Followers

Monday, September 16, 2013

முசாஃபர் நகர் கலவரம் ஏன் உருவானது?நமது ஊடகங்கள் கொடுத்த செய்தியின்படி சச்சின், கவுரவ் என்ற இரண்டு ஜாட் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளை ஷாநவாஸ் என்ற முஸ்லிம் இளைஞன் கிண்டல் செய்து வம்பளத்தான். இதை தட்டிக் கேட்கப் போனதுதான் கலவரம் உருவாக காரணம் என்று ஒட்டு மொத்த ஊடகங்களும் சொல்லி வருகின்றன. ஆனால் இந்த காணொளியில் அந்த பெண் ஷாநவாஸ் என்னிடம் எந்த நேரத்திலும் தவறாக நடந்ததில்லை. ஷாநவாஸிடம் இதுவரை ஒரு முறை கூட பேசியது இல்லை என்பதை என்டிடிவி நிருபரிடம் சொல்வதை பாருங்கள்.

ஆக...இவர்களுக்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கலவர திட்டத்தை செயல்படுத்த ஒரு பொய்யான காரணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரி வஞ்சாராவின் உலுக்கியெடுக்கும் கடிதம் நாடு முழுக்க உணர்வலைகளை ஏற்படுத்திய நேரம் அதனை திசை திருப்ப இந்துத்வாவினரால் உண்டாக்கப்பட்டதே முசாஃபர் நகர் கலவரம். தற்போது யாரும் வஞ்சாராவின் கடிதத்தைப் பற்றி பேசுவதில்லை. முசாஃபர் நகர் கலவரத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். மோடி எதிர் பார்ப்பதும் இதனைத்தான். மிக கச்சிதமாக திட்டமிட்டு ஒவ்வொரு காரியத்தையும் திறம்பட மோடி நடத்தி வருகிறார். நேற்று வரை பயங்கர எதிர்ப்பு காட்டிய அத்வானியை 'ஜெய்ஸே முகமது அத்வானிக்கு கொலை மிரட்டல்' என்ற ஒற்றை செய்தியில் அத்வானியை சம்மதிக்க வைத்துள்ள திறமை மோடியைத் தவிர வேறு யாருக்கு வரும்? ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் மிரட்டி, பொய் சொல்லி ஏமாற்றி காலம் தள்ள முடியாது! மோடிக்கும் ஒரு நேரம் வரும். வட்டியும் முதலுமாக செய்த பாவங்கள் அனைத்துக்கும் மோடிக்கு இந்த உலகிலேயே இறைவனால் கொடுக்கப்படும் தண்டனையை எதிர் பார்த்திருப்போம்.

'உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்'

-குர்ஆன் 3:120

11 comments:

சிராஜ் said...

பி.ஜே.பி க்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் இதே வேலை... அவங்ககிட்ட நீதி பத்தி பேசுறதெல்லாம் வேஸ்ட்...

காங்கிரஸுக்கு எங்க போச்சு புத்தி... நாட்டை நாட்டில் இருக்கும் மக்களை காப்பாத்தும் கடமை இல்லையா???

மனசாட்சி இவங்களுக்கெல்லாம் இருக்கா இல்லையான்னே தெரியல...

அஸ்மா said...

//மோடிக்கும் ஒரு நேரம் வரும். வட்டியும் முதலுமாக செய்த பாவங்கள் அனைத்துக்கும் மோடிக்கு இந்த உலகிலேயே இறைவனால் கொடுக்கப்படும் தண்டனையை எதிர் பார்த்திருப்போம்//

நிச்சயமா சகோ. அனைவரின் சாபமும் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் சாபக்கேடும் மோடியையும் மோடி சார்ந்த கேடிக் கும்பலையும் சும்மா விடாது, இன்ஷா அல்லாஹ்!

"அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்." (அல்குர்ஆன் 76:31)

சுவனப் பிரியன் said...

//காங்கிரஸுக்கு எங்க போச்சு புத்தி... நாட்டை நாட்டில் இருக்கும் மக்களை காப்பாத்தும் கடமை இல்லையா???

