'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, September 04, 2013
நரேந்திர மோடி: தேசிய நாயகனா? அரசு பயங்கரவாதகொலைகாரனா?
கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சோராபுதீன் ஷேக் என்பவர், போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்ஹர்இதொய்பா அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதி என்றும், இவர் குஜராத் முதல்வர் மோடியையும், விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர்களையும் கொல்ல வந்த பயங்கரவாதி என்றும் போலீசார் அறிவித்தனர்.
உண்மையில், சோராபுதீன் தீவிரவாதியோ பயங்கரவாதியோ அல்ல; அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சோராபுதீனின் சகோதரரான ரூபாபுதீன், இந்த மோதலில் சோராபுதீன் கொல்லப்பட்டது பற்றியும் அவருடன் சென்ற அவரது மனைவி கௌசர்பானு காணாமல் போனது பற்றியும் மைய புலனாய்வுத் துறை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். குஜராத் மாநில அரசிடம் இதுபற்றி விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதி மன்றம் நிர்பந்தித்ததால், அம்மாநில அரசு கீதாஜோரி என்ற புலனாய்வு அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை நியமித்தது.
2005 நவம்பர் 23ஆம் நாளன்று, ஹைதராபாத் நகரிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் சாங்லி நகருக்குப் பேருந்தில் பயணம் செய்த சோராபுதீன் தம்பதியினரையும், துளசிராஜ் பிரஜாபதி என்பவரையும் சீருடைய அணியாத ராஜ்குமார் பாண்டியன் எனும் பயங்கரவாத எதிர்ப்புப் படைøயச் சேர்ந்த குஜராத் போலீசு உயரதிகாரி தலைமையிலான குழுவினர், நள்ளிரவில் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, அம்மூவரையும் இறக்கி தங்கள் வாகனங்களில் கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட இம்மூவரில் சோராபுதீன், மூன்று நாட்களுக்குப் பிறகு அகமதாபாத் புறநகர் பகுதியில் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டார். போலீசு ஆள்காட்டியான துளசிராஜ் பிரஜாபதி, இப்படுகொலையை வெளியே கக்கிவிடுவாரோ என்று சந்தேகித்து அவரையும் போலீசு கொன்றொழித்துத் தடயங்களை அழித்து விட்டது. சோராபுதீனின் மனைவி கௌசர்பானு, சபர்கந்தா காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கும்பல் வன்புணர்ச்சிக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டு, எரித்து சாம்பலாக்கப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில அரசிடம் சமர்பித்த இடைக்கால அறிக்கையில், உதிரத்தை உறைய வைக்கும் இந்த உண்மைகளை கீதாஜோரி விசாரணைக் குழு வெளிக்கொணர்ந்தது. தற்போது எல்லா விசயங்களும் அம்பலமாகிப் போனதால், வேறு வழியின்றி மூன்று போலீசு உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோடியைக் கொல்ல முயன்றதாகக் கதைகட்டி நடத்தப்பட்ட இப்போலி மோதல் நாடகத்தைத் தலைமையேற்று வழி நடத்திய வஞ்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு உயரதிகாரிகளும் மோடிக்கு மிக நெருக்கமானவர்கள்; அவரது கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாகச் செயல்பட்டவர்கள்.
இவர்களில் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவின் டி.ஐ.ஜி.யான வஞ்சாரா ""மோதல் கொலை நிபுணர்'' என புகழப்பட்டவர். இதுவரை 9 போலி மோதல்கள், 15 பேர் படுகொலை என விரியும் இவரது பயங்கரவாதக் கொலைப்பட்டியலில், மும்பையின் ஏழை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஸ்ரத் ஜெஹானும் அடக்கம். கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இம்மாணவி, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகவே சித்தரிக்கப்பட்டார்.
குஜராத்தின் பயங்கரவாத போலீசார், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய போலி மோதல் கொலைகளை நடத்தி, ஒவ்வொரு முறையும் தாவூத் இப்ராஹிமிடமிருந்து பாகிஸ்தான் உளவுத்துறை வரை பழிபோட்டு, மோடியை தேசிய அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அதிமுக்கிய தலைவராகச் சித்தரித்து, இந்துவெறி தேசியவெறியை கிளறிவிட்டு வந்துள்ளனர். கடந்த ஈராண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இத்தகைய போலி மோதல் கொலைகள் போலீசாரால் நடத்தப்பட்டுள்ளன.
இப்போது போலி மோதல் கொலைகள் மூலம் மோடியின் பயங்கரவாதச் சதிகள் அம்பலமான பின்னரும், இக்கொலைகார இந்துவெறி பாசிசத் தளபதியை, இந்திய நாட்டின் சட்டம் தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மதவெறி சக்திகளை வீழ்த்தப் போவதாக சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு கை கட்டி நிற்கிறது. இடதுவலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளோ, காங்கிரசு கூட்டணி அரசை முட்டுக் கொடுத்து ஆதரித்துக் கொண்டு, மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்கப் போவதாக வீரவசனம் பேசிக் கொண்டிருக்கின்றன.
