'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, September 08, 2013
உபியில் அதிகரிக்கும் வகுப்புக் கலவரங்கள்!- பின்னணியில் குஜராத் அமித்ஷாவா?
'போகிற போக்கை பார்த்தால் நான் பாராளுமன்றத்துக்கு போவதற்கு பதில் திகாருக்கு சென்று விடுவேனோ! மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம்?'
----------------------------------------------------------------
மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் உத்தரபிரதேச மாநிலத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்து வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் வெடித்த வகுப்புக் கலவரத்தில் பத்திரிகையாளர் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி கவால் கிராமத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து மாவட்டத்தில் கலவர சூழல் நிலவியது. ஐ.பி.என் - 7 சேனலின் பத்திரிகையாளர் ராஜேஷ் வர்மா, போலீசுடன் நின்றுக்கொண்டிருந்த போட்டோ கிராஃபர் இஸ்ரார் மற்றும் நான்குபேர் பலியாகியுள்ளனர். மக்கள் கூட்டத்தின் தாக்குதலில் இவர்கள் பலியாகியுள்ளனர்.
முன்னர் நடந்த மோதலில் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக் கோரி கூட்டம் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கலவரம் நிகழ்ந்துள்ளது. கலவரத்தில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பாசியக்லா கிராமத்தில் இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த கல்வீச்சில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.இன்னொரு இடத்தில் மக்கள் கூட்டம் வாகனத்திற்கு தீவைத்துக் கொளுத்தியது. தடை உத்தரவை மீறி மக்கள் கூட்டமாக திரண்டனர்.
இதனிடையே உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய வீரேந்தர் சிங் என்பவரை க்ரைம் ப்ராஞ்ச் கைது செய்துள்ளது. இவர் உத்தரபிரதேச மாநில முன்னாள் கேபினட் செயலாளர் சசாங் சேகர் சிங்கின் உறவினர் ஆவார். இங்கு கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நிகழ்ந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
வன்முறையைத் தொடர்ந்து அரசு கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்தியுள்ளது. ஆனால், இதற்கு எதிராக முழு அடைப்பை நடத்தி பா.ஜ.க எதிர்ப்பை தெரிவித்தது. ஹிந்துக்களை போலீஸ் அடக்கி ஒடுக்குவதாக பா.ஜ.க பரப்புரைச் செய்கிறது.
தான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு 2012-ஆம் ஆண்டு மட்டும் 27 வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகிறார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 2012-ஆம் ஆண்டு மட்டும் 104 வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 34 பேர் பலியாகியுள்ளனர். 456 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படும் நபர்களில் 3 இல் ஒருவர் உத்தரபிரதேசத்தைச் சார்ந்தவர் என்று லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.கே.மிஷ்ரா கூறுகிறார்.
ஹிந்துத்துவா சக்திகளுக்கு முன்பு போல உ.பியில் அரசியல் தளம் கிடைக்கவில்லை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானி விவேக் குமார் கூறுகிறார். ஆகையால் வகுப்புவாதத்தை கிளறிவிட அவர்கள் அனைத்து வழிகளையும் கையாளுகின்றார்கள் என்று விவேக் குமார் கூறுகிறார்.
பா.ஜ.கவின் உ.பி மாநில பொறுப்பை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வலதுகையான அமித் ஷா ஏற்றுக்கொண்ட பிறகு நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 3 மாதங்களாக பீகாரிலும் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளன. 2005-ஆம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு வகுப்புக் கலவரங்கள் குறைந்திருந்தன. பாட்னாவில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள நவாடாவில் அண்மையில் நடந்த வகுப்புக் கலவரத்தில் இரண்டு பேர் பலியானார்கள். இது கடந்த 3 மாதங்களில் நவாடாவில் நடந்த 3-வது நிகழ்வாகும்.
http://newindia.tv/tn/india/142-incident/1854-2013-09-08-04-06-49
--------------------------------------------------------
After a near washout of the Monsoon Session of Parliament, the government managed to pick up steam towards the end and pass some key Bills thanks to an alleged deal between the Congress and the BJP.
The smell of a deal came after the BJP was forced onto the back foot in the wake of a letter written by jailed IPS officer D G Vanzara hinting at the involvement of Narendra Modi and his Man Friday, Amit Shah, in fake encounter killings, an issue the Congress had flagged in a big way on Tuesday.
On the other hand, the BJP was threatening to rake up the alleged land scam involving Robert Vadra, son-in-law of Congress president Sonia Gandhi.
On Thursday, the Congress was by and large silent on Vanzara in Parliament and the BJP held back fire on Vadra.
The 'deal'
With just two days left for the session to conclude on Friday and with many key bills yet to be passed by Parliament, finance minister P Chidambaram and parliamentary affairs minister Kamal Nath on Wednesday met senior BJP leaders L K Advani, Arun Jaitley and Sushma Swaraj to broker a deal so the House returns to normalcy.
Sources say Nath hinted to the saffron leaders about the possibility of Vanzara's letter-bomb rocking the House.
It is not clear if it was Vanzara versus Vadra, but both Houses of Parliament resumed normal work from Wednesday afternoon.
The Rajya Sabha passed the Land Acquisition Bill, the Lok Sabha approved the Pension Bill. And on Thursday, the Houses passed many bills and the government has decided to extend the session by a day to complete pending work.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2413173/Well-drop-Vadra-drop-Vanzara-BJP-Congress-strike-deal-pass-key-Bills.html
Labels:
அரசியல்,
இந்துத்வா,
காப்பி பேஸ்ட் :-),
கார்ட்டூன்கள்,
நரேந்திர மோடி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Sharing a very perceptive comment made by my French friend, Gilles Georget:
"It is high time Indians are taught that there is nothing intrinsically wrong in Islam. They also need to be instructed that Muslims have contributed greatly to the cultural fabric of the Subcontinent from the first Muslim Arab traders landing on west coast of modern India right to the Great Moghuls including the Delhi Sultanate and other Sultanates in the Deccan and Bengal. It has become unbearable to discuss the issue of Islam with many Indians. This must change. People need to be enlightened not blinded and misled."
Post a Comment