Followers

Thursday, September 26, 2013

மோடியின் திருச்சி விஜயம் ஏதும் பலனைத் தருமா?



மோடியின் திருச்சி விஜயம் ஏதும் பலனைத் தருமா?

ஒரு லட்சம் பேர் ஆன் லைனில் முன்பே புக் செய்து விட்டனர் என்ற பில்டப்போடு வழக்கமான பொய்யுரையோடு தொடங்கப்பட்ட மோடியின் கூட்டத்தை ஆன் லைனில் பார்த்தேன். இதில் இந்த பாரத தேசத்தை மதத்தால், சாதியால், மொழியால் பிளவு படுத்திய காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பி விட்டு எனது தலைமையிலான பிஜேபிக்கு ஒட்டளித்து ஆட்சியில் அமர்த்துங்கள் என்று ஏகத்துக்கும் கத்தினார். பயந்தபடியே ராஜாவும் அதனை மெல்லிய குரலில் மொழி பெயர்துக் கொண்டிருந்தார். இந்த நாட்டை மதத்தால், சாதியால், மொழியால் மக்களை பிளவு படுத்தி தற்போது பிரதம மந்திரியாக முன்னிறுத்தப் படும் அளவுக்கு வளர்ந்துள்ளதை அவரே மறுக்க முடியாது. அவரது மனசாட்சியை ஒரு முறை கேட்டுக கொண்டால் நல்லது. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அத்தனை தவறுகளையும் செய்து பல்லாயிரக்கணக்காண முஸ்லிம்களின் பிணங்களின் மேல நின்று கொண்டு இன்று எதுவுமே தெரியாதது போல் எப்படி இவரால் பேச முடிகிறது?

வழக்கம் போல் மேல் சாதியான சௌராஷ்டிரர்களை புகழவும் மோடி மறக்கவில்லை. சௌகார் பேட்டை தமிழகத்தில் உள்ளதையும் பெருமையாக குறிப்பிடுகிறார். சாதியால் மக்களை எப்படி பிரிக்கிறார் என்பதை பாருங்கள். மற்ற சாதிக்காரர்கள் மதத்துக் காரர்கள் எல்லாம் தமிழக முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யவில்லையாமா? தலித்களையும் மற்ற பிற்படுத்தப்பட்டவர்களையும் மிகக் கீழாக இன்று வரை நடத்தி வருவது சௌராஷ்டிர இனத்தவரும், பார்ப்பனர்களும் என்பதை நாம் மறுக்க முடியுமா? வர்ணாசிரமத்தை இன்றும் தாங்கிப் பிடிப்பதில் இந்த இரண்டு சாதியும் முன்னணியில் இருப்பதுதான் இவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த நன்மை.

அடுத்து தமிழகத்தைப் போலவே குஜராத்தும் கடற்கரை மாநிலமாக உள்ளதால் பல சவால்களை சந்திக்க வேண்டியதாக உள்ளது என்றும் கூறினார். பாகிஸ்தானால் பல மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும், அவர்களின் படகுகளை பிடுங்கிக் கொள்வதாகவும் குறை பட்டுக் கொண்டார். எப்படி இவர் பாகிஸ்தானைக் காட்டி, முஸ்லிம்களைக் காட்டி இந்துக்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறாரோ அதே போல் அங்கும் ஒரு சில கிறுக்கன்கள் தங்களின் அரசியலை வளப்படுத்திக் கொள்ள இந்தியாவை சீண்டிக் கொண்டே இருப்பார்கள். இது அரசியல். மோடி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறி விடப் போவதில்லை. கார்கில் போர் சிறந்த உதாரணம். பல மைல்கள் எல்லை தாண்டி வந்து கூடாரம் அமைக்கும் வரை கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தது வாஜ்பாய் அரசு. மேலும் மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்த மாநிலமும் குஜராத் தான். இவரது அரசு வெளி நாட்டு கூலிப் படையை நமது நாட்டுக்குள் ஊடுருவச் செய்து ஹேமந்த் கர்கரே போன்ற நியாயவான்களை தீர்த்துக் கட்ட பயன்படுத்திக் கொண்டதையும் நாம் மறந்து விட முடியாது. இவர் கொடுத்த பண முடிப்பை ஹேமந்த கர்கரேயின் மனைவி மறுத்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மும்பை தாக்குதலில் பல விடை தெரியாத கேள்விகள் இன்னும் இருக்கின்றன.

