'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, September 21, 2013
பாலகங்காதார திலகர்! சில நினைவுகள்!
படிக்கும் காலங்களில் நமது வரலாற்று புத்தகங்களில் தேசத் தலைவர்களுள் ஒருவராக திலகரை வர்ணித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இவர் உண்மையிலேயே தேசத் தலைவராக பார்க்க வேண்டியவர்தானா! பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக இவரை தேசத் தலைவராக மாற்றினார்களா? என்பதை அம்பேத்கார் அவர்களின் நூலின் மூலம் தெரிந்து கொள்வோம். நமது வரலாற்று பாடங்கள் 90 சதவீதமானவை இட்டுக் கட்டியும், பொய்களை அரங்கேற்றியும் அச்சிடப்பட்டுள்ளது. இதை வருடம் தவறாமல் நமது சிறுவர்கள் பாடங்கள் என்று படித்து வருகின்றனர். வருங்காலத்திலாவது இந்துத்வாவாதிகள் பொய்யாக புனைந்த வரலாறுகளை நீக்கி உண்மை வரலாற்று பாடங்களை நமது மாணாக்கர்கள் படிக்க வழி செய்வோமாக...
இனி அம்பேத்காரின் புத்தகத்துக்குள் நுழைவோம்.
1915 – Tilak opposed the Age of Consent Bill, brought in by Shastri, to raise the minimum Age for marriage.
1916 April 28 – Established “Home Rule League” at Belgaon
1916 December – Lukhnow Congress – Recognized Muslim Demands of Separate Electorates for Muslims.
1918 – He opposed, a Bill by Vithalbhai Patel, to legalize the inter-caste marriages. He described such marriages as “hindu-hindu che sankar karak vivah”. He declared the Bill to be against Hindu religion and said that the progeny of such marriages may inherit the property of father only and not of others. A Brahmin looses his brahmin-hood, if he marries a shudra woman, he opined.
1918 – Trip to England to file suit of defamation against Sir Valentine Chirol, who had held Tilak’s writings and work responsible for violence in India and called him “Father of Indian Unrest”. Tilak lost the case in Feb. 1919 and Returned back to Bombay in Nov. 1919
1919 December – Amrutsar Congress
1920 Feb. – March – His meetings were disrupted in Sangali, Pune and Bombay by non-Brahmins because of his speech at Athani saying non-Brahmins had no business to take education or to take part in politics.
http://ambedkar.org/jamanadas/TilakGandhi.htm
சாதி மறுப்பு திருமணம் பெரும்பாவம்
சூத்திரர்கள் கல்விக்கு,அரசியலில் பதவிக்கு வர ஆசைப்பட கூடாது.
சூத்திரர்கள் அவர்கள் சாதி தொழிலை தான் செய்ய வேண்டும்.அரசியலுக்கு வர எந்த உரிமையும் கிடையாது.
குழந்தை திருமணம்,வர்ணாசிரமம் தான் என் மதத்திற்கு ஆணி வேர்.அதை மாற்ற கூடாது.
விதவை திருமணம் பெரும்பாவம்.
வினயாகர் ஊர்வலத்தை வைத்து மக்களுக்கு வெறி ஏற்றுவதை முதலில் துவங்கி வைத்தவர் இதே திலகர்தான்..
அந்த காலத்தில் அதற்க்கு மாற்றாக இவர்களை எதிர்க்க வந்தவர்கள் மிகவும் கெட்டவர்கள்.
இந்த விநாயகர் ஊர்வலம் இன்று வரை நமது தமிழகத்தையும் நிம்மதியில்லாமல் சில காலமாக ஆக்கி வருவதை நாம் அறிவோம்.
'பிளேக்' நோய் வந்து பலர் மரித்த போது ஆங்கில அரசு எலிகளை கொல்ல உத்தரவிட்டது. 'அது எங்கள் கடவுளின் வாகனம்! அதை எப்படி நீங்கள் கொல்லப் போயிற்று?' என்று வீராப்பு பேசி அதற்கும் சிறை தண்டனை பெற்ற மகான்தான் நம்ம பாலகங்காதார திலகர்.
இப்படிப்பட்ட அரிய கருத்துக்களை தன்னுள் சுமந்து அதற்காகவே வாழ்ந்து மடிந்த ஒருவர் நமது தேசத் தலைவராம். அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சிறப்பான நினைவுகள்...
//சிறப்பான நினைவுகள்... //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே!
ஷாலி says:
September 21, 2013 at 11:59 am
நண்பர் பூவண்ணன் கூறும் கருத்தையும் நாம் மறுப்பதிற்கில்லை.சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெரும் தலைவர்களில் பலர் வெள்ளையனை வெளியேற்றத்தாத்தான் காங்கிரசில் இருந்தார்களே தவிர சமூதாயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க,மூட நம்பிக்கைகளை களைய ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. ஜெய மோகன் கூறுகிறார்.
