Followers

Tuesday, September 03, 2013

பாவம் ஜனங்கள் கட்சியும், பீதியில் ஜெயிக்கும் பிளானும்

" என்னது, எங்க வீட்டு மேலேயே நானே பாம் வீசணுமா?" - கேள்வி கேட்ட திருநாவுக்கரசனை முறைப்பது போல பார்த்தார் பித்தளையழகன், பாவம் ஜனங்கள் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்.

"எலே, குமரா, இவங்கிட்ட ஒண்னும் சொல்லலையாலே..." என்று அருகிலிருந்த சகா எலை.குமரனைப் பார்த்து எரிச்சலாகக் கேட்டார்.

எலை.குமரன் உடனடியாக தலைவருக்கு அந்தப் பக்கமாக அமர்ந்திருந்த எஸ்.ஓஜாவைப் பார்த்து "நீங்க சொல்லலையா?"

"சொழ்ழேன்ல" என்றார் ஓஜா, வெற்றிலைப் பாக்கை மென்றபடி.

மீண்டும் திருநாவுக்கரசை தன்னருகே வரும்படி சைகையில் அழைத்தார். வெற்றிலையை கீழே துப்பினார்.

"இதோ பாரப்பா, நேத்து ஒங்கிட்டே சொன்னேன்ல, ஒனக்கு கட்சியில பெரிய ஆளா ஆவணும்னு ஆச இருக்கா இல்லியா?"

திருநாவுக்கரசு பவ்யமாக "இருக்குண்ணே " எனவும் ஓஜா தொடர்ந்தார்

"நாங்க சொல்றமாரி கேட்டீன்னா, வர்ர எலக்சென்ல ஒனக்கு பஞ்சாயத்து உறுப்பினராவ சீட்டு கெடக்கிம்; உங்க வீட்டு மேலே பாம் போடுவோம்; அத நீதான் ஏற்பாடு செய்யணும்"

";;;;;;;;;;;;;|"

"புரிஞ்சுதா, பாம் னா பயந்துராதே, பெட்ரோல் குண்டு தான். பெட்ரோலை ஒரு பாட்டில்ல ஊத்தி மூடி திரிய வெச்சு எரிய வெச்சுட்டு அதத் தூக்கி வீசறது தான்"

"ஆனா...." தலையைச் சொறிந்தான் திருநாவுக்கரசு "அதனாலே என்னங்க பிரயோஜனம்?"

"இருக்குலே .. "என்ற ஓஜா, கண்ணடித்தார். (நீ கேட்ட பணம் உனக்குக் கிடைக்கும் என்று அதற்கு அர்த்தம் என்று திருநாவுக்கரசு புரிந்துகொண்டான்). "முக்கியமா பெட்ரோல் குண்டு வீசறப்போ நீங்க யாரும் வீட்ல இருக்கக் கூடாது; வீசிட்டு, உடனே போய் போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்துறனும்.

"என்னன்னு கொடுக்கணும்?"

"அத நீ எழுதறாமாதிரியே நாங்க ரெடியா எழுதி வெச்சிருக்கிறோம். அதுல என்னன்னா, இந்தமாதிரி எதிர்சமுதாயத்தச் சேர்ந்த தீவிரவாதிங்க உன்னை கொல்ல முயற்சி ன்னு இருக்கும் ; ஒனக்கும் ஒரு பப்ளிசிட்டி, என்ன நாஞ்சொல்றது!"

"சரி, போலிஸ் வந்து விசாரிச்சா..?"

"நாங்க சொல்லிக் கொடுக்கற மாதிரி சொன்னா போறும்; இந்த மாதிரி எதிர்சமுதாயத் தீவிரவாதிங்களால தீவிரவாதச் செயல்கள் அதிகரிச்சிட்டு வருது" ன்னு மறக்காம சொல்லிடணும். பீதி கெளப்புறது தான் முக்கிய நோக்கம்"

"அதனால என்னங்க ஆவும்"

"பலே, பலே, அப்டிக் கேளு" என்றார் எலை.குமரன். " உன் பேரு பேப்பர்ல வரும்டா, கட்சிலேயேயும் நீ ஃபேமஸாயிருவ; அப்புறம், அப்படி பீதி கெளப்பினோம்னா, அந்த எதிர் சமுதாயத்தப் பத்தி மோசமான எண்ணம் மக்களுக்கு வரும்; முக்கியமா, நம்ம சமுதாயக் கட்சின்னு நமக்கு ஓட்டு விழும், நாம ஜெயிப்போம் -புரியுதா?"


