Followers

Sunday, September 29, 2013

அரபு அடிமைகளா தமிழக,இந்திய முஸ்லிம்கள்?பல இந்துத்வா வாதிகள் முஸ்லிம்களை அரேபிய அடிமைகள் என்று சொல்வதை கேட்டு எனக்குள் சிரித்துக் கொள்வேன். இந்த நாட்டுக்கு ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு ஈரான், ரஷ்யா போன்ற பகுதிகளிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து இங்கேயே கூடாரமடித்து தங்கி இந்நாட்டு பூர்வ குடிகளை அடிமையாக்கிய பொது புத்தி முஸ்லிம்களையும் பார்த்து பேச வைக்கிறது. இனி விஷயத்துக்கு வருவோம்.

அரபு கலாசாரம் என்பதும் இஸ்லாமிய நடைமுறை என்பதும் பிரித்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று. அரபுகளுக்கென்று உடை, கலாசாரம், என்று தனியே உண்டு. மேலே யுட்யூபில் நீங்கள் பார்க்கும் நடனம் அரபு நாட்டுக்குரியது. அதனை எந்த தமிழக இஸ்லாமியர்களும் தமிழகத்தில் நடத்துவது இல்லை. இஸ்லாமும் அவ்வாறு கட்டளையிடவில்லை.

அரபு நாட்டு ஆண்கள் தங்கள் தலையை துண்டால் மூடிக் கொள்வர். காற்றில் அந்த துண்டு பறக்காமல் இருக்க அதற்கு மேல் ஒரு வளையத்தையும் வைத்துக் கொள்வார்கள். பாலைவன புழுதிக் காற்றுக்கு அவ்வாறு இருப்பது அவசியம். இது அரபு நாட்டு கலாசாரம். இதனை தமிழகத்தில் வாழும் எந்த இஸ்லாமியனும் கடைபிடிப்பதில்லை. குர்ஆனும் அரபுகளை உணவு உடை கலாசாரங்களில் பின் பற்றச் சொல்லி எங்களுக்கு கட்டளையும் இடவில்லை.

அதே போல் அரபுகள் சாப்பிடுவது அதிகம் ரொட்டி. அந்த ரொட்டியைத்தான் நீங்களும் உண்ண வேண்டும் என்று இஸ்லாமும் சொல்லவில்லை. முஸ்லிம்களும் அந்த பழக்கத்தை பின்பற்றுவதில்லை. சோறு சாப்பிட விருப்பமுடையவர்கள் சோறு சாப்பிட்டுக் கொள்ளலாம். ரொட்டியோ நூடுல்ஸோ எதைப் பிரியப்படுகிறார்களோ அதனை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

அதே போல் இஸ்லாம் மார்க்கத்தை போதிப்பதற்கு முன்பு அன்றைய அரபுலகில் திருமணங்கள் எவ்வாறு நடந்தது என்பதை முகமது நபியின் துணைவியார் அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கும் செய்தியை பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:

முதல் வகை: இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி "மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகைத் திருமணம்: ஒருவர் தம் மனைவியிடம், "நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவுகொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்ட மாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவுகொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு "நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகைத் திருமணம்: பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் "நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது'' என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) "இவன் உங்கள் மகன், இன்னாரே!'' என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகைத் திருமணம் : நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவுகொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள். இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே, அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு "அவருடைய மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது. சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.

(நூல் : புகாரி 5127)


ஆக திருமணம் என்ற பெயரில் பல மாதிரியாக விபசாரமே நடந்துள்ளது. இது அன்றைய இஸ்லாம் வருவதற்கு முன் உண்டான அரேபிய கலாசாரம். அந்த முறையை தமிழக முஸ்லிம்கள் யாரும் பின்பற்றுவதில்லை. குர்ஆனின் வழிகாட்டுதலின்படியே தங்களின் திருமணத்தை தமிழக முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் கடை பிடித்து வருகிறார்கள்.

