Followers

Tuesday, December 26, 2017

இந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,

இவ்வுலகில் இறைவன் நமக்கு கொடுத்த சுகங்கள் குறைவு என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால்,

இந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,


இனியாவது இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்!


4 comments:

Dr.Anburaj said...


wonderful video.I am verry sad. It raises the following questions

01.Why did All Merciful Ominipotent Islamic God ALLah create a child without Legs and Hands ?
02. Has the child committed any sin to merrit such a cruel punishment ?What are it they ?
03. A child without legs and Hands - Who is to be blamed for this condition Allah or parents
04. In judgement day If I blamed ALLAH for creating a child without Legs and Hands what Allah would do /answer ?
05.Should ALLLAh be punished for this misadventure ?
What is your explanation ?

Dr.Anburaj said...

மொகலாயர் வரலாறு கொலைகார வரலாறு; அப்பாவை மகன் கொல்வது பரம்பரையாக நடந்தது; சஹோதர்களை சஹோதரர்கள் தீர்த்துக்கட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

நிக்கலோ மனூச்சி (Nicolao Manucci 1638- 1717) என்பவர் இதாலிய பயணி; அவர் இந்தியாவுக்கு வந்து மொகலாய மன்னர்களிடம் வேலை பார்த்தார். தாரா சிகோஹ், ஷா ஆலம், ராஜா ஜெய் சிங், கிராட் சிங் ஆக்யோர் சபைகளில் வேலை பார்த்தார். அவர் நிறைய சுவையான -- சோகமான- விஷயங்களை எழுதிவைத்துள்ளார். இதோ ஒரு சோகக் கதை.

Image of Aurangazeb

ஷாஜஹானின் மகன் தாரா சிகோஹ்; அவருடைய தம்பி மதவெறி பிடித்த அவுரங்கசீப்.

மொகலாய மன்னன் ஷாஜஹானுக்கு பல புதல்வர், புதல்வியர் உண்டு. அவருக்கு அடுத்தாற்போல அரசு கட்டிலைப் பிடிப்பது யார் என்பதில் அவருடைய புதல்வர் தாரா ஷிகோஹுக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய போட்டி நடந்தது போட்டி அல்ல; யுத்தமே நடந்தது. ஷாஜஹானைச் சிறைப்பிடித்து ஆக்ரா சிறையில் வைத்தனர். இங்கிருந்தவாறே தாஜ் மஹலைப் பார்த்துக்கொண்டு செத்துப்போ என்று விட்டனர்.

தாரா சுகோஹ், தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஒரு தூதன் அவுரங்கசீப்பிடம் தெரிவித்தான். ஆனால் தோற்றுப்போன தாரா ஓடிவிட்டதாகவும் சொன்னான். உடனே அவுரங்கசீப் ஒரு சபதம் செய்தான். அண்ணனைச் சிறைப்பிடித்து தலையை வெட்டி அவர்களுடைய தந்தையான ஷாஜஹானுக்கு அனுப்பிவைப்பேன் என்று வீர சபதம் எடுத்தான். இதை இதாலிய பயணி மனூச்சி அப்படியே எழுதி வைத்துள்ளான்.

அவுரங்க சீப்பின் துஷ்ட ஆசையும் நிறைவேறியது. தாராவின் தலையை அவன் முன்னால் கொண்டு வந்தனர். ஒரு கத்தியை எடுத்து மூன்று வெட்டு வெட்டினான் . இதை கண் முன் காட்டாமல் தூக்கிக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான்.

அவுரங்கசீப்பின் சஹோதரி (தாராவுக்கும் சஹோதரிதான்) ரோஷநாரா பேஹம் இந்தத் தலையை நமது தந்தை ஷாஜஹானிடம் கொண்டு காட்ட வேண்டும் என்று அவுரங்கசீப்பைத் தூண்டிவிட்டாள். அவள் அன்று மாலையே ஆக்ரா கோட்டையில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்தாள்; தாரவைக் கொன்றதற்காக.
தலை வந்தபோது சிறைச் சாலையில் ஷாஜஹான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரவின் தலையைப் பார்த்தவுடன் ‘ஓ’ என்று கதறி ‘டின்னர் டேபிள்’ மீதே மயக்கம் போட்டு விழுந்தான்.

