Followers

Monday, September 30, 2013

நண்பர் முனியாண்டிக்கு எனது விளக்கங்கள்!

//முஸ்லிம் நண்பர்களுக்காக எங்கள் மதக் கட்டுப்பாடுகளை நாங்கள் எளிதில் மீறமுடியும்.உங்களில் எத்தனைபேர் இதே போலக் மதக் கட்டுப்பாடுகளை உடைத்து நட்புக் கொள்ளத் தயாராய் இருக்கிறீர்கள் சொல்லுங்கள் ???.//

இஸ்லாம் மார்க்கமானது முழு உலகுக்கும் முழு மனித குலத்துக்கும் சொந்தமானது. எனவே நண்பர் முனியாண்டியோடு நான் நட்பு பாராட்ட வேண்டுமானால் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை விட அவசியமில்லை. அதே போல் நீங்களும் முஸ்லிம்களுடன் நட்புடன் பழக இந்து மத சடங்குகளை விட அவசியமில்லை. இதற்கு மாறாக எந்த முஸ்லிமும் உங்களிடம் 'இஸ்லாம் இந்துக்களோடு பழக தடை விதிக்கிறது' என்று சொன்னாரேயானால் அதற்கான ஆதாரத்தை கேளுங்கள். இஸ்லாம் மாற்று மதத்தவரோடு நட்புடனேயே பழக கட்டளையிடுகிறது. அதற்கான ஆதாரங்களை வரிசையாக பார்ப்போம்.

முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது.

பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லா விட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஒரு கிராமவாசி பள்ளிவாசரினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் 6025

அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் பலர் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர். (ஆதார நூல்: புகாரி 1356)

நபிகள் நாயகமே தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (ஆதார நூல்: புகாரி 2916, 2068)

யூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர். (ஆதார நூல்: புகாரி 2617)

யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். (ஆதார நூல்: புகாரி - 2412, 2417)

இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் சகோதரப் பாசத்துடன் பழகியவர்கள்.
இன்னும் சொல்லப் போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது.

அதே நேரம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றும் நரேந்திர மோடி மற்றும் இந்துத்வ சக்திகளை இதே அளவுகோளோடு பார்க்க முடியாது. அவர்களின் சதிகளை, திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்களும் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வார்கள். இங்கு சமாதானம் பேசினால் கதைக்காகாது. அந்த எதிர் முயற்சிகளும் இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காவல் துறை, மற்றும் கோர்ட், போராட்டம் என்ற வகையில் அந்த எதிர்ப்புகளை முஸ்லிம்கள் எதிர் கொள்வார்கள். எனவே இரு சாராரையும் பிரித்துப் பார்த்து முஸ்லிம்களோடு இணக்கமாக வாழ பிரியப்படும் முனியாண்டி, மாணிக் வீரமணி, கோவிந்த ராஜ் குமார் போன்ற இந்து நண்பர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும்.

சில முஸ்லிம்கள் எந்த நேரமும் முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு எதையோ சிந்தித்தவர்களாக மாற்று மதத்தவரோடு ஒட்டாமல் வாழ்வார்கள். அது இஸ்லாம் மார்க்கம் காட்டித் தரும் வழி அல்ல.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

(அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி),நூல் : முஸ்லிம் 5056)

எல்லாவற்றிலும் மென்மை தான் அழகு என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ஏனைய பொருள்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் மென்மையான பொருள் அவைகளை விட அழகாக மிளிர்வதை உணரலாம். எனவே மென்மையான வாழ்வு முறையை கடைபிடித்து மாற்று மதத்தவரோடு அன்போடு பழகி நமது மார்க்கத்தையும் சிறந்த முறையில் பேணி நமது இந்திய நாட்டுக்கு பெருமை சேர்ப்போமாக....

3 comments:

suvanappiriyan said...

வாஷிங்டன்: அமெரிக்காவில் பல்வேறு அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிப்பால் அமெரிக்கா திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிப்பால் நிலைமையை சமாளிக்க செலவின மசோதா, பட்ஜெட்டுக்கு ஆளும் ஜனநாயக கட்சி ஒப்புதல் அளித்தது. ஆனால், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஒத்துழைப்பு இல்லாததால் பட்ஜெட், செலவின மசோதா நிறைவேற்றப்படவில்லை.

குடியரசு கட்சி எதிர்ப்பால் செனட் சபையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் நிதிநிலை கருதி பல்வேறு அரசு நிறுவனங்களை மூட அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் முக்கிய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ஒபாமாவின் இந்த நடவடிக்கையால் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடப்படுவது 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறை ஆகும்.

WASHINGTON —The federal government shut down for the first time in nearly two decades following more than a week of legislative jockeying by House Republicans to extract concessions from President Obama and Senate Democrats on the Affordable Care Act. http://www.usatoday.com/story/news/politics/2013/10/01/government-shutdown-congress/2899657/

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லாத்தான் சொல்றீங்க... ஆனால் விளக்கம் அவரவர் உணர வேண்டியது...

Unknown said...

அமெரிக்க அரசு மற்ற நாடுகளை
அழிப்பதற்கு பயன் படுத்திய பல
டிரில்லியன் டாலரை அன்னாடு
முன்ணேற்றத்திற்கு பயன்படுத்தி இருந்தால்
எவ்வளவோ முன்னேறி இருக்கும் !

அமெரிக்க அரசு மற்ற நாடுகளை
அழிப்பதற்கு பயன் படுத்திய பல
டிரில்லியன் டாலரை அன்னாடு
முன்ணேற்றத்திற்கு பயன்படுத்தி இருந்தால்
எவ்வளவோ முன்னேறி இருக்கும் !

அங்கு பல லட்சம் பேர் வேலயில்லாமல்
இருக்கின்றனர்.
தர்போது பல லட்சம் பேர் வேலை இழக்கபோகின்றனர் !

உலகக்திற்கே வல்லரசு நாடு என்று அழைக்கடும் நாடு
ஆனால் குற்றங்கள் மற்றும் திருட்டு அதிகம் நடக்கும் நாடு !
இப்படி பட்ட நாடு எப்படி மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்க முடியும் ?