மேலே சொன்ன உதாரணங்களிலிருந்து அரபு கலாசாரம என்பதும் இஸ்லாமிய கலாசாரம் என்பதும் ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். குர்ஆன் இடும் கட்டளைகள் அனைத்தும் உலக மக்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவையாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். நமக்கும், அரபுகளுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆப்ரிக்கர்களுக்கும் இன, மொழி, கலாசாரங்களில் பெருத்த வேறுபாடு உண்டு. இந்த அனைத்து கலாசாரங்களையும் உள்ளடக்கி எல்லா மக்களும் எல்லா காலத்திலும் பின் பற்றத் தக்கவையாக குர்ஆனின் கட்டளைகள் இருப்பது இது இறை வேதம் என்பதற்கு மேலும் அத்தாட்சியாக இருக்கிறது.

மேலும் நமது தமிழக சித்தர்களும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று அந்த காலத்திலேயே இஸ்லாமிய கருத்தை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். பின்னால் படையெடுத்து வந்த ஆரியர்கள் பல தெய்வ வணக்கத்தை வன்முறையால் நமது மக்களின் வழிபாடுகளாக மாற்றி விட்டனர். அது இன்று வரை தொடர்ந்து வந்து தற்போது 'விநாயக சதுர்த்தியில்' வந்து முடிந்துள்ளது. ஆக... இந்த மண்ணின் உரிமையான 'ஓரிறைக் கொள்கை' யை மீட்பதற்காகத்தான் தமிழகத்தில் இஸ்லாம் கால் பதித்தது. இந்த மக்களும் இழந்த தங்களின் மூதாதையர் கொள்கையை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டனர். எனது முன்னோர்களும் அந்த நல்ல காரியத்தைத்தான் செய்தார்கள். இன்று வரை அந்த நிலை தொடர்கிறது. இனியும் தொடரும்.

கடந்த ஒரு வார காலத்தில் தூய இஸ்லாத்தை தவ்ஹீத் ஜமாத் மூலமாக தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட சகோதர சகோதரிகளை பார்ப்போம்.

-----------------------------------------------

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளையில் கடந்த 20-09-2013 அன்று புஷ்பா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார்……………..------------------------------------------------

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளையில் கடந்த 20-09-2013 அன்று குமாரசாமி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரியாஸ் என மாற்றிக் கொண்டார்…………-----------------------------------------------

திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக கடந்த 20-09-2013 அன்று சுமித்ரா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக் கொண்டார்…………----------------------------------------------

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டையில் கடந்த 20-09-2013 அன்று நிர்மலா காரொளி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா இஷாரா என மாற்றிக் கொண்டார். மேலும் திருக் குர் ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது..…………-------------------------------------------

இனி இவர்களை சூத்திரன் என்று யாரும் சொல்ல முடியாது. சொல்லவும் நா எழாது. 'தீவிரவாதி' என்று வேண்டுமானால் பொய் கேஸூ போட்டுக் கொள்ளலாம். :-) பெரியார் முயன்றும் சமத்துவத்தை கொண்டு வர முடியாத தமிழகத்தில் இஸ்லாம் இன்று சமத்துவத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இம்முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.

முகத்தில் பிறப்பாரும் உண்டோ முட்டாளே !

தோளில் பிறப்பாரும் உண்டோ தொலுமனே !

இடையில் பிறப்பாரும் உண்டோ எருமையே!

காலில் பிறப்பாரும் உண்டோ கழுதையே !

நாண் முகம் என்பான் உளனோ நாயே !

புளுகடா புகன்றவையெல்லாம் போக்கிரியே !

-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!

14 comments:

Anonymous said...

தினமலரில் வராத செய்தி..... :-)

முஸ்லிம் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 9 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது .


கோவை செல்வபுரம், பெரியதம்பி நகரை சேர்ந்தவர் சித்திக்(வயது 43). இவர் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் விசுவ இந்து பரிஷத்தின், இளைஞர் பிரிவான பஜ்ரங்தள் நகர இணை அமைப்பாளர் லாலா மணிகண்டன்(வயது29) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது.

லாலா மணிகண்டனுக்கு பணம் தேவைப்பட்டதால் சித்திக்கிடம் ரூ.2 லட்சம் கடன் கேட்டுள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் சித்திக் கடன் வாங்கி லாலா மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். ரூ.1 லட்சத்து 70 ஆயிரம்வரை திரும்ப செலுத்தி வந்துள்ள நிலையில், ரூ.30 ஆயிரத்தை லாலா மணிகண்டன் பாக்கி வைத்துள்ளார்.

