Followers

Monday, September 09, 2013

முஜாஃபர் நகர் கலவரம் நேரடிக் காட்சிகள்!இஸ்லாமியனாக பிறந்து விட்ட ஒரு குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றமும் இந்த மக்கள் செய்து விட வில்லை. இன்று சொந்த நாட்டிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவில்லை: உடுக்க உடையில்லை: இருக்க இருப்பிடம் இல்லை. அத்தனையையும் இந்துத்வா வாதிகள் எரித்து நாசமாக்கியுள்ளனர்.

குஜராத்தில் எவ்வாறு இன அழிப்பு செயல்படுத்தப்பட்டதோ அதே பாணியை பின் பற்றி இங்கும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர். ஜாட் இனத்தவரின் கிராமத்துக்கு கேமரா மேன் சென்ற போது அந்த மக்கள் 'வெளியிலிருந்து இருட்டான நேரத்தில் ஒரு கும்பலாக ஒரு கூட்டம் வந்து இந்த அழிவை செய்து விட்டு சென்றுள்ளது. உள்ளூர் காரர்கள் யாரும் இந்த இன அழிப்பில் ஈடுபடவில்லை' என்று சொல்கின்றனர். உள்ளூர்காரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய இன அழிப்பை செய்து விட முடியுமா?

நாட்டு மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை: எத்தனை உயிர்கள் போனாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்: மோடியை பிரதமராக்கிப் பார்க்க வேண்டும். சிதறுண்டு கிடக்கும் இந்து ஓட்டுக்களை இது போன்ற கலவரங்களின் மூலம் பிஜேபிக்கு திருப்ப வேண்டும்: என்ற ஒற்றை எண்ணத்திலேயே இந்துத்துவா வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இது இந்து மதத்தை மேலும் சிக்கலாக்கி அந்த மதத்தை அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்று விடும் என்பதை ஏனோ இவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இந்த ஏழைகளின் கண்ணீர் இந்த அயோக்கியர்களை இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் பிடிக்கும். அதுவரை நாமும் பொறுப்போம்.

8 comments:

சிராஜ் said...

திட்டமிட்டு... பொய் பரப்பி...
அடுத்த உயிர கொல்றதுக்கு எப்படி மனம் வருதுன்னு தெரியல..

காட்டுமிராண்டிகள்...

VANJOOR said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

தாங்களின் இப்பதிவை முழுமையாக என்னுடைய பதிவில் இணைத்திருக்கின்றேன்.


சுட்டி: >>> பழைய பாகிஸ்தான் வீடியோவை எடிட் செய்து பயன்படுத்தி இந்து - முஸ்லீம் கலவரம் பரவச் செய்து முஸ்லீம்களை கொல்லும் ஹிந்துத்துவா சக்திகள்!

.

சுவனப் பிரியன் said...

சகோ சிராஜ்!

//திட்டமிட்டு... பொய் பரப்பி...
அடுத்த உயிர கொல்றதுக்கு எப்படி மனம் வருதுன்னு தெரியல..

காட்டுமிராண்டிகள்...//

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் அந்த மக்கள் நாட்டுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடும் அபாயமும் உண்டு. அது ஒட்டு மொத்த இந்திய தேசத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை ஏனோ இந்த காட்டுமிராண்டிகள் உணருவதில்லை.

சுவனப் பிரியன் said...

வஅலைக்கும் சலாம்! வாஞ்சூர் அண்ணன்!

//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

தாங்களின் இப்பதிவை முழுமையாக என்னுடைய பதிவில் இணைத்திருக்கின்றேன்.//

வருகைக்கும் பகிரிவுக்கும் நன்றி!

VANJOOR said...

உ.பி கலவரம் - டிவிட்டர், சுப்ரமண்ய சுவாமி, தொகாடியாவுக்கு எதிராக புகார் பதிவுபுது டெல்லி : உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் நடைபெற்ற கலவரத்தை தூண்டியதாக டிவிட்டர், சுப்ரமண்ய சுவாமி, தொகாடியா ஆகியோருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வகுப்பு கலவரத்தில் இது வரை 31 நபர்கள் பலியானதோடு 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாபர் மசூதி இடிப்புக்கு பின் இப்போது தான் உத்தரபிரதேசத்துக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

காதல் தகராறாக தொடங்கிய இம்மோதல் இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலாக மாறும் வகையில் சமூக வலைத்தளங்களை சிலர் முறைகேடாக பயன்படுத்தினர். அவ்வாறு இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரும் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டரில் கருத்தளித்த பாஜகவை சார்ந்த சுப்ரமணியன் சுவாமி, விசுவ இந்து பரிஷத்தை சார்ந்த ப்ரவீன் தொகாடியா மற்றும் பல்வேறு புகார்களுக்கு பின்னும் மேற்குறிப்பிட்டவர்களின் டிவிட்டர் கணக்குகளை நீக்க மறுத்த டிவிட்டர் போன்றவை மீது தேசிய மனித உரிமை ஆணையத்திலும் தில்லி காவல்துறையிலும் தில்லியை சார்ந்த வழக்கறிஞர் செஹ்ஜாத் பூனாவாலா புகார் பதிவு செய்துள்ளார்.

செஹ்ஜாத் தன் புகாரில் மக்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியது, மத கலவரத்தை தூண்டியது, ஒரு மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சியை தூண்டியது என பல்வேறு பிரிவுகளின் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்திய குற்றவியல் சட்டம் 1860, தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 66ஏ, 295ஏ ஆகிய பல்வேறு விதிகளை மீறும் வகையில் #UPriots, #MusaffarNagar எனும் பெயர்களில் டிவிட்டரில் கருத்தளித்தாக கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய புகாரில் டிவிட்டரில் @Brain_hunt, @Swamy39,@Chotebhai1, @AMIT JAINDB, @InternetHindus, @Hiindus, @S_hindurashtra, @GuptaChiranjeev, @HazirJawab, @KaliaUstad, @paidmediahatesh, @biswajeetdash எனும் பெயர்களில் உள்ளவர்களின் ஐ.பி அட்ரஸ் மூலம் அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் அப்புகாரில் செஹ்ஜாத் கூறியுள்ளார்.

Source:Inneram.com

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

ஒன்னும் சொல்றதுக்கில்ல ..நமக்கு சஹீதுடைய அந்தஸ்து கிடைக்க காவிகள் பாடுபடுகிறார்கள் !! அம்புடுதேன் !

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//ஒன்னும் சொல்றதுக்கில்ல ..நமக்கு சஹீதுடைய அந்தஸ்து கிடைக்க காவிகள் பாடுபடுகிறார்கள் !! அம்புடுதேன் ! //

சரியாகச் சொன்னீர்கள்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Kalai said...

பாவம் ........ ஏழை அப்பாவி மக்களை கூடமாக வந்து கொல்லும் கோழைகளை என்னவென்று சொல்வது...... மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் நடக்கும் கொடூரங்கள் தடுக்கப்பட வேண்டும்