ஆக்ராவில் தாஜ்மஹல் உள்ளேயுள்ள கல்லறையில் அந்தத் தலையைப் புதைக்குமாறு அவுரங்கசீப் கட்டளை இட்டதாக மனூச்சி எழுதியுள்ளார்.

அதே காலத்தில் இந்தியாவுக்கு வந்த பெர்னியர் என்ற மேல்நாட்டு யாத்ரீகரும் இதே சம்பவம் பற்றி எழுதிவைத்துள்ளார்.
தாராவின் மரண தண்டனையை நிறைவேற்றிய அவுரங்க சீப்பின் ஆட்கள், அவன் தலையை அவுரங்க சீப்பிடம் கொண்டுபோனபொது அதை ஹுஆமாயூன் கல்லறையில் புதைக்கச் சொன்னானாம்.தாராவின் புகழைப் பாடும் பல பாடல்களை மக்கள் நாட்டுப் புறக் கதைப் பாடலாக பாடியதாகவும் அதைத் தடுக்க அவுரங்கசீப் முயன்றும் முடியவில்லை என்றும் அக்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.தாராவின் தலையை ஒரு அழகான பெட்டியில் வைத்து உங்கள் மகன் உங்களுக்கு அனுப்பிய பரிசு என்று படைவீரர்களிடம் சொல்லச் சொன்னானாம். அவர்கள் அப்படிச் சொன்னபோது ‘அட, என் மகன் என்னை ஞாபகமாவது வைத்துக் கொண்டிருக்கிறானே என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்தானாம். தாராவின் தலை ரத்தவெள்ளத்தில் இருந்ததைக் கண்டு மூர்ச்சை அடைந்தானாம்.

தாராவின் தலையை சீவுவதற்கு முன்னர் அவனை விலங்கு மாட்டி யானை மீது வைத்து ஊர்வலமும் விட்டானாம் அவுரங்கசீப்.

தாராவின் மரணம் இந்துக்களுக்கு ஒரு பெரிய இழப்பு.
He treated Hindus and Muslims alike.

அவன் ஏழாவது சீக்கிய குருவின் நண்பன்.

இந்து மத உபநிஷத்துகளை & yoga suthram பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவன்
He was making all arrangements to translate Mahabharatam and Bhagavad Gita into Parasigam.

Dr.Anburaj said...


how honest Mr.Sanakiyan is ?
சாணக்கியன் ஒரு பெரிய சிந்தனையாளர்; திட உறுதி பூண்டவர்; வெற்றி பெறுவதற்கு சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களையும் பயன்படுத்தத் தயங்காதவர். இந்தியாவில் தோன்றிய மிகப் பெரிய அரசியல்வாதி அவர்தான் என்றால் மிகையல்ல.

நரியின் தந்திரமும் யானையின் பேருருவமும், சிங்கத்தின் பராக்ரமும், புலியின் பாய்ச்சலும் உடையவர். ஆயினும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவி; செல்வத்தையும் பதவியையும் துச்சமாக மதித்தவர்.

மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை -- அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த பிரம்மாண்டமான படையை-- உருவாக்கிய – சாணக்கியன் இருந்ததோ ஒரு சிறு குடிலில்; இதனால்தான் அவருக்கு மதிப்பு; பற்றற்ற வாழ்க்கையில் பற்றுக் கொண்டதால் எதைக் கண்டும் அஞ்சவில்லை.

சிறந்த நிர்வாகியான சாணக்கியனை நிறைய புராதன எழுத்தாளர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். உயர்ந்த சிந்தனை, பரந்த அறிவு, எளிய வாழ்க்கைக்கு முன்னுதாரணம் சாணக்கியன். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் போன்ற பொருளாதார நூல் பழங்கால உலகில் எங்குமே இல்லை.