"ஆனா நம்ம சமுதாயம் ஒன்னுதிரண்டு நமக்கு ஓட்டுப் போடும்னு நெனக்கிறீங்களா சாமி?"

"அதுக்குத் தாண்டா சொல்றோம்... ............. பயலே, நாங்க சொல்றமாதிரி செய், நம்ம தலைவரு கேடி போட்ட ரூட்டு இது.

"அண்ணே, பேசிக்கிட்டிருக்கும் போதே கோவப்படுறீங்க, சாதியத் திட்டிப் பேசறீங்களே.."

"சரி வுடு, நாமெல்லாம் ஒண்ணுமண்ணு தானேடா, என்ன ஒண்ணு நாங்க என்னத்த சொன்னாலும் உங்க ஜாதிக்காரவங்க எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களேடா"

"எங்க ஜாதி மட்டுமா; உங்க பெரிய ஜாதிக் காரவங்க கூட நம்ம கட்சிக்கு ஓட்டு போட மாட்றாய்ங்க சாமி"

"ஆங்.. மறந்துட்டேன்; தப்பித் தவறி போலிஸ் கண்டுபிடிச்சுடுத்துன்னு வை, இப்படிலாம் பேசிக்கிட்டோம்னுலாம் சொல்லப்படாது; 'எனக்கு ஃபேமஸாவனும்னு ஆச; அதான், எங்கூட்ல நானே பாம் போட்டேன்"னு சொல்லோணும்., புரிஞ்சுதா"

"சரிங்கைய்யா" என்று கிளம்பிச் செல்ல இருந்தவனை ஓஜா மறுபடி அழைத்தார்.

" உன் பொஞ்சாதியிட்டயும் சொல்லிவை; இந்தமாதிரி, பாம் வெடித்து கூந்தல் நுனி கருகிடுச்சு" அப்படி ஏதாச்சும் பேட்டி கொடுக்கணும்"

"சரிண்ணே" என்று திருநாவுக்கரசு கிளம்பியதும்

ஓஜா எலை.குமரனைப் பார்த்து சொன்னார் : 'பீதியில் ஜெயிக்கும் பிளான்" - நம்ம தலைவர் கேடிய சும்மா சொல்லக்கூடாதுங்க"

"ஓஜா, என்னதான் கேடி ப்ளான் போட்டு கொடுத்தாலும், எலக்க்ஷண்ல ஜெயிச்சோம்ணா, நம்ம கில்லாடி தாங்க பிரதமர் ஆவணும், ரொம்ப நாள் தலைவரா இருந்தவரு அவர் தானே, அதாங்க ஞாயம்"

"அட விடுங்க எல, அவரா முக்கியம், காரியம் தானே முக்கியம். ஆமா, காஸ்மூஸ் கட்சி என்ன பிளான் பண்ணப் போறாய்ங்களாம்.ஏதாச்சும் தெரியுமா?"

"நம்ம கரன்சி மதிப்பு கொறஞ்சிட்டு வருதுல்ல; அவங்க கவலை அவங்களுக்கு; ஊழல் வேற அவங்களுக்கு எதிரா இருக்குது"

நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் பித்தளையழகனார் (நம்ம கட்சியில் இல்லாத ஊழலா? என்பது போல)." தங்காருவும், அடிபட்டாரப்பாவும் நம்ம கட்சிலயும் இர்க்காங்கெடே" என்றார் மெதுவாக. "அதனால, ஊழல்ப் பத்தி பேசறதுனால மக்கள்ட்ட அதுலாம் எடுபடாது"

"அப்ப, கரன்சி மதிப்பு பத்தி பேசலாமா?"

"பேசலாம்டே, ஆனா, மக்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கு, நம்ம 'பாவம் ஜனங்கள் கட்சி'க்கும் இப்ப ஆட்சி செய்ற காஸ்மூஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லங்கறது. என்ன ஒண்ணு, நாம பெரும்பான்மை மக்களுக்குன்னு உள்ள கட்சின்னு சொல்லிக்கறோம்,அவிங்க சிறுபான்மைய்ங்களையும் சேர்த்துகறாங்க, அவ்ளோதான் வித்தியாசம்"

"அப்ப பீதிய கெளப்பி வுடறது தான் இப்ப பிளானா?"

