Followers

Tuesday, September 17, 2013

சினிமாவிலிருந்து இஸ்லாத்தை நோக்கி..சினிமாவிலிருந்து இஸ்லாத்தை நோக்கி..

"சசி விஜேந்திர" இது இவரது சினிமாப் பெயர்.

சினிமா மக்கள் மத்தியில் புரையோடிப்போயிருக்கின்ற ஒன்று. பலரும் பிரபல்யமாவதற்கு பயன்படுத்துகின்ற ஒரு முக்கிய ஊடகமே இந்த சினிமா. பணம் செழிக்கும் ஒரு முக்கிய வர்த்தகம் என்றுகூட சொல்லலாம். இப்பாதையில் பயணித்த ஒருவர்தான் இந்த ஷஷி விஜேந்திர. இலங்கையின் கமலஹாசன் என்று அழைக்கப்பட்டவர். முஸ்லிமாக இருந்தாலும் உலகவாழ்க்கையின் சினிமா சுகபோகத்துக்குள் நுழைந்தார். அழகு, நல்ல சாந்தமான குணம். தொடர் வெற்றிகள். தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், இந்த புகழின் உச்சியில் இருக்கும் போதுதான் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். கைப்பிடித்தது ஒரு கிறிஸ்தவ பெண். இப்போது ஒரு இஸ்லாமிய பெண். நான்கு மகன்கள். ஒரு பெண் பிள்ளை. மூத்த மகன் ஒரு "ஹாபில்".

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீடியா இவரைத் தேடிப்பிடித்திருக்கிறது. சுமார் 17 வருடங்கள் கழித்து ஒரு பேட்டி. பேட்டியின் போது சிறு வயதில் பார்த்த அந்த நடிகரா இவர் என்று யோசித்தே விட்டேன். பேட்டியின் போது பேட்டி காண்பவர் இது திரும்பவும் சினிமாவுக்குள் நுழைவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று சொல்கிறார். ஆனால், இஸ்லாமிய வாழ்வை விட்டு வெளியே திரும்பவும் வருவதற்கு விருப்பமில்லை என்கிறார். அவர் நடித்த சில படங்களின் பாடல் காட்சிகளை ஒளிபரப்பி இவற்றைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவருடைய பதில் "அக்காலத்தில் தனது பங்களிப்பை (சினிமாவில்) ஒழுங்காக செய்திருக்கின்றேன் என்று சொன்னாலும் நபிவழியை விட்டு விலகி இருந்தேனே என்று மனம் கவலைப்படுகிறது" என்று சொல்கிறார். ஸுப்ஹானல்லாஹ். மேலும், இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல வெற்றிகளை பெற்றுக்கொண்ட இயக்குனர், இவருடன் நடித்த நடிகை மீண்டும் இவர் சினிமா உலகுக்குள் சங்கமிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் சிரித்த முகத்துடனேயே எனது வாழ்க்கை நபிவழியாகவே இருக்கும், அதற்கு மாற்றமாக நடக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறார்.

இப்போது தப்லீக் ஜமாத்தின் தான் சார்ந்திருக்கும் ஊரின் அமீராக செயல்படுகிறார்.

படிப்பினைகள்:

# முஸ்லிமாக இருந்தும் வாழ்வை ஜாஹிளிய்யத்துக்குள் நடைபயின்ற இவர் திரும்பவும் இஸ்லாமிய வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார்.

# தொடர் வெற்றிகள், தேசிய விருது என்ற புகழின் உச்சியில் இருக்கின்ற போதே சினிமாவின் சுகபோக வாழ்வில் இருந்து விடுபடுகிறார்.

# திரும்பவும் ஜாஹிளிய்யத்துக்கான அழைப்புக்கள். அறிமுகப்படுத்திய இயக்குனர் மூலம் அழைப்பு. ஆனால், தவறுக்குள் நுழைய விருப்பமில்லை என்று மறுப்பு.

மாஷா அல்லாஹ்..அல்லாஹ் அண்ணாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து நல்லாடியார்களுள் ஒருவராக பொருந்திக் கொள்வாயாக...

-https://www.facebook.com/muhammad.himas.7?hc_location=stream

8 comments:

Seeni said...

maasha allah!

Anonymous said...

லண்டன்: முஸ்லிம் நாடுகளில் இதர முஸ்லிம் பிரிவினர் மீதோ முஸ்லிம் அல்லாதோர் மீதோ இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அல்குவைதா இயக்கத்தினருக்கு அதன் தலைவர் அல் ஜவாஹிரி உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அல்குவைதா இயக்கத்தினருக்கு அவர் பிறப்பித்திருக்கும் ஆடியோ உத்தரவில், நமது ஜிஹாத் போராட்டம் நெடியது. ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு புகலிடம் மிகவும் அவசியமாகும். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, யேமன் மற்றும் சோமாலியாவில் மோதல்கள் தவிர்க்க முடியாதவை. முஸ்லிம் நாடுகளில் இதர முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். அல் குவைதாவின் யுக்திப்படி சிறிய தாக்குதல்களை நடத்த வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த வேண்டும். எகிப்தில் அதிபர் மோர்சிக்கு எதிரான போராட்டம் பாராட்டுக்குரியது. ஆனால் துனிசியா கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல என்று கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/international/don-t-attack-hindus-muslim-lands-al-qaida-cheif-183612.html

enrenrum16 said...

மாஷா அல்லாஹ்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம்,

தகவல்கள் சிலிர்க்க வைக்கின்றன.அல்லாஹ் அவரின் ஈமானை மேலும் உறுதிபடுத்துவானாக ..ஆமின்

எதற்சையாக தங்களின் இப்புது பதிவும்,என் புது பதிவும் சினிமா பற்றியதே

ஊதா கலரு ரிப்பன்
http://tvpmuslim.blogspot.in/2013/09/blog-post_18.html

jaisankar jaganathan said...

செம காமடி. பாம் வைக்க புது ஆள் கிடைச்சுட்டார். என்சாய் பண்ணுங்க.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

//செம காமடி. பாம் வைக்க புது ஆள் கிடைச்சுட்டார். என்சாய் பண்ணுங்க.//
பெட்ரோல் வெடிகுண்டு,வெடிகுண்டு,மதக் கலவரம்,என்கவன்ட்டர் இது போன்ற நிகழ்வுகளில் கொத்து கொத்தாக முஸ்லிம்களை மட்டுமல்லாது,பல அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் காவி தீவிரவாத படையை கண்டிக்கத் தெரியாத உங்களை மெச்ச வேண்டும்.

வழக்கம் போல எந்த குண்டு வெடிப்புகள் நடந்தாலும் முஸ்லிம் தலை தான் உருளும்,ஆனால் வருடங்கள் உருண்டால் அது அத்தனையும் காவிகளின் கர வேலை என சமீப காலமாக ஊடகங்களை உன்னித்து பார்ப்பவர்களுக்கு தெரியும்.

பாவம் உங்களை போன்றவர்களுக்கு கவர்ச்சியான வார்த்தைகளுடன் கூடிய கொட்டை எழுத்து செய்தி மட்டும் தான் புரியும்.நாட்டு நடப்பு தெரியாமல் வேற எங்கயாவது பேசி வாங்கி கட்டிகாதீங்க சார்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு சலாம்,

தங்களால் உடனே பதில் தரக் கூடிய பின்னூட்டத்தை மட்டும் பிரசூரிக்கவும்.

பதில் இல்லாமல் மொட்டையாக விட்டுவைத்தால் நம்மிடம் பதில் இல்லை என்றே எண்ண வைத்துவிடும் .நமக்கு தெரியும் இது போன்ற பைத்தியகார உளறலுக்கு பல முறை பதில் சொல்லி அழுத்துவிட்டது என்று ஆனால் புதிதாக உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கு தெரியாதல்லவா...

சுவனப் பிரியன் said...

சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//பதில் இல்லாமல் மொட்டையாக விட்டுவைத்தால் நம்மிடம் பதில் இல்லை என்றே எண்ண வைத்துவிடும் .நமக்கு தெரியும் இது போன்ற பைத்தியகார உளறலுக்கு பல முறை பதில் சொல்லி அழுத்துவிட்டது என்று ஆனால் புதிதாக உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கு தெரியாதல்லவா... //

இவை அனைத்திற்கும் நாம் முன்பே பதிலளித்து விட்டோம் என்பது ஜெய்சங்கர் போன்றவர்களுக்கும் தெரியும். பதிவை படிப்பவர்களுக்கும் தெரியும் என்பதாலேயே சில காமெடி பின்னூடடங்களையும் அனுமதிக்கிறேன். இனி அதற்கும் பதில் தர முயற்சிக்கிறேன்.