Followers

Sunday, September 15, 2013

உலகிலேயே உயரமான சிலையை மோடி நிறுவுகிறாராம்!

உலகிலேயே உயரமான சிலையை மோடி நிறுவுகிறாராம்!

இன்னும் இவர்கள் ஆட்சியில் என்னவெல்லாம் தமாஷாக்கள் நடக்கப் போகிறதோ! ஆர்எஸ்எஸில் வார்த்தெடுக்கப்பட்டு பின்னர் காங்கிரஸில் புகுந்து இந்த நாடு இரண்டாக பிரிவதற்கு காரணமாயிருந்தவர்களில் ஒருவராகிய வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் உலகிலேயே மிக உயரமான சிலை ஒன்றை நிறுவப் போகிறாராம். அமெரிக்க சுதந்திர தேவி சிலையை விட பிரமாண்டமாக இருக்குமாம். மற்றொரு செய்தி கிட்டத்தட்ட அதன் மதிப்பு Rs 2500, 00 00 ஆக இருக்குமாம.விவசாயியான வல்லபாய் பட்டேலுக்கு மிக உயர சிலை வைப்பதால் குஜராத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இனி குறையும் என எதிர்பார்க்கலாம். பன்னாட்டு கம்பெனிகளுக்கு விவசாய நிலங்களை தாரை வார்த்து கொடுத்து விவசாயிகளை மண்ணின் மைந்தர்களை நிர்கதியாக்கிய மோடி, இதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றலாம். :-) இனி அந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் குதூகலிப்பர்.

'இந்த சிலையை கட்டி முடிக்க நாட்டு மக்களின் உதவியை நாடுகிறேன். துப்பாக்கியோ வாளோ எனக்கு தேவையில்லை. இந்த நாட்டில் அமைதியை விதைக்கவே விரும்புகிறேன். குஜராத்தில் பிறந்த விவசாயியான பட்டேல் இந்த நாட்டை ஒன்றுபடுத்தியவர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அறியப்படுபவர். அவரை மறந்து விட்டோம். எனவே அவரது சிலை நிறுவப்பட நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைக்கிறார்.

தான் பிரதம மந்திரியாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது அமைதி வழியை தேர்ந்தெடுத்திருப்பதாக கதை அளக்கிறார். ஆர் எஸ் எஸில் வார்த்தெடுக்கப்பட்ட மோடி அமைதி வழியை தேர்ந்தெடுப்பதை இந்துக்களே நம்ப மாட்டார்கள். மேலும் ராஜாஜி, ஜின்னா, போன்றவர்களோடு ஒன்றிணைந்து இந்த நாட்டை பிரித்ததில் முக்கிய பங்கு வல்லபாய் பட்டேலுக்கு உண்டு. சுதந்திரத்துக்கு பின் ஹைதரபாத் நிஜாம் போன்றவர்களை அடக்கியதில் இவரது பங்கு உள்ளதை மறுப்பதற்கில்லை. சுதந்திர இந்தியாவில் உள் துறை மந்திரியாக யார் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பர். பாகிஸ்தான் பிரிவினை நடவாமல் தடுத்திருந்தால் உண்மையிலேயே பட்டேல் பாராட்டுக்குரியவர்தான். ஆனால் உண்மை நிகழ்வுகளோ வேறு.

மேலும உபியில் யானை சிலைகளையும் தனது சிலைகளையும் மாநிலம் முழுக்க திறந்து வைத்து வரிப்பணத்தை பாழாக்கிய மாயாவதியின் கதி நமக்கு தெரியும் அந்த வழியிலேயே மோடியும் பயணிக்கிறார். இவர் மூலம்தான் இந்தியா ஒளிரப் போகிறதாம். :-)

செய்தி ஆதாரம்:

http://www.ndtv.com/article/india/narendra-modi-plans-to-build-world-s-tallest-statue-in-gujarat-419012