மனசாட்சி இவங்களுக்கெல்லாம் இருக்கா இல்லையான்னே தெரியல...//

உண்மைதான் சகோ....எந்நாளும் இப்படியே சென்று விடாது. பொறுத்திருப்போம்.

சுவனப் பிரியன் said...

சகோ அஸ்மா!

//"அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்." (அல்குர்ஆன் 76:31)//

கண்டிப்பாக...அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

சுவனப் பிரியன் said...

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிவசேனா அமைப்பின் நிர்வாகி வீட்டில் மர்மநபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டினை வீசி சென்றனர்.இந்து அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீர்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்து குமார். இவர் சிவசேனா அமைப்பின் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்றிரவு 2 மணி அளவில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிசென்றதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டு அவரது வீட்டின் முன் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது.சப்தம் கேட்டு வெளியே வந்த முத்துகுமாரின் உறவினர்கள் வீட்டின் முன்பு தீ பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயை அணைத்தனர்.

பின்பு சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கைரேகைகளை பதிவு செய்ததோடு அங்கிருந்த பெட்ரோல் குண்டின் உடைந்த கண்ணாடி பாகங்களை கைப்பற்றி சென்றனர்.

விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக சிவசேனாவை சேர்ந்த முத்துகுமாருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் இளைஞர் அணி இணை செயலாளர் சுபாஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என முத்துகுமார் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் சுபாஷ் தேடி வருகின்றனர். இந்து அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ச.ஜெ.ரவி

http://news.vikatan.com/article.php?module=news&aid=19343

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

கொஞ்ச நாளா உங்க பதிவுகளையே காணோம்னு நினைச்சேன், ஊருக்கு போயிட்டு வந்து சுருசுருப்பா தான் வேலைய செய்யுறிங்க :-))

//வட்டியும் முதலுமாக செய்த பாவங்கள் அனைத்துக்கும் மோடிக்கு இந்த உலகிலேயே இறைவனால் கொடுக்கப்படும் தண்டனையை எதிர் பார்த்திருப்போம்.
//

அது எந்த இறைவன்னு சொன்னா நல்லா இருக்கும் :-))

இந்துவான மோடி கண்டிப்பா இஸ்லாமிய இறைவனின் "கோர்ட்டுக்குள்" வர முடியாது, அவுட் ஆஃப் ஜூடிசியல் லிமிட் :-))

# அப்புறம் முசாபர்பூர் உத்திரப்பிரதேசத்துல் இருக்குனு நினைக்கிறேன், மோடி குஜராத்துக்கு மட்டும் தான் சி.எம், உ.பி வரைக்கும் நினைச்சதை செய்ய முடியுமா?

உ.பிய ஆளூம் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் என்ன லாலிபாப் சாப்பிட்டு இருக்காரா?

ஒரு மாநில முதலமைச்சர் தான் சட்டம் ஒழுங்கை காப்பாத்தி இருக்கனும், அவர் என்ன மோடிக்கு கைப்புள்ளையா?

முதல்வன் படத்தில கலவரம் நடக்கும் போது "ரகுவரன்" சொல்லுறது போலத்தான், மாணவர்களையும் கண்டிக்க முடியாது,தொழிலாளர்களையும் கண்டிக்க முடியாது,அப்படியே கண்டுக்காம விடுங்க என்பது போல ,உ.பில இந்து,முஸ்லீம் மோதலை கண்டுக்காம விட்டுட்டார் அகிலேஷ்.

சுவனப் பிரியன் said...

வவ்வால் சுவாமிகள்!