இந்த பணத்தை கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது லாலா மணிகண்டன் மிரட்டல் விடுத்ததுடன், ‘என்ன நடக்கப்போகிறது பார்’ என்று கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த பிரச்சினையை தொடர்ந்து சித்திக் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று விட்டார்.

மாலை 4–30 மணி அளவில் சித்திக்கின் மனைவி வீட்டில் இருந்தார். அப்போது ஒரு வேனிலும், மோட்டார் சைக்கிளிலும் ஒரு கும்பல் அந்த வீட்டுக்கு வந்தது. ரஞ்சித் என்ற ஒரு ஆசாமி மட்டும் வீட்டுக்குள் சென்று, சித்திக்கின் மனைவியிடம் ஒரு பார்சலை கொடுத்து, ‘இது சித்திக்கிற்கு லாலா மணிகண்டன் கொடுத்தனுப்பிய பரிசு’ என்று கூறியுள்ளார். அதனை பிரித்து பார்த்தபோது அதில் பெட்ரோல் குண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்திக்கின் மனைவி இதுகுறித்து விசாரிப்பதற்குள், வீட்டு முன்பக்க சுவற்றில் மற்றொரு பெட்ரோல் குண்டை தீப்பற்ற வைத்து வீசியுள்ளனர். இதனால் டமார் என்ற சத்ததுடன் வெடித்து தீப்பற்றியது, அதற்குள் அந்த தீவிரவாதிகள் தாங்கள் வந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று 2 மணிநேரத்துக்குள் விசுவஇந்து பரிஷத் பிரமுகர் லாலா மணிகண்டனை, கோவை ஆலாந்துறை அருகில் உள்ள பனைமரத்தூரில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் விடிய,விடிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு மொத்தம் 9 பேர் கைதானார்கள். கைதானவர்கள் விவரம் வருமாறு:–

1.லாலாமணிகண்டன்(வயது36), கோவை செல்வபுரம், பிரைட்கார்டன், விசுவஇந்து பரிஷத் அமைப்பின் நகர இணை அமைப்பாளர்.

2.சேர்மராஜ்(34), செட்டிவீதி, கோவை. 3.ரஞ்சித்(22), காளம்பாளையம், 4.கோவிந்தராஜ்(40), சலீவன் வீதி, கோவை. 5.கதிரவன்(28), இடையர்வீதி, கோவை, 6.மாசாணன்(36), கெம்பட்டி காலனி, கோவை. 7. மணிகண்டன்(22), எல்.ஐ.சி. காலனி, கோவை. 8.கபில்தேவ்(28), சொக்கம்புதூர், கோவை. 9. ராஜா(36), பெரியகடை வீதி.

கைதானவர்கள் அனைவரும் பல்வேறு இந்து தீவிரவாத அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர் .

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெங்கி என்ற வெங்கடேஷ் உள்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Anonymous said...

ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
- லதா ரஜினிகாந்த்

மோடிக்கு ஆதரவாக நான் பேசவேயில்லை. அந்த வீடியோ போலியானது.
- அமிதாப் பச்சன்

மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்துக்கு அனுப்பவில்லை.
- அமெரிக்க அரசு

மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது.
- இங்கிலாந்து அரசு

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின்தங்கியுள்ளது.
- ரகுராம் ராஜன் குழு அறிக்கை

நவீன வசதிகளுடன் கூடிய 'ஹைடெக் தெரு' அகமாதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில் உள்ள தெரு சீனாவில் இருக்கிறது.
- கூகுள் சர்ச் மூலம் அம்பலம்

இப்பவே கண்ணக் கட்டுதே...

பேசாமல் மோடி தன் பெயரை மோ'ச'டி என்று மாற்றிக் கொள்ளலாம்!

நன்றி : ஆளூர் ஷாநவாஸ்

Anonymous said...

//எனது முன்னோர்களும் அந்த நல்ல காரியத்தைத்தான் செய்தார்கள். இன்று வரை அந்த நிலை தொடர்கிறது. இனியும் தொடரும். //

APPADIYA!