----------------------------------------------------

வல்லபாய் பட்டேலின் இரும்புக்கரம் பிரிவினைக்குப்பிறகு சிறுபான்மையினராகிப்போன முஸ்லிம்களின் பக்கம் மட்டுமே நீண்டது என்பதை வரலாற்றை நுணுகிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். நாட்டின் ஒற்றுமையை விட, இந்துப் பெரும்பான்மை உடைய ஒரு நாடு தங்களுக்கு வேண்டும் என்பதில்தான் பார்பனர்கள் உறுதிகாட்டினர். அவர்களில் முதலில் நின்றவர்கள் சாவர்கரும், பட்டேலும். வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜூம்தார் பட்டேலின் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்பதைக் கூறுகிறார்.

“(கிரிப்ஸ்)அமைச்சரவைக் குழுவின் திட்டம் இதைவிடச் சிறந்தது என்னும் ஆசாத்தின் கருத்தை பட்டேல் மறுத்தார். அவர் கூறினார் - கடந்த ஒன்பது மாத காலமாக இடைக்கால சர்க்காரில் இருந்த அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது, மே 16 அறிக்கை ( அமைச்சரவைக் குழு அறிக்கை) நடைமுறைக்கு வராமல் போனதற்கு எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அதை நாம் ஏற்றுக் கொண்டிருந்தால், முழு இந்தியாவும் பாகிஸ்தான் வழியில் போயிருக்கும். இப்போது நமக்கு 75 முதல் 80 சதவீதம் வரையிலான பகுதி கிடைக்கிறது. இதை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்க்கலாம், வலுவாக்கலாம்”

அப்படியென்ன சிந்தனை அவர்களுக்கு இருந்தது?

வேறென்ன... இன்று பா.ஜ.க.வின் லட்சியமான ‘அகண்ட பாரதம்’, அன்றைய ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் போன்ற இந்துத்துவ அமைப்பினரின் ‘இந்துராஷ்டிரம் அல்லது இந்துஸ்தானம்’ என்பதுதான் பட்டேல் வளர்க்க நினைத்த, வலுவாக்க நினைத்த சிந்தனை. இந்தத் தகுதிகள் தனக்கும் பொருந்தி வருவதால் தான் பட்டேலுக்கு மோடி இரும்பில் சிலை வடிக்கப் போகிறார்.

மோடி கொண்டாடுவதற்குக் காரணமான வல்லபாய் பட்டேலின் சிறப்புத் தகுதிகள், பிறமத வெறுப்போடு நின்றுவிடவில்லை. வர்ணாசிரமத்தின் விளைச்சலான சாதியத்தையும் இரும்புமனிதர் கெட்டியாகக் கடைப் பிடித்திருக்கிறார். இதைப்பற்றிய பதிவு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 16 இல் இருக்கிறது. அதில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்.

1942இல் உலகப்போரை முன்னிட்டு, இந்தியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கோடு, வைசிராய் லின்தோ பிரபு பல்வேறு பகுதியினரின் பிரதிநிதிகளையும் தம்முடைய இருப்பிடத்துக்கு அழைத்துப் பேசினார். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஷெட்யூல்டு வகுப்புகளைச் சேர்ந்தவர் களும் இருந்தனர். இத்தகைய கீழ்த்தர மானவர்களுக்கு வைசிராய் அழைப்பு விடுத்ததை திரு வல்லபாய் பட்டேலால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதற்குப் பிறகு ஆமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திரு வல்லபாய் பட்டேல் பின்கண்டவாறு கூறினார்.

“வைசியராய் இந்து மகாசபைத் தலைவர்களை அழைத்தார், முஸ்லீக் தலைவர்களை அழைத்தார். அத்தோடு காஞ்சிகள் (எண்ணெய் எடுப்போர்), மோச்சிகள் (செருப்பு செப்பனிடும் செம்மான்கள்) போன்றோரையும் கூட அழைத்தார்”

திரு வல்லபாய் பட்டேல் மனக் காழ்ப்பும், வன்மமும், சுடுசொல்லும் கொண்ட தமது சொற்களால் காஞ்சி களையும், மோச்சிகளையும் மட்டுமே குறிப்பிட்ட போதிலும், இந்த நாட்டின் அடிமட்ட வகுப்புகளிடம், ஆதிக்க வகுப்புகளும், காங்கிரஸ் மேலிடமும் கொண்டுள்ள பொதுவான வெறுப்பை யும், இகழ்ச்சியையுமே அவருடைய உரை குறிக்கிறது என்பதில் அணுவள வும் ஐயமில்லை. (பக்கம் 338-339).

