Followers

Wednesday, December 06, 2017

சலாத்துன் நாரியா..?

சலாத்துன் நாரியா..?

சலாத்துன் நாரியா என்ற சொல்  இலங்கை மற்றும் தமிழக முஸ்லீம்களுக்கு ,மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். சலாத்துன் நாரியா என்றால் நரகத்து சலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக் கூடியவர்கள் இந்த சலவாத்தை ஓதினால் எந்த சிரமும் இன்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏன் னென்றால் இந்த நரகத்தின் ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான் .

இதனை 4444, தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும், திருடர்கள் பயம் இருக்காது. இன்னும் பல நன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய ? பெருமக்கள் தாங்கள் வீடுகளில் ஹஜ்ரத்மார்களை வைத்து மிக விமர்சியாக ஓதி வருகிறார்கள். ஓதியவருக்கு ரூபாய்   கிடைக்கும்.

இந்த சலவாத்தை நபிகள் நாயகம் (சல்) அவர்களோ ! ஸகாபாக்களோ, யாரும் ஓதியது இல்லை. மாறாக பிற்காலத்தில் மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்தக் கூடிய சில முல்லாக்கலால் பிழைப்புக்காக உருவாக்கப் பட்ட ஒன்றுதான் இது. இதன் காரணமாகதான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த சலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதை பாருங்கள்,,,,,,,,,,

சலாத்துன் நாரியாவின் பொருள்;;

 அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மர்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து என்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும், முழுமையான சாந்தியையும் பொழிவாயாக ! அந்த முஹம்மது எப்படிப் பட்டவர் என்றால் அவர் மூலமாகத்தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேறுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவுகளும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகின்றது, மேற்கண்ட சலவாத்தில் நபி(ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல்கள் அவிழ்க்கப்படுகின்றன துன்பங்கள் நீங்குகிறது தேவைகள் நிறைவேறுகிறது என்றும் வருகிறது.

உண்மையில் சிக்கல்கள், தேவைகள் நிறைவேற்றுவது இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றலாகும். மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு இறந்தவர்களுக்கோ, அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாக கூறுவது இணை கற்பிக்கின்ற காரியமாகும். அனத்து துன்பங்களில் இருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத்தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனை அளவு கூட கிடையாது.

ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களை காப்பாற்றுகிறான். (அல்குரான்; 6/64 )

நபி அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ, எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறை குரான் தெளிவு படுத்துகின்றது,

 அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை.  நான் மறைவானதை  அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகமாக அடைந்திருப்பேன். எந்த தீங்கும் எனக்கு ஏற்பட்டு இருக்காது நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும் நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கிறேன், என்று (முஹம்மதே)கூறுவீராக!(அல்குரான்;7/188 )

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன் அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக, நான் உங்களுக்கு தீங்கு செய்யவும் நன்மை செய்யவும் அதிகாரம் பெர்றிருக்க வில்லை, என்றும் கூறுவீராக. அல்லாஹ்விடம் இருந்து எவரும் என்னை காப்பாற்ற மாட்டார். அவனின்றி ஒதுங்கும் இடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக(அல்குரான் ;72/20,21,22.)




1 comment:

vara vijay said...

Jerusalem?