது சிறிதாக விளங்கிகொண்டே வருகிறது.
எனவே வருங்காலத்தில் உமது கூட்டம் இந்த நாட்டை அரபுகளுக்கு
புகுந்த வீடாக்கி விடலாம் என்று எண்ணி கொண்டு இருப்பது நிறைவேற போவதில்லை
இந்துக்களை ஒன்றாக்குவது இந்த நாட்டுக்கு கண்டிப்பாக தேவை அண்ணாச்சி, அவர்கள் பிரிந்து கிடப்பதனால் தானே உமது கூட்டம் அதை பயனபடுத்தி இங்கே பாலைவன மார்க்கத்தை விதைத்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டை இஸ்லாமிய மயம் ஆக்குவோம், இங்கே ஷரியா கொண்டு வருவோம் என்று எவ்வளவு திமிருடன் கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். எனவே இந்துக்களின் ஒற்றுமை எனபது மிகவும் அவசியமாகிறது.
சுவனப்ரியரே, அன்புராஜ் சொல்லி இருப்பது போல், இந்த இணைய வட்டத்தில் உளறி
கொண்டு இருக்காமல் உங்கள் தவ்ஹீது கூட்டத்தின் தலைவரும், உலக அறிவாளிகளில்
பெரிய அறிவாளியுமான பீஜே மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ, "இந்துக்கள் இந்த
நாட்டில் சிறுபான்மையினர், முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினர்" என்று நாடு
முழுக்க அறிவிக்க உமது கூட்டத்திற்கு ஊக்கம் இருக்கிறதா? அதை செய்யுங்களேன்
முதலில்.
Post a Comment