· தனபால்
The Gujarat government on Wednesday said it has not accepted the resignation IPS officer D G Vanzara, who put in his papers after indicting Chief Minister Narendra Modi.
“The resignation tendered by D G Vanzara has not been accepted,” Additional Chief Secretary (Home) S K Nanda told PTI. He, however, didn’t give any specific reasons behind doing so.
Vanzara (59), a Deputy Inspector General of Police (DIG), presently under suspension and arrest for a string of fake encounter cases, had resigned from the service accusing the Modi government of having failed to protect the jailed police officers who fought against “Pakistan-inspired terrorism.”
A 1987 batch IPS officer, considered close to Modi, said in his resignation letter, dated September 1, that police officers involved in alleged fake encounters “simply implemented the conscious policy” of the government whose place “should either be in Taloja central prison at Navi Mumbai or in Sabarmati Central Prison at Ahmedabad.”
The controversial officer has accused the state government, particularly former Minister of State for Home Amit Shah, of betraying him and 32 other officers who are in jail in connection with encounter cases that are being investigated by the CBI.
http://www.thehindu.com/news/national/other-states/gujarat-govt-rejects-vanzara-resignation/article5092787.ece?homepage=true
----------------------------------------------------------
காவிபயங்கரவாதி மோடியை அம்பலப்படுத்தி அப்ரூவர் ஆகும் வல்சரா!
மோடி அரசிற்காக பல போலி என்கவுண்டர்களை செய்தோம்;
குஜராத் டி.ஐ.ஜி டி.ஜி. வல்சாரா அதிரடி !
நரேந்திர மோடியின் நம்பிக்கையாளரும் என்கவுண்டர்ஸ்பெலிஸ்டுமான டி.ஐ.ஜி டி.ஜி.வல்சார குஜராத் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை உயர்த்திதோடு தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
மோடி அரசின் தீர்மாணங்களையும் நிலைபாடுகளையும் செயல்படுத்திய என்னை குஜராத் முன்னால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆதிக்கத்திற்கு வழங்கி இறுதியில் மோடி கைவிட்டுவிட்டார் என்று குற்றம் சாட்டிய வல்சார தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பல போலி என்கவுண்டர்களில் பிரதி சேர்க்கப்பட்டதனை தொடர்ந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்ட வல்சாரா 2012 ஆம் ஆண்டு முதல் அஹமதாபாத்திலும் மும்பையிலும் உள்ள சிறைசாலைகளில் மாறி மாறி சிறைவாசம் அணுபவித்து வருகிறார்.
மோடியின் மீது உள்ள மரியாதையின் பேரிலும் அவரை தெய்வத்திற்கு சமமாக கருதியதாலும் நான் இத்தனை காலம் மெளனமாக இருந்து வந்தேன் என்று தன்னுடை பத்து பக்க ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் வல்சாரா,என்னுடைய தெய்வம் ஆபத்து காலத்தில் எனக்கு உதவி செய்யவில்லை.
அமித்சாவின் சதி ஆலோசனைகளுக்கு என தனது செவிகளை மோடி வழங்கிவிட்டார்.மோடி தன்னின் கண்ணையும் காதையும் அமித் ஷாவுக்கு அடமாணம் வைத்துவிட்டார்.
ஆட்டை நாயாகவும் நாயை ஆடாகவும் மாற்றும் அமித் ஷா, மோடியை தவறான பாதைக்கு திசை திருப்பி அதில் வெற்றியும் பெற்று விட்டார் என்று வல்சாரா குற்றம் சாட்டுகிறார்.
தன்னுடைய கேவலமான தந்திரங்களை செயல்படுத்த அதிகாரிகளை பயன்படுத்துவதும், இறுதியில் தவறான தகவல்களை பரப்புரை செய்து அவர்களை தூக்கி எறிவதே அவரின் குணமாகும்.2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை நானும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையும்,குற்ற புலனாய்வு துறையில் உள்ள அதிகாரிகளும் செயல்படுத்தியது மோடி அரசின் நிலைபாடுகளாகும்.
நான் உள்பட உள்ள அதிகாரிகள் கடுமையாக உழைத்ததால் தான் மோடி அரசு குஜராத் வளர்ச்சி பாதையில் என்று பெருமையடிக்க முடிகிறது.ஆனால் தன்னை உயர்த்திய காவல் துறை அதிகாரிகளின் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமராக ஆகுவதற்கு ஓடி நடக்குகிறார் மோடி!