சந்திரகுப்த மௌர்யன் என்னும் பேரரசனின் அதிகாரி அவர் வீட்டிற்குள் சென்றபோது கண்ட காட்சியை வருணிக்கிறார்:-

அஹோ ராஜாதிராஜ மந்த்ரிணோ விபூதிஹி--

உபலஸகலமேதத் பேதகம் கோமயானாம்

படுபிருபஹ்ருதானாம் பர்ஹிஷாம் ஸ்தூபமேதத்

ஸரணமபி சமிதிபஹ ஸுஸ்யமாணாபிராபி

விர்னமிதபடலாந்தம் த்ருஸ்யதே ஜீர்ணகுட்யம் (3-15)

பொருள்:

மன்னாதி மன்னனின் மந்திரியின் செல்வத்தைப் பற்றிக் கேளுங்கள்:-

பசுஞ்சாண விரட்டிகளை உடைக்க ஒரு கல்லைக் கண்டேன்; அதோ இளம் சிறார்கள் -- சிஷ்யப் பிள்ளைகள் -- சேகரித்த தர்ப்பைப் புல் இருக்கிறது; அவருடைய குடிலின் சுவர்கள் பாழடைந்து இருக்கின்றன; மேல் கூரையில் காயப்போட்டுள்ள யாகத்துக்கான மரக் குச்சிகளின் பாரம் தாங்காது கூரை சரிந்து நிற்கிறது.

முதல் கதை

பாடலிபுத்திரத்தில் கிரேக்க தூதர் பதவி ஏற்ற மெகஸ்தனீஸ் சாணக்கியனைப் பார்க்க வந்தார். அது இரவு நேரச் சந்திப்பு. ஆட்சி சம்பந்தப்பட்ட ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார் சாணக்கியன். ஒரு மூலையில் தீப ஒளி பிரகாஸித்துக் கொண்டிருந்தது.

மெகஸ்தனீஸ் உள்ளே நுழைந்தவுடன் அந்த விளக்கை அணைத்துவிட்டு, சாணக்கியன் வேறு ஒரு தீபத்தை ஏற்றினார். மெகஸ்தனீசுக்கு பெரும் வியப்பு!

ஐயன்மீர்! ஏன் ஒரு விளக்கை அனைத்து இன்னும் ஒரு விளக்கை ஏற்றினீர்? இதன் தாத்பர்யம் என்னவோ? என்றார் மெகஸ்தனீஸ்.

சாணக்கியன் சொன்னார்:

நீவிர் வரும் வரை எரிந்த தீபம் அரசங்கப் பணி நிமித்தம் ஆட்சி நிர்வாக வேலைகளுக்காக, அரசு செலவில் ஏற்றப்பட்டது.

இப்போது நாம் சந்திப்பது அரசுப் பணியல்ல நீவிர் எனது விருந்தாளி; ஆகவே இது என் செலவில் எரிக்கப்படும் தீபம் ; ஆகையால்தான் இதை ஏற்றினேன்.

இதுதான் சாணக்கியனின் குணாதிசயங்களைக் காட்டும் நிகழ்ச்சி. தன்னலம் கருதாத் தகைமையாளராக இருந்தும் அரசுப் பணி இது, சுய வாழ்வு இது என்று வரம்பு கட்டிய மாமனிதன்.

Dr.Anburaj said...



மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்?

மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)

சாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்கும் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.

இதோ இன்னும் ஒரு கதை:

நந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.

இது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவச் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.

ஏன் சிரித்தாய் மகளே? ஏன் சிரித்தாய்? என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு, பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.

அவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.

சகதாரன் உதவி செய்ய முன்வந்தான்

பெண்ணே! அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்?

பெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.

அரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது?

ஒரு பெரிய மரம் இருந்தது.

ஓஹோ! அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா? என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.

மறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.

அவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.

இவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.

















-