திருவனந்தபுரம்,
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கோவில் அருகே 7 வெடிகுண்டுகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள
மாநிலம் கண்ணூர் மாவட்டம் கீழூரில் ஆர்.எஸ்.எஸ் மையத்திற்கு அருகே உள்ள பகவதி
அம்மன் கோவில் வளாகத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள்
கோவில் அருகே உள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு பக்கெட்டில்
வைத்து மறைத்துவைக்கப்பட்டிருந்த 7 வெடிகுண்டுகள்
கண்டுபிடித்தனர். பின்னர், இது
தொடர்பாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவலர்கள்
மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் , வெடிகுண்டுகளை ஆய்வு செய்த போது, அவை
அனைத்தும் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என கண்டு பிடிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை
பறிமுதல் செய்த காவலர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால்
நிர்வகிக்கப்படுகிறது. கடந்த வருடம் சங்பரிவார் அமைப்பை சேர்ந்த பாலகோகுலம், குழந்தைகளுக்காக
நடத்திய சோப யாத்ரா என்ற ஊர்வலம், இந்த கோவிலில் தான் நிறைவுற்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தீக்ஷித் , கிருஷ்ண
ஜெயந்தி பண்டிகை காலத்தின் போது, கண்ணூர் மாவட்டம் தலசேரியில் உள்ள
தனது வீட்டில் வெடி குண்டு தயாரித்த போது, எதிர்பாராதவிதமாக
அது வெடித்து உயிரிழந்தார். அப்போது அவரது வீட்டை ஆய்வு செய்த காவலர்கள்
அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றினர். தீக்ஷித்-தின் தந்தை பிரதீப் பாஜக-வை
சேர்ந்தவர். அவரது சகோதரர் தில்ஜித், பாஜக
தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2015
கேரளா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டவர்.
சமீப காலமாக பண்டிகை காலங்களில் , ஆர்.எஸ்.எஸ்.
ஊழியர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்கும் போது ஒன்று அது வெடித்து உயிரிழக்கின்றார்கள்
அல்லது தயாரிக்கும் போது காவலர்களிடம் பிடிபடுகிறார்கள்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக
கொண்ட கோவில்களை ஹிந்துத்துவா அமைப்புகள் தங்களது பயிற்சி களமாக பயன்படுத்தி
வருகின்றனர். மாநிலத்தில் சாதி கலவரங்களையும், வன்முறையையும்
தூண்டி விட்டு பின்னர் சிறுபான்மையர் மீது பழி போடுவதே அவர்களது வழக்கமாக உள்ளது
என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், கூத்துபறம்பு
பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருதவர்கள்
மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வெடிகுண்டுகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்
உதவி
தீக்கதிர்
08-09-2017
1 comment:
01.Is all Hindu temples are goddown of bombs ?
02. What would y0u like to convey to us -Hindus ?
03. Muslims hate Hindus as Khafir ?
Post a Comment