"பின்னே, அதத்தானே செஞ்சிட்டிர்க்கோம்; தலைவர் கேடியும் அதத்தானே சொல்லிருக்காரு"

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கவிதாயினி கர்நாட்டிக்இசை அழகுராணி உள்ளே நுழைகிறார்.

"வாங்க கவிஞரே, இந்த எலக்க்ஷனுக்கு ஒரு ஸ்லோகம் சொல்லுங்க"

"எப்புடி, நாடு ஒளிர்கிறது -ன்னு முன்னே சொன்னேமே, அப்படியா?"

"ஆனா, நாம இப்ப எதிர்கட்சி, ஞாவகமிருக்கட்டும்"

"ஓ, அதெல்லாம் மறப்பேனா,யோசித்தார், பின்பு "நாரத நாடு; நாறுது பாரு!" ன்னு வெச்சுக்குங்கோ." என்றார்.

- Nazee

http://www.inneram.com/opinions/politics/1579-short-story.html

8 comments:

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

பதிந்தவருக்கு நல்ல சிந்தனை சகோ. ஆனாலும் இப்படி ஒரு நாடகத்தை பற்றி எத்தனை மக்களுக்கு இன்னும் தெரிந்திருக்கும் என்பதே கேள்வி குறிதான் !

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//பதிந்தவருக்கு நல்ல சிந்தனை சகோ. ஆனாலும் இப்படி ஒரு நாடகத்தை பற்றி எத்தனை மக்களுக்கு இன்னும் தெரிந்திருக்கும் என்பதே கேள்வி குறிதான் ! //

சரியாக சொன்னீர்கள்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

சகோ. கீழே உள்ள லிங்கில் சென்று படித்து பாருங்கள் , கோவையை பற்றி எழுதியிருக்கிறார்கள் .

http://www.vinavu.com/2013/08/30/hindutva-organization-plot-in-kovai/

Anonymous said...

அய்யா உத்தமரே, உங்கள் கூட்டம் செய்யும் மத மாற்ற மொள்ளமாறி தனங்களை பதிந்தால் வெளியிட மாட்டீர்கள் அப்படிதானே, நீங்கள் மத மாற்றம் செய்யும் வரை இதெல்லாம் நடந்து கொண்டுதான்,இருக்கும், போய் பாகிஸ்தானில் மத மாற்றத்தை பண்ண வேண்டியது தானே, பெரிய உத்தம வேஷம் போடுகிறீர்களே. எங்கள் நாட்டில் மத மாற்றம் செய்ய நீங்க யாருய்யா அரபு அடிமைகளே.

suvanappiriyan said...

//அய்யா உத்தமரே, உங்கள் கூட்டம் செய்யும் மத மாற்ற மொள்ளமாறி தனங்களை பதிந்தால் வெளியிட மாட்டீர்கள் அப்படிதானே, நீங்கள் மத மாற்றம் செய்யும் வரை இதெல்லாம் நடந்து கொண்டுதான்,இருக்கும், போய் பாகிஸ்தானில் மத மாற்றத்தை பண்ண வேண்டியது தானே, பெரிய உத்தம வேஷம் போடுகிறீர்களே. எங்கள் நாட்டில் மத மாற்றம் செய்ய நீங்க யாருய்யா அரபு அடிமைகளே. //

ஆரிய அடிமைகளாக இருந்து வரும் உங்களைப் போன்றவர்கள் எங்களை பார்த்து எள்ளலாக பேசுவது வியப்புதான்.

அந்த பெண்கள் தாங்களாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே அந்த செய்தி சொல்கிறது. ஆக....குறை உங்கள் மதத்தில் உள்ளது தோழரே..அதை சரி காண பாருங்கள்.

Anonymous said...

இந்த நாட்டுல நீங்க செய்றது நியாயம் நாங்க செய்றது துரோகமா. நீங்க முதலில் மத மாற்றம் செய்வதை நிறுத்துங்கள், மற்றவை தானாக நிற்கும்.