அடுத்து குஜராத் ஒளிர்கிறது அதைப் போல் பாரதத்தையும் வளமாக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வழக்கமான பொய்யை கூறவும் இவர் தயங்கவில்லை. குஜராத்தில் வளர்ச்சி அல்ல வீழ்ச்சி என்பதை பலர் ஆதாரங்களோடு விளக்கினாலும் இவர் அதற்கு பதில் சொல்லாமல் வழக்கமான பொய்களை அடுக்கிக் கொண்டே சென்றார்.

இந்தியா டுடேயில் வந்த ஆதாரபூர்வமான செய்தியை கீழே தருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

The exercise was to categories Indian states under three heads for funding purposes: least developed states, less developed states and relatively developed state. Gujarat is at 12th position from top on the development index. At the bottom is Odisha and the Goa sits on top of the list.

Gujarat falls in the less developed category. With this new categorisation, Finance Minister P. Chidambaram has sought to do away with the special status.

The Raghuram Rajan Committee had made the recommendation that states that score 0.6 and above on the index may be classified as least developed; states that score below 0.6 and above 0.4 may be classified as less developed and the states that score below 0.4 may be classified as relatively developed.

The Committee has proposed a general method for allocating funds from the Centre to the states based on both a state's developmental needs as well as its performance.

As per the list, Odisha, Bihar, MP, Chhattisgarh, Jharkhand, Arunachal Pradesh, Assam, Meghalaya, Uttar Pradesh and Rajasthan come under the least developed category. Under the less developed category come Manipur, West Bengal, Nagaland, Andhra Pradesh, Jammu and Kashmir. Mizoram, Gujarat, Tripura, Karnataka, Sikkim and Himachal Pradesh. In the list of relatively developed states come Haryana, Uttarakhand, Maharashtra, Punjab, Tamil Nadu, Kerala and Goa.

The report has been put in public domain for further fine tuning.


Read more at: http://indiatoday.intoday.in/story/raghuram-rajan-committee-report-demolishes-modis-claims-of-development-in-gujarat/1/311856.html

ஆக வழக்கமான பொய் பிரசாரத்தோடு மோடி கூட்டம் நிறைவடைந்தது. பணம் கொடுத்து பலரை கொண்டு வந்ததாகவும் முக நூலில் பார்த்தேன். டாஸ்மார்க் கடைக்கு சென்று கொடுத்த பணத்துக்கு சாராயத்தையும் அரை பிளேட் பிரியாணியையும் உள்ளே தள்ளி விட்டு பணம் வாங்கியவர்கள் சுகமாக தூங்க சென்று விடுவார்கள். இதை விடுத்து வேறு எந்த மாற்றமும் இந்த கூட்டத்தால் வந்து விடப் போவதில்லை.

முடிவில் மோடி 'பாரத் மாதாகி ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் ஆக்ரோஷமாக முட்டியை உயர்த்தி கத்தினார். மக்களிடத்தில் நோ ரெஷ்பான்ஸ. பணம் வாங்கிக் கொண்டு கூட்டத்துக்கு வந்தவர்களாவது சற்று குரலை உயர்த்தி கத்தியிருக்கலாம். மேடையில் இந்திய படத்தோடு ஒரு பெண் தெய்வ படமும் இணைந்திருந்தது. அதுதான் பாரத் மாதாவா... பாரத் மாதா யார் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு வேளை சோனியா காந்தியை சொல்கிறாரோ!

11 comments:

சிராஜ் said...

சலாம் அண்ணன்,

மோடி ஆட்சிக்கு வரனும்... வந்தால் மட்டும் தான் அவர் திறமையை நாடு புரிந்து கொள்ளும்.. இன்னைக்கு யார் யார்லாம் சிலாகிச்சி பேசுறாங்களோ அவங்க எல்லாம் திட்டுவாங்க....