தலித்துகள் தூய்மைப் பணி செய்வதை, இந்த சமூகத்துக்கு மற்றும் கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதி மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும் என்று கீதாஉப தேசம் செய்த மோடி, அடிமட்ட மக்களின்பால் காழ்ப்புணர்ச்சியைக் கக்கிய வல்லபாய் பட்டேலை மானசீக குருவாகக் கொண்டதில் வியப்பில்லைதான்.

மேற்சொன்ன ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும்போது, வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்கும் மோடியின் கனவுத் திட்டம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மதச் சிறுபான்மை யினருக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை யாகவே படுகிறது. ஆனால் ஊடகங் களோ, மோடியின் மதவெறி முகத்தை மறைத்து, அவருக்கு ஒளிவட்டம் போடுவதையே தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

5 comments:

vivek kayamozhi said...

Nehru is the reason for our national diverse. . He miss treated jinna.
At the time of separation jinna condemned the people who destroyed patel's statue in Pakistan. He announced "patel is my beloved leader"

vivek kayamozhi said...

Nehru is the reason for our national diverse. . He miss treated jinna.
At the time of separation jinna condemned the people who destroyed patel's statue in Pakistan. He announced "patel is my beloved leader"

VANJOOR said...

.
இங்கே சொடுக்கி >>> பிறந்து 8 மாதமே ஆன 3 பிஞ்சுக் குழந்தைகளை தீயிலிட்டுப் பொசுக்கிய மிருகவெறி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் !

“குஜராத்தில் கண்டது ட்ரெய்லர்தான்; உ.பி.யில் காணப்போவது சினிமா”: என‌ முழக்கமிட்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இனப்படுகொலை!
<<< படியுங்கள்.

.

Anonymous said...

புதுடில்லி: பா.ஜ . மூத்த தலைவர் அத்வானிக்கு ஜெயிஸ்-இ- முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. சமூக வலை தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள அந்த மிரட்டலில் இந்தியாவில் எங்கு சென்றாலும் அத்வானியை கொல்லப்போவதாக அந்த மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆக்ரா பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அத்வானியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=805007

அத்வானிக்கும் தெரியும். இது அப்பட்டமாக மோடி குரூப்பின் வேலைதான் என்று. எனவே தான் பயணத்தை தள்ளி வைத்துள்ளார்.

Anonymous said...

சோலையழகுபுரத்தைச் சேர்ந்த சிவா, மதுரை வடக்குமாசி வீதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் நேற்று முன்தினம், பழம் வாங்கிய பெண்கள் இருவர் 1,000 ரூபாய்த் தாளைக் கொடுத்து, மீதிப் பணத்தைப் பெற்றுச் சென்றனர். சிவா அந்த ஆயிரம் ரூபாய்த் தாளைச் சோதித்துப் பார்த்ததில் அது போலித்தாள் எனத் தெரிந்தது. இது பற்றி அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், மறுநாளான நேற்று சிவாவின் பழக்கடையின் அடுத்துள்ள கடையில் அதே பெண்கள் பழம் வாங்கி விட்டு, ஆயிரம் ரூபாய் போலித்தாளைக் கொடுக்கும் போது கடைக்காரர்களிடம் சிக்கிக் கொண்டனர். இருவரையும் பழ வியாபாரிகள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின் திருப்பூரைச் சேர்ந்த சுசிலா, உஷா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

http://www.inneram.com/news/tamilnadu/1811-circulated-fake-currency-susela,-usha-arrested.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+inneram+%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%29