Anonymous said...

//ஆரிய அடிமைகளாக இருந்து வரும் உங்களைப் போன்றவர்கள் எங்களை பார்த்து எள்ளலாக பேசுவது வியப்புதான்.//
நீர் அரபு அடிமை என்பதை மறுக்காததற்கு நன்றி, நீர் ஆரிய கூட்டம் என்று சொல்பவர்கள் உம்மை போன்று வெளிநாட்டில் இருந்து எதையும் இறக்குமதி செய்யவில்லையே அதனால் அவர்களை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை, உமது கூட்டத்தை விட அவர்கள் எவ்வளவோ மேல்.

//அந்த பெண்கள் தாங்களாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே அந்த செய்தி சொல்கிறது.//
எந்த ஒரு திருடனும், கயமைத்தனம் செய்பவனும் எந்த காலத்திலும் தனது தவறை ஒத்து கொள்வதே கிடையாது. உமது கூட்டம் மட்டும் விதி விலக்கா என்ன. இங்கே யாரும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் இல்லை. உமது கூட்டத்தை விட எல்லாரும் அறிவு நிரம்பியவர்களாகவே இருக்கிறோம். எனவே புழுத்து போன இந்த பதில் வேண்டாம். தமிழ் நாட்டில் உமது கூட்டம் எப்படி மத மாற்றம் செய்கிறது, உப்பு சப்பில்லாத, உமது ஊத்தை மார்க்கத்தை எப்படி விரும்பி தாங்களாக ஏற்று கொள்ள வைக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். வேலைக்கு போகும் இடங்களில், படிக்கச் செல்லும் இடங்களில், இன்னும் துலுக்கர்களுடன் பழக்கம் வைத்து கொள்பவர்கள் எல்லாம் எப்படி மாற்றப்படுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். வேலைக்கு சென்ற பெண்களுக்கு மத போதனை செய்ய சொன்னது யார்? உங்கள் நாட்டில் இதுபோல் செய்தால் சும்மா விடுவீர்களா. வீடுகளின் வாசலில் நாய்கள் ஜாக்கிரதை என்று அறிவிப்பு செய்வது போல் இனி வருங்காலத்தில் "துலுக்கர்கள் ஜாக்கிரதை " என்று அறிவிப்பு பலகைகளை தொங்க விட வேண்டும் என்று நினைக்கிறேன்.

//.குறை உங்கள் மதத்தில் உள்ளது தோழரே..அதை சரி காண பாருங்கள்.//

உண்மைதான், எங்கள் மதத்தில் குறை இருப்பதால் தான் உம்மை போன்றவர்கள் சுதந்திரமாக இங்கே எங்களை விமர்சிக்க முடிகிறது, சுலபமாக மதமாற்றம் செய்ய முடிகிறது. அரபு சாக்கடையை இங்கே கலக்க முடிகிறது. எல்லா இந்துக்களும் தங்கள் நிலையை உணராமல் இருப்பதால் தான் உன்னை போன்றவர்கள் அரபு பாலை வனத்திற்கு இந்த நாட்டை தாரை வார்க்க துடித்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் குறையுடன் இருப்பதால் தான் எங்களை நோக்கி சுலபமாக உன்னை போன்ற அரபு அடிமைகளால் குற்றம் சொல்ல முடிகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் எங்கள் மதம் "மத சகிப்புத்தன்மை" என்ற குறை ஒன்றை கொண்டிருப்பது தான். அதனால் தான் வளமான இந்த நாட்டை பாலைவனம் ஆக்க உன்னை போன்ற துரோகி கூட்டம் துடித்து கொண்டு இருக்கிறது. எங்கள் மதத்திலும் குறைகள் உள்ளன அதை களைந்து அத்துடன் மத சகிப்புத்தன்மை என்ற குறையும் அகன்று உமது நாடான சவுதியில் எப்படி துலுக்கம் மட்டுமே உள்ளதோ அது போல இந்து சமயம் இங்கே ஆகும் போது உன்னை போன்றவர்கள் உங்கள் நாட்டிற்கே திரும்பி போக வேண்டி இருக்கும். உலகில் எவ்வளவோ மாற்றங்கள் வரும்போது இந்த மாற்றமும் வராமலா போகும் .