“திலகர் அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிநிதி. தீண்டாமையை எதிர்த்தார் அதே நேரத்தில் சாதி கட்டுப்பாடுகளை முழுமையாக மறுதலிக்க அவரால் இயலவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் வேதங்கள் பயிலுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்ர் சார்ந்திருந்த சித்பவன் அந்தண வகுப்பினரே பிற அந்தணர்களால் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டு வந்ததுதான். சித்பவன் அந்தணர் குறித்த ஐதீக கதைகளின் ]]”
http://www.jeyamohan.in/?p=275
திலகரின் மதக்கொள்கை எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது என்று சொன்னால், 1897 ல் புனே,பம்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் “பிளேக்” என்னும் கொடிய நோய் பரவி மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள்.இந்நோய்க்கு முக்கிய காரணம் “எலி” என்று கண்டறியப்பட்டது.உதவிக் கலைக்டராக அப்போது பதவி வகித்த வந்த “ராண்ட்”மற்றும் “அயர்ஸ்ட்”ஆகியோர் கொண்ட குழு தீவிரமாக செயல்பட்டு பிளேக்குக்கு காரணமான எலிகளை ஒழிக்க முனைந்தார்கள்.
உடனே “வினாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா?” என திலகர் பொங்கி எழுந்தார்.”எலிகளைக் கொல்வதன்மூலம் இந்துக்களின் மனதை பிரிட்டீஷ் அரசு புண்படுத்துகிறது.”என்று அறிக்கையிட்டார்.
“இந்து மதத்திற்க்கெதிராக செயல்படுபவர்களை சிவாஜி வழியில் நின்று கொன்றால் அது தேச பக்தியே ஆகும்.” என்று தனது “கேசரி” இதழில் எழுதி இளைஞர்களை உசுப்பேற்றினார்.சனாதன கொள்கையை இறுகப்பிடித்த இரு பிராமண இளைஞர்கள்,தாமோதர ஹரியும்,பாலகிருஷ்ண ஹரியும் இவர்களைக்கொல்ல திட்டமிட்டனர்.விக்டோரிய மகாராணி பதவியேற்ற வைரவிழா 1897 ம் ஆண்டு நடைபெற்றது.அந்த விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில் “ராண்ட் மற்றும் அயர்ஸ்ட்” இருவரும் அவ்விளைஞர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.
1918 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கலப்புத் திருமண சட்ட மசோதாவை திலகர் கடுமையாக எதிர்த்தார்.”பிராமணர்கள் பிராமண அல்லாதவர்களை திருமணம் செய்து கொண்டால் பிராமணத்தன்மையை இழந்து விடுவார்கள்.”என்றார்.”அனுலோகத் திருமண்ங்களை ஆதரித்தால்,பிரதிலோகத் திருமண்ங்களை தடுக்க முடியாது.”என்றும் எச்சரித்தார்.
பிராமணரல்லாதவர்கள் அரசியல் உரிமை கோரி இயக்கங்கள் வைத்து போராடியபோது,சென்னை வந்த திலகர் பொதுக்கூட்டம் ஒன்றில்,”செக்காட்டும் செட்டியும்,செருப்பு தைப்பவனும்,துணி துவைப்பவனும் சட்டசபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர,சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல” என்று பேசினார்.
தேசப்பக்தி, நாட்டுப்பற்று போர்வையைப் போர்த்திக்கொண்டு அப்பாவி ஆடுகளுடன் சேர்ந்து அடப்பாவி ஓநாய்களும் ஒன்றாக மேயும் தேசம் நம் புண்ணிய தேசம். இங்கு யார் காந்தியவாதி?
அல்லது காந்-தீயவாதி என்று யாருக்கும் புரியவில்லை!
மோடி ஆட்சிக்கு வராதபோதே, இப்படியா?
- யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தாக்கு!
" மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?"
என்று ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்தால் கோபம் அடைந்த எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் யூ.ஆர்.அனந்தமூர்த்தி மீது அநாகரிகமான கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யூ.ஆர்.அனந்த்மூர்த்தி' " முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும். பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்? கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோது கூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://inneram.com/
Sanjiv Bhatt
The Hindutva professed by the RSS/VHP/BJP combine is far removed from the Sanatan Dharma which was practiced for thousands of years on this side of Sindhu River. WE must understand the difference between the "Hindutva" of the Sangh Parivar and the "Hinduism" practiced and followed by the forefathers of many among us. Today, Hindutva has become a tool in the hands of power-crazed politicians. I can say with pride and humility, that I might be a better "Hindu" than most of the Sangh Parivar put together!
இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளிக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பத்மாவசத்தில் அமர்ந்து வழிபாடு செய்ய பயிற்சி அளிக்க வேண்டும். வேதபாராயணம் மந்திரங்கள் ஜெபி்த்தல் பஜன் பாட்ல்கள் போன்றவை கற்றுக் கொடுக்க வேண்டும். சிலை வணக்கத்தை மறுத்து வள்ளலாா் இயற்றிய அருட்பெருஞசோதி அகவல் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் விவேகானந்தரது ஞானதீபம், ரநாராயண ககுருவின் கருத்துக்கள் அனைத்தும் இந்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் மனிதவளம் மிக்க சமூகமாக இந்தியா உருப்படும். சிலை வணக்கம் பாவம் அல்ல. இருப்பினும் கோவிலுக்கு ஒன்று மட்டும் போதும் என்பது ஸ்ரீநாராயணகுருவின் கருத்து எனக்கும் உடன்பாடே.
Post a Comment