அமிதா ஷாவின் சதி ஆலோசகளை கேட்டு 32 காவல்துறை அதிகாரிகளை சிறையில் அடைத்த மோடியின் குஜராத் அரசின் இறுதியாத்திரைக்கு நாட்கள் அதிகம் இல்லை.
போலி என்கவுண்டர் வழக்குகளில் தொடர்பு உண்டு என்று கூறி என்னையும்,மற்றும் சில அதிகாரிகளையும் சி.பி.ஐயும்,சி.ஐ.டியும் கைது செய்தது.ஆனால் எங்களை உற்சாகப்படுத்தி, எங்களை இயக்கி அக்கொலைகளை செய்ய சொல்லிய மோடி அரசின் சதி அலோசகர் களையும் சி.பி.ஐ கைது செய்ய வேண்டும்.
என்கவுண்டர் வழக்குகளை உயர்த்தி காட்டியே மோடி அரசு கடந்த 12 வருடங்களாக அரசியல் ஆதாயஙகளை பெற்று வருகிறது என்றும் வல்சாரா குற்றம் சாட்டுகிறார்.
மோடியை பாஜகாவின் பிரதம வேட்பாளாராக பாஜகவும், ஆர்.எஸ். எஸ்ஸும் தீர்மாணித்து அறிவிப்பினை வெளியிட இருக்கும் நேரத்தில் வல்சாராவின் குற்றசாட்டுகள் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா? பக்கத்திலிருந்து....!
ஒரு நாட்டின் முதுகெலும்பான ஊடகங்கள் அநியாயமாக செயல்பட்டு நாட்டின் இறையாண்மையையும், அநீதிக்கு ஆதரவாகவும் போகிற போக்கை அம்பலப்படுத்தி;சுய விளம்பரமற்ற சகோதரர்களால்; காவி பயங்கரவாத ஊடகங்களின் முகமூடிகளை கிழிக்கும் இப்பக்கத்தில் இணைந்து உங்களின் பங்கையும் ஆற்ற முன்வாருங்கள்.
- அன்பு செல்வன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Amit Shah, the Home Minister, exchanged 343 phone calls with then Suprintendent of Police (SP) Rajkumar Pandian during the core criminal conspiracy period of Tulsiram Prajapati Encounter Case!!
Rajkumar Pandian is Accused No 3 in the Tulsiram Prajapati case while Amit Shah is Accused No 1.
Amit Shah, who was already arrested and bailed out for the Sohrabuddin case, in order to avoid arrest in Tulsiram Prajapati case got the two cases merged.
Amit Shah (Accused No 1) did avoid arrest, but he also made sure his foot solders will in all probability remain jailed for the rest of their lives.
Amit Shah, a triple murder accused, is of course one of the chief campaigner of BJP in 2014 elections and Modi's closest confidante.
Are the Citizens of India going to vote for a triple murder accused?
http://www.truthofgujarat.com/bjps-star-campaigner-a-triple-murder-accused/
முஸ்லிம்களுக்கு எதிராக 2002 ல் நடந்த கலவரத்துக்கு மோடியின் வாய் மொழி ஆணை பின்பலமாக இருந்தது என நேரடியாக குற்றம்சாட்டி மோடியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட, மோடியின் அரசில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய சஞ்சீவ் பட் ஐ பி எஸ், வன்சாராவின் ராஜினாமா விவகாரத்தை பாஜக இப்படி எதிர்கொள்ளும் என தம் ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்கண்டவாறு நையாண்டி செய்துள்ளார்.
1. வன்சாரா ஜாமீனில் வெளிவரமுடியாத மனவேதனையில் இப்படி எழுதியுள்ளார்.
2. வன்சாரா இஸ்லாமிய மதத்துக்கு மதம் மாறிவிட்டார்.
3. இது பாகிஸ்தான் ஐ எஸ் ஐ -ன் சதி.
4. அக்கடிதம் போலியானது.
5. சி பி ஐ வன்சாராவுக்கு நெருக்குதல் கொடுத்துள்ளது.
6. வன்சாராவுக்கும் சி பி ஐக்குமிடையில் சதி ஒப்பந்தம் நடந்துள்ளது.
7. வன்சாராவுக்கு மனநிலை பிறழ்வு ஏற்பட்டுள்ளது.
8. வன்சாரா காங்கிரஸ் பினாமியாக மாறிவிட்டார்.
9. காங்கிரஸ் துணையுடன் போலி மதச்சார்பற்றவர்களால் பின்னப்பட்ட சதி.
10. மோடி கடவுள்; கடவுள் தவறிழைப்பதில்லை!.
நன்றி: சஞ்சீவ் பட் ஐபிஎஸ்
https://www.facebook.com/sanjivbhattips?hc_location=stream
Post a Comment