இல்லாட்டி மோடி வந்தா நாட்டை முன்னேத்தி இருப்பார்னு கடைசி வரை சொல்லிகிட்டே தான் இருப்பாங்க... மோடி திறமையானவராகவே வரலாற்றில் பதிய பட்டு விடுவார்.... :)

முஸ்லிம்களை கொல்லுவாங்கன்னு நினைக்கிற உங்க கவலை புரியுது... காங்கிரஸ் மட்டும் நம்மல காக்காவா அண்ணே செய்து... குஜராத் கலவரத்துக்கு பிறகு நேர்மையான அரசா இருந்து இருந்தால் உ.பி கலவரம் நடந்து இருக்கக் கூடாது... ஆனாலும் நடக்குது... நமக்கு அல்லாஹ் போதுமானவன் அண்ணே.. இவங்க யாரும் நம்மல காப்பாத்த போறது இல்லை... நம்ம மட்டும் தான் காப்பாத்திக்கனும்....

வஸ்ஸலாம்...

Unknown said...

மோடி உரையை நானும் பார்த்தேன்... குஜராத்தில் உண்மையாக
வளர்ச்சி இருந்திருந்தால் அவர் அதை பற்றி அல்லவா
பேசி இருக்க வேண்டும் . ஆனால் அவர் பேசியது முழுவதும் எதிர் கட்சி
பற்றி ஒப்பாரி தான் !
காரணம் இவர் ஆட்சியில் வளர்ச்சி என்பது இல்லை !
குஜராத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றி
சுவனப்பிரியன் உட்பட பல பேர் ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர் !
அடுத்ததாக இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றி பேசியது ?
இலங்கை ஒரு தனி நாடு . அங்கு நடந்த இன படுகொலைக்கு
இந்தியா எப்படி காரணம் ஆக முடியும் .
அனால் குஜராத் இந்திய மாநிலங்களில் ஒன்று . அதுவும்
அவர் ஆளும் ஒரு மாநிம் . அங்கு திட்டமிட்ட ஒரு இன படுகொலை
செய்து விட்டு நம் தமிழ் நாட்டில் வந்து வெட்டி வியாகியான்ம்
பேசுறாரு !
அடுத்ததாக தமிழன் என்ற இனம் உண்டு , அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு !
என்று எழுதி கொடுத்ததை அப்படியே பேசினார் .
அது என்ன குணம் என்பது நாடல மன்ற தேர்தல் முடிவில் தெரியும் .
காரணம் கடந்த திமுக ஆட்சியில் வடிவேலு செய்த சூராவெளி பிரச்சாரத்தில்
மக்க்ள் கூட்டத்தை பார்த்து திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வர போகிறது
என்று நினைத்தனர் ஆனால் முடிவில் வந்திருந்த கூட்டம் அவரை சும்மா பாக்கதான்
வந்தது என்று !
ஆகவே பாஜாக வந்த கூட்டத்தை பார்த்து விட்டு நாடல மன்ற தேர்தலில்
ஜெத்துவிடலாம் என்பது கனவிலும் நடக்காத ஒன்று ! காரணம்
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ் நாட்டை கலவர பூமியாக
மாற்ற எங்களுக்கு எண்ணம் இல்லை !

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//முஸ்லிம்களை கொல்லுவாங்கன்னு நினைக்கிற உங்க கவலை புரியுது... காங்கிரஸ் மட்டும் நம்மல காக்காவா அண்ணே செய்து... குஜராத் கலவரத்துக்கு பிறகு நேர்மையான அரசா இருந்து இருந்தால் உ.பி கலவரம் நடந்து இருக்கக் கூடாது... ஆனாலும் நடக்குது...//

கலவரம் வரும் என்பது ஒரு புறம் இருந்தாலும் கடந்த முறை வாஜ்பாயின் ஆட்சியை நாம் நினைவில வைக்க வேண்டும். அவர்களது ஆட்சியில் திட்டமிட்டு உளவுத் துறையிலிருந்து, ராணுவம், காவல் துறை என்று அனைத்து இடங்களிலும் இந்துத்வாவினரை அவசர கதியில் கொண்டு வந்தனர். அதன் பலனை கடந்த 10 வருடங்களாக நாம் அனுபவித்து வருகிறோம். எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடன் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பின் ஈமெயில் அடுத்த ஐந்து நிமிடத்தில் உளவுத் துறை மூலம் வெளியிடப்படும். அப்பாவி இளைஞர்கள் சிறைபடுத்தப்படுவார்கள்.