Anonymous said...

"நரிக்கு
இடம் கொடுத்தால்......" அது போல் துலுக்கர்களுக்கு இந்த நாட்டை திறந்து
போட்ட மடமாக்கி வேடிக்கை பார்த்ததன் விளைவுதான் இந்த மத மாற்ற
நடவடிக்கைகள். முன்னோர்களும் செய்தார்களாம், இப்போதும் செய்கிறார்களாம்,
இனியும் செய்வார்களாம். அடடா என்ன ஒரு இறுமாப்பு. குஜராத், உ.பி கலவரங்களை
கணடிப்பவர்களுக்காக பரிதாபப்படுகிறேன், நாம் எல்லாம் ஜிஸ்யா வரிகட்டும்
நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்

Anonymous said...

இங்கே
நடக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான நிகழ்வுகளுக்கு அவர்களே காரணம். எனவே
எவ்விதத்திலும் அதற்காக பரிதாபபடுவதோ எதிர்ப்பதோ தேவை இல்லை. முஸ்லீம்கள்
செய்த வினையின் எதிர்வினை தான் அது.

Anandan Krishnan said...

விஷ
கிருமிகளை விட மத வெறியர்களான முஸ்லீம்கள் ஆபத்தானவர்கள். ஆனால் இங்கே
கூறியிருப்பதை நாடெங்கும் பகிரங்கமாக அறிவிக்க முதுகெலும்பற்ற கோழைகள்.
இந்த அரவாணி கூட்டத்தால் சந்திலும் பொந்திலும் மட்டும் தான் இதை
கூறிக்கொண்டீருக்க முடியும்.

சுவனப் பிரியன் said...

//"நரிக்கு
இடம் கொடுத்தால்......" அது போல் துலுக்கர்களுக்கு இந்த நாட்டை திறந்து
போட்ட மடமாக்கி வேடிக்கை பார்த்ததன் விளைவுதான் இந்த மத மாற்ற
நடவடிக்கைகள். முன்னோர்களும் செய்தார்களாம், இப்போதும் செய்கிறார்களாம்,
இனியும் செய்வார்களாம். அடடா என்ன ஒரு இறுமாப்பு.//

இதில் இறுமாப்புக்கு என்ன வேலை. நீர் சூத்திரன் என்று இந்த நாட்டு பூர்வ குடிகளை மட்டம் தட்டி இன்று வரை கருவறைக்குள் நுழைய அனுமதியும் மறுத்ததால் எங்கு சமத்துவம் கிடைக்கிறதோ அதை நோக்கிதானே செல்வர். தவறு உம்மைப போன்ற இந்துத்வ வாதிகளிடம்தானே உள்ளது. இதில் முஸ்லிம்களை குறை காண்பதை விடுத்து சொந்த மதத்தை திருத்தப் பார்க்கவும்.

//குஜராத், உ.பி கலவரங்களை
கணடிப்பவர்களுக்காக பரிதாபப்படுகிறேன்,//

'தெய்வம் நின்று கொல்லும்' - உமக்காகவும் வருத்தப்படும் ஒரு காலம் இதே இந்தியாவில் வரும். அது வரை பொறுத்திரும். உண்மை என்றும் அழிவதில்லை. பவுத்தர்களை, சமணர்களை, முஸ்லிம்களை, கிறித்தவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை எந்த அளவு அன்று முதல் இன்று வரை கொடுமை படுத்தினீர்களோ அதற்கு வட்டியும் முதலுமாக திருப்பி தரும் காலம் கண்டிப்பாக வரும்.

சுவனப் பிரியன் said...

//விஷ
கிருமிகளை விட மத வெறியர்களான முஸ்லீம்கள் ஆபத்தானவர்கள். ஆனால் இங்கே
கூறியிருப்பதை நாடெங்கும் பகிரங்கமாக அறிவிக்க முதுகெலும்பற்ற கோழைகள்.
இந்த அரவாணி கூட்டத்தால் சந்திலும் பொந்திலும் மட்டும் தான் இதை
கூறிக்கொண்டீருக்க முடியும்.//

இந்த நாட்டின் விஷ கிருமிகள் யார்? அரவாணிகளைப் போன்று நடை உடைகளில் எண்ணத்தில் வாழ்ந்து வரும் கூட்டம் எந்த கூட்டம் என்பதை எனது இந்து பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டாலே அழகாக சொல்வர். அல்லது தந்தை பெரியாரிடம் கேட்கவும். அழகாக சொல்வார். :-)

Anandan Krishnan said...

