Followers

Sunday, September 29, 2013

உதிரம் கொடுத்து உயிர்களைக் காப்போம்!

'ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32


சவுதி தலைநகர் ரியாத்தில் இரத்ததான முகாம்.

இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி - இரத்த வங்கி, தபாப் ஸ்ட்ரீட், (மெக்கா ரோட் என்ட்ரன்ஸ் எண் 1.

நாள்: 04, அக்டோபர், 2013 வெள்ளி காலை 9 லிருந்து மாலை 5 மணி வரை

தாங்கள் வழங்கும் இரத்தம் இவ்வருட ஹஜ் பயணிகளில் தேவையானோருக்கு பயன்படுத்தப்பட உள்ளது.


வருட வாரியாக இரத்த தான விபரம்

2013 ம் வருடம் 149 நபர்கள்
2012 ம் வருடம் 1214 நபர்கள் (வெளிநாடுகளில் முதலிடம்)
2011 ம் வருடம் 915 நபர்கள் (மண்டலங்களில் முதலிடம்)
2010 ம் வருடம் 715 நபர்கள் (மண்டலங்களில் முதலிடம்)
2009 ம் வருடம் 395 நபர்கள்
2008 ம் வருடம் 331 நபர்கள்
2007 ம் வருடம் 307 நபர்கள்

இதுவரை இரத்த தானம் செய்தவர்கள் 4026 நபர்கள்.

(இறைவா) எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக. (அல்-குர்ஆன் 7:156)

இரத்த தானம் செய்வீர்!

இறையருளைப் பெறுவீர்!!

1. இரத்த தானம் :-
இரத்தானம் (குருதிக்கொடை) என்பது தேவைப்படும் இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி சேமித்து வைத்தலாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 4.5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் உடலில் இருந்து ஒரு நேரத்தில் 400-450 மி.லி. இரத்தம் வரை எடுக்கப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் தானாகவே மீண்டும் உற்பத்தியாகிவிடும். இரத்தம் குறைந்து விட்டதே என்ற தவறான கருத்து தேவையே இல்லை.

2. இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் :-
1) வயது 18 முதல் 55 வரை. உடல் எடை 50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
2) எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, இருதய நோய்கள், காசநோய் போன்ற பெரு வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
3) இரத்த தானம் செய்யும் நான்கு மணி நேரத்திற்குள் நல்ல உணவு உட்கொண்டிருக்க வேண்டும்.
4) முந்தைய நாள் இரவு கண்டிப்பாக நல்ல தூக்கம் முக்கியம்.
5) தங்களுடைய சவூதி அடையாள (IQAMA - இக்காமா) அட்டை அல்லது செராக்ஸ் காப்பி அவசியம்.

3. இரத்த தானம் கேள்வி பதில்கள் :-

1. இரத்த தானம் செய்ய எவ்வளவு நேரமாகும்? குறைந்த பட்சம் 15 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 1/2 மணி நேரம் ஆகலாம்.
2. எத்தனை மாத இடைவெளிகளில் இரத்த தானம் செய்யலாம்? 3 மாத இடைவெளிகளில் இரத்த தானம் செய்யலாம்.
3. இரத்த தானம் செய்யும் முன் சாப்பிடலாமா? ஆம், இரத்த தானம் செய்யும் முன் நான்கு மணி நேரத்திற்குள் அதிகதிகமான திட, திரவ உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
4. இரத்த தானம் செய்த பின் என்ன செய்ய வேண்டும்? திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து வேலைகளையும் செய்யலாம்.
5. இரத்த தானம் செய்யக் கூடிய இரத்தம் யாருக்கு பயன்படும்? சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர், இதய அறுவை சிகிச்சை செய்வோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை, கடுமையாக தீக்காயம் பட்டவர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள்.

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல – நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!

சமுதாய நலன் கருதி வெளியிடுவோர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம் (TNTJ Riyadh),
சவூதி அரேபியா.

No comments: