Followers

Sunday, December 10, 2017

ஆப்ரிக்காவில் ஏற்பட்ட மகத்தான புரட்சி!

ஆப்ரிக்காவில் ஏற்பட்ட மகத்தான புரட்சி!

இஸ்லாம் இந்த கருப்பு இன மக்களை கவர்வதற்கு முன்னால் மிருகங்களை விட கேவலமாக வெள்ளையர்களால் நடத்தப்பட்டனர். அடிமைகளாக இவர்களின் உழைப்பை உண்டு சுக போகத்தில் திளைத்தனர் வசதி படைத்தவர்கள். விடுதலை தேடி அலைந்த இந்த மக்களுக்கு இஸ்லாம் அருமருந்தாக இருந்தது. பல நாடுகள் இஸ்லாத்தை ஏற்றன. அவர்களின் தாய் மொழியோடு அரபு மொழியையும் ஆர்வத்தோடு கற்றனர். இவர்களின் முன்னேற்றத்தை கண்டு பொருக்காத அமெரிக்க ஐரோப்பியர்கள் அல்காய்தா, அபு சயாப், ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களை உண்டாக்கி இஸ்லாத்தின் மேல் வெறுப்பு உண்டாக்க முனைந்தனர். ஆனால் இந்த தீவிரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட இந்த கருப்பின மக்கள் இஸ்லாத்தை மேலும் காதலிக்கத் தொடங்கினர்.

இந்த வருடம் நடந்த குர்ஆன் ஓதும் போட்டியில் ஒரு சிறுவன் குர்ஆனை ஓதுகிறான். அவன் ஓதும் போது அதன் அர்த்தத்தையும் உணர்ந்து ஓதுகிறான். இறைவன் அவனோடு பேசுவதை உணர்ந்த அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களும் கண்ணீரால் நிரம்புகின்றன. இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதையும் பார்போம்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போதுஉண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக! என அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 5:83)
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தைஅதிகமாக்குகிறது.
(அல்குர்ஆன் 17:109)
அவர்கள் செய்து கொண்டு இருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும்!
(அல்குர்ஆன் 9:82)
தன்னை ஓதும் போது கண்கள் குளமாவதை திருக்குர்ஆன் எதிர்பார்க்கிறது. இப்படிப்பட்ட நிலைக்கு நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளங்கள் நடு நடுங்கவேண்டும். ஏனெனில் அல்லாஹ் இதை இறை நம்பிக்கையாளர்களின் பண்பாகச் சுட்டிக்காட்டுகின்றான்.




No comments: