Followers

Wednesday, September 25, 2013

மோடி கூட்டத்துக்கு 10,000 'புர்காக்கள்' ஆர்டர்!மோடி கூட்டத்துக்கு 10,000 'புர்கா' ஆர்டர் : பில்லுடன் ஆதாரங்கள் அம்பலம்!

சப்ளை செய்த கடைக்காரர் இது வெறும் 'கொட்டேஷன்' தான் என்கிறார் - திக் விஜய் சிங் ஆதாரங்களோடு உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினத்தவரின் ஓட்டு வேண்டும் என்றால் அந்த மக்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம் அவர்களின் வறுமையை போக்க ஒரு அரசு முயற்சிக்க வேண்டும். அரசு வேலைகளில் அவர்களின் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் படுத்த வேண்டும். இந்துத்வா வாதிகளால் முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து வரும் போது அரணாக நின்று ஒரு மதசார்பற்ற அரசு காப்பாற்ற வேண்டும். இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பொய் வழக்குகள் போட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை ஒரு சிறந்த அரசானது வெளிக் கொணர வேண்டும். இது வரை குஜராத், முஸாஃபர் நகர், மும்பை, ஹைதரபாத் போன்ற நகரங்களில் நடந்த கலவரங்களுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இதை எல்லாம் ஒரு மதசார்பற்ற அரசு தொடர்ந்து செய்து வருமானால் அந்த கட்சிககு எந்த ஒரு பிரசாரமும் இல்லாமல் பலனடைந்தவர்கள் அனைவரும் ஓட்டளிப்பர். இதில் சந்தேகம் இல்லை.

அதை விடுத்து ஒரு மாநிலத்தின் முதல்வரே தான் மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக கோத்ரா ரயில் விபத்தை இஸ்லாமியர் செய்தனர் என்ற பொய்யுரையை பரப்பி தனது அதிகாரத்தில் வரும் காவல் துறையை ஏவி விட்டு 2500 முஸ்லிம்களை கொன்ற மோடிக்கு எப்படி முஸ்லிம்கள் ஓட்டளிப்பார்கள்?

இஷ்ரத் ஜஹான் என்ற இள வயது மங்கையை போலி என்கவுண்டர் மூலமாக கொன்று இன்று வஞ்சாரா போன்ற அதிகாரிகளே மோடியையும், அமீத் ஷா வையும் நோக்கி தங்களது கைகளை நீட்டுகின்றனரே... இந்த நிலையில் இஸ்லாமியரின் ஓட்டு பிஜேபிக்கு எப்படி கிட்டும்?

இவ்வளவு அநியாயங்களையும் ஆதாரங்களோடு செய்து விட்டு இன்று 10000 புர்காக்களை ஆர்டர் செய்து கூட்டத்தில் இந்துத்வா பெண்களுக்கு புர்காவை மாட்டி விட்டு "எங்களுக்கும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்" என்ற பொய்யுரை மோடிக்கு தேவையா? முன்பு அமிதாப் பச்சன் மோடியை ஆதரிப்பதாக ஒரு போலி வீடியோ இணையத்தில் விட்டு அங்கும் மோடி மூக்கறுபட்டார். 20000 பேர் கூட அமர முடியாத திருச்சி மாநாட்டுக்கு ஒரு லட்சம் பேர் ஆன்லைனில் பதிந்துள்ளதாக ஒரு பொய்யுரை. இணையத்தில் அதிகம் தேடப்படும் ஒருவர் மோடி என்ற பொய்யுரை: குஜராத் ஒளிர்கிறது என்ற பொய்யுரை:

அப்பப்பா...... எத்தனை பொய்கள்.

இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இத்தனை பொய்யுரைகள் என்றால் பிரதமராகி விட்டால் பொய்களையே தனது ஆசானாக வைத்து ஆட்சி நடத்துவார். இந்திய தேசத்தை படு பாதாளத்துக்கு கொண்டு செல்ல அந்நிய நாட்டு படையெடுப்பு தேவையில்லை. மோடியை பிரதமராக்கினாலேயே நமது நாடு அதள பாதாளத்துக்கு சென்று விடும். நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள தேச பக்தர்கள் மோடியை பாராளுமன்றத்துக்கு அல்ல திஹார் ஜெயிலுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்.

----------------------------------------------------

மோடியின் ராஜ்ஜியமான குஜராத்தின் உண்மை நிலை....
2 comments:

jaisankar jaganathan said...

நீங்களும் பர்தா போட்டுக்குட்டு போங்க சுவனப்பிரியன். ஒருத்தருக்கு 1000 ரூபாய் தராஙக்ளாம்.

என் சி ஈ ஓ ஒரு காங்கிரஸ் பித்தர். மோடி வரதால லீவெல்லாம் தர முடியாதுன்னு சொல்லிட்டார். எல்லாம் என் நேரம்(நான் மோடி பக்தன் இல்லை. மனுதர்ம எதிர்ப்புவாதி)

Anonymous said...

உங்களது மகன் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தண்டனை பெற்றார் என்பதற்காக நீங்க சொல்ல வரும் ஆதங்கம் புரிகிறது நீங்கள் நியாயமாக உங்கள் மனசாட்சிபடி சொல்லுங்கள் நீங்கள் சல்மான் தவறு செய்தார் என்று நினைதீர்கலநாள் அவர் ஏன் குற்றத்தை ஒப்பு கொள்ள கூடாது நீ யாரப்பா சலீம் கான் முதலில் அதை சொல்லு மும்பையில் அமர்ந்து கொண்டு குஜரத்ஜ்\ஹில் நடந்தது தவறில்லை என்று சொல்வதற்கு நான் ஒரு ஹிந்து குஜராத் கலவரதிபோது அங்கிருந்தேன் எனது காலை பிடித்து கொண்டு கதறினால் ஒரு சிறுமி மூன்று முரடர்கள் அவளை இழுழுத்தனர் நான் தடுத்தேன் எனது சட்டையை கிழித்தான் ஒருவன் எனது மார்பில் இருக்கும் பூனூலை பர்ர்துவிட்டு என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டான் அன்றுடன் நான் எனது பூனூலை துறந்தேன் மனிதநேயத்தை பூணூலாக ஏட்டறேன் அந்த சிறுமியை காப்பாற்ற முடியவில்லையே என்ற அதன்கதினால் இரு முறை தற்கொலைக்காக முயன்றேன் பின் எனது வேலையே ராஜினாமா செய்துவிட்டு இப்போது மதநல்லிணக்க பிரசாரம் செய்து வருகிறேன்...

-
Mercurial Mad - kodainaadu estate,இந்தியா
19-செப்-201323:07:43 IST Report Abuse

-dinamalar