//இதில் இறுமாப்புக்கு என்ன வேலை. நீர் சூத்திரன் என்று இந்த நாட்டு பூர்வ குடிகளை மட்டம் தட்டி இன்று வரை கருவறைக்குள் நுழைய அனுமதியும் மறுத்ததால் எங்கு சமத்துவம் கிடைக்கிறதோ அதை நோக்கிதானே செல்வர். தவறு உம்மைப போன்ற இந்துத்வ வாதிகளிடம்தானே உள்ளது. இதில் முஸ்லிம்களை குறை காண்பதை விடுத்து சொந்த மதத்தை திருத்தப் பார்க்கவும்.//

மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது அண்ணாச்சி, எமது மதத்தினர் மாற்றங்களை ஏற்று கொண்டே வருகின்றனர், வருங்காலத்தில் நீர் சொல்லும் எல்லாம் நடக்கும், மாற்றங்களை விரும்பும் மக்கள் அதிகரிக்கும்போது கண்டிப்பாக இங்கே பேதங்கள் எல்லாம் ஒழியும். சமத்துவமும் வரும். நாங்கள் யாரும் முட்டாள்களாக இருக்கவில்லை, எப்போதும் இந்த நிலை இப்படியேவா இருக்க போகிறது. எங்கள் மதத்தை திருத்த எங்களுக்கு தெரியும் நாங்கள் கண்டிப்பாக திருத்துவோம் எனவே அதை பயன்படுத்தி உங்கள் ஈன செயலை செய்யாமல் வேலையை பார்த்துகொண்டு போங்கள்.

Anandan Krishnan said...

//தெய்வம் நின்று கொல்லும்' - உமக்காகவும் வருத்தப்படும் ஒரு காலம் இதே இந்தியாவில் வரும். அது வரை பொறுத்திரும். உண்மை என்றும் அழிவதில்லை. பவுத்தர்களை, சமணர்களை, முஸ்லிம்களை, கிறித்தவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை எந்த அளவு அன்று முதல் இன்று வரை கொடுமை படுத்தினீர்களோ அதற்கு வட்டியும் முதலுமாக திருப்பி தரும் காலம் கண்டிப்பாக வரும்.//

அய்யா உத்தமரே, உங்கள் கூட்டம் ரொம்ப யோக்கியர்கள் மாதிரி பேசுகிறீர்கள். வாளால் மதத்தை பரப்பியவர்கள் என்று பெயர் வாங்கியவர்கள் நீங்கள் தானே, என்னவோ ஆடு நனைவதை பார்த்து ஓநாய் அழுத கதையாக ரொம்பவே நல்ல பிள்ளை வேஷம் போடுகிறீர்கள். கொஞ்சம் உங்கள் கூட்டதவரால் கொல்லப்பட்ட காபிர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பிற மக்களின் கணக்கெடுப்பை செய்து பாரும், நீரே வெட்கப்படும் அளவு இருக்கும். அதற்கெல்லாம் எப்போது உமது கூட்டத்திற்கு வட்டியும் முதலுமாக கிடைக்கும்.
ஒருவேளை பர்மா, குஜராத், உ.பி மட்டும் பல இடங்களில் உமது கூட்டம் வாங்கி கட்டி கொள்வது அந்த வட்டியைதானோ, அப்படி என்றால் அது தவறே இல்லை.