எனவே பிஜேபி என்ற தீய சக்தி வளருவதை நாம் முடிந்த மட்டும் தடுக்க முயற்சிப்போம். நமது எதிர்ப்பையும் மீறி மோடி ஒருக்கால் வந்து விட்டால் அதனையும் எதிர்க்கும் சக்தியை இறைவன் நமக்கு கொடுப்பான். எனவே முயற்சியை கை விட வேண்டாம.

வஸ்ஸலாம்.

Anonymous said...

Asslamualaikum, May peace and blessings of Allah be on you

May Allah bless you in your faith in Islam. May Allah give you all the happiness and peace in this world and a beautiful heaven in here after.



Walk the talk. Facts are facts.



The exercise was to categories Indian states under three heads for funding purposes: least developed states, less developed states and relatively developed state. Gujarat is at 12th position from top on the development index. At the bottom is Odisha and the Goa sits on top of the list.

Gujarat falls in the less developed category. With this new categorisation, Finance Minister P. Chidambaram has sought to do away with the special status.

The Raghuram Rajan Committee had made the recommendation that states that score 0.6 and above on the index may be classified as least developed; states that score below 0.6 and above 0.4 may be classified as less developed and the states that score below 0.4 may be classified as relatively developed.

The Committee has proposed a general method for allocating funds from the Centre to the states based on both a state's developmental needs as well as its performance.

As per the list, Odisha, Bihar, MP, Chhattisgarh, Jharkhand, Arunachal Pradesh, Assam, Meghalaya, Uttar Pradesh and Rajasthan come under the least developed category. Under the less developed category come Manipur, West Bengal, Nagaland, Andhra Pradesh, Jammu and Kashmir. Mizoram, Gujarat, Tripura, Karnataka, Sikkim and Himachal Pradesh. In the list of relatively developed states come Haryana, Uttarakhand, Maharashtra, Punjab, Tamil Nadu, Kerala and Goa.

The report has been put in public domain for further fine tuning.

suvanappiriyan said...

சகோ அல் மூமின்!

//ஆகவே பாஜாக வந்த கூட்டத்தை பார்த்து விட்டு நாடல மன்ற தேர்தலில்
ஜெத்துவிடலாம் என்பது கனவிலும் நடக்காத ஒன்று ! காரணம்
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ் நாட்டை கலவர பூமியாக
மாற்ற எங்களுக்கு எண்ணம் இல்லை ! //

உண்மையான கருத்து. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

சுவனம் ஏன் முஸ்லீமகளைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறிர்கள்?

தமிழன் என்பவனைப்பற்றி இல்லையா உங்கள் கவலை?

மனுதர்ம ஆட்சியைப்ப்பற்றி மட்டுமே என் கவலை. தமிழன் வாழ மோடியை தூக்கி எறிவோம்

suvanappiriyan said...

//தமிழன் என்பவனைப்பற்றி இல்லையா உங்கள் கவலை?//

நானும் இனத்தால் தமிழன் தானே. எனக்கு மட்டும் தமிழனின் உயர்வில் அக்கறையிருக்காதா?

Unknown said...

உங்களுக்கு தமிழன் பற்றி கவலை
ஆனால் எனக்கு இந்த முழு தேசத்தை பற்றி கவலை
இந்த காவி பயங்கரவாத கும்பல் நாட்டை கூறு போட்டு
விடுவார்களோ ? என்று .

suvanappiriyan said...

//ஆனால் எனக்கு இந்த முழு தேசத்தை பற்றி கவலை
இந்த காவி பயங்கரவாத கும்பல் நாட்டை கூறு போட்டு
விடுவார்களோ ? என்று . //

உண்மைதான் சகோ. இந்த காவிகள் பிரிதொரு முறை இந்த நாட்டை கூறு போட்டு விடுவார்களோ என்ற கவலை இந்த நாட்டை நேசிக்கும் எல்லோருக்கும் இருக்கிறது.

Anonymous said...

அண்ணாச்சி...சிராஜ் அண்ணன் சொல்வது புரியவில்லையா?

வாங்க அண்ணாச்சி...குண்டு வைப்போம்.

இப்படிக்கு
ராவணன்

Anonymous said...

அண்ணாச்சி...
துலுக்கர்களும்...பிராமணர்களும் ஒருபோதும் தமிழர்களாக இருக்கமுடியாது.

இப்படிக்கு
ராவணன்