//அது எந்த இறைவன்னு சொன்னா நல்லா இருக்கும் :-))//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' இதற்கு மேல் அதிக விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

//உ.பிய ஆளூம் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் என்ன லாலிபாப் சாப்பிட்டு இருக்காரா? //

இதில் அகிலேஷ் யாதவுக்கும் பொறுப்பு இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் இந்த கலவரத்தை திட்டமிட்டு வெளியாட்களை வைத்து பொய்யான காரணத்தை புனைந்து இத்தனை உயிர்களை பழி வாங்கியது பாஜக வின் வேலைதானே! போலீஸ் அதிகாரி வஞ்சாராவின் கடிதம் வெளி வந்து நாடு முழுக்க விவாதம் நடந்த போது அதை வெகு சாமர்ததியமாக இந்த கலவரம் பின்னுக்கு தளிள விட்டதை மறுக்க முடியுமா? அமீத் ஷா வின் கை இந்த கலவரத்தில் உள்ளதும் பல பிஜேபி எம்ஏல்ஏக்கள் இன்று கைது வாரண்டு பிறப்பித்துள்ளதும் நீங்கள் அறியாததா? இந்த நாட்டை சுடுகாட்டாக்கி விட வேண்டும் என்று மோடி முடிவெடுத்து விட்டார். இதனால் இந்து மதம் மேலும் தனது செல்வாக்கை இழக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

பேச்சுத்தான் பெத்த பேச்சு தாக நீலுலேது :-))

ஒருவனே தேவன் என சொன்னால் எதுக்கு அல்லானு சொல்லிக்கிட்டு அல்லானு சொல்லும் இடத்தில எல்லாம் பெருமாளே, புள்ளையாரே, முருகனே,கர்த்தாவே, புத்தாவேனு எதாவது ஒரு பேர சொல்லிக்கலாம்ல ?

, இல்லை பள்ளிவசலில் ஒரு புள்ளையார் சிலையை வச்சா "ஒருவனே தேவன்" என அமைதியாவா போயிடுவாங்கலா ?

#// ஆனால் இந்த கலவரத்தை திட்டமிட்டு வெளியாட்களை வைத்து பொய்யான காரணத்தை புனைந்து இத்தனை உயிர்களை பழி வாங்கியது பாஜக வின் வேலைதானே!//

சரி பாஜகவின் வேலை தான், அத எதுக்கு அகிலேஷ் யாதவ் அரசு வேடிக்கை பார்த்துச்சு, முதநாள் கலவரம் லேச ஆரம்பிச்சதும் பத்து பேர உள்ளே தூக்கிப்போட்டு நொங்கெடுத்தால் அடங்கி இருக்க மாட்டாங்க.

தமிழ்நாட்டில் இப்படி நடக்குது , அரசாங்கம் மெதுவாக ரியாக்ட் செய்தால் கேட்காம போவிங்களா?

நாட்டில எதாவது இயக்கம் சுயலாபத்துக்காக எது வேண்டுமானலும் செய்யும் 'ஆட்சியில் இருப்பவர்கள் தான் சமாளிச்சு அடக்கனும்.

இந்த சம்பவம் குஜராத்தில் நடந்திருந்தால் தான் மோடி தான் முழுக்காரணம்னு சொல்லலாம், உ.பில நடந்திருக்கு, நடக்கும் வரைக்கும் வேடிக்கை பார்த்த அரசும் தான் காரணம். நீங்க மோடியை தான் குற்றம் சாட்டுறிங்களே தவிர அகிலேஷ் யாதவை ரொம்ப மென்மையாக கையாளுறிங்கலே ,அது ஏன்?

//அமீத் ஷா வின் கை இந்த கலவரத்தில் உள்ளதும் பல பிஜேபி எம்ஏல்ஏக்கள் இன்று கைது வாரண்டு பிறப்பித்துள்ளதும் நீங்கள் அறியாததா?//

ஆமாங்க, ஆனால் சட்டம் ஒழுங்கை கையில் வச்சிருக்க அரசாங்கம் ஏன் முன்னமே தடுக்கலை.

இப்போ கைது செய்வதன் மூலம் சம்பவம் நடக்கும் போது தடுக்காமல் அவர்களுக்கு உதவியது போலவும் ஆச்சு, கைது செய்ய ஆணைப்பிறப்பிச்சு இஸ்லாமியர்களின் காவலன் போலவும் காட்டிக்கிட்டாச்சு. பக்கா அரசியல் இது.

ஆனால் பாவம் செத்து போனவங்க தான் திரும்ப வரப்போவதில்லை.

சுவனப் பிரியன் said...

//ஒருவனே தேவன் என சொன்னால் எதுக்கு அல்லானு சொல்லிக்கிட்டு அல்லானு சொல்லும் இடத்தில எல்லாம் பெருமாளே, புள்ளையாரே, முருகனே,கர்த்தாவே, புத்தாவேனு எதாவது ஒரு பேர சொல்லிக்கலாம்ல ?//

'அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன!'
-அல் குர்ஆன் 17:110

இந்த வசனத்தின் படி அல்லாஹ், இறைவன், கடவுள், கர்த்தா, பரமபிதா, என்று அவரவர் மொழியில் எப்படி வேண்டுமானாலும் ஏக இறைவனை அழைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்த இறைவனுக்கு யானை தலையை பொருத்துவதும், மயில் வாகனத்தில் முருகன் என்ற சிறுவனை அமர்த்துவதும், இன்னும் நமது கற்பனை சொல்லும் அனைத்து உருவங்களிலும் வணங்க யார் அனுமதி கொடுத்தது? இறைவன் இப்படி இருப்பான் என்று எனக்கோ உங்களுக்கோ யாருக்குமே தெரியாதபோது இந்த உருவங்கள் ஏன்?

மனதை ஒரு நிலைப்படுத்தத்தான் இந்த உருவங்கள் என்று சிலர் சொல்லலாம். பிள்ளையார் சதுர்த்தியில் டாஸ மார்க்கை உள்ளே தள்ளி விட்டு, சிகரெட்டை ஊதிக் கொண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு 'பத்து காசு முறுக்கு! பள்ளி வாசலை நொறுக்கு' என்று ஆடிக் கொண்டு செல்வதுதான் உங்களின் பக்தி.

ஆனால் பள்ளி வாசலில் உருவமில்லாமல் இறைவனோடு ஒன்றி ஐந்து வேளையும் உலகம் முழுக்க தொழுது வருகின்றரே! அது எப்படி? அந்த இறை வழிபாடு பல முஸ்லிம்களை நேர் வழியில் செலுத்துகிறதே..அது எவ்வாறு?

சுவனப் பிரியன் said...

//தமிழ்நாட்டில் இப்படி நடக்குது , அரசாங்கம் மெதுவாக ரியாக்ட் செய்தால் கேட்காம போவிங்களா?//

தமிழ் நாட்டில் 'தவ்ஹீத் ஜமாத்' போன்ற தன்னலமற்ற அமைப்பு திறம்பட செயல்படுவதால் இந்துத்வாவினரின் பாச்சா பலிப்பதில்லை. மேலும் திராவிடர் கழகம் மிக முனைப்பாக இந்த காவிகளின் கொட்டத்தை அடக்கி வருகிறது. இது போன்ற அமைப்புகள் அங்கு இல்லாததுதான் இது போன்ற பிரச்னைகள் விசுவரூபமெடுக்க காரணம்.

இனிமேலாவது தேர்தல் அரசியலில் ஈடுபடாத 'தவ்ஹீத் ஜமாத்' போன்ற அமைப்பை அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்கள் உருவாக்க வேண்டும்.

Dr.Anburaj said...

ஆனால் பள்ளி வாசலில் உருவமில்லாமல் இறைவனோடு ஒன்றி ஐந்து வேளையும் உலகம் முழுக்க தொழுது வருகின்றரே! அது எப்படி? அந்த இறை வழிபாடு பல முஸ்லிம்களை நேர் வழியில் செலுத்துகிறதே..அது எவ்வாறு?
அண்டப்புழுகு,ஆகாசப்புழுகு என்பாா்கள்.இனிமேல் சுவனப்பிாியன் புழுகு என்றால் போதும் அனைத்து பொய்யா்களையும் ஒரே வரிியில் தோல்வியைக் கவ்வச்செய்து வீட்டீர்களே? முஸ்லீம்கள் அனைவரும் நோ்வழியில் செல்கிறாா்களா ? உலகம் தொியாத கிணற்றுத்தவளை. திட்டமிட்டே பொய்களைப்பரப்பும் தங்களது செயல் நகைப்புக்குாியது.