//இந்த நாட்டின் விஷ கிருமிகள் யார்? அரவாணிகளைப் போன்று நடை உடைகளில் எண்ணத்தில் வாழ்ந்து வரும் கூட்டம் எந்த கூட்டம் என்பதை எனது இந்து பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டாலே அழகாக சொல்வர். அல்லது தந்தை பெரியாரிடம் கேட்கவும். அழகாக சொல்வார். :-)//

எல்லாரிடமும் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் " துலுக்கர்கள் இந்த நாட்டின் விஷ கிருமிகள், அவர்கள் எங்களை மூளை சலவை செய்து மதம் மாற்றுகிறார்கள். விஷ கிருமிகள் பரவுவதை போல் இந்த நாட்டை அரபு கலாச்சாரத்தை புகுத்தி அரபியனுக்கு அடிமையாக பார்க்கிறார்கள், அதற்கு எங்களை துருப்பு சீட்டாக பயன்படுத்தி கொள்கிறார்கள்" என்று பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பவர்கள் கூறுகிறார்கள் . பெரியார் சொன்னது என்ன தெரியுமா "இந்த வெளிவேடம் போடும் துலுக்க கூட்டத்தின் சூழ்ச்சி எண்ணம் புரியாமல் இவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசினேனே, இந்த நாடு ஏற்கனவே பலருக்கு அடிமைப்பட்டது, இவர்கள் அரேபியனுக்கு அடிமைபடுத்த முயற்சி செய்கிறார்களே, இவர்கள தங்கள் செய்வதை வெளிப்படையாக செய்யாமல் நல்ல பிள்ளை வேடம் போட்டு அல்லவா செய்கிறார்கள், அட அரவாணி கூட்டமே, முதுகெலும்பு இருந்தால் வெளிப்படையாக செய்யலாமே, மத வெறி மத வெறி என்று பிறரை பார்த்து கூறி விட்டு தங்கள் மதம் மட்டுமே இங்கே இருக்க வேண்டும் என்று நிறுவ அல்லவே முயற்சி செய்கிறார்கள் இந்த விஷ கிருமிகள் இவர்களையா பாராட்டி பேசினேன்" என்று பெரியார் வருத்தப்பட்டு கொண்டார் அண்ணாச்சி

சுவனப் பிரியன் said...

///"இந்த வெளிவேடம் போடும் துலுக்க கூட்டத்தின் சூழ்ச்சி எண்ணம் புரியாமல் இவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசினேனே, இந்த நாடு ஏற்கனவே பலருக்கு அடிமைப்பட்டது, இவர்கள் அரேபியனுக்கு அடிமைபடுத்த முயற்சி செய்கிறார்களே,//

வழக்கமான மோடி பாணி பொய் பித்தலாட்டம். எந்த ஊரில் எந்த இடத்தில் பெரியார் அவ்வாறு சொன்னார் என்று ஆதாரத்தை உம்மால் கொடுக்க முடியுமா? இது இணைய உலகம். பழைய பொய்கள் எடுபடாது. நீர் ஆதாரத்தை தரவில்லை என்றால் இதை படிக்கும் இந்து நண்பர்கள் உமது பொய்களை அறிந்து கொள்வர்.

Anandan Krishnan said...

அட
சுவன அண்ணாச்சி, நீங்கள் பெரியாரிடம் கேழு என்று சொன்னதால், செத்து போன
பெரியாரிடம் எப்படி கேட்பது என்ற யோசனையில் நான் தூங்கி விட்டேன். என்ன
ஆச்சரியம், என் கனவில் பெரியார் வநதார், நீங்கள் கேட்க சொன்னதை அவரிடம்
கேட்டேன். அப்போது தான் இந்த பதிலை சொன்னார். உங்களுக்கு சந்தேகம்
இருந்தால் நீங்களே அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் கனவிலும் வருவார்

Anandan Krishnan said...

பெரியார்
உயிரோடு இருக்கும் போது உங்கள் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு
திரிந்தது உண்மை தானே அண்ணாச்சி, அதை மறுக்க மாட்டீர்களே, இணைய இந்துக்கள்
புத்திசாலிகள், அவர்கள் நான் சொன்ன விதத்தை புரிந்து கொள்வார்கள். கவலை
வேண்டாம்

SURYAPRAKASAM said...

/*இணைய இந்துக்கள்
புத்திசாலிகள், அவர்கள் நான் சொன்ன விதத்தை புரிந்து கொள்வார்கள். */

உண்மை தான் , அனந்த கிருஷ்ணன் சொல்லும் பொய்களை , தெளிவாகவே புரிந்துகொள்ள முடிகிறது.