நரேந்திர மோடி இவர்களுக்கு
என்ன பட்டம் கொடுப்பார்?
தன்னை கொல்வதற்காக
பாகிஸ்தான் பலரை நியமித்திருப்பதாக குஜராத் தேர்தல் பரப்புரையில் நரேந்திரமோடி எந்த
ஆதாரமும் இல்லாமல் வழக்கமான பொய்களை உதிர்த்தார். நம்ம ஊர் மணிசங்கர் ஐயரையும் இதில்
சம்பந்தப்படுத்தியுள்ளார்.
பழைய செய்தி ஒன்றை
இங்கு பதிய நினைக்கிறேன்.
இந்திரேஷ் குமார்,
சுபேதார் சிங் இவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸின் முக்கிய
தலைவர்கள். இந்த இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்எஸ் அமைப்பிடமிருந்து 21 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக 2014 ஆம் ஆண்டு முன்னணி பத்திரிக்கைகளான இந்தியன் எக்ஸ்பிரஸ்,
ஜீ நியூஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிக்கைகளில் முக்கிய செய்தியாக
வந்தது. இந்த செய்தியின் பின்னணியில் பல குண்டு வைப்புகள் கொலைகள் இந்தியாவெங்கும்
நடந்தேறியது. ஹேமந்த் கர்கரே பல இந்துத்வா தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது
ஞாபகம் இருக்கலாம்.
நாம் கேட்பதெல்லாம்
தேச பக்தி வேடம் போடும் மோடி இதற்காக என்ன செய்தார்? இதுவரையிலும் இந்திரேஷ் குமார்
ஆர்எஸ்எஸின் முக்கிய பதிவிகளில் இருந்து வருகிறாரே? எதிரி நாட்டு உளவு அமைப்பிடமிருந்து
பணம் பெறுவது தேசதுரோகமா இல்லையா? ராணுவ ரகசியங்கள் என்னவெல்லாம் பரிமாறப் பட்டதோ?
இதற்கெல்லாம் மோடிக்களும்
அமீத்ஷாக்களும் பக்தாள்களும் பதில் சொல்வார்களா?
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
19-02-2009
http://www.hindustantimes.com/india/the-malegaon-confessions/story-CUpFtD3bp9vRmgXssFUS1M.html
No comments:
Post a Comment