Followers

Sunday, December 10, 2017

தீக்குளிக்கும் முன் ஹெச் ராஜா இதற்கெல்லாம் பதில் சொல்வாரா?

தீக்குளிக்கும் முன் ஹெச் ராஜா இதற்கெல்லாம் பதில் சொல்வாரா?

"ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மஸ்ஜிதை கட்டியதால் தான் அதை இடித்தோம்; அதுபோல் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள 3000 பள்ளிவாசல்களையும் இடிப்போம்" என தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்கள்.

இதுபற்றி பேசிய திருமாவளவன் அவர்கள், "கோவிலை இடித்து விட்டு மசூதியை கட்டியதால் மசூதியை இடித்தோம் என்கிறீர்களே! உங்கள் வாதப்படியே கேட்கிறேன். அப்படியெனில், பெளத்த விகார்களை இடித்துத் தானே காஞ்சிபுரம் உள்ளிட்ட பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் இடித்துவிட்டு மீண்டும் பெளத்த விகார்களை கட்டலாமா?" என்று கேட்டார்.

அவர் பேசிய கருத்தை முழுமையாகக் காட்டாமல், முன் பின் துண்டித்து நடுவில் உள்ளதை மட்டும் வெட்டி எடுத்து பாலிமர் டிவி ஒளிபரப்பியது. "கோவில்களை இடிப்பேன் என்கிறார் திருமாவளவன்" என்று தலைப்பு வேறு.

பாபர் மஸ்ஜித் இடிப்பு எனும் பயங்கரவாதச் செயலை செய்தது பற்றி பெருமை பொங்க  டிசம்பர் 6 அன்று டுவிட்டரில் பதிவு போட்டாரே எச்.ராஜா. அப்போது எங்கே போயின? இந்த ஊடகங்கள்.....

"பயங்கரவாதத்தைக் கொண்டாடும் எச்.ராஜா!" எனும் தலைப்புடன் செய்தி போட்டார்களா?


திருமாவளவன் சொன்னது அனைத்தும் உண்மை என்பதற்கு ஒரு சில ஆதாரங்களை பார்போம்.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.

இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில் பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.

-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.


கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.


'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.

'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'

-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52


செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.


திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.
'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'

-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.


கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது. 


நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது. 

கும்பகோணம் விநாயகர் ஆலயம்!

கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.

காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் 'கணிகிலுப்பை' என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.

காஞ்சிபுரம்!

காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.

'காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.'
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.

'ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது 'சத்தி' மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.'
-எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.

காஞ்சிபுரத்திலுள்ள 'புத்தர் கோவில் தெரு' இப்போது 'காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
-சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

காஞ்சி காமாட்சி!

“scholars have for long opined that the idol now worshipped as Sankaracharya in the present Kamatchi Temple, originally represented the Buddha.”
'காமாட்சியம்மன் ஆலயமே பௌத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று பலர் கருதுகிறார்கள்.'
-k.r.venkatraman, Devi Kamatchi in kanchi, Tirunelveli, 1973, Page 39.
-எம் ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழ் வளர்த்த கோவில்கள், சென்னை,
1989, Page 50,51.

கச்சீஸ்வரர் கோவில்!

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சீஸ்வரர் கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்களும் உள் மண்டபத்திலும் சில கல் தூண்களிலும் புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இவைகளால் இந்த ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவிலெனத் தெரிகிறது.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து மூன்று, ஐம்பத்து நான்கு.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்!

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளி மதில் சுவர்களில் சில புத்த உருவங்கள் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும் என்பர் மயிலை சீனி வேங்கடசாமி.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து நான்கு.

ஐயப்பன் கோவில்!

மலையாள நாட்டில் ஐயப்பன் கோவில் என்று வழங்கப்படுவது முற்காலத்தில் பௌத்தக் கோவிலாக இருந்தது.
சாத்தன் என்பது சாஸ்தா என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்கு மற்றொரு பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். சாத்தான் காவு என்றால் புத்தரது தோட்டம் என்பது பொருள்.
-பௌத்தமும் தமிழும், பக்கம் எழுபத்து மூன்று.

'புகழ் பெற்ற சாஸ்தா (புத்தமத) கோயிலே அய்யப்பன் கோவிலாக மாற்றப் பட்டது. தர்மசாஸ்தா என்கிற பெயரும், சரணம் என்கிற முழக்கமும் இதனை உறுதி செய்கின்றன.'
-.மார்க்ஸ், மசூதிக்குப் பிறகு மாதா கோவிலா?, புதுவை, 1994, பக்கம் இருபத்தைந்து.

புத்தர் ஆலயங்களில் கொள்ளை!

ஈழ நாட்டில் முதல்சேனன் (கி.பி.831-851) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் படையெடுத்துச் சென்றான்.பல நகரங்களைக் கொள்ளையிட்டான். அத்தோடு நின்று விடவில்லை. ஈழத்திலிருந்த பொன்னாலான புத்தர் சிலைகளையும் புத்த விகாரங்களிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என்று மகா வம்சம் என்ற இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.
-K.V.Subramaniya Iyer, Historical Sketches Of Ancient Deccan, 1917,Page 140-141

“The Tamils now ravaged the country Anuradhapura, the beautiful city, was plundered and left desolate. The jewels in the kings place. The golden images which the piety of Kings and Princes had placed in Buddhist Vibaras, the golden statue of Buddha that Mihindu 2.
-L.F.Blaze, A History of Ceylon,clombo,1903,Page 54.

ஈழ நாட்டில் மன்னன் முதல்சேனன் சீமாறன் சீவல்லபனின் தாக்குதலைத் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் மலேயாவுக்கு ஓடியபோது பாண்டிய நாட்டுப் படையோடு போர் புரிந்த இளவரசன் மகீந்தன் மடிந்தான். பாண்டிய மன்ன்ன் புத்தர் ஆலயங்களிலுள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டதோடு பொன்னாலான புத்தர் சிலைகளையும் கவர்ந்து சென்றான் என்பதனை இலங்கை வரலாற்று நூலும் தெரிவிக